சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greek parliament endorses EU-dictated austerity programme

ஐரோப்பிய ஒன்றியம் கட்டளையிட்ட சிக்கன திட்டத்திற்கு கிரேக்க நாடாளுமன்றம்  ஒப்புதல் வழங்குகிறது

By Chris Marsden
16 July 2015

Use this version to printSend feedback

கடந்த வாரயிறுதியில் யூரோமண்டல அதிகாரிகளுடன் அவர் ஒப்புக்கொண்ட கடுமையான சிக்கன திட்டத்திற்கு, கிரேக்க பிரதம மந்திரியும் சிரிசா தலைவருமான அலெக்சிஸ் சிப்ராஸ் வியாழனன்று காலை நாடாளுமன்ற ஆதரவைப் பெற்றார்.

அத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் பெறுவதில் ஒருபோதும் சந்தேகத்தில் இருக்கவில்லை. 229 ஆதரவு 64 எதிர் என்ற அளவில் பெரும்பான்மை வாக்குகளோடு அச்சட்டமசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில் ஆறு பேர் கலந்து கொள்ளவில்லை. சிக்கன கொள்கைகளுக்கு பகிரங்க ஆதரவளிக்கும் மூன்று கட்சிகளான புதிய ஜனநாயகம், PASOK மற்றும் To Potami ஆகியவை சிரிசா அரசாங்கத்தின் சட்டமசோதாவை ஆதரித்தன. "வேண்டாம்" என்று வாக்களித்தவர்களில், சிரிசாவின் 32 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சேர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சி (KKE) மற்றும் பாசிச கோல்டன் டௌன் ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்குவர்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே, சிப்ராஸின் துரோகத்தனமான உடன்படிக்கை மீது அங்கே கோபம் அதிகரித்திருந்தது. அரசுத்துறை தொழிற்சங்கம் Adedy புதனன்று காலை நான்கு மணிநேர வேலைநிறுத்தம் நடத்தியது. அன்றைய நாள் மாலையே ஏதென்ஸ் மற்றும் தெஸ்லலோனிகியில் பல போராட்டங்கள் நடந்தன. கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு PAME நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்த போதே ஓரளவிற்கு மிகப்பெரும் போராட்டம் ஒன்றை நடத்தியது. ANTARSYA மற்றும் அராஜகவாதிகளாலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

அரசாங்கம் கலகம் ஒடுக்கும் பொலிஸைக் கொண்டு வந்தது. அது கண்ணீர் புகைகுண்டுகளை வீசியது. சிரிசாவின் இளைஞர் அமைப்பினரின் உறுப்பினர்களும் பொலிஸால் தாக்கப்பட்டவர்களில் உள்ளடங்குவர்.

ஆனால் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள்ளே, சிப்ராஸ் சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான மூன்று கட்சிகளுக்கு கூடுதலாக, கூட்டணியில் உள்ள அவரது வலதுசாரி பங்காளிகளின் வாக்குகளையும் பெற்றார். பேர்லினில் அவர்கள் கோரிய சிக்கன நடவடிக்கைகளோடு "மனிதாபிமான உதவிகளைச்" சேர்க்க கோரி கிரீஸிற்காக வாதாடியவர்கள் பேசிவந்த நிலையில், கிரேக்க தொழிலாளர்களும் இளைஞர்களும் மேற்கொண்டு பாதிப்புகளை உண்டாக்குவதற்காக சிரிசா தலைமையிலான கூட்டணி அவர்களைக் கண்டித்துள்ளது.

சிப்ராஸின் இராஜினாமாவிற்கும் மற்றும் புதிய தேர்தல்களுக்கும் நிர்பந்திக்கும் விதத்தில், போதியளவிற்கு பரந்தளவில் எதிர்பார்க்கப்பட்ட கட்சித்தாவல்கள் இருக்குமா என்பதைக் காண, எல்லா கண்களும் சிரிசாவின் இடது களத்தின் (Left Platform) மீது இருந்தன. 40 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு கிளர்ச்சி, நம்பிக்கையில்லா தீர்மான வாக்குகளாக எடுத்துக்கொள்ளப்படும் என்ற ஊகங்களுக்கு இடையே, சிப்ராஸ் ஜனாதிபதி Prokopis Pavlopoulos க்கு தொலைபேசியில் பேசியதாக அந்நாளின் காலையில் செய்திகள் வெளியாயின. 

அந்த உடன்படிக்கைக்கு எதிரான ஒரு வாக்கு; வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பை பிரதிநிதித்துவம் செய்யும் என்றும், அதன் உள்நோக்கம் என்னவென்றால் சிக்கன நடவடிக்கைக்கு விரோதமான" அரசாங்கம் ஓர் "இடதின் இடைவேளை நேரமாக" மட்டுமே இருந்தது என்பதை விளங்கவைப்பதாக இருக்கும் என்றும் சிப்ராஸ் அவரது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்தார். சிரிசா செய்தி தொடர்பாளர் Nikos Filis உம் அவரை ஆதரித்தார், அவர் கூறுகையில், சிரிசா அரசாங்கம் வீழ்ந்தால், நீங்கள் [ஜேர்மன் நிதி மந்திரி வொல்ஃகாங்] சொய்பிள மற்றும் ஐரோப்பாவின் பழமைவாத வட்டாரங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களாவீர்கள்," என்று எச்சரித்தார்.

இத்தகைய கருத்துக்கள் அவற்றின் அபத்தத்தன்மை மற்றும் பாசாங்குத்தனத்தில் மலைப்பூட்டுகின்றன. "சிக்கன நடவடிக்கைக்கு விரோதமானது" என்றும் "இடது" என்றும் கூறப்படும் சிரிசா அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரும் வாக்குறுதியின் பேரில் தான் தேர்ந்தெடுப்பட்டது, அது முந்தைய அரசாங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்தவொரு தாக்குதல்களையும் விட அதிகமான தாக்குதல்களை, கிரேக்க தொழிலாளர்களின் வேலைகள், ஓய்வூதியங்கள் மற்றும் வாழ்க்கை தரங்களின் மீது திணித்து வருகிறது. அனைத்திற்கும் மேலாக, அது ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய "முக்கூட்டின்" நடைமுறையளவிலான சர்வாதிகாரத்திற்கு உடன்பட்டுள்ளது, அதுவும் அவர்கள் முடிவுக்கு கொண்டு வருவதாக வாக்குறுதியளித்த முறையை விட அதிகமாக அனைத்தையும் மற்றும் மிகவும் முழுமையாகவும் ஏற்றுக் கொள்ள உடன்பட்டுள்ளது. அது ஜேர்மனியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு அறக்கட்டளைக்கு அதன் 50 பில்லியன் யூரோ மதிப்பிலான பொதுச்சொத்துக்களை ஒப்படைக்கவும் உடன்பட்டுள்ளது, அந்த அமைப்பு தனியார் ஊகவணிகர்களுக்கு சொத்துக்களை விற்று, அதில் கிடைக்கும் பெரும் விற்றுமுதல்களை கிரீஸின் கடன்வழங்குனர்களுக்குச் செலுத்த பயன்படுத்தும்.

"அவர்களின் சொந்த மனசாட்சிக்கு எதிராக வாக்களிக்குமாறு" சிரிசா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு Filis இன் முறையீடு, சுதந்திர கிரேக்கர்கள் கட்சியின் தலைவர் பேனொஸ் கமெனொஸ் ஆல் எதிரொலிக்கப்பட்டது. "நாங்கள் எங்களின் மனசாட்சிக்கு விரோதமாக வாக்களித்து, அந்த உடன்படிக்கையை ஆதரிக்க வேண்டியுள்ளது," என்று அவர் அறிவித்தார். 

அந்த நாடாளுமன்ற அமர்விற்கு முன்னதாக, கருத்துவேறுபாடுகளின் இரைச்சல் வெளிப்படையாக இருந்தன. கடந்த வெள்ளியன்று அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்த சபாநாயகர் Zoe Konstantopoulou, சிப்ராஸின் வேண்டுகோளுக்கிணங்க தலைமைபீடத்திலிருந்து நீக்கப்பட்டார். துணை நிதி மந்திரி நாடியா வலவாணி, அதுபோன்ற சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்கும் ஓர் அரசாங்கத்தில் இருப்பது அவருக்கு "சாத்தியமில்லை" என்று கூறி அவரது மந்திரி பதவியை இராஜினாமா செய்தார். நிதி அமைச்சக பொது செயலர் Manos Manousakis உம் பதவி விலகினார். சிரிசாவின் மத்திய கமிட்டியில் பெரும்பான்மையினர், 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 201 இல் 109 பேர், அந்த உடன்படிக்கையை நிராகரிப்பதாக வாக்களித்தனர்.       

எவ்வாறிருந்தபோதினும் சிப்ராஸால் அவரது கட்சியின் பெரும்பான்மை ஆதரவைப் பெற முடியவில்லை. "வேண்டாம்" என்று வாக்களித்தவர்கள், ஒரு அடையாள போராட்டத்தைக் காட்டுவதன் மூலமாக அவர்கள் முகத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு காலதாமதமான முயற்சியை காட்டினார்கள் என்பதை விட எடுத்துக்காட்டுவதற்கு அங்கே வேறொன்றும் இருக்கவில்லை. இறுதி வரையில் சிப்ராஸை ஆதரித்த இடது களத்தின் கோழைத்தனம் மற்றும் கோட்பாடற்றத்தன்மை எரிசக்தித்துறை மந்திரி Panagiotis Lafazanis ஆல் எடுத்துக்காட்டப்பட்டது, அவர் அந்த உடன்படிக்கைக்கு எதிராக வாக்களிக்க இருப்பதாகவும் ஆனால் அரசாங்கத்தை பதவியிலிருந்து கீழிறக்க முயலப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் என்னவெல்லாம் சிக்கன நடவடிக்கைகள் கோரப்படுகிறதோ அவற்றை திணிக்க தயாராக இருப்பவர்களைக் கொண்டு மந்திரிசபையை நிரப்பும் வகையில், மிகவும் இளகியமனம்படைத்த விமர்சகர்களை கூட நீக்கி விடும் ஒரு மந்திரிசபை மாற்றத்தின் பாகமாக, அவரது மாபெரும் பிரயத்தனங்களுக்காக அவர் அனேகமாக நீக்கப்படலாம். சமீபத்திய பிணையெடுப்பின் நிபந்தனைகளுக்கு எதிராக பேசியிருந்த நான்கு அமைச்சர்கள் ஏறத்தாழ நிச்சயமாக பதவியிலிருந்து வெளியேறுவார்கள். தொழிலாளர் துறை மந்திரி Panos Skourletis உட்பட ஏனையவர்கள் அவர்களது பதவியில் மேலுயர்த்தப்படுவார்கள்.  

ஒரு மந்திரிசபை மாற்றத்திலேயே கூட, சிப்ராஸின் நிலைப்பாடு அபாயகரமாக இருக்கிறது. இந்த இலையுதிர் காலத்திற்கு முன்னதாக புதிய தேர்தல்கள் வந்தால் அந்த அரசாங்கமே தோல்வியடையக்கூடும். அந்த பிணையெடுப்பு நடவடிக்கைகள் சட்டமாக நிறைவேறுவதற்கு போதுமான அளவிற்கு மட்டுமே அந்த அரசாங்கத்தை ஆதரிப்பதாக புதிய ஜனநாயகம் வாக்குறுதி அளித்தது. 17 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள To Potami தலைவர் Stavros Theodorakis கூறுகையில், சிரிசாவுடன் அவரது கட்சி ஒரு கூட்டணி அரசாங்கத்தில் சேராது என்றார்.  

கிரீஸ் நிதியியல் நரகத்திற்குள் விழுவதைப் பொறுத்த வரையில், நிறைவேற்றப்பட்ட அந்த உடன்படிக்கை எதையும் தீர்க்கவில்லை. அது அந்த நிகழ்வுபோக்கை வேகப்படுத்த மட்டுமே செய்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அதன் சொந்த கடன் பேணும்தகைமை குறித்த பகுப்பாய்வு அப்பட்டமாக அறிவித்தது, "கிரீஸின் பொதுக்கடன் பெரிதும் நிச்சயமற்றவை... 2018 இறுதி வரையில் நிதித் தேவை 85 பில்லியன் யூரோவாக இருக்குமென இப்போது மதிப்பிடப்படுகிறது, கடன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 200 சதவீதத்திற்கு நெருக்கமாக உயருமென எதிர்பார்க்கப்படுகிறது, இதுவெல்லாம் ஒரு வேலைத்திட்டத்தின் மீது அங்கே முன்கூட்டியே உடன்பாடு இருக்கிறது என்றபட்சத்தில் தான். இதுவரையில் ஐரோப்பா பரிசீலிக்க விரும்பியதை விட, அதிகளவிலான கடன் மீட்சி நடவடிக்கைகளைக் கொண்டு மட்டுந்தான் கிரீஸின் கடனை இப்போது ஏற்புடையதாக செய்ய முடியும்." கடன்களைத் திரும்ப செலுத்துவதற்கு கிரீஸிற்கு 30 ஆண்டுகால கடன் இடைநிறுத்த காலம் தேவைப்படுமென சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியது.

சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்து வரும் அந்த விதமான உதவிக்கு ஜேர்மனி உடன்படாது, சர்வதேச நாணய நிதியம், அதன் பங்கிற்கு, தேவையான நிதி ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட வேண்டுமென கோரி வருகிறது.

அமெரிக்க கருவூலத்துறை செயலர் ஜாக் லெவ் ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் மரியோ திராஹி உடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக நேற்று ஐரோப்பா சென்றார். அவர் இன்று ஜேர்மன் நிதி மந்திரி வொல்ஃப்காங் சொய்பிள ஐ சந்திக்கிறார். ஆனால் கடன் தள்ளுபடி குறித்து வாஷிங்டனிடம் இருந்து வந்த முறையீடுகளை ஜேர்மனி தொடர்ச்சியாக மறுத்தளித்துள்ளது.