சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French president rejects bid to assist WikiLeaks founder

விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு உதவுவதற்கான முறையீட்டை பிரெஞ்சு ஜனாதிபதி நிராகரிக்கிறார்

By Patrick Martin
4 July 2015

Use this version to printSend feedback

பிரெஞ்சு தலைவர்கள் பலர் அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையால் சட்டவிரோதமாக உளவுபார்க்கப்பட்டதை அந்த இணைய நிறுவனம் அம்பலப்படுத்தியதற்காக, விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் க்கு பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் அரசாங்கம் தஞ்சம் வழங்க வேண்டுமென்ற முறையீடுகளை அவர் நிராகரித்துள்ளார்.

முன்னணி பிரெஞ்சு நாளிதழ் Le Monde இல் வெள்ளியன்று காலை பிரசுரிக்கப்பட்ட அசான்ஜ் இன் ஒரு நீண்ட பகிரங்க கடிதத்திற்கு விடையிறுப்பாக, “பிரான்ஸ் அவரது கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்க முடியாது,” என்று அதே தினத்தன்று மேலோட்டமான ஒரு பத்திரிகை வெளியீட்டை ஹோலாண்ட் அலுவலகம் வெளியிட்டது. “எனது தொழில்ரீதியிலான நடவடிக்கைகளுக்காக அமெரிக்க அதிகாரிகளால் பின்தொடரப்பட்டு, கொலைசெய்ய அச்சுறுத்தப்பட்டு வருகின்ற ஒரு இதழாளன் நான்,” என்று அசான்ஜ் எழுதினார்.

அசான்ஜ் அவரது பகிரங்க கடிதத்தில் வாதிட்டதைப் போல, அமெரிக்காவின் தொல்லைகளினால் அவரது வாழ்க்கை அபாயத்தில் இருக்கிறது என்பதை ஹோலாண்ட் மறுத்தார். “திரு. அசான்ஜ் இன் நிலைமை ஓர் உடனடி ஆபத்தில் இல்லை,” என்று அவரது அலுவலகம் தெரிவித்தது.

இந்த பதிலுரையின் எரிச்சலூட்டும் மற்றும் புறக்கணிக்கும் தொனி பிரெஞ்சு ஜனாதிபதியின் மொத்த பாசாங்குத்தனத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. ஜனவரியில் இரண்டு இஸ்லாமிய துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்ட சார்லி ஹெப்டோ இதழ் அலுவலகங்களின் மீதான படுகொலை தாக்குதலை அடுத்து, அவர் பத்திரிகை சுதந்திரம் குறித்து பொங்கிபெருகிய எண்ணற்ற அறிவிப்புகளை வெளியிட்டவராவார்.

முஸ்லீம்கள் மீது அருவருப்பாக தாக்குதல்களில் ஈடுபட்ட ஒரு இதழைப் பாதுகாப்பதற்காக என்று வந்தபோது, அந்த ஊர்வலத்தில் தலைவராக இருந்து அணிவகுத்து செல்வதற்கு ஹோலாண்டுக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால் மிகவும் பலம்வாய்ந்த ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்காவின் குற்றங்களை தைரியமாக அம்பலப்படுத்தியுள்ள ஓர் இணைய பத்திரிகை குறித்த விடயம் என்று வரும்போது, பிரான்சின் ஜனாதிபதி வெகுவாக மௌனமாகி விடுவதுடன், அவரது வழக்கறிஞர்களுக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறார். அசான்ஜ் "ஓர் ஐரோப்பிய கைது பிடியாணையின் கீழ் உள்ளார்,” என்று அவரது அறிக்கை வலியுறுத்துகிறது.

அசான்ஜ் இன் பிரதான வழக்கறிஞரும் புகழ்பெற்ற ஸ்பானிய சட்ட வல்லுனருமான பல்தசார் கார்சோன் பிரெஞ்சு ஊடக செய்திகளுக்கு விடையிறுப்பாக கூறுகையில், அசான்ஜ் பிரான்சில் தஞ்சம் கோருவதற்கு எந்த உத்தியோகபூர்வ முறையீடும் செய்யவில்லை. அதுவொரு சிக்கலான மற்றும் நீண்ட சட்ட நிகழ்முறையாகும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அசான்ஜ் இன் பகிரங்க கடிதம் தஞ்சம் கோருவது குறித்து எதையும் குறிப்பிடவில்லை, அதற்கு மாறாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஸ்வீடனால் அவர் இன்னலுக்கு உள்ளாவதற்கு எதிராக பிரெஞ்சு ஆதரவையும் மற்றும் இராஜதந்திரரீதியான பாதுகாப்பையும் கோருகிறார் என்பதை Le Monde சுட்டிக்காட்டியது.

அவர்களின் உண்மையான தன்மை என்னவாக இருந்தாலும், வலைவிரிப்பாளர்கள், விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் மற்றும் அவரது ஆதரவாளர்களிடமிருந்து பிரெஞ்சு அதிகாரிகள் வரையில் சென்றுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. இரகசிய ஆவணங்களைப் பகிரங்கப்படுத்திய அந்த இணைய தளம், பிரெஞ்சு ஜனாதிபதிகள் சிராக், சார்க்கோசி மற்றும் ஹோலாண்டையே கூட அமெரிக்க அரசாங்கம் உளவுபார்த்ததன் மீதான ஆவணங்களைக் கடந்த மாதம் பிரசுரித்தது. அங்கே பிரான்சில் ஒரு சிறிய ஊடக பரபரப்பு இருந்தது, ஆனால் பிரெஞ்சு அரசாங்கம் தெளிவாக வாஷிங்டன் உடனான உறவுகளில் கோபத்தைக் கிளறிவிட விரும்பவில்லை அல்லது அந்நேரத்தில் நாடாளுமன்றத்தினூடாக அது நிறைவேற்றி கொண்டிருந்த மூர்க்கமான உள்நாட்டு உளவுபார்ப்பு சட்டமசோதா மீது கவனம் திரும்புவதை விரும்பவில்லை.

அமெரிக்க தூதருக்கு ஓர் உத்தியோகபூர்வ பிரெஞ்சு குற்றச்சாட்டை வழங்கியதோடு, அந்த விவகாரம் கைவிடப்பட்டது.

ஆனால், அந்த அத்தியாயத்தின் போக்கில், பிரெஞ்சு நீதித்துறை மந்திரி Christiane Taubira ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கூறுகையில், உலகெங்கிலும் பாரியளவில் சட்டவிரோதமான NSA உளவுவேலையை 2013இல் அம்பலப்படுத்திய பின்னர் இப்போது ரஷ்யாவில் தலைமறைவாக வாழ்ந்துவரும் முன்னாள் NSA ஒப்பந்ததாரர் எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கும் மற்றும் அசான்ஜே க்கும் இருவருக்கும் பிரான்ஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

பிரெஞ்சு சட்டங்கள் "இரகசிய ஆவணங்களைப் பகிரங்கப்படுத்துபவர்களுக்கு பாதுகாப்பு" வழங்குகின்றன என்பதைக் குறிப்பிட்டு, Taubira கூறுகையில், “பிரான்ஸ் அவ்விதத்தில் முடிவெடுக்கிறதென்றால், அந்த நடவடிக்கையில் அதிர்ச்சிக்குரியதாக எதையும் நான் காண மாட்டேன்,” என்றார்.

பிரெஞ்சு குடிமக்கள் உரிமை நடவடிக்கையாளர்களின் குழு ஒன்று, அந்நாட்டிற்கு விஜயம் செய்யுமாறு அசான்ஜ் க்கு பின்னர் ஓர் அழைப்பு வெளியிட்டது. ஸ்வீடனிடம் ஒப்புவிக்கப்படுவதை தவிர்க்கும் முயற்சியில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இலண்டனில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் வாழ்ந்து வரும் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர், அங்கே பாலியல் நடவடிக்கை குறித்த போலி குற்றச்சாட்டுக்களின் பேரில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

ஒரு நீண்டகால கட்டத்திற்கு அவரை சிறையில் அடைப்பதற்காக அல்லது அமெரிக்காவில் வழக்கில் இழுப்பதற்காகவும் மற்றும் சாத்தியமானால் உளவுச்சட்டத்தின் கீழ் தண்டிப்பதற்காகவும் அமெரிக்காவிடம் அவரை ஒப்படைப்பதற்காக, ஒரு ஸ்வீடன் வழக்கறிஞரால் அந்த குற்றச்சாட்டுக்கள் அசான்ஜை மௌனமாக்கும் பொருட்டு இட்டுக்கட்டப்பட்டன. அந்த குற்றச்சாட்டுக்களின் அரசியல் உள்நோக்கம் அவை எப்போது கொண்டு வரப்பட்டன என்பதில் வெளிப்படுகின்றன. எண்ணற்ற போர் குற்றங்களை ஆவணப்படுத்தி ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து அனுப்பப்பட்ட உள்அலுவலக அமெரிக்க இராணுவ அறிக்கைகளின் முதல் பிரதான விக்கிலீக்ஸ் பிரசுரத்திற்குப் பின்னரும் மற்றும் அமெரிக்க உயர்மட்ட அரசு அதிகாரிகள் அசான்ஜை கைது செய்யவும் மற்றும் படுகொலை செய்யவே கூட அழைப்புவிடுத்து வந்த அந்தவேளையில்தான் அக்குற்றச்சாட்டுக்கள் உடனடியாக கொண்டு வரப்பட்டன.

Le Monde க்கு எழுதிய அவரது பகிரங்க கடிதத்தில், அசான்ஜ் அவரது கடைசி குழந்தையும் மற்றும் அவரது தாயும் இருவரும் பிரான்சை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் பிரான்சில் வாழ்ந்து வருவதையும், விக்கிலீக்ஸிற்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் 2010 இல் நடவடிக்கை எடுக்க தொடங்கியதில் இருந்து அவர்களை அவரால் பார்க்க முடியாமல் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தார்.

என்னை வரவேற்பதில், பிரான்ஸ் மனிதாபிமானத்தை எடுத்துக்காட்ட முடியும், அத்துடன் அனேகமாக தங்களின் சக குடிமக்கள் உண்மைக்கு நெருக்கமாக முன்னேறி செல்வதற்காக அன்றாடம் தங்களின் வாழ்வை ஆபத்திற்குட்படுத்தி வரும் உலகெங்கிலும் உள்ள எல்லா இதழாளர்களுக்கும் மற்றும் இரகசியங்களைப் பகிரங்கப்படுத்துபவர்களுக்கும் ஊக்கத்தை அளிக்கும் அடையாள சைகையையும் வழங்க முடியும்,” என்று அசான்ஜ் எழுதினார்.

அசான்ஜை நிராகரித்ததன் மூலமாக, ஹோலாண்ட் எதிர்விதமாக செய்துள்ளார். அதாவது வாஷிங்டன், இலண்டன் மற்றும் பாரீஸில் உள்ள உளவுத்துறை முகமைகளின் பிரச்சார அலுவலகங்களில் இருந்து தாங்கள் என்னசெய்யவேண்டும் என்ற உத்தரவுகளை பெறுவதற்கு மாறாக, உண்மையாகவே நிஜமான செய்திகளை வெளியிடவும் மற்றும் மக்களுக்கு தகவல் அளிக்கவும் முயலும் இதழாளர்களுக்கு மறுப்பையும் கண்டனத்தையும் ஒரு சேதியாக அவர் அனுப்பி உள்ளார்.