சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Euro zone summit rejects emergency funds for Greece, issues austerity ultimatum

யூரோ மண்டல கூட்டம் கிரீஸிற்கான அவசர நிதியுதவிகளை நிராகரித்து, சிக்கன நடவடிக்கைக்காக இறுதி எச்சரிக்கை விடுக்கிறது

By Barry Grey and Chris Marsden
8 July 2015

Use this version to printSend feedback

கிரேக்க வங்கியியல் அமைப்புமுறையின் ஒரு பொறிவைத் தடுப்பதற்குரிய "இணைப்பு" கடன்களுக்காக கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸிடமிருந்து வந்த முறையீடுகளை யூரோ மண்டலத்தின் 19 நாடுகளது தலைவர்கள் செவ்வாயன்று நிராகரித்தனர். அதற்கு மாறாக, கிரேக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் ஞாயிறன்று வெகுஜன வாக்கெடுப்பில் தீர்க்கமாக நிராகரிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு திட்டத்தைச் சமர்பிக்குமாறு அவர்கள் சிரிசா தலைமையிலான அந்த அரசாங்கத்திற்கு இரண்டு நாட்கள் கெடு அளித்தனர்.

கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் மீது கூடுதலான காட்டுமிராண்டித்தன தாக்குதல்களுக்கான கிரீஸின் கடன்வழங்குனர்களது கோரிக்கைகளைக் கிரீஸ் திருப்திப்படுத்த தவறினால், கிரீஸைப் பொதுவான ஐரோப்பிய செலாவணியிலிருந்து  வெளியேற்றுவது குறித்து விவாதிப்பதற்காக ஜேர்மனியிடமிருந்து அதன் வழிகாட்டலைப் பெற்றிருந்த அந்த யூரோ மண்டல மாநாடு, 28 ஐரோப்பிய ஒன்றிய அரசுகளது எல்லா அரசாங்க தலைவர்களின் ஒரு ஞாயிற்றுக்கிழமை கூட்டத்திற்கு திட்டங்களை வெளியிட்டது.

யூரோ குழும நிதி மந்திரிமார்களின் ஒரு சனிக்கிழமை கூட்டத்திற்கு முன்னதாக, சிப்ராஸூம் அவரது புதிய நிதி மந்திரி ஏக்குளிட்ஸ் சக்காலோட்டோஸூம், உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடிய சிக்கன நடவடிக்கைகள் உட்பட அவர்கள் "நம்பகமான சீர்திருத்தங்கள்" என்று குறிப்பிடும் ஒரு திட்டத்தைச் சமர்பிக்க உடன்பட்டனர். ஒரு கிரேக்க அரசாங்க நிர்வாகி ராய்டர்ஸிற்கு கூறுகையில், சிரிசா கடந்த வாரம் சமர்பித்த பிணையெடுப்பு பரிந்துரையில் "செம்மைப்படுத்தல்களைச்" செய்து வருவதாகவும், அதில் "பொருளாதார சீர்திருத்தங்கள், முதலீடு மற்றும் கடன் தீர்வைகளும்" இருக்கும் என்றும் தெரிவித்தார்.

அத்திட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய கோரிக்கைகளின் அனைத்து இன்றியமையா அம்சங்களும் ஒட்டிக் கொண்டிருந்தது, நிதி மந்திரிமார்கள் சிரிசாவின் புதிய திட்டத்தை ஏற்றுக் கொண்டால், ஞாயிறன்று கூட்டம் இரத்து செய்யப்பட்டு, சாத்தியமான ஒரு புதிய பிணையெடுப்பு மீதான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படும்.

யூரோ மண்டல கூட்டத்திற்குப் பிந்தைய ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் கூறுகையில், கிரீஸிற்கு எந்தவொரு சிறப்பு விட்டுக்கொடுப்புகளுக்கும் எதிராக அவரது அரசாங்கத்தின் சிறிதும் விட்டுக்கொடுக்காத எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தினார். கிரீஸின் பாரிய கடன்களில் எந்தவிதமான தள்ளுபடியையும் அவர் நிராகரித்தார். இதுமாதிரியான ஏதோவொன்றுக்கு தான் சிரிசா தலைமையிலான அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றிய சிக்கன கோரிக்கைகளுக்கு அது அடிபணிவதற்கு பிரதியீடாக மன்றாடிக் கொண்டிருக்கிறது.

ஜேர்மனியின் குரூரமான சிக்கன கோரிக்கைகளை நிராகரிப்பதற்கு 61 சதவீத அளவிற்கு வாக்களித்த கிரேக்க மக்கள் மீதான அவரது நிந்தனையை மூடிமறைக்காமல், மேர்க்கெல் கூறுகையில், ஞாயிறன்று கிரேக்க வெகுஜன வாக்கெடுப்பில் மிகவும் தெளிவாக "வேண்டாம்" எனும் வாக்குகளுக்குப் பின்னர், அங்கே பேரம்பேசுவதற்கு எந்த அடித்தளமும் இல்லை இனி இது வாரங்கள் குறித்த விடயமல்ல, நாட்கள் குறித்த விடயமாகும், என்றார்.

சமூக சேவைகள், வேலைகள் மற்றும் ஊதியங்களை மேற்கொண்டு குறைக்கும் ஒரு திட்டத்திற்குள் கிரீஸ் கையெழுத்திடுவதற்கு முன்னதாக எந்தவொரு அவசர கடனுதவிகளையும் மேர்க்கெல் நிராகரித்தார். எமக்கு நீண்டகால முன்மொழிவுகள் வேண்டும், என்றவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டோனால்ட் டஸ்க், ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் ஜோன்-குளோட் ஜுங்கர் ஆகியோர் உடனான கூட்டு பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியம் "கிரேக்கம் வெளியேறுவதற்குரிய சூழலுக்கு, விரிவான விதத்தில், தயாரிப்பு செய்துள்ளது" என்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், எங்களால் உடன்படிக்கை எட்டவியலாமல் போனமை, கிரீஸின் திவால்நிலைக்கும் மற்றும் அதன் வங்கியியல் அமைப்புமுறை நொடிந்து போவதற்கும் இட்டுச் செல்லக்கூடும். மேலும் நிச்சயமாக, அது கிரேக்க மக்களுக்கு மிகவும் வலி நிறைந்ததாக இருக்கும் இறுதி உடன்படிக்கையை எட்டுவதற்கு நம்மிடம் வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளன என்பதே நிதர்சனமான யதார்த்தமாகும், என்றார்.

ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களின் தலைவர்களில் ஒருவரான பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட், கிரீஸ் வெளியேறுவதைத் தடுக்க கிரீஸை நோக்கி சற்றே ஏதோவிதத்தில் கடுமை குறைந்த நிலைப்பாட்டுக்கு அழுத்தம் அளித்து வருகிறார், ஆனால் கிரீஸ் தோற்றப்பாட்டளவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நிகழ்ச்சிநிரலின் ஒட்டுமொத்தத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உடன்பட்டுள்ளார். அனேகமாக சில அடையாள திருத்தங்களுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு-செலவு திட்டக்கணக்கு கோரிக்கைகளை கிரீஸ் ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஓர் உடன்படிக்கைக்கு அவர் அழைப்புவிடுத்தார். அதற்கு பிரதி உபகாரமாக, கிரீஸிற்கு உடனடியாக நிதியுதவிகள் கிடைக்கும் மற்றும் எதிர்கால கடன் மீட்சிக்கான வாய்ப்புகளும் இருக்கும்.

ஞாயிறன்று நடந்த வெகுஜன வாக்கெடுப்பை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வங்கிகளுக்கு கிரீஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் உள்ள தொழிலாளர்களின் சக்திவாய்ந்த எதிர்ப்பை ஒன்றுதிரட்டுவதற்குரிய ஒரு தீர்ப்பாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை, மாறாக அவர் எதிர்ப்பதாக வாதிட்டிருந்த அதே சிக்கன நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு பிரதியீடாக கடன் மீட்சியைப் பெறுவதற்கு அவரது முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதற்கான ஓர் அறிகுறியாக எடுத்துக்கொள்ள போவதாக சிப்ராஸ் ஏற்கனவே தெளிவுபடுத்தி இருந்தார். அவர் மக்கள் ஆதரவு மற்றும் ஜனநாயக சட்டபூர்வத்தன்மை என்ற போர்வையில், ஐரோப்பிய ஒன்றியத்திடம் அவரது அடிபணிவை மூடிமறைக்கும் ஒரு முயற்சியில் முதலிடத்தில் அந்த வெகுஜன வாக்கெடுப்பைக் குறிப்பிட்டிருந்தார்.

பிரமாண்டமான அந்த "வேண்டாம்" என்ற வாக்குகளுக்குப் பின்னர் சிப்ராஸின் முதல் நடவடிக்கையாக இருந்தது அவரது நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸை நீக்கிவிட்டு, அவரிடத்தில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களால் அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவராக கருதப்பட்ட Tsakalotos நியமித்ததாகும். இது கிரீஸில் உள்ள பிரதான ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு கட்சிகளின் தலைவர்களுடனான ஒரு கூட்டத்திற்குப் பின்னர் மற்றும் ஒரு புதிய சிக்கன பொதி மீதான கூடுதல் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவான ஒரு கூட்டு அறிக்கைக்குப் பின்னர் நடத்தப்பட்டது.

ஆனால் வெகுஜன வாக்கெடுப்புக்கு ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் விடையிறுப்பு மூர்க்கமாக இருந்துள்ளது. அதிகரித்துவரும் சமூக எதிர்பெனும் பூதம் ஓர் இரும்புகரம் கொண்டு எதிர்கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. வங்கிகளை தொழிலாள வர்க்கம் எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதை அது கிரேக்க தொழிலாள வர்க்கத்தை கொண்டு ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக எடுத்துக்காட்ட விரும்புகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் சார்பான மற்றும் முதலாளித்துவம் சார்பான வேலைத்திட்டத்தின் காரணமாக மற்றும் சிரிசா யார் மீது தங்கியுள்ளதோ அந்த தனிச்சலுகை படைத்த சமூக அடித்தளத்தின் காரணமாக, கிரேக்க ஆளும் வர்க்கத்திற்கு எதிரான எந்தவொரு தீவிர நடவடிக்கைகளும் எடுப்பதற்கு இலாயக்கற்று, கிரேக்க தொழிலாளர்கள் மத்தியில் பாரியளவில் பொங்கி கொண்டிருக்கும் எதிர்ப்பால் அதிர்ந்து போயுள்ள சிப்ராஸ் ஜேர்மனிக்கு எதிர்பலமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தரப்பில் திரும்பி வருகிறார். செவ்வாயன்று யூரோ மண்டல மாநாடுக்கு முன்னதாக, அவர் ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் தொலைபேசியில் பேசினார். அவர் அந்த அழைப்பை ஏற்று கிரேக்க பிரதம மந்திரியுடன் சிறிது நேரம் பேசினார்.

ஒபாமா பின்னர் மேர்க்கேல் உடன் தொலைபேசியில் பேசி, யூரோ மண்டலத்திலிருந்து கிரேக்க வெளியேற்றத்தை தடுக்கும் ஓர் உடன்படிக்கைக்கு வேலை செய்யுமாறும் மற்றும் கிரீஸை நோக்கிய அவரது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாறும் அவரிடம் வலியுறுத்தினார். கிரீஸ் கூடுதலாக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார "சீர்திருத்தங்களை" மேற்கொள்ள வேண்டும் என்ற வலியுறுத்தலை, பிரான்ஸைப் போலவே, வாஷிங்டனும் ஓர் உடன்படிக்கைக்கான முறையீடுகளுடன் இணைத்துள்ளது.

அமெரிக்க ஊடகங்களின் கணிசமான பிரிவுகள் ஜேர்மனியின் கடுமையான போக்கை கண்டித்துள்ளதுடன், ஒரு கிரேக்க வெளியேற்றத்தின் பொருளாதார விளைவுகளைக் குறித்து எச்சரித்துள்ளன, மேலும் முன்பினும் அதிக முக்கியத்துவத்துடன், கிரீஸ் மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான உறவுகள் பலவீனமடைந்தால், குறிப்பாக ரஷ்யாவிற்கு எதிரான வாஷிங்டனின் தாக்குதலோடு தொடர்புபட்ட விதத்தில் அமெரிக்காவிற்கு ஏற்படும் எதிர்மறை புவிசார் அரசியல் தாக்கங்களைக் குறித்தும் எச்சரித்துள்ளன.

சான்றாக ஓர் எழுத்தாளரும் மற்றும் அமெரிக்க இராணுவ உளவுத்துறை ஸ்தாபகத்துடன் நெருக்கமாக தொடர்புகளைக் கொண்டுள்ள கல்வித்துறையாளருமான ரோபர்ட் டி. காப்லன் எழுதிய ஒரு கட்டுரையை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கடந்த வாரம் பிரசுரித்தது. கிரேக்க நெருக்கடி பணத்தை விட மேலதிகமாக முக்கியமானது" என்ற தலைப்பின் கீழ், காப்லன் எழுதுகையில், பொருளாதாரத்தை விட புவிசார் அரசியல் மிகவும் முக்கியமானது. கிரீஸைப் பாருங்கள் கிரீஸ் உடனான ஐரோப்பாவின் தொடர்புகள் கணிசமான அளவிற்கு பலவீனமடைந்தால் அது அதிகரித்தளவில் ரஷ்ய ஆக்ரோஷத்தால் பாதிக்கப்படும், என்று குறிப்பிட்டார்.

கிரீஸ் விவகாரத்தில் தீவிரமடைந்துவரும் நெருக்கடியில், அமெரிக்கா மற்றும் ஜேர்மனிக்கு இடையே அபிவிருத்தி அடைந்துவரும் மோதலின் கூறுபாடுகள் மேலெழுந்து வருகின்றன. ஐரோப்பாவிற்கான கொள்கையை எந்த சக்தி தீர்மானிக்க வேண்டும் என்பதே அடிப்படை மோதலாக உள்ளது.

ஐரோப்பாவிலிருந்து ரஷ்யாவை விலக்க கோரும் ஓர் அமெரிக்க கொள்கை மீது ஜேர்மனி அதன் பங்கிற்குக் கவலைகளை வெளியிட்டுள்ளது. கிரேக்க கடன் தள்ளுபடியால் அதன் வங்கியியல் அமைப்புமுறைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அது தீவிரமாக கவலைகளைக் கொண்டுள்ளது. பெரிதும் கடன்பட்டுள்ள ஐரோப்பிய அரசுகளது நெருக்கடிக்கு அதன் [ஜேர்மனியின்] வங்கியியல் அமைப்புமுறை வோல் ஸ்ட்ரீட் விட அதிகமாக பாதிக்கப்படக்கூடியது என்பதுடன், அது சர்வதேச செல்வாக்கை இழக்கும் இடத்திலும் நிற்கிறது.