சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான் 

Japanese government pushes militarist legislation amid mass protests

ஜப்பானிய அரசாங்கம் பாரிய போராட்டங்களுக்கு இடையே இராணுவவாத சட்டமசோதாவை நிறைவேற்றுகின்றது

By Oscar Grenfell
17 July 2015

Use this version to printSend feedback

பிரதம மந்திரி ஷின்ஜோ அபே இன் அரசாங்கம் நேற்று ஜப்பானிய கீழ்சபை மூலமாக பலமான சட்டங்களை நிறைவேற்றியது. அந்த சட்டமசோதா அதன் இராணுவ கூட்டாளிகளுடன், அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவுடனான, “கூட்டு பாதுகாப்புக்கான" தனிவகைமுறைகளின் கீழ் ஜப்பானிய துருப்புக்களை வெளிநாடுகளில் நிலைநிறுத்துவதற்கு அனுமதிக்கிறது.

இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய அந்நாட்டின் பெயரளவிலான அமைதிவாத அரசியலமைப்பிற்கு "மறுவிளக்கம்" அளித்து ஜப்பானிய இராணுவவாதத்தை புத்துயிர்ப்பு பெற செய்வதற்காக, டிசம்பர் 2013 இல் பதவிக்கு வந்தபோது தொடங்கிய அபே அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் இந்த சட்டங்களின் நிறைவேற்றம், ஒரு தீவிரப்பாட்டைக் குறிக்கிறது. இது, ஜப்பானின் சொந்த கடற்பகுதிகளுக்கு அப்பாலும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் அது பங்கெடுப்பதற்கு வழிவகைகளை வழங்கும் வகையில், ஏப்ரலில் அபே மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு இடையே கையெழுத்தான உடன்படிக்கையினை நிறைவுபடுத்துகிறது.

பல மாதங்களாக நாடாளுமன்ற விவாதத்திற்குட்பட்டு இருந்த இந்த சட்டமசோதாக்கள், புதனன்று கீழ்சபையின் பாதுகாப்புத்துறை குழுவிற்கு கொண்டு வரப்பட்டன. எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அபே இன் சட்டமசோதாவிற்கு எதிராக சுலோக அட்டைகளை ஏந்தியும் மற்றும் வாக்கெடுப்பு நடைமுறைகளை தடுக்க முயன்றதன் மூலமாகவும் அதன் மீதான வாக்கெடுப்பைத் தடுக்க முயன்றனர். அந்த சட்டங்கள் குழுவில் நிறைவேற்றப்பட்ட போது, அவர்கள் வியாழனன்று கீழ்சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

கருத்துக்கணிப்புகளின்படி, அந்த சட்டங்களுக்கு பொதுமக்களின் எதிர்ப்பு 80 சதவீத அளவிற்கு உயர்வாக உள்ளது. புதனன்று ஏறத்தாழ 100,000 போராட்டகாரர்கள் டோக்கியோவில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு (Diet) வெளியே திரண்டனர், அதேவேளையில் பல ஆயிரக் கணக்கானவர்கள் "போர் சட்டமசோதாக்களைக் கைவிடுக", “அபே இன் மூர்க்கத்தனத்தை நிறுத்துக" என்பது போன்ற சுலோக அட்டைகளை ஏந்தி நின்று, வியாழனன்று மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த சட்டமசோதாக்கள் இப்போது மேல்சபையில் கொண்டு செல்லப்படும். அங்கே அபேயின் தாராளவாத ஜனநாயக கட்சியும் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் அறுதி பெரும்பான்மை கொண்டுள்ளதால், அங்கே அது நிறைவேறிவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது. கீழ்சபையின் எந்தவொரு ஆட்சேபனைகளும் பாதிப்பை ஏற்படுத்தாது.

இருப்பினும் அச்சட்டங்கள் சட்டரீதியிலான சவால்களை முகங்கொடுக்கக்கூடும். ஜூன் 4 அன்று, ஜப்பான் நாடாளுமன்ற துணைக்குழுவின் முன் விளக்கமளித்த மூன்று அரசியலமைப்பு வல்லுனர்கள், அந்த சட்டங்கள் அரசியலமைப்புக்கு புறம்பானவை என்று தெரிவித்தனர். நியூ யோர்க் டைம்ஸ் செய்தியின்படி, ஜப்பானிய வல்லுனர்களில் 90 சதவீதத்தினருக்கு அதிகமானவர்கள், சாசனத்தின் அமைதிவாத ஷரத்துக்கள் என்று கூறப்படுவதை அந்த சட்டங்கள் மீறுவதாக காண்கின்றனர் என்று கருத்துக்கணிப்புகள் குறிப்பிடுகின்றன.

அந்த சட்டமசோதாவிற்கு எதிரான பாரிய எதிர்ப்பு, அபே அரசாங்கத்திற்கு ஒரு நெருக்கடியை தூண்டிவிட அச்சுறுத்துகிறது. இது, ஜூன் 1960 இல் அபேயின் பாட்டனார் Nobusuke Kishi அமெரிக்க-ஜப்பான் உடன்படிக்கையில் கையெழுத்திட்டதற்கு எதிரான பாரிய எதிர்ப்பின் முன்னால் அவர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டபோது வந்த விமர்சனங்களுக்கு சமாந்தரமான எண்ணிக்கையில் விமர்சனங்களைக் கொண்டு வந்துள்ளன.

இரண்டாம் உலக போரின் பேரழிவுகளுக்கு இட்டுச் சென்ற அதேமாதிரியான ஏகாதிபத்திய கொள்கைகளை பகிரங்கமாக பின்தொடர்வதன் உள்நாட்டு மற்றும் சர்வதேச விளைவுகளைக் குறித்து உத்தியோகபூர்வ எதிர்கட்சிகள் பெரிதும் கவலைக் கொண்டுள்ளன.

பிரதான எதிர்கட்சியான ஜப்பான் ஜனநாயகக் கட்சியின் (DPJ) தலைவர் Katsuya Okada பாரியளவிலான போர்-எதிர்ப்புணர்வின் அச்சத்தை தொகுத்தளித்தார். வியாழக்கிழமை வாக்கெடுப்பை புறக்கணிப்பதற்கு முன்னதாக அவர் குறிப்பிடுகையில், “போதியளவு பொதுவான புரிதலோ அல்லது விவாதமோ இல்லாமல் 70 ஆண்டுகளாக அரசுகளால் கொண்டு வரப்பட்ட ஓர் அரசியலமைப்பு பொருள்விளக்கத்தை ஒதுக்கிவிடுவதென்பது ஒரு மிகப்பெரிய பிழையாகும்,” என்றார்.

ஆசிய-பசிபிக்கில் அதன் நலன்களை அதிக ஆக்ரோஷத்தோடு வலியுறுத்துவதற்கு ஜப்பானிய ஆளும் உயரடுக்கு தீர்மானகரமாக இருப்பதையே அபேயின் கொள்கைகள் பிரதிபலிக்கின்றன. அவை அப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" ஆதரவுடன் மற்றும் சீனாவிற்கு எதிரான ஓர் இராணுவ கட்டமைப்பு ஆகியவற்றின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வாஷிங்டன், அந்த "முன்னெடுப்பின்" பாகமாக, ஜப்பானிய இராணுவவாதத்தின் புத்துயிரூட்டலுக்கு ஊக்கம் அளித்து வருகிறது.

எதிர்கட்சிகள் உட்பட ஒட்டுமொத்த ஜப்பானிய அரசியல் ஸ்தாபகமும் இந்த திட்டத்தை ஆதரிப்பதில் உடந்தையாய் இருந்துள்ளது. இதற்கு முந்தைய DPJ அரசாங்கம் 2012 இல் சர்ச்சைக்குரிய சென்காயு/தியாயு தீவுகளை "தேசியமயப்படுத்தியதன்" மூலமாக வேண்டுமென்ற சீனாவுடன் பதட்டங்களைக் கிளறியது.

அவரது அரசாங்கத்தின் சட்டமசோதா பிரதானமாக சீனாவிற்கு எதிராக திருப்பிவிடப்பட்டது என்பதை கிட்டத்தட்ட முழுமையாக ஒப்புக்கொண்டார். வியாழனன்று வாக்கெடுப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜப்பானைச் சுற்றியுள்ள பாதுகாப்பு நிலைமைகள் கடுமையாகி வருகின்றனஇந்த சட்டமசோதாக்கள் ஜப்பானிய மக்களின் வாழ்க்கையை பாதுகாக்கவும் மற்றும் போரைத் தடுக்கவும் அத்தியாவசியமாகும்,” என்றார்.

ஏப்ரலில் அபே வாஷிங்டனுக்கு விஜயம் செய்து வந்த பின்னரில் இருந்து, அப்போது தான் அவ்விரு நாடுகளுக்கும் இடையே புதிய இராணுவ உடன்படிக்கை கையெழுத்தான நிலையில், அமெரிக்கா மற்றும் கூட்டாளிகளின் ஆத்திரமூட்டல்களுக்குள் ஜப்பானின் ஒருங்கிணைவு அதிகரித்துள்ளது.

ஜூனில் ஜி-7 உச்சிமாநாட்டில், அந்த பேச்சுவார்த்தையின் கூட்டறிக்கையில் ஒரு ஷரத்தை நுழைப்பதில் அபே ஒரு மத்திய பாத்திரம் வகித்தார். அது மறைமுகமாக தென்சீனக் கடலில் சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக திரும்பி இருந்தது. அதற்கு முந்தைய மாதம், அமெரிக்காவும், பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட அதன் பிராந்திய கூட்டாளிகள் அந்த கடலில் நீண்டகாலமாக இருந்துவரும் சர்ச்சைகள் மீது சீனாவிற்கு எதிரான ஆத்திரமூட்டல்களை நடத்தினர். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டுமே சீனா உரிமைகோரிய கடல்பகுதிக்குள் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை நிலைநிறுத்த பரிசீலித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை ஓர் இராணுவ மோதலைத் தூண்டிவிடக்கூடியதாகும்.

ஜூனில், பிலிப்பைன்ஸ் இராணுவத்துடன் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஜப்பானிய உளவு விமானங்கள் தென்சீனக் கடலில் சீனா-உரிமைகோரிய கடல்பகுதிக்கு அருகில் பறந்தன. இது இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அமெரிக்காவின் அதேமாதிரியான நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் ஓர் ஆத்திரமூட்டலாக இருந்தது.

நேற்று ஜப்பானிய உயர்மட்ட இராணுவ தளபதி அட்மிரல் Katsutoshi Kawano வாஷிங்டனுக்கான ஒரு விஜயத்தின் போது செய்தியாளர்களிடம் கூறுகையில், தென் சீனக் கடலில் ஜப்பானிய ரோந்து நடவடிக்கைகள் மற்றும் நீர்மூழ்கி-கப்பல் தடுப்பு நடவடிக்கைகள் மீது அங்கே "பேச்சுவார்த்தைகள்" நடந்து வருவதாக தெரிவித்தார். ஒபாமா நிர்வாகத்தின் உரை குறிப்புகளை எதிரொலிக்கும் விதமாக, அவர் அப்பிராந்தியத்தில் ஒரு விரிவாக்கும் அச்சுறுத்தலாக சீனாவை சித்தரிக்க முனைந்தார்.

ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் Talisman Saber இராணுவ ஒத்திகையில் முதல்முறையாக ஜப்பானிய படைகளும் இம்மாதம் பங்கெடுக்கின்றன. வடக்கு ஆஸ்திரேலியாவில் நடத்தப்படுகின்ற சுமார் 33,000 ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க இராணுவ சிப்பாய்கள் உள்ளடங்கிய இந்த போர் பயிற்சிகள், சீனாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான ஒரு போர் ஒத்திகையாகும்.

அபேயின் மந்திரிசபை கிழக்கு சீனக் கடலில் ஒரு புதிய சீன எரிவாயு வயல் அபிவிருத்தியைக் கண்டித்து வருவதுடன் சேர்ந்து, கடந்த இரண்டு வாரங்களாக, ஜப்பான் கிழக்கு சீனக் கடலிலும் சீனாவுடன் பதட்டங்களைத் தீவிரப்படுத்தி உள்ளது.

அசோசியெடெட் பிரஸ் செய்தியின்படி, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பெ அபே அரசாங்கத்தின் சட்டமசோதா குறித்து கருத்துரைக்க வில்லை, ஆனால் ஜப்பானிய இராணுவவாதத்தின் புத்துயிரூட்டலுக்கு வாஷிங்டனின் ஆதரவை அடிக்கோடிட்டார். “கூட்டணியைப் பலப்படுத்துவதற்கும் மற்றும் அப்பிராந்தியத்திலும் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் அதிக செயலூக்கத்துடன் பாத்திரம் வகிக்க நடந்துவரும் ஜப்பானின் முயற்சிகளை" அமெரிக்கா வரவேற்பதாக கிர்பெ தெரிவித்தார்.

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் Hua Chunying நேற்றைய சட்டங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். “முற்றிலும் தனது பாதுகாப்பை நோக்கமாக கொண்ட அதனது கொள்கையை ஜப்பான் கைவிடப்போகிறதா என்று கேட்பது முற்றிலும் நியாயமானதே,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இரண்டாம் உலக போர் முடிவில் சீனாவிலிருந்து ஜப்பானிய படைகள் வெளியேறிய 70வது நினைவாண்டை குறிப்பிட்ட Hua கூறுகையில், “ஜப்பானிய தரப்பு வரலாற்றிலிருந்து கடுமையான பாடங்களை எடுக்க வேண்டுமெனமற்றும் சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களுக்கு ஆபத்து விளைவிக்கவோ அல்லது பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரப்பாட்டைக் குலைக்கவோ வேண்டாமென நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்,” என்றார்.