சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை: கிளனியூஜி தோட்ட நிர்வாகம் பொய் குற்றச்சாட்டின் அடிப்படையில் தொழிலாளர்களை வேட்டையாடியுள்ளமை அம்பலத்துக்கு வந்துள்ளது

W.A. Sunil
12 June 2015

Use this version to printSend feedback

மஸ்கெலியா கிளனியூஜி தோட்டத்தின் டீசைட் பிரிவில் எட்டு தொழிலாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கைசமரசம்செய்யும் விசாரணை ஒன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை இணக்கச் சபையில் இடம்பெற்ற போது, அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்டு சுமத்தப்பட்ட போலியானவை என்பது அம்பலத்துக்கு வந்தது. இணக்க சபை விசாரணைகள் ஹட்டன் நகரில் உள்ள ஹலண்ட்ஸ் கல்லூரியிலேயே இடம்பெறும்.

தொழிலாளர்களுக்கு எதிராக, தன் மீது தாக்குதல் தொடுத்ததாக பொலிசில் முறைப்பாடு செய்த தோட்ட மேற்பார்வையாளர் ஆபிரகாம், தனது முறைப்பாட்டை விலக்கிக்கொள்வதற்கு உடன்பட்ட போதிலும், கிளனியூஜி தோட்ட முகாமையாளர் அதை எதிர்த்துள்ளார். இதற்குக் காரணம், கிளனியூஜி பெருந்தோட்ட நிறுவனம் தொழிலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டுள்ள பரந்த தாக்குதலின் பாகமே, பொய் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தொழிலாளர்களை வேட்டையாடுவதாகும்.

மார்ச் மாத ஆரம்பத்தில், இந்த மேற்பார்வையாளர், சோசலிச சமத்துவக் கட்சியின் (சோசக) ஆதரவாளர் ஜீ. வில்பிரட், எம். நெஸ்தூரியன், எஃப். ஃபிராங்ளின், எஸ். டக்ளஸ்நியுமன், எஃப். அன்டன் ஜூலியன், ஜே. ஜக்ஸன் ஜோ, எஸ். பெனடிக்ட் மற்றும் எஸ். ஜனாரத்னம் ஆகிய தொழிலாளர்களுக்கு எதிராக அவர்கள் தம்மை தாக்கியதாக மஸ்கெலியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.

தோட்டத்தில் ஒரு பகுதியில் குளவிக் கூடுகள் கலைந்ததால், அதனால் தொழிலாளர்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்பு பற்றி, மேல் குறிப்பிடப்பட்ட தொழிலாளர்கள் மேற்பார்வையாளர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். அதனால் வாக்குவாதமும் நடந்துள்ளது. சம்பவத்தை தலைகீழாக மாற்றி, இந்த தொழிலாளர்கள் குளவிக் கூடுகளை கலைத்ததாகவும் தன்னை தாக்கியதாகவும் கூறி பொலிசில் முறைப்பாடு செய்யுமாறு மேற்பார்வையாளரை தூண்டி விட்டவர்கள் தோட்ட நிர்வாகமும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்டத் தலைவர்களுமாவர். தேசிய தொழிலாளர் சங்கத் தலைவர்களின் அழுத்தத்தின் காரணமாக, தொழிலாளர்கள் மார்ச் 11 அன்று நீதிமன்றத்தில் சரண்டைந்தபோது, அவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டு மறுநாள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். பொலிசே இந்த வழக்கை விசாரிக்க இணக்கச் சபைக்கு அனுப்பியது.

ஞாயிறன்று நடந்த இணக்க சபை விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளர்கள் குற்றங்களை முற்றாக நிராகரித்தனர். வழக்கை சமரசம் செய்து விடுவதற்கு இணக்க சபை பிரேரித்தது. அவ்வாறு ஒரு சமரசமும் செய்ய வேண்டியதில்லை என்றும், தங்களுக்கு எதிரான போலி குற்றச்சாட்டுக்களை முழுமையாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சுட்டிக் காட்டினர்.

முறைப்பாட்டை விலக்கிக்கொள்ள மேற்பார்வையாளர் உடன்பட்டார். ஆனாலும் அதைப் பற்றி தோட்ட முகாமையாளரிடம் கேட்க வேண்டும் என அவர் கூறினார். முறைப்பாட்டை விலக்கிக்கொண்டால் நிர்வாகம் தன்னுடன் முரண்படும் என்றும் அதனால் தன் தொழிலுக்கே கூட ஆபத்து வரலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த இடத்தில் இருந்தே அவர் கிளனியூஜி தோட்ட முகாமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, சமரசத்துக்குச் செல்ல வேண்டாம் என அவர் கட்டளையிட்டுள்ளார். அதனால், அந்த விசாரணை இணக்கத்துக்கு வராத நிலையில், மீண்டும் ஜூன் 24 அன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. தோட்டக் கம்பனி திட்டமிட்ட முறையில் இந்த வேட்டையாடலை முன்னெடுப்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

தொழிலாளர்களுக்கு எதிராக நிர்வாகம் குற்றச்சாட்டுக்களை சோடித்துள்ளது என்பதே முன்னரே தெளிவாகியிருந்தது. முதலில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயராம் என்ற தொழிலாளி, அன்றைய தினம் அந்தப் பிரிவில் இருந்திருக்கவில்லை. முறைப்பாட்டாளர் அவரின் பெயரை அகற்றிவிட்டு அந்த இடத்தில் ஜனரட்னத்தின் பெயரை திணித்துள்ளார்.

தோட்ட நிர்வாகத்தின் வேட்டையாடலுக்கு மேற்பார்வையாளர் உடந்தையாக உள்ளார் என டீசைட் தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு விரிவடைந்திருந்த நிலையிலேயே அவர் முறைப்பாட்டை விலக்கிக்கொள்ள விரும்பினார். தொழிலாளர்களுக்கு எதிராக சோடித்த வழக்கை எப்படியாவது முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என தோட்டக் கம்பனி சபதம் பூண்டுள்ளது.

இந்த வழக்குக்கு சமாந்தரமாக, மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், நிர்வாகத்தின் கீழ் ஒழுக்க விசாரணை ஒன்று முன்னெடுக்கப்படுவதோடு, குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என ஏனைய தொழிலாளர்கள் கொடுத்த சாட்சிகளையும் அலட்சியம் செய்து, வேட்டையாடலுக்கு உள்ளாகியுள்ள மூன்று தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யவும் மேலும் நால்வரை இடை நீக்கம் செய்யவும் தோட்டக் கம்பனி முடிவெடுத்துள்ளது.

வேலை அளவை நியாயமற்ற முறையில் அதிகரிப்பதற்கு எதிராக, டீசைட் தோட்டத்தில் பெப்பிரவரி மாதம் நடந்த வேலை நிறுத்தத்தில் இந்த தொழிலாளர்கள் முன்னணியில் இருந்ததனாலேய இவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். தோட்ட நிர்வாகம் நாளொன்றுக்கு பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவை 16 கிலோவில் இருந்து 18 கிலோ வரை அநியாயமாக அதிகரித்தமைக்கு எதிராகவே டீசைட் தோட்டத்தின் சுமார் 600 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இதொகா) மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் (NUW) பிரதேச தலைவர்கள், தோட்ட நிர்வாகிகளுடன் கூட்டுச் சேர்ந்து, தொழிலாளர்கள் மீது அழுத்தம் கொடுத்து மூன்று நாட்களின் பின்னர் வேலை நிறுத்தத்தை குழப்பியிருந்தாலும், கொழுந்தின் அளவை மீண்டும் பழைய தொகைக்கு கொண்டுவர நிர்வாகம் நிர்ப்பந்திக்கப்பட்டது.

இலங்கை தோட்டக் கம்பனிகள் தேயிலைக் கொழுந்து பறிக்கும் அளவை அதிகரிக்க முடிவெடுத்திருக்கின்ற ஒரு சூழ்நிலையிலேயே டீசைட் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிலைமையின் கீழ், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அற்ப சம்பள அதிகரிப்புக்காக தோட்ட தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட கம்பனிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்படும்கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதை தோட்டக் கம்பனிகள் நிராகரித்துள்ளன. அவ்வாறு கைச்சாத்திடப்பட வேண்டுமெனில், நாளொன்றுக்கு பறிக்கப்படும் கொழுந்தின் அளவு 5 கிலோவால் அதிகரிக்கப்படுவதற்கு தொழிற்சங்கங்கள் உடன்பட வேண்டும் என தோட்டக் கம்பனிகள் சுட்டிக்காட்டி வருகின்றன.

வேலைச் சுமையை அதிகரிப்பதற்கு நெருக்குவதற்கு பின்னால், உலகம் பூராவும் ஆழமடைந்து வரும் நெருக்கடியின் மத்தியில் கென்யா, சீனா மற்றும் இந்தியா உட்பட ஏனைய தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளுடன் உலகச் சந்தையில் போட்டியிடுவதற்கு தனது நிலையை பலப்படுத்திக்கொள்ளும் முயற்சியே உள்ளது.

டீசைட் தோட்டத்தின் தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையாடல், முழு பெருந்தோட்டத் துறையிலும் ஏனைய துறையிலும் உள்ள தொழிலாளர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும். இந்தப் போலி வழக்கை அகற்றிக்கொள்ளுமாறும் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களையும் மற்றும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களையும் மீண்டும் நிபந்தனையின்றி வேலையில் இணைத்துக்கொள்ளுமாறும் மேற்கொள்ளப்படும் போராட்டம், தொழிலாளர்களுக்கு போராடுவதற்கு உள்ள உரிமைக்காகவும் மற்றும் இடுப்பை உடைக்கும் வேலை அதிகரிப்புக்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் பாகமாகும். சோசலிச சமத்துவக் கட்சி இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுக்கின்றது.