சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: One year of the Modi-led, BJP government

இந்தியா: மோடி தலைமையிலான, பா.. அரசாங்கத்தின் ஓராண்டு

By Deepal Jayasekera and Keith Jones
30 May 2015

Use this version to printSend feedback

இந்த வாரம், இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி (பா..) அரசாங்கம் பதவிக்கு வந்த தனது ஒராண்டு நிறைவை குறிக்கும் போது "நிலைமாற்ற" மாற்றத்திற்கான தனது ஒட்டத்தை தீவிரப்படுத்துவதாக உறுதி பூண்டது.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2011இற்கு பிந்தைய காலத்தில் பாதியாக மாறியதால் அதிர்ச்சிக்குள்ளான இந்திய முதலாளித்துவ வர்க்கம் மிகவும் தீவிரமான ஒரு கொள்கையை முன்னெடுக்க குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அவரது பா.. கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்தது, அது உலக மட்டத்தில் தமது சூறையாடும் நலன்களை தீவிரமாக நிலைநாட்டவும், தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களின் இழப்பில் பூகோள மூலதனத்திற்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கு இந்தியாவை மறுசீரமைக்கிறது.

ஒரு சுய பாணியில் இந்து மத பலம் வாய்ந்த மோடி, குஜராத் முதல்வராக 2002-ல் ஒரு கொடூரமான முஸ்லீம்-விரோத படுகொலைகளுக்கு தலைமை தாங்கினார், இந்த பிற்போக்கு நிகழ்ச்சி நிரலுக்கு அவர் மிகவும் ஒரு பொருத்தமானவராக இருக்கிறார்.

அதன் முதல் ஆண்டில், பாரதி ஜனதா கட்சி அரசாங்கம் கூர்மையாக வலது பக்கம் திரும்பியது. அது வாஷிங்டனின் சீன விரோத ‘’முன்னெடுப்புக்கு’’ முக்கியமான ஆதரவை கொடுத்தது, துடைத்துக்கட்டும் சமூக செலவின வெட்டுக்களை மற்றும் ஒரு தொகையான நவீன தாராளமய சீர்திருத்தங்களை திணித்தது, மற்றும் இந்து மத மேலாதிக்கவாதத்தை தவிர்ப்பு மற்றும் ஆதரவு மூலமாக தூண்டிவிட்டது.

இந்தியாவினதும் அமெரிக்காவினதும் சீன-விரோத "முன்னெடுப்பு"

மோடி அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை மாற்றத்தை விளக்கி, வெளியுறவு செயலாளர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் எக்கனாமிஸ்ட் இற்கு கூறும்போது இந்தியா தற்போது ஒரு ‘’முன்னணி சக்தியாகவே வளர விரும்புகின்றது, வெறுமனே ஒரு சமநிலை சக்தியாக அல்ல" என்றார்.

உண்மையில், மக்கள் தொகையில் சீனாவுக்கு ஈடான, ஆனால் அதன் ஐந்தில் ஒரு பொருளாதாரத்தைக் கொண்ட நாடான இந்தியா, இன்னும் கூடுதலான அளவு ஆபத்தான மற்றும் பிற்போக்கு சமநிலைப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, அதாவது இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் போருக்கான அச்சுறுத்தலுக்கு தூபமிடுகிறது..

அமெரிக்காவுடனான இந்தியாவின் "பூகோள மூலோபாய" கூட்டை மோடி ஒரு புதிய மட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார். இது நன்றாக எடுத்துக் காட்டப்படுவது எதில் என்றால் கடந்த ஜனவரியில் இந்திய குடியரசுத் தினக் கொண்டாட்டங்களில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் பங்கெடுப்பு மற்றும் அதையடுத்து, மோடி மற்றும் ஒபாமாவின்  கையெழுத்தின் கீழ் ‘’வெளியிடப்பட்ட  ஒரு "ஆசிய-பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கான  கூட்டு மூலோபாய பார்வை’’’, அது தென் சீன கடலில் மோதல்.தொடர்பாக அமெரிக்கா வரைந்துள்ள மொழியையும் உள்ளடக்கியுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்திய பக்கமாக சாய்கையில் மோடி அரசாங்கம் இரட்டை நோக்கங்கள் கொண்டதாக இறுதி ஆய்வில் பார்த்தால் அவை ஒன்றுடன் ஒன்று , இயைந்து செல்லாதவையாக இருக்கின்றன. ஒரு புறம், இந்தியா ஒரு உலக சக்தியாக ஆவதற்கு "உதவி" செய்வதாக கூறும் வாஷிங்டனின் உறுதிமொழியை உச்சிவரை சுரண்டிக்கொள்ளும் உறுதிப்பாட்டுடன் உள்ளது, இதில் நவீன ஆயுதங்கள் விற்பனை மற்றும் இந்தியப் பெருங்கடலில் ஒரு சக்தியாக மாறுவதற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் அதன் அதன் பொருளாதார மற்றும் இராணுவ மூலோபாயத்தை பெரிதும் விரிவாக்கம் செய்யும் இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பது உள்ளடங்கி உள்ளது.

மறுபுறம், மோடி மற்றும், இந்திய உயரடுக்கு வாஷிங்டனின் ஆதரவை சீனாவுடன் நெம்பு கோலாக பயன்படுத்த விரும்புகின்றனர். இந்தியாவுக்கு பெய்ஜிங் முதலீடு மற்றும் ஊக்கத் திட்டங்களை வழங்கும் என்றும் அவ்வாறு செய்வதற்கு காரணம் புது டெல்லி தனது சொற்பமாக இருக்கும் "மூலோபாய சுயாட்சி’’ யின் மிச்சமீதத்தையும் கைவிட்டு அமெரிக்கா, மற்றும் 'அப்பகுதியிலுள்ள அதன் மற்ற பிரதான கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் ஒரு பெயரளவிலான சீன எதிர்ப்பு கூட்டணியில் இணைவதை தடுப்பதற்காகவே என்று கணக்கிடுகின்றனர்.

இந்த மாத முற்பகுதியில், மோடி சீனாவுக்கு பயணம் செய்தார். அங்கு இருந்தபோது, “ஒருவருக்கு எதிரான மற்றொருவரின் கூட்டணிகள் பற்றிய பேச்சுக்களுக்கு அடித்தளம் எதுவும் கிடையாது" என்று உறுதியாகக் கூறினார். எங்களில் யாரையும் கட்டுப்படுத்தவும் முடியாது அல்லது யாராவது ஒருவரின் திட்டங்களின் பகுதியாகவும் மாறவும் மாட்டாது. தொலைத்தொடர்பு மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் என கருதப்படும் பிற பகுதிகளில் சீனாவின் முதலீட்டுக்கு தடை விதித்த முன்னைய அரசாங்கத்தை விட தமது அரசாங்கம் சீனாவின் முதலீட்டுக்கு மிகவும் வரவேற்பு அளிக்கும் என உறுதியளித்தார்.

எனினும், மோடி பெய்ஜிங்கை கடிந்து கொள்ளவும் செய்தார், நெருக்கமான உறவுகள் சீனா அதன் நடத்தையை மாற்றம் செய்வதை சார்ந்து இருக்கும் என்றார்அவர் குறிப்பாக பாகிஸ்தான் வழியாக அரேபிய கடல் துறைமுகமான குவாடருக்கு ஒரு பொருளாதார வழிப்பாதையை உருவாக்க சீனா 46 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதை தாக்கினார்.

அமெரிக்க-இந்திய இராணுவ ஒத்துழைப்பு விரிவாக்கம் உள்பட மற்றும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் நாற்கர மூலோபாய திட்டமிடல் மற்றும் பயிற்சிகளில் இந்தியா பங்கெடுப்பதை விரைவில் அங்கீகரிக்க இருப்பதாக முடி்வு, இவ்வாறான மோடி அரசாங்கத்தின் சூழ்ச்சிகள், அமெரிக்காவை சீனாவுக்கு எதிரான அதன் பொறுப்பற்ற யுத்த உந்தலில் ஊக்குவிக்கிறது.

இதற்கிடையில், பா அரசாங்கம் மற்றும் இந்திய முதலாளித்துவ வர்க்கம் தங்களை பிராந்திய சக்தியாக திணிக்க எடுக்கும் சொந்த முயற்சிகளை தொடர்வதற்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அவர்களுக்கு வாரி வழங்கும் ஆதரவில் இருந்து வலிமை பெற்று வருகின்றனர். "உங்கள் அயலவர்கள் உங்களுடன் இல்லை என்றால் நீங்கள் ஒரு முன்னணி சக்தியாக இருக்க முடியாது," என்று வெளியுறவு செயலாளர் ஜெய்ஷங்கர் எக்கனொமிஸ்ட்க்கு கூறினார். "உங்களை பலப்படுத்துவதற்கு அது உங்களுக்கு வேண்டும்."

இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கு எதிராக ஒரு வெற்றிகரமான ஆட்சி மாற்றத்தை நடத்துவதில் இந்தியா வாஷிங்டனுடன் நெருக்கமாக பணியாற்றியது, அவர் பெய்ஜிங்குடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாக அவர்கள் இருவரும் கருதினார்கள்இலங்கையில் ஒரு சீன நீர்மூழ்கிக் கப்பல் ஓரங்கட்டிய போது இந்தியா அதன் முறைப்பாடுகளை செய்தபோது இராஜபக்ஷ அதனை அலட்சியம் செய்தது, இதனால் புது டெல்லி, குறிப்பாக கோபம் அடைந்தது.

மிகவும் பெருமளவில் தனது சொந்த முன் முயற்சியிலேயே, பாஜக அரசாங்கம் பாகிஸ்தான் மீது அழுத்தத்தை அதிகப்படுத்தியது, அது இரண்டு அணு ஆயுத சக்திகளுக்கு இடையில் ஏழு பத்தாண்டுகளாக இருந்து வரும் பிற்போக்கான சர்ச்சையில் "ஆட்ட விதிகளை மாற்றும்" நோக்கம் கொண்டது.

சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியம் உள்பட, இந்திய பாகிஸ்தானிய எல்லை தொடர்பாக இந்தியா எடுத்து வரும் மிகவும் ஆக்கிரோஷமான நிலைப்பாடு பற்றி பாஜக மற்றும் இந்திய இராணுவ தளபதிகள் புளுகினார்கள். கடந்த அக்டோபர் மாதத்தில், ஒரு தசாப்தத்திற்கும் மேல் கண்டிராத மிக மோசமான எல்லை மோதல்கள் ஏற்பட்டது.

சமீபத்திய வாரங்களில் பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் இராணுவப் பேச்சாளர், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மற்றும் கிளர்ச்சிக் குழுக்களுக்கு இந்தியா உதவிபுரிவதாக குற்றம் சாட்டி உள்ளனர். இந்தியா இந்த கூற்றுக்களை எள்ளி நகையாடியது. இருந்தபோதிலும் அதன் சொந்த பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர், மே 22 அன்று பெருமையடித்தார். அதாவது இந்தியா இப்போது பாதுகாப்பு அச்சுறுத்தல்களை, "நீங்கள் பயங்கரவாதி(களை) பயங்கரவாதி (கள்) மூலம் நடுநிலை செய்யவேண்டும்’’ என்ற டெனட் அடிப்படையில் ஒரு "செயல்திறனுள்ள  கொள்கை" மூலம் கையாளகிறது.

மேலும் மேலும் அதிகமாக இந்திய-பாகிஸ்தானிய மோதல்கள் சீன-அமெரிக்க மோதலுடன் பிணைந்து வருகிறது, ஒவ்வொன்றுக்கும் ஒரு வெடிப்பு தன்மை கொண்ட பரிமாணத்தை சேர்க்கிறது.

பல தசாப்தங்களாக, தெற்கு ஆசியா தொடர்பாக ஒரு உயர் மட்ட சிஐஏ மூலோபாயவாதி மற்றும் புரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் தற்போதைய சிறப்பு நிபுணராகவும் இருக்கும் புருஷ் ரிடேல், இந்த வாரம் "மோடி அரசாங்கத்தின் ஓராண்டு: அவர்களுக்கு எதிராக நாம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டார். அது வாதிடுகிறது அதாவது மோடியின் பதவிக்காலத்தில் "இருமுனை கூட்டணி அமைப்பு தெற்கு ஆசியாவில் கடினமாகியது. கூட்டணி அமைப்பு முற்றிலும் பெயரளவில் உள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இந்தியா ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்கிறது, சீனா மற்றும் பாகிஸ்தான் ஒன்றுடன் ஒன்று மிகவும் நெருக்கமாக வந்துள்ளன."

ரீடல் அக்கறையற்ற பார்வையாளர் இல்லை. அவர் சீன பொருளாதார வழிப்பாதை மீதான இந்திய பதட்டங்களை சுரண்டிக் கொள்ளும் ஒரு பார்வையில் தான் இந்தியன் எக்ஸ்பிரஸ் இல் அவரது கட்டுரை பகுதியை வைத்தார். ஆனால் அமெரிக்கா, இந்தியாவை அரவணைத்து மற்றும் ஆயுதபாணியாக்கும் தர்க்கம், வாஷிங்டன் பக்கமாக இந்தியா மேலும் அதிகமாக அப்பட்டமாக சாய்வது மற்றும் பாகிஸ்தானை அதன் இடத்தில் வைப்பதற்காக இந்திய முதலாளித்துவ வர்க்கம் தள்ளுவது என்பது ஆசியாவுக்கும் மற்றும், உண்மையிலேயே, உலகிற்கும் பேரழிவு விளைவுகளை உண்டுபண்ணக்கூடிய வகையில் பெய்ஜிங் மற்றும் இஸ்லாமாபாத் என்றுமில்லாத ஒரு நெருக்கமான அரவணைப்புக்கு செல்வதற்கு உந்துவதாகும்.

பாஜக வின் சமூக விரோத நிகழ்ச்சி நிரல்

உள்நாட்டில், மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் ஒரு சமூக விரோத நிகழ்ச்சி நிரலை பின்பற்றுகிறது. அதன் நோக்கம், இந்தியாவை, உலக முதலாளித்துவ உற்பத்தியில் ஒரு மலிவு-உழைப்பு விநியோக சங்கிலி மையமாக மாற்றுவதே. இந்த இறுதி நோக்கத்தை அடைவதற்காக நவீன தாராளவாத "சுதந்திர சந்தை" கொள்கைககளின் அடிப்படையில் சமூகப்-பொருளாதார வாழ்வின் ஒவ்வொரு வடிவத்தையும் மறுசீரமைப்பு செய்கிறது, உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான செலவை உழைக்கும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் படியாக செய்கிறது இந்தியாவின் மனித மற்றும் இயற்கை வளங்களை முதலீட்டாளர்கள் இலாபகரமாக சுரண்ட வேண்டி இருக்கிறது.

நிதி ஒருங்கிணைப்பு என்ற பெயரில், பாஜக அரசாங்கம் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் இராணுவச் செலவு உயர்த்தப்பட்ட போதிலும் இந்திய அரசாங்கத்தின் செலவு 2011-12 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.8 சதவீதமாக இருந்து பாஜக அரசாங்கத்தின் முதல் ஆண்டில் 2014-15 ல் 13.3 சதவீதமாக குறைந்து விட்டது.

பாஜக, 1.75 லட்சம் கோடி ரூபாய் அல்லது 27.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்படும் சமூகச் செலவை வெட்டியுள்ளது-இந்த தொகை இந்தியாவின் தேசிய வரவு-செலவு திட்டத்தில் சுமார் 10 சதவீதம். இந்த நாட்டில் மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். மற்றும் அரசாங்கம் பொது சுகாதாரத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1 சதவீதம் மட்டுமே செலவிடுகிறது.

பாஜக, தனியார்மயமாக்கும் வேகத்தை அதிகரித்துள்ளது, பொருளாதாரத்தின் முக்கிய பிரிவுகளில் அந்நிய முதலீடு வரம்புகளை உயர்த்தியுள்ளது, ஒரு பிற்போக்குத்தனமான தேசிய சரக்கு மற்றும் சேவைகள் வரியை அறிமுகப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, மற்றும் கூடுதல் பொறுப்புகள் மற்றும் வருவாயை மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது, இது பரவலாக்கத்தை சமூக திட்டங்களை கீழறுப்பதற்கான ஒரு பொறிமுறையாக பயன்படுத்தும் தீய உள்நோக்கம் கொண்டது.

ஏற்கனவே உணவு மற்றும் உர விலை மானியங்களுக்கு பதிலாக நேரடியாக பணம் வழங்குவதை நோக்கி பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, இந்த மாற்றம் பற்றி நீண்ட காலமாகவே சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி வாதிட்டு வந்துள்ளது. ஏனென்றால் அதை பெறுவோரின் எண்ணிக்கை மிகவும் எளிதாக வெகுவாக குறையும் மற்றும் காலப்போக்கில் வழங்கப்படும் பணத்தின் மதிப்பை விலைவாசி ஏற்றம் அரித்து விடும்.

இந்தியாவின் மிகவும் அடிப்படையான மற்றும் முற்றிலும் போதாத சமூக நலன்புரி திட்டங்கள்அவை எவ்வாறாயினும் அடிப்படை சமூக உரிமைகள் பற்றிய கருத்துருவை கொண்டிருக்கின்றன, இவற்றை "காப்பீடு" திட்டங்கள் மூலமாக பிரதியீடு செய்வதே ஒரு நீண்ட கால இலக்கு, இத்திட்டத்தில் சேர்பவர்கள் பிரிமியம் செலுத்துவதற்குள்ள திறனில் தான் எந்தளவுக்கு திட்டங்கள் கிடைக்கும் என்பது தங்கியள்ளது.

முதலாளித்துவ வளர்ச்சிக்காக நிலம் கையகப்படுத்துவதை எளிதாக்கும் சட்டம் இயற்றுவதற்கு பாராளுமன்ற ஒப்புதல் பெறுவதில் இந்த அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. ஆனால் அது மீண்டும் மீண்டும் தற்காலிகமாக சட்டங்களை இயற்றி அதன்மூலம் அச்சட்டம் தாக்கம் பெற செய்தது மற்றும் அதன் மூலம் ஜனநாயக விரோத வழிகளில் அதன் திட்டத்தை அமுல்படுத்த தயாராக உள்ளது என்பதையும் பெரும் வணிகர்களுக்கு எடுத்துக் காட்டுகிறது.

வகுப்புவாத பிற்போக்குத்தனத்தை தூண்டுதல் 

மோடி மற்றும் பாஜக பக்கம் முதலாளித்துவ வர்க்கம் திரும்பியது பலத்திற்கான  ஒரு அறிகுறி இல்லை. பாஜக ஒரு நச்சுத்தனமான, மிகவும் எளிதில் தீப்பிடிக்கும் அரசியல் உருவாக்கம் ஆகும். அதன் தலைமை மற்றும் செயல்வீரர்களின்  அடித்தளம் பெருமளவில் இந்து மத மேலாதிக்கவாதிகள் ஆவார், அவர்கள் நிழல் போன்று இருக்கும் RSS க்கு கட்டுப்பட்டவர்கள்.

கடந்த ஆண்டில், இந்து வலதுசாரிகள் முன்தாக்குதலை நடத்தியள்ளார்கள், அது அரசாங்கத்தின் மறைமுக மற்றும் அடிக்கடி வெளிப்படையான ஆதரவுடன், நடைபெற்றது. மகாராஷ்டிராவில், பாஜக தலைமையிலான அரசாங்கம் மாட்டிறைச்சி விற்பனை தடை செய்துள்ளது, வறிய முஸ்லிம்கள் இந்து மதத்திற்கு மாறும்படி அழுத்தம் கொடுக்கப்படுகின்றனர் தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன, சிறுபான்மை விவகாரத்துறை எனக் கூறிக் கொள்ளும் அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, மாட்டிறைச்சி சாப்பிடவிரும்புவர்கள் "பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும்’’ என கூறியுள்ளார். வகுப்புவாத ஆத்திரமூட்டல்களின் பட்டியல் வளர்ந்து கொண்டு போகிறது.

கடந்த பெப்ருவரி ஒபாமா நிர்வாகம் உட்பட மிகவும் எதிர்ப்புகளுக்கு பின்னர், மோடி தேவாலயத்தின் மீதான தாக்குதலை கண்டித்து உரை ஆற்றினார். அதில் அனைத்து இந்தியர்களுக்கும் தங்களது நம்பிக்கைப்படி நடந்து கொள்வதற்கு உள்ள உரிமையை எதையும் மாற்றவில்லை. அது அந்த அர்த்தத்திலும் கூறப்படவில்லை.

பாஜக வின் தீவிரமான இந்து மத வகுப்புவாதம் பரவலான எதிர்ப்பை தூண்டும் மற்றும் அவர்களின் நவ-தாராளவாத செயற்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு தடையாக இருக்கும் என்று உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலாளித்துவ பிரிவினர் கவலைப்பட்டாலும் யதார்த்தம் என்னவெனெறால் பெருநிறுவன இயக்குநர் அறைகள் மற்றும் மிக சுயநல பிரிவுகளாக இருக்கும் மேல் நடுத்தர வர்க்க தட்டுக்களுக்கு வெளியில், இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு வெகுஜன ஆதரவு கிடையாது.

வகுப்புவாத எதிர்வினை பாஜக வின் எரியூட்டும் சந்தை-சார்பு கொள்கைகளுக்கு அவசியமான வாழ்த்தாக இருக்கிறது மற்றும் மக்கள் எதிர்ப்பு வளர்ச்சியடைந்து வரும்போது இன்னும் வெளிப்படையாக பிற்போக்குவாத திசைகளில் வெகுஜன சமூக எதிர்ப்பை திசை திருப்பவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் பயன்படுத்தப்படும். தொழிலாள வர்க்கம் மற்றும் பாஜக அரசாங்கத்திற்கு இடையே நேரடி மோதல் தவிர்க்க முடியாதது

வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் தற்போது சீனாவை விஞ்சுகிறது என்று மோடி அறிவிக்கிறார். ஆனால் இந்திய பொருளாதாரத்தைசாதாரணமாக நொண்டி நொண்டி நடப்பதாக’’ வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலும் ,’’மந்தம்’’ என்று நியூ யோர்க் டைம்சும் விவரிக்கிறது. உண்மையில் இந்தியாவின் பொருளாதாரம் பூகோள முதலாளித்துவத்தை போன்று ஆபத்தான வடிவத்தில் உள்ளது, மேலும் அதிகமாகவே உள்ளதென்று வாதிக்கலாம். இந்தியாவின் பெருநிறுவன ஸ்தாபனங்கள் கடன்களாலும் மற்றும் வங்கி அமைப்பு செயற்படாத கடன்களாலும் கட்டுண்டுள்ளது.

பாஜக அரசாங்கத்தின் முதலாண்டு நிறைவு பற்றிய அவர்களது வர்ணனைகளில், வணிக பத்திரிகைகள் சிறப்பாக சர்வதேச மூலதனத்தின் ஊதுகுழல்களாக இருக்கும் எக்கொனமிஷ்ட் மற்றும் பைனான்சியல் டைம்ஸ் பிடிவாதமாக இருந்தன, அதாவது சந்தை-சார்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் மோடி இன்னும் அதிகமாகவும் விரைவாகவும் போக வேண்டும் என்கின்றன.

சமூக பிற்போக்கு மற்றும் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல் அணிதிரட்டல் செய்வதற்கு முக்கிய தடையாக இருப்பது ஸ்ராலினிச நாடாளுமன்ற கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) அவர்கள் இருவரும் பல பத்தாண்டுகளாக அவை முதலாளித்துவ ஸ்தாபனத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக செயல்பட்டு வந்தன.

1989 மற்றும் 2008 க்கு இடையில் ஸ்ராலினிஸ்டுகள் நவ தாராளவாத சீர்திருத்தங்களை பின்பற்றிய ஒரு தொடராக அடுத்தடுத்து வந்த மத்திய அரசாங்கங்களுக்கு முட்டுக் கொடுத்தன. மற்றும் அவர்கள் ஆட்சியில் இருந்த மாநிலங்களில் அவர்கள் தாங்களாகவே கூறிய "முதலீட்டாளர் சார்பு’’ கொள்கைகளை அமுல்படுத்தினர்.

மோடி தேர்தலில் வந்தததை அடுத்து, ஸ்ராலினிச தலைமையிலான இடது முன்னணியில் பிரதானமான கூறாக இருக்கும் சிபிஎம் மேலும் வலது பக்கம் திரும்பியுள்ளது. இது கட்சியின் சமீபத்திய மாநாட்டில் அதன் பொது செயலாளரராக சீதாராம் யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டதில் நன்றாக எடுத்துக்காட்டப்படுகிறது, அவர் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமான உறவுகளுக்கு வாதிடுபவர், அக்கட்சி இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய ஆளும் கட்சி. கடந்த கால் நூற்றாண்டில் சந்தை-சார்பு மறுசீரமைப்பை திணிப்பதில் பெரும்பாலான கடினமான வேலைகளை காங்கிரஸ் செய்தது மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன், இந்தியாவின் புதிய கூட்டை ஏற்படுத்தியது.

போரை எதிர்க்கவும் அடிப்படை சமூக உரிமைகளை, பாதுகாத்து தக்க வைக்கவும், இந்திய தொழிலாளர்களும் மற்றும் இளைஞர்களும் லியோன் ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட சோசலிசப் புரட்சியின் உலக கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பக்கம் திரும்ப வேண்டும், அது 1917 ரஷ்ய புரட்சியை ஸ்ராலினிசம் காட்டிக் கொடுத்ததற்கு எதிராக உருவாக்கப்பட்டது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஐக்கியப்படுத்தவும் மற்றும் முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டி சமூகப் பொருளாதார வாழ்வை ஒரு மிகச் சிறுபான்மையை வளப்படுத்துவதற்காக அல்லாமல் மனித தேவைகளை நிறைவு செய்யும் வகையில் மறு ஒழுங்கு செய்வதற்கான சோசலிச திட்டத்தை அவற்றிற்கு வழங்க போராடுகிறது.