சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Defend the Greek workers! Oppose the diktat of Schble and Merkel!

கிரேக்க தொழிலாளர்களை பாதுகாப்போம்! சொய்பிள மற்றும் மேர்க்கேலின் கட்டளைகளை எதிர்ப்போம்!

ஜேர்மன் சோசலிச சமத்துவ கட்சி
14 July 2015

Use this version to printSend feedback

ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் நிதி மந்திரி வொல்ஃப்காங் முன்சௌவ் ஆல் ஞாயிறன்று யூரோ குழும கூட்டத்தில் கிரீஸ் மீது திணிக்கப்பட்ட உடன்படிக்கையை ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Partei für Soziale Gleichheit) நிராகரிக்கிறது. கிரீஸ் தொழிலாளர்களுடன் ஐக்கியத்திற்கு அழைப்புவிடுவதோடு, ஜேர்மன் அரசாங்க கொள்கைகளுக்கு பாரிய எதிர்ப்பை ஒழுங்கமைக்குமாறும் ஜேர்மனி மற்றும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களுக்கு நாங்கள் அழைப்புவிடுக்கிறோம்.

கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் அரசாங்கம் திங்களன்று காலை எதற்காக சரணடைந்திருந்தாரோ, அந்த புதிய சிக்கன கோரிக்கைகள், வெறும் ஒரு வாரத்திற்கு முன்னதாக நடத்தப்பட்ட வெகுஜன வாக்கெடுப்பில் பெரும் பெரும்பான்மை கிரேக்க மக்களால் நிராகரிக்கப்பட்ட நடவடிக்கைகளையும் கடந்து செல்கின்றன. மில்லியன் கணக்கான கிரேக்கர்கள் மீது இத்தகைய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது என்பது வறுமை, வேலைவாய்ப்பின்மை, நோய் மற்றும் மரணத்தையே கூட அர்த்தப்படுத்துகிறது. மிகவும் சக்தி வாய்ந்த ஐரோப்பிய நிதியியல் நலன்களின் மற்றும் ஜேர்மனியின் நடைமுறைரீதியிலான ஒரு காபந்து அரசாக கிரீஸ் மாற்றப்படும்.

ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய முக்கூட்டு ஏதென்ஸிற்கு திரும்பி வருகிறது, அது அரசாங்க கொள்கைகளை ஆணையிடும். நாடாளுமன்றத்தின் பாத்திரம் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் முத்திரை குத்தும் ஒன்றாகவும் மற்றும் வரவு-செலவு திட்டக்கணக்கில் சுயமாகவே வெட்டுக்களுக்கு கையெழுத்திடுவதாகவும் குறைக்கப்பட உள்ளது. 50 பில்லியன் யூரோ மதிப்பிலான அரசு சொத்துக்கள் நிதிகளாக மாற்றப்படும், கிழக்கு ஜேர்மனியின் அரசு சொத்துக்களை கரைப்பதற்கு 1990 இல் அமைக்கப்பட்ட Treuhandstalt போல, அதிகபட்சமாக ஏலம் கேட்பவருக்கு அவை விற்கப்பட உள்ளன.

அந்த உடன்படிக்கை கிரேக்க தொழிலாள வர்க்கத்தை இரக்கமற்ற விதத்தில் சுரண்டுவதற்கும் மற்றும் சூறையாடுவதற்கும் ஒரு வரம்பில்லா அதிகாரமாக அமைகிறது.

பழைமைவாத விமர்சகர்களே கூட அந்த உடன்படிக்கையின் ஜனநாயகபூர்வமற்ற தன்மையை மறைக்கமுடியவில்லை. வொல்ஃப்காங் முன்சௌவ் பைனான்சியல் டைம்ஸில் கூறுகையில், “19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்த தேசியவாத ஐரோப்பிய சக்திகளின் போராட்டங்களை" மீண்டும் கொண்டு வருவதாகவும், யூரோ மண்டலத்தை "ஜேர்மனியின் நலன்களுக்காக செயல்படும்" ஒரு அமைப்புமுறையாக மாற்றி வருவதாகவும் மற்றும் "நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறைக்கு சவால்விடுப்பவர்களை நேரடியாக வறுமையைக் கொண்டு அச்சுறுத்துவதன் மூலமாக இணைத்துக் கொள்வதாகவும்" அவர் கிரீஸிற்கான கடன்வழங்குனர்களை குற்றஞ்சாட்டினார்.

நியூ யோர்க் டைம்ஸில், போல் க்ரூக்மன் யூரோ குழுமத்தை குற்றஞ்சாட்டுகையில், “பூரண பழிவாங்கும்தன்மை, தேசிய இறையாண்மையை முழுமையாக அழித்தல், மீட்சி மீது நம்பிக்கை இல்லாமல் செய்வது" என்றார்.

சொய்பிள மற்றும் மேர்க்கெலின் கடுமையான நடவடிக்கைகள் ஜேர்மன் வரலாறின் இருண்ட காலங்களை நினைவூட்டுகின்றன. ஹிட்லரின் ஜேர்மன் இராணுவம் கிரீஸை ஆக்கிரமித்து, ஒரு கொடூர பயங்கரமான ஆட்சியை நிறுவி, அந்நாட்டை இரக்கமின்றி சூறையாடி எழுபத்தி ஐந்து ஆண்டுகள் இன்னும் நிறைவடையவில்லை. அப்போது, ஆக்கிரமிப்பிற்கான மிகஅதிகளவிலான செலவுகளைச் சுமத்தியமை, நடைமுறையில் கிரீஸின் அனைத்து தொழில்துறை பண்டங்களையும் ஏற்றுமதி செய்துகொண்டமை, இயந்திரங்கள் மற்றும் வாகனங்களைத் திருடிச் சென்றமை, இவை நூறு ஆயிரக் கணக்கான மக்களின் வாழ்வை பறித்த பஞ்சத்திற்கு இட்டுச் சென்றன.

Distomo, Lingiades மற்றும் Kommeno உட்பட கிராமங்களின் எண்ணற்ற குடிமக்களை படுகொலை செய்ததன் மூலமாக, எதிர்ப்புப் போராளிகளிடமிருந்து வந்த எதிர்ப்பிற்கு ஜேர்மன் இராணுவம் விடையிறுத்தது. இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு ஆககுறைந்தது 30,000 அப்பாவி மக்களாவது பலியானார்கள். எட்டாயிரம் யூதர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்கள், உலகின் மிகப்பழைய யூத சமூகங்களில் ஒன்றான தெசலோனிகி முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் யாருக்கும் ஒருபோதும் நஷ்டஈடு வழங்கப்படவில்லை, நடைமுறையில் அந்த குற்றவாளிகளில் எவருமே தண்டிக்கப்படவில்லை.

சொய்பிள மற்றும் மேர்க்கெலும் அவர்களது அந்த முன்னோடிகளின் அடியொற்றி இப்போது நடந்து வருகிறார்கள். ஜேர்மன் ஆளும் வர்க்கம் கடந்த காலத்தின் ஜீரணமாகாத எல்லா மிச்சமீதிகளையும் இப்போது அசை போட்டு வருகிறது. அவர்கள் மீண்டுமொருமுறை தங்களைத்தாங்களே ஐரோப்பாவின் எஜமான் இனமாக பார்க்கிறார்கள் என்பதையே அவர்களது கொடூரத்தனம் எடுத்துக்காட்டுகிறது.

அரசியல்வாதிகளோ முதுகெலும்பற்ற பத்திரிகைகளால் ஆதரிப்படுகின்றனர். அவற்றை பொறுத்த வரையில் கிரேக்க மக்கள் மீது வீசும் ஏமாற்று வார்த்தைகளும் இழிவுபடுத்தல்களும் எதுவுமே மிகவும் தரந்தாழ்ந்தவையாக தெரியவில்லை. ஊடகங்கள் மக்களைக் குழப்புவதற்கும் மற்றும் அவர்களைத் தவறாக வழிநடத்துவதற்கும் பரப்புரை செய்வதுடன், அவற்றின் சக்திக்கு உட்பட்டு அனைத்து வேலைகளும் செய்கின்றன.

இரண்டாம் உலக போரில் ஜேர்மன் குற்றங்களைக் குறைத்துக்காட்டுவற்காக வரலாற்றை பொய்மைப்படுத்தும் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி போன்ற வரலாற்றாளர்களையும் அந்த அரசாங்கம் சார்ந்துள்ளது. கிரேக்க தொழிலாள வர்க்கத்தை வறுமைப்படுத்துவது ஒரு வரலாற்று அவசியமென அறிவிக்கும் பொருளியல்வாதிகளாலும் மற்றும் ஐரோப்பாவில் ஜேர்மன் மேலாதிக்கம் பெறுவதற்காக அரசியல் வாதங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் ஹெர்பிரட் முன்ங்லெர் போன்ற அரசியல் விஞ்ஞானிகளாலும் அந்த அரசாங்கம் ஆதரிக்கப்படுகிறது.

ஜேர்மன் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளும் அரசாங்கத்தை ஆதரிக்கின்றன. சமூக ஜனநாயகக் கட்சி (SPD) தலைவர் சிங்மார் காப்ரியல், சொய்பிள மற்றும் மேர்க்கேலை விஞ்சும் பாதையில் வலதிலிருந்து தலைமை தாங்கி செல்கிறார்.

வரலாறு மறக்கடிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் அனைவரும் நம்புகிறார்கள். ஆனால் ஜேர்மனியின் வரலாற்று குற்றங்கள் மீண்டும் நடப்பதற்கு கிரீஸ், ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் அவற்றை அனுமதிக்க போவதில்லை, அனுமதிக்கவும் முடியாது.

கிரீஸில் அதன் ஆக்ரோஷமான நடவடிக்கைகளில் ஜேர்மன் அரசாங்கம் இரண்டு குறிக்கோள்களைப் பின்தொடர்கிறது. ஒன்று, ஐரோப்பா மற்றும் ஜேர்மனியில் அதன் சிக்கன நடவடிக்கை போக்கிற்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் அச்சுறுத்துவதற்காக, அந்நாட்டை அது முன்னுதாரணமாக ஆக்க விரும்புகிறது. அடுத்து ஐரோப்பாவில் அதன் மேலாதிக்க செல்வாக்கை அது பலப்படுத்த விரும்புகிறது.

விட்டுக்கொடுத்தல்கள் மற்றும் நிதியியல் உதவிகள் மூலமாக ஜேர்மனி அதன் மேலாதிக்கத்தை இனி பேண முடியாது என்பதை 2008 நிதியியல் நெருக்கடி சமயத்திலேயே, அந்த அரசாங்கம் முடிவு செய்திருந்தது. முன்ங்லெரின் வார்த்தைகளில் கூற வேண்டுமானால், ஜேர்மனி ஐரோப்பாவின் "சம்பளம் கொடுக்கும் அதிகாரியாக" அல்ல மாறாக அது அதன் "எஜமானராக" இருக்க வேண்டியுள்ளது. ஜேர்மனியின் நிஜமான செல்வாக்கை எடுத்துக்காட்டும் வகையில் அது ஐரோப்பாவிலும் உலகளவிலும் ஒரு பாத்திரம் வகிக்க வேண்டுமென கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே முன்னணி அரசாங்க அதிகாரிகள் கோரினர்.

இந்த புதிய வல்லரசு அரசியல், முதலில் உக்ரேனில் பரிசோதிக்கப்பட்டது. அங்கே ஜேர்மன் அரசாங்கம், அந்நாட்டை உள்நாட்டு போருக்குள் கொண்டு சென்ற மற்றும் அணுஆயுதமேந்திய ரஷ்யாவுடன் நேட்டோவை ஓர் இராணுவ மோதலின் விளிம்பிற்கு கொண்டு சென்ற, மேற்கத்திய-ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்தது. அதேபோன்ற இத்தகைய கொள்கைகளே, ஏதென்சில் ஓர் உள்நாட்டு ஆட்சிக்கவிழ்ப்பாக கருதக்கூடிய ஒன்றில் தொடரப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்வுபோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முகமே மாறிவிட்டது. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய மக்களின் சமாதான நல்லிணக்கத்திற்கான ஒரு இயங்குமுறை அல்ல, மாறாக அது மிகவும் சக்திவாய்ந்த ஏகாதிபத்திய சக்திகளின் மேலாதிக்கத்திற்கான மற்றும் தொழிலாள வர்க்கத்தை இரக்கமின்றி சுரண்டுவதற்குமான ஒரு கருவி என்பது முன்பினும் அதிகமாக வெளிப்படையாகி வருகின்றது. பாரிய பெருந்திரளான மக்கள் இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தை அருவருப்பும் வெறுப்பும் கலந்து பார்க்கின்றனர்.

ஓர் உலக சக்தியெனும் அந்தஸ்தைப் பெறுவதற்கு ஜேர்மனி எந்தளவிற்கு மிகவும் பகிரங்கமாக ஐரோப்பிய ஒன்றியத்தைப் பயன்படுத்துகிறதோ, அதை விட அதிகமாக ஐரோப்பாவிற்குள்ளேயே அனைத்திற்கும் மேலாக ஜேர்மனி மற்றும் பிரான்சிற்கும் இடையே தேசிய மோதல்கள் தீவிரமடைகின்றன. ஞாயிறன்று கூட்டத்திற்கு முன்னதாக அங்கே பேர்லின் மற்றும் பாரீசிற்கு இடையே கூர்மையான கருத்து மோதல்கள் இருந்தன. உள்நாட்டு அரசியலைக் கருத்தில் கொண்டு பாரீஸ், கிரீஸை நோக்கி இன்னும் சமரசமான போக்கிற்கு ஆதரவாக இருந்து வந்தது. ஜேர்மன் மேலாதிக்கதிலிருந்து வரும் அபாயத்தை விட பிரெஞ்சு அரசாங்கம் அதன் சொந்த தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வரும் அபாயம் மிக பெரியதென அஞ்சுவதால் அது இறுதியில் ஜேர்மனியின் கட்டளைகளுக்கு பணிந்தது. ஆனால் இந்த பதட்டங்கள், ஐரோப்பா மீது யார் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது என்பதன் மீது அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே அபிவிருத்தி அடைந்துவரும் முரண்பாடுகளைப் போலவே, மீண்டும் சீறியெழும்.

தொழிலாள வர்க்கத்தை கடுமையான வறுமையில் மூழ்கடிக்க மற்றும் அக்கண்டத்தையே மீண்டுமொருமுறை போர் மற்றும் சர்வாதிகாரத்திற்குள் மூழ்கடிக்க அச்சுறுத்தும் இத்தகைய அபாயகரமான நடவடிக்கைகளை எதிர்ப்பது, ஜேர்மனி மற்றும் ஐரோப்பா எங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் பணியாகும். கிரீஸ் சம்பவங்களில் இருந்தும் மற்றும் சிரிசா வகித்த பாத்திரம் மீதிருந்தும் இது வரையிலான படிப்பினைகளைப் பெறுவது அத்தியாவசியமாகும்.

சிப்ராஸ் மற்றும் அவரது அரசாங்கத்தால் கடந்த சில நாட்களில் நடத்தப்பட்ட கோழைத்தனமான மற்றும் வெட்கக்கேடான காட்டிகொடுப்பிற்கு இணையான ஒன்றை வரலாற்றில் காண்பதே அரிதாகும். சிக்கன நடவடிக்கைகளை நிறுத்துவோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் ஜனவரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிப்ராஸினது கட்சி, பேர்லின் மற்றும் புருசெல்ஸிற்கு ஒன்று மாற்றி ஒன்றாக விட்டுக்கொடுப்புகளை வழங்கியது.

இறுதியில் அது, பெரும்பான்மையினர் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவிலான சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில், ஒரு வெகுஜன வாக்கெடுப்பை ஏற்பாடு செய்தது. அதற்கு மாறாக பாரிய பெரும்பான்மையினர் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக இருந்ததை எதிர்கொண்ட போதும் கூட, ஒரு வாரத்திற்குள்ளேயே அது ஜேர்மன் கட்டளைக்கு முற்றிலுமாக அடிபணிந்தது. ஒரு வலதுசாரி முதலாளித்துவ வர்க்க அரசாங்கம் கூட இந்தளவிற்கு சென்றிருக்காது.

சிரிசா ஒரு இடது கட்சியல்ல, நிச்சயமாக அதுவொரு சோசலிஸ்ட்டும் அல்ல, மாறாக அது பிரதானமாக தங்களின் சொந்த நல்வாழ்வின் மீது கவலைகொண்ட செல்வசெழிப்பான, சுயநலம்கொண்ட மத்தியதர வர்க்க அடுக்குகளைப் பிரதிநிதித்துவம் செய்துவருகின்ற ஒரு போலி-இடது அமைப்பாகும், என்ற ஜேர்மன் சோசலிச சமத்துவ கட்சியின் மதிப்பீட்டையே இந்த சரணடைவு உறுதிப்படுத்துகிறது. அவர்கள் கண்டு அச்சமுறும் தொழிலாள வர்க்கத்தை நிந்திப்பதைத் தவிர அவர்களிடம் வேறொன்றுமில்லை. சிரிசாவின் அடிபணிவைக் கொண்டு கோல்டன் டௌன் போன்ற தீவிர வலது தீவிரவாதிகளின் கூட்டம் இலாபமடைகின்றது. ஒரு பிற்போக்குத்தனமான, தேசியவாத நிலைப்பாட்டிலிருந்து கொண்டு, புருசெல்ஸ் மற்றும் பேர்லினின் கட்டளைகளை, "இடது" என்று எடுத்துக்காட்டப்படும் சிரிசாவை விட மிகவும் தீர்க்கமாக எதிர்க்கும் எதிர்ப்பாளராக அது காட்டிக்கொள்கிறது.

சிரிசாவிற்கு உண்மையென பொருந்துவது, ஜேர்மனியில் உள்ள இடது கட்சி மற்றும் ஸ்பெயினில் உள்ள பெடெமோஸ் உட்பட அதன் சர்வதேச சக-சிந்தனையாளர்களுக்கும் பொருந்துகிறது.

கிரீஸின் தலைவிதிக்கு இடது கட்சியும் அளப்பரிய பொறுப்பாகும். பெப்ரவரியில் அது கிரீஸிற்கு "உதவி திட்டம்" வழங்க வாக்களித்தது, அதனுடன் சிக்கன நடவடிக்கைகள் உள்ளடங்கி இருந்தன. அதன் நம்பகத்தன்மையை சற்றேனும் பேணுவதற்காகவே, ஜேர்மன் அரசாங்க கொள்கைகளை அது அவ்வபோது விமர்சிக்கிறது, ஆனால் கிரேக்க தொழிலாளர்களின் ஆதரவிற்கென அது முற்றிலும் ஒன்றுமே செய்திருக்கவில்லை.

அவர்களின் பாதுகாப்பிற்காக அது ஒரேயொரு ஆர்ப்பாட்டத்தைக் கூட ஒழுங்கமைக்கவில்லை. பேர்லினில் இடது கட்சி அதிகாரத்திற்கு வந்தால், அது சிரிசாவை போலவே அதே போக்கை பின்பற்றும். இது ஏற்கனவே மாநில அளவில் அது பதவி வகிக்கும் இடங்களின் நடவடிக்கைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரயில் ஓட்டுநர்கள், தபால்துறை மற்றும் பகல்நேர பராமரிப்பு தொழிலாளர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள் மற்றும் ஏனைய தொழில் வல்லுனர்களின் வேலைநிறுத்தங்களை தடுப்பதிலும் மற்றும் அவற்றை விற்பனை செய்வதிலும் ஜேர்மன் அரசாங்கத்திற்கு உதவியுள்ள தொழிற்சங்கங்களுடன் இடது கட்சி நெருக்கமாக வேலை செய்து வருகிறது.

கிரீஸில் உள்ள அதன் வர்க்க சகோதர மற்றும் சகோதரிகளின் பாதுகாப்பிற்காக ஜேர்மன் தொழிலாள வர்க்கம் எழ வேண்டும். கிரேக்க தொழிலாளர்களை ஆதரிப்போம்! சொய்பிள மற்றும் மேர்க்கெல் இன் நிபந்தனைகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்வோம்! இடது கட்சி மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியுடன் முறித்து கொண்டு சுயாதீனமாக ஒருங்கிணைவோம்! என ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி சமூக போராட்டங்களில் ஈடுபட்டுள்ள எல்லா தொழிலாளர்களுக்கும், எல்லா இளைஞர்களுக்கும், ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் அழைப்புவிடுக்கிறது.

கிரீஸ், ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய கண்டம் முழுவதிலும் ஒரு புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்பு வேண்டியதன் அவசியமே அடிப்படை பிரச்சினையாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஜேர்மன் பாகமான சோசலிச சமத்துவ கட்சியில் இணைந்து, ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காகவும் மற்றும் ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகளை ஸ்தாபிப்பதற்கும் போராடும் ICFI இன் பகுதிகளை ஐரோப்பாவெங்கிலும் கட்டியெழுப்புவோமாக!