சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Pew report: 84 percent of world population subsists on under $20 per day

பியூ அறிக்கை: உலக மக்கள்தொகையில் 84 சதவீதத்தினர் நாளொன்றுக்கு 20 டாலருக்குக் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர்

By Andre Damon
11 July 2015

Use this version to printSend feedback

கடந்த 15 ஆண்டுகளில் தொலைதொடர்பு, வேளாண்மை மற்றும் உயிரி-தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இருந்தபோதினும் கூட, உலக மக்கள்தொகையில் மிகப்பெரும்பான்மையினர் வறிய பொருளாதார நிலைமையில் வாழ்வதாக பியூ (Pew) ஆய்வு மையத்தால் இந்த வாரம் பிரசுரிக்கப்பட்ட உலகளாவிய வருமானங்கள் குறித்த அறிக்கை ஒன்று குறிப்பிட்டது.

“ஓர் உலகளாவிய மத்தியதர வர்க்கம் யதார்த்ததை விட அதிகமாக எடுத்துக்காட்டப்படுகிறது,” என்று தலைப்பிட்ட அந்த அறிக்கை உலக மக்கள்தொகையின் 71 சதவீதத்தினரை நாளொன்றுக்கு 10 டாலருக்கும் குறைந்த வருவாயில் உயிர்வாழும் ஏழைகள் என்றோ அல்லது குறைந்த-வருவாய் பிரிவினர் என்றோ வகைப்படுத்துகிறது. 84 சதவீதத்தினர் நாளொன்றுக்கு 20 டாலருக்கு குறைவான அல்லது ஆண்டுக்கு 7,300 டாலருக்கும் குறைவான வருவாயில் வாழ்வதாகவும், இந்த வருவாய் மட்டம் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் "ஆழ்ந்த வறுமையுடன்" சம்பந்தப்பட்டதாகவும் அந்த அறிக்கை தீர்மானிக்கிறது.

உலக மக்கள்தொகையில் வெறும் ஏழு சதவீதத்தினர் மட்டுமே, நாளொன்றுக்கு 50 டாலருக்கு அதிகமான அல்லது ஆண்டுக்கு 18,000 டாலருக்கு அதிகமான வருவாயில் அந்த அறிக்கை குறிப்பிடும் "உயர்" வருவாய் மட்டத்தில் வாழ்கின்றனர். இத்தகைய மக்களில் பெரும் பெரும்பான்மையினர் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வாழ்கின்றனர்.

புத்தாயிரமாவது ஆண்டு திரும்பியதற்கு பிந்தைய ஆண்டுகளில், அதுவும் முக்கியமாக 2008 நிதியியில் நெருக்கடிக்கு முன்னதாக ஒரு புதிய "உலகளாவிய மத்தியதர வர்க்கம்" குறிப்பாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் உருவாகி இருப்பதாக கூறி, முதலாளித்துவ அமைப்பால் ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் வறுமையில் வாழும் மக்களுக்கு பொருளாதார வளத்தைக் கொண்டு வர முடியும் என்பதற்கு அது ஆதாரமாகும் என்று அரசியல் ஸ்தாபகங்களால் பெருமை பீற்றப்பட்டது.

பியூ அறிக்கை அதுபோன்ற வாதங்களின்மீது நம்பிக்கையிழக்க செய்கிறது. “உலகளாவிய மத்தியதட்டு வர்க்கம் நாம் கருதுவதை விடவும் மிகவும் சிறியதாக உள்ளது, அது நாம் கருதுவதை விடவும் மிகவும் குறைவாகவே செழிப்பாக உள்ளது, நாம் கருதுவதை விடவும் அது மிகவும் பிராந்தியரீதியில் ஒருங்குவிந்துள்ளது”, என்று அந்த ஆய்வின் மூத்த ஆசிரியர் ராகேஷ் கோச்கார் பைனான்சியல் டைம்ஸிற்கு தெரிவித்தார்.

வறுமையின் மிக மோசமான வடிவங்களைக் "கூர்மையாக" குறைத்திருந்த நாடுகளே கூட, "நடுத்தர-வருவாய் மக்களின் பங்கில் மிகச்சிறிய மாற்றத்தையே கொண்டு வந்திருந்தன" என்று அந்த அறிக்கை காண்கிறது. நாளொன்றுக்கு 2 டாலருக்கு குறைந்த வருவாயில் வாழும் மக்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகின்ற போதினும், மிகவும் அடிமட்டங்களில் இருந்து மேலேறிவந்தவர்களில் பெரும்பங்கினர் நாளொன்றுக்கு 2இல் இருந்து 10 டாலர் வரையிலான "குறைந்த-வருவாய்" பிரிவை வந்தடைந்தனர் என்றும், அந்த மட்டம் அமெரிக்க தரமுறைகளின்படி மிகவும் வறுமையில் வாழ்பவர்களாக அவர்களை தரம் பிரிக்கிறது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

அந்த அறிக்கை, உலகம் முழுவதிலுமான வருவாய் பகிர்மானத்தை பகுத்தாராய்வதற்கும் மற்றும் ஒப்பிடுவதற்கும் சமீபத்திய நுகர்வு சக்தி ஒப்புமையின் (purchasing power parity) புள்ளிவிபரங்களை பயன்படுத்துகிறது. உலக மக்கள்தொகையில் 88 சதவீதத்தினரைக் கொண்ட 111 நாடுகளை உள்ளடக்கி, அது 2001 முதற்கொண்டு 2011 வரையிலான ஆண்டுகளை கணக்கில் எடுக்கிறது.

அதே காலகட்டத்தில், நாளொன்றுக்கு 20 டாலர் மற்றும் 50 டாலருக்கு இடையே வருவாய் ஈட்டும் "உயர்மட்ட மத்தியதர வருமானம்" பெறும் பிரிவினராக (upper-middle income) வரையறுக்கப்பட்ட மக்கள்தொகையில் 7 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக அதிகரித்தது. இது, மக்கள்தொகையில் நாளொன்றுக்கு 10 மற்றும் 20 டாலருக்கு இடையே வருவாய் ஈட்டியவர்களது பங்கு அதிகரித்ததை விடவும் குறிப்பிடத்தக்க அளவிற்கு மிகவும் குறைவாகும், இந்த பிரிவினர் 2001 மற்றும் 2011க்கு இடையே 7 சதவீதத்திலிருந்து 13 சதவீதத்திற்கு அதிகரித்தனர்.

“மத்தியதர வருவாய்" மக்களது பெரும் பெரும்பான்மை உயர்வு சீனாவிலும் மற்றும் இந்த காலகட்டத்தில் உயர்-வளர்ச்சியில் வேகமாக விரிவடைந்த பசிபிக் நாடுகளிலும் ஏற்பட்டது.

அந்த அறிக்கை குறிப்பிடுகிறது, “1.3 பில்லியன் மக்களுக்கும் அதிகமானவர்கள் அல்லது உலக மக்கள்தொகையில் 20 சதவீதத்திற்கு அண்மித்தளவிலான மக்களின் தாயகமாக உள்ள சீனா மட்டுமே 2001 இல் இருந்து 2011 வரையில் உலகளாவிய நடுத்தர வருவாய் மக்களைச் சேர்ப்பதில், இரண்டில் ஒரு பங்கினருக்கும் அதிகமானவர்களை கணக்கில் கொண்டுள்ளது”.

இந்த விபரங்கள் ஏனைய "அபிவிருத்தி அடைந்துவந்த" நாடுகளில் மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஆபிரிக்கா, இந்தியா, மத்திய அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் "நடுத்தர வருவாய்" ஈட்டுபவர்களின் எண்ணிக்கையில் அடுத்தடுத்து எந்த உயர்வும் இருக்கவில்லை.

அந்த அறிக்கை குறிப்பிடுகிறது, “சீனாவிற்கு முரண்பட்ட விதத்தில், ஏனைய பெரும்பாலான ஆசிய நாடுகள் அவற்றின் மத்தியதர வர்க்கங்களின் வளர்ச்சியில் ஒப்பீட்டளவில் மிகச் சிறியளவே வளர்ச்சியை கொண்டிருந்தன. இந்தியா அதற்கொரு முன்னுதாரணமாகும். 2001 இல் 35 சதவீதமாக இருந்த இந்தியாவின் வறுமை விகிதம் 2011 இல் 20 சதவீதமாக குறைந்த போதினும், மத்தியதர வருவாய் பிரிவினராக கருதத்தக்க இந்திய மக்களின் பங்கு 1 சதவீதத்திலிருந்து வெறும் 3 சதவீதத்திற்கு மட்டுமே உயர்ந்தது. மத்தியதர வர்க்கம் வளர்வதற்கு மாறாக, இந்தியாவின் குறைந்த-வருவாய் ஈட்டும் பிரிவினர்கள் அதிகரித்தனர்”.

ஆபிரிக்கா ஓரளவிற்கு பரவாயில்லை. அந்த கண்டத்தின் "பெரும்பாலான நகர்வு வறிய நிலையிலிருந்து குறைந்த-வருவாய் அந்தஸ்திற்கு இருந்ததாக" அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. “சான்றாக, எதியோப்பியாவில் ஏழைகள் என்று கருததக்கவர்களின் பங்கு 27 சதவீதம் குறைந்தது. அந்நாட்டின் குறைந்த-வருவாய் ஈட்டுபவர்களின் பங்கு 26 சதவீதம் உயர்ந்தது மற்றும் ஆனால் நடுத்தர-வருவாய் ஈட்டுபவர்களின் அளவு வெறும் 1-சதவீதமே உயர்ந்தது,” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

அதேபோல, “நைஜீரியாவில், அப்பிராந்தியத்தின் மிகவும் உந்துசக்திகொண்ட பொருளாதாரங்களில் ஒன்றான அங்கே, ஏழைகளின் விகிதம் 2001இல் இருந்து 2011 வரையில் 18 சதவீ புள்ளிகளாக வீழ்ச்சிடைந்தது. இதன் விளைவாக குறைந்த-வருவாய் ஈடுபவர்களில் 17 சதவீத உயர்வும் மற்றும் நடுத்தர வருவாய் ஈடுபவர்கள் என்று கருதக்கூடிய மக்கள்தொகையினரில் வெறும் 1 சதவீத ஊக்குவிப்பும் ஏற்பட்டது.

2001 முதற்கொண்டு நடந்துள்ள குறிப்பிடத்தக்க சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கு இடையே, உயர்-வருவாய் ஈட்டியவர்களின் பெரும் பெரும்பான்மையினர் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வாழ்கின்றனர். 2011 இல், “உயர்-வருவாய்" மக்களில் 87 சதவீதத்தினர் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 50 டாலர், அல்லது ஆண்டுக்கு 18,250 டாலரில் வாழ்கின்ற இவர்கள் அந்நாடுகளில் வாழ்ந்தனர்.

உலகின் சில பாகங்களில் வாழ்க்கை தரங்களின் மிதமான முன்னேற்றங்களுக்கு இடையே, அமெரிக்காவில் வருவாய்கள் வீழ்ச்சி அடைந்தன. அந்த அறிக்கையே குறிப்பிடுவதைப் போல, “2001இல் இருந்து 2011 வரையில் அமெரிக்க பொருளாதாரம் ஸ்தம்பித்தது, அது ஆண்டுக்கு சராசரியாக 1 சதவீதத்திற்கு குறைவாகவே வளர்ச்சி அடைந்தது. இத்தகைய மிகச்சிறிய வளர்ச்சிகளுமே கூட அதன் போக்கில் அமெரிக்க குடும்பங்களுக்கு வந்து சேரவில்லை, அவர்களில் நடுத்தர குடும்பங்களின் வருவாய் உண்மையில் 2001 இல் இருந்து 2011 வரையில் வீழ்ச்சி அடைந்தது.”

அமெரிக்காவில் வீழ்ச்சியடைந்துவரும் வருவாய் மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் தொடர்ச்சியான பாரிய வறுமை ஆகியவற்றிற்கு இடையே தான், உலகளாவிய நிதியியல் செல்வந்த தட்டுக்களின் செல்வ வளம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு, உலக பில்லியனர்களின் செல்வவளம் 7 ட்ரில்லியன் டாலரை தொட்டது. அது பியூ அறிக்கை கணக்கிட்ட காலப்பகுதியில் இரண்டு மடங்கிற்கு கூடுதலாக அதிகரித்தது. இந்த சமூக அடுக்கின் மலைப்பூட்டும் செல்வச்செழிப்பு உலக தொழிலாளர்களின் வறுமையடைவதிலிருந்து பிரிக்க முடியாததாகும்.

உலகின் பாரிய பெரும்பான்மை மக்களுக்கு ஒரு கண்ணியமான வாழ்க்கை தரங்களை வழங்க இலாயக்கற்றது என்பதை முதலாளித்துவ அமைப்புமுறை நிரூபித்துள்ளது என்ற அடிப்படை உண்மையையே பியூ அறிக்கையில் வழங்கப்பட்ட புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.