சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

The confessions of Yanis Varoufakis: The pseudo-left as a social type

யானிஸ் வாரௌஃபாகிஸின் சுயஒப்புதல்கள்: போலி-இடது ஒரு சமூக மாதிரியாக

By Chris Marsden
20 July 2015

Use this version to printSend feedback

யானிஸ் வாரௌஃபாகிஸ் ஜூலை 6 அன்று கிரேக்க நிதி மந்திரி பதவியிலிருந்து இராஜினாமா செய்தார். அவரை பதவிவிலக்க விரும்பிய யூரோ மண்டல தலைவர்களுடன் விரைவான ஒரு மோசடியான உடன்படிக்கையை செய்ய உதவும் என்ற நோக்கத்துடன் பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸின் ஒப்புதலுடன் தான் அவர் அவ்வாறு செய்தார்.

கிரீஸின் சர்வதேச கடன்வழங்குனர்களது கூடுதல் சிக்கன நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகளை ஏற்க "வேண்டாமென", அதற்கு முந்தைய நாள், கிரேக்க வாக்காளர்களில் பெரும்பான்மையாக மூன்றில் இரண்டு பங்கினர் வாக்களித்திருந்தனர். சிப்ராஸ் அந்த தீர்ப்பைக் காட்டிக்கொடுக்கும் உள்நோக்கத்தில் இருந்தார் என்பதுடன், அவ்வாறு அவர் செய்வதற்கு அதன் வழியில் எதுவும் குறுக்கே நிற்பதையும் அவர் விரும்பவில்லை.

வாரௌஃபாகிஸ் அவர் இராஜினாமா செய்த பின்னர், கிரேக்க தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களை ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தயவில் நிறுத்திய விவாதங்களில் அவர் வகித்த பாத்திரம் குறித்து பேட்டி அளித்துள்ளார் மற்றும் எழுதியுள்ளார். யூரோ மண்டல தலைவர்களுடன் சிக்கன திட்டத்தின் மீது ஒரு சமரசத்தை எட்டுவது சாத்தியமில்லை என்பதை வாரௌஃபாகிஸூம் சிப்ராஸூம் இருவருமே அறிந்திருந்தனர் என்பது தற்பெருமைக்கான அவரது அந்த முயற்சிகளிலிருந்து தெரிய வருகிறது. இன்னும் சொல்லப்போனால், ஐரோப்பிய ஒன்றியத்தினுள் தொடர்ந்து கிரீஸின் இடத்தைப் பேணுவதற்கு அவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் சார்பாக முயற்சித்ததுடன், முக்கூட்டின் கட்டளைகளுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பைத் தணிப்பதற்காக அவர்கள் [ஒரு சமரசம் சாத்தியமாகும்] என்ற இந்த கட்டற்ற கற்பனையை விடாது பிடித்து வைத்திருந்தனர்.

ஜூலை 13 அன்று, New Statesman பத்திரிகை, கிரீஸைப் பாதுகாப்பதற்கு எங்களின் போராட்டம்" என்று பணிவடக்கமாக தலைப்பிட்டு, வாரௌஃபாகிஸ் உடனான ஒரு பிரத்யேக பேட்டியை பிரசுரித்தது. ஏக்குளிட்ஸ் சக்காலோட்டோஸ் கொண்டு வாரௌஃபாகிஸைப் பிரதியீடு செய்வதற்காக மற்றும் யூரோ மண்டல தலைவர்களுடன் ஒரு புதிய பிணையெடுப்புக்கு பேரம்பேசுவதற்காக சிப்ராஸிற்கு அதிகாரமளிப்பதன் மீது நடந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வாரௌஃபாகிஸ் கலந்து கொள்ளாமல் தவிர்த்த வெறும் மூன்று நாட்களுக்குப் பின்னர், அந்த நேர்காணல் வெளியானது. அப்போதும் கூட வாரௌஃபாகிஸ் அந்த பேரம்பேசல்களுக்கு அவரது ஆதரவை அறிவித்தார்.

வாரௌஃபாகிஸ் அவரது பேட்டியில் குறிப்பிடுகையில், யூரோ குழுமம் "முழுமையாகவும் முற்றிலுமாகவும் ஜேர்மனியின் நிதி மந்திரியால்" கட்டுப்படுத்தப்படுகிறது. அது ஒருசேர நன்கு-இசைக்கும் இசைக்குழுவைப் போன்றுள்ளது, அவர் தான் அதன் இசையமைப்பாளர், என்றார். ஜேர்மன் நிதி மந்திரி வொல்ஃப்காங் சொய்பிள இன் நிலைப்பாடு, "அடியிலிருந்து முடிவுவரை மாற்றமடையாதிருப்பதாகவும், 'அவர் அந்த வேலைத்திட்டத்தை விவாதிக்கப்போவதில்லை' என்பதாக அவர் பார்க்கிறார்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

கிரீஸின் மீது மிகவும் அனுதாபம் கொண்டதாக சித்தரிக்கப்படும் பிரான்ஸ் ஒரு மாற்றீட்டை வழங்கியதா என்று கேட்கப்பட்ட போது, பகுப்பாய்வின் இறுதியில், டாக்டர் சொய்பிள தான் பதிலளித்து, உத்தியோகபூர்வ போக்கை துல்லியமாக வரையறுக்கும்போது, பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி இறுதியில் எப்போதும் வளைந்து கொடுத்து ஏற்றுக் கொள்வார், என்று பதிலளித்தார்.

வாரௌஃபாகிஸ் அவருக்காகவே பேசுவதாக இருக்கலாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அடிபணிவைத் தொடர்ந்து குறைகூறும் குரல்கள் வந்துள்ளன.

இத்தகைய நிலைமைகளின் கீழ் கோடை வரையில் ஏன் தொங்கி கொண்டிருக்க வேண்டும்? என்று கேட்கப்பட்ட போது, வாரௌஃபாகிஸ், அவரைப் பொறுத்த வரையில், ஒருவரிடமும் வேறெந்த மாற்றீடும் இல்லை" என்று அப்பட்டமாக பதிலுரைத்தார்.

பிரச்சினை என்னவென்றால், மறுமுனையில் இருந்தவர்கள் பேரம்பேச மறுத்து வந்ததால் அந்த பேரம்பேசல்கள் நீண்டகாலம் எடுத்துவிட்டது, என்றவர் தெரிவிக்கிறார்.

ஏனைய கடன்பட்ட நாடுகளோடு" இணைந்து இயங்க அவர் முயன்றாரா என்று கேட்கப்பட்டதற்கு, வாரௌஃபாகிஸ் கூறுகையில்: ஆரம்பத்திலிருந்தே அத்தகைய குறிப்பிட்ட நாடுகள், எங்களது அரசாங்கத்திற்கு அவை மிகவும் சக்திவாய்ந்த எதிரிகள் என்பதை மிகவும் ஆரம்பத்திலிருந்தே ஏராளமான முறை தெளிவுபடுத்தி விட்டிருந்தன. அந்த போக்கிற்கான காரணம் எங்களது வெற்றி அவர்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்தது: எங்கே கிரீஸிற்கான ஒரு சிறந்த உடன்படிக்கையை பேரம்பேசி நாங்கள் அடைந்துவிடுவோமோ என்று அவை அஞ்சின, அத்தகைய நிலைமை ஒருவேளை அவர்களை அரசியல்ரீதியில் துடைத்தழித்துவிடும் என்பதோடு, நாங்கள் செய்வதைப் போல அவர்கள் ஏன் பேரம்பேசவில்லை என்று அவர்களின் சொந்த மக்களுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டியதாகிவிடும், என்றார்.

வெகுஜன வாக்கெடுப்புக்கு பின்னர் புதுப்பிக்கப்பட்ட பேரம்பேசல்கள் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இறுதியாக கேட்கப்பட்ட போது, என்னவாக இருந்தாலும் அது மோசமானதாகவே இருக்கும், என்றவர் பதிலுரைத்தார்.

அந்த நேரத்தில் வாரௌஃபாகிஸ் இது குறித்து எதையுமே தெரிவித்திருக்கவில்லை. அதற்கு மாறாக, ஒவ்வொரு திருப்பத்திலும், அவரும் சிப்ராஸூம்தொழிலாளர்களும் இளைஞர்களும் அவசியமான அரசியல் முடிவுகளை எடுப்பதைத் தடுப்பதற்காகஓர் உடன்படிக்கையை எட்டுவதற்கு வெறுமனே ஒரேயொரு கடைசி அழுத்தம் மட்டுமே தேவைப்படுவதாக வலியுறுத்தி வந்தனர்.

இதைபோலவே, அவர்கள் ஜேர்மனி, ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுக்கல், அயர்லாந்து மற்றும் ஐரோப்பாவின் எஞ்சிய பகுதிகளின் தொழிலாளர்கள், சிக்கன திட்டம் மீது அவர்களின் சொந்த அரசாங்கங்களுடன் உடைத்துக் கொள்ள வேண்டுமென எந்தவொரு கோரிக்கையும் செய்யவில்லை. அவ்வாறு செய்ய வேண்டுமானால் அது சிரிசாவை "மக்களுக்கு" பதிலளிக்க" நிர்பந்தித்திருக்கும் என்பதோடு, முதலாளித்துவ வர்க்கத்தின் கடுங்கோபத்தின் அபாயத்தையும் அதற்கு கொண்டு வந்திருக்கும். சிரிசாவை "மிகப்பெரும் அச்சுறுத்தலாக" கண்டதாக இப்போது எந்த அரசாங்கங்களை வாரௌஃபாகிஸ் சாடுகிறோரோ அதைப்போலவே அதேயளவிற்கு சிரிசாவுக்கு முதலாளித்துவத்தின் மீதான கோபத்தின் அபாயம் "மிகப்பெரும் அச்சுறுத்தலாக" உள்ளது.

New Statesman கட்டுரை பிரசுரமான அதேநாளில் ஆஸ்திரேலியாவின் ABC Late Night நேரலை நிகழ்ச்சியில் பேசுகையில், வாரௌஃபாகிஸ் அவரும் சிப்ராஸூம் உண்மையில் வெகுஜன வாக்கெடுப்பில் "வேண்டும்" என்ற வாக்குகளையே எதிர்பார்த்ததாக ஒப்புக்கொண்டார்அது தோல்வியை அறிவித்து, ஐரோப்பிய குழுமத்தின் கோரிக்கைகளுக்கு இணங்குவதற்கு சிப்ராஸை அனுமதித்திருக்கும்.

எங்களது ஆதரவும், வேண்டாமென்ற வாக்குகளும் அதிவேகமாக வீரியம் இழந்துபோகும் என்பது நான் நினைத்தது தான், பிரதம மந்திரியும் அவ்வாறே கருதியிருப்பாரென நான் நினைக்கிறேன், ஆனால் கிரேக்க மக்கள் அச்சங்களைக் கடந்திருந்தனர், அவர்கள் அவர்களது பணம்சார்ந்த நலன்களை ஒதுக்கி வைத்திருந்தனர், அவர்களது சேமிப்புகளை அணுக முடியாமல் போகுமென்ற உண்மையை கூட அவர்கள் புறக்கணித்திருந்தனர், அவர்கள் மீண்டும் குரல் எழுப்பினார்கள், இறுதியில் எமது ஐரோப்பிய பங்காளிகளிடமிருந்து ஓர் அச்சுறுத்தும் இறுதிஎச்சரிக்கை வந்ததற்கு இடையிலும், பிரமாண்டமான அளவில் வேண்டாமெனும் வாக்குகள் வந்தன, என்றுரைத்தார்.

அந்த வெகுஜன வாக்கெடுப்பு நடந்த அன்று மாலையில், வாரௌஃபாகிஸ் கூறுகையில், இந்த வெகுஜன வாக்கெடுப்பில் கிரேக்க ஜனநாயக வெற்றிக்காக, பொதுமக்களின் உற்சாகமெனும் அழகிய காற்றால் நகர்த்தப்படும் அழகிய மேகங்களில் நான் மிதந்து கொண்டிருக்கிறேன், என்றார்.

ஆனால், நான் பிரதம மந்திரி அலுவலகத்தில் நுழைந்த அந்த தருணம் நான் தோல்வியெனும் காற்றை எதிர்கொண்டேன், அது வெளியில் என்ன நடந்து கொண்டிருந்ததோ அதற்கு முற்றிலும் எதிர்விதமாக இருந்தது, என்றார்.

அவர்கள் திட்டமிட்டிருந்த உடனடி சரணடைவு முடியாமல் போனதற்கு, சிரிசா தலைமையினது அதிர்ச்சிகரமான பிரதிபலிப்பைத்தான் இங்கே அவர் அடையாளம் காண்கிறார். இருப்பினும் கூட, அதே நடவடிக்கை போக்கின் ஒரு மிக நீண்ட வடிவத்தை எடுப்பதை சிப்ராஸ் உள்நோக்கமாக கொண்டிருந்தார், இது வாரௌஃபாகிஸிற்கு முழுமையாக நன்கு தெரியும்.

அவர் கூறியவாறு, அந்த புள்ளியில் பிரதம மந்திரிக்கு நான் கூற வேண்டி இருந்தது இது தான்: 'இந்த கட்டிடத்தின் கதவுகளுக்கு வெளியே இருக்கும் ஜனநாயகத்தின் ரீங்காரத்தை நீங்கள் பயன்படுத்தி கொள்ள விரும்பினால், நீங்கள் என்னை நம்பலாம். ஆனால் மறுபுறம் நமது ஐரோப்பிய பங்காளிகளிடமிருந்து வரும் ஒரு நியாயமற்ற முன்மொழிவுக்கு பிரமாண்டமான இந்த "வேண்டாமெனும்" வாக்குகளை உங்களால் கையாள முடியாது என்று உணர்ந்தால், நான் இந்த இரவுக்குள் மறைந்துகொள்கின்றேன்.'

"அந்த தருணத்தில் வேண்டாமென்ற வாக்குகளை ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லவும் மற்றும் அதையோர் ஆயுதமாக பயன்படுத்தவும் உணர்வுரீதியில், மனோரீதியில் என்ன தேவைப்பட்டதோ அது" சிப்ராஸிடம் "இருக்கவில்லை" என்று அவர் கூறுகிறார்.

சிப்ராஸை எதிர்ப்பதற்கு மாறாக, ஒரு காட்டிக்கொடுப்புக்கு உதவும் வகையில், வாரௌஃபாகிஸ் "புருசெல்ஸிற்கு அவர் திரும்ப போக வேண்டிய அவசியமிருக்கிறது என்பதற்கும் மற்றும் எதை அவர் ஒரு சாத்தியமற்ற உடன்படிக்கை என்று உணர்கிறாரோ அதை அடைய வேண்டிய அவசியமிருக்கிறது என்பதற்கும் அவருக்கு ஒரு பாதையை அமைத்துக் கொடுக்க முடிவெடுத்தார், ஓர் உடன்படிக்கையே கூட சாத்தியமற்றதாக இருந்தது என்றார்.

அரசியல் விளைவுகள் குறித்து எச்சரிப்பதற்கு முன்னதாக, தளபதிகளின் ஆட்சியை நிறுவிய 1967 ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்காக எட்டப்பட்ட உடன்படிக்கையோடு வாரௌஃபாகிஸ் அந்த உடன்படிக்கையை ஒப்பிட்டு நிறைவு செய்தார். இம்முறை மட்டுந்தான் டாங்கிகளுக்கு பதிலாக வங்கிளைக் கொண்டு அந்த ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தப்பட்டது.

நாடாளுமன்ற அரங்கத்தின் வலதுபுறத்தைப் பார்த்தவாறு நான் உட்கார வேண்டியுள்ளது, அங்கே தான் கோல்டன் டௌனைப் பிரதிநிதித்துவம் செய்யும் 10 நாஜிக்கள் உட்காருகிறார்கள். நமது கட்சி, சிரிசா, கிரீஸில் மிகவும் நம்பிக்கையை விதைத்துள்ளது இந்த நம்பிக்கையை நாம் காட்டிக்கொடுத்தால், பின்நவீன ஆக்கிரமிப்பின் இந்த புதிய வடிவத்திற்கு நாம் தலை வணங்கினால், பின்னர் கோல்டன் டௌன் மேற்கொண்டு பலப்படும் என்பதைத் தவிர வேறெந்த சாத்தியமான விளைவையும் என்னால் காண முடியவில்லை. அவர்கள் துன்பியலான விதத்தில் சிக்கன-எதிர்ப்பு முனைவெனும் கவசத்தைப் பூணுவார்கள், என்றார்.

இதை அவர் கூறுகின்ற அதேவேளையில், New Statesmanக்கு "உலகின் உச்சத்தில் இருப்பதாக உணர்வதாகவும்", "நான் பாதுகாக்க சிக்கலானதென கருதும் ஒரு நிலைப்பாட்டை பேரம்பேசுவதற்குரிய இந்த தாங்கொணா அழுத்தத்தை இனியும் நான் தாங்க வேண்டியதில்லை என்று வெளியேறினேன்" என்பதையும் அவர் தான் தெரிவிக்கிறார்.

கிரேக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சியல்ல, ஒரு பாசிச இயக்கம் மீளெழுவதற்கான சாத்தியக்கூறு குறித்து அவரால் ஓரளவிற்கு உறுதியாக கூற முடிகிறது.

சிரிசா எந்த சமூக அடுக்கிற்காக பேசுகிறதோ அந்த உயர்மட்ட தனிச்சலுகை கொண்ட சமூக அடுக்கைச் சேர்ந்தவர் தான் வாரௌஃபாகிஸ், அவர்களது நலன்கள் தொழிலாள வர்க்கத்தின் மீதான தொடர்ச்சியான முதலாளித்துவ சுரண்டலுடன் பிணைந்துள்ளன. ஏதேனும் சந்தர்ப்பத்தில் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கு அரசு வன்முறையைக் கட்டவிழ்த்துவிடவோ அல்லது பாசிச பிரிவுகளைப் பயன்படுத்தவோ தேவைப்பட்டாலும்கூட, அவ்வாறு செய்வதற்கு சற்றும் தயங்காதவர்கள் சிரிசாவின் பதவிகளுக்குள் இருக்கிறார்கள்.

வாரௌஃபாகிஸைப் பொறுத்த வரையில், கடந்த அனுபவம் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்றால், பின் அவரும் அவரது மனைவி Danae Stratou உம் அனேகமாக அவர்களது மில்லியன் கணக்கான யூரோக்களை வெளிநாட்டு சொத்துக்களாக மாற்றிவிட்டு, அவர்களது பணத்தைப் பின்தொடர்ந்து செல்வார்கள். சொல்லப்போனால், அவர் இதற்கு முன்னரே கூட பல முறை அவ்வாறு செய்துள்ளார்.

அவரது வலைப்பதிவின் வாழ்க்கை வரலாற்று சித்திரத்தில், ஒரு விடலைபருவ சிறுவனாக அவர் எவ்விதத்தில் இருந்தார் என்பதை விவரிக்கிறார், இராணுவம் மற்றும் துணை இராணுவ படைகளின் முதலும் முக்கியமுமான இலக்குகளாக மாணவர்கள் இருந்ததால், நான் கிரீஸில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு சென்று வருவது மிகவும் அபாயகரமானது என்று எனது பெற்றோர்கள் தீர்மானித்தார்கள். ஆகவே, 1978 இல், பிரிட்டனுக்குப் படிக்க அனுப்பப்பட்டேன், என்கிறார்.

திருமதி தாட்சரின் மூன்றாவது தேர்தல் வெற்றியின் அந்த இரவோடு, 1987 இல் எனது பிரிட்டன் முறிவு ஏற்பட்டது. நிறைய தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. விரைவிலேயே நான் தப்பித்துச் செல்ல திட்டமிட தொடங்கினேன்" என்று தொடர்ந்து அவர் கூறுகிறார்.

அவர் 2002 இல் ஆஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து கிரீஸிற்கு திரும்பி வந்து, PASOK தலைவர் ஜோர்ஜ் பாப்பன்திரேயோவின் ஓர் ஆலோசகராக ஆனார். எவ்வாறிருப்பினும், கிரீஸின் உள்வெடிப்புக்குப் பின்னர் உடனடியாக ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தில் நான் உருவாக்குவதற்கு வேலை செய்திருந்த ஒவ்வொன்றும் தோல்வி அடைந்துவிட்டது, எனது சம்பளமே குறைந்து போய்விட்டது", அங்கே "என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல்கள்" இருக்கின்றன, "அது கிரேக்க வங்கியாளர்களின் சமீபத்திய மோசடிகளைப் பகிரங்கமாக விவாதிக்க வேண்டுமென்ற எனது வலியுறுத்தலை அடுத்து வந்திருந்தது ஒன்றுசேர்த்து பார்த்தால், இந்த மூன்று காரணிகளும் மீண்டுமொருமுறை கிரீஸிலிருந்து வெளியேறுவதற்கு நேரம் வந்துவிட்டதையே அர்த்தப்படுத்துகிறது". இந்த முறை டெக்சாஸ் இலுள்ள ஆஸ்டினுக்கு செல்லவேண்டியிருந்தது.

வாரௌஃபாகிஸ் இன் கருத்துக்கள் அவரது சொந்த அரசியல் போக்குகளை விட அதிகமானவற்றை எடுத்துக்காட்டுகின்றன. அனைத்திற்கும் மேலாக, அவர் சமீபத்தில் வரை, உலகெங்கிலும் உள்ள போலி-இடது குழுக்களால் புகழப்பட்டார், இன்னும் கூட பலரால் புகழப்படுகிறார்.

இங்கிலாந்தின் Channel 4 செய்தியின் பொருளாதாரத்துறை ஆசிரியரும் தொழிலாளர் சக்தி குழுமத்தின் ஒரு முன்னாள் முன்னணி அங்கத்தவருமான பௌல் மேசன், வாரௌஃபாக்கியின் The Global Minotaur இன் ஒரு புதிய பதிப்பிற்கு முன்னுரை எழுதினார். அதில் அவர், எவ்வாறு அவரது "குதர்க்கமில்லாத பேச்சு யூரோ கூட்டத்தின் வழக்கமான வழிமுறையை, அனேகமாக எப்போதுக்குமாக, மாற்றியது" என்பதையும், எவ்வாறு அவர் "உலக பொருளாதாரத்தின் மத்திய பிரச்சினையைக் கட்டவிழ்த்து காட்டியுள்ளார்" என்பதையும் விவரிக்கிறார்.

அவர் தொடர்ந்து எழுதுகிறார், சிரிசா மற்றும் யூரோ குழுமத்திற்கு இடையிலான மோதல் எவ்வாறு போய் முடியுமென எங்களுக்குத் தெரியாதுஆனால் அது சமரசத்தை உள்ளடக்கி இருக்கும் என்பதில் நாங்கள் நிச்சயமாக உள்ளோம். அரசியல்வாதிகள் கோட்பாடுகளில் அல்ல, சமரசமெனும் உலகில் வாழ்கிறார்கள். ஆனால் அதன் இறுதியில், பழைய வகையான எதிர்ப்பின் கோரப்பற்களுக்கு இடையே, ஒரு புதிய விதமான நியாயமான முதலாளித்துவத்திற்காக போராடுவற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை இடதுதீவிர கொள்கையாளர்கள் கண்டறிவார்கள், என்கிறார்.

வாரௌஃபாகிஸ் மற்றும் சிரிசாவின் ஏனைய தலைவர்களது போலி-இடதின் மீதிருக்கும் கவர்ச்சியைத் துல்லியமாக மேசன் பிரதிபலிக்கிறார். அவர்கள் வியப்பிற்குரிய ஒன்று, சமரச உலகில் வாழ்வதற்கு" அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதும், அவர்களுக்கான ஓர் அரசில் பாத்திரத்தை பாதுகாத்துக்கொள்வதில் அவர்கள் முன்மாதிரியாக இருக்க விரும்புகிறார்கள் என்பதுமாகும்.

அனேகமாக வாரௌஃபாகிஸ் அளவிற்கு வெற்றிகரமாகவோ அல்லது பணக்காரராகவோ இல்லை என்றாலும், அவர்களும் [சிரிசாவின் ஏனைய தலைவர்களும்] அதே சமூக அடுக்கிலிருந்து தான் வருகிறார்கள். அவர்களும் ஒரு "புதிய விதமான நியாயமான ஒரு முதலாளித்துவத்தை" உருவாக்க விரும்புகிறார்கள். இதன் மூலமாக அவர்கள் விரும்புவது என்னவென்றால், வாரௌஃபாகிஸின் வார்த்தைகளில் கூறுவதானால், முதலாளித்துவத்தை முதலாளித்துவத்திடமிருந்தே பாதுகாப்பது"அல்லது, இன்னும் துல்லியமாக கூறுவதானால், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சவாலில் இருந்து பாதுகாப்பதற்கு பிரதி உபகாரமாக, மிகவும் செல்வசெழிப்பான ஒரு சதவீதத்தினரின் பொருளாதார குவிப்பில் சிறிது அதிகமான பகுதியை மக்களின் மேலே உள்ள 10 இல் இருந்து 20 சதவீதத்தினருக்கு வழங்க வேண்டும் என்பதைத் தான்.