சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US officials consider nuclear strikes against Russia

அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யாவிற்கு எதிராக அணுஆயுத தாக்குதல்களை பரிசீலிக்கின்றனர்

By Niles Williamson
5 June 2015

Use this version to printSend feedback

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் அஷ்டன் கார்டர், ரஷ்யாவிற்கு எதிராக அவர்களது பொருளாதார மற்றும் இராணுவ நடவடிக்கையை எவ்வாறு தீவிரப்படுத்துவது என்பதை விவாதிக்க, இரண்டு டஜன் கணக்கான அமெரிக்க இராணுவ தளபதிகள் மற்றும் ஐரோப்பிய இராஜாங்க அதிகாரிகளை இன்று ஜேர்மனியின் ஸ்ருட்கார்டில் உள்ள அமெரிக்க ஐரோப்பிய கட்டளையகத்தின் தலைமையகத்தில் சந்திக்கிறார். அவர்கள் நடப்பு பொருளாதார தடைகளின் தாக்கத்தைக் குறித்தும், அத்துடன் ரஷ்யாவைப் போரைக் கொண்டு அச்சுறுத்தும் வகையில், கிழக்கு ஐரோப்பாவில் பெரும் எண்ணிக்கையிலான துருப்புகள் மற்றும் இராணுவ தளவாடங்களை நிலைநிறுத்துவதற்கு கிழக்கு உக்ரேனிய நெருக்கடியை பயன்படுத்திக் கொள்ளும் நேட்டோவின் மூலோபாயம் குறித்தும் அவர்கள் மதிப்பீடு செய்வார்கள்.

"கடந்த ஆண்டில் ரஷ்யா உடன் அதிகரித்த பதட்டங்களைக் குறித்து அமெரிக்காவும் மற்றும் முக்கிய கூட்டாளிகளும் எவ்வாறு சிந்திக்க வேண்டுமென மதிப்பீடு செய்வது மற்றும் மூலோபாயம் வகுப்பதே" அக்கூட்டத்தின் பிரதான நோக்கமாகுமென ஒரு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ராய்டர்ஸிற்கு தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு பரிந்துரையான, உக்ரேனுக்கு உயிர்பறிக்கும் ஆயுதங்கள் வழங்குவதற்கும் கார்டர் விருப்பமுடன் இருப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

மிகவும் ஆத்திரமூட்டும் வகையில், நேற்று அசோசியேடட் பிரஸால் வெளியிடப்பட்ட ஒரு செய்தி, 1987 இன் இடைத்தூர அளவிற்கான அணுஆயுத சக்திகளின் (Intermediate-range Nuclear Forces - INF) உடன்படிக்கையை ரஷ்யா மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டுகின்ற பெண்டகன் அதற்கு விடையிறுப்பாக, ரஷ்யாவிற்குள் இருக்கும் இராணுவ இலக்குகளுக்கு எதிராக அணுஆயுத ஏவுகணைகளைப் பிரயோகிக்க செயலூக்கத்துடன் பரிசீலித்துள்ளதாக நேற்று அறிவிக்கிறது. தடைசெய்ய செய்யப்பட்ட தூரத்திற்கு தரையிலிருந்து கப்பலைத் தாக்கும் ஏவுகணைகளை பறக்கவிட்டு சோதனை செய்ததன் மூலமாக INF அது மீறியுள்ளதாக கூறும் அமெரிக்க வாதங்களை ரஷ்யா மறுக்கிறது.

ரஷ்ய ஏவுகணைகளை வானிலேயே சுட்டு வீழ்த்தும் நோக்கில் ஐரோப்பாவில் ஏவுகணை-தகர்ப்பு பாதுகாப்புகளை நிறுத்துவது; ரஷ்ய இராணுவ தளங்கள் மீது முன்கூட்டிய அணுஆயுதமில்லா தாக்குதல்களை உள்ளடக்கிய ஒரு "எதிர்ப்புப்படை" விருப்புரிமை; மற்றும் இறுதியாக, ரஷ்யாவிற்குள் இருக்கும் இலக்குகளுக்கு எதிராக முன்கூட்டிய அணுஆயுத ஏவுகணை தாக்குதல்களை உள்ளடக்கிய "ஒன்றையொன்று எதிர்த்துத்தாக்கும் தாக்குதல் தகைமைகள்" ஆகிய மூன்று விருப்பதேர்வுகளை பெண்டகன் பரிசீலித்து வருகிறது.

அசோசியேடெட் பிரஸ் குறிப்பிடுகிறது: “ரஷ்ய பிராந்தியத்தில் உள்ள இராணுவ இலக்குகளை அழிக்க அமெரிக்க அணுஆயுதங்களின் தகைமையை மேம்படுத்தும் ஒரு விருப்புரிமையைக் குறித்து வெளிப்படையாக குறிப்பிடவில்லை என்றாலும், மறைமுகமாக கொண்டிருக்கும் அளவிற்கு அந்த விருப்புரிமைகள் செல்கின்றன.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்கா செயலூக்கத்தோடு ரஷ்யாவிற்கு எதிராக அணுஆயுத போருக்குத் தயாரிப்பு செய்து வருகிறது.

கார்டரின் அணுஆயுத கொள்கை உதவியாளர்களில் ஒருவரான ரோபர்ட் ஷேர், ஏப்ரல் மாதம் காங்கிரஸில் கூறுகையில், “எதிர்ப்புபடை" நடவடிக்கைகளை நிலைநிறுத்துவது என்பது "சொல்லப்போனால் ஏவுகணை ரஷ்யாவில் இருந்தாலும் கூட அதை தாக்கும் அளவிற்கு நம்மால் செல்ல முடியும்" என்பதை அர்த்தப்படுத்துகிறது.

ஏனைய பெண்டகன் அதிகாரிகளது கருத்துக்களின்படி, இந்த விருப்புரிமை ஐரோப்பா எங்கிலும் தரையிலிருந்து ஏவப்படும் கப்பல் தகர்ப்பு ஏவுகணைகளை நிலைநிறுத்துவதை உள்ளடக்கும்.

பெண்டகனின் செய்தி தொடர்பாளர் லெப்டினென்ட் கேர்னல் ஜோ ஸ்கிவெர்ஸ் அசோசியேடட் பிரஸிற்கு கூறுகையில், “பரிந்துரையின் கீழ் இருக்கும் அனைத்து சாத்தியக்கூறுகளும் அவர்களின் விதிமீறல்களில் இருந்து ரஷ்யா எந்தவித முக்கிய இராணுவ ஆதாயமும் பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்றார்.

வாஷிங்டன் மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளின் குற்றகரமான மற்றும் பொறுப்பற்ற வெளியுறவு கொள்கை மலைப்பூட்டி வருகிறது. ரஷ்ய படைகளுக்கு எதிரான ஒரு முன்கூட்டிய அணுஆயுத தாக்குதல், அதுவும் அவற்றில் பல மக்கள் நிறைந்த பகுதிகளுக்கு அருகில் என்பது ஒருசில நொடிகளில் மில்லியன் கணக்கானவர்ளின் உயிரைப் பறிக்கும் என்பதுடன் மனிதயினத்தையே துடைத்தழிக்கும் ஓர் அணுஆயுத போருக்கு இட்டுச் செல்லும். ரஷ்யாவை அச்சுறுத்தும் அமெரிக்க அதிகாரிகள் உண்மையில் அதுமாதிரியான ஒரு விளைவை விரும்பவில்லை, ஆனால் அவர்கள் மாஸ்கோவை அச்சுறுத்த மட்டுமே முயல்கிறார்கள் என்று கொண்டாலும் கூட, அங்கே அதுமாதிரியான அச்சுறுத்தல்களுக்கு புறநிலையாக ஆத்திரமூட்டும் ஒரு தர்க்கம் இருக்கிறது.

அமெரிக்க அதிகாரிகளின் அணுஆயுத போர்வெறியூட்டல், தீவிரமடைந்து வரும் இராணுவ பதட்டங்கள் மற்றும் மூலோபாய ஸ்திரமற்றதன்மைக்கு இடையே தற்செயலாக முழுமையான போராக வெடிக்கும் அபாயத்தை அளப்பரியளவில் உயர்த்துகிறது. நேட்டோ படைகள் ரஷ்யாவைச் சுற்றிலும், ஆர்டிக் மற்றும் பால்டிக் கடல்களிலிருந்து கிழக்கு ஐரோப்பா மற்றும் கருங்கடல் மற்றும் மத்தியதரைக்கடல் வரையில் இராணுவ ஒத்திகைகளை நடத்தி வருகின்றன. பிராந்திய இராணுவங்கள் மயிரிழையில் தூண்டிவிடக்கூடிய அளவில் எச்சரிக்கையூட்டப்பட்டுள்ளன.

ரஷ்யாவை அச்சுறுத்தும் அமெரிக்க அதிகாரிகள், அதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு கிரெம்ளின் எவ்வாறு விடையிறுக்கும் என்பதை அறியமாட்டார்கள். ஒரு திடீர் நேட்டோ தாக்குதல் அபாயம் குறித்து மாஸ்கோ கவலை கொண்டிருக்கும் நிலையில், ரஷ்யா அதன் ஏவுகணைகளை ஏவவில்லை என்றால் அவை தரையிலேயே அழிக்கப்படலாம் என்று அஞ்சி, அவற்றை ஏவுவதன் மூலமாக நேட்டோ இராணுவ நடவடிக்கையின் அனுமானித்த அறிகுறிகளுக்கு விடையிறுப்பு காட்டுவதற்கும் மிக அதிகமான சாத்தியக்கூறு உள்ளது. முழு அளவிலான ஒரு போருக்கு இட்டுச்செல்லும் தவறான கணக்கீடுகள் அல்லது தவறான தகவல்பரிமாற்றங்களின் அபாயமே கூட மிக அளப்பரியளவில் உயர்ந்துள்ளன.

ஷேர் மற்றும் கார்டரின் அறிக்கைகள், பெப்ரவரியில் கியேவில் பாசிச தலைமையிலான பதவிக்கவிழ்ப்பை ஆதரிப்பதென்று நேட்டோ எடுத்த முடிவும், MH17 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு எந்தவித ஆதாரமும் இல்லாமல் ரஷ்யா மீது குற்றஞ்சுமத்தியதும் போர் அபாயத்தை முன்னிறுத்துகின்றன என்ற WSWS இன் கடந்த ஆண்டு எச்சரிக்கைகளை உறுதிப்படுத்துகின்றன. “அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான அணுஆயுத யுத்தத்தின் சாத்தியக்கூறு உட்பட யுத்தத்திற்கு நீங்கள் தயாரா? மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH17 அழிக்கப்பட்டதற்கு பின்னர் ஏற்பட்டிருக்கும் நிகழ்வுகளின் வெளிச்சத்தில் ஒவ்வொருவரும் இந்த கேள்வியை கட்டாயமாக தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டும்,” என்று அது எழுதியது.

கியேவ் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர், ரஷ்யா மீதான ஒரு நேட்டோ தாக்குதலுக்கு அஞ்சி, அதன் அணுஆயுத படைகள் உட்பட ரஷ்ய படைகளை அவர் எச்சரிக்கைப்படுத்தி இருப்பதாக மார்ச்சில் புட்டின் குறிப்பிட்டார். அமெரிக்க கொள்கையிலிருந்து இப்போது எழும் போர் அச்சுறுத்தல் அமெரிக்க இராணுவ அறிக்கைகளால் நேரடியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய அச்சுறுத்தல்கள் பெரிதும் உலக தொழிலாள வர்க்கத்தின் முதுகுக்குப் பின்னால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட அமெரிக்க போர்களுக்கு அவர்களின் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர். இருப்பினும் இந்த போர்கள் தொடங்கி அண்மித்தளவில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர், உலகம் இன்னுமொரு இரத்தந்தோய்ந்த மற்றும் மிகவும் பேரழிவுகொண்ட மோதலின் விளிம்பில் நிற்கிறது, உலகெங்கிலும் உள்ள ஊடகங்களும் ஆளும் மேற்தட்டும் அணுஆயுத போர் அபாயத்தை மறைத்து வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, கடந்த ஆண்டு கிரிமியா ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதற்கு விடையிறுப்பாக கொண்டு வரப்பட்ட பொருளாதார தடைகளை ஐரோப்பிய தலைவர்கள் பேண வேண்டுமென அழுத்தமளித்து, இந்த வாரயிறுதியில் ஜி7 உச்சிமாநாட்டில் ரஷ்யா மீதான அழுத்தத்தைத் தீவிரப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் உக்ரேனில் நடந்த சமீபத்திய வன்முறை வெடிப்பு, இதற்காக அமெரிக்கா ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டுகிற நிலையில், அது தடைகளைத் தொடர்வதற்கு ஒரு போலிக்காரணமாக சேவை செய்யக்கூடும்.

வியாழனன்று நாடாளுமன்றத்தில் பேசிய உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோ "ரஷ்யா மற்றும் பயங்கரவாத படைகளின் பெரியளவிலான விரோதங்கள் புதுப்பிக்கப்படுவதன் மிகப்பெரிய அச்சுறுத்தல்" குறித்து எச்சரித்தார். கிழக்கு உக்ரேனில் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் டொனெட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ்க்கில் ரஷ்யா 9,000 சிப்பாய்களை நிலைநிறுத்தி இருப்பதாக அவர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் வாதிட்டார்.

உக்ரேனிய இராணுவம் எதிரியின் ஒரு புதிய தாக்குதலுக்கும், அத்துடன் ரஷ்ய கூட்டமைப்பின் ஒட்டுமொத்த எல்லையை ஒட்டிய ஒரு முழு-அளவிலான படையெடுப்புக்கும் தயாராக இருக்க வேண்டும்,” என்று பொறோஷென்கோ தெரிவித்தார். “நாம் இதற்கு நிஜமாக தயாராக இருக்க வேண்டும்,” என்றார். நாட்டைப் பாதுகாப்பதற்கு தயாராக உக்ரேனிய இராணுவம் குறைந்தபட்சம் 5,000 சிப்பாய்களைக் கிழக்கில் நிலைநிறுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பொறோஷென்கோவின் கருத்துக்கள், கியேவ் படைகள் மற்றும் ரஷ்ய-ஆதரவிலான பிரிவினைவாதிகளுக்கு இடையே கிழக்கு உக்ரேனில் சண்டை மீண்டும் தொடங்கிய ஒரு நாளுக்குப் பின்னர் வந்தது, அதில் டஜன் கணக்கானவர்கள் காயப்பட்டனர். இந்த வார சண்டை பெப்ரவரியில் கையெழுத்திடப்பட்ட இன்று வரையிலான போர்நிறுத்தம் மிகப்பெரியளவில் மீறப்பட்டதைக் குறித்தது.

கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் திமிட்ரி பெஸ்கோவ் வியாழனன்று செய்தியாளர்களுக்குக் கூறுகையில், வரவிருக்கின்ற இந்த வாரயிறுதியின் ஜி7 உச்சிமாநாடு மற்றும் இந்த மாதயிறுதியில் புருசெல்ஸின் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் கவனத்தை ஈர்க்கும் வகையில் முந்தைய நாட்களின் விரோதங்கள் கியேவால் தூண்டிவிடப்பட்டிருப்பதாக ரஷ்யா நம்புகிறது என்றார்.

கிளர்ச்சியாளர்களின் இரும்புபிடியில் இருக்கும் டொனெட்ஸ்க்கில் இருந்து சுமார் ஒன்பது மைல் மேற்கில் இருக்கும் மரின்காவில் சண்டை தொடங்குவதற்கு ஒவ்வொரு தரப்பும் எதிர்தரப்பை குற்றஞ்சாட்டின. பொறோஷென்கோவின் ஓர் ஆலோசகரான யுரி பிர்யுகோவ் வியாழனன்று அறிவிக்கையில், சண்டையில் ஐந்து உக்ரேனிய சிப்பாய்கள் கொல்லப்பட்டனர், 39 பேர் காயமடைந்தனர் என்றார். டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் செய்தி தொடர்பாளரும் துணை பாதுகாப்பு மந்திரியுமான எட்வார்ட் பாசுரின் Interfaxக்கு கூறுகையில், 16 கிளர்ச்சி போராளிகளும் ஐந்து பொதுமக்களும் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

உக்ரேனிய படைகள் புதனன்று கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் டொனெட்ஸ்க் நகரம் மீது ஆட்டிலரிகளை வீசியது. தென்மேற்கு மாவட்டங்களான கிரொவ்ஸ்கி மற்றும் பெட்ரொவ்ஸ்கியில் குண்டுகள் விழுந்தன, அதில் 6 பேர் கொல்லப்பட்டதுடன் குறைந்தபட்சம் 90 பேர் காயமடைந்தனர். அந்நகரின் சொகோல் சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டது, அதன் வரிசையான பல கடைகள் எரிந்து தரைமட்டமானது.

புதன்கிழமை அபிவிருத்திகளுக்கு விடையிறுப்பாக, பாசிசவாத ரைட் செக்டார் அங்கத்தவர்கள் சண்டையிடுவதற்கு ஒன்றுதிரளுமாறு அழைக்கப்பட்டுள்ளனர். அந்த போராளிகள் குழுக்களின் துணைஇராணுவப்படை பிரிவின் தளபதி Andrey Stempitsky, போர்நிறுத்தத்தின் போது அவர்களின் வீடுகளுக்குச் சென்றவர்கள்அவர்களது தாக்குதல் பிரிவுகள் திரும்புமாறு" பேஸ்புக்கில் ஒரு செய்தி வெளியிட்டார். ரைட் செக்டார் "தற்காலிக சமாதான தூதர்களைப் புறக்கணித்து, போர் நடத்தும்" என்று அவர் எச்சரித்தார்.