சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

අධිකරන තීන්දුවෙන් පසුවත් තුන්නාන එච්ආර්පී කම්හල පවත්වාගෙන යාමට එරෙහිව මහජන විරෝධය වැඩෙයි

இலங்கை: துன்னான எச்.ஆர்.பீ. தொழிற்சாலை நீதிமன்ற உத்தரவை மீறி இயங்குவதற்கு விரோதமாக மக்கள் எதிர்ப்பு வளர்ச்சியடைகின்றது

By Vilani Peiris
25 May 2015

Use this version to printSend feedback

ஹேலிஸ் கம்பனிக்கு சொந்தமான துன்னானவில் அமைந்துள்ள ஹங்வெல்ல ரப்பர் உற்பத்தி (HRP) தொழிற்சாலையால் ஏற்படும் சூழல் மாசடைவுக்கு எதிரான வழக்கில் 14 நாட்களுக்குள் தொழிற்சாலையை மூடிவிடுமாறு ஏப்ரல் 30ம் திகதி அவிஸ்சாவலை நீதவான் தீர்ப்பு வழங்கியிருந்தார். எனினும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதை சாக்காகக் கொண்டு தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்கி வருவதற்கு எதிராக வெகுஜன எதிர்ப்பு வளர்ந்து வருகின்றது.

அவிஸ்சாவலை மேலதிக நீதவான் டி.எம்.. செனவிரத்ன ஏப்ரல் 30 வழங்கிய தீர்ப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 1. கிணற்று நீர் மற்றும் மக்களின் பாவனைக்காக விநியோகிக்கப்படும் நீரைக் குடிப்பதற்கு உகந்ததான நிலைமை இன்மை... 2. விவசாய நடவடிக்கையில் ஈடுபட முடியாமை. 3. தொழிற்சாலையை அண்மித்த பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு பல்வேறு சரீரப் பாதிப்புகள் ஏற்படுகின்றமை. 4. சிறுநீர், வயிறு மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மக்கள் இலக்காகின்றமை. அன்றன்றட நடவடிக்கையில் ஈடுபட முடியாத வகையில் ஒலி எழுப்புவது, போன்ற துன்பங்கள் இந்தக் கம்பனியினால் மக்களுக்கு ஏற்படுவதாக, தீர்ப்பளிக்கின்றேன்.

இந்த நீதிமன்ற ஆணை பிரகாரம் தொழிற்சாலையை மூடிவிடுமாறு கோரி துன்னானை பிரதேசமக்கள் கடந்த மே 10 அன்று எதிர்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். களனி மிடியாவத்த சூழல் பாதுகாப்பு இயக்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டு தொழிற்சாலை முன்னால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றிய ஒரு பிரதேசவாசி, ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் போலவே மைத்ரிபால சிறிசேன-ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழும், தாம் உள்ளடங்கலாக பிரதேசவாசிகள் பொலிஸ் அடக்குமுறைக்கு தொடர்ந்தும் இலக்காவதாக உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் தெரிவித்தார். இந்த அடக்குமுறையின் பாகமாக, ஆர்ப்பாட்டத்தில் முக்கியத்துவம் வகித்த பத்மசிறி வீரசிங்க உட்பட்ட 12 பேர்களுக்கு எந்தவொரு கூட்டத்திலோ ஊர்வலங்களிலோ பங்குபற்றலாகாது என நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தாம் எதிர் கொள்ளும் சூழல் மாசுபடலுக்கு எதிராக, பிரதேசவாசிகளால் 2014 மார்ச் 16 நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு இராஜபக்ஷ அரசாங்கம் பொலீசாரை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. டசின் கணக்கில் மக்களை கைது செய்து பிணையில் விடுவித்த பொலீஸார். பின்னர், ஆர்ப்பாட்டத்தினை அடக்கவந்த பொலீஸ் அதிகாரி ஒருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எனக் கூறி ஐந்து பேரை சிறையிலடைத்தது. அவர்களில் மூவர் முற்றக விடுதலை செய்யப்பட்டாலும் ஏனைய இருவர் பிணையிலேயே விடுவிக்கப்பட்டுள்ளனர். அந்த இருவருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதில் பொலிஸ் இதுவரையும் தோல்வியடைந்துள்ள நிலைமையில், பொதுமக்களை அச்சுறுத்துவதற்காக வழக்கு தொடர்ந்தும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது.

தொழிற்சாலையை மூடிவிடுமாறு கோரி பிரதேசவாசிகள் தொடர்ந்தும் நடத்திவரும் பிரசாரத்தை நிறுத்திவிடும் உபாயமாக, 2014 பெப்ரவரி 28ம் திகதி, பாதுக்கை பொலீஸார் நீதிமன்றத்தில் செய்த முறைப்பட்டின் அடிப்படையில் தொழிற்சாலைக்கு எதிரான வழக்கு விசாரனைக்கு எடுக்கப்பட்டது. சூழல் மாசுபடுவதை பற்றிய முக்கிய தகவல்கள் அடிப்படை ஆய்வுகளினால் அம்பலத்துக்கு வந்த நிலையில், நிர்வாகத்தின் அழுத்தத்தின் பேரிலேயே நீதிமன்ற உத்தரவை அறிவிப்பது காலதாமதப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் அப்புறப்படுத்தப்படும் கழிவு நீர், சரியான தரத்தில் வெளியேற்றப்படாமை குறித்து 2004ம் ஆண்டில் சுற்றாடல் பாதுகப்பு சபை ஆனையாளர் நாயகத்தினால் அனுப்பப்பட்ட கடிதம், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கைப் பிரகாரம் அப்போது தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு நீரில் கலந்துள்ள அமோனியா மற்றும் நைட்ரஜன் அளவு அதிகூடிய மட்டத்தில் காணப்பட்டது. பிரதேசத்தில் சிறுவர்கள் மற்றும் முதியோர்களும் அடிக்கடி ஏற்படும் சுவாசப் பிரச்சினை, சரும நோய் போலவே சிறுநீரகம், ஈரல் மற்றும் வயிற்று நோய்களுக்கும் இலக்காகி வருவதற்கு இத்தொழிற்சாலையினால் ஏற்படும் மாசுபடுத்தல் காரணமாகியுள்ள விதத்தை தெளிவுபடுத்தும் சாட்சியங்கள் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

முதலிட்டு சபையிடமிருந்து பெற்ற சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் தம்மிடம் உள்ளதாகவும் மக்களின் வியாதிகளுக்கும் தமது நிறுவனத்திற்ம் இடையில் எவ்வித சம்மந்தமும் கிடையாது என்றும் கூறி, தொழிற்சாலை நிர்வாகம் சமர்ப்பித்துள்ள சாட்சியங்கள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தொழிற்சாலை நிர்வாகத்தின் மேற்முறையீட்டு மனுவின்படி, மே 25 வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. அன்று இரு தரப்பினரும் சாட்சியம் வழங்க வேண்டியுள்ளதால், அழுத்தம் கொடுப்பதன் மூலம் பிரதேசவாசிகளை அச்சுறுத்துவதற்கு பொலீஸார் முயற்சிப்பர். தொழிற்சாலையை மூடிவிட்டு வழக்கை விசாரிக்க வேண்டும் என பிரதேசவாசிகள் கூறும் அதேவேளை, தொழிற்சாலை இயங்கும் போதே வழக்கை விசாரிக்குமாறு நிறுவனம் கோருகின்றது.

மே 10 நிகழ்ந்த பிரசாரம் பற்றி உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய பிரதேசவாசி பின்வருமாறு தெரிவித்ததாவது: ’’அன்று சுமார் 2,500 பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர். பாதுக்கை பொலீஸார் உட்பட்ட 100 பொலீஸார் வரை எம்மை சுற்றி வளைத்திருந்தனர். கலகம் அடக்கும் படையும் வந்திருந்தது. தொழிற்சாலை ஊழியர்கள் கலந்து கொள்ளாவிட்டாலும் அவர்களது குடும்பத்தினர் சமூகமளித்திருந்தனர்.

நாம் மிகவும் பிரச்சினையுடன் வாழ்கிறேம். மழை நாட்களில் துர்நாற்றம் அதிகமாக உள்ளது. சாப்பிடவும் முடியாது. நீர் பட்டவுடன் அரிக்கின்றது. நகக்கண்களில் சீழ் வடிகிறது. கிணற்று நீரைக் குடிக்க முடியாது. இந்த அரசாங்கம் பதவியேற்றால் தொழிற்சாலை அகற்றப்படலாமென்று நாம் எண்ணினோம். அது நடக்கவில்லை. அந்த அரசாங்கத்திற்கும் இந்த அரசங்கத்திற்கும் வேறுபாடு கிடையாது.

இத் தொழிற்சாலை காரணமாக சிறுநீரக நோயாளிகள் அதிகரித்துள்ளனர். அத்தகைய நோயாளர்கள் 50 பேர் வரை இறந்துள்ளனர். 15 வயது சிறுவனும் இறந்துவிட்டான். வயல்கள் பாழடைந்துள்ளன. வயலில் சேறு தெறித்து ஒருவர் கண்களை இழந்துள்ளார். மூச்சுவிடுவது சிரமம். ஆடைகளிலும் புகைபடிகின்றது. வழக்குச் செலவையும் நாமே செய்கிறேம். முன்னைய பிரசாரத்தின் போது பெண்களாகிய நாமும் பொலீஸாரல் தாக்கப்பட்டோம். ஒடுக்கப்பட்ட எமக்குத்தான் எல்லாம் நடக்கிறது. எல்லா அரசாங்கமும் ஒன்று தான், என பெண் ஒருவர் தெரிவித்தார்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) வெலிவேரிய நீர் மாசுபடல் பற்றி ஆய்வு செய்வதற்காக சுயாதீன தொழிலாளர் விசாரணைக் கமிட்டியின் ஆய்வின் முக்கியத்துவம் பற்றி உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பிரதேசவாசிகளுடன் கலந்துரையாடினர். அப்போது நடந்த மக்கள் பிரசாரத்தினர் மத்தியிலேயே துன்னான நீர் மாசுபடுத்தல் பற்றிய ஆய்வு செய்ய அந்தக் கமிட்டி தீர்மானித்தது. வெலிவேரிய நீர் மாசடைவுக்காக குற்றச்சாட்டப்பட்ட வெனிக்ரோஸ் ரப்பர் தொழிற்சாலையும் ஹேலிஸ் கம்பனிக்கு சொந்தமான ஒன்றாகும்.

சுயாதீன தொழிலாளர் விசாரணைக் குழுவானது 6 மாத காலமாக நடத்திய ஆய்வுகளின் பின், தரம் வாய்ந்த முறையில் நீர்வெளியேற்றும் அமைப்பு இன்மையால் அசுத்த நீரை சூழலுடன் கலந்துவிட்ட இத் தொழிற்சாலை நீர்மாசடைவுக்கான பொறுப்பை ஏற்க வேண்டுமென்று அம்பலப்படுத்தியது. மேலும் சர்வதேச மூலதனத்தின் கட்டளையின்படி சுதந்திர வர்த்தக பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தி, மேற்குறிப்பிட்ட முதலீட்டளரை பேணும் ராஜபக்ஷ அரசாங்கம், வெடித்தெழும் தொழிலளர்கள் மற்றும் வறியவர்களது போராட்டத்தை நசுக்கித்தள்ளும் செயற்பாட்டை பரீட்சித்துப் பார்க்கும் நடவடிக்கையாக, வெலிவேரியவில் இராணுவத்தை பயன்படுத்தி நிராயுதபாணிகளான பொதுமக்களை சுட்டுத்தள்ளி மூன்று உயிர்களை பலியெடுத்திருப்பதை ஆய்வுக் குழு கண்டறிந்தது.

இலாபத்துக்காக உற்பத்திசெய்யும் முதலாளித்துவ அமைப்பினுள், தொழிற்துறை மாசுபாடுத்தலை நிறுத்த முடியாது என்றும், முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கிவீசி சோசலிச வேலைத்திட்டதின் கீழ், உலகப் பொருளதாரத்தை மறு சீரமைப்பதன் மூலம் மட்டுமே அதனை சாதிக்க முடியும் என்றும் விசாரணைக் குழு சுட்டிக்காட்டியாது.

அதே போன்று, துன்னானவில் இறந்த பொலீஸ் அதிகாரியின் மரணத்துக்கான சந்தேக நபர்கள் எனக் கூறி கைது செய்த சரத் மற்றும் ருவன் ஆகிய இருவரை குற்றச்சாட்டுகளே இன்றி தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பதானது அவர்களது ஜனநாயக உரிமைகளை மீறும் செயல் என கமிட்டி முடிவு செய்தது.

பொது மக்கள் எதிர்பின் காரணத்தால் வெனிக்ரோஸ் ரப்பர் தொழிற்சாலையை முடியுள்ள போதும் நீர் மாசுபடல் பற்றி எந்த வொரு உத்தியோக பூர்வ அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. அத்தோடு பியகம விசேட பொருளாதார வலையத்துக்குள் தொழிற்சாலையை மீண்டும் ஸ்தாபிக்க அரசாங்கம் இடமளித்துள்ளது, சூழல் மாசடைவைத் தடுக்க எந்தவொரு முறையான நடவடிக்கையும் எடுக்காமலேயே ஆகும்.

வெனிக்ரோஸ் தொழிற்சாலையை மூடியாதால் எந்தவொரு பிரசனையுமே தீர்க்கப்படவில்லை. அதனால் நோய்வாய்ப்பட்டவர்கள் இன்னமும் இன்னல்களை அனுபவிக்கின்றனர். மாசடைந்த நீரும் அப்படியே காணப்படுகிறது. இன்று வரையும் அநேகமானவர்களுக்கு சுத்தமான நீர் வழங்கப்படவில்லை. நீர்த் தேக்கங்களில் உயிரினங்கள் குறைந்து போயுள்ளதோடு சூழல் மாசடைவின் தாக்கம் பல வருடங்களுக்கு நீடிக்கும். தொழிற்சாலையில் சேவையாற்றும் ஊழியர்களின் வேலை பறிபோயுள்ளது. புதிய ஊழியர்கள் அற்ப சொற்ப சம்பளத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இராஜபக்ஷ அரசங்கத்தைப் போலவே, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமும், தமது சுற்றுச் சூழல் உரிமைக்காக முன்வரும் பொதுமக்களை நசுக்கித் தள்ளுவதன் ஊடாக, இலாபத்துக்காக உற்பத்தி செய்யும் முதலாளித்துவ அமைப்பினுள் பதவிக்கு வரும் சகல அரசாங்கங்களும் மனித உயிர்களை அலட்சியம் செய்து, முதலீட்டாளரது இலாபத்தை பேணிக்காப்பதற்காகவே அர்ப்பணித்துக்கொள்கின்றது என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் பகுப்பாய்வின் சரியான தன்மையை தெளிவுபடுத்தி நிற்கின்றது. ஹேலிஸ் கம்பனி கடந்த ஆண்டில் தனது இலாபத்தை 32 சதவீதம் அதிகரித்துக்கொண்டுள்ளது. அதாவது 4.9 பில்லியன் ரூபாய்கள் என்ற சாதனை மட்டத்தை ஈட்டியுள்ளது. இந்த இலாபத்தில் பெரும் பங்கு எச்.ஆர்.பீ. தொழிற்சாலைக்குரிய டிப்ட் புரொடக்ஸ் கம்பனியில் இருந்தே சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.