சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The class character of Syriza revealed

சிரிசாவின் வர்க்க குணாம்சம் அம்பலமானது

Robert Stevens
30 January 2015

Use this version to printSend feedback

கிரீஸில் சிரிசா அரசு அதிகாரம் ஏற்றதற்குப் பின்னர், அதன் தீவிர தோரணை அம்பலப்படுவதற்கு நீண்டகாலம் எடுக்கவில்லை.

பல ஆண்டுகளாக சிரிசாவின் ஆதரவாளர்கள் அவ்வமைப்பை சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவதில் ஒரு கலங்கரை விளக்கமாகவும், சர்வதேச தொழிலாளர்களுக்கு ஒரு பிரகாசமான முன்னுதாரணமாகவும் புகழ்ந்துரைத்து வந்தனர். ஆனால் அமெரிக்காவின் இரண்டாவது ஜனாதிபதி ஜோன் ஆடம்ஸ் தெரிவித்த பிரபலமான வாசகம் இது: உண்மைகள் திடமானவை; நம்முடைய விருப்பங்கள், நம்முடைய சாய்மானங்கள், அல்லது நமது உள்மனதின் கட்டளைகள் என்னவாக இருந்தாலும், அவை உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் நிலையை மாற்றாது.

சிரிசாவின் முதலாளித்துவ வர்க்க குணாம்சமும் மற்றும் முழு ஸ்தாபகமும், அனைத்தினும் முதலாவதாக, பழமைவாத புதிய ஜனநாயக கட்சியிலிருந்து உடைந்து வந்த வெளிநாட்டவர் விரோத போக்கு கொண்ட, ஒரு வலதுசாரி சுதந்திர கிரேக்கர்கள் (ANEL) கட்சியுடன் அவ்வமைப்பு உருவாக்கி உள்ள அரசியல் கூட்டணியில் அம்பலப்பட்டுள்ளது. ANEL உடன் ஒரு கூட்டணிக்குள் நுழைவதென்ற சிரிசா தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸின் முடிவு, முற்றிலுமாக விருப்ப தேர்வுக்குட்பட்ட ஒரு விடயமாகும். அவ்வாறு செய்வதை அது தேர்ந்தெடுத்திருக்காவிட்டால், அதன் பிரதான முனைவுகளுக்கு அதை ஆதரிக்க கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) மற்றும் ஏனையவற்றின் வாக்கை எதிர்பார்த்து, அதுவொரு சிறுபான்மை அரசாங்கம் அமைக்க வேண்டியிருந்திருக்கும்.

ANEL உடன் சேர்ந்ததன் மூலமாக, சிரிசா அதன் கொள்கைகளை வலதிற்கு மாற்றுவதற்கு சிறந்த நிலைமைகளை உருவாக்க முனைந்து வருகின்ற அதேவேளையில், அதன் புதிய அரசாங்கம் கிரேக்க மற்றும் சர்வதேச முதலாளித்துவ வர்க்கத்தின் அடிப்படை நலன்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை சமிக்ஞையிட்டு காட்டியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டை, இராணுவத்துடன் மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ள ஒரு மனிதரான சுதந்திர கிரேக்கர்கள் கட்சி தலைவர் பேனொஸ் கமெனொஸிடம் ஒப்படைத்துள்ளது. மந்திரியாக பதவியேற்றதும் அவரது முதல் அறிக்கையில் கமெனொஸ், நடப்பில் உள்ளதைத் தக்க வைத்துக் கொண்டே புதிய ஆயுத தளவாட திட்டங்களுக்கு நிதிகளைக் காணவும் மற்றும் பாதுகாப்பு மீது புதிய அச்சுறுத்தல்களை மறுஆய்வு செய்வதாகவும் உறுதியளித்தார்.

அதுபோன்றவொரு அரசியல் நியமனத்தின் விளைவுகள் குறித்து, சிரிசாவுக்கும் சரி சிப்ராஸிற்கும் சரி முழுமையாக தெரியும். 1967 மற்றும் 1974க்கு இடையே, ஓர் இராணுவ ஆட்சிக்குழுவால் கிரீஸ் ஓர் இரும்புபிடியுடன் ஆட்சி செலுத்தப்பட்டது. அந்த இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒருவாரத்திற்குள், முன்கூட்டியே கவனமாக தயாரிக்கப்பட்ட பட்டியல்களின் அடிப்படையில் 8,000க்கும் அதிகமானவர்களை கைது செய்தது. அந்த ஆட்சியின் கரங்களில் பிரத்யேகமாக-உருவாக்கப்பட்ட முகாம்களில் ஆயிரக் கணக்கானவர்கள் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளானார்கள்.

20 ஆண்டுகள் புதிய ஜனநாயக கட்சியின் சட்டமன்ற பிரதிநிதியாக இருந்த கமெனொஸ், சமீபத்தில் வெளியேறியுள்ள ND பிரதம மந்திரி அன்டோனிஸ் சமரஸின் முன்னாள் மந்திரிசபை செயலர் பனயோடிஸ் பால்டாகோஸ் (Panayiotis Baltakos) உடன் நெருக்கமான தொடர்புகள் கொண்டவராவார். கடந்த ஆண்டு பால்டாகோஸ், "பாரம்பரிய தேவாலயம், பாதுகாப்பு சேவைகள் மற்றும் இராணுவ படைகள்" ஆகியவற்றின் அடிப்படையில் Rizes (வேர்கள்) எனும் ஒரு வலதுசாரி கட்சியை அமைக்கும் நகர்வுகளைத் தொடங்கினார்.

சிரிசா இத்தகைய சக்திகளுக்கு அதன் சொந்த முறையீடுகளைச் செய்து வருகிறது. தேர்தல்கள் முடிந்த உடனே, உள்துறை மந்திரியாக ஆகவிருந்த நிக்கோஸ் வுற்சிஸ் (Nikos Voutsis) பொலிஸ் மற்றும் இராணுவ தலைமைகளை தொலைபேசியில் அழைத்து பேசினார். நாங்கள் உங்களை நம்புகிறோம்" என்று வுற்சிஸ் அவர்களிடம் கூறியதாக பிபிசி இதழாளர் பௌல் மாசன் செய்தியில் குறிப்பிட்டார். "கிரேக்கம் இராணுவ மற்றும் போலீஸ் படை, பனிப்போர் காலத்திலிருந்தே தீவிர இடதுவாதத்தை ஒடுக்க, மார்க்சிச ஆபத்துக்கள் குறித்து அவற்றின் அதிகாரிகளுக்கு அரசியல் பாடங்கள் அளித்து கட்டமைக்கப்பட்டுள்ளது என்றபோதினும் கூட இவ்வாறு கூறப்பட்டு இருப்பதாக மாசன் குறிப்பிட்டார்.

தேர்தலுக்கு முன்னதாக, அவர்கள் கலக-எதிர்ப்பு பொலிஸ் பிரிவைக் கலைத்துவிட்டு அவற்றை பொது படைகளுக்குள் இணைக்க விரும்புவதாக சிரிசா கூறி இருந்தது. இந்த வாக்குறுதி அரசாங்கத்தில் வந்ததும் ஒரேயொரு நாள் கூட நிலைக்கவில்லை, உள்துறை அமைச்சகத்தினது சிரிசாவின் இணை மந்திரி, போராட்டங்களில் பொலிஸ் ஆயுதங்களைத் தாங்கி இருக்கும், என்று அறிவித்தார்.

கிரேக்க பொலிஸில் பாசிச ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது நன்கறியப்பட்டதாகும். கடந்த வாரங்களின் தேர்தலில், 2012 தேர்தலைப் போலவே, 40 மற்றும் 50 சதவீதத்திற்கு இடையிலான அதிகாரிகள் பாசிச கோல்டன் டௌன் கட்சிக்கு வாக்களித்தனர்.

வுற்சிஸ் இன் அறிவிப்பு அரசியல் வெகுளித்தனத்திற்கொரு சான்றல்ல அல்ல. ஆழமடைந்து வரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி நிலைமைகளின் கீழ், மற்றும் அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளின் அதன் சொந்த வடிவத்தைச் சுமத்த ஆரம்பித்த உடனே அதற்கு எதிராக எழும் தவிர்க்கவியலாத பாரிய போராட்டங்களை முகங்கொடுக்கையில், எதிர்ப்பை நசுக்க அரசின் அனைத்து படைகளையும் சிரிசா சார்ந்திருக்கும் மற்றும் பிரயோகிக்கும் என்பதை அவர் பொலிஸ் மற்றும் இராணுவத்திற்குத் தெரிவிக்கிறார்.

சர்வதேச கொள்கையில், சிரிசா நேற்றைய ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை ஆதரித்ததன் மூலமாக, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துடனான அதன் பொதுவான நட்புறவுக்கு சமிக்ஞை காட்டியது. நாம் பிரதான போக்கில் உள்ளோம்; நாம் தீயவர்கள் இல்லை", இது சிப்ராஸின் வெளியுறவுத்துறை மந்திரி நிக்கோஸ் கோட்ஸியஸ் அறிவித்தார். இவர், 1980களில் போலாந்து ஸ்ராலினிச ஆட்சி, ஒற்றுமை இயக்கத்தை (Solidarity movement) நசுக்குவதை ஆதரித்த KKE இன் ஒரு முன்னாள் அங்கத்தவராவார்.

உள்நாட்டு கொள்கையைப் பொறுத்த வரையில், பதவியேற்ற முதல் நாளில் ஒரு பிரியமான முறையீடு செய்யும் ஒரு முயற்சியில், சிரிசாவின் மந்திரிமார்கள் சிக்கன நடவடிக்கைக்கு விரோதமான வார்த்தை ஜாலங்களைக் கிளறிக் கொண்டிருந்தனர். ஆனால் அனைத்திலும் முதலாக இவை தேசியவாத வரையறைகளில் கூறப்பட்டவை, அத்துடன் சிப்ராஸோ, அவரது அரசாங்கம் ஒரு "தேச இரட்சிப்பின்" அரசாங்கம் என்று அறிவித்தார். அனைத்து வசைமொழிகளும் ஒரேயொரு ஏகாதிபத்திய சக்தி ஜேர்மனிக்காக ஒதுக்கப்பட்டிருந்தன.

சிரிசாவின் கவலை, கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கு ஒரு முடிவு காண்பதல்ல. மாறாக, அங்கேலா மேர்க்கெல் அரசாங்கத்தால் தொடுக்கப்படும் சிக்கன நடவடிக்கைகள் கிரேக்க மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவம் இரண்டுக்கும் தீங்கிழைக்கக்கூடியது என்றே அது குறைபட்டுக் கொள்கிறது.

உலகளாவிய பின்னடைவுக்குள் ஒரு புதிய மூழ்குதலைத் தடுப்பதற்காக, ஐரோப்பிய மத்திய வங்கியால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணப்புழக்க திட்டத்தைப் போன்ற வகையிலான பணப்பெருக்க மூலோபாயத்தை (reflationary strategy) வலியுறுத்த, இத்தாலி மற்றும் பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளிடமும், அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவிடமும், சிரிசா அரசாங்கம் முறையிட்டு வருகிறது. ஒரு சமநிலைப்பட்ட வரவு-செலவு திட்டக்கணக்கை ஊர்ஜிதம் செய்வதற்கும் மற்றும் வரவிருக்கும் காலத்தில் கடனைத் திரும்ப செலுத்துவதற்கான அடித்தளத்தை உருவாக்குவதற்கும் அது உறுதியளிக்கின்ற அதேவேளையில், கிரீஸின் 300 மில்லியன் யூரோ கடனின் தற்காலிகமாக உறைவை ஏற்குமாறு செய்ய சர்வதேச கடன் வழங்குனர்களுக்கு ஒரு முறையீடு செய்வதே அதன் அறிவிக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் அடித்தளத்தில் உள்ளது.

முதலாளித்துவ சுரண்டலுக்கான சிறந்த நிலைமைகளை உருவாக்கும் நோக்கில் ஒரு பொருளாதார கொள்கையை அபிவிருத்தி செய்யும் சிரிசாவின் உள்நோக்கத்தைச் சமிக்ஞையிட்டுக் காட்டி, துணை பிரதம மந்திரி ஜோர்ஜோஸ் ட்ராகசாகிஸ் (Giorgos Dragasakis) நேற்று கூறுகையில், கிரேக்க பொருளாதாரத்திற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன, எங்கள் அரசாங்கம் புதிய முதலீடுகளை ஈர்க்க ஆர்வமாக உள்ளது … நாங்கள் திட்டங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளுக்கு ஒரு நீண்ட பட்டியலைத் தயார் செய்து வருகிறோம், என்றார்.

அதே நாளில், ஜனாதிபதி பராக் ஒபாமா சிப்ராஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், ஒரு நீண்டகால நட்பு நாடும் மற்றும் நேச நாடுமான" அமெரிக்கா, "கிரீஸ் மீண்டும் நீண்டகால செல்வ வளமையின் பாதைக்கு திரும்ப உதவுவதில், புதிய கிரேக்க அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக வேலை செய்ய முன்னோக்கி பார்க்கிறது, என்று தெரிவித்தார்.

சிரிசாவின் முதலாளித்துவ-சார்பு மற்றும் ஏகாதிபத்திய-சார்பு கொள்கைகள், அது, அண்மித்த எதிர்காலத்தில், தொழிலாள வர்க்கத்துடன் நேரடி மோதலுக்குள் வரும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. அரசியல் மோசடிகளின் தொகுப்பு மற்றும் சர்வதேச அளவில் அதை ஊக்குவித்த போலி-சோசலிஸ்ட் பாசாங்குக்காரர்களால் ஆதரிக்கப்பட்ட அதன் பாத்திரம் ஆகியவை, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தின் எழுச்சியை தடுப்பதற்கும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நோக்குநிலை பிறழ செய்து குழப்புவதற்குமாக உள்ளது, அதேவேளையில் அரசின் மிகவும் பிற்போக்குத்தனமான அடுக்குகள் அதுபோன்றவொரு மோதலுக்கு தயாராகி வருகின்றன.

சிரிசா-தலைமையிலான அரசாங்கம் மற்றும் அதன் அரசியல் அனுதாபிகளை எதிர்த்து, கிரீஸில் உள்ள தொழிலாள வர்க்கம் அதன் சொந்த புரட்சிகர கட்சியை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவைக் கட்டியமைப்பதை நோக்கி திரும்ப வேண்டும்.