சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

German parliament supports attacks on Greek workers

ஜேர்மன் நாடாளுமன்றம் கிரேக்க தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களை ஆதரிக்கிறது

Peter Schwarz
18 July 2015

Use this version to printSend feedback

அரசியல்ரீதியில், நாங்கள் இப்பகுதியில் சமாதானத்தை பாதுகாக்கப்பதற்கு மட்டுமே ஆர்வம் கொண்டுள்ளோம்; பொருளாதாரரீதியில், பொது நலனுக்கான உற்பத்தி பண்டங்களை வழங்குகின் மற்றும் உற்பத்தி பரிவர்த்தனைகளை மீண்டும் மீட்டுயிர்ப்பிக்கின்ற ஓர் ஒழுங்கமைப்பை ஸ்தாபிப்பதற்கும் மட்டுமே ஆர்வங்கொண்டுள்ளோம்வென்றடக்கப்பட்ட மகிழ்ச்சியற்ற கிரேக்க தேசத்தைக் குறித்து நாங்கள் உண்மையாக அனுதாபம் கொள்கிறோம். அது அதன் ஏமாற்றுத்தனமான தலைமை தட்டிற்கு பலிக்கடாவாகிவிட்டது.”

இந்த வார்த்தைகள், கிரீஸ் மீது திணிக்கப்பட உள்ள புதிய சிக்கன நடவடிக்கைகளை நேற்று நாடாளுமன்றத்தில் ஆதரித்து பேசிய ஜேர்மன் நிதி மந்திரி வொல்ஃப்காங் சொய்பிளவிடமிருந்தோ அல்லது சான்சிலர் அங்கேலா மேர்க்கெலிடமிருந்தோ வரவில்லை, மாறாக அடோல்ப் ஹிட்லரிடம் இருந்து வந்ததாகும். ஜேர்மன் இராணுவம் கிரீஸை அடிமைப்படுத்திய பின்னர் மே 4, 1941 இல் அவர் நாடாளுமன்றத்தில் இதை அறிவித்தார். ஆனால் இன்றைக்கு அவற்றின் சமாந்தரங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன.

வெள்ளியன்று நாடாளுமன்றத்தில், மேர்க்கெல், சொய்பிள, சமூக ஜனநாயக கட்சி தலைவர் சிக்மார் காப்ரியேல் மற்றும் ஆளும் கட்சிகளின் இன்னும் பல அங்கத்தவர்களும் கிரேக்க மக்களுக்காக அவர்களின் அனுதாபங்களை வெளிப்படுத்தியதுடன், இவ்வாரத்தின் யூரோ மண்டல கூட்டத்தில் கிரீஸ் மீது திணிக்கப்பட்ட மூர்க்கமான நடவடிக்கைகளை தன்னலமில்லா "ஆதரவு" நடவடிக்கைகள் என்று சித்தரித்தனர். மேர்க்கெல் "ஐரோப்பாவின் அளவில்லா ஒற்றுமையுணர்வைக்" குறித்து பேசினார். “நாங்கள் கிரேக்கர்களின் பங்காளிகளே, எதிராளிகள் அல்ல,” என்று காப்ரியேல் அறிவித்தார்.

ஆனால் தேர்தல்கள் மற்றும் வெகுஜன வாக்கெடுப்புகள் போன்ற விடயங்கள் யூரோ மண்டலத்தின் விதிகளை மாற்ற முடியாது என்று அவர்கள் வலியுறுத்தினர். ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய நிதியியல் உயரடுக்கின் நலன்களுக்கு சேவை செய்ய இந்த விதிகள் ஜேர்மனியால் எழுதப்பட்டு வற்புறுத்தப்படுகின்றன. யூரோ விதிகளை மீறி செயல்படுவது என்பது "சட்டப்பூர்வ ஐரோப்பிய சமூகத்தின் முடிவாக இருக்கும்,” என்று மேர்க்கெல் அறிவித்தார்.

உண்மையில், புதிய சிக்கன பொதி கிரீஸின் அழிவை, அதன் மக்களை முற்றிலும் வறுமைப்படுத்துவதை, மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஐரோப்பிய நிதியியல் நலன்களால் அதன் ஆதாரவளங்கள் சூறையாடப்படுவதை அர்த்தப்படுத்துகிறது. மேர்க்கெல், சொய்பிள மற்றும் காப்ரியேல் ஆல் பெருமைபீற்றப்படும் இந்த புதிய "அவசரகால கடன்கள்" இத்தகைய திருட்டுத்தனத்திற்கு நிதிவழங்குவதற்காகவே நீடிக்கப்பட்டுள்ளது, அதேவேளையில் கொள்ளையடிப்பதில் கிரேக்க உயரடுக்கு வர்க்கங்களுக்கும் ஒரு பங்கை அளிக்கிறது, ஆழமாக நிதியியல்ரீதியில் அவர்கள் மீது சார்ந்திருக்கும் ஒரு நாடாக அதை கொண்டு செல்கிறது.

ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு ஆகிய இந்த முக்கூட்டின் கீழ் சிக்கன நடவடிக்கையின் ஐந்து ஆண்டுகள், 1950களுக்குப் பின்னர் ஒரு அபிவிருத்தியடைந்த நாட்டால் அனுபவிக்கப்பட்ட மிக ஆழமான பொருளாதார மந்தநிலைமைக்குள் கிரீஸைக் கொண்டு சென்றுள்ளது. பொருளாதாரம் 2008 இறுதியிலிருந்து தொடர்ச்சியாக, மொத்தம் 25 சதவீத அளவிற்கு சுருங்கி உள்ளது. வருமானங்கள் 40 சதவீத அளவிற்கு சரிந்துள்ளன. மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கும் மேலானவர்கள் உத்தியோகப்பூர்வ வறுமையில் உள்ளனர். ஒரு கால் பங்கினர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர், இளைஞர்களில் பாதி பேர் வேலையற்று உள்ளனர். மில்லியன் கணக்கானவர்கள் இதற்குமேல் மருத்துவ பராமரிப்பை பெற முடியாத நிலையில் உள்ளனர்.

இத்தகைய நிலைமைகளின் கீழ், மதிப்புக்கூட்டு விற்பனை வரியில் உயர்வு, ஓய்வூதியங்களில் குறைப்பு, அரசு சொத்துக்களின் விற்பனை மற்றும் பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் இன் சிரிசா அரசாங்கம் பொறுப்பேற்றுள்ள ஏனைய முறைமைகள் என இவையனைத்தும், பலவீனமான கிரேக்க பொருளாதாரம் படுபாதாளத்திற்குள் வீழும் என்பதையே அர்த்தப்படுத்துகிறது. இராணுவ பலம் மற்றும் பயங்கரத்தின் மூலமாக ஹிட்லர் எதை அடைந்தாரோ, அதையே நிதியியல் அழுத்த வழிவகைகளைக் கொண்டு தற்போதைய ஜேர்மன் அரசாங்கம் அடைய விரும்புகிறது.

ஜேர்மன் நாடாளுமன்றத்தில் இருந்த அண்மித்தளவில் 600 நாடாளுமன்ற நிர்வாகிகளில் மிகப்பெரும் பெரும்பான்மையாக நானூற்றி முப்பத்தி ஒன்பது பேர், இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஜேர்மன் ஆளும் உயரடுக்கு அதன் மிக மோசமான வரலாற்று பாரம்பரியங்களுக்குத் திரும்பி வருகிறது என்ற ஜேர்மன் சோசலிச சமத்துவ கட்சியின் (Partei für Soziale Gleichheit) எச்சரிக்கைகளை அந்த வாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.

ஆக்ரோஷமான வல்லரசு அரசியலுக்கு புத்துயிரூட்டல் ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தினூடாக தயாரிக்கப்பட்டது: அதாவது கூட்டாட்சி ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க் மற்றும் முன்னணி அரசாங்க நிர்வாகிகள் இராணுவ தடைகள் முடிவுக்கு வருவதை அறிவித்தார்கள்; அரசியல் விஞ்ஞானி ஹெர்பிரட் முன்ங்லெர் ஜேர்மனி ஐரோப்பாவின் "எஜமானாக" மாற வேண்டுமென அறிவித்தார்; வரலாற்றாளர் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி நாஜி குற்றங்களைக் குறைத்து காட்டினார்.

வேண்டாம்" என்ற 119 வாக்குகளில் பாதி, கிரீஸை திவால்நிலைமைக்குள் தள்ள விரும்பிய வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளிடமிருந்து வந்தது, மீதி பாதி இடது கட்சியிடமிருந்து வந்தது. பெரும்பான்மை பசுமை கட்சி பிரதிநிதிகள் வாக்கெடுப்பை புறக்கணித்தனர்.

பசுமை கட்சியும் சரி அல்லது இடது கட்சியும் சரி அரசாங்கத்தின் போக்கை கோட்பாட்டுரீதியில் நிராகரிக்கவில்லை. இரண்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தையும் அதன் மீது தங்கியுள்ள முதலாளித்துவ அமைப்புமுறையையும் பாதுகாக்கின்றன. ஆனால் ஜேர்மன் அரசாங்கம் அதன் கரங்களை அதிகமாக பயன்படுத்துகிறதோ என்று அவர்கள் அஞ்சினர். ஐரோப்பாவின் ஒழுங்குமுறைப்படுத்துபவராக இந்தளவிற்கு அப்பட்டமாக நடந்து கொள்வதன் மூலமாக ஜேர்மனி ஏனைய ஐரோப்பிய சக்திகளிடமிருந்து, குறிப்பாக பிரான்ஸ் மற்றும் இத்தாலியிடமிருந்து அந்நியப்படுகிறதே என்பதும், அதைவிட மோசமாக, புரட்சிகர மேலெழுச்சிகளைத் தூண்டிவிடும் ஓர் அபாய போக்கை ஏற்படுத்துகிறதே என்பதுமே அவர்களின் கவலையாக இருந்தது

இடது கட்சியின் எதிர்கால நாடாளுமன்ற தலைவர் டீட்மார் பார்ஷ் மேர்க்கெல் மற்றும் சொய்பிள உடன் கெஞ்சிப்பார்த்தார்: “நீங்கள் ஹெல்முட் கோஹ்ல் மற்றும் ஹெல்முட் ஸ்ச்மிட்த் இன் மரபியத்தை சிதைக்கின்றீர்கள். ஐரோப்பா உண்மையிலேயே ஒருங்கிணைந்து இருக்கும் விதத்தில், இந்த பேரழிவுகரமான பாதையில் செல்வதை நிறுத்துங்கள்,” என்றார்.

அவர் 86 வயதான சமூகவியலாளர் Jürgen Habermas மேற்கோளிட்டு காட்டினார், "ஒரு நற்சிறந்த ஜேர்மனி ஓர் அரை நூற்றாண்டாக திரட்டியிருந்த அரசியல் மூலதனம் அனைத்தையும் ஒரேயிரவில் சூதாட்டத்தில் வைப்பதற்காக" சமூக ஜனநாயகவாதிகளையும் உள்ளடக்கி ஜேர்மன் அரசாங்கத்தை வியாழனன்று இவர் கார்டியன் நாளிதழிலில் சாடியிருந்தார்.

கிரீஸ் மீதான தாக்குதலுக்கு ஓர் உறுதியான ஆதரவாளரும், போலாந்து அரசாங்க தலைவராக இருந்த போது இவரே மூர்க்கமான சமூக வெட்டுக்களை நடைமுறைப்படுத்தி இருந்தவருமான ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தலைவர் டோனால்டு டஸ்க், நேரடியாக புரட்சியைக் குறித்து எச்சரித்தார். “என்னைப் பொறுத்த வரையில், இந்த சூழ்நிலை 1968க்குப் பிந்தைய ஐரோப்பிய காலத்திற்கு சற்றே ஒத்த வகையில் உள்ளது. ஒரு புரட்சிகர மனோபாவமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் பரந்த அமைதியின்மை போன்ற ஏதோவொன்றை நான் உணர்கிறேன். அமைதியின்மை தனிநபர் சார்ந்தில்லாமல் ஒரு சமூக உணர்வின் அனுபவமாக மாறும் போது, அதுவே புரட்சிகளுக்கான தொடக்கமாக ஆகின்றன,” என்று அவர் பைனான்சியல் டைம்ஸிற்குத் தெரிவித்தார்.

புரட்சியைத் தடுப்பதே அதன் மிகவும் முக்கிய பணியாக இடது கட்சி கருதுகிறது. அதனால் தான் நாடாளுமன்ற கன்னை தலைவர் கிரிகோர் கீசி, ஏதென்ஸில் "வேண்டும்" என்று அவர் வாக்களித்திருந்த போதினும், ஜேர்மன் நாடாளுமன்றத்தில் அவர் "வேண்டாம்" என்று வாக்களிக்க போவதாக தெரிவித்தார். அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் முறித்துக் கொண்டுள்ள, அவரே அழைப்புவிடுத்த வெகுஜன வாக்கெடுப்பை நிராகரித்துள்ள, மக்கள் எதிர்ப்புக்கு எதிராக சிக்கன முறைமைகளை நடைமுறைப்படுத்த உறுதிபூண்டுள்ள சிப்ராஸ் உடன் இவ்விதத்தில் அவர் [கீசி] ஐக்கியப்பட்டார்.

கிரேக்க தொழிலாள வர்க்கத்திற்கு சிப்ராஸின் இழிவார்ந்த காட்டிக்கொடுப்பை அங்கீகரிப்பதில், பரம-பழமைவாதியான Die Welt முடிவாக அறிவிக்கையில், “ஐரோப்பாவிற்கு, சிப்ராஸை விட சிறந்த பங்காளி கிடைக்க மாட்டார்,” என்றார்.

கிரேக்க மக்கள்தொகை மீதான மூர்க்கமான சமூக தாக்குதல்கள் ஒட்டுமொத்த ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் மீதான மேலதிக தாக்குதல்களுக்கு ஒரு முன்னறிவித்தலாகும். ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே அதிகரித்துவரும் பதட்டங்களோடு சேர்ந்து, அவை கடந்த நூற்றாண்டின் முதல் பாதியை நினைவூட்டுகின்றன, அப்போதைய இதேபோன்ற நிகழ்வுகள் போர் மற்றும் பாசிசத்தில் போய் முடிந்தன. இவை சுயாதீனமான தொழிலாள வர்க்க தலையீட்டின் அவசியத்தை மிக அவசரமாக முன்னிறுத்துகின்றன.

இன்றியமையாத விதத்தில் ஜேர்மனியில், மீண்டுமொருமுறை ஒட்டுமொத்த நாடுகளின் சமூக கட்டமைப்பை அழிக்க முயல்வதன் மூலமாக, ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் இழிவார்ந்த மரபியத்திற்கு புத்துயிரூட்டி வருகிற அந்த அரசாங்கத்தை தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும். ஜேர்மன் தொழிலாளர்கள் கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் பாதுகாப்பிற்காக வர வேண்டும்.

இடது" கட்சிகள் மற்றும் அமைப்புகள் என்று கூறிக்கொள்பவை, முதலாளித்துவத்தை ஆதரிக்கின்ற இவை, கடந்தகால சமூக அல்லது ஜனநாயக வெற்றிகளைப் பாதுகாக்க இலாயகற்றவை என்ற உண்மையையே சிப்ராஸ் மற்றும் சிரிசாவின் இழிவார்ந்த அடிபணிவு எடுத்துக்காட்டுகின்றது. உள்நாட்டில் உள்ள ஏகாதிபத்தியத்தின் ஐந்தாம் படையான அதாவது அதன் சொந்த முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கான போராட்டம் இல்லாமல் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கான போராட்டம் சாத்தியமே இல்லை என்ற மார்க்சிச கருத்தையே கிரீஸின் சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக போராடுவதற்கு, ஐரோப்பா முழுவதிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளைப் புதிய தொழிலாளர் கட்சிகளாக கட்டமைப்பது மிக அவசிய பணியாகும்.