சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை: தோட்டத் தொழிலாளர்கள் மெதுவாக வேலை செய்யும் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர்

By W.A. Sunil
10 July 2010

Use this version to printSend feedback

நாடு பூராவும் பத்தாயிரக்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா நாள் சம்பளம் கோரி மெதுவாக வேலை செய்யும் எதிர்ப்புப் பிரச்சாரமொன்றை திங்கள் முதல் ஆரம்பித்துள்ளனர். கோரிக்கைகளுக்கான பிரச்சாரத்தை பலப்படுத்துவதற்காக நேற்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தோட்டங்களிலும் அயல் பிரதேசங்களிலும் ஊர்வலங்கள் மற்றும் மறியல் போராட்டங்களை நடத்தினர்.

இந்தப் பிரச்சாரத்தின் காரணமாக நாளொன்றுக்கு தொழிலாளர்கள் பறிக்கும் 18-20 கிலோ தேயிலைக் கொழுந்தின் அளவு 2-5 கிலோ வரை குறைந்துள்ளதாக தோட்டக் கம்பனிகள் அறிவித்துள்ளன. தொழிலாளர்களின் போராட்டத்தை குழப்பும் நோக்குடன் எதிர்ப்புப் பிரச்சாரத்தின் ஆரம்பத்திலேயே தேயிலைத் தொழிற்சாலைகளை மூடிவிடுவதாக அச்சுறுத்திய தோட்டக் கம்பனிகள், இதுவரை 23 தொழிற்சாலைகளை மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதோடு தோட்ட நிர்வாகத்தையும் முகாமையாளர்களையும் வேலைக்குச் செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளது. தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கையை கொடுக்கத் தயாரில்லை என்பதையும் தொழிலாளர்களின் போராட்டத்தை நசுக்குவதற்கு சகல நடவடிக்கைகளையும் எடுப்பதற்குத் தயாராக உள்ளது என்பதையே இந்த அச்சுறுத்தல் நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

புதிய கூட்டு ஒப்பந்தத்துக்காக ஜூலை 2 நடந்த பேச்சுவார்த்தைச் சுற்றில் 1,000 ரூபா வரை சம்பளத்தை அதிகரிக்கும் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னர், முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தலைமயிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (.தொ.கா.), இந்த மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்பு இயக்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அது எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு அழைப்பு விடுத்தது, தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை மீதான அனுதாபத்தினால் அல்ல. மாறாக, குறைந்த சம்பளம், கீழ்மட்ட வாழ்க்கை மற்றும் சமூக நிலைமை பற்றி தொழிலாளர்கள் மத்தியில் ஆழமடைந்து வரும் எதிர்ப்பு, போராட்டமாக வெடித்துவிடாமல் தடுத்து அதை கரைத்து விடுவதற்கே ஆகும். கடந்த அரசாங்கங்களில் அமைச்சராக இருந்த .தொ.கா. தலைவர் தொண்டமான், கம்பனிகளின் தேவைக்கு ஏற்ப சம்பளத்தை கீழ் மட்டத்திலேயே இறுக்கி வைத்திருப்பதிலும் வேலைச் சுமையை அதிகரிப்பதிலும் கூட்டு ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவதிலும் முன்னிலை வகித்து வந்துள்ளார்.

இதற்கிடையில், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU), தேசிய தொழிலாளர் சங்கம் (NUW), மலையக மக்கள் முன்னணி (..மு) மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியும் (..மு.) தொழிலாளர்களின் பிரச்சாரத்தை கவிழ்ப்பதற்கு செயற்படுகின்றன.

எதிர்ப்பு பிரச்சாரம் சம்பந்தமாக தொழிற்சங்கங்களுக்கு இடையில் உடன்பாடு இல்லை என ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த LJEWU தலைவரும் தோட்ட மற்றும் தொழிற்துறை இராஜாங்க அமைச்சருமான கே. வேலாயுதம் தெரிவித்துள்ளதோடு .தொ.கா. தன்னை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்வதற்காக அழுத்தம் கொடுப்பதன் பேரிலேயே இந்தப் பிரச்சாரத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

மெதுவாக வேலை செய்யும் இயக்கத்துக்கு எதிராக சில தோட்டங்களில் NUW தலைவர்களால் நாளொன்றுக்கு 16 கிலோ கொழுந்து பறிப்பதற்கு தொழிலாளர்கள் தூண்டி விடப்பட்டுள்ளனர். அத்தோடு திகாம்பரம், ..மு. தலைவர் மனோ கனேசன் மற்றும் ..மு. தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான பீ. ராதாகிருஷ்ணனும் தலவாக்கலை நகரசபை மைதானத்தில் போலி சத்தியாக்கிரகம் ஒன்றை நடத்தினர்.

வேலாயுதமும் NUW தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பீ. திகாம்பரமும், மெதுவாக வேலை செய்யும் பிரச்சாரத்தினால் தோட்டத் தொழிலாளர்கள் சம்பந்தமாக அரசாங்கத்துக்கு உள்ள நல்லெண்ணம் இல்லாமல் போய்விடும் என்றும் அது அவர்களை பாதிக்கும் என்றும் அச்சுறுத்தும் வகையில் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். அரசாங்கம் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்ற புழுகையும் அவிழ்த்து விட்டுள்ளனர்.

.தொ.கா. போலவே, தொழிலாளர்களின் போராட்டம் ஒன்று வளர்ச்சியடைவது பற்றிய பீதியினாலேயே இந்த தொழிற்சங்கங்கள் பிரச்சாரத்தை குழப்பும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. கம்பனிகளின் தேவைக்கு ஏற்ப தொழிலாளர்களை காட்டிக்கொடுப்பதற்கு .தொ.கா. கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே செயற்படும். ஹட்டன் நகரில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட .தொ.கா. தலைவர் தொண்டமான், தொழிலாளர்களுக்குநியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்றார். போராட்டத்தை நிறுத்துவதற்கு குறைந்தபட்ச மிகைப்படுத்தலையாவது தேடுவதையே இந்த கருத்து காட்டுகிறது.

தோட்டக் கம்பனிகளும், இலங்கை முதலாளிமார் சம்மேளனமும் தொழிலாளர்களின் எந்தவொரு போராட்டத்தையும் நசுக்கித் தள்ளுவதற்கு ஆயுதபாணியாகி உள்ளன. சண்டே டைம்ஸ் ஒன்லைன் செய்தியின் படி, தோட்ட உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை, மெதுவாக வேலை செய்யும் இயக்கம்திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டது, இது ஏனைய தோட்டங்களுக்கும் பரவிச் செல்லக்கூடும் என தெரிவித்துள்ளார்.

ஏப்பிரல் மாதம் கூட்டு ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்தை தொடங்கியதில் இருந்தே, சம்பள உயர்வை தொடர்ந்தும் நிராகரித்து வந்துள்ள கம்பனிகள் மற்றும் அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் முதலாளிமார் சம்மேளனமும், உலகச் சந்தையில் விலை வீழ்ச்சியும் ஏற்றுமதிக்கு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளதால் வேலைச் சுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தொழிலாளர்களை நெருக்கின்றன. கொழுந்தின் அளவை குறைந்தபட்சம் 23 கிலோ வரை அதிகரிக்க வேண்டும் என ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அற்ப சம்பள அதிகரிப்புக்காக தோட்டக் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்படும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை நிராகரித்துள்ள கம்பனிகள், சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமெனில் நாளொன்றுக்கு பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவை 5 கிலோவால் அதிகரிக்க தொழிலாளர்களை உடன்பட வைக்குமாறு சங்கங்களிடம் கூறியுள்ளன. கடந்த ஆண்டின் கடைப் பகுதியில் இருந்தே எதேச்சதிகாரமான முறையில் ஒரு நாளுக்கு பறிக்க வேண்டிய கொழுந்தை 16 கிலோவில் இருந்து 20 கிலோ வரை அதிகரிப்பதற்கு பல தோட்டக் கம்பனிகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

கென்யா, சீனா, தென் வியட்னாம், பங்களாதேஷ் உட்பட தேயிலை உற்பத்தி செய்யும் ஏனைய நாடுகளுடன் உலக சந்தையில் போட்டி உக்கிரமடைந்துள்ளதாலும், உலக பொருளாதார நெருக்கடியினால் இலங்கையின் தேயிலையை அதிகம் கொள்வனவு செய்யும் ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கில் கேள்வி குறைந்துள்ளதாலும் இலங்கை தேயிலை ஏற்றுமதி வருமானம் 2015 ஜனவரி-மே இடையில் நூற்றுக்கு 12 வீதம் 74 பில்லியன் ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளது.

உலகச் சந்தையில் தமது பங்கை காத்துக்கொள்வதற்காக அர்ப்பணிக்குமாறு கோரும் முதலாளித்துவ கம்பனிகளும் சங்கங்களும், இலங்கை தொழிலாளர்களை ஏனைய தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளிலான வறிய வாழ்க்கை நிலைக்கு குறைத்து, அவர்களது வர்க்க சகோதரர்களுக்கு எதிராக இருத்துகின்றன. இலங்கை தொழிலாளர்கள் இதை நிராகரித்து, சர்வதேச சகோதரர்களுடன் இந்த பெரும் முதலாளிகளுக்கு எதிராக ஒன்றாக போராட வேண்டும்.

வேலைச் சுமை அதிகரிப்புக்கு எதிராக பெப்பிரவரி மாதம் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் செய்த மஸ்கெலியாவில் கிளனியூஜி தோட்டத்தின் டீசைட் பிரிவு தொழிலாளர்களுக்கு எதிராக தோட்ட நிர்வாகம் பழிவாங்கலை முன்னெடுத்தது. நான்கு தொழிலாளர்கள் ஒரு மாதத்துக்கு இடை நீக்கம் செய்யப்பட்டதோடு மூன்று பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வீழச்சியுறும் இலாபத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக உழைப்புச் சுரண்டல் உக்கிரமாக்கப்படுவதை எதிர்க்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு விரோதமாக, கொடூரமான தாக்குதல்களை முன்னெடுக்க தோட்டக் கம்பனிகள் தயாராவதையே இது எடுத்துக் காட்டுகிறது. NUW மற்றும் .தொ.கா. தலைவர்கள் இந்த வேட்டையாடலின் போது பொலிஸ் மற்றும் தோட்ட நிர்வாகத்துடன் ஒன்றிணைந்தனர்.

அரசாங்கம் கம்பனிகள் தயார் செய்யும் கொடூரமான தாக்குதல்களுக்கு உடந்தையாக உள்ளது. திகாம்பரம், வேலாயுதம் ஆகிய அமைச்சர்களின் கருத்துக்கள் இதையே வெளிப்படுத்துகின்றன.

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெறுவதற்கான மற்றும் ஏனைய உரிமைகளை வெற்றிகொள்வதற்கான போராட்டமானது அரசாங்கத்தினதும் முதலாளித்து எஜமானர்களதும் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டமாக ஆகியுள்ளது. தொழிலாளர்களால் அரசாங்கம் மற்றும் கம்பனிகளுடன் கூட்டாக செயற்படும் தொழிற்சங்கங்களின் கைகளில் போராட்டத்தை விட்டு வைக்க முடியாது. போராட்டத்தை தொழிலாளர்கள் தமது கையில் எடுக்க வேண்டும்.

தோட்டங்களைச் சூழ தமது சொந்த நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொண்டு இந்தப் போராட்டத்தை முன்னெடுக்குமாறு நாம் கோருகின்றோம். தோட்டத்தின் சகல தொழிலாளர்களும் பங்குபற்றும் வேலை நிறுத்தமாக போராட்டத்தை அபிவிருத்தி செய்து, 30,000 ரூபா மாதச் சம்பளம், அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை, முறையான வீடு, சுகாதாரம் மற்றும் கல்வி உரிமைகளையும் வெற்றிகொள்வதற்காகப் போராடுவது அவசியமாகும்.

வங்கி மற்றும் பெரும் வர்த்தகங்களை தொழிலாளர்களின் அதிகாரத்தின் கீழ் தேசியமயப்படுத்தும் சோசலிச வேலைத் திட்டத்தை அமுல்படுத்தக்கூடிய தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்காகப் போராடுவதன் மூலம் மட்டுமே, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கை உட்பட சிறந்த வாழ்க்கை உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி, இந்த வேலைத் திட்டத்தை போராட்டத்திற்கு வந்துள்ள தொழிலாளர்களுக்கு முன்வைக்கின்றது. இந்தப் போராட்டத்தை அபிவிருத்தி செய்ய முன்வருமாறு சகல தொழிலாளர்களுக்கும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.