சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: SEP meeting defends victimised plantation workers

இலங்கை: சோ... கூட்டம் பழிவாங்கப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க அழைப்பு விடுத்தது

By our correspondents
15 July 2015

Use this version to printSend feedback

இங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ...) சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் ஜூலை 5 அன்று கிளனியூஜி தேயிலை பெருந்தோட்டத்தின் டீசைட் பிரிவில பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய மலையக நகரான சாமிமலையில் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தின. தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் பொலிசின் அச்சுறுத்தல்கள் மிரட்டல்களின் மத்தியிலும் வேட்டையாடப்பட்டவர்கள் உட்பட கனிசமானளவு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.


சாமிமலையில் சோசக இன் பொதுக்கூட்டம்

மே 22, கிளனியூஜி தோட்ட நிர்வாகம் மூன்று தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ததோடு நான்கு பேரை ஒரு மாதத்துக்கு இடை நீக்கம் செய்தது. மேற்பார்வையாளர் ஒருவரை தாக்கியதாகவும் ஏனைய தொழிலாளர்களின் வேலைக்கு இடையூறு செய்ய குளவிக் கூட்டை கலைத்து விட்டதாகவும் தொழிலாளர்கள் மீது போலிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர்கள், எதேச்சதிகராமான முறையில் வேலைச் சுமையை அதிகரித்தமைக்கு எதிராக பெப்பிரவரியில் நடந்த வேலை நிறுத்தத்தில் முன்னணி பாகம் ஆற்றியமைக்காவே பழிவாங்கப்பட்டனர்.

கூட்டத்திற்கு முன்னதாக, “பழிவாங்கப்பட்ட டீசைட் தோட்டத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடு என்ற அறிக்கையின் பிரதிகளை விநியோகித்து சோ... மற்றும் .வை.எஸ்.எஸ்.. உறுப்பினர்கள் பல தோட்டங்களில் பிரச்சாரம் செய்தனர். தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையாடலின் ஆழமான உள்ளர்த்தங்களையும் முதலாளித்துவத்துக்கு எதிரான சோசலிச மாற்றீட்டையும் பற்றி அவர்கள் கலந்துரையாடினர். இந்த வேட்டையாடலில் தொழிற்துறை பொலிஸ்காரனாக இருந்து தொழிற்சங்க அதிகாரத்துவம் வகிக்கும் துரோகப் பாத்திரத்தைப் பற்றி ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. சாமிமலை மற்றும் அருகில் உள்ள மஸ்கெலியா நகரின் சிறு வர்த்தகர்கள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கூட்டத்தைக் கட்டியெழுப்ப நிதி உதவி செய்தனர்.

ஜூலை 3, பெருந்தோட்டத் துறையில் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (.தொ.கா.) பிரதேச தலைவர், மஸ்கெலியா நகரில் சோ... பிரச்சாரத்தை தடுக்க ஆத்திரமூட்டல் முயற்சியில் ஈடுபட்டார். “தேர்தல் காலத்தில் வாக்குகளை பெறுவதற்காக இந்த விவகாரத்தை சுரண்டிக்கொள்வதாக சோ... மீது குற்றம் சுமத்திய அவர், பிரச்சாரத்தை நிறுத்துமாறு அச்சுறுத்தியுள்ளார். அங்கு சூழ்ந்த மக்களுக்கு முன் பேசிய சோ... உறுப்பினர்கள், தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னரே, பெப்பிரவரியில் இருந்தே வேட்டையாடப்பட்ட தொழிலாளர்களை பாதுகாக்க தொடர்ந்தும் போராடி வரும் ஒரே கட்சி சோ..., என்று விளக்கினர். கிளனியூஜி நிர்வாகத்தின் பழிவாங்கலுக்கு .தொ.கா. எவ்வாறு உதவி செய்தது எனவும் அவர்கள் விளக்கினர். சோ... பிரச்சாரகர்களுக்கு ஆதரவு பெருகிய போது, .தொ.கா. தலைவர் பின்வாங்கினார்.

ஜூலை 4, சுமார் 3.00 மணியளிவில் மஸ்கெலியா நகரில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த போது, திடீரென பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை வந்து சந்தித்த மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரச்சாரத்திற்கான காரணத்தை கேட்டார். சோ... அறிக்கையை வாசித்த பின்னர், அவர்களுக்கு எதிராகயாரோ முறைப்பாடு செய்துள்ளதாக கூறி பிரச்சாரகர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்தார். சோ... குழுவினர் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு பொலிஸ் நிலையத்திற்கு வரவேண்டும் என அந்த பொறுப்பதிகாரி வலியுறுத்தினார்.

பிரச்சாரக் குழுவின் தலைவர் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே, அமைச்சரவை அமைச்சர் பி. திகாம்பரத்தின் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் (NUW) குண்டர், சோ... உறுப்பினர்களை தாக்க முயற்சித்தார். சோ... உறுப்பினர்கள் பொலிஸ் நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அவர்களைப் பின் தொடர்ந்த NUW குண்டர்கள், அவர்கள் விநியோகித்த அறிக்கையின் பிரதிகளை அபகரிக்க முயற்சித்தனர். குண்டர்கள் சார்பாக நடந்துகொண்ட பொலிஸ், அவர்களை தடுக்கவோ கைதுசெய்யவோ இல்லை. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திகாம்பரத்தின் துரோகத்தனமான பாத்திரத்தை சோ... அம்பலப்படுத்தியுள்ளமையை சுட்டிக் காட்டிய குண்டர்கள், எதிர்காலத்தில் தமது தலைவர் சம்பந்தமாக எதுவும் பிரசுரிக்க கூடாது என பிரச்சாரகர்களை அச்சுறுத்தினர். சோ... உறுப்பினர்கள் NUW குண்டர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த இரு சம்பவங்களும் தொழிற்சங்கங்களின் அவநம்பிக்கையான நிலைமையையும் பொலிசுக்கும் தொழிற்துறை பொலிசான தொழிற்சங்களுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அவை தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராக அரசியல் ரீதியில் விழிப்படைவதையிட்டு பீதியடைந்துள்ளனர்.

கூட்டத்திற்கு தலைமை வகித்த சோ... உறுப்பினர் காண்டீபன், கூட்டத்திற்கு வருகை தந்த தொழிலாளர்களை வரவேற்றதோடு தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் பொலிசின் அச்சுறுத்தலின் மத்தியிலும் தமது சக தொழிலாளர்களை பாதுகாக்க முன்வந்தமையையும் வரவேற்றார்.

பெருந்தோட்டக் கம்பனிகளால் வேலைச் சுமைகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னணியில் நின்று போராடியமையினால் டீசைட் தொழிலாளர்கள் போலி குற்றச்சாட்டுக்களின் பழிவாங்கப்பட்டனர். இது கிளனியூஜி நிர்வாகத்தின் தனிப்பட்ட தீர்மானம் அல்ல. தொழிலாளர்கள் இதனை முதலாளி வர்க்கம், பிரதானமாக பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் நன்கு கணக்கிட்டு எடுத்த முடிவாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு ரூபாயிலேனும் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாது என அழுத்தமாக தெரிவித்த அவர்கள், அன்றாடம் பறிக்கும் கொழுந்தின் அளவை 16 அல்லது 18 கிலோவில் இருந்து 23 கிலோ வரை அதிகரிக்க வலியுறுத்துகின்றனர். ஐரோப்பிய ஆளும் வர்க்கம் கிரேக்கத் தொழிலாளர்களுக்கு எதிராக வர்க்க யுத்தம் தொடுக்க முடிவெடுத்ததைப் போல், இலங்கை முதலாளித்துவமும் வர்க்கப் போரை தொடுக்க முடிவெடுத்துள்ளது. டீசைட் தொழிலாளர்களின் போராட்டம் சர்வதேச தொழிலாளர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என நான் கருதுகிறேன்.” வேட்டையாடப்பட்ட தொழிலாளர்கள் மீதான தண்டனைகளை கைவிட நெருக்குவதற்கான பிரச்சாரத்தை கட்டியெழுப்ப உதவுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சோ...யின் அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா, டீசைட் தொழிலாளர்களின் போராட்டம் நேரடியாக பெருந்தோட்டக் கம்பனிகளின் திட்டங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதனாலேயே அங்கு பழிவாங்கல்களும் மிரட்டல்களும் மேற்கொள்ளப்படுகின்றன என விளக்கினார். அவர்கள் உலகச் சந்தையில் ஏனைய தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளுடன் போட்டியிடுவதற்காக வேலைச் சுமையை கூட்டி உற்பத்திச் செலவை குறைப்பதற்கு முயற்சிக்கின்றனர், என அவர் கூறினார்.

வெவ்வேறு வடிவங்களில் உலகம் பூராவும் தொழிலாளர்கள் இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். இந்த நிலைமை கிரேக்கத்தில் கூர்மையாக வெளிப்பட்டுள்ளது. உலக நிதிய நெருக்கடியின் சுமைகளைத் திணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியமும், ஐரோப்பிய மத்திய வங்கியும் மற்றும் சர்வதேச நாணய நிதியமும் கிரேக்க தொழிலாளர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் நலன்புரிச் சேவைகளை வெட்டிக் குறைக்கக் கோருகின்றன.”

சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (பி.எல்.பீ..) முன்னெடுத்த போராட்டத்தை தேவராஜா நினைவுபடுத்தினார். “1940களில் சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கம் மற்றும் தோட்ட உரிமையாளர்களுக்கும் எதிராக தொழிலாளர்களின் ஜனநயாக உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்தில், கண்டியில் முல்லோயா தோட்டத்தில் மற்றும் பதுளையில் வேவெஸ்ஸ தோட்டத்திலும் தொழிலாளர்கள் முன்னணியில் நின்றனர். சோ... இந்த படிப்பினைகளின் அடிப்படையில் ஒரு சோசலிச வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்ப போராடுகின்றது.

சோ... அரசியல் குழு உறுப்பினரான பாணி விஜேசிறிவர்தன இறுதியாக உரையாற்றினார். தொழிற்சங்கங்கள், நிர்வாகங்கள், பொலிஸ் மற்றும் நீதித்துறையும் எவ்வாறு தொழிலாளர்களுக்கு எதிராக கூட்டாக செயற்படுகின்றன என்பதை அவரது உரை விளக்கியது. “முழு முதலாளித்துவ ஸ்தாபமும் இந்த தொழிலாளர்களை பழிவாங்குவதற்கு ஒரு ஒன்றிணைந்த பிரிவாக நின்று செயற்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய அரசாங்கம் இந்த தாக்குதல்களை ஆதரித்தது.

டீசைட் தோட்டத்தில் நடந்தது என்னவெனில், தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினர் மீதும் அரசாங்கமும் தனியார் கம்பனிகளும் முன்னெடுக்கவுள்ள பரந்த தாக்குதலுக்கான ஒத்திகையே ஆகும். தனியார் மற்றும் அரச துறைகளிலான தொழிலாளர்களும் இதே உற்பத்தியை அதிகரிக்கும் இடையறா கோரிக்கைகளை எதிர்கொள்ளும் அதே வேளை, வீழ்ச்சியுறும் இலாபத்தை தூக்கி நிறுத்துவதன் பேரில் அவர்களது தொழில் மற்றும் ஊதியங்கள் வெட்டிக் குறைக்கப்படுகின்றன.”

சோ... மற்றும் .வை.எஸ்.எஸ.. அமைப்பும் தொழில், நிலைமைகள் மற்றும் வேலை நிறுத்தம் செய்வதற்கான உரிமை உட்பட அடிப்படை ஜனநயாக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு எதிர் தாக்குதலின் ஆரம்ப நடவடிக்கையாக பழிவாங்கப்பட்ட டீசைட் தொழிலாளர்களைப் பாதுகாக்க முன்வருமாறு அழைப்பு விடுக்கின்றன.”

அத்தகைய ஒரு பிரச்சாரம் சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தையும் உலகம் பூராவும் மற்றும் தெற்காசியாவிலும் சோசலிசக் குடியரசு ஒன்றியங்களை ஸ்தாபிப்பதன் பாகமாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகப் போராடுவதையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். நாம் இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகிக்க அவசியமான வெகுஜன சோசலிச புரட்சிகர கட்சியாக சோ...யை கட்டியெழுப்ப இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.”

ஏகாதிபத்திய போர் தயாரிப்புகளுக்கும் சமூக எதிர்ப் புரட்சிக்கும் எதிராக ஒரு சர்வதேச தொழிலாளர் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சோ... போட்டியிடுகிறது என விஜேசிறிவர்தன தெரிவித்தார். இந்தப் பிரச்சாரத்திற்கு தொழிலாளர்கள் ஆதரவளிக்க வேண்டும், இந்த வேலைத் திட்டத்துடனான உடன்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் மற்றும் சோ...யில் இணைந்துகொள்ள வேண்டும், என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

1,000 ரூபா நாள் சம்பளம் கோரி .தொ.கா. அழைத்துள்ளமெதுவாக வேலை செய்யும் போராட்டம் பற்றிய சோ...யின் கருத்தப் பற்றி ஒரு தொழிலாளி கேட்டார்.

.தொ.கா.வின் பக்கத்தில் இந்த மட்டுப்படுத்தப்பட்ட போராட்ட நடவடிக்கையானது மோசமடைந்து வரும் நிலைமைகளுக்கு எதிராக பெருந்தோட்டத் தொழிலாளர் மத்தியில் வளர்ச்சியடைந்து வரும் அமைதியின்மையை தணிப்பதற்காக முன்னெடுக்கப்படுவதாகும். முதலாளிமார் மட்டுமன்றி தொழிற்சங்க அதிகாரத்துவங்களே கூட இந்த தீவிரமயமாதல் பற்றி திகைப்படைந்துள்ளதோடு சத்தியாகிரகப் போராட்டம் போன்ற நடவடிக்கைகள் பக்கம் அவற்றை திசைதிருப்பிவிட முயற்சிக்கின்றன. அதே சமயம், .தொ.கா. தனது கவிழ்ந்து போன ஆதரவை தூக்கி நிறுத்தவும் தொழிலாளர்களின் இந்த அமைதியின்மையை சுரண்டிக்கொள்ள முயற்சிக்கின்றது.

இந்த மெதுவாக வேலை செய்யும் பிரச்சாரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோமா இல்லையா? என இன்னொரு தொழிலாளி கேட்டார்.

நாம் இந்த நடவடிக்கையில் விமர்சனத்துடன் பங்கேற்க வேண்டும். நாம் .தொ.கா. அல்லது ஏனைய சங்கங்களுக்கு ஆதரவளிக்கும் சமிக்ஞையை காட்டக்கூடாது. ஆனால் சம்பளம் மற்றும் சிறந்த நிலைமைகளுக்கான தமது கோரிக்கையை வெற்றிகொள்ள தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் தங்கியிருக்காமல் தமது சொந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் காட்டிக்கொடுப்பதிலும் முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் கம்பனிகளுடன் இரகசியமாக செயற்படுவதிலும் சாதனை படைத்துள்ளனர்,” என விஜேசிறிவர்தன கூறினார்.

தொழிலாளர்கள் ஒவ்வொரு தோட்டத்திலும் தமது சொந்த நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும். போராட்டத்தை ஆர்ப்பாட்டத்துக்குள் மட்டுப்படுத்தாமல் வேலை நிறுத்தம் வரை விரிவாக்குவதோடு இலங்கையிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களின் ஆதரவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். மாதச் சம்பளம், வீடு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளைக் கோர வேண்டும்.” எவ்வாறெனினும், “இந்தக் கோரிக்கைகளுக்காக போராடுவது என்பது, முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தின் பாகமாகும், அது சோசலிச வேலைத் திட்டத்தை அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும்.”