சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

As global markets plummet

Bank closures impose deepening misery on Greek people

உலகளாவிய சந்தைகள் வீழ்ச்சி அடைகின்றபோது

வங்கி மூடல்கள் கிரேக்க மக்கள் மீது ஆழ்ந்த துயரங்களை திணிக்கின்றன

By Alex Lantier
30 June 2015

Use this version to printSend feedback

கிரீஸின் வங்கி அமைப்புமுறை பொறிவைத் தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு வாரகால வங்கி விடுமுறை நடைமுறைக்கு வந்ததுடன், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கிரீஸை யூரோ மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதற்கு அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்திய நிலையில், திங்களன்று ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பங்குச்சந்தைகள் கூர்மையாக வீழ்ச்சியடைந்து நிறைவடைந்தன.

ஜப்பானின் நிக்கி குறியீடு 2.9 சதவீதம் சரிந்தது. சீன ஆணையங்களின் அவசர வட்டிவிகித வெட்டுக்களால் ஊக்கப்படுத்தப்பட்டதற்கு இடையிலும் ஷாங்காய் காம்போசிட் 3.34 சதவீதம் சரிந்தது.

யூரோ மண்டலத்திலிருந்து கிரேக்க வெளியேற்றம் ஐரோப்பா எங்கிலும் பிரதான வங்கிகளை அடியோடு வெட்டுமென்ற அச்சங்களால் வங்கி பங்குகள் பாதிக்கப்பட்டதுடன் சேர்ந்து, ஐரோப்பிய சந்தைகள் பலமாக சரிந்தன. ஜேர்மன் DAX குறியீடு 3.56 சதவீதம் சரிந்தது, பிரான்சின் CAC-40 3.74 சதவீதம் வீழ்ந்தது, இத்தாலியின் FTSE-MIB 5.17 சதவீதம் சுருங்கியது, ஸ்பெயினின் Ibex 4.56 சதவீதம் வீழ்ந்தது, மற்றும் பிரிட்டனின் FTSE-100 1.97 சதவீதம் சரிந்தது.

ஐரோப்பிய அரசு கடன் மீதான வட்டி விகிதங்கள் உயர்ந்தன, இப்போது வரையில் அவை 2012இல் எட்டிய சாதனையளவிலான மட்டங்களுக்கும் குறைவாகவே இருந்து வந்தன. ஸ்பானிஷ் மற்றும் இத்தாலியின் பத்து-ஆண்டுகால பத்திரங்களின் நஷ்டங்கள் முறையே 0.2 சதவீதம் உயர்ந்து 2.31 சதவீதமாக மற்றும் 2.36 சதவீதமாக உயர்ந்தன. போர்ச்சுக்கலின் விகிதம் 0.3 சதவீதம் உயர்ந்து 3.05 சதவீதத்தை எட்டியது.

நியூ யோர்க்கில், டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 1.95 சதவீத வீழ்ச்சியுடன் 350 புள்ளிகளை இழந்தது. நாஸ்டாக் குறியீடு 2.4 சதவீதம் வீழ்ந்து, இன்னும் அதிக வேகத்தில் சரிந்தது.

பண-பற்றாக்குறையில் உள்ள கிரீஸ் வங்கிகளிலிருந்து மூலதனம் வெளியேறி, நிதியியல் துறையின் ஒரு முழு பொறிவைத் தூண்டிவிடுவதை தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட வங்கி விடுமுறையின் முதல் நாளை மில்லியன் கணக்கான கிரேக்கர்கள் எதிர்கொண்டிருந்த போது, பதட்டத்தை தவிர்ப்பதற்காக ஏதென்ஸ் பங்குச்சந்தை மூடப்பட்டது. தனிப்பட்ட பண எடுப்புகள் நாளொன்று 60 யூரோவாக மட்டுப்படுத்தப்பட்டது, மற்றும் பல ஓய்வூதியதாரர்கள் அவர்கள் பெறவேண்டிய ஓய்வூதிய தொகைகளைப் பெறுவதிலிருந்து தடுக்கப்பட்டிருந்தனர். அன்றாட பண எடுப்புகள் மீதான மட்டுப்படுத்தல்கள் 20 யூரோ அளவிற்கு வெட்டப்படலாம் என்ற செய்திகளும் நேற்று வெளியாயின.

வங்கி விடுமுறை தொடர்கிற நிலையில், கிரீஸ் எங்கிலும் சமூக துயரங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்றத்தன்மையின் அதிகரிப்பே விளைவாக உள்ளது.

நான் இங்கே காலை 4 மணிக்கு வந்தேன். ஏனென்றால் எனக்கு எனது ஓய்வூதியம் எடுக்க வேண்டியுள்ளது,” என்று தெசலோனிகி இல் அவரது வங்கி வாசலில் காத்திருந்த ஓர் ஓய்வூதியதாரர் தெரிவித்தார். “என்னிடம் ஓர் அட்டை இல்லை, என்ன நடக்கிறதென்று எனக்கு தெரியவில்லை, உணவு வாங்குவதற்கு கூட எங்களிடம் போதிய பணமில்லை. யாருக்கும் எதுவும் தெரியாது. ஒரு வங்கி பணியாளர் காலை 8 மணிக்கு வந்து, 'உங்களுக்கு எந்த பணமும் கிடைக்க போவதில்லை' என்று தெரிவித்தார், ஆனால் 70 கிளைகள் திறந்திருக்குமென நாங்கள் கேள்விப்படுகிறோம்,” என்றார்.

இப்போது அதிகபட்ச பணம் எடுக்கும் வரம்பு 60 யூரோவாக உள்ளது. அடுத்து அவர்கள் முழுவதுமாக ஏடிஎம் களை மூடுவார்கள். பணத்தைப் பெற நாங்கள் போகும்போது, அவர்கள் எங்களுக்கு ட்ராக்மாவை அளிப்பார்கள்,” என்று ஏதென்ஸில் உள்ள ஓய்வூபெற்ற இராணுவ அதிகாரி Yiorgos Aggelopoulos முன்அனுமானித்தார்.

கிரீஸில் என்ன நடக்கிறதோ, அவ்விடயங்கள் நல்ல விதமாக தெரியவில்லை,” என்று ஓய்வூதியதாரர் Ioanna Koufopoulou தெரிவித்தார். “நல்ல ஸ்திரமான வெளிநாடுகளுக்கும் அதிக சமத்துவமான சமூகங்களுக்கும் செல்லுமாறு நாங்கள் எங்கள் குழந்தைகளிடமும் பேரன்-பேத்திகளிடமும் கூறி வருகிறோம்,” என்றார்.

கிரேக்க செலாவணியின் எதிர்காலம் மீது நிலவும் நிச்சயமற்றத்தன்மைக்கு இடையே, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற முக்கிய இறக்குமதி பண்டங்களின் வினியோகம் பற்றாக்குறையில் போகுமென்ற எச்சரிக்கைகளும் அங்கே நிலவுகின்றன. Crete இல் எரிவாயு நிலையங்கள் காலியாகி இருந்தன, மேலும் உலகளாவிய மருந்து நிறுவனங்கள் முக்கிய மருந்து பொருட்களின் பற்றாக்குறை அபாயம் குறித்து எச்சரித்தன.

கிரேக்கம் வெளியேறும் மிக மோசமான சமயத்தில், மருந்து வினியோக முறை மீதான நம்பிக்கை குழப்பத்திற்குள்ளாகுமென நாங்கள் நம்புகிறோம், அது பொது சுகாதார அபாயத்தை உருவாக்கும்,” என்று மருந்துத்துறை மற்றும் அத்துறை அமைப்புகளின் ஐரோப்பிய கூட்டமைப்பு ஐரோப்பிய ஒன்றிய கமிஷனுக்கு ஒரு கடிதம் எழுதியது. கிரேக்கம் ஒரு மலிவான ட்ராக்மா செலாவணிக்கு திரும்பியதும், வர்த்தகர்கள் கிரீஸில் மலிவு மருந்தை வாங்கி அதை வெளிநாடுகளுக்கு விற்று இலாபமீட்ட முயல்வார்கள், அது கிரீஸில் பற்றாக்குறைக்கு இட்டுச் செல்லுமென அது எச்சரித்தது.

நிதியியல் நெருக்கடியும் கிரீஸின் நிலைமைகளும் இரண்டுமே கடுமையாகக்கூடும். சர்வதேச நாணய நிதியத்திற்கு செலுத்த வேண்டிய 1.6 பில்லியன் யூரோ தொகை மீது இன்று திரும்ப செலுத்தவியலாநிலையை ஏற்படுத்த அவர்கள் திட்டமிட்டிருப்பதைக் கிரேக்க அதிகாரிகள் நேற்று உறுதிப்படுத்தினர்.

இந்த நெருக்கடியானது, ஐரோப்பா எங்கிலும் பொருளாதாரங்களுக்குக் குழிபறித்த மற்றும் தொழிலாளர்களது வாழ்க்கை நிலைமைகளை சீரழித்த 2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தால் பின்பற்றப்பட்ட பிற்போக்குத்தனமான சிக்கன கொள்கைகளின் விளைபொருளாகும்.

ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பு நிதிகளுக்கு பிரதியீடாக என்ன சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பது என்பதன் மீது ஐரோப்பிய ஒன்றிய மற்றும் கிரேக்க அதிகாரிகளுக்கு இடையே நடந்த இந்த வாரயிறுதி பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன, அதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைக்கப்பட்ட சிக்கன பொதியை ஏற்பதா வேண்டாமா என்பதன் மீது கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் ஜூலை 5 இல் வெகுஜன வாக்கெடுப்புக்கு அழைப்புவிடுத்தார். யானிஸ் வாரௌஃபாகிஸ் ஒரு யூரோ மண்டல நிதியியல் மந்திரிகளின் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் உத்தியோகப்பூர்வமாக ஒட்டுமொத்தமாக பிணையெடுப்பைக் கைவிட்டதோடு, கிரீஸை யூரோ செலாவணியிலிருந்து வெளியேற்ற நிர்பந்திக்கவும் அச்சுறுத்தினர்.

நேற்று இரவு தேசிய தொலைக்காட்சியில் பேசுகையில், சிப்ராஸ் வெகுஜன வாக்கெடுப்பில் "வேண்டாமென" வாக்கிடுமாறு அழைப்புவிடுத்தார். அது ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளில் அவரது கரங்களைப் பலப்படுத்துமென அவர் கூறுகிறார். யூரோ மண்டலத்திலிருந்து கிரேக்கம் வெளியேறுவதற்கு ஒட்டுமொத்தமாக "பெரும்" விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால், யூரோ மண்டலத்திலிருந்து கிரீஸ் வெளியேற்றப்படாது என்பதில் அவர் நம்பிக்கையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சிப்ராஸின் உத்தரவாதங்கள் மதிப்பற்றவை. சிக்கன நடவடிக்கைக்கு எதிரான ஒரு வாக்குகளின் அடிப்படையில் அதிகாரத்திற்கு அவர் கொண்டு வரப்படுவதற்கு முன்னரும் சரி அதற்கு பின்னரும் சரி அவர் அளித்த ஒவ்வொரு வாக்குறுதியும் உத்தரவாதமும் ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் போயுள்ளது. சிரிசா எதையுமே முன்கணிக்கவில்லை. கடுமை குறைந்த ஏதோவிதமான சிக்கன முறையை பேரம்பேசி கொண்டேஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதுகாப்பதற்கான மற்றும் பிணையெடுப்பு திட்டத்தைத் தூக்கிப்பிடிப்பதற்கான அதன் முன்னோக்கு, திவாலானது என்பதை நிரூபித்துள்ளது.

இதற்கிடையே சிரிசா தலைமையிலான அரசாங்கம் கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் மீது பில்லியன் கணக்கில் கூடுதலான வெட்டுக்களைத் திணித்துள்ளது, அதேவேளையில் செல்வந்த தட்டுக்கள் அவற்றின் பணத்தை கிரேக்க வங்கிகளில் இருந்து எடுத்து, வெளிநாடுகளின் பாதுகாப்பான இடங்களில் கொண்டு செல்ல அனுமதித்துள்ளது.

அவரது தொலைக்காட்சி உரையில், சிப்ராஸ் கூறுகையில், வெகுஜன வாக்கெடுப்பு அவருக்கு எதிராக சென்றால், அவர் இராஜினாமா செய்து புதிய தேர்தர்களுக்கு அழைப்புவிடுக்க இருப்பதாக தெரிவித்தார். “கிரேக்க மக்கள் சிக்கன நடவடிக்கையின் கீழ் இருக்க விரும்புவதைத் தேர்ந்தெடுத்தால், நாங்கள் அதை மதிப்போம், ஆனால் அதுபோன்றவொரு கட்டளைக்கு எங்களால் சேவை செய்ய இயலாது,” என்றவர் அறிவித்தார்.

பதவியிலிருந்து இறங்க பரிசீலிப்பது பற்றிய சிப்ராஸின் முடிவு, சிரிசாவின் அரசியல் திவால்நிலையை இன்னும் கூடுதலாக அடிக்கோடிடுகிறது. தொழிலாளர்கள் மீது கூடுதலாக ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதற்கு அரசியல்ரீதியிலான மூடிமறைப்பை வழங்கும் நோக்கில், அந்த வெகுஜன வாக்கெடுப்புக்கு அழைப்புவிடுத்தமையே ஒரு பிற்போக்குத்தனமான உத்தியாகும்.

இந்த வாரயிறுதியில், நிதி மந்திரி வாரௌஃபாகிஸ் கூறுகையில் சிரிசா ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்து பேரம்பேசி, அந்த அடித்தளத்தில் ஐரோப்பிய ஒன்றிய பொதிக்கு வாக்கிடுமாறு கிரேக்க மக்களிடையே பிரச்சாரம் செய்து, மட்டுப்படுத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய விட்டுக்கொடுப்புகளின் மீது அமைந்த ஒரு கடைசி நிமிட உடன்பாட்டை எட்ட திட்டமிட்டிருந்ததை ஒப்புக்கொண்டார். “எழுதப்படாமல் கோடிட்ட வரிகளில் நாங்கள் கையெழுத்திடுவதையே கிரேக்க மக்கள் விரும்பினால்அது அரசாங்கத்தை மாற்றியமைக்கும் அல்லது அரசு மட்டத்தில் ஏதோவிதமான குழப்பத்தை உண்டாக்கும் என்றாலும் கூடஅதையே நாங்கள் செய்வோம்,” என்றவர் தெரிவித்தார்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான போக்கு மற்றும் பேரம்பேசுதல்களில் தோல்வி ஆகியவற்றிற்கு முன்னால், சிப்ராஸ், ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிக்கன நடவடிக்கைகள் மீது மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புவதற்கான ஒரு நியாயப்பாடாக, அவரே "வேண்டாம்" என்று வாக்களிக்குமாறு அழைப்புவிடுத்து, வெகுஜன வாக்கெடுப்பின் உள்ளடக்கத்தை மாற்றுவதற்கு முயன்று வருகிறார்.

ஐரோப்பிய ஒன்றிய கமிஷன் தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் வெகுஜன வாக்கெடுப்பில் "ஆம்" என்று வாக்களிக்குமாறு கிரீஸிற்கு அழைப்புவிடுத்தார். “கிரேக்க மக்கள் எனது இதயத்திற்கருகில் இருப்பவர்கள்,” என்றவர் அர்த்தமற்ற விதத்தில் கூறுகிறார். ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கையால் திணிக்கப்பட்ட கடுமையான நிலைமைகளால் 11,000 பேர் தற்கொலை செய்து கொண்ட ஒரு நாட்டில், ஜூங்கர் "வேண்டாம்" என்று வாக்கிடுவதற்கு எதிராக வாதிடுகையில், “நான் கிரேக்கர்களுக்குக் கூறுவதெல்லாம், தற்கொலை செய்து கொள்ளாதீர்கள், ஏனென்றால் நீங்கள் சாவுக்கு பயந்தவர்கள்,” என்றுரைத்தார்.

அந்த வெகுஜன வாக்கெடுப்பில் "வேண்டாம்" என்ற வாக்குகளை, யூரோ மண்டலத்திலிருந்து கிரீஸ் வெளியேறுவதற்கு அடித்தளமாக பார்ப்பதாக, பிரதான யூரோ மண்டல பொருளாதாரங்களின் முன்னணி அரசியல்வாதிகள் தெளிவுபடுத்தினர். ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் கிறிஸ்துவ ஜனநாயக யூனியனின் கூட்டணி பங்காளியான, ஜேர்மனியின் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் சிங்மர் காப்ரியல் கூறுகையில், கிரேக்க வெகுஜன வாக்கெடுப்பில் "வேண்டாம்" என்ற ஒரு வாக்கு "யூரோவில் தங்கியிருப்பதற்கு எதிரான ஒரு தெளிவான முடிவாகும்" என்றார்.

பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டும் இத்தாலி பிரதம மந்திரி மரியோ ரென்சியும் இருவருமே காப்ரியலின் கருத்துக்களையே எதிரொலித்தனர். கிரேக்க வெகுஜன வாக்கெடுப்பு ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகள் குறித்ததல்ல, மாறாக கிரீஸ் யூரோ மண்டலத்தில் இருக்க வேண்டுமா இல்லையா என்பதைக் குறித்ததாகும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

கட்டுரையாளரின் ஏனைய பரிந்துரைகள்:

கிரேக்க நெருக்கடி முன்னுக்கு வருகிறது