சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The callous and criminal treatment of refugees

அகதிகளை இரக்கமின்றி, குற்றகரமாக நடத்துதல்

James Cogan
17 June 2015

Use this version to printSend feedback

தஞ்சம் கோருவோர் 65 பேரை அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இந்தோனேஷியாவிற்கு திருப்பி அனுப்புவதற்காக ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஒரு அகதிகள் படகின் படகோட்டிகளுக்கு பணமளித்தனர் என்ற குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ ஆஸ்திரேலிய அரசாங்கம் மறுத்து வருவதற்கு இடையே, இப்போது அது வெளிப்படையாகி உள்ளது.

கடலில் பயணிக்க இலாயகற்ற பெரிய படகுகளில் அகதிகளை கூட்டிசெல்வதற்கு “குற்றகரமாக மக்களை கடத்துபவர்களுக்கு" அவர்கள் பணம் அளிப்பதை ஊக்கப்படுத்தாமல் இருப்பதன் மூலமாக அது "உயிர்களைப் பாதுகாக்கிறது" என்ற அடித்தளத்தில், சர்வதேச சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் அகதிகளின் உரிமையை மறுக்கும் தாராளவாத மற்றும் தொழிற்கட்சி அரசாங்கங்கள், அவற்றின் அக்கொள்கையை ஒன்றுபோல நியாயப்படுத்தி உள்ளன. அகதிகள் வழமையாக மறிக்கப்பட்டு, தொலைதூர பசிபிக் தீவுகளின் சிறை முகாம்களில் காலவரையின்றி தடுப்புக்காவலில் அடைக்கப்படுகிறார்கள், அல்லது, எதிர்காலத்தில் தஞ்சம் கோரி வரவிருப்பவர்களுக்கு "ஒரு சேதியை அனுப்பும்" வகையில், “திருப்பி அனுப்பப்படுகிறார்கள்".

சமீபத்திய சம்பவம், ஆஸ்திரேலியாவின் காட்டுமிராண்டித்தனமான "எல்லை பாதுகாப்பு" நடைமுறையின் இதயதானத்தில் உள்ள பொய்கள் மற்றும் குற்றகரத்தன்மையை சித்திரம் போல எடுத்துக்காட்டுகிறது.

இந்தோனேஷிய பொலிஸால் தொகுக்கப்பட்ட ஆதாரம், மே 17 வாக்கில் ஆஸ்திரேலியாவின் வடக்கே சர்வதேச கடற்பகுதியில் ஆஸ்திரேலிய ரோந்துபடையால் அந்த படகு மறிக்கப்பட்டதை எடுத்துக்காட்டுகிறது. அது செல்லுமிடம் நியூசிலாந்து என்பதை உறுதிப்படுத்தியதும், அந்த படகின் நிலையைக் குறித்தோ, அது "மக்களைக் கடத்தி செல்கிறதா" இல்லையா என்பதைக் குறித்தெல்லாம் கவலையின்றி, ஆஸ்திரேலிய அதிகாரிகள் அதன் தலைவிதிப்படி அந்த படகை போக விட்டார்கள். 

நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குப் பின்னர், அந்த படகு ஆஸ்திரேலிய ரோந்துப்படை மற்றும் கடற்படை கப்பல் ஒன்றால் மீண்டும் மறிக்கப்பட்டது. இந்த முறை, “கடலில் பயணிக்க இலாயகற்றது" என்ற காரணத்திற்காக, அந்த படகு வடக்கு ஆஸ்திரேலியாவை ஒட்டிய க்ரீன்ஹில் தீவில் நான்கு நாட்கள் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் முன்னாள் தொழிற்கட்சி அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட பிற்போக்குத்தனமான சட்டங்களின் காரணமாக, உலகின் எவ்விடத்திலும் முன்மாதிரியைக் கொண்டிராத இச்சட்டங்கள், ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய கண்டத்தையும் ஆஸ்திரேலியாவின் புலம்பெயர்வு மண்டலத்திலிருந்து பூண்டோடு துண்டித்து விட்டதால், அந்த 65 பயணிகளும் அகதிகள் அந்தஸ்திற்கு கூட விண்ணப்பிக்க முடியவில்லை.     

அந்த அகதிகள் பின்னர் கடலுக்குத் திரும்ப அழைத்துச் செல்லப்பட்டு, ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட, குறைவான எரிபொருள் மற்றும் கையிருப்புகளைக் கொண்ட இரண்டு சிறிய மரப்படகுகளில் அனுப்பப்பட்டனர். இந்தோனேஷிய மேற்கு திமோரின் மேற்கே ரோட் தீவுக்கு அவர்களைத் திரும்பி கொண்டு செல்ல, அந்த படகுகளை ஓட்டிய குழுவினர் ஒவ்வொருவருக்கும் 5,000 அமெரிக்க டாலரில் இருந்து 6,000 அமெரிக்க டாலர் வரையில் வழங்கப்பட்டன. 

ஒரு படகில் எரிபொருள் தீர்ந்து போனது. அப்படகில் 71 பேர் நெரிசலில் சிக்கியிருந்த நிலையில், படகின் எஞ்சிய பகுதி திட்டுக்களில் மோதியது. அகதிகள் சிறிய லண்டு தீவை அடைய 90 நிமிடங்கள் நீந்த வேண்டியிருந்தது, அங்கிருந்து அபாய சமிக்ஞை அளிக்கப்பட்டு, ஒரு மீட்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது.

அகதிகள், எல்லா சிரமங்களுக்கு இடையிலும், உயிர்பிழைத்தனர் என்பது மட்டுந்தான் அந்த சம்பவம் குறித்து அறியக்கூடிய ஒரே விளக்கமாக உள்ளது. உண்மையில் நடந்ததைக் கூறுவதற்காக கூட அவர்கள் உயிர்பிழைத்துவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் செய்த ஒரு நனவுபூர்வமான திட்டத்தையே ஒவ்வொன்றும் எடுத்துக்காட்டுகிறது. மேற்கு திமோரின் பொலிஸ் தலைவர் ஜெனரல் என்டாங்க், அப்பட்டமாக அவர்களது பயணத்தை ஒரு "தற்கொலை நடவடிக்கை" என்று வர்ணித்தார்.

இந்த சம்பவத்தை ஏதோவொரு தனிமைப்பட்ட சம்பவமாக நம்புவதற்கு அங்கே நிச்சயமாக எந்த காரணமும் இல்லை. பொருட்களின் போதிய கையிருப்பு இல்லாத படகுகளில், “அவர்களைத் திரும்ப அழைத்துச் செல்வதற்கு" படகோட்டிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டு, பின்னர் பெருங் கடல்களில் அவர்களை கைவிடுவதற்கு ஆஸ்திரேலிய அதிகாரிகளால் இன்னும் எத்தனை அகதிகள் இவ்வாறு அனுப்பப்பட்டனரோ? எத்தனை பேர் கரையை வந்தடையாமலேயே போனார்களோ? வெளியிடப்பட உள்ள அரசாங்கத்தின் குறிப்பிட்ட கொள்கை, அகதிகளை வாட்டிவதைக்க அது நடத்தும் எந்தவொரு இரகசிய இராணுவ நடவடிக்கைகளுக்குமான விலைகளைக் குறித்து —அது உயிராக இருக்கட்டும் அல்லது பணமாக இருக்கட்டும்— எந்த தகவலும் வெளியிடவில்லை.  

ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் இத்தகைய குற்றங்களுக்கு உடந்தையாய் உள்ளது. இந்தோனேஷியாவில் உள்ள “மக்களைக் கடத்தும்" கும்பல்கள் என்றழைக்கப்படுபவைகளுக்கு பணமளிப்பது என்பது, 2001க்கு முன்னரில் இருந்தே தாராளவாத மற்றும் தொழிற்கட்சி அரசாங்கங்களின் கீழ் "பரந்த பாதுகாப்பு" ஆட்சியின் ஒரு அம்சமாக இருந்துள்ளது. “மக்களைக் கடத்துபவர்களை" “குற்றகரமான கழிசடைகள்" என்றும் "மனித அசுத்தங்கள்" என்றும் குற்றஞ்சாட்டுகின்ற அதேவேளையில், அகதிகளுக்கு அவர்களது அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுப்பதில் உதவுவதற்காக, ஆஸ்திரேலிய அதிகாரிகள் அத்தகையவர்களுக்கு பணம் கொடுப்பதற்கு எந்த தயக்கமும் காட்டுவதில்லை.

ஆஸ்திரேலிய ஸ்தாபகத்தின் பாசாங்குத்தனம் எல்லையற்றுள்ளது. அரசாங்கமும் பாரிய ஊடங்கங்களும் மோசடியான விதத்தில், தென்சீனக் கடலில் "கடற்போக்குவரத்து சுதந்திரத்திற்கு" சீனா அச்சுறுத்தலாக இருப்பதாக கண்டித்து, அப்பிரச்சினை மீது அமெரிக்க-தலைமையிலான ஒரு கூட்டு இராணுவ மோதலுக்கு அச்சுறுத்துகின்றன. ஆனால் ஆஸ்திரேலிய கண்டத்தின் வடக்கு கடற்பகுதிகள் என்று வரும் போது, அந்த அரசாங்கம் அகதி படகுகளைக் கைப்பற்றுவதற்கு கடற்கொள்ளை என்பதற்கு ஒப்பான ஒன்றில் ஈடுபடுகிறது.

கடலில் சிக்கிய ஆயிரக் கணக்கான பங்களதேஷி மற்றும் ரோஹின்ங்யா அகதிகள் சம்பந்தப்பட்ட சமீபத்திய நெருக்கடிக்கு விடையிறுப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளால், மத்தியத்தரைக்கடலில் ஐரோப்பிய அதிகாரங்களால், அமெரிக்காவினால், தஞ்சம் கோருவோருக்கு எதிராக காட்டப்பட்ட அதேபோன்ற நடவடிக்கைகளுக்கு ஒரு முன்மாதிரியாக ஆஸ்திரேலியாவின் "எல்லை பாதுகாப்பு" கொள்கைகள் மாறியுள்ளது. 

இந்த வாரம் பிரசுரிக்கப்பட்ட சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் அறிக்கை ஒன்று, இரண்டாம் உலக போரின்போது மில்லியன் கணக்கானவர்கள் பாரியளவில் இடம்பெயர்த்தப்பட்டதிலிருந்து மிக தீவிரமான அகதிகளின் நெருக்கடியை உலகம் முகங்கொடுத்து வருவதாக முடிவு செய்திருந்தது. கடந்த 15 ஆண்டுகளில் போர்கள், உள்நாட்டு போர்கள், பொருளாதார பொறிவு மற்றும் அரசியல் குழப்பங்களால் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வேரோடு இடம்பெயர்த்தப்பட்டுள்ளனர் —அதில் பெரும்பான்மை நேரடியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளடங்கிய அதன் கூட்டாளிகளால் ஏற்பட்டதாகும். ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோருவதற்காக அனைத்தையும் அபாயத்திற்கு உட்படுத்துபவர்களில் பெரும்பான்மையினர், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் போரால் சீரழிக்கப்பட்ட இலங்கை தமிழ் சிறுபான்மையினர் பகுதிகளிலிருந்து வருகின்றனர்.

முதலாளித்துவம் மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறையின் பிற்போக்குத்தனமான இயல்பு, அகதிகள் முகங்கொடுக்கும் மிகக் கொடூர இக்கட்டான நிலைமையில் எடுத்துக்காட்டப்படுவதை விட, மிக அதிகமாக வேறெதிலும் சித்திரம் போல எடுத்துக்காட்டப்படுவதில்லை. ஒரு கையாளவியலா உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்துவரும் சமூக விரோதங்களின் நிலைமைகளின் கீழ், புலம்பெயர்வோர்-விரோத வெளிநாட்டவர் விரோத போக்கைத் (xenophobia) தூண்டிவிடுவதானது, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீது முன்பினும் ஆழமாக அதிகரித்துவரும் தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கு உலகெங்கிலுமான அரசியல்வாதிகளின் கைக்கருவியாகி உள்ளது.

அமெரிக்காவில் வாழும் மில்லியன் கணக்கான மக்கள், “சட்டவிரோதமாக" ஆக்கப்படுவோமோ என்ற நிரந்தர அச்சத்தின் கீழ் வாழ்கின்றனர், அதேவேளையில் வாஷிங்டன் அமெரிக்காவிற்கு கூடுதலான புலம்பெயர்வோர் நுழைவதைத் தடுக்கும் அடித்தளத்தில், அல்லது, வேறுஇடங்களில், அகதிகளைப் "பாதுகாப்பதற்காக" என்ற சாக்கில் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் நவ-காலனித்துவ நடவடிக்கைகளை வாஷிங்டன் நியாயப்படுத்துகிறது. ஐரோப்பிய வல்லரசுகளோ, மக்கள் தங்களின் உயிரை அபாயத்திற்குட்படுத்தி மத்தியத்தரைக்கடலை பெரும்பிரயத்தனத்துடன் கடந்துவருவதை நிறுத்துவது குறித்த அக்கறைகளின் சாக்கில், வடக்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் உள்ள அவற்றின் முன்னாள் காலனிநாடுகளில் இராணுவ ஆக்கிரமிப்புக்கான திட்டங்களை வரைந்து வருகின்றன.

ஆஸ்திரேலியாவில், அங்கே அகதிகளை இடர்படுத்துவதற்கும் மற்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற மோசடியான பதாகையின் கீழ் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் 2001 இல் நடத்தப்பட்ட அமெரிக்க தலைமையிலான நவ-காலனித்துவ நடவடிக்கைகளில் அந்நாடு பங்கெடுத்ததற்கும் இடையே ஒரு நேரடியான தொடர்புள்ளது. “பயங்கரவாதிகள்" உள்ளடங்கலாக, அகதிகளைக் கொடூரமானவர்களாக சித்தரிப்பது சர்வதேச சட்டங்கள் மற்றும் தீர்மானங்களை ஒதுக்கிவிட நியாயப்படுத்துவதற்கும், அத்துடன் தீவிரமடைந்துவரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளின் மீது அதிகரித்துவரும் மக்களின் விரக்தி மற்றும் கோபத்தைத் திசைதிருப்பவும் பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும், ஆசியாவில் சீனாவிற்கு எதிராக அவற்றின் இராணுவ தோரணையை எடுத்துக்காட்டி வருகின்ற நிலையில், “பரந்த பாதுகாப்பு" என்பது லோம்பொக் மற்றும் சுண்டா ஜலசந்தி போன்ற இந்தோனேஷியா வழியாக செல்லும் முக்கிய கடல்வழி பாதைகளைத் தொடும் கடற்பகுதிகளை கண்காணிப்பதற்கு மற்றும் இராணுவமயப்படுத்துவதற்கு சௌகரியமான போலிக்காரணமாக மாறியுள்ளது. பெய்ஜிங் உடனான போரின் போது, அகதிகளுக்கு எதிரான தற்போதைய நடவடிக்கைகள், சீனப் பொருளாதாரத்தை முடமாக்கும் நோக்கில் ஒரு கடற்படை முற்றுகையாக தடையின்றி தீவிரப்படுத்தப்படுவதை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய மூலோபாயம் காணும்.

அகதிகளுக்கு எதிராக வகுத்தளிக்கப்படும் அன்றாட சர்வதேச விதிமீறல்களிலிருந்து, சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் ஒரு கூர்மையான எச்சரிக்கையை எடுத்தாக வேண்டும். உலகின் மிகவும் பாதிக்கப்பட்ட மற்றும் படுமோசமான நிலைமையில் உள்ள மக்களது ஜனநாயக உரிமைகளை மிதித்து நசுக்குவதற்கு ஒவ்வொரு இடத்திலும் ஆளும் வர்க்கங்கள் தயாராகி உள்ளன என்பதையும், சமூக சமத்துவமின்மை, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு எதிரான உள்நாட்டு அரசியல் எதிர்ப்பை ஒடுக்க முன்பினும் அதிகமாக இரக்கமற்ற முறைகளை பிரயோகிக்க அவை சற்றும் தயங்காது என்பதையும் எடுத்துக்காட்டுகின்றன.

முழு குடியுரிமையோடு, ஒவ்வொருவரும் அவர்களின் விருப்பமான நாட்டில் வாழ்வதற்கும் மற்றும் வேலை செய்யவதற்குமான அடிப்படை ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்பது, முதலாளித்துவ இலாபநோக்கு அமைப்புமுறைக்கே எதிராக ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தை சர்வதேசரீதியில் ஐக்கியப்படுத்துவதற்கான மற்றும் அரசியல்ரீதியில் சுயாதீனப்படுத்துவதற்கான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாகும்.