சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greek collapse, global turbulence loom as Syriza imposes capital controls

சிரிசா மூலதன கட்டுப்பாடுகளைத் திணிக்கையில், கிரேக்க பொறிவும் உலகளாவிய கொந்தளிப்பும் அதிகரிக்கிறது

By Robert Stevens
29 June 2015

Use this version to printSend feedback

கிரீஸ் வங்கிகளில் பணப்புழக்கத்தை வைத்திருக்க செய்யும் அவசரகால கடன்களை ஐரோப்பிய மத்திய வங்கி நிறுத்திவைக்க இருப்பதாக அது அறிவித்த பின்னர், ஞாயிறன்று சிரிசா அரசாங்கம் மூலதன கட்டுப்பாடுகளை திணித்ததுடன், கிரேக்க வங்கிகளை மூடுவதாகவும் அறிவித்தது.

சிரிசா பரிந்துரைத்ததை விட கிரேக்க தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மீது கடுமையான தாக்குதல்களுக்கான அதன் கோரிக்கைகளை தணிப்பதற்கு ஜேர்மனி தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியம் மறுத்ததை ஆதரித்து ஐரோப்பிய மத்திய வங்கி எடுத்த முடிவு, ஏதென்ஸை அவசரகால நடவடிக்கைகள் எடுக்க இட்டுச் சென்றது. கிரேக்கத்தின் கடன் திரும்ப செலுத்தவியலாநிலையை தடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததும், கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் ஜூலை 5 அன்று சிக்கன நடவடிக்கைகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய பொதி மீது ஒரு வெகுஜன வாக்கெடுப்பை அறிவித்த பின்னர், வாரயிறுதி வாக்கில் கிரேக்க வங்கிகளிலிருந்து பணத்தை திரும்ப எடுப்பதற்கான வங்கி வாடிக்கையாளர்களது முயற்சி அதிகரித்தது.

ஜனநாயக நடைமுறையல்லாத அந்த வெகுஜன வாக்கெடுப்பானது, கிரேக்க தொழிலாள வர்க்கத்தை சூழ்ந்துவருகின்ற பேரழிவுக்கான பொறுப்பை, சிரிசாவிடமிருந்து மக்கள் மீதே மாற்றுகின்ற மற்றும் தொழிலாள வர்க்கத்தை, இரந்துநிற்கும் நிலைக்கு தரந்தாழ்த்துவதற்கான சர்வதேச வங்கிகளது உந்துதலுக்கு சிரிசாவின் அடிபணிவிற்கு ஒரு மூடிமறைப்பை வழங்குவதற்கான வெறுப்பூட்டும் முயற்சியாகும்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு கொடுக்க வேண்டிய 1.6 பில்லியன் யூரோ கடன்தொகை மீது செவ்வாயன்று கிரீஸ் செலுத்தவியலாநிலையை அடையும் மற்றும் "முக்கூட்டு" என்று கூறப்படுவது —EU, IMF மற்றும் ECB— அதே நாளில் அதன் பிணையெடுப்பு திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் என்ற சாத்தியக்கூறு, உலகளாவிய பங்குச்சந்தை மற்றும் பத்திர சந்தைகளில் தொடர்ச்சியாக பிரதிபலிப்பான விற்றுதள்ளல்கள், யூரோ செலாவணியின் கீழ்நோக்கிய சுழற்சி, ஸ்பெயின், போர்ச்சுக்கல் மற்றும் இத்தாலி போன்ற ஏனைய உயர்ந்தளவிலான கடன்பட்ட யூரோ குழு நாடுகளின் தேசிய கடன்கள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட ஊகங்கள் என இவற்றின் மீதான அச்சங்களைத் தீவிரமாக்கி உள்ளது.

கிரீஸை யூரோ மண்டலத்திற்குள் வைத்திருக்கும் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு ஞாயிறன்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் ஐ தொலைபேசியில் அழைத்து பேசினார். அதே சேதியை வழங்குவதற்கு அமெரிக்க கருவூலத்துறை செயலர் ஜாக் லெவ் சனியன்று சர்வதேச நாணய நிதிய நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்ட்டையும், ஜேர்மனி மற்றும் பிரான்சின் நிதி மந்திரிகளையும் அழைத்து பேசினார். கிரீஸிற்கு சாத்தியமான கடன் நிவாரணத்தை உள்ளடக்கி இருக்கக்கூடிய ஒரு "நிலையான தீர்வுக்கு" லெவ் அழைப்புவிடுத்தார்.

நியூ யோர்க்கின் பெடரல் ரிசர்வ் வங்கி தலைவர் வில்லியம் டுட்லெ கிரீஸ் நெருக்கடியை ஒரு "மிகப்பெரிய அபாய எச்சரிக்கையாக" குறிப்பிட்டார். கிரேக்கம் வெளியேறுவது என்பது யூரோ அங்கத்துவத்தை பின்வாங்கிக்கொள்ளலாம் என்பதற்கு ஒரு "மிகப்பெரிய முன்மாதிரியை" ஸ்தாபித்துவிடுமென அவர் எச்சரித்தார்.

சிப்ராஸ் தேசிய தொலைக்காட்சியில் அளித்த ஒரு சிறிய உரையில், கிரீஸின் வங்கிகள் திங்கட்கிழமை மூடியிருக்குமென்ற அவரது ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பை வெளியிட்டார். பங்குச்சந்தைகளும் மூடப்பட்டிருக்கும் என்று நிதித்துறை ஆதாரநபர்கள் தெரிவித்தனர்

அடுத்த ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு வரையில் அல்லது அதற்கும் கூடுதலாக வங்கிகள் மூடப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் நிலவுகின்றன. பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது: “வங்கி பல நாட்களுக்கு மூடப்பட்டிருக்குமென்றும், அதனுடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணம் எடுப்பது ஆகியவை மீதான மட்டுப்படுத்தல்களும் அறிவிக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.” வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டதும், ஏடிஎம் இல் இருந்து பணம் எடுப்பது 60 யூரோவிற்கு மட்டுப்படுத்தப்படும் என்ற செய்திகளும் இருந்தன.  

கிரீஸ் வங்கிகளுக்கான அதன் அவசரகால கடன் திட்டங்களை ஐரோப்பிய மத்திய வங்கி முடக்கி வருகிறது என்ற அதன் அறிவிப்புக்குப் பின்னர், பேங்க் ஆஃப் கிரீஸின் ஆளுநர் யானிஸ் ஸ்ரோனாரஸ் -Yannis Stournaras- மூலதன கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படாவிட்டால் அவர் இராஜினாமா செய்யவிருப்பதாக அச்சுறுத்தினார் என்ற வதந்திகளை மறுக்க, அவ்வங்கி நிர்பந்திக்கப்பட்டது.

ஞாயிறன்று காலையிலேயே, கிரீஸின் நாடாளுமன்றம் ஒரு வெகுஜன வாக்கெடுப்புக்கான அரசாங்கத்தின் அழைப்பை ஆதரித்து வாக்களித்தது. “ஆம்" என்ற வாக்குகளைப் பெறுவதற்கு, சிரிசா 300 பலமான நாடாளுமன்ற இடங்களில் குறைந்தபட்ச உச்ச வரம்பாக 151 வாக்குகளைப் பெற வேண்டியிருந்தது. 14 மணிநேர விவாதத்திற்குப் பின்னர் ஒவ்வொரு அங்கத்தவரினதும் பெயர்கூறி அழைக்கப்பட்டு நடாத்தப்படும் ஒரு வாக்கெடுப்பில், அந்த பரிந்துரைக்கு ஆதரவாக 178 வாக்குகளும் அதற்கு எதிராக 120 வாக்குகளும் நிறைவேறின. இரண்டு பிரதிநிதிகள் அதில் கலந்து கொள்ளவில்லை.  

சிரிசா அதன் வலதுசாரி கூட்டணி பங்காளியான சுதந்திர கிரேக்கர்கள் (Anel) கட்சியின் ஆதரவுடன் வென்றது, அது அதற்கு மொத்தம் 161 வாக்குகளை வழங்கியது. அதற்கு கூடுதலாக, பாசிசவாத கோல்டன் டௌன் பிரதிநிதிகளும் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஜனவரியில் சிரிசா தேர்ந்தெடுக்கப்படும் வரையில், 2010இல் இருந்து அடுத்தடுத்து சிக்கன திட்டங்களை திணித்து வந்திருந்தவையும் கோரப்பட்டு வரும் புதிய வெட்டுக்களை உடனடியாக ஏற்றுக்கொள்வதாக இருந்த பழமைவாத புதிய ஜனநாயகம் மற்றும் சமூக ஜனநாயக PASOK கட்சிகள் அந்த வெகுஜன வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்தன. வெகுஜன வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சார்பாக உருவான To Potami (ஆறு) கட்சி, அத்துடன் கிரீஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (KKE) ஆகியவையும் ஆதரித்தன.

அந்த வாக்கெடுப்புக்கு முன்னதாக மத்திய குழு உறுப்பினர் ஜியானிஸ் கியோகாஸ் (Yiannis Gkiokas) கூறுகையில், கடன் வழங்குனர்களின் பரிந்துரைகளையும் மற்றும் இந்த ஒட்டுமொத்த காலகட்டத்தினது விபரங்களை உள்ளடக்கி உள்ள அரசாங்கத்தின் 47 பக்க பரிந்துரையையும் இரண்டையுமே KKE எதிர்ப்பதாக தெரிவித்தார்.

வெள்ளியன்று தோல்வியடைந்த புருசெல்ஸ் பேச்சுவார்த்தைகள், ஏதென்ஸின் முந்தைய சிக்கன நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட்டிருந்த கடன்உதவித்தொகைகளில் மீதமுள்ள 7.2 பில்லியன் யூரோவை ஏதென்ஸ் பெறுவததை மையமாக கொண்டிருந்தது. சர்வதேச நாணய நிதியத்திற்கு செவ்வாயன்று வழங்க வேண்டிய 1.6 பில்லியன் யூரோ கடன்தொகைக்கு மேலதிகமாக, ஜூலை 20 செலுத்தவேண்டியிருந்த 3.5 பில்லியன் யூரோ மதிப்பிலான பங்குப்பத்திரங்கள் மற்றும் ஜூலை 10 செலுத்தவேண்டியிருந்த  2 பில்லியன் யூரோ மதிப்பிலான கருவூல இரசீதுகளை ஏதென்ஸ் யூரோ மண்டல நாடுகளுகளுக்கு திரும்ப செலுத்த வேண்டியுள்ளது.

அங்கே EU, ECB மற்றும் IMF நடவடிக்கைகளின் ஓர் அசாதாரணமான பொறுப்பற்ற குணாம்சம் நிலவுகிறது, அவை சிக்கன நடவடிக்கைக்கு மாற்றீடு இல்லை என்ற அவற்றின் வலியுறுத்தலை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்காக, கணக்கிடவியலா நிதியியல் மற்றும் அரசியல் உள்நோக்கங்களுடன், வேண்டுமென்றே ஓர் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ அரசின் பொருளாதாரத்தைப் பொறிந்து போக செய்துள்ளன. கிரீஸ் "யூரோவில் இருந்தாலும் சரி அல்லது ட்ராக்மாவில் இருந்தாலும் சரி" அந்த வெகுஜன வாக்கெடுப்பின் முடிவு துயரகரமாகவே இருக்குமென சனியன்று சிப்ராஸ் உடனான ஒரு தொலைபேசி உரையாடலில் மேர்க்கெல் தெரிவித்ததாக செய்திகள் குறிப்பிட்டன.   

அந்த பேச்சுவார்த்தைகளின் பொறிவைத் தொடர்ந்து, ஜேர்மன் நிதி மந்திரி வொல்ஃகாங் சொய்பிள செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில், “கிரீஸ் கடுமையான சிரமங்களை அனுபவிக்கும்,” என்றார். அவர் பின்னர் "அவரது தோள்களை குலுக்கி கொண்டதை" பிபிசி சுட்டிக்காட்டியது.  

செவ்வாயன்று கிரீஸின் திவால்நிலைமையை தடுக்க மற்றும் யூரோவிலிருந்து அது வெளியேறுவதைத் தடுக்க அங்கே ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா என்று ஞாயிறன்று ஜேர்மனியின் ZDF தொலைக்காட்சி செய்தி கேள்விக்கு சொய்பிள பதிலளிக்கையில், “அவ்வாறு நான் நினைக்கவில்லை. அது எவ்வாறு இருந்ததோ அவ்வாறே, நம்பமுடியாத இலட்சியத்தோடு இருந்தது மேலும் ஏதேனும் இப்போது நடக்கும் என்பதெல்லாம் உண்மையில் முடிந்து போய்விட்டன, ஆனால் சிப்ராஸிற்கு அது நேற்றே தெரியும்,” என்றார்.

சட்டரீதியில் பேசுகையில், அந்த வெகுஜன வாக்கெடுப்பு காலாவதியாகி போன பரிந்துரைகள் மற்றும் ஏற்பாடுகளோடு சம்பந்தப்பட்டிருக்கும்,” என்று லகார்ட் சனியன்று மாலை பிபிசி க்கு தெரிவித்தார். ஜூன் 30 அன்று கிரீஸ் அதன் பணத்தைத் திரும்ப செலுத்தவில்லையானால், அதனால் "அதற்கு மேல் நிதிகளைப் பெற முடியாது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

கிரேக்க கடன் நெருக்கடி மீதான சந்தைகளின் மௌனம் கலைய உள்ளது,” என்று தலைப்பிட்ட ஞாயிற்றுகிழமை கட்டுரை ஒன்றில், பைனான்சியல் டைம்ஸ் எச்சரித்தது: “கிரேக்க கடன் நெருக்கடியில் வாரயிறுதியில் ஏற்பட்ட தீவிரத்தன்மை, சமீபத்திய வாரங்களில் மேலோங்கியுள்ள ஒப்பீட்டளவிலான மௌனத்தை கலைத்து, திங்களன்று நிதி சந்தைகள் திறக்கையில் ஒரு கூர்மையான எதிர்வினையைத் தூண்டுமென பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.”

ஐரோப்பிய மத்திய வங்கி, கிரேக்க வங்கிகளுக்கு அதன் அவசரகால கடன்களை விரிவாக்க மறுக்கின்ற நிலையில், மற்றும் கடன் வழங்குனர்கள் அந்நாட்டிற்கு ஒரு பிணையெடுப்பு நீடிப்பை நிராகரிக்கின்ற நிலையில், அந்த சம்பவம் கிரீஸோடு மட்டுப்படுமா அல்லது ஓர் உலகளாவிய நிகழ்வாக இருக்குமா என முதலீட்டாளர்கள் அவசர அவசரமாக மதிப்பீடு செய்வார்கள்,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.

வெகுஜன வாக்கெடுப்பு நடத்துவதன் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு முந்தைய மணித்தியாலங்களில், ஆயிரக் கணக்கானவர்கள் அவர்களின் சேமிப்பு பணத்தை ATM களில் இருந்து திரும்ப எடுக்க வரிசையில் நிற்கையில், நாடாளுமன்ற பிரதிநிதிகளே கூட வரிசையில் நின்றதாக கார்டியன் சுட்டிக்காட்டிய நிலையில், பதட்டங்கள் அதிகரித்தன. பல ஏடிஎம் களில் ஆயுதமேந்திய பொலிஸ் ரோந்து வந்தது

பலர் ஏற்கனவே அவர்களது வாழ்வின் சேமிப்புகளைத் திரும்ப எடுத்து, பணத்தை வீட்டில் பத்திரப்படுத்தி உள்ளனர். கடந்த வாரம் திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமைக்கு இடையே, சுமார் 2 பில்லியன் யூரோ வெளியே எடுக்கப்பட்டிருந்தது (ஏப்ரல் இறுதியில் வங்கிகளால் கையிருப்பில் வைக்கப்பட்டிருந்த குடும்ப மற்றும் பெருநிறுவன சேமிப்புகளிலிருந்து மொத்த சுமார் 1.5 சதவீதம் வரை எடுக்கப்பட்டது).

ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றில் கடைசியாக மூலதன கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது சைப்ரஸில் ஆகும், அங்கே வங்கியிலிருந்து பணம் எடுப்பது 300 யூரோவாக மட்டுப்படுத்தப்பட்டது.

ஞாயிறன்று, கிரேக்க நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸ், சனியன்று ஐரோப்பிய குழும நிதி மந்திரிமார்களுடன் நடைபெற இருந்த ஒரு கூட்டத்திற்கான அவரது அறிக்கையின் தகவல்களை வெளியிட்டார். அது அந்த வெகுஜன வாக்கெடுப்பு முனைவிற்கு பின்னால் இருந்த எரிச்சலூட்டும் கணக்கீடுகளைத் தெளிவுபடுத்தியது.

சிரிசாவிடம் கோரப்பட்டு வருகிற சிக்கன நடவடிக்கையின் அளவு மிகவும் அதிகமான ஒன்று என்றும், அவரது அரசாங்கமே உடனடியாக வீழக்கூடிய மற்றும் மக்கள் எதிர்ப்பின் ஒரு வெடிப்பை அது அச்சுறுத்துவதாகவும் வாரௌஃபாகிஸ் தெரிவித்தார். அந்த பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் மற்றும் "நாடாளுமன்றத்தின் மூலமாக நாளை" அவற்றை சிரிசா பெற முயன்றால், ஒரே மாதத்திற்குள் ஒரு புதிய தேர்தலுக்கு அழைக்க வேண்டிய விளைவுடன் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படலாம்பின், காலதாமதம், நிச்சயமற்றத்தன்மை மற்றும் ஒரு வெற்றிகரமான தீர்மானத்திற்கான சாத்தியக்கூறுகள் எல்லாம் பெரிதினும் பெரிது மறைந்துவிடும்,” என்றவர் தெரிவித்தார்.

வாரௌஃபாகிஸ் எச்சரித்தார்: “அந்த அமைப்புகளின் பரிந்துரையை நாடாளுமன்றத்தின் மூலமாக நாங்கள் நிறைவேற்றினாலும் கூட, நாங்கள் உரிமைத்துவம் மற்றும் நடைமுறைப்படுத்தலின் பிரதான பிரச்சினையை முகங்கொடுப்போம். சுருக்கமாக கூறுவதானால், அந்த அமைப்புகளால் கட்டளையிடப்பட்ட அந்த கொள்கைகளைக் கொண்டு சென்ற கடந்தகால அரசாங்கங்கள் அவர்களோடு மக்களை ஒன்றுசேர்த்துக் கொண்டு செல்ல முடியாததைப் போலவே, நாங்களும் அதே விதத்தில் செய்ய தவறுவோம்.”

வேறுவிதமாக கூறுவதானால், சிப்ராஸ் மற்றும் வாரௌஃபாகிஸ் கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் நெற்றிப்பொட்டில் ஒரு வெகுஜன வாக்கெடுப்பு எனும் துப்பாக்கியை வைத்திருக்கிறார்கள். அந்த அமைப்புகளின் விதிமுறைகளை ஏற்பதற்கு ஆதரவாக வாக்குகள் பதிவானால், பின்னர் சிரிசா ஒரு முற்றுப்பெற்ற விடயமாக அதை முன்வைத்ததாக கூறிக்கொள்ள முடியும். வாக்குகள் அதற்கு எதிராக போடப்படுமானால், EU, ECB மற்றும் IMF இனால் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் அவர்களது சொந்த சிக்கன நடவடிக்கைகளை கொண்டு செல்ல அவர்கள் முன்நகர்வார்கள்.