சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

China’s share plunge casts lengthening shadow over global markets

சீனாவின் பங்கு வீழ்ச்சியின் நீடித்த விளைவுகள் உலக சந்தைகள் மீது பரவுகின்றது

By Nick Beams
7 July 2015

Use this version to printSend feedback

சிரிசா தலைமையிலான அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதில் முன்பினும் அதிக ஆர்வத்துடன் உள்ளது என்ற பெரிதும் இந்த நம்பிக்கையில், கிரேக்க வெகுஜன வாக்கெடுப்பின் பலமான "வேண்டாமென்ற" வாக்குகளிலிருந்து வந்த ஆரம்ப அதிர்வலையை உலகளாவிய பங்குச் சந்தைகள் ஓரளவு சமாளித்துக்கொண்டுள்ளதுபோல் தெரிகிறது.

ஆனால் அதேநேரத்தில், சீன பங்கு விலைகளின் தொடர் சரிவால் நிதியியல் சந்தைகள் விரைவிலேயே பாதிக்கப்படக்கூடும்.

நேற்று நியூ யோர்க் டோவ் ஜோன்ஸ் குறியீடு 47 புள்ளிகள், அல்லது 0.3 சதவீதம் மட்டுமே வீழ்ச்சி அடைந்தது, அதேவேளையில் ஐரோப்பிய சந்தைகள் 1 இல் இருந்து 2 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்தன.

ஒப்பீட்டளவில் கிரீஸிற்கு சந்தைகள் காட்டும் மௌனமான பிரதிபலிப்பு ஆகக்குறைந்தது இதுவரையில் சிரிசா அரசாங்கத்தின் வலதை நோக்கிய கூடுதல் நகர்வு மீதான ஒரு மதிப்பீடு அடிப்படையில் மட்டும் இருக்கவில்லை. அது கடந்த ஏழு ஆண்டுகளில் கிரேக்க கடனின் இணைப்பாக்கத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களையும் பிரதிபலிக்கிறது.

2008 இல், உலகளாவிய நிதியியல் நெருக்கடி வெடித்த போது, கிரீஸிற்கு தனியார் வங்கிகள் வழங்கியிருந்த 300 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான கடன்களை ஆபத்தான நிலையிலிருந்தன. ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியால் ஒழுங்கமைக்கப்பட்ட பிணையெடுப்பு நடவடிக்கைகளின் விளைவாக இன்று அது 54 பில்லியன் டாலராக குறைக்கப்பட்டுள்ளது. 2012 இல், யூரோ மண்டலத்திலிருந்து கிரேக்கம் வெளியேறுவது குறித்த அச்சங்களால் முந்தைய முறை சந்தைகள் பீடிக்கப்பட்டிருந்த போது, கிரேக்க கடன்களில் சுமார் 80 சதவீதத்தைத் தனியார் வங்கிகளும், 20 சதவீதத்தைப் பொதுத்துறை அமைப்புகளும் கொண்டிருந்தன. அந்த விகிதாச்சாரங்கள் இப்போது தலைகீழாகி உள்ளன.

பிணையெடுப்பின் 200 பில்லியனுக்கு அதிகமான யூரோவில், வெறும் 11 சதவீதம் மட்டுமே கிரேக்க அரசாங்கத்திற்குச் சென்றுள்ளது. மீதித்தொகை தனியார் வங்கிகளது கடன்களைத் திருப்பிச் செலுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்நடவடிக்கைக்கு மில்லியன் கணக்கான கிரேக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வறுமைக்குட்படுத்தியதன் மூலமாக நிதி வழங்கப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 25 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அதற்கும் கூடுதலாக, வங்கிகளது பிணையெடுப்புக்கு வழங்கப்பட்ட இந்த பணம், ஐரோப்பா எங்கிலுமான சிக்கன நடவடிக்கைக்கு ஆளும் உயரடுக்குகள் தீவிர கோரிக்கைகள் விடுப்பதிலும் பங்களிப்பு செய்துள்ளது.

கிரேக்கத்தால் உருவாக்கப்பட்ட கொந்தளிப்பு எதிர்பார்க்கப்பட்ட அந்த அளவிற்கு இல்லை என்று நிதியியல் ஊகவணிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், சீன சந்தைகளின் மற்றும் நிதியியல் அமைப்புமுறையின் நெருக்கடி ஒரு புதிய அச்சுறுத்தலாக அதிகரித்து வருகிறது.

வரம்பில்லாமல் பணம் வழங்குவதற்கு சீன மத்திய வங்கிகளின் ஒரு வெளிப்படையான வாக்குறுதி உட்பட, வாரயிறுதியில் சீன அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட அவசர நடவடிக்கைகள், அந்த சரிவைத் தடுப்பதில் பெரிதும் தோல்வியடைந்தன. அந்த வீழ்ச்சியானது கடந்த மாதத்தின் சந்தை மூலதனமாக்கலில் இருந்து ஏறத்தாழ 3 ட்ரில்லியன் டாலரை அடித்துச்சென்றுவிட்டது.

நேற்று ஷாங்காய் காம்போசிட் குறியீடு 7.8 சதவீத உயர்வுடன் தொடங்கியது ஆனால் அதன் பின்னர் இரண்டு முறை எதிர்மறை பகுதிக்குள் விழுந்தெழுந்து, அந்நாளின் இறுதியில் வெறும் 2.4 சதவீத உயர்வுடன் முடிவடைந்தது. “தொழில்நுட்ப-பலம்" என்று வர்ணிக்கப்படும் ஷென்ஜென் குறியீடு அந்நாளின் வர்த்தகத்தில் பெரியளவிலான ஏற்றத்தாழ்வுகளை அனுபவித்த பின்னர், 2.7 சதவீத சரிவுடன் முடிந்தது.

கடந்த வாரம், ஷாங்காய் பங்குகள் 12.1 சதவீதம் வீழ்ந்தன. அது ஜூன் 12இல் அதன் அதிகபட்ச உயர்வை எட்டியதற்குப் பின்னரில் இருந்து, சந்தைகளில் ஏறத்தாழ 30 சதவீத வீழ்ச்சியைக் கொண்டு வந்திருந்தது. நேற்று சந்தைகள் குறைந்தபட்ச உயர்வை கண்டிருக்காவிட்டால், அரசாங்கம் ஒரு பெரும் நெருக்கடியைச் சந்தித்திருக்கும். ஷாங்காய் குறியீடு சற்று, வெறும் 259 புள்ளிகள் உயர்ந்த போதினும் கூட, சுமார் 649 பங்குகள் சரிவை அனுபவித்தன.

சந்தையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுத்திருப்பதால், குறிப்பிடத்தக்களவிற்கு சந்தை தூக்கி நிறுத்தப்படுமென அரசாங்கம் நம்பியிருந்தது. நிதி வழங்கல்கள், உடனடி விற்பனைக்கு எதிரான நகர்வுகள், நடப்பிலிருக்கும் பங்குகளுக்குள் பண ஓட்டத்தைப் பேணுவதற்கு ஆரம்ப பொதுப்பங்கு வெளியீடுகளுக்கு தடை போன்ற நடவடிக்கைகளும் அதில் உள்ளடங்கும். ஆனால் நேற்றைய எதிர்வினையோ, சரிவைத் தடுப்பதற்கான அதன் ஆற்றலைக் குறித்து மேலதிக கேள்விகளை மட்டுமே எழுப்பியது.

சீன மூலதன சந்தைகளின் ஒரு வல்லுனராக கருதப்படும் Newedge Singapore இன் நிர்வாக இயக்குனர் Fraser Howie கூற்றுப்படி, “மிகத் தெளிவாக, நம்பப்பட்டதற்கு அருகில் கூட சந்தைகளிடமிருந்து பிரதிபலிப்பு வரவில்லை. பெரும் எண்ணிக்கையிலான நடவடிக்கைகளைப் பார்க்கையில் அடுப்பறை கழுவுத்தொட்டி உட்பட அனைத்தும் சந்தைக்குள் வீசப்பட்டன, இருந்தாலும் அந்நாளின் இறுதியில் வந்த விளைவோ, வெளிப்படையாக, முற்றிலும் படுமோசமானதாக இருந்தது.”

அரசாங்கம் எந்தளவிற்குக் கவலை கொண்டுள்ளது என்பது அரசு பத்திரிகையால் வெளியிடப்பட்ட ஒரு பிரச்சார நடவடிக்கையில் பிரதிபலிக்கிறது, அது சந்தைகளை "நிலையாகவும் மற்றும் பலமாகவும்" நிறுத்துவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை "திறமையும் உறுதியும்" கொண்டிருப்பதாக வர்ணித்தது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான பத்திரிகையான People’s Daily இல் நேற்று வெளியான ஒரு தலையங்கம் குறிப்பிடுகையில், “[ரென்மின்பியில் மட்டுமே பட்டியலிடப்படும் பங்குகளைக் கொண்ட] முதன்மை பங்குச்சந்தையை (A-share market) ஓர் ஏற்புடைய பாதைக்குத் திரும்ப கொண்டு வருவது ஓர் அவசர பணியாகும், இந்நிலையில் சந்தைகளின் கொந்தளிப்பு மூலதன சந்தையின் பலமான மற்றும் நிலையான அபிவிருத்திக்கு தீங்கு தரும் வகையில் உள்ளது,” என்று குறிப்பிட்டது.

அச்சுறுத்தப்பட்டிருப்பது மூலதன சந்தைகள் மட்டுமல்ல. ஏறத்தாழ ஒரு கால் நூற்றாண்டாக, வளர்ச்சி மிகக் குறைந்த மட்டங்களில் இருக்கும் நிலைமைகளின் கீழ் இந்த நெருக்கடி பரந்த பொருளாதாரங்களுக்குள் நுழைய அச்சுறுத்துகிறது. சீன வளர்ச்சி இந்த ஆண்டு சுமார் 7 சதவீதம் என்ற அதன் உத்தியோகப்பூர்வ இலக்கை எட்டாது என்பதும், குறைவினும் குறைவாக 4 சதவீதத்திற்கு வீழக்கூடும் என்பதே பெரும்பாலான அனுமானங்களாக உள்ளன.

அரசு ஆதரவுடனான நிதியியல் அமைப்புமுறையானது, செழிப்பான மத்தியதர குடும்பங்கள் அவர்களது சொத்துக்களை அதிகரிப்பதை உறுதிப்படுத்தி வைக்கும் என்ற சூசகமான வாக்குறுதியுடன், பெய்ஜிங் அரசாங்கம் அவர்கள் சந்தைக்குள் நுழைவதை ஊக்குவித்த போது, ஓராண்டுக்கு முன்னர் தான் இந்த பங்குச்சந்தை உயர்வு தொடங்கியது.

விற்கப்படாத அடுக்குமாடி வீடுகளின் கட்டுமானம் மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகளால் அதிகரித்த கடன் மட்டங்களின் திரட்சி ஆகியவற்றிற்கு இடையே, 2008-09 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர், அரசாங்கம் ஒழுங்கமைத்த முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியானது பிரச்சினைகளுக்குள் சென்றதும், வளர்ச்சிக்கான ஒரு புதிய ஆதாரத்தைக் காணும் ஒரு முயற்சியாக அந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையின் கீழ், அரசாங்கம் சீன பொருளாதாரத்தை நிதியியல் சந்தை சக்திகளுக்குத் திறந்துவிட முயன்ற நிலையில், பங்கு வைத்திருக்கும் மத்தியதர அடுக்கை உருவாக்குவது அரசியல் மற்றும் சமூக ஸ்திரப்பாட்டிற்கு ஓர் ஆதரவை வழங்குமென அரசாங்கமும் நம்பியது.

இதன் விளைவு என்னவென்றால் சீன பங்குச்சந்தை சிறிய தனிநபர் முதலீட்டாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது, 2014 இன் இறுதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள், பெரிய அமைப்புகளிடம் இருந்ததை விட, அவர்கள் வசம் தான் இருந்தன. அங்கே சீன சந்தைகளில் 70 மற்றும் 80 மில்லியனுக்கு இடையிலான வர்த்தக கணக்குகள் செயல்படுகின்றன. அதில் 40 மில்லியன் இந்த ஆண்டு தொடங்கப்பட்டவையாகும், அவற்றில் பல நிதியியல் பங்கு வாங்குவதற்காக கடன்வாங்கிய நிதிகளைப் பயன்படுத்தி உள்ளன.

சீன சந்தைகளில் சுமார் 17 சதவீதம் முதலீடு செய்வதற்காக தனிநபர் முதலீட்டு கடன்கள் வழங்குவதன் (margin lending) மூலமாக நிதி வழங்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது, பங்குகளின் விலை சரியும் சம்பவத்திலும் அவற்றின் மீதான கடனைத் திருப்பி அளிப்பது உட்பட்ட கடன்களுக்கு பங்குகளே உத்திரவாதமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

அரசாங்கத்தால் சந்தைகளுக்கு இழுக்கப்பட்ட நிலையில், இத்தகையவர்கள் இப்போது வீழ்ச்சி தொடர்ந்தால் சீரழிவை முகங்கொடுத்து நிற்கின்றனர், இது ஆட்சிக்கு பிரதான அரசியல் விளைவுகளைக் கொண்டுள்ளது.

பங்குச்சந்தை பொறிகிறதென்றால் பின் அந்த பொருளாதாரமே இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது, இது சமூக ஸ்திரமின்மையை ஏற்படுத்துகிறது [ஏற்படுத்தும்],” என்று அரசியல் விஞ்ஞானம் மற்றும் சட்டத்திற்கான சீன பல்கலைக்கழகத்தின் மூத்த பொருளாதார நிபுணர் யாங்க் ஃபேன் Australian Financial Review க்கு தெரிவித்தார்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் ஒரு பேராசிரியர் ஹேரி ஹார்டிங் நியூ யோர்க் டைம்ஸிற்குக் கூறுகையில், சந்தையின் தொடர்ச்சியான வீழ்ச்சி மூன்று விளைவுகளை உண்டாக்கக்கூடும்: குடும்பங்களின் முதலீடு இழப்பு, மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜி தலைமைக்கு எதிரான ஓர் அரசியல் பின்னடிப்பு ஆகியவை.

சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக்குள்ளேயே இருக்கும் போராட்டத்தைச் சுட்டிக்காட்டி ஹார்டிங் குறிப்பிடுகையில், “அவரை வெளியேற்ற தங்களின் கத்தியை ஆயத்தமாக வைத்திருக்கும் மற்றும் அவரது தோல்விக்காக காத்திருக்கும் சக்திகள் அங்கே கணிசமான அளவிற்கு உள்ளன,” என்றார். அதற்காக ஜி அவரது எதிராளிகளுக்கு எதிராக ஊழல்-எதிர்ப்பு முனைவைத் தொடுத்துள்ளார்.

ஹார்டிங்கால் மேற்கோளிடப்பட்ட விளைவுகளுக்குக் கூடுதலாக, உலகளாவிய பொருளாதாரம் மற்றும் நிதியியல் அமைப்புமுறை மீதும் அங்கே தாக்கம் இருக்கும். சில நடவடிக்கைகளைக் கொண்டு, சீனா ஏற்கனவே உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக உள்ளது மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் சுமார் 30 சதவீதத்தைக் கணக்கில் கொண்டுள்ளது. மிகப்பெரிய பொருளாதாரங்கள் சீனாவைச் சார்ந்துள்ளன என்பதாலும், குறிப்பாக அமெரிக்க கருவூல பத்திரங்கள் வாங்கியதன் மூலமாக உலகளாவிய நிதியியல் அமைப்புமுறை உடன் அது கொண்டிருக்கும் தொடர்புகளாலும் என இரண்டு காரணங்களாலும், அங்கே ஒரு நிதியியல் நெருக்கடியானது சர்வதேச அளவில் கொண்டு செல்லப்படும்.

சர்வதேச நிதியியல் கொந்தளிப்பின் மற்றொரு அறிகுறியாக, அமெரிக்காவின் எல்லைப்புறத்திலுள்ள போர்டோ ரிக்கோ நாடும் ஒரு பொறிவின் விளிம்பில் உள்ளது. கடன்களைத் திரும்ப செலுத்துவதற்கு பல ஆண்டுகள் முயன்ற பின்னர், அதன் ஆளுநர் அறிவித்தார், அதனால் இனி தொடர முடியாது என்பதுடன் அதன் 72 பில்லியன் டாலர் கடனை மறுகட்டமைப்பு செய்வது அவசியமாகும் என்றார். கடந்த தசாப்தத்தில் அந்நாடு நிஜமான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு 13 சதவீத குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றும் அந்த ஆளுநரே குறிப்பிட்டவாறு அதுவொரு "மரண சுழற்சியில்" நுழைந்து வருகின்ற நிலையில்  கிரீஸ் ஒரு விதிவிலக்கல்ல. மாறாக ஓர் உலகளாவிய நிகழ்முறையின் வெளிப்பாடு என்பதையே அதன் நிலைமை என்ன தெளிவுபடுத்துகிறது.