சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

A letter from Athens: Taking stock of Syriza’s capitulation

ஏதென்ஸிலிருந்து ஒரு கடிதம்: சிரிசா அடிபணிவைக் கணக்கெடுத்தல்

By Evel Economakis
22 July 2015

Use this version to printSend feedback

உலக சோசலிச வலைத் தளம் கடுமையான புதிய சுற்று சிக்கன நடவடிக்கைகள் மீது சிரிசா உடன்பட்டதற்கு இருந்த பிரதிபலிப்பைக் குறித்து கிரீஸின் ஏதென்சில் உள்ள ஒரு வாசகரிடமிருந்து பின்வரும் அறிக்கையைப் பெற்றுள்ளது.

இங்கே ஜூலை 5 வெகுஜன வாக்கெடுப்பில் "வேண்டாம்" என்று வாக்களித்த 62 சதவீதத்தினர் மத்தியில் நிலவும் கோபத்தை, உருகிப்போயுள்ளது என்று மட்டும் தான் வர்ணிக்கலாம். ஜூலை 16 அன்று ஏடிஎம் வாசலில் நாங்கள் நின்று கொண்டிருக்கையில் சுமார் 40 வயதான மழலையர் பள்ளி ஆசிரியை டேனி, அதை குணாம்சப்படுத்தும்ரீதியில் என்னிடம் கூறினார்: “என்ன நடந்ததோ அது முக்கூட்டால் நடத்தப்பட்ட ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியல்ல — சிரிசா மொத்தமாக நிபந்தனையின்றி சரணடைந்துவிட்டது,” என்றார்.

இங்கே நிலவும் மனோபாவத்தைத் துல்லியமாக படம்பிடிக்க வேண்டுமானால், ஏதென்ஸில் இன்றைய நாட்களில் பரவியிருக்கும் கேலிப்பேச்சு, ஏடிஎம் என்பதன் அர்த்தத்தை பற்றியதாகும்: கிரேக்கத்தில் அந்த சுருக்கெழுத்துக்கள் உண்மையில் “Aristero Trito Mnimonio” அல்லது "இடது சாரி மூன்றாம் புரிந்துணர்வு" என்பதாகும்.

சிரிசாவிற்கு வாக்களித்திருந்த ஒரு வேலைவாய்ப்பற்ற மின்பணியாளர் நிக்கோஸ் என்னிடம் கூறுகையில், “கடந்த ஆறு மாதங்களில், நான் செத்து செத்து பிறந்துள்ளேன். நம்பிக்கை வந்தது; கண்டது; இப்போது போய்விட்டது.”

திரு சிப்ராஸ் அவர்களே இப்போது நீங்கள் ஓர் எதிரி,” பெயர் வெளியிடாத இடதுசாரி வலைப்பதிவாளர் எழுதினார். “கலகம் ஒடுக்கும் பொலிஸ் மற்றும் இரும்பு பொலிஸ் தடுப்புகளைக் கொண்டு வந்துவிடுங்கள் — உங்களுக்கு அது தேவைப்படும்.” “எந்த சீசரும் படுக்கையில் அமைதியாக இறந்துவிடவில்லை,” என்பதை பிரதம மந்திரிக்கு நினைவூட்டும் விதத்தில், மற்றொரு வலைப்பதிவாளர் "மரியா மெக்டலேனா" இன் படத்தை அவரது முகநூல் முன்படமாக வைத்திருக்கிறார்.

தீவிர இடதுகள் மத்தியில் பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸின் புனைப்பெயர் இப்போது "Tsiprakoglou” என்பதாகும், இது அச்சு நாடுகள் (Axis occupation) ஆக்கிரமிப்பின் போது கிரேக்க ஒத்துழைப்புவாத அரசாங்கதின் முதல் பிரதம மந்திரியாக இருந்த இராணுவ அதிகாரி Georgios Tsolakoglou ஐ குறித்த ஒரு மறைமுகமான குறிப்பாகும்.

வரலாறு அலெக்சிஸ் சிப்ராஸின் பெயரை, முந்தைய சிக்கன பொதிகளை மேற்பார்வையிட்ட PASOK இன் ஜோர்ஜ் பாப்பன்திரேயோ இன், MIT இல் படித்துவந்த லூகாஸ் பாப்பன்திமொஸ் மற்றும் தீவிர வலது அன்டோனிஸ் சமராஸ் போன்ற ஏனைய தலைவர்களுக்கு அடுத்த இடத்தில் எழுதுமென்று வெறுப்புகொண்ட இடதுவாதிகள் தெரிவிக்கின்றனர். மற்றொரு வலைப்பதிவாளர் குறிப்பிடுகையில், “ஒரு சிப்ராஸாக மாறாதீர்கள் — வரவிருக்கும் ஆண்டுகளுக்காக நாங்கள் ஒவ்வொருவருக்கும் இதை தான் கூற விரும்புகிறோம்!” என்று பதிவு செய்தார்.

இதுவரையில் ஒரு சிரிசா போராளியான அனாஸ்டாசியா, “நிஜமான முதலாளித்துவ வர்க்க முதலாளித்துவ கட்சிகளாக இருந்த கொடுங்கோல் சமூக ஜனநாயக கட்சிகள் அல்லது சோசலிஸ்டுகளின் விபர அட்டவணையில்" அக்கட்சியையும் இணைத்து புறக்கணித்துள்ளார். “ஒல்லாந்தின் தொழிலாளர்களுக்கான கட்சி, ஜேர்மனியின் சமூக ஜனநாயக கட்சி, பிரிட்டனின் தொழிற்கட்சி (Labour Party), பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி, ஸ்பெயினின் சோசலிஸ்ட் தொழிலாளர்கள் கட்சி, கிரீஸின் PASOK (இப்போது அங்கே இரண்டு உள்ளன!), இத்தாலியின் PSI, ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி, பல்கேரியாவின் சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஹங்கேரியின் MSZP” ஆகியவை அதில் உள்ளடங்கும் என்று அவர் எழுதுகிறார்.

கிரீஸின் இளம் தலைவர்கள் மீது சுமத்தப்பட்ட ஒவ்வாமை பதிலளிக்கப்படாமல் போகவில்லை. சிரிசா அந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டதற்கு ஒரு நாள் முன்னதாக அதற்கு எதிராக வாக்களித்த 32 நிர்வாகிகளை, பிரதம மந்திரி சிப்ராஸ் ஜூலை 16 அன்று அவரது அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக அல்லாமல் கண்டித்தார். இந்த "தோழர்கள்" “பாரம்பரிய சோசலிஸ்ட் தோழமைக்கு" எதிராக செல்கிறார்கள் என்று அவர் விமர்சித்ததோடு, அவரது அரசாங்கம் இப்போது அதன் பெரும்பான்மையை இழந்துவிட்டிருப்பதாக குறைப்பட்டு கொண்டார்.

ஜனவரி 25 இல் அவர் அதிகாரத்திற்கு வர அவருக்கு வாக்களித்த பலருக்கு கிரீஸின் "சே குவேரா" இன்று பெரிதும் Judas Iscariot போல தெரிகிறார். அதுமட்டுமின்றி வெகுஜன வாக்கெடுப்பின் பாரிய "வேண்டாமென்ற" வாக்குகளை முக்கூட்டை எதிர்த்து நிற்பதற்கு கிடைத்த ஒப்புதலாக பொருள்விளக்கம் அளிப்பதற்கு மாறாக, "எதிரி" செய்ததைப் போலவே, அதாவது சிக்கன கொள்கை சார்பான எல்லா கட்சிகளும் செய்ததைப் போலவே, சிப்ராஸூம், யூரோமண்டலத்திலிருந்து வெளியேற வேண்டாமென்பதற்கு அதை கிரீஸிற்கு அளிக்கப்பட்ட ஒரு "ஆணையாக" தெரிவித்தார்.

குதர்க்கமான நப்பாசையோடு, சிலர் 20 ஆண்டுகளாக அவருடன் இருந்த சிப்ராஸின் மனைவி அவரை விட்டு விலகுவார் என்று எதிர்பார்க்கின்றனர். மனஉறுதியும், ஊக்கமும், போர்குணமும் கொண்ட ஒரு மின்பொறியாளர் Betty Batziana, கடைகளுக்குச் செல்வதையே வெறுக்கிறார். அந்த பெண்மணி அவரது துணைவர் (அவர்கள் உத்தியோகப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை) சிரிசாவின் ஏதேனும் அபாய பகுதிக்குள் சென்றால் — எல்லா அபாய பகுதிகளுக்குள் சென்றாலும் தான்!, அவரை கைவிட துணிந்திருப்பதாக வெளிப்படையாக பதிவு செய்து கொண்டிருக்கும் போதே தெரிவித்தார். அவரது முனைவர் பட்ட ஆய்வறிக்கையில் வேலைகளைப் பலவீனப்படுத்தியதற்காக அவர் மீது வழக்குதொடுக்க அந்த பெண்மணி அவரது கல்லூரி பேராசிரியர்களை நாடியிருந்தார் என்ற உண்மைக்கு இடையே, இவ்வாறு நிகழ்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு வேடிக்கையாக தெரிகிறது.

 “கவர்ச்சிகரமான அலெக்சிஸ்" (அவரது சிறந்த தோற்றத்திற்காக இவ்வாறு புனைப்பெயரில் அழைக்கப்படுகிறார்) இவ்விதத்தில் திரும்புகிறாரா? சிரிசாவில் உள்ள ஏனையவர்களைப் போலவே, அவரும் ஒரு முதலாளித்துவ வர்க்க குடும்பத்தின் ஒட்டுமூளை தான். ஜோர்ஜ் பாப்பன்திரேயோவின் இராணுவ சர்வாதிகாரத்தின் போது (1967-1973), அவரது தந்தை பாவ்லோஸ் பெரும் ஆதாயமான அரசு ஒப்பந்தப்புள்ளிகளைப் பெற்ற ஒரு கட்டுமானத்துறை பொறியாளராக இருந்தார். ஏதேனும் இடது அரசியல் கண்ணோட்டங்கள் இருப்பதாக தீவிர வலதால் சந்தேகத்திற்குட்பட்டு இருந்த யாருக்கும் அதுபோன்ற வேலைகள் ஒருபோதும் கொடுக்கப்படவில்லை. சிப்ராஸின் தந்தை தேவாலயங்களுக்கு பெரும் தொகைகளை நன்கொடைகளாகவும் வழங்கினார். சில திருப்தியற்ற சிரிசா வாக்காளர்கள் ஊடகங்களுக்கு கூறுகையில், அரசாங்கம் ஏன் நில/கட்டிடத்துறையிலும் மற்றும் ஏனைய சொத்துக்களிலும் பில்லியன் கணக்கான யூரோக்களைக் கொண்டிருந்த ஒரு அமைப்பைக் குறிவைக்கவில்லை என்பதை இது விளங்கப்படுத்தக்கூடும், இத்தகைய அமைப்பு அனைத்திற்கும் மேலாக வழிவழியாக வரி ஆதாய சலுகைகளை அனுபவித்து வந்துள்ளன என்று கூறினர்.

ஏதென்ஸிற்கு வெளியே ஒரு சிறிய துறைமுக நகரமான ராஃபியாவில் உள்ள ஒரு தீயணைப்புத்துறை பணியாளர் மரியா, விதிவிலக்கின்றி எல்லா அரசியல்வாதிகளையும் தூற்றினார். “வலதோ அல்லது இடதோ, அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரிதான்,” என்று அவர் கூறினார். “இப்போதிலிருந்து நான், எங்களை வழிநடத்தும் வறிய மக்களைத்தான் நம்ப போகிறேன்! அவர்களது சிந்தனைபூர்வ கருத்துக்களால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் சிறைச்சாலைகளில் செலவிட்டுள்ள பணக்காரர்களை வேண்டுமானால் விதிவிலக்காக்கி விடலாம்!” என்றார்.

முக்கூட்டிடம் சிரிசாவின் சமீபத்திய அடிபணிவைப் பலர் "சிக்கன-விரோத வார்கிஸா" என்று வர்ணித்து வருகின்றனர், இது 12 பெப்ரவரி 1945 இல் வார்கிஸா உடன்படிக்கையைக் குறிப்பிடுவதாகும். அந்நாளில் தான், கட்சி அடித்தளத்திலிருந்து (பெரும் கண்ணீருடனும் கூட) எழுந்த பலமான போராட்டத்திற்கு எதிராக கிரீஸின் கம்யூனிஸ்ட் கட்சி அல்லது KKE இன் செயலாளர், பிரிட்டிஷ் ஆதரவிலான கிரேக்க வெளியுறவு விவகாரங்களுக்கான மந்திரி உடன் ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார், அந்த உடன்படிக்கை கம்யூனிஸ்ட் தலைமையிலான EAM-ELAS எதிர்ப்பு போராளிகள் — இவர்கள் கிரீஸின் பெரும்பகுதிகளைக் கட்டுப்பாட்டில் கொண்டிருந்த நிலையில் — அவர்களது ஆயுதங்களை ஒப்படைத்து, போராட்டத்தைக் கைவிட நிர்பந்தித்தது.

உடனடியாக சாவதற்கும் மெதுமெதுவாக சாவதற்கும் இடையே அவர் அந்த விருப்பத்தேர்வை தேர்ந்தெடுத்ததாக சிப்ராஸ் பொருள்விளக்கம் அளித்தார். எவ்வாறிருப்பினும் இதுவொரு பிழையான தடுமாற்றமென பலர் தெரிவித்தனர். “முக்கூட்டு வங்கியாளர்கள் எங்களது வாழ்க்கையா அல்லது எங்களது பணமா என்பதற்கு இடையே ஒன்றை நாங்கள் தேர்ந்தெடுக்க விரும்பினார்கள் — சிரிசா முதலாவதைத் தேர்ந்தெடுத்தது,” என்று ஒரு ஏடிஎம் வரிசையில் நின்ற வயதான ஒருவர் கோபத்தோடு முணுமுணுத்ததை என்னால் கேட்க முடிந்தது.

அங்கே எங்கெங்கிலும் அதே அறிகுறிகள் இருந்தன. வலைப்பதிவாளர் இலியாஸ் A. குறிப்பிடுகையில், சிரிசாவின் நண்பர்களும் மற்றும் அதன் வாக்காளர்களும் "ஏமாற்றும் பெண்களைப் போல அருவருப்பாக உள்ளனர்,” என்றார். உண்மையில், அதன் வழியில் ஒரு விழிப்பார்ந்த மக்கள் இயக்கத்தைத் திணறடிக்க முயலும் ஒரு நம்பிக்கைக்குரிய இடது சாரி அரசாங்கத்தை யாராவது கேள்விபட்டிருக்கிறீர்களா? 2012 இல் அப்போது, சட்டப்பூர்வ மதிப்புக்குரிய எதிர்கட்சியின் தர்க்கத்திற்கு சேவை செய்வதற்காக மக்களை வீதிகளுக்கு இழுத்து வந்தது சிரிசாவே தான், இல்லையா? வேலையிலிருந்து நீக்கப்பட்ட ERT தொழிலாளர்களின் (நாட்டின் அரசு தொலைக்காட்சி நிலையம், இது 11 ஜூன் 2013 இல் மூடப்பட்டது) போராட்டத்திற்குத் தடையை ஏற்படுத்தியது சிரிசா தான், இல்லையா? மேலும் சிப்ராஸ் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணங்களையும், அங்கே நடந்த கூட்டங்களையும் யாரால் மறக்க முடியும், அவர் ஐரோப்பிய சக்திகளுடன் மோதவில்லை என்பதை அவர் அங்கே மீண்டும் மீண்டும் குறிப்பிட்டாரே? நடைமுறையில் இருந்த ஐரோப்பிய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைக்கு காரணமான சதிகாரர்களுடன் அவரது லேக் கம் கூட்டங்கள், இலண்டன் நிதியங்களுடன் அவரது இரகசிய பேச்சுவார்த்தைகள்? அவை குறித்து மக்களுக்குத்தெரிவிக்கப்படவும் இல்லை அல்லது சிரிசாவின் ஒழுங்கமைந்த ஆதரவாளர்களுடன் கூட கலந்தாலோசிக்கப்படவும் இல்லை.

ஆரம்பத்திலிருந்தே சிரிசா, இன்றைய தோல்விக்கான விதைகளை விதைத்திருந்தது. ஒமோனியா சதுக்கத்திற்கு அருகே பிஜ்ஜெரியாவில் வேலை செய்கிற வன்ஜெலிஸின் கருத்துப்படி, “எங்களின் மிக பிரமாண்டமான போராட்டங்களைக் காட்டிக்கொடுத்ததன் விதை சிரிசாவின் மூலோபாயத்திலும் மற்றும் — யூரோமண்டலத்துடன் மற்றும் மக்களின் நலன்களுக்கு எதிராக செல்வந்த தட்டுக்கள் மற்றும் வங்கியாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்கிற அதன் தலைவர்களுடன் தன்னைத்தானே சமமாக காணும் இந்த ஐரோப்பாவை பேரம்பேசும் மேசையில் அவர்களால் மாற்ற முடியும் என்ற அதன் முதிர்ச்சியற்ற கண்ணோட்டத்திலும் உள்ளார்ந்து உள்ளது.”

இடதுகளில் இருக்கும் பலர் இப்போது யானிஸ் வாரௌஃபாகிஸைத் தூற்றி வருகின்றனர். “மக்களை வசீகரித்திருந்த சூப்பர்ஸ்டார் எங்களை தவறாக வழிநடத்தினார்,” என்று எலினி அவரது வலைப்பதிவில் எழுதினார். “அந்த முன்னாள் நிதி மந்திரி எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் பத்தி நிமிடங்கள் கூட தென்பட மாட்டார். இது யாருக்கும் ஆச்சரியமாக இல்லையா? சிப்ராஸ், வாரௌஃபாகிஸ், ஸ்டாதாகிஸ், சக்காலோட்டோஸ் அல்லது பாப்பாடிமௌலிஸ் யாருக்காக பேசுகிறார்கள், மொத்தத்தில் மாதந்தோறும் 600 யூரோ சம்பாதிக்கும் பிரேயுஸ் ஆலை தொழிலாளர்களுக்காகவா?

இந்த "முதல்முறை இடதின்" சறுக்கல் கிரேக்க மக்களது கல்லறைகல்லாக மாறிவிடுமென பலர் அஞ்சுகின்றனர். இந்த முக்கிய காலக்கட்டம் எவ்வாறு மக்களின் உதடுகளில் இருந்து இந்த சக்திவாய்ந்த வார்த்தைகளையும், வாக்கியங்களையும் எப்படி கொண்டு வந்திருக்கின்றன என்று கடந்த சில வாரங்களாக மீண்டும் மீண்டும் வியப்பும் மலைப்பும் அடைந்துள்ளேன். பள்ளிக்கூடத்தில் பட்டம் பெற்றிராத இரண்டு குழந்தைகளுக்கு தாயான மைர்டோ, ஏதென்ஸிற்கு வெளியே மாரதான் ஆவின்யூவில் ஒரு ரொட்டி தயாரிப்பு ஆலையில் இரவு வேலை செய்கிறார். அவர், “இந்நாட்டின் சமாதியில் நாம் அனைவரும் ஒவ்வொரு வார்த்தைகளாக பதிந்திருப்போம்,” என்ற இந்த இடிமுழக்கத்துடன் அடுத்த நாள் என்னை சாய்த்துவிட்டார்.

இந்த விடயத்திலிருக்கும் எதிர்பொருள் என்னவென்றால் வெகுஜன வாக்கெடுப்பில் "சம்மத" வாக்குகள் அளித்த மக்கள், அதாவது சிக்கன திட்டத்திற்கு ஆதரவான பெரும்பாலான கூட்டம் இப்போது அரசாங்கத்தை ஆதரித்து வருகிறது. சில காலத்திற்கு முன்னர் தான் இந்த மக்களே கூட "கம்யூனிஸ்ட்-போல்ஷ்விக்" அச்சுறுத்தல் குறித்த வெப்பத்திலும், கொதிப்பிலும் இருந்தனர். ஓர் இளம் வழக்கறிஞரான நிகி கூறுகையில், அலெக்சிஸ் சிப்ராஸ் மீது அவரது "மதிப்பு கூடியிருப்பதாக" தெரிவித்தார். அந்த பிரதம மந்திரி அவரது நாட்டை விட அவரது கட்சியை முன்னிறுத்துவாரோ என்று அவர் அஞ்சியதாகவும், ஆனால் அவர் அதற்கு எதிர்பதமாக செய்ததாகவும் — "அதற்கு மிகவும் தைரியம் வேண்டும்!” என்பதையும் அவர் சேர்த்து கொண்டார்.

ஒரு வேலைவாய்ப்பற்ற கட்டுமான தொழிலாளர் ஸ்ட்ராடிஸ், லெனின் ஒருமுறை கூறிய ஏதோவொன்றை எனக்கு நினைவூட்டினார்: “உங்கள் எதிரி உங்களைப் பாராட்டுகிற போது, நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்று நின்று திரும்பி பாருங்கள்!” அவர் அலெக்சிஸ் சிப்ராஸைக் குறிப்பிட்டார்.

நமது இளம் பிரதம மந்திரி விரைவிலேயே வலதுசாரி புதிய ஜனநாயக கட்சியின் தலைவராகிவிடுவார் என்பதே படுமோசமான நகைச்சுவையாக உள்ளது! ஒரு கப்பற்படை வடிவமைப்பாளரான பானொஸ், ஒரு மின்னஞ்சலில் இவ்வாறு நகைச்சுவையாக கூறுகிறார், வரலாற்றில் முதல்முறையாக சிப்ராஸ் இரண்டு கட்சிகளுக்கு, சிரிசாவிற்கும் புதிய ஜனநாயகத்திற்கும் ஒரேசமயத்தில் தலைவராகி விடுவார் போலும்! என்னுடைய பத்துவயது மகனுடன் கால்பந்து விளையாடும் சிறுவனின் தந்தையான ஓர் இளம் மின்பணியாளர் மனோலிஸ் கூறுகையில், அந்த அமைப்புமுறையிடம் சிரிசா நிர்வாகிகள் விற்பதற்கு தீர்மானித்ததை அவரது "சூத்திரத்தில்" எனக்கு விளக்கினார். இவ்விதத்தில் தான் மக்கள் ஊடகங்கள் அவற்றை கையாள்கின்றன என்றவர் விவரித்தார். “எந்தவொரு சிரிசா நிர்வாகியை விடவும் மிக மோசமான ஒருவர் யாரென்பதை, இந்த புதிய ஒப்பந்தத்திற்குப் பின்னர், நாம் பார்க்கவிருக்கிறோம் — அவர் செல்வந்த அடுக்குகளின் தொலைக்காட்சி சேனல்களில் நாள் முழுவதும் தோன்றுபவராக இருப்பார்.”

சிரிசாவின் அடிபணிவு ஜேர்மனிக்கும் மற்றும் முக்கூட்டிற்கும் பெரும்விலைகொடுத்து பெற்ற சிறிய வெற்றியாக இருக்கலாம் என்ற நம்பிக்கையை சிலர் வெளிப்படுத்தி உள்ளனர். இந்த "உடன்படிக்கை" ஜேர்மனியின் முகத்திரையைக் கிழித்துள்ளது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். ஐரோப்பிய உயரடுக்குகளும் (அவர்களது கிரேக்க ஒத்துழைப்பாளர்களும்) உண்மையில் அவர்கள் யார் என்பதை: அதாவது கிரீஸின் இடது சாரி அரசாங்கத்திற்கு எதிராக கோரப்பற்களையும், நகங்களையும் வைத்து போராடிய வக்கிரமான தன்னகங்கார அவநம்பிக்கையாளர்கள் என்பதை அம்பலப்படுத்திக் காட்டியுள்ளதுடன் இறுதியில் அது அதை மாற்றி அதை அன்னியப்படுத்திவிடும் என்பதிலும் அவர்கள் உறுதியாக உள்ளனர். “ஐரோப்பா மாறிக் கொண்டிருக்கிறது,” இது யூரோ ஆதரவாளரான டாக்சி ஓட்டுனர் ஆண்டோனிஸ் என்னிடம் கூறியது. “இந்நாளுக்குப் பின்னர் நாம் ஒன்றியத்திற்கு வெளியே இருந்தால் அது ஒரு வெட்கக்கேடாகும்,” என்றார். அதற்கு பதிலாக திடமானரீதியில், “ஒன்று கிரீஸ் யூரோவிற்குள் நுழைந்திருக்கவே கூடாது, அல்லது யூரோவை விட்டு நாம் ஒருபோதும் வெளியே கூடாது,” என்பதை அவர் சேர்த்துக் கொண்டார்.

சிரிசா பின்பற்றுவதற்கு அங்கே இரண்டு மூலோபாயங்கள் இருந்தன. ஒன்று ஐரோப்பாவிற்குள்ளே இருந்து அதை மாற்ற முயற்சிப்பது. மற்றொன்று: நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மாற்று திட்டம் (Plan B) அல்லது கிரீஸ் வெளியேற்றம் மூலமாக கிரீஸைக் காப்பாற்றுவது. அது இரண்டையுமே செய்யவில்லை. வாரௌஃபாகிஸின் சொந்த ஒப்புதலைக் கொண்டு கூறினாலே கூட, ஏதென்ஸ் ஐரோப்பாவில் இருந்த அனுதாபம் மிக்க பெருந்திரளான மக்களின் ஆதரவைப் பெற எந்தவித தீவிர முயற்சியும் செய்யவில்லை, ஸ்பானிஷ் வெகுஜன கட்சி பெடெமோஸில் இருந்தவர்களிடமிருந்தும் கூட ஆதரவைப் பெற முயலவில்லை. மறுபுறம், பெடெமோஸின் குதிரைவால் தலைவரும் மற்றும் ஸ்தாபகருமான Pablo Iglesias Turrión சமீபத்தில் முக்கூட்டிடம் சிரிசா அடிபணிந்ததை "யதார்த்தமானது" என்று கூறி ஆதரிக்க வந்தார். கருத்துக்கணிப்புகளில் அவரது கட்சியின் செல்வாக்கு உடனடியாக சரிந்தது. தோற்பவர்கள் யாருக்கு வேண்டும்? உள்ளூர் Lidl பெருவணிக அங்காடியின் ஒரு காசாளர் கேத்ரீனா என்னிடம் கூறுகையில், “அந்த ஸ்பானியர்களும் நமது 'இடதுசாரிகளைப்' போலவே அதே பசையால் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது — அவர்கள் அந்த தடுமாற்றத்தை அதே கண்ணாடியைக் கொண்டு பார்க்கிறார்கள். அதாவது ஒன்று அது முக்கூட்டிற்கு முற்றிலுமாக அடிபணிய வேண்டும் அல்லது யூரோ மண்டலத்தை விட்டு வெளியேற வேண்டும்! என்கிறார்கள்” என்றார்.

அறுபத்தி ஆறு வயதான ஒரு விதவையான ஸ்டெல்லோஸ், இவரது ஓய்வூதியம் மிகவும் குறைவு என்பதால் அவரது தேவைக்காக கோழி சூப் விற்று வரும் இவர், அவரது கண்ணோட்டத்தை அவர் தானாகவே முன்வந்து என்னிடம் தெரிவித்தார். “சிரிசா வெட்கக்கேடானது,” அவர் விட்டுவிட்டு பிதற்றினார். “அவர்களிடம் எந்த மாற்று திட்டமும் இல்லாமல் — தயாரிப்பில்லாமல் சண்டையிடுவதற்கு சென்றனர். அந்த அரசாங்கம் ஒருபோதும் அந்த சண்டையில் எங்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. அது அந்த கடுமையான போராட்டத்திற்காக ஒருபோதும் மக்களைத் தயார் செய்திருக்கவில்லை. இது குற்றகரமான தகுதியின்மை என்றால், வேறென்ன இது என்று எனக்கு தெரியவில்லை!” என்றார்.