சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Operation Nemesis: Syriza plans to deploy army to crush protests in Greece

நெமிசிஸ் நடவடிக்கை: கிரீஸில் போராட்டங்களை நசுக்குவதற்கு சிரிசா இராணுவத்தைப் பயன்படுத்த திட்டமிடுகிறது

By Alex Lantier
6 July 2015

Use this version to printSend feedback

ஞாயிறன்று ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கை மீது கிரீஸில் நடந்த வெகுஜன வாக்கெடுப்பில் "வேண்டாம்" எனும் வாக்குகள் கிடைத்த பின்னர், அந்நாட்டின் சிரிசா தலைமையிலான அரசாங்கம் சமூக எதிர்ப்புக்களை நசுக்க ஒடுக்கும் பொலிஸுடன் சேர்ந்து இராணுவத்தைப் பயன்படுத்த திட்டமிட்டு வருகிறது.

“வேண்டாம்" எனும் வாக்குகளுக்கு பின்னர், கிரீஸ் அரசாங்கத்திற்கும் மற்றும் அதன் வங்கிகளுக்கும் கடன்வழங்குவது நிறுத்தப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் அச்சுறுத்துகையில், இது யூரோவிலிருந்தே பலவந்தமாக கிரேக்கம் வெளியேற்றப்படுவதையும் மற்றும் எரிபொருள், உணவு, மருந்து பொருட்கள் என அத்தியாவசிய இறக்குமதிகள் உட்பட அந்நாட்டின் வர்த்தகத்தின் பொறிவையும் அச்சுறுத்துகின்ற நிலையில், நெமிசிஸ் நடவடிக்கை என்று குறிப்பெயர் கொண்ட அத்திட்டம் பற்றிய செய்திகள் வெளியாயின. நிதியியல் உதவிகளுக்கு பரிமாற்றமாக சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதற்கு சிரிசா தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஓர் உடன்படிக்கையை பேரம்பேச முயற்சிக்கின்ற அதேவேளையில், அது மக்களுக்கு எதிராக இராணுவத்தை அனுப்ப தயாரிப்பு செய்து வருகிறது.

சிரிசாவின் உள்துறை மந்திரி நிகோஸ் வௌரிசிஸ் (Nikos Voutsis) இன் வழிகாட்டுதலின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டதும் மற்றும் கிரேக்க புனைகதைகளில் பழிவாங்குதலுக்கு பொறுப்பான கடவுள் நெமிசிஸ் (Nemesis) எனப்படும் அந்நடவடிக்கையானது, போராட்டங்களுக்கு எதிராக முக்கிய கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை பாதுகாப்பதற்காக கலகம்-ஒடுக்கும் பொலிஸ் மற்றும் இராணுவ பிரிவுகளை நிலைநிறுத்தும் ஒரு திட்டமாகும். அது நடைமுறைப்படுத்தப்பட்டால், 1967-1974 இல் தளபதிகளின் சிஐஏ-ஆதரவிலான இராணுவ ஆட்சிக்குப் பின்னர் கிரேக்க மக்களுக்கு எதிராக இராணுவம் நிலைநிறுத்தப்படுவது இதுவே முதல்முறையாக இருக்கும்.

ஒரு மிகப்பெரிய பொலிஸ் ஒடுக்குமுறையை தொடங்க உள்துறை அமைச்சகம் ஏற்கனவே வீதிகளில் 2,000 பொலிஸாரை அனுப்பி இருப்பதாக இத்தாலியின் La Repubblica பத்திரிகை குறிப்பிட்டது. அவர்கள் "அமைச்சகங்கள், தூதரகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொலைதொடர்பு நிலையங்கள் போன்ற முக்கிய இலக்குகளைப்" பாதுகாக்க தயாரிப்பு செய்து வருகின்றனர். “[ஏதென்ஸின் மகாநகர பகுதியான] அட்டிகாவில் உள்ள சுமார் 480 வங்கிகள் மற்றும் 600 பெருவணிக அங்காடிகளைச் சுற்றி பாதுகாப்பை ஏற்படுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர், அந்நகரம் வெகுஜன வாக்கெடுப்புக்குப் பின்னர் சமூக கிளர்ச்சி போன்ற சம்பவத்தில் அனேகமாக தாக்குதலுக்கு உள்ளாகக்கூடுமென கிரீஸின் உளவுத்துறை சேவைகள் தெரிவித்திருந்தது.”

எவ்வாறிருப்பினும், மக்களுக்கு எதிராக மிக பரந்தளவில் இராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளை நிலைநிறுத்துவதில் இந்த திட்டம் ஆரம்பகட்ட நடவடிக்கை மட்டுமே ஆகுமென La Repubblica குறிப்பிட்டது.

“ஒவ்வொருவரின் விருப்பங்களையும் நடைமுறைப்படுத்த முடியாது என்ற ஒரு மாற்று திட்டம் (Plan B), நெமிசிஸ் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்ட இது, Voutsis இன் இரகசிய கோப்புகளில் உள்ளடங்கி உள்ளது. வெகுஜன வாக்கெடுப்புக்கு பின்னர், யாருமே விரும்பாத விதத்தில், கிரீஸ் ஒரு நீடித்த காலகட்டத்திற்கு அரசியல் ஸ்திரமின்மைக்குள் விழ நேர்ந்தால், இத்தகைய அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்,” என்று அது எழுதியது.

நெமிசிஸ் நடவடிக்கையின் உள்ளடக்கம், கிரீஸில் ஓர் இராணுவ சர்வாதிகாரத்தை திணிக்கும் ஒரு முயற்சியாகும் என்பது தெளிவாக உள்ளது. “அங்கே பரந்தளவில் மற்றும் நீடித்த காலத்திற்கு சமூக ஸ்திரமின்மை இருந்தால், பெரிய நகரங்களில் ரோந்து வருவதற்கு துருப்புகளுக்கு" நெமிசிஸ் நடவடிக்கை "வழிவகைகளை வழங்குகிறது" என்பதை டைம்ஸ் ஆஃப் இலண்டன் உறுதிப்படுத்தியது.

சிரிசா, கிரேக்க தொழிலாளர்களின் நண்பன் அல்ல, மாறாக அது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆளும் உயரடுக்குடன் அணிசேர்ந்த ஒரு முதலாளித்துவ கட்சியாகும் என்னும் அவசர எச்சரிக்கையையே அத்தைகைய திட்டங்கள் உள்ளடக்கியுள்ளன. சிரிசா பதவிக்கு வந்ததும் அதன் வெற்று மற்றும் எரிச்சலூட்டும் ஜனநாயக வார்த்தைஜாலங்களுக்கு மத்தியிலும் தனை விளம்பரப்படுத்த ஊடங்களும் ஆளும் உயரடுக்கும் அதனை பயன்படுத்தி இருந்த நிலையில், சிரிசா தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இரத்தந்தோய்ந்த அணுகுமுறைகளைப் பிரயோகிக்க தயாராகி வருகிறது. Voutsis ஆல் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்ட ஆரம்ப பொலிஸ் நடவடிக்கை "Exarchia இல் ஒரு பொலிஸ்காரரால் 15 வயது சிறுவன் Alexandros Grigoropoulos கொல்லப்பட்டதற்கு எதிராக ஏதென்ஸே போராடிய போது, 2008 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கையையே வெட்டி-ஒட்டிய வடிவமாகும். அந்த காலகட்டத்தில், சிரிசா, ஒரு குறிப்பிட்ட வரலாற்று பழிவாங்கல் நடவடிக்கையில், கலகம்-ஒடுக்கும் படைகளுக்கு எதிர்தரப்பில் இருந்தது,” என்பதை La Repubblica சுட்டிக்காட்டியது.

நெமிசிஸ் திட்டங்கள் தெளிவுபடுத்துவதைப் போல, இன்றோ, சிரிசா, முழுமையாக முன்னர் அது நின்ற தடைகளுக்கு மறுபக்கம் கடந்து சென்று, அவசியமானால், கிரீஸில் கொடுங்கோல் ஆட்சியைக் கொண்டு வருவதற்கே கூட மூர்க்கமான ஒரு சூதாட்டத்தில் இறங்க தயார் செய்து வருகிறது.