சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The significance of the Chinese stock market rout

சீனப் பங்குச்சந்தை வீழ்ச்சியின் முக்கியத்துவம்

Nick Beams
8 July 2015

Use this version to printSend feedback

சீனப் பங்குச்சந்தை வீழ்ச்சியை தடுத்துநிறுத்துவதற்கு அரசாங்கம் மற்றும் நிதியியல் ஆணையங்களின் கடும் முயற்சிகளுக்கு இடையே, அதன் தொடர்ச்சியான வீழ்ச்சி, சீனாவிலும் உலகளவிலும் மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் தாக்கங்களை கொண்டுள்ளது.

நேற்று, ஷாங்காய் காம்போசிட் குறியீட்டின் 1.3 சதவீதம் மற்றும் ஷென்ஜென் காம்போசிட் 5.3 சதவீதத்துடன் சீன பங்குகள் மீண்டும் சரிந்தன. இன்று ஷாங்காய் பங்குசந்தை 8 சதவீத இழப்புகளுடன் ஆரம்பித்து, நண்பகல் வாக்கில் 4.7 சதவீதமாக குறைந்தது. ங்காய் குறியீடும் 3.3 சதவீதம் வீழ்ந்தது. அதனினும் முக்கியமானது என்னவென்றால் 1,476 பங்குகளின் வர்த்தகம், அதாவது சீனாவின் இரண்டு பிரதான பங்கு வர்த்தக மையங்களில் பட்டியலிடப்பட்ட மொத்த நிறுவனங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவையின் வர்த்தகம் நிறுத்தப்பட்டு, 2.6 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான தனியார் பங்குகள் முடக்கப்பட்டன என்ற அறிவிப்பாகும்.

இந்த வாரத்தின் மேலதிக வீழ்ச்சிகள், சீன பிரதமர் லீ கெகியாங்க்கிற்கும் (Li Keqiang) வங்கி நிர்வாகிகள் மற்றும் நிதியியல் நெறிப்படுத்துனர்களுக்கும் இடையே வாரயிறுதியில் நடந்த அவசர கூட்டத்தை அடுத்து வந்துள்ளன. அவர்களது கலந்துரையாடலின் விளைவாக, நிதிய தரகு நிறுவனங்களுக்கு நிதி வழங்கவும் மற்றும் "சந்தை ஸ்திரப்பாட்டை" தூக்கிநிறுத்துவதற்காகவும், ஓர் அரசு நிறுவனமான சீன பங்குப்பத்திர நிதியத்திற்கு தோற்றப்பாட்டளவில் வரம்பில்லா பணப்பரிமாற்றம் செய்யும் அதிகாரம் மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டது. இதுவரையில் இந்த அவசரகால நடவடிக்கைகளால் எந்த பயனும் விளையவில்லை.

இப்போது சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாகவும், சில அளவீடுகளின்படி பார்த்தால் முதலாவது மிகப்பெரிய பொருளாதாரமாகவும் மற்றும் உலக பொருளாதார வளர்ச்சியில் குறைந்தபட்சம் 30 சதவீதத்திற்கு ஆதாரமாகவும் விளங்கும் நிலையில், அந்த பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி ஏனைய பொருளாதாரங்களுக்கும் பரவி, உலகை மிகப்பெரியளவில் பாதிக்குமென்று கவலைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில், கடந்த இரண்டு நாட்களில் 8.4 சதவீதம் வீழ்ச்சி அடைந்த பின்னர், செப்பின் (copper) விலை 2009க்கு பிந்தைய அவற்றின் மிகக் குறைந்தபட்ச மட்டத்திற்கு நேற்று வீழ்ந்தது.

நிதியியல் வட்டாரங்களில் சிலவேளைகளில் "Doctor Copper" என்று அழைக்கப்படும் அது ஒரு முக்கிய பொருளாதார குறியீடாக கருதப்படுகிறது. உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இருப்பதால், சீனாவே மிகப்பெரிய உலோக நுகர்வு நாடாக விளங்குகிறது. இரும்பு எஃகு மற்றும் எண்ணெய் விலைகளும் கூட பங்குச்சந்தை பொறிவினை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்த பங்குச்சந்தை நெருக்கடியின் வேர்கள், சீன பொருளாதாரத்தில் மட்டுமே தங்கியிருக்கவில்லை, மாறாக அது 2008 நிதியியல் முறிவில் தொடங்கிய உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையின் உடைவில் தங்கியுள்ளது.

சீனா மீது அதனது உடனடி தாக்கங்கள் உள்ளது. 2008 இன் பின்பகுதியில் மற்றும் 2009 இன் ஆரம்ப மாதங்களில் ஏற்பட்ட உலக வர்த்தக பொறிவுடன், ஒரு புள்ளியில் அது வீழ்ச்சி விகிதத்தில் 1930களுக்கு முன்னால் அனுபவித்ததையும் கடந்திருந்த நிலையில், சீன ஏற்றுமதிகள் சரிந்தன. அது 23 மில்லியன் வேலை இழப்புகளுக்கு இட்டுச் சென்றது.

ஒரு வெடிப்பார்ந்த சமூக நெருக்கடியின் சாத்தியத்தை எதிர்கொண்ட சீன ஆட்சி 500 பில்லியன் டாலர் ஊக்கப்பொதி கொண்டு அதற்கு விடையிறுத்தது. உள்ளாட்சி அரசு ஆணையங்கள் உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்வதற்காக மற்றும் நிலம்/கட்டிடம் விற்பனைத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக ஒரு பாரியளவிலான கடன் விரிவாக்கமும் அதனுடன் சேர்ந்திருந்தது. புதிய நகர்புற வளாகங்கள், சில விடயங்களில், தோற்றப்பாட்டளவில் ஒட்டுமொத்த நகரங்களிலும் ஏறத்தாழ ஒரே இரவில் முளைத்தன. உலக பொருளாதாரம் ஓர் சுற்றிசுழலுகின்ற பின்னடைவை அனுபவிப்பதாகவும் மற்றும், முந்தைய விரிவாக்கம் மீண்டும் வருமென அந்த ஆட்சி நம்பிக்கையை கொண்டிருந்தது.

ஆனால் 2008 சம்பவங்கள், அதற்கு முந்தைய இரண்டு தசாப்தங்களின் நிலைமைகள் மாறிவிட்டன என்பதைக் குறித்தது. அப்போதைய அந்நிலைமைகள் சீன வளர்ச்சிக்கு பலம் சேர்க்கும் வகையில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளுக்குள் முன்பில்லாத அளவில் ஏற்றுமதி விரிவாக்கத்திற்கு உதவியிருந்தன. இன்றோ, விரிவடைந்துவரும் ஏற்றுமதிகள் சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகக் குறைந்தளவே பங்களிக்கின்றன.

ஒரு சமயத்தில், கடன்களால் தூண்டிவிடப்பட்டு விரிவடைந்த உள்கட்டமைப்பு மற்றும் நிலம்/கட்டிட விற்பனைத்துறை அபிவிருத்தி சீன பொருளாதாரத்தை ஊக்குவித்து, இது அதன் விரிவாக்கத்தை 2008க்கு முந்தைய விகிதங்களில், அல்லது அதற்கு அண்மித்தளவில் வைத்தது. இது, நிதியியல் பொறிவுக்கு இடையிலும், முதலாளித்துவம் மீண்டுமொருமுறை அதன் இயல்பான மீட்டெழுச்சியை எடுத்துக்காட்டியதாகவும், ஏனென்றால் ஏனைய எழுச்சிபெற்றுவரும் சந்தைகளோடு சேர்ந்து சீனாவும் உலகளாவிய வளர்ச்சிக்கு ஒரு புதிய அடித்தளத்தை வழங்குமென, குறுகிய பார்வை கொண்ட பொருளாதார பண்டிதர்களை வாதிடுவதற்கு இட்டுச் சென்றது. இந்த ஆய்வுமுடிவு விரைவிலேயே வெடித்து சிதறியதோடு, அது இப்போது உத்தியோகபூர்வமாக சர்வதேச நாணய நிதியத்தால் மற்றும் ஏனைய உலகளாவிய பொருளாதார அமைப்புகளால் ஒரு கற்பனை கதையென ஒப்புக்கொள்ளப்படுகிறது.

வெறுமனே 35 சதவீத நுகர்வு செலவுகளுடன், கடன்களால் ஆதரிக்கப்பட்ட முதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 50 சதவீதத்தைக் கொண்டுள்ள பொருளாதார கட்டமைப்பு, இறுதியில் இயங்கவியாதுபோகும் என்பதை சீன அரசாங்கம் புரிந்துகொண்டது.

அதன் விளைவாக, 2013இல், அந்த ஆட்சி ஒரு புதிய பொருளாதார நோக்குநிலையைத் தொடங்கியது, அதுமுதற்கொண்டு சந்தை சக்திகள் இன்னும் அதிகளவில் "தீர்க்கமான பாத்திரம்" வகிக்குமென்று அறிவித்தது. நவம்பர் 2013 இல் அவரது நிகழ்ச்சிநிரலை அமைத்து, கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் ஒரு பிரதான கூட்டத்தில், அதற்கு முந்தைய மார்ச் இல் தான் அதிகாரத்திற்கு வந்திருந்த ஜனாதிபதி ஜி ஜின்பிங் அறிவித்தார்: “ஆதாரவளங்களை ஒதுக்கீடு செய்வதில், சந்தையின் தீர்க்கமான பாத்திரத்தை மையப்படுத்துவதன் மூலமாக நாம் பொருளாதார அமைப்புமுறை சீர்திருத்தத்தை ஆழப்படுத்த வேண்டும்…" என்றார்.

அந்த புதிய நிலைநோக்கு இரண்டு முக்கிய கூறுபாடுகளை உள்ளடக்கி இருந்தது: ஒன்று, அரசு தலையீட்டையும் மற்றும் நிதியியல் அமைப்புமுறை மீதான கட்டுப்பாட்டையும் குறைப்பது, இது சர்வதேச மூலதன ஓட்டத்தை அதிகளவில் திறந்துவிடும்; அடுத்தது, சீன உள்நாட்டு பொருளாதாரத்தில் நுகர்வு செலவின மட்டங்களை உயர்த்துவது என்பவை.

உள்நாட்டு செலவினங்களை ஊக்குவிப்பதற்கான ஒரு வெளிப்படையான வழி, பல மில்லியன் கணக்கான சீனத் தொழிலாள வர்க்கத்தின் கூலிகளை உயர்த்த வேண்டியிருக்கும். ஆனால் இந்த பாதை உலகளாவிய முதலாளித்துவ சந்தைகளின் போட்டித்தன்மைமிகுந்த போராட்டத்தால் மூடப்பட்டது.

அமெரிக்காவை மற்றும் ஐரோப்பாவை மையமாக கொண்ட பிரதான நாடுகடந்த பெருநிறுவனங்களின் ஒப்பந்தங்களுக்காக சீன உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வந்த நிலையில், குறைந்த இலாப வரம்புகளில் செயல்பட்டு வந்த அவை, வியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மலிவு முதலீட்டு மையங்களால் சந்தை விலை குறைப்பில் வெளியேற்றப்படும் என்பதையே தொழிலாளர்களது ஊதியங்களில் செய்யப்படும் எந்தவித குறிப்பிடத்தக்க உயர்வும் அர்த்தப்படுத்தியது. ஒபாமா நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஊதியங்கள் நசுக்கப்பட்டதுடன் சேர்ந்து, சீன நிறுவனங்கள் அதுவே ஒரு மலிவு உழைப்பு மையமாக மாறியுள்ள அமெரிக்காவிடமிருந்தே கூட போட்டியை முகங்கொடுக்க வேண்டியிருந்தது.

இந்த காரணத்திற்காக, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அடுக்குகள் மீது ஆதிக்கம் கொண்டுள்ள செல்வந்த தட்டுக்களின் நலன்களுக்காக ஆட்சி செய்யும் அந்த ஆட்சி, வேறொரு வழியில் நுகர்வு செலவுகளை ஊக்குவிக்க முனைந்தது. அது தனிச்சலுகை கொண்ட மத்திய தட்டு அடுக்குகளைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஊக்குவித்ததன் மூலமாக, "செல்வத்தின் விளைவு" (wealth effect) உருவாக்க களம் அமைத்தது. அந்நடவடிக்கையானது, நிதியியல் அமைப்புமுறையின் உந்துகோல்கள் மீது சீன அரசு அதன் கரங்களில் பலமான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது என்றும், அது அவர்களது முதலீடுகளைப் பாதுகாக்கும் என்றும் சூசகமான உத்தரவாதங்களுடன் சந்தைக்குள் சிறிய முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுந்தது.

அதன் விளைவாக பங்குச்சந்தைக்குள் வெள்ளமென பணம் பெருகி, ஷாங்காய் குறியீட்டை ஜூன் 12 இல் அதன் உச்சபட்ச குறியீடை எட்டுவதற்கு முன்னதாக இந்த ஆண்டில் 150 சதவீதத்திற்கு கூடுதலாக உயர்த்தியது. இந்த முதலீட்டின் பெரும்பகுதி முதலீடு செய்வதற்கான தனிநபர் முதலீட்டு கடன் மூலமாக வழங்கப்பட்டது, அதில் முதலீட்டாளர்களால் வாங்கப்பட்ட பங்குகளே அவர்கள் பெறும் கடன்களுக்கான உத்தரவாதங்களாக இருந்தன, அத்துடன் பங்குகள் ஒரு குறிப்பிட்ட மதிப்பை இழக்கையில் கடனின் ஒரு பகுதியை அதைக் கொண்டே திரும்ப செலுத்தலாம் என்ற வசதியும் இருந்தது.

இத்தகைய கடன்கள் ஒரு மேலெழுச்சியின் போது சந்தையை ஊக்குவித்தன ஆனால் தனிநபர்கள் கடன்களை அடைப்பதற்கான அழைப்புகளை எதிர்கொண்ட நிலையில் முதலீட்டாளர்கள் அவர்களது கடன்களை அடைக்க அவர்களின் பங்குகளில் சிலவற்றை விற்க வேண்டியிருந்த போது ஒருவிதமான வீழ்ச்சியை அது அதிகரிக்க செய்தது, அவ்விதத்தில் ஒரு கீழ்நோக்கிய சுழற்சியை உருவாக்கியது.

கடந்த ஏப்ரலில், தனிநபர் முதலீட்டு கடன்கள் அதிகரித்த நிலையில்இந்த வடிவ கடன் இவ்வாண்டின் ஜூன் வரையில் ஐந்து மடங்கு அதிகரித்ததுடன், ஒரு புள்ளியில், சந்தை மூலதனமயமாக்கலின் 17 சதவீதத்தை உட்கொண்டிருந்ததுஅரசாங்கம் ஒவ்வொரு தனிநபர் முதலீட்டாளரும் 20 பங்கு வர்த்தக கணக்குகள் வரை வைத்திருக்க அனுமதித்து, எரியும் தீயில் எண்ணெய் வார்த்தது.

இதன் விளைவாக பங்கு மதிப்புகள் மேற்கொண்டு உயர்ந்தன. ஒரு பாரியளவிலான நிதியியல் குமிழியை எதிர்கொண்டிருக்கையில், அரசாங்கம் ஜூன் 13 அன்று தனிநபர் முதலீட்டு கடனை நிறுத்த தொடங்கியது. அது தற்போதைய விற்றுதள்ளல்களை இயக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அதன் பரந்துபட்ட அதிகாரங்களோடு அரசாங்கத்தால் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் மற்றும் படிப்படியாக குமிழியின் காற்றை வெளியேற்ற முடியுமென்ற ஊகத்தின் மீது, முதலீடு செய்வதற்கான தனிநபர் முதலீட்டு கடன்களை இழுத்துப்பிடிக்கும் முடிவு அடித்தளமிட்டிருந்தது.

ஆனால் முதலாளித்துவ சந்தையின் விதிகள் மிகவும் பலம் வாய்ந்த ஆட்சியை விட பலமானவை என்பதை நிரூபித்துள்ளன. சீன அரசாங்கம் இப்போது ஒரு வீழ்ச்சி பாதையை எதிர்கொள்கிறது, அது கடன்-சூழ்ந்த ஒட்டுமொத்த நிதியியல் அமைப்புமுறையையே நிலைகுலைக்க அச்சுறுத்தி வருகிறது. உள்ளூராட்சி அரசாங்க ஆணையங்கள் மட்டுமே சுமார் 4 ட்ரில்லியன் டாலர் கடன் நிலுவைகளைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

அந்த நிலைக்குலைவு சாத்தியமான அளவிற்கு வெடிப்பார்ந்த அரசியல் விளைவுகளையும் கொண்டுள்ளது. சோசலிசத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறோம் என்பது ஒருபுறம் இருக்கட்டும், சமூக சமத்துவத்திற்காக இருக்கிறோம் என்ற எல்லா வாதங்களுமே கூட தகர்ந்து போய், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் "சிவப்பு முதலாளித்துவவாதிகள்" சீன தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் அரசியல் போராட்டங்களின் ஒரு வெடிப்பைக் குறித்த மரணகதியிலான அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இப்போது சீன பொருளாதாரம் மெதுவாகி வருகிற நிலையில்மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 சதவீத உத்தியோகப்பூர்வ இலக்குக்கு குறைவாக, அனேகமாக 4 சதவீதத்திற்குக் குறைவாக வீழ்ச்சி அடையலாம் எனும் போதுஇந்த சாத்தியக்கூறு முன்பினும் பெரியளவில் அதிகரிக்கிறது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் அடித்தளமாக எந்த சமூக வட்டத்தைக் கொண்டுள்ளதோ அதுவே கூட அதிகரித்தளவில் விரோதமாக மாறி வருகிறது மற்றும் அந்த ஆட்சியின் "தவறிழைக்காத தன்மையின்" வேஷம் தகர்ந்து வருகிறது.

சீன நிதியியல் நெருக்கடியானது, உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மேற்கொண்டும் மெதுவாவதற்கு இட்டுச் சென்று, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களைத் தீவிரப்படுத்தும் என்பது மட்டுமல்ல, அத்தகைய போராட்டங்களில் அவர்கள் மிகவும் சக்திவாய்ந்த பிரிவுகளாக ஒன்றிணைவதற்கான நிலைமைகளையும் உருவாக்கும்.