சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

ආචාර්ය දේවසිරි: අධිරාජ්යවාදයේ කඳවුරට සේන්දුවූ බුද්ධිමය වංචනිකයෙක්

கலாநிதி தேவசிறி: ஏகாதிபத்திய முகாமுக்குள் நுழைந்துகொண்டுள்ள புத்திஜீவி வஞ்சகர்

M. Darshana, K. Ratnayake
16 June 2015

Use this version to printSend feedback

”தற்போது நாட்டுக்கு க்டோபர் புரட்சி ஒன்று தேவை” என்ற தலைப்பின் கீழ், கொழும்பு பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறியுடன் நடத்திய நேர்காணல் ஒன்று, கடந்த ஏப்ரல் 26ம் திகதி, மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜேவிபீ) வெளியிடப்படும் லங்கா பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அந்த கலந்துரையாடலின் போது, “இச் சந்தர்பத்தில் மக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன?” என்ற கேள்விக்கு தேவசிறியின் பதில் பின்வருமாறுள்ளது:

“கடந்த ஜனதிபதி தேர்தலின் போது முன்வைக்கப்பட்ட கருத்து மிகவும் சிறந்த கருத்தாகும். நல்லாட்சி பற்றிய, ஜனநாயகம் பற்றிய மற்றும் சமூக நியாயம் பற்றிய... அந்த கருத்துக்களை நாம் முன்கொண்டு செல்ல வேண்டும். 1917ம் ஆண்டு, ரஷ்ய புரட்சியில் இரண்டு சந்தர்பங்கள். சார் ஆட்சியை கவிழ்த்த “பெப்ரவரி புரட்சி” மற்றும் அக்டோபர் புரட்சி என்பனவே அவையாகும். எம்முடைய பெப்பிரவரி புரட்சி நடந்துவிட்டது. அக்டோபர் புரட்சி ஒன்று எமக்கு அவசியமாகும். அக்டோபர் புரட்சி என்று குறிப்பிடுவது இவ்விடத்தில் மிக குறிப்பான ஒன்றாகும். இருந்தது கவிழ்ந்து போனாலும் தோற்றவர்கள் மீண்டும் வர முயற்சிக்கின்றனர். அதுவும் அபாயகரமான நிலைமையாகும். ராஜபக்ஷ‌வினர் மீண்டும் பழைய நிகழ்ச்சிநிரலுடன் வெளிப்பட்டுள்ளனர். அதனை முதலில் தோற்கடிக்க வேண்டும். எமக்கு முன்னுள்ள சவால் அதுவேயாகும்.”

ராஜபக்ஷவை தோற்கடித்து சிறிசேனவை ஜனாதிபதியாக்கியமை தேவசிறியின் ஒப்பீட்டின்படி பெப்பிரவரிப் புரட்சியாகும். அவரின் படி, குறிப்பாக அக்டோபர் புரட்சி என்பது ராஜபக்‌ஷ மீண்டும் பதவிக்கு வர இடமளிக்காது தோற்கடிப்பதே ஆகும். இந்தப் பேராசிரியர் போலி இடது நவ சம சமாஜக் கட்சி உட்பட பல்வேறு மந்தியதர வர்க்க குழுக்களுடன் ஒருங்கிணைந்து, ஜனாதிபதித் தேர்தலின் போது, ஏகாதிபதிபத்திய-சார்பு மைத்திரிபால சிறிசோனவை ஜனநாயகப் போர்வையில் சோடித்து அவரை பதவிக்கு கொண்டு வர மக்கள் அணிதிரள வேண்டும் எனப் பிராசாரம் செய்தார். சிறிசேனவை பதவியில் வைத்திருப்பதற்காகவும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வரவுள்ள “அபாயகரமான நிலைமையை” தவிர்த்துக் கொள்ளும் “சவாலைச்” சூழ அணிதிரள வேண்டும் என தற்போது தேவசிறி தெரிவிக்கின்றர். மே 17, ராவய பத்திரிகையில் இதற்கு சமமான அவரது இன்னொரு நேர்கானல் பிரசுரமாகியிருந்தது. இக் குழுவினர், ஏகாதிபத்திய-சார்பு சிறிசேன ஆட்சியை பேணுவதற்காக அடுத்து கூச்சலிடவுள்ள பிரச்சார சுலோகம், “ராஜபக்ஷவின் சவாலைத் தோற்கடிப்பதற்கு அணிதிரளுங்கள்!” என்பதாகும்.

போராசிரியர் மிகைப்படுத்தும் இந்த மாயைகள் மற்றும் ”சவால்” மேலிருந்து கீழ்வரை அவரது புத்திஜீவி கபடத்தனத்தையும் பிற்போக்கு அரசியலையுமே காட்சிப்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் பெப்பிரவரி புரட்சியானது முதலாம் உலகப் போரினால் உக்கிரப்படுத்தப்பட்ட ஜார் மன்னராட்சியின் கொடூர அடக்குமுறைக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான வெகுஜன எழுச்சியாகும். அந்த எழுச்சியால் ஜார் அரசாங்கத்தை தூக்கிவீச முடிந்திருப்பினும், ஜனநாயக மற்றும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க வல்ல சோசலிசப் புரட்சியை வெற்றிகொள்ள முடியாமல் போனதற்குக் காரணம், அப்போது தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் படையின் கைக்கு புரட்சியின் தலைமைத்துவம் கிடைக்கப் பெறாமையே ஆகும். அடுத்து வந்த ஏழு மாதங்களுள், ஆட்சியில் இருந்த முதலாளித்துவ கூட்டரசாங்கத்தை அம்பலப்படுத்திய போராட்டத்தின் ஊடாக, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தலைமையிலான போல்ஷிவிக் கட்சியானது புரட்சியின் தலைமைத்துவத்தை வெற்றிகொண்டதன் பின்னர், அக்டோபர் எழுச்சியில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஸ்தாபித்து, ஜனநாயக மற்றும் சமூகப் பணிகளை இட்டு நிரப்பியது. சுருங்கக் கூறின், ரஷ்யப் புரட்சியில் நடந்தது இதுவே.

தேவசிறி, தொழிலாள வர்க்கத்தை சோசலிச புரட்சிக்காக தயார்ப்படுத்தும் இந்த முன்னோக்கிற்கு முழு எதிரியாவார். போலி ஒப்புமையை காட்டுவதற்காக, அவர் ரஷ்யப் புரட்சி குறித்து இங்கு குறிப்பிடுவது, அதைப் பற்றி புத்திஜீவித்தனமாக சிந்திக்கும் பிரிவினரிடையே காணப்படும் ஈர்ப்பை குழப்புவதற்கே ஆகும்.

தேவசிறியின் பெப்பிரவரி புரட்சி

தேவசிறி, சிறிசேன பதவிக்கு வந்ததை பெப்பிரவரி புரட்சியுடன் ஒப்பிடுவது, அது வெகுஜனக் கிளர்சியில் உருவான ஜனநாயகப் புரட்சியாக மிகைப்படுத்துவதற்கே ஆகும். இது வேண்டுமென்றே செய்யப்படும் மோசடியாகும். ஜனவரி 8 இலங்கையில் நடந்தது, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் தமது சுய மூலோபாய தேவைகளின் அடிப்படையில் தலையீடு செய்து மேற்கொண்ட ஒர் ஆட்சி மாற்றமே ஆகும். கிளிண்டன் மன்றத்தின் ஊடாக ஒபாமா ஆட்சியுடன் தொடர்பை நிலைநாட்டிக்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் அமெரிக்க-சார்பு ஜக்கிய தேசிய கட்சி (யூஎன்பீ) தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் சிறிசேனவை முன்கொணர்வதற்காக பயன்படுத்தப்பட்டனர்.

வாஷிங்டன் ராஜபக்ஷவை எதிர்த்தது, அவரது ஜனநாயக விரோத பொலீஸ் ஆட்சி முறையின் காரணமாக அல்ல. அவர் சீனாவுடன் தொடர்ந்தும் பொருளாதார, மூலோபாய உறவுகளை பேணி வந்ததாலேயே ஆகும். பெய்ஜிங்குக்கும் வாஷிங்டனுக்கும் இடையில் சமநிலைப்படுத்தும் ராஜபக்ஷவின் கொள்கைக்கு முற்றுப் புள்ளியை வைத்து, “ஆசியாவில் முன்நிலை” கொள்கையின் கீழ், சீனாவுக்கு எதிராக முன்னெடுக்கும் இராணுவத் தயாரிப்பு வலையமைப்புக்குள் இலங்கையை மூலோபாய ரீதியில் அவசியமான மையமாக சேர்த்துக்கொள்வதே ஒபாமா ஆட்சியின் இலக்காக இருந்தது.

இந்த பிற்போக்கு நடவடிக்கையை மூடிமறைப்பதில் பிரதான பங்கு ஆற்றியது நவ சம சமாஜக் கட்சி போன்ற போலி இடதுகள் உட்பட்ட மத்தியதர வர்க்க கும்பல்களே ஆகும். இக் கன்னையினரிடையே ராவய ஆசிரியர் ஜே. ஜனரஞ்சன தலமையிலான அமைப்பான பிரசைகள் சக்தி, மாதுலுவாவே சோபித பிக்கு தலைமையிலான சமூக நீதிக்கான இயக்கம், நியாயமான சமூகத்துக்கான பல்கலைகழக விரிவுரையாளர் சங்கம் போன்றவை முககியமானவையாகும். இவற்றின் திட்டமிடலாளராகவும் கொள்கை வகுப்பாளராகவும் செயற்பட்ட பிரதான நபர் தேவசிறி ஆவார். இவ்வமைப்புகளின் முக்கிய நடவடிக்கை, ராஜபகஷ ஆட்சிக் எதிரான பொது மக்களது எதிர்ப்பை சிறிசேனவின் பின்னால் திசைதிருப்பி விடுவதும், ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி ஊடாக ராஜபக்ஷவின் சர்வாதிகாரத்தை தகர்த்து, லஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்க வந்த ஒரு மாபெரும் வீரனாக சிறிசேனவை துக்கிப் பிடிப்பதுமாகும்.

தேவசிறி தனது கல்வியாளர் சகபாடிகளுடன் இணைந்து, சிறிசேனவை வெற்றிபெறச் செய்யும் பிரச்சாரத்துள், இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கான அமெரிக்க தலையீட்டை நியாயப்படுத்தும் கொடூர செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். தேர்தல் நெருங்கியபோது, “மாற்றம் ஒன்றுக்காக ஏன் வாக்களிக்க வேண்டும்?” என்ற தலைப்பில், நேர்மையான சமூகத்துக்கான பல்கலைகழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் பெயரில் தேவசிறியினால் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசாரம் இவ்வாறு குறிப்பிடுகின்றது.

“...சர்வதேச ரீதியில் எவரும் இந்த நாட்டில் தலையீடு செய்தால், இந்த நாட்டிலுள்ள பல்வேறு ஜனநாயக விரோத நிலைமைகளை பயன்படுத்தியே அவர்கள் அவ்வாறு செய்கின்றனர். கடந்த காலங்களில் அமெரிக்கா செய்த தலையீட்டில் தலையீடுகள் மூலம் இந்த நிலைமை தெளிவாகிறது. சிரியா, லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்க தலையீடுகளுக்கு, அந்த நாடுகளினுள் இருந்த ஊழல் மிக்க ஜனநாயக விரோத ஆட்சிகளே வழியமைத்தன. ஆகையினால் இங்கு குறிப்பிடப்படும் சர்வதேச சதியை தோற்கடிப்பது அவசியமெனின், எவ்வாறெனினும் இந்நாட்டுக்கு எற்பட்டுள்ள சர்வதேச அவமானத்தை இல்லாதொழிப்பது அவசியமாகும்.”

மேற்குறிப்பிட்ட அறிக்கையினூடாக, அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்துக்காக தொடுத்துள்ள கொடூர யுத்தத்தை, ஜனநாயகத்துக்காக செய்யும் தலையீடாக சித்தரிக்கப்படுவதை காணலாம். அமெரிக்காவை “மனிதாபிமான எகாதிபத்தியம்” என சித்தரிக்கும் உலகம் பூராவுமுள்ள போலி இடது அமைப்புக்களுடன் அணிதிரண்டுள்ள தேவசிறி போன்றேர், ஏகாதிபத்திய முகாமுக்குள் நுழைந்து கொண்டுள்ளனர்.

தேவசிறி, அமெரிக்காவின் “தலையீடு” பற்றிய உதாரணங்களாக சிரியா, லிபியா, ஈராக் என்பவற்றை குறிப்பிடுவது, அந்நாடுகளை சுக்குநூறாக்கி நடத்தும் இன்னமும் நடத்திவரும் இரத்தக்களரி அழிவு பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லாமலேயே ஆகும். 2003ல், சதாம் ஹுசைன் அரசாங்கத்திடம் “மனிதப் பேரழிவு ஆயுதங்கள்” இருப்பதாகவும் அல்கைடாவுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறிக்கொண்டே அமெரிக்கா ஈராக் மீது ஆக்கிரமிப்பு நடத்தியது. இது பொய் என்பது நிரூபிக்கப்பட்டது மட்டுமன்றி, அல்கைடா ஈராக்கின் எதிரியாகவும் விளங்கியது. லிபியாவில் அமெரிக்க மற்றும் ஏனைய ஏகதிபத்தியங்களின் தலையீடு, அந்நாட்டு மக்களுக்கு அதே போன்ற கொடிய பேரழிவையே ஏற்படுத்தியுள்ளது.

அண்மைய வரலாற்றில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய கணக்கிட முடியாத எதிர்புரட்சி நடவடிக்கைகளில் ஒன்று இரண்டைக் குறிப்பிட்டால், வியட்னாம் மற்றும் கம்போடியவில் நடத்திய கொடிய யுத்தத்தையும், நிகரகுவா மற்றும் சில்லியில் நடத்திய சீ.ஜ.ஏ. சதிகளையும் குறிப்பிட முடியும். வரலாற்றைப் பற்றி, இந்தப் பேராசிரியர் தனது அளவுகோளின் படி, இவற்றை அந்த நாடுகளை கம்யூனிசத்திலிருந்தும் கழற்றிவிடுவதற்காக செய்த சிறந்த நடவடிக்கையாக குறிப்பிட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

19ம் நூற்றாண்டில் காலனித்துவ மயமாக்கலில் ஈடுபட்ட இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு காலனித்துவவாதிகள், தாம் நாடுகளை “ஒழுங்கமைக்கும் தூதில் ஈடுபட்டுள்ளதாகவே” கூறினர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நல்லாட்சி மற்றும் மனித உரிமை பேணும் தூதுப் பயணம் பற்றிய பிரச்சாரமானது அந்த கடந்த காலங்களின் தற்போதய எதிரொலியேயாகும்.

”நல்லாட்சி, ஜனநாயகவாதம் மற்றும் சமூக நேர்மை” போன்ற “மிகச் சிறந்த கருத்துக்கள்” தேர்தலின் போது முன்வைக்கப்பட்டதாக தேவசிறி கூறுகிறர். உண்மையில் இந்த சூத்திரப்படுத்தல்கள் ஊடாக, சிறிசேனவை சூழ இயங்கிய நடவடிக்கைகளுக்கு சாக்குப் போக்கை வழங்குவதே இடம்பெற்றது. பல்கலைக் கழகங்களில் தேவசிறி போன்ற விரிவுரையாளர்கள், மாணவர்களுக்கு இந்த வசனங்களின் முக்கியத்துவத்தை அங்கும் இங்கும் புரட்டி கட்டுரைகளை எழுதுவதற்கு சொல்லிக்கொடுக்கும் அதேவேளை, அவற்றின் சிறப்பைப் பற்றி மிகைப்படுத்திக் காட்டும் கட்டுரைகளையும் ஊடகங்களினூடாக விநியோகிக்கின்றனர். அண்மைக்காலத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வேட்டையாடுவதற்கு தீர்மானித்த ஆட்சிகளுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கைகள் இந்த பித்தலாட்ட வசனங்களையே பிரதிபலித்தன. தேவசிறி போன்றேர் தூக்கிப்பிடிக்கும் இந்த வசனங்களுக்கும் இராஜாங்கத் திணைக்கள அறிக்கைக்கும் இடையே வேறுபாடின்மை காணப்படுவது தற்செயலான ஒன்றல்ல. அவற்றின் தோற்றுவாய் வாஷிங்டனே ஆகும்.

தேவசிறி எவரது, எவரின் சார்பாக காணப்படும் ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் சமூக நேர்மைப் பற்றி பேசுகிறார்? கடந்த 5 மாதங்களில் தொழிலாளர்கள், வறியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எந்தவொரு ஜனநாயகமோ போலி நல்லாட்சியோ நியாயமோ முதலாளித்துவ கட்சியின் கிழ் கிடையாது என்பதே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. தேவசிறி போன்ற மத்தியதர வர்க்க பகுதியினர், தமக்கு ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியின் கீழ் தொலைந்து போன வாய்ப்பைகளை பெற்றுக்கொள்வதையே இந்த கோரிக்கைகளின் மூலம் எதிர்பார்க்கின்றனர்.

தேவசிறியின் அக்டோபர் புரட்சி அல்லது “இராஜபக்‌ஷ சவாலை” தோற்கடித்தல்

கலாநிதியின் இரண்டாவது பெரிய மோசடி, ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுப்பதை அக்டோபர் புரட்சியுடன் ஒப்பிடுவதாகும். தான் செய்த ஒப்பிட்டின் கபடத்தனம் யாவருக்கும் புலப்படுவதால், அவர் அதனை குறீயீடாக பயன்படுத்துவதாக கூறிக் கொள்கின்றார். “இருந்தது கவிழ்ந்திருந்தாலும் தோற்கடிக்கப்பட்டவர்கள் மீண்டும் பதவிக்கு வர முயல்கின்றனர்” என்று தேவசிறி புலம்புகின்றார்.

அக்டோபர் புரட்சி, ரஷ்யாவில் நிலப்பிரபுத்துவ அடையாளங்களையும் உள்ளடக்கிய முதலாளித்துவ முறையை தூக்கி வீசிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சோசலிசப் புரட்சியாகும். எதிர்ப்புரட்சிகர சக்திகள் எழுச்சியுறுவதற்கு எதிராகவும் அதற்கு வழியமைத்து வந்த முதலாளித்துவ அரசாங்கத்தை தூக்கி வீசுவதற்காகவும் புரட்சியாளர்கள் போராட வேண்டியிருந்தது. புரட்சியின் பின், ரஷ்ய தொழிலாள வர்க்கத்திற்கு, ஏகாதிபத்தியவாதிகளின் ஆதரவைக் கொண்ட எதிர்ப் புரட்சியாளருக்கு எதிரான சிவில் யுத்தத்தின் மூலம் தமது அதிகாரத்தை பேணிக்கொள்ள போராட வேண்டியிருந்தது.

தேவசிறி சிலகாலம் வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்குக்கும் இடையில் இரண்டு பக்கத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ராஜபக்ஷ ஆட்சியுடன் இணங்கிப் போயிருந்தார். வாஷிங்டன் நேரடியாக தலையிட்டு சிறிசேனவை முன்கொண்டுவந்த போது, தேவசிறி மற்றும் அவரது சகபாடிகளும் அவரைச் சூழ அணிதிரண்டனர். தற்சமயம் தேவசிறி ராஜபக்ஷவுக்கும் அவரது கையாட்களுக்கும் எதிராக, அவர்களுக்கு இடமளிக்காது சிறிசேனவை ஆட்சியில் தக்கவைத்து கொள்வதற்கே ஆயுதங்களைக் கூர்மைபடுத்தி வருகின்றார். அவரது “அக்டோபர் புரட்சி” இதுவேயாகும்.

தேவசிறி முண்டுகொடுத்த வேலைத்திட்டம் தற்போது நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. கடந்த ஆறு மாத காலத்துக்குள் சிறிசேனவும் அவர் நியமித்த வலதுசாரி ஜக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம், இக்கும்பலால் புகழப்பட்ட வகையிலான ஒன்றல்ல. அது அமெரிக்க-சார்பு பெரும் முதலாளிகளின் தேவைகளை நிறைவேற்றும் ஒன்றாக கண்முன்னே நிருபிக்கப்பட்டு வருகிறது. அற்ப சொற்ப சம்பள உயர்வும் மானிய உணவு பொதி வழங்கல் போன்ற சில, கண் துடைப்பு நடவடிக்கைகளாகும்.

பெரும் தனவந்தர்களுக்கும் வெளிநாட்டு முதலிட்டளருக்குமான சலுகையில் எவ்வித மாற்றமும் இல்லை. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை நீக்கும் உறுதிமொழி குப்பைத் தொட்டியில் வீசி, 19ம் அரசியல் சட்ட திருத்தம் என்ற பெயரில் அதன் அதிகாரங்கள் சில இங்கும் அங்கும் மாற்றப்பட்டுள்ளன. தற்போது தேர்தல் முறையை மாற்றியமைப்பதன் மூலம் ஜனநாயகம் கிடைக்கும் என்ற மற்றுமோர் பொய் பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சிறிசேன ஆட்சியின் கீழ், ஜனநாயக வாய்ப்பு உருவாகியுள்ளதாக தேவசிறி புகழ்பாடுகிறர். தேவசிறி போன்றவர்களுக்கு ஜனநாயகத்தின் நன்மை பற்றி முடிவற்ற வாய்ச்சவடால்களை விடுத்து தொழிலாள ஒடுக்கப்பட மக்களை பிரமையில் ஆழ்த்தி விடும் வாய்ப்பு கிட்டியுள்ளது. தமது உரிமைக்காக போரடும் மக்களுக்கு கிடைக்கப் போவது, ராஜபக்ஷவால் கூர்மைப்படுத்தப்பட்ட பொலீஸ் ஆட்சியே ஆகும் என்பது, சுகாதார ஊழியர்களது வேலை நிறுத்தத்தை முறியடிக்க இராணுவத்தை பயன்படுத்தியமை, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மீதொட்டமுல்லை குப்பை கூளங்களை அகற்றுமாறு பிரசாரம் செய்த மக்களுக்கு தொடுக்கப்பட்ட பொலிஸ் தாக்குதல்கள் மற்றும் வடக்கில் மாணவி ஒருவரை வன்புனர்வுக்குட்படுத்தி கொலை செய்தமைக்கு எதிர்பு தெரிவுத்த மக்களுக்கு விரோதமாக பயன்படுத்தப்பட்ட அடக்கு முறையின் மூலம் நன்கு தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அலட்சியம் செய்யும் தேவசிறி, “அதிகார சமநிலை” குழப்பத்தின் காரணமாக வாக்குறிதிகளை நிறைவேற்றுவது பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளதாக பொய்யை புனைந்து அரசாங்கத்துக்கு வெள்ளை வர்ணம் பூசுகிறார். ஜனவரி 8 நிகழ்ந்த மாற்றத்தின் “பின்னனியிலிருந்த அரசியல் சக்திகளின் மீது கட்டியெழுப்பப்பட்ட சில ஒருங்கினைந்த அதிகார சமநிலை” இருந்ததாகவும், அவ்வாறு ஒருங்கிணைந்த அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் தத்தமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்வதனாலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தேவசிறி கூறிக்கொள்கிறார்.

இவர்கள் யாவரும் சிறிசேனவை பொது வேட்பாளராக நியமித்து அமெரிக்காவின் ஆட்சி மாற்ற சதித்திட்டத்தில் ஒருங்கிணைந்து கொள்ளவே அணிதிரண்டனர். எனினும் அமைப்புகள், தாம் பிரதிநித்துவம் செய்யும் நலன்களின் அடிப்படையில் முட்டி மோதிக்கொள்வதால் அரசியல் நெருக்கடி அழமடைந்து வருகின்றது. அதிருப்தி மற்றும் எதிர்ப்புக்கு உள்ளாக தோல்விகண்ட ராஜபக்ஷ, சிறசேன-யூஎன்பீ ஆட்சி நெருக்கடியை சுரண்டிக்கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சி செய்கின்றார். ராஜபக்ஷ முன்னணிக்கு வரும் “அபாயகரமான நிலைமையை” சுட்டிக் காட்டி இக்கன்னையை மீண்டும் அணிதிரட்டிக்கொள்வதற்கு தேவசிறி உள்ளடங்கிய கும்பல் இப்போதே வேலைலயில் இறங்கியுள்ளது.

முதலளித்துவ வர்க்கத்தின் முக்கிய முகவராக அவரும் ஏனைய முதலாளித்துவ குழுக்களும், உண்மையில் முழு அரசியல் ஸ்தாபனம் பற்றிய நம்பிக்கை மென் மேலும் பொறிவடைந்து, தொழிலாளர்களதும் வறியவர்களதும் பெரும் சமூகப் போராட்டங்கள் வெடித்து, சோசலிச புரட்சிக்கு நிபந்தனைகளை உருவாக்கிவிடலாமென்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஜனவரி 8 இலங்கையில் நடந்த ஆட்சி மாற்றம், வெறுமனே இலங்கைக்குள் ஏற்பட்ட மாற்றத்தின் வெளிப்பாடு அன்றி, உலக முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடி மற்றும் அதனால் ஊற்றெடுத்துள்ள ஏகாதிபத்திய மூன்றாம் உலக யுத்தத்தை நோக்கி உந்தித் தள்ளும் புவிசார் அரசியல் பதட்ட நிலைமைகளின் வெளிப்பாடாகும் என சோசலிச சமத்துவ கட்சி (சோ.ச.க.) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தாலும் மட்டுமே தெளிவுபடுத்த முடிந்தது. தனது அரசியல் வேலைத்திட்டத்தை வரலாற்று மற்றும் சர்வதேசியவாத அடிப்படையில் முன்னெடுப்பதனாலேய இது சாத்தியமாகியுள்ளது.

விசேடமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஆதிக்கத்தை உலகம் பூராவும் ஸ்தாபித்துக் கொள்வதற்கு மேற்கொள்ளும் இராணுவத் தயாரிப்பினுள் சீனாவையும் ரஷ்யாவையும் இலக்காகக் கொண்டுள்ள விதம் குறித்து சோ.ச.க. சுட்டிக்காட்டியுள்ளது. ராஜபக்ஷ மற்றும் சிறிசேன தலைமையிலான இரு முதலாளித்துவ பிரிவுக்கும் எதிராக அவற்றின் பிற்போக்கு தன்மையை புலப்படுத்தி, போலி இடதுகள் மற்றும் தேவசிறி போன்ற புத்திஜீவி பித்தலாட்டக் காரர்களை அம்பலப்படுத்தியே சோ.ச.க. தனித்துப் போரடியது. முதலாளித்துவ வர்க்கத்தின் சகல குழுக்களையும் அவற்றை சூழ்ந்து திரளும் சகல மத்திய தர வர்க்க கும்பல்களையும் நிராகரித்துவிட்டு சோ.ச.க.யின் சர்வதேசியவாத சோசலிச முன்னோக்கிற்காக போரட முன்வருமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.