சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Pluto and Earth

புளூட்டோவும் பூமியும்

Patrick Martin
16 July 2015

Use this version to printSend feedback

விண்கலம் நியூ ஹோரிஜன்ஸ் (New Horizons) புளூட்டோவை சுற்றி பறக்கத் தொடங்கியிருப்பது ஒரு பிரமாண்டமான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப சாதனையாகும். சூரிய மண்டலத்திலேயே பூமியிலிருந்து மிக அதிக தூரத்திலுள்ள அந்த கோளை எட்டுவதற்காக, அந்த விண்கலம் அதன் பயண காலத்தில் மூன்று ஆண்டுகளைக் குறைக்கும் பொருட்டு வியாழன் கிரகத்திலிருந்து (Jupiter) ஈர்ப்புவிசையை உந்துதலைப் பெற்று பயன்படுத்தி, மூன்று பில்லியன் மைல்களுக்கும் அதிகமான தூரம் பயணித்தது.

நியூ ஹோரிஜன்ஸ் விண்கலம் (New Horizons spacecraft) ஒப்பீட்டளவில் மிகச் சிறியதாகும். அது சுமாராக ஒரு பெரிய பியானோ அளவிற்கு இருக்கும். சூரியனிலிருந்து வெகுதூரம் என்பதால், அந்த விண்கலத்திற்கு சூரியசக்தி தகடுகளைக் கொண்டு சக்தியை வழங்க முடியாது. அதற்கு மாறாக, அது 24 இறாத்தல் புளூடோனியம் டைஆக்சைடை (plutonium dioxide) சார்ந்துள்ளது. அது அந்த விண்கலமும் மற்றும் அதன் ஏழு உபகரணங்களும் செயல்படுவதற்காக வெறும் 200 வாட்ஸ் மின்சாரத்தைத் தயாரிக்கிறது, அதிலும் 12 வாட்ஸ் தகவல்களைப் பூமிக்குத் திருப்பி அனுப்புவதற்காக ஒதுக்கப்படுகிறது.

அந்த மிகச்சிறிய கோளின் சிறிய அளவும், மிக அதிக தொலைவும் அந்த திட்டத்திற்குப் பாரியளவில் சிக்கல்களையும், சிரமங்களையும் கொணர்ந்திருந்தன. “வெறும்" ஒன்பதரை ஆண்டுகள் பயணத்தில் நியூ ஹோரிஜன்ஸ் புளூட்டோவை எட்ட வேண்டியிருந்த நிலையில், அந்த வேகத்தில் நகரும் ஒரு விண்கலத்தை ஏற்றுக்கொள்வதற்கு புளூட்டோவின் ஈர்ப்புவிசையோ மிகவும் பலவீனமானதாக உள்ளது.

அதன் காரணமாக, மணிக்கு 30,800 மைல்கள் வேகத்தில் அதை சுற்றி பறக்கவிடப்பட்டது, மிக வேகமாக நியூ ஹோரிஜன்ஸ் புளூட்டோவிற்கு மேலே ஒரு சில நிமிடத்திற்கான இடைவெளியில் அதன் மிக குறைந்த தூரத்தில் நிறுத்தப்பட்டது. தகவல் சேகரிக்கும் நேரத்தை அதிகரிப்பதற்காக, அந்த விண்கலம் 22 மணி நேரம் "இருட்டுக்குள்" சென்ற போது, அது நாசாவின் தரைக்கட்டுப்பாட்டு அலுவலகத்துடன் தொடர்புகளை இழந்திருந்தது, இருப்பினும் அதன் உபகரணங்கள் புளூட்டோவையும் மற்றும் அதன் ஐந்து துணைகோள்களையும் படமெடுத்தன.

செவ்வாயன்று இரவு கிழக்கத்திய நேரம் (Eastern Time) இரவு 8:52க்கு அந்த விண்கலம் மீண்டும் பூமியோடு தொடர்பை ஏற்படுத்திய போது, மேரிலாந்தின் லாரெல் இல் உள்ள Applied Physics Laboratory இல் மட்டுமல்ல, உலகெங்கிலும் தொலைக்காட்சியிலோ அல்லது இணையம் மூலமாகவோ பார்த்துக்கொண்டிருந்த மில்லியன் கணக்கான மக்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

புளூட்டோ திட்டத்திற்கு மக்கள் காட்டிய ஆர்வம், ஆழ்ந்த பொதுவான உணர்வுகளின் ஒரு வெளிப்பாடாகும்: அதாவது, தெரிந்து கொள்வதற்கான, கண்டுபிடிப்பதற்கான, விஞ்ஞானம் மற்றும் மனித நாகரீகத்தின் அபிவிருத்தியில் உறுதியான முற்போக்கினை காண்பதற்கான ஒரு விருப்பமாகும். அந்த விண்வெளி ஆய்வகத்தின் இன்ஸ்டாகிராமைப் (Instagram) பின்தொடர்பவர்களாக 3.6 மில்லியன் மக்கள் பதிவு செய்துள்ள நிலையில், அதில் நாசா புளூட்டோவின் முதல் வண்ண புகைப்படத்தைப் பிரசுரித்ததும் நூறு ஆயிரக் கணக்கானவர்கள் அவர்களது "விருப்பத்தை" (like) அதில் பதிவு செய்தார்கள்.

ஒருசமயத்தில் கடைக்கோடி கிரகமாக கருதப்பட்ட புளூட்டோ இப்போது க்யூபெர் சுற்றுவட்டப்பாதையில் (Kuiper Belt) உள்ள மிகப்பெரிய கோளாக அறியப்படுகிறது. க்யூபெர் சுற்றுவட்டப்பாதை என்பது சூரியனையும் அதன் எட்டு கிரகங்களையும் சுற்றிவரும் ஆயிரக்கணக்கான சிறிய பனிக்கட்டி பாறை உலகங்களைக் கொண்ட ஒரு பரந்த பிரதேசமாகும். புளூட்டோ மற்றும் அதுபோன்ற கோள்களைக் குறித்த ஆய்வு சூரிய மண்டலம் உருவான ஆரம்ப காலத்தை பற்றி புரிந்துகொள்வதில் இன்னொரு பரிமாணத்தை வழங்கும்.

முதல் விண்வெளி செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டு வெறும் ஒரு அரை நூற்றாண்டிலேயே, மனிதர்களால் உருவாக்கப்பட்ட விண்னூர்திகள் இப்போது சூரிய மண்டலத்தின் ஒவ்வொரு கிரகத்தையும் எட்டியுள்ளன. இந்த ஆண்டில் மட்டும், விண்வெளி ஆய்வுகள் புதன் கிரகம் (Mercury), செவ்வாய் கிரகம் (Mars), விண்கற்கள் மற்றும் வால்நட்சத்திரங்கள், இப்போது புளூட்டோ என இவற்றை ஆய்வு செய்திருக்கின்றன.

இத்தகைய குறிப்பிடத்தக்க விஞ்ஞான சாதனைகள், நமது சொந்த கிரகத்தில் நிலவும் கையாள முடியாததாக தெரியும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியோடு கூர்மையாக முரண்பட்டு நிற்கின்றன. பலர் நியாயமான இந்த கேள்வியைக் கேட்கக்கூடும்: பூமியில் வாழும் மனிதர்களுக்கு போதிய உணவு, உடை, உறைவிடம் மற்றும் கண்ணியமான மருத்துவ கவனிப்புகளை வழங்க முடியாத நமது சமூகம், எவ்வாறு சூரிய மண்டலத்திலிருந்து தொலைதூரத்தில் உள்ள கோளை அடைந்து, புகைப்படம் எடுக்க முடிந்தது?

அதற்கான ஒரு நேரடியான பதில்: புளூட்டோ திட்டம் சந்தை கோட்பாடுகளின் அடிப்படையில் இல்லை என்பதே ஆகும். அங்கே எந்த பங்குதாரர்களும் கிடையாது. ரேடியோ ஒலிபரப்பியின் மீதோ, அல்லது முன்னோக்கி உந்திச்செல்லும் அமைப்புமுறை (propulsion system) மீதோ, அல்லது புளூட்டோவின் துணைகோள்களைப் படமெடுக்கும் உபகரணங்கள் அல்லது அதன் மேல்பகுதியை பகுத்தாராயும் கருவிகள் மீதோ யாரும் இலாபங்களைப் பங்குபோடவில்லை. 2008 நிதியியல் சந்தைகளை பொறிய செய்த வோல் ஸ்ட்ரீட் குற்றவாளிகளைப் போல, அந்த திட்டம் தோல்வி அடைவதன் மீது யாரும் ஓர் ஊக பந்தயத்தில் ஈடுபடவில்லை.

புளூட்டோ திட்டம் விஞ்ஞானத்தின் சக்தியை எடுத்துக்காட்டுகிறது. ஆனால் முதலாளித்துவம் அனைத்திற்கும் மேலாக அமெரிக்காதிட்டமிட்டரீதியில் பொதுக்கல்வியை வெட்டுகிறது, ஊடகங்களைக் கொண்டு மக்களின் புரிதலைத் தரந்தாழ்த்துகிறது, மத பிற்போக்குத்தனத்தின் ஒவ்வொரு வடிவத்தையும் ஊக்குவிக்கிறது. நவீன தொழில்நுட்பத்தால் நியூ ஹோரிஜன்ஸ் போன்ற மலைப்பூட்டும் முன்னேற்றங்களை உண்டாக்க முடியும் என்றாலும், பெருநிறுவன அமெரிக்காவின் பிடியில் அது, நிதியியல் பிரபுத்துவம் மற்றும் உலகளாவிய இராணுவவாதத்தின் சேவைக்காகத் திருப்பிவிடப்படுகின்றன.

இன்னும் அதிகமானவை சாத்தியமாகும். ஒட்டுமொத்த நியூ ஹோரிஜன்ஸ் திட்டத்தின் செலவு 700 மில்லியன் டாலர் தான். இது தனியொரு stealth குண்டுவீச்சு விமானத்தின் விலையை விட குறைவாகும் அல்லது ஒரு குறிப்பிடத்தக்க தனியார் முதலீட்டு நிதியத்தின் பைகளில் ஒரு ஆண்டில் என்ன நிறைகிறதோ அதை விட குறைவான தொகை தான். அமெரிக்க அரசாங்கம், விண்வெளி வரவு-செலவு திட்டக்கணக்கிலேயே கூட, உண்மையான ஒருங்கிணைந்த எல்லா விஞ்ஞான முயற்சிகளுக்கும் நிதி வழங்குவதை விட, உளவு செயற்கோள்கள் முதற்கொண்டு விண்வெளி போர்க்கள முறைகள் குறித்த ஆராய்ச்சி வரையில், மிக அதிகளவில் இராணுவம்-சம்பந்தமான நடவடிக்கைகளுக்குத் தான் செலவிடுகிறது.   

நியூ ஹோரிஜன்ஸ் திட்டத்தில் நூற்று கணக்கான விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுனர்களும் ஒன்றுதிரண்டனர், அவர்கள் திட்டமிடல், ஆயத்தப்படுத்தல் மற்றும் புளூட்டோ விஜயத்தைச் செயல்படுத்தல் ஆகியவற்றிற்காக அவர்களது வாழ்வின் கடந்த பத்து ஆண்டுகளை அர்ப்பணித்தனர், சிலர் அதைவிட அதிகமாக கூட அர்பணித்திருந்தனர். இந்த நூறு ஆயிரக் கணக்கானவர்களோடு ஒப்பிடுகையில், இதேயளவிற்கு சமாந்தரமாக திறமை படைத்த உயர் கல்வியாளர்களோ, தனியார் முதலீட்டு நிதியங்கள், முதலீட்டு வங்கிகள், NSA போன்ற உளவுத்துறை அமைப்புகள் மற்றும் இராணுவத்தின் சேவைகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெற்றிகரமாக அதை சுற்றிவர செய்ததும், ஜனாதிபதி ஒபாமாவிலிருந்து ஆரம்பித்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பேச்சாளர்கள் ஒரு தேசியவாத பங்குரிமைக்கோரல்களுக்காக, “அமெரிக்க மேதைமை" என்று கூறப்படுவதை உயர்த்திக்காட்டும் முயற்சிகளில் ஈடுபட்டனர். நாசா செய்தி தொடர்பாளர் டேவிட் வீவர் பெருமை பீற்றுகையில், “இந்த திட்டத்தின் மூலமாக நாம் நமது சூரிய மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு கிரகத்தையும் மற்றும் துணை கிரகத்தையும் பார்வையிட்டுள்ளோம், இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும் இதற்கு வேறெந்த நாடும் ஈடாகாது,” என்றார்.

இத்தகைய தேசியவெறி அருவருப்பாகவும், பைத்தியக்காரத்தனமாகவும் உள்ளது. விஞ்ஞானம் ஒரு சர்வதேச கூட்டு முயற்சியாகும். “அமெரிக்க" விண்வெளி திட்டத்தின் வெற்றி என்பது ஒவ்வொரு கண்டத்திலும் பல தலைமுறைகளாக செய்யப்பட்ட விஞ்ஞான வேலைகளைச் சார்ந்துள்ளது. இந்த பெரும்-கூச்சல்களுக்கு இடையிலும், அனைத்திற்கும் மேலாக, இந்த அமெரிக்க விண்வெளி திட்டம் அதன் அடியிலிருக்கும் அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடி மற்றும் வீழ்ச்சியைத் தான் எடுத்துக்காட்டுகிறது.

நியூ ஹோரிஜன்ஸ் விண்கலத்திற்கு முன்னதாக, ஓர் அரை டஜன் ஏனைய புளூட்டோ திட்டங்கள் கைவிடப்பட்டன ஏனென்றால் அவை வெளிப்படையாக இராணுவ-தொழில்நுட்பத்திற்கு எந்த பயனும் அளிக்காது என்பதால் ஆகும். நியூ ஹோரிஜன்ஸ் திட்டத்திற்கே கூட குறைநிதியே வழங்கப்பட்டது, மேலும் பல தசாப்தங்களுக்கு இல்லையென்றாலும், பல ஆண்டுகளுக்கு அந்த சந்தர்ப்பம் வேறெந்த விண்கலத்திற்கும் கிடைக்காது என்கிற போதும், இப்போதும் கூட, புளூட்டோவை அடுத்து க்யூபெர் சுற்றுவட்டப்பாதையில் இரண்டாங்கட்ட திட்டங்களைச் செயல்படுத்த தேவையான ஆதாரவளங்களுக்கு நாசா உத்திரவாதம் அளிக்கவில்லை. இதற்கிடையே, மனிதர்களைக் கொண்ட விண்வெளி திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பேணுவதற்கே கூட ரஷ்ய ஏவுகளங்களைச் சார்ந்து, முடங்கி போய் உள்ளது.

விஞ்ஞான சாதனை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான அளப்பரிய ஆற்றல், தொடர்ச்சியாக ஏகாதிபத்திய படுகொலை, தேசிய அரசுகளுக்கு இடையிலான மோதல் மற்றும் இலாபகர கொள்கைக்கு மனிதயின நடவடிக்கைகளை அடிபணிய செய்தல் ஆகியவற்றால் தவறான திசையில் திருப்பிவிடப்படுகின்றன. போர் மற்றும் சமத்துவமின்மை, முதலாளித்துவ அமைப்புமுறையோடு சேர்ந்து இல்லாதொழிக்கப்பட்டால், விண்வெளியிலும் பூமியிலும் இரண்டிலும், எவ்வளவோ அதிகமாக சாதிக்கலாம், சாதிக்க முடியும்!