சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

China share rout hits global markets

சீனப் பங்கு வீழ்ச்சி உலகளாவிய சந்தைகளைப் பாதிக்கிறது 

By Nick Beams
9 July 2015

Use this version to printSend feedback

மிகப்பெரியளவில் பங்கு வைத்திருப்பவர்கள், பெருநிறுவன நிர்வாகிகள் மற்றும் நிறுவன இயக்குனர்கள் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் அவர்களது பங்குங்களை விற்பதற்குச் சீன நிதியியல் ஆணையங்கள் ஆறு மாத காலத்திற்குத் தடை விதித்துள்ளன. உலகின் ஏனைய பகுதிகளின் மீது அது பாதிப்பு ஆரம்பிப்பதற்கான அறிகுறிகளுக்கு இடையே, சீனப் பங்கு சந்தையின் பொறிவைத் தடுக்க முயலும் அதிகரித்தளவிலான தொடர் பெரும்பிரயத்தன நடவடிக்கைகளில் இந்த தடை சமீபத்தியதாகும்.

புதிய விதிமுறைகளின் கீழ், ஒரு நிறுவனத்தில் 5 சதவீதத்திற்கு அதிகமாக பங்கு வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் அவர்களின் பங்குகளை தொடர்ந்து வைத்திருக்க வேண்டியிருக்கும், அதேவேளையில் செயலதிகாரிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் பங்கினை விற்பன் மீதான தடைக்கு, அவர்கள் எந்தளவிற்கு பங்குகள் வைத்திருக்கிறார்கள் என்பது கவனத்திற்கொள்ளப்படமாட்டாது.

அந்நகர்வு பங்கு விலைகளில் நேற்று ஏற்பட்ட மேலதிக வீழ்ச்சியை அடுத்து அறிவிக்கப்பட்டது. அந்த வீழ்ச்சியில், முக்கிய ஷாங்காய் காம்போசிட் குறியீடு அந்நாளின் போக்கில் அதிகபட்சம் 8 சதவீதம் இழந்த பின்னர், 5.9 சதவீத இழப்புடன் நிறைவடைந்தது. ஷென்ஜென் குறியீடும் 2.5 சதவீதம் சரிந்தது. ஒரு வாரத்திற்கு அதிகமாக, அரசாங்கமும் மற்றும் நிதியியல் ஆணையங்களும் சந்தைகளை ஊக்குவிக்கும் முயற்சியாக தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளன, ஆனால் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.       

உண்மையில் அரசாங்கத்தின் தலையீடு நிலைமையை இன்னும் மோசமாக்கி வருகிறது என்ற கவலைகளும் இப்போது வெளியாகி வருகின்றன. Templeton Emerging Markets குழுமத்தின் தலைவர் மார்க் மோபிஸ் Sydney Morning Herald பத்திரிகைக்கு கூறுகையில், தொடர்ச்சியான தலையீடு "விரக்தியையே உண்டாக்குகிறது. உண்மையில் அது பெரிதும் பயத்தைத் தான் உண்டாக்குகிறது ஏனென்றால் அவர்கள் கட்டுப்பாட்டை இழந்திருப்பதை தான் அது எடுத்துக்காட்டுகிறது,” என்றார்.

பட்டியலிடப்பட்ட மொத்த நிறுவனங்களின் 50 சதவீத பங்குகள் உள்ளடங்கலாக ஏறத்தாழ 1,500 பங்குகள் வர்த்தகம் செய்வதிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், சுமார் 2.26 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான தனியார் பங்கு பரிவர்த்தனை முடக்கப்பட்டிருப்பதாகவும் நேற்று வெளியிடப்பட்டது. ஆனால் இந்த புள்ளிவிபரங்களே கூட சந்தை இயங்காதிருப்பது பற்றிய ஒரு குறைமதிப்பீடே ஆகும். சீனப் பங்குச்சந்தை விதிமுறைகள்படி, ஒரு பங்கு 10 சதவீதத்திற்கு அதிகமாக வீழ்ச்சியடைந்தால் தான் அது வர்த்தகத்திலிருந்து நிறுத்தப்படுகிறது. ஒரு மதிப்பீட்டின் படி, சுமார் 90 சதவீத பங்குகள் ஒன்றில் நிறுத்தப்பட்டுள்ளன அல்லது அவற்றின் அன்றாட விற்பனை வரம்புகளை எட்டி வருகின்றன.

மொத்தத்தில், சந்தை மூலதனமாக்கலில் இருந்து (capitalisation) 3 ட்ரில்லியனுக்கு அதிகமான தொகை இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. மற்றும் ஒரு மாதத்திற்கு முந்தைய அவற்றின் உச்சத்திலிருந்து சந்தைகள் 30 சதவீதத்திற்கு அதிகமாக வீழ்ச்சி அடைந்துள்ளன. பிரெஞ்சு மற்றும் ஸ்பானிய சந்தைகளது மூலதனமாக்கலின் கூட்டுத்தொகையை விட அதிகமான பணம் மறைந்து போயுள்ளது, ஏறத்தாழ இது உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதாரமான ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாகும்.

சீன நிலைகுலைவினால் (meltdown) ஏற்படும் உலகளாவிய தாக்கத்திற்கான தெளிவான அறிகுறிகள் நேற்று மேலெழுந்தன. ஆசிய சந்தைகள் சரிந்தன மற்றும் சீனாவினால் தூண்டிவிடப்பட கூடிய ஆஸ்திரேலிய பங்குச்சந்தை 2 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. ஐரோப்பிய சந்தைகள் சீராக இருந்தன அல்லது சற்றே அதிகரித்திருந்தன, ஆனால் வோல் ஸ்ட்ரீட் இறுதியில் ஒரு குறிப்பிடத்தக்க அளவிற்கான வீழ்ச்சியைப் பதிவு செய்தது.

டோவ் ஜோன்ஸ் குறியீடு 1.5 சதவீத வீழ்ச்சியோடு நிறைவடைந்தது, இது ஐந்து மாதத்தில் மிகக் குறைந்தளவாகும், அதேபோல பரந்த அடித்தளத்தைக் கொண்ட எஸ்&பி 500 குறியீடு 1.7 சதவீதம் சரிந்தது. எஸ்&பி இன் ஒன்பது துறைகள் ஒவ்வொன்றும் சரிந்தன, அத்துடன் அத்தியாவசிய உலோகங்கள் மற்றும் எரிபொருள் துறை பங்குகளும் அதே பாதையில் முன்னணியில் சென்றன. சந்தை கொந்தளிப்பை அளவிடும் Vix குறியீடு, 21 சதவீதம் உயர்ந்து, 20 எனும் மட்டத்திற்கு சற்று குறைவாக, 19.6 எட்டியது. 20 எனும் மட்டம் முதலீட்டாளர் பதட்டத்தைச் சுட்டிக்காட்டும் அறிகுறியாக கருதப்படுகிறது.

இந்த புள்ளியில், பண்டங்களின் விலைகளின், குறிப்பாக செப்பு மற்றும் இரும்பு எஃகு இன் விலைகளது கூர்மையாக வீழ்ச்சியே, சீன விற்றுத்தள்ளல்களை தள்ளிச்செல்லும் பிரதான இயங்குமுறையாக இருந்துள்ளது, அவை சீன பங்குகளின் வீழ்ச்சியைப் பின்தொடர்ந்தன.

ஒரு முக்கிய தொழில்துறை மூலப்பொருளான செப்பின் விலை, நேற்று, இலண்டன் உலோகங்களுக்கான பங்குச்சந்தையில் உலகளாவிய நிதியியல் நெருக்கடி வெடித்ததற்குப் பின்னர் உடனடியாக, 2009க்குப் பிந்தைய அதன் மிகக் குறைந்த புள்ளியை எட்டியது. இரும்பு எஃகு சாதனையளவில் அதன் மிக மோசமான சந்தை காலகட்டங்களில் ஒன்றைக் கொண்டிருந்தது. அதன் விலை அதற்கு முந்தைய நாளின் விலையான டன்னுக்கு 49.70 டாலரிலிருந்து 44 டாலருக்கு சற்று கூடுதலாக குறைந்து, 11 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. கடந்த ஐந்து வர்த்தக காலகட்டங்களில், அது 25 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

முதலீட்டாளர்களும் ஊக வணிகர்களும் உடனடியாக அவர்களின் கையிலிருக்கும் பணத்தின் நிலையைப் பாதுகாக்க முனைகையில், பண்டங்களது வர்த்தகம் இழக்கப்படுவதும், அடுத்ததாக, சீனாவின் விற்றுத்தள்ளல்கள் அதன் நிதியியல் அமைப்புமுறையை ஒரு நெருக்கடிக்கு இட்டுச் சென்று, மிக மிக குறைந்த பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வரும் என்பதன் மீது அதிகரித்துவரும் கவலைகளும் ஆகிய இரண்டு நிகழ்வுபோக்குகளால் பண்டங்களது விலை வீழ்ச்சி தூண்டிவிடப்பட்டுள்ளது. நிதியைப் பெறுவதற்கு செப்பு உத்தரவாதமாக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இப்போது அது தனியார் பங்கு பரிவர்த்தனைகளின் இழப்புகளை மூடிமறைக்க விற்க வேண்டியதாக உள்ளது.

2011இல் இருந்த அதிகபட்ச விலையில் மூன்றில் ஒரு பங்கைவிட இப்போது குறைவாக உள்ள இரும்பு எஃகு விலையின் செங்குத்தான வீழ்ச்சி, பங்குச்சந்தை நெருக்கடியின் நீண்டகால தாக்கத்தைக் குறித்த கவலைகளைப் பிரதிபலிக்கிறது. நேற்று, ஆஸ்திரேலியாவின் நிதி மேலாளர்கள் எச்சரிக்கையில், தற்போதைய விலையில், இரண்டாந்தர, குறைந்த நிலைக்கும் தன்மை கொண்ட இரும்பு எஃகு சுரங்க நிறுவனங்களின் இருப்பு கேள்விக்குறியாகலாம் என்றனர்.

சந்தை விற்றுத்தள்ளல் முடிவடைவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருப்பதுடன், அரசாங்கம் மற்றும் நெறிமுறை ஆணையங்களால் தொடங்கப்பட்ட நடவடிக்கைகள், அவர்களிடமிருந்து வரும் வார்த்தைகளைப் போலவே, அதிகரித்தளவில் கடுமையாக மாறியுள்ளன.

பெரியளவில் பங்கு வைத்திருப்பவர்களுக்கு ஆறு மாதகாலம் விற்பதற்கான தடையை அறிவித்து, சீன பங்குபத்திர நெறிமுறை ஆணைக்குழு கூறுகையில், “சந்தையில் பதட்டமான மனப்போக்கு" இருப்பதாக குறிப்பிட்டது, மேலும் பணப் பரிமாற்றத்தில் இறுக்கத்தை உண்டாக்கி, பங்குகளை நியாயமற்ற விதத்தில் குவிப்பது பெரிதும் அதிகரித்திருப்பதாக" அது சுட்டிக்காட்டியது. அதன் புதிய விதிமுறைகளை எவ்விதத்திலும் மீறுபவர்களை அது "கடுமையாக கையாளும்" என்று அது எச்சரித்தது.

People’s Bank of China (PBoC) அறிவிக்கையில், அது அமைப்புமுறைசார்ந்த உடைவு அல்லது பிராந்திய அளவிலான நிதியியல் அபாயங்களை கையாளும் போக்கின் மீது பிடியை வைத்திருக்கும்" வகையில், பணப் பரிவர்த்தனைகளை பெறுவதற்காக, அது அரசுக்கு சொந்தமான சீனப் பங்குப்பத்திர நிதி நிறுவனத்திற்கு (CSF) உதவி வருவதாக அறிவித்தது.

அமைப்புமுறைசார்ந்த அபாயம்" என்று அந்த வங்கி குறிப்பிடுவதன் மூலமாக, பங்குச்சந்தை வீழ்ச்சி நிதியியல் அமைப்புமுறையின் ஏனைய பகுதிகளில் ஒரு நெருக்கடியை உண்டாக்குமென்ற அதிகரித்துவரும் அச்சங்களை சுட்டிக்காட்டுகிறது, அதேவேளையில் சாத்தியமான "பிராந்திய" பிரச்சினைகள் என்று அது குறிப்பிடுவதன் மூலமாக, நாடெங்கிலும் உள்ள உள்ளாட்சி அரசாங்க ஆணையங்களின் ஸ்திரத்தன்மை மீதான கவலைகளை குறிப்பிடுகிறது. இவை மெதுவாகி வரும் பொருளாதார நிலைமைகளின் கீழ் அதிகளவிலான கடன்சுமையில் உள்ளன.

PBoC அறிக்கையின் முக்கியத்துவம், பைனான்சியல் டைம்ஸின் ஓர் அறிக்கையால் எடுத்துக்காட்டப்பட்டது. “CSF என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு, அதாவது PBoC பணத்தைப் பயன்படுத்தி நேரடியாக பங்குகள் வாங்குவது, முதலீடு செய்வதற்கான தனிநபர் கடன் வழங்குவதை உதவுவதற்காக தரகு நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் அதன் பாரம்பரிய பாத்திரத்திலிருந்து வெளியேறுவதை பெரியளவில் தொடங்குவது ஆகியவற்றை குறித்த இதுவொரு மிகத் தெளிவான அறிக்கையாகும்.”

தரகு நிறுவனங்களே பங்குகள் வாங்குவதற்கு உதவுவதற்காக, ஏறத்தாழ 42 பில்லியன் டாலர், அவற்றிற்கு கடன்களையும் CSF வழங்கி உள்ளது, அத்துடன் சிறிய நிறுவனங்களில் அதுவே சொந்தமாக பங்குகளை வாங்குவதை அதிகரிக்கவும் அது பார்த்து வருகிறது.

சந்தை பொறிவைத் தடுப்பதற்கு அரசாங்கம் மற்றும் நிதியியல் ஆணையங்களின் இலாயக்கற்றத்தன்மை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, ஓர் அரசியல் பேரிடராக வேகமாக திரும்பி வருகிறது. நவம்பர் 2013 இல், சீனப் பொருளாதாரத்திற்கான ஒரு புதிய வளர்ச்சி பாதையை காணும் முயற்சியில், ஜனாதிபதி ஜி ஜின்பிங் அறிவிக்கையில், இனிமுதல் அரசாங்கம் "சந்தை சக்திகளின் தீர்க்கமான பாத்திரத்தை" வலியுறுத்தும் என்று அறிவித்தார்.

அதாவது சர்வதேச மூலதனத்திற்கு நிதியியல் துறையை அதிகரித்தளவில் திறந்துவிடுவதும் மற்றும் அந்நாட்டின் மத்தியதர வர்க்கங்களில் உள்ள செழிப்பான தனிநபர்களைக் கொண்டு பங்கு வர்த்தகத்தை ஊக்குவிப்பதுமே அதன் திட்டமாக இருந்தது. இந்த அடுக்கை ஒரு முக்கிய சமூக அடித்தளமாக உருவாக்கும் முயற்சியில், அது செயலூக்கத்துடன் அவர்களை பங்குச்சந்தை நடவடிக்கைகளுக்குள் இழுத்துவிட்டது.

இப்போது கட்டவிழ்ந்து பாழாய் போயுள்ள, “சந்தை சக்திகளின்" அடித்தளத்தில் அமைந்த அரசாங்கத்தின் திட்டம் அதன் முகத்திற்கு முன்னாலேயே வெடித்து சிதறியுள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சியில் இழப்பைக் கண்டுள்ள மில்லியன் கணக்கான சிறிய வர்த்தகர்களின் விரோதத்தை மட்டுமல்ல, மாறாக, பொருளாதாரம் மெதுவாகி வருகின்ற நிலையில், அது சமூக மற்றும் அரசியல் போராட்டங்களின் சாத்தியக்கூறையும் முகங்கொடுக்கிறது.