World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Münkler receives support from the far right in Germany

முன்ங்லெர் ஜேர்மனியின் தீவிர வலதிடமிருந்து ஆதரவைப் பெறுகிறார்

By Peter Schwarz
29 May 2015

Back to screen version

அரசியல் விஞ்ஞானி ஹெர்பிரட் முன்ங்லெர் தீவிர வலதிடமிருந்து ஆதரவைப் பெற்று வருகிறார். ஒவ்வொரு வாரமும் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அவரது விரிவுரைகளை விமர்சிக்கும் மாணவர்களுக்கு எதிரான அவரது பிரச்சாரத்திற்கு, புதிய வலதின் (New Right) ஊதுகுழலான Junge Freiheit வாரயிதழ் இப்போது ஆதரவளித்து வருகிறது.

நாஜி பின்புல சேவகர்களின் கண்காணிப்பின் கீழ்" என்ற கட்டுரையில், கார்ல்ஹென்ஸ் வைஸ்மான் முன்ங்லெர்-வாட்ச்" வலைப்பதிவை ஒரு "சர்வாதிகார இயக்கத்தின்" பாகமாக கண்டிக்கிறார். சாமானிய குடிமக்களை உளவுபார்க்கவும் மற்றும் கண்டிக்கவும் தேசிய சோசலிஸ்டுகளால் இந்த நாஜி பின்புல சேவகர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அவர் ஜேர்மனியின் அரசியல் விஞ்ஞானத்தைச் சுற்றியுள்ள தடைகள் பற்றி கேள்வி எழுப்ப" விரும்புவதை புகழ்ந்துரைத்து, அதே கட்டுரையில் Junge Freiheit முன்ங்லெர் மீது பாராட்டுகளைப் பொழிகிறது.

இத்தகைய "தடைகள்" “போரில் வெற்றிபெற்ற அமெரிக்காவால்" உருவாக்கப்பட்டவை. அது "புத்திஜீவித வாழ்வில் அரசின் தொல்சீர் பொது தத்துவமும் மற்றும் வரலாற்றாய்வியல் வகித்த முக்கிய பாத்திரத்தை உடைக்க, அதன் மீள்கல்வியூட்டும் வேலைத்திட்டத்தை பயன்படுத்தியது.” இந்த தத்துவம் "ஜனநாயக விஞ்ஞானத்தால்" பிரதியீடு செய்யப்பட்டது. அது "இடது அல்லது மிகப்பொருத்தமாக, இடது-தாராளவாத நிலைப்பாடு மட்டுமே நியாயபூர்வமானது எனக்கருதக்கூடிய கண்ணோட்டங்களது பரந்த மேலாதிக்கத்தில் போய் முடிந்தது,” என்பது வைஸ்மானின் கருத்தாக உள்ளது.

நீண்டகாலமாக முன்ங்லெர் "இந்த பொதுவான போக்கை எதிர்த்ததாக,” வைஸ்மான் எழுதுகிறார். தற்செயலாகவோ அல்லது திறமையான தந்திரங்களின் விளைவாகவோ இதுவரையில் அவரது படைப்பு சவால் செய்யப்படாமல் இருந்துள்ளது. ஆனால் இப்போது, அவரது பழமைவாத சகாக்களில் பலரைப் போலவே, அவர் "இடதுசாரி குற்றச்சாட்டுக்களின் பயங்கரத்திற்கு உள்ளாகி" வருகிறார், மேலும் "'நாட்டினை மனிதமுகம் கொண்ட ஒரு GDR (முன்னாள் கிழக்கு ஜேர்மனி) நாடாக மாற்றுவதற்காக வேலை செய்து வரும் நாஜி பின்புல சேவகர்களின் கண்காணிப்பின் கீழ் நிறுத்தப்பட்டுள்ளார்,” என்று அவர் எழுதுகிறார்.

பங்கரவாத கருத்துக்களை உண்டாக்குவதாக முன்ங்லெரின் விமர்சகர்களை வைஸ்மான் குற்றஞ்சாட்டுகிறார்: “ஒவ்வொரு சர்வாதிகார இயக்கத்தைப் போலவே, ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தை சுற்றித்தழுவும் இயக்கமும், ஓர் அமைப்பினது சர்வவல்லமையின் அடித்தளமிட்டிருக்காது, அதனது தூய கோட்பாட்டை பாதுகாக்கும் நல்ல மனசாட்சியின் மீது அடித்தளமிட்டுள்ளது. இதனுடன் சேர்ந்து அவர்களின் நடவடிக்கைகளில் இருந்தல்லாது மாறாக ஒரு கருத்திலிருந்து அல்லது ஒரு சந்தேகத்திற்குரிய கருத்திலிருந்து சந்தேகத்திற்குரியவர்களாக மாறியிருப்பவர்களை வெட்டும்மேடைக்கு அனுப்பும் ஒரு விருப்பமும் இதனுடன் சேர்கிறது. அது நிர்பந்தத்திலிருந்தோ அல்லது கட்டளைகளில் இருந்தோ அல்ல மாறாக ஓர் ஆழ்ந்த உள்ளார்ந்த பற்றுகோளில் இருந்து வருகிறது,” என்கிறார்.

Junge Freiheit முன்ங்லெரை ஆதரிப்பதானது, ஹம்போல்ட் பல்கலைகழக மோதலின் உள்ள அரசியல் உள்ளடக்கத்தைக் குறித்து கூடுதலானவற்றை மிகப்பலமாக எடுத்துக்காட்டுகிறது. 1986 இல் ஸ்தாபிக்கப்பட்ட அந்த பத்திரிகை கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளின் வலதுசாரிகளிலும் மற்றும் பகிரங்கமாக நவ-நாஜி வட்டாரங்களின் பரந்த பகுதிகளிலும் சென்றடைகிறது. அது தன்னைத்தானே தீவிர வலதின் புத்திஜீவித அங்கமாக காண்கிறது. இனச்சுத்திகரிப்பை மறுப்பது போன்ற மிக மூர்க்கமான நவ-நாஜி நிலைப்பாடுகளை அது தவிர்த்துக் கொள்கின்ற போதினும், அது நாஜிக்களுக்கு பாதை வகுத்தளித்த மற்றும் பகுதியாக அவர்களது சித்தாந்தத்தை உள்ளடக்கி இருந்த சித்தாந்த போக்குகளை மீட்டுயிர்ப்பிக்க முயல்கிறது.

ஒருபுறம் தீவிர இதழியலின் மற்றும் அவசியமாக கோரும் பிரிவினர்களுக்கும், மறுபுறம் தெளிவாக வரலாற்று-திருத்தல்வாத, வெகுஜன-தேசியவாத, வெளிநாட்டவர் விரோத மற்றும் இனவாத-சாயம் பூசிய நிலைப்பாடுகளுக்கும் இடையே" Junge Freiheit ஒரு "தந்திரோபாய புத்திசாலித்தனமான சமநிலையை" தேடி வருவதாக சமூவியலாளர் அல்பேர்ட் ஷெயர் எழுதியுள்ளார்.

முன்ங்லெர்-வாட்சை" கண்டித்து கட்டுரை எழுதிய கார்ல்ஹன்ஸ் வைஸ்மான், அத்தகைய போக்கின் ஒரு முன்னணி பிரதிநிதியாவார். Junge Freiheit இன் ஒரு மூத்த எழுத்தாளரான அவர், 2000 மற்றும் 2014க்கு இடையே, அரசு கொள்கை பயிலகத்தை நிறுவி நிர்வகித்தார். அது அப்பத்திரிகை உடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளது.

வைஸ்மானின் 1993 நூலான வரலாற்றை நினைவுகூரல் (Recalling History) என்பது ஜேர்மன் புதிய வலதிற்கான ஒரு வேலைத்திட்ட எழுத்துக்களாக கருதப்படுகிறது. விக்கிப்பீடியா அவரை "ஆர்மின் மோஹ்லெரின் மாணவராக" குறிப்பிடுகிறது. “அவரைக் குறித்து ஒரு விரிவான வாழ்க்கை வரலாறும் அவர் எழுதினார்”, அத்துடன் "எர்ன்ஸ்ட் யுங்கர், கார்ல் ஷ்மித், ஆர்துர் மொல்லர் வன் டேன் புரூக் மற்றும் வைய்மார் குடியரசின் 'பழமைவாத புரட்சியின்' ஏனைய பிரதிநிதிகளின் சிந்தனைக்கூடத்தைப் புதுப்பிக்க" விரும்புவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

வைஸ்மான் “‘சுயநம்பிக்கையுள்ள தேசம்' (நூலின் தலைப்பு) மூலமாக நாஜி காலகட்டத்துடன் நெருக்கமாக வரும் முயற்சியை திருத்தம்செய்ய முயல" போராடுகிறார் என்று விவரிக்கும் அளவிற்கு அந்த விக்கிப்பீடியா கட்டுரை செல்கிறது. “நீண்ட கால ஓட்டத்தில், பாரம்பரிய ஜேர்மன் வல்லரசு அரசியலை மீண்டும் கொண்டு வருவதற்காக மேற்குடன் ஜேர்மனி அணிசேர்வதை" அவர் கேள்விக்குரியதாக்குகின்றார்.

Weißmann ஏற்கனவே முன்ங்லெருடன் அரசியல் ஒற்றுமைகளை வெளிப்படையாக கண்டுள்ளார். முன்ங்லெரின் மிக சமீபத்திய நூல் Macht in der Mitte (மத்தியில் அதிகாரம்) என்பது, ஜேர்மனி ஐரோப்பாவில் மேலாதிக்க சக்தியாக மாற வேண்டும் மற்றும் "சிக்கலான எஜமானரின் பாத்திரத்தை" வகிக்க வேண்டுமென வாதிடுகிறது. முன்ங்லெரின் கண்ணோட்டங்கள் மீதான விமர்சனம் முற்றிலும் நியாயமானதும் மற்றும் அவசியமானதுமாகும் என்பதற்கு ஒருவருக்கு இன்னும் கூடுதலான ஆதாரம் அவசியப்பட்டிருந்தால், அது Junge Freiheit ஆல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்ங்லெருக்கு மட்டுமல்ல, மாறாக அவருடன் பணியாற்றும் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கிக்கும் வைஸ்மான் ஒற்றுமையுணர்வை வெளிப்படுத்துகிறார். அவர் எழுதுகிறார், முன்ங்லெரைப் போலவே வரலாற்றாளர் பார்பெரோவ்ஸ்கியும் "ஒரு சிறிய ட்ரொட்ஸ்கிச குழுவில் காணக்கூடிய" சூத்திரதாரிகளது நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் வெளிப்படையாக ஜேர்மன் சோசலிச சமத்துவ கட்சி மற்றும் அதன் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பான IYSSE குறிப்பிடுகிறார். அவை ஏர்ன்ஸ்ட் நோல்ட பார்பெரோவ்ஸ்கி அங்கீகரிப்பதையும் மற்றும் நாஜிக்களால் நடத்தப்பட்ட போர் குற்றங்களை அவர் குறைத்துக் காட்டுவதையும் விமர்சித்துள்ளது.

தேசிய சோசலிசத்தை மூடிமறைக்கும் நடவடிக்கையுடன் 1986 இல் வரலாற்றாளர்களின் கருத்துமுரண்பாடுகளைத் தொடங்கி வைத்த நோல்ட, அப்போதிருந்து ஹிட்லரின் பகிரங்க ஆதரவாளராக மாறியுள்ள அவர், Junge Freiheit இன் மாவீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 2008 இல், அவர்கள் அவருக்கு Gerhard Löwenthal விருது வழங்கி பெருமைப்படுத்தினார்கள். இந்த ஆண்டின் ஜனவரியில் அவரது தொன்றூற்றி இரண்டாம் வயது பிறந்தநாளில், அவர்கள் அவரை "இருபதாம் நூற்றாண்டின் போது, ஜேர்மன் மொழியின் மிக முக்கிய அரசியல் மற்றும் வரலாற்று சிந்தனையாளர்களில்" ஒருவர் என்று பாராட்டினர்.

2008 இல் நோல்ட இன் எண்பத்தி ஐந்தாவது பிறந்தநாளின் ஒரு விரிவான கட்டுரையில், Junge Freiheit “முதலாளித்துவ வர்க்க முகாமிலிருந்து போதிய ஆதரவு" கிடைக்காமல்", அது முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் "சுய உரிமை கோரிக்கையைக் கைவிடுவதற்கு" ஒப்பாக இருந்ததாக, அந்த வரலாற்றாளர்களின் சர்ச்சையில் நோல்ட இன் தோல்விக்காக புலம்பியது.

இப்போதிருந்து ஜேர்மன் தேசிய வரலாற்று குறித்த மரபார்ந்த முதலாளித்துவ வர்க்க பொருள்விளக்கம் வழக்கற்று போனது, சந்தேகத்திற்குரியதாகவும் ஆகிவிட்டது,” என்று மொரிட்ஸ் ஸ்வார்ஸ் குறை கூறினார். “இப்போது வரலாற்றை ஒரு புதிய புரிந்துகொள்ளல் மேலாதிக்கம் கொள்கிறது, அது முதலாளித்துவ ஜேர்மன் தேசிய அரசை ஒரு வரலாற்று தவறாக மற்றும் தார்மீக நிந்தையாக எடுத்துக்காட்ட முனைகின்றது.இது "1933 இல் மற்றும் மீண்டும் 1945/1949 இல் சுதந்திர ஜேர்மன் தேசிய அரசு மறைந்துபோனதாலும் மற்றும் தேசிய சோசலிசத்தின் புத்திஜீவித உள்நாட்டுயுத்த ஆட்சிகளாலும் மற்றும் (ஒரு தேசிய மத்திய குடியரசு என்பதை விட) மேற்குடன் இணைந்திருந்த ஒரு மத்திய குடியரசைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட்டதன் ஒரு விளைவாக இருந்தது.”

தீர்க்கதரிச காலம் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்ற கணிப்புடன் அந்த கட்டுரை முடிக்கப்பட்டிருந்தது. “அந்த வரலாற்று சிந்தனையாளர் எர்ன்ஸ்ட் நோல்ட மற்றும் வரலாற்று மேதைமையின் அரங்கில் அவரது திடமான முன்னெடுப்புகள், அவருக்குப் பின்னால் வரும் அவரது எதிர்ப்பாளர்களின் பெயர்கள் நீண்டகாலத்திற்கு முன்னரே மறக்கப்பட்டாலும், தொடர்ந்து பேசப்படும்.”

இவ்வாறு இருக்கையில், கடந்த ஆண்டு பெப்ரவரியில் Der Spiegel இல் எர்ன்ஸ்ட் நோல்ட தயக்கமின்றி மெச்சியிருந்த ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கியை Junge Freiheit பாதுகாக்கிறது என்பது எந்த ஆச்சரியத்தையும் கொண்டு வரவில்லை.

முன்ங்லெர் மற்றும் பார்பெரோவ்ஸ்கிக்கு அதிதீவிர வலதிலிருந்து வரும் பாராட்டுகள், ஹம்போல்ட் பல்கலைக்கழக கருத்துமோதல்களின் நிஜமான பிரச்சினைகளை, அதாவது வல்லரசு அரசியல், இராணுவவாதம் மற்றும் போருக்குத் திரும்புவது, மற்றும் அதுபோன்ற திருப்பத்தை நியாயப்படுத்துவதற்காக வரலாற்றைத் திருத்தி எழுதுவது ஆகியவற்றை அம்பலப்படுத்துகிறது.

இது விமர்சனத்துடன் கூட பொருந்தாத தன்மையானதாகவுள்ளது. அதனால் தான் பேச்சு சுதந்திரம் மற்றும் ஒரு பேராசிரியரை விமர்சிக்கும் அவர்களின் உரிமையைப் பயன்படுத்தியதைத் தவிர வேறொன்றையும் செய்திராத" முன்ங்லெர்-வாட்ச் எழுத்தாளர்கள் மீது ஏறத்தாழ ஒட்டுமொத்த முதலாளித்துவ ஊடகங்களும் கோபமாக பாய்கின்றன.