சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP/IYSSE public meetings to discuss Sri Lankan political crisis

இலங்கை அரசியல் நெருக்கடி பற்றி கலந்துரையாட சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ பொதுக் கூட்டங்கள்

25 June 2015

அமெரிக்க அனுசரணையிலான ஒரு ஆட்சி மாற்றத்தின் விளைவாக ஜனவரி 8 அன்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் அதிகாரத்திற்கு கொண்டுவரப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இலங்கை அரசாங்கம், மோசமடைந்து வரும் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கின்றது. இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், இந்த ஸ்திரமற்ற அரசியல் நிலைமை பற்றியும், அது அடிக்கோடிட்டுக் காட்டும் புவி-அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களைப் பற்றியும் கலந்துரையாட நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்துகின்றன.

சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் வெளியுறவுக் கொள்கையை பெய்ஜிங்கில் இருந்து தூர விலக்கி வாஷிங்டனை நோக்கித் திருப்பினர். அமெரிக்கா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ சீனாவுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவுகளை எதிர்த்தது. இப்போது, தென் சீனக் கடல் சம்பந்தமாக சீனாவிற்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் இராணுவத் தயாரிப்புகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலைமையில், வாஷிங்டன் பெய்ஜிங்கிற்கு எதிரான தனது மூலோபாய திட்டங்களில் கொழும்பை இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைக்க செயற்பட்டு வருகின்றது.

சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு பின்னால் அணிதிரண்ட போலி இடது குழுக்கள் கூறியதற்கு மாறாக, அரசாங்கத்தின் ஜனநாயக உரிமைகளை மீள் உறுதிப்படுத்தவோ அல்லது சாதாரண மக்களுடைய வாழ்க்கை நிலைமைகளை முன்னேற்றவோ இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, முதலாளித்துவ வர்க்கத்தின் இடையே -விக்கிரமசிங்கவின் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதன் கூட்டாளிகளுக்கும் இடையே- தீவிர பிளவுகள் எழுந்துள்ளன.

ஆளும் தட்டுக்களின் கசப்பான பூசல்களுக்குப் பின்னால், ஆழமடைந்து வரும் பொருளாதார வீழ்ச்சி, எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகளின் போராட்டங்களில் வெடித்துள்ள சமூக கொந்தளிப்பான நிலைமைகள் பற்றிய பீதி காணப்படுகின்றது. ஒட்டு மொத்த ஆளும் வர்க்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளின் பேரில், உழைக்கும் மக்கள் மீது மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை சுமத்த முயற்சிக்கின்றது.

சோ.ச.க./ஐ.வை.எஸ்.எஸ்.இ கூட்டங்களில், முதலாளித்துவ ஆட்சியின் இந்த கடும் நெருக்கடியில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் தலையீட்டின் தேவை விளக்கப்படுவதோடு அது வழிநடத்தப்பட வேண்டிய சர்வதேச சோசலிச முன்நோக்கு பற்றியும் தெளிவுபடுத்தப்படும். இந்த கூட்டங்களுக்கு வந்து இந்த தீர்க்கமான அரசியல் கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் எமது வாசகர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.


கண்டி

ஜனமெதுர மண்டபம்,

ஜூலை 7, செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி.

 

யாழ்ப்பாணம்
வீரசிங்கம் மண்டபம்,

ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 2 மணி