சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

වැඩ වේගවත් කිරීම් සහ කප්පාදුවලට එරෙහිව දික්වැල්ල වතුකම්කරුවන් වර්ජනයේ

இலங்கை: வேலைச்சுமை அதிகரிப்புக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிராக டிக்வெல்ல தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்

R.M. Gunathilake and S. K. Irangani
25 May 2015

Use this version to printSend feedback

ஹாலி எல, டிக்வெல்ல தோட்டத்தைச் சேர்ந்த டிக்வெல்ல பிரவின் தொழிலாளர்கள், நாளொன்றுக்கு பறிக்க வேண்டிய தேயிலைக் கொழுந்தின் அளைவை 16 கிலோவில் இருந்து 20 வரை அதிகரித்தமை உட்பட, வேலைச்சுமை அதிகரிப்புக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிராக மே 14ம் திகதிதியில் இருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மல்வத்த பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான டிக்வல்ல தோட்டமானது டீன்ஸ் லேன்ட, கீழ்ப் பிரிவு, டிக்வெல்ல மற்றும் ஊவ கெடவெல்ல என்ற பெயர்களில் 4 பாகங்களைக் கொண்டது. தோட்டத்தின் மொத்த தொழிலாளர் எண்ணிக்கை 1500 ஆக இருப்பதோடு டிக்வெல்ல பிரிவில் 235 தொழிலாளர்கள் உள்ளனர்.

கிடைக்கும் அன்றாட சம்பளம் 450 ரூபா அற்பத் தொகையாக இருப்பதனாலும், மேலதிகமாக பறிக்கப்படும் ஒரு கிலோ கொழுந்துக்கு 18 ரூபா கொடுக்கப்படுவதனாலும், அநேகத் தொழிலாளர்கள் 20 கிலோவையும் கடந்து மேலதிக கொழுந்து பறித்து உழைக்கத் தள்ளப்பட்டுள்ளனர். எனினும் கம்பனிக்குச் சொந்தமான தோட்டங்களில் இருந்து டிக்வெல்ல தேயிலைத் தொழிற்சாலைக்குக் கொண்டுசெல்லப்படும் கொழுந்தின் அளவு அதிகரிக்கும் நாட்களில், 25 கிலோ வரை அதிகமாக பறித்த தொழிலாளர்களின் கொழுந்தில் ஒரு பகுதியை சரியில்லை என்று அகற்றி, 20 கிலோ மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் அகற்றப்படும் கொழுந்து மீண்டும் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அரைத்து சந்தைப்பபடுத்தப்படுவதாகவும் டிக்வெல்ல தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

கம்பனியின் சிக்கன நடவடிக்கைகள், தமது தொழில் மற்றும் வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை உலக சோசலிச வலைத்த தள நிருபர்களிடம் தொழிலாளர்கள் விளக்கினர்.

தேயிலை செடிகளை புல் வளர்ந்து மூடியுள்ளன. கொழுந்து பறிக்கும் போது அவற்றை நாம் சுத்தப்படுத்திக்கொண்டே பறிக்க வேண்டும். புற்களால் கொழுந்து பறிக்க முடியாது என்று சொன்னால் இருவரை அதற்கு ஈடுபடுத்துவார்கள். எங்கள் கொழுந்தில் குறைத்துக்கொண்டுதான் அவர்களுக்கு சம்பளம் கொடுப்பர்என்று ஒரு தொழிலாளி கூறினார்.

இன்னொரு தொழிலாளி விளக்குகையில்: “அந்த காலத்தில் வாய்க்கால்களை துப்பரவு செய்ய சம்பளத்துக்கு ஒருவரை தோட்டத்தில் ஈடுபடுத்தினார்கள். தோட்டம் துப்பரவாக இருந்தது. இப்போது மாதம் 8,000 ரூபா கொடுத்து வெளியில் ஒருவரை எடுக்கின்றனர். ஆனாலும் வேலை சரியாகாச் செய்யப்படுவதில்லை. களை நாசினி அடிப்பதற்கு 2 ஹெக்டருக்கு 7 பேர் இருந்தார்கள். முன்னர் நாம் வேலை செய்யும் இடங்களுக்கு குடிக்கவும் தேனீர் அருந்தவும் பவுசர்களில் தண்ணீர்கொண்டு வந்தார்கள். இப்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. அரை மைல் கால் மைல் தூரம் மலைகளில் ஏறிச் சென்று தண்ணீர் கொண்டு சென்று வேலை செய்வது மிகக் கடினம். இப்போது களை நாசினி அடிப்பதும் இல்லை.”

தோட்டத்தில் நிரந்தரமற்ற ஊழியர்களை நிரந்தரமாக்குவதானால் அவர்கள் ஒரு வருடத்தற்கு 165 நாட்கள் தொடர்ந்து வேலை செய்திருக்க வேண்டும். கொழுந்து குறைவான காலத்தில் தற்காலிக ஊழியர்களுக்கு தொழில் கொடுக்காத காரணத்தால் இந்த இலக்கை எட்டுவது சாத்தியமற்றது. இந்த காரணத்தால் அவர்கள் எப்போதும் தற்காலிக தொழிலாளர்களாவே இருப்பதாகவும் இப்போது அத்தகை தொழிலாளர்கள் 90 பேர் தமது தோட்டத்தில் இருப்பதாகவும் தொழிலாளர்கள் கூறினர். இந்த நிலைமையை மேலும் உக்கிரமாக்கி மனித வள நிறுவனங்களில் இருந்து தொழிலாளர்களை கூலிக்கு அமர்த்தும் திட்டத்தையும் நிர்வாகிகள் நடைமுறைப்படுத்துகின்றனர். நிரந்தர தொழிலாளிக்கு கொடுக்கப்படும் லயன் வீடு, நலன்புரி உதவிகள் மற்றும் சேமலாப நிதி எதுவும் இந்த தற்கலிக தொழிலாளர்களுக்கு கிடைக்காததால், அதில் மிச்சப்படுத்தும் பணத்தை தமது இலபத்துக்கு சேர்த்துக்கொள்வது உரிமையாளர்களின் இலக்காகும்.

சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கும் சுகாதாரத்துக்கும் ஒதுக்கப்படும் செலவை குறைந்துள்ளமையின் தாக்கத்தை தொழிலாளர்கள் விளக்கினர்: “சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இப்போது ஒருவர்தான் உள்ளார். இருவர் இருந்தனர். பாலர் பாடசாலை போய் வீடு வரும் பிள்ளைகள், நாங்கள் வீடு வரும்வரை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில்தான் இருந்தனர். இப்போது அதையும் நிறுத்தி விட்டனர். ஆஸ்பத்திரியில் 5 வாட்டுகள் இருந்தாலும் அவற்றில் இப்போது யாரும் இல்லை. மருந்துகள் கிடையாது. இருந்த ஒரு அம்புலன்சும் இப்போது இல்லை. முன்னர் இந்த ஆஸ்பத்திரியில் குழந்தைகள் பிறந்தன. இப்போது பிரசவத்துக்குப் போகவும் திரும்பி வரவும் 3,000 ரூபா செலவாகிறது. தோட்டத்தில் 800 ரூபா மட்டுமே கொடுக்கின்றனர். அதை எடுக்க அலுவலகம் செல்ல 300 ரூபா செலவாகிறது. பஸ் போக்குவரத்து இல்லாததால் முச்சக்கர வண்டியில்தான் போகவேண்டும்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தினால் தொடர்ச்சியாக தமது போராட்டங்கள் காட்டிக்கொடுக்கப்படுகின்ற நிலைமையின் கீழ், கடந்த சில ஆண்டுகளாக தொழிலாளர்கள் அதிகாரத்துவத்திற்கு வெளியில் சுயாதீனமாக போராட்டத்தில் இறங்கி வருகின்றனர். அண்மையில், மஸ்கெலியா கிளனியூஜீ தோட்டத்தின் டீசைட் தோட்டத்தின் தொழிலாளர்கள், வேலைச்சுமை அதிகரிப்புக்கு எதிராக மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமது உரிமையாளர்களுடன் நடத்திய பேச்சுவார்தையில் நாளொன்றுக்கு பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவு மீண்டும் 18 கிலோவாக குறைக்கப்படுவதற்கு நிர்வாகிகள் கொடுத்த வாய்மூல உட்னபாட்டுக்கு அடிபணிந்து தேசிய தொழிலாளர் சங்கத் தலைவர்களில் ஒருவரான நகுலேஸ்வரன் மீண்டும் தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பினார். மீண்டும் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு எதிராக வேட்டையாடல் மற்றும் வேறு வகையிலான வேலைச்சுமை அதிகரிப்பு தாக்குலும் முன்னெடுக்கப்படுகின்றது.

எதிர் காலத்தில் இந்த தாக்குதல்கள் மேலும் உக்கிரமடையும். இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் இராஜதுரையின் அண்மைய கருத்துக்களில் அது தெளிவாகியுள்ளது. உலக சந்தையில் போட்டிக்கு முகங்கொடுத்து தேயிலை தொழிற்துறையை பாதுகாத்துக்கொள்வதென்றால், உற்பத்திச் செலவை நிச்சயமாக குறைத்துக்கொள்ள நேரும் என அவர் கூறுகின்றார். இதன் அர்த்தம்அதிக வேலை, குறைந்த சம்பளம்என்பதாகும். சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமும் பெருந்தோட்ட உரிமையாளர்களும் சேர்ந்து திட்டமிடும் இந்த தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்திற்கு வரும் தொழிலாளர்கள் சம்பந்தமாக, தமது பதிலிறுப்பு என்ன என்பதை அரசாங்கம் இப்போதே காட்டியுள்ளது. கல்வி வெட்டுக்கு எதிராக போராட்டத்திற்கு வரும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் பொலிஸ் தாக்குதல்கள், மாணவி ஒருவர் பாலியில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகளுக்கு எதிரான பொலிஸ் ஒடுக்குமுறை மற்றும் கடந்த வாரத்தில் சுற்றுச் சூழல் அழிவுக்கெதிராக போராட்டம் நடத்திய மீதொட முள்ள பிரதேசவாசிகள் மீது தொடுக்கப்பட்ட்ட பொலிஸ் தாக்குதல்களும் இது தொடர்பான தெளிவான உதாரணங்களாகும்.

இந்த தாக்குதல்கள் நெருக்கடி மிக்க முதலாளித்துவ அமைப்பில் இருந்தே ஊற்றெடுக்கின்றன. இந்த உண்மையை மூடி மறைத்து, இந்த இலாப நோக்கு அமைப்பு முறைக்குள்ளேயே தொழிலாளர்களை கட்டிப் போட்டு வைக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை மீறி தொழிலாளர்கள் போராட்டத்திற்கு வருவது முன்னணிப் பாதையாக இருந்தாலும், அது மட்டும் போதாது. தோட்டத் தொழிலாளர்கள் தமது போராட்டத்தை வெற்றிகொள்ள வேண்டுமெனில், ஏனைய தேயிலை உற்பத்தி நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் உட்பட சர்வதேச தொழிலாளர் வர்க்கத்துடன் ஒன்றிணைந்து, முதலாளித்துவத்தை தூக்கி வீசும் விஞ்ஞானபூர்வமான சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் போராட வேண்டியது அவசியமாகும்.