சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

බඹරකැලේ වත්තේ කම්කරු නිවාස 20 ක් ගින්නෙන් විනාශවෙයි

இலங்கை: பம்பரகலை தோட்டத்தில் 20 தொழிலாளர் குடியிருப்புக்கள் தீயில் அழிந்தன

By M. Devarajah
16 June 2015

 Use this version to printSend feedback

http://www.wsws.org/sinhala/images/2015/bamb-16j-img.gif 
எரிந்துபோன
லயன் அறைகள்

லிந்துலை, பம்பரகலை தோட்டத்திற்கு சொந்தமான குட்டிமலை பிரிவில் 20 தொழிலாளர் குடியிருப்புக்கள் கடந்த 9 அன்று தீயில் எரிந்தன. காலை 9 மணியளவில் ஒரு வீட்டில் பற்றிய தீ, விரைவில் ஏனைய வீடுகளுக்கும் பரவி வீடுகளில் இருந்த சகல பொருட்களையும் சாம்பலாக்கியது. மின்சாரக் கசிவே தீ பற்றுவதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என குடியிருப்பாளர்கள் சந்தேகிக்கின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 80 பேர், தோட்டத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும் ஆலயத்திலும் தற்போது தஞ்சமடைந்துள்ளனர்.

http://www.wsws.org/sinhala/images/2015/bamb-16j-img2.gif
எரிந்து போன ஒரு வீடு

ஹொரணை பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான பம்பரகலை தோட்டம், மத்திய மலையகப் பகுதியின் ஒரு பிரதான நகரான தலவாக்கலையில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. ஏழு பிரிவுகளைக் கொண்ட இந்த தோட்டத்தில் சுமார் 1,500 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தலவாக்கலையில் இருந்து பம்பரகலை வரை ஒரே ஒரு பொது போக்குவரத்துச் சேவை மட்டுமே இருப்பதோடு அது நாள் ஒன்றுக்கு இருமுறைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தாமதத்தினால் பஸ்ஸில் ஏற முடியாமல் போனால், பிரதான வீதிக்கு செல்வதற்கு மிக மோசமாக சேதமடைந்துள்ள பாதையொன்றில் சுமார் 3 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். தோட்டத்தின் மேற் பிரிவில் உள்ளவர்கள் 7 கிலோமீட்டர்கள் நடக்க வேண்டும்.

அநேகமான தோட்டத் தொழிலாளர்கள் பிரித்தானிய காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட இராணுவ தங்குமிடம் போன்ற சிறிய வரிசை வீடுகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். எந்தவொரு விஞ்ஞானபூர்வமான பரிசோதனையும் இன்றி மலையக பள்ளத்தாக்குகளில் கட்டப்பட்டுள்ள இந்த வீடுகள் அடிக்கடி மன்சரிவாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்படுகின்றன. தரம் அற்ற, மிகவும் பழைய, பாதுகாப்பற்ற மின்சார இணைப்புக்கள் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளுக்கு காரணமாக இருக்கின்ற அதேவேளை, வீடுகள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளதால் ஒரு வீட்டில் ஏற்படும் தீ ஏனைய வீடுகளுக்கு வேகமாக பரவுகின்றது. கடந்த 12 ஆண்டுகளுக்குள் மட்டும் இத்தகைய 300 வீடுகள் தீயில் நாசமாகியுள்ளன.

தனித்தனியான 50,000 வீடுகளை கட்டுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ 2010 தேர்தலில் வாக்குறுதியளித்திருந்தாலும் அதற்காக எந்தவொரு ஒதுக்கீடும் செய்யவில்லை. கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தற்போதைய சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ் மிகவும் பரந்தளவிலான நலன்புரி செலவு வெட்டுக்களை மேற்கொள்ள தயாராகி வருகின்றது. இந்த நிலைமையின் கீழ் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளும் வேலையை தொழிலாளர்கள் மீதே சுமத்தும் திட்டம் ஒன்று போலி காணிப் பங்கீட்டின் கீழ் தற்தோயை அரசாங்கம் தொடங்கி வைத்துள்ளது. 7 பேர்ச்சர்ஸ் காணி என்றளவில் தொழிலாளர் குடும்பங்களுக்கு கொடுத்து, அவற்றில் வீடுகளைக் கட்டிக்கொள்ளும் பொறுப்பை தொழிலாளர்களிடம் ஒப்படைத்து, வீடுகளை வழங்கும் மற்றும் பராமரிக்கும் பொறுப்பில் இருந்து தோட்டக் கம்பனிகளும் அரசாங்கமும் விடுதலை பெறுவதே இதன் குறிக்கோளாகும்.

பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சமடைந்துள்ள இடத்திற்கு சென்ற உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் உரையாடிய தொழிலாளர்கள் தாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலைமையை விளக்கினர். தோட்ட நிர்வாகம், தற்போதைய அரசாங்கம் உட்பட ஆட்சியில் இருந்த அரசாங்கங்களும் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவமும், ஏற்பட்டுள்ள அழிவுக்கு பொறுப்புச் சொல்ல வேண்டும் என அவர்கள் குற்றம் சாட்டினர். “எங்களுக்கு ஒழுக்கமான முறையில் வாழக் கூடிய முறையான வீடுகள் இருந்தால் இத்தகைய விபத்து நடந்திருக்காது. பாதுகாப்பான நிலத்தில், தரமான முறையில் தனித் தனியான வீடுகள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து 2013ல் நாங்கள் வேலை நிறுத்தம் செய்தோம். அரசாங்கம், நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களும் கூட்டுச் சேர்ந்து போராட்டத்தை நசுக்கினர். ஒரு கோரிக்கையையும் கொடுக்கவில்லை, என தொழிலாளர்கள் கூறினார்.

தமது நெருக்கடியான வாழ்க்கை நிலைமையை விளக்கிய கே. ராமச்சந்திரன் கூறுகையில், “நாங்கள் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் ஒரே வீட்டில் வாழ்ந்தோம். எங்கள் பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்கள், பிறப்புச் சான்றிதழ் மற்றும் பரீட்சை பெறுபேறுகள் உட்பட எல்லாம் எரிந்து போய்விட்டன. பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் கட்டிய பழைய சேதமான வீடுகள். அதனால் விரைவில் பற்றி எரிந்தன. 2013 மே மாதம் நாங்கள் தொடர்ந்து 45 நாட்கள் எமது லயன் வீடுகளை திருத்தித் தருமாறு கோரி வேலை நிறுத்தம் செய்தோம். நிர்வாகம் கோரிக்கைகளை நிராகரித்ததுடன் நின்றுவிடவில்லை. போராட்டத்தை நசுக்க பொலிஸ் கொமாண்டோ படைகளையும் அனுப்பினர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இந்த ஒடுக்குமுறைக்கு முழுமயாக ஆதரவு கொடுத்தார். எட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். மோசமான நிலைமயின் கீழ் அவர்களை வேலையை விட்டும் நிறுத்தினர். உண்மையில் எங்களுக்கு தனித் தனி வீடுகள் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது, என்றார்.

இந்த வேலை நிறுத்தத்தில் கைது செய்யப்பட்ட மற்றும் வேலை நீக்கம் செய்யப்பட்ட சிவா சுப்பிரமணியம் குறிப்பிட்டதாவது: “பாதுகாப்பான வீடுகளைக் கேட்டு வேலை நிறுத்தம் செய்ததாலேயே எங்களைக் கைது செய்தனர். எங்களது கோரிக்கை எந்தளவுக்கு முக்கியமானது என்பது இந்த அழிவில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தோட்டத்துக்கு மற்றும் வீட்டு வர கூட தடை விதித்தனர். நீதிமன்ற உத்தரவின் படி கடந்த மாதம் நிறுத்தப்படும் வரை, ஒவ்வொரு ஞாயிறும் இரண்டு ஆண்டுகளாக பொலிசுக்கு சென்று வந்தோம். எங்களுக்கு தோட்டத்தில் தொழில் இல்லை. நாங்கள் வெளியில் இருப்பதால் வேறு எங்கும் வேலைக்குச் செல்லவும் முடியாது. நான் மலையக மக்கள் முன்னணியின் (மமமு) தோட்டத் தலைவர். ஆனாலும் எனது தொழிற்சங்கம் உட்பட எல்லா சங்கங்களும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதில்லை. தொழிற்சங்கத் தலைவர் அமைச்சர் பதவி பெற்றுக்கொள்வார். எங்களது வாழ்க்கை மேலும் மேலும் கீழே போகும்.

http://www.wsws.org/sinhala/images/2015/bamb-16j-img1.gif
தீயில்
சேதமான வீட்டுப் பொருட்கள்

ராம்தேவி சிவஞானம் என்ற பெண் தொழிலாளி விபத்து சம்பந்தமாக பின்வருமாறு குறிப்பிட்டார்: “பிள்ளைகளின் புத்தகங்கள், உடுப்புடன் சேர்த்து கடன் வாங்கி எடுத்த டீவியும் தளவாடங்கள் எல்லாம் எரிந்து போய்விட்டன. எங்களைப் போன்ற ஏழைகளுக்கு இதை தாங்கிக்கொள்ள முடியாது. நாங்கள் இருவரும் வேலை செய்தும் மாதம் 20,000 ரூபாதான் கிடைக்கின்றது. அது சாப்பாட்டுக்கும் போதாது. மீண்டும் அந்தப் பொருட்களை வாங்குவதைப் பற்றி நினைத்தும் பார்க்க முடியாது. இங்கு மேலும் எவ்வளவு காலம் இருக்க வேண்டி வருமோ தெரியாது. மலசலகூடம் கூட இங்கு முறையாக கிடையாது. தண்ணீர் வசதி கிடையாது. நுளம்பு அதிகம். எங்கள் பிள்ளைகள் எப்படி இங்கிருந்து படிப்பது? தொழிற்சங்கத் தலைவர்க்ள இங்கு வருவார்கள். ஆனால் எந்தத் தீர்வும் கிடையாது. ஒழுக்கமாக வாழக்கூடிய பாதுகாப்பான வீடு எங்களுக்கு வேண்டும்.

54 வயதான எஸ். விஜயலட்சுமி கடினமான வேலை நிலைமைகளை விவரித்தார்: “நாங்கள் காலை 8 மணிக்கு வேலைக்கு நிற்க வேண்டும். சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போகாமல் மாலை 3.30 வரையும் வேலை செய்வேன். இதற்கிடையில் 18 கிலோ தேயிலை பறிக்க வேண்டும். அது மிகவும் கடினமான வேலை. அதன் பின்னர் கொழுந்தை நெறுத்து கொடுக்க ஒரு மணித்தியாலம் போகும். 18 கிலோ பறிக்காவிட்டால் அரை நாள் சம்பளம்தான் போடுவார்கள்.

தோட்டத்தை ஒழுங்காக துப்புரவு செய்யாத காரணத்தால் வேலை செய்யும் போது அதிக சிரமங்கள் உள்ளன. தேன்பூச்சி, குளவி, அட்டை போன்றவை போதாதென்று பாம்பும் உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் புஷ்பவதி என்ற பெண் குளவி கொட்டி இறந்து போனார். அண்மையில் எனக்கும் குளவி கொட்டி 3 நாள் வேலைக்குப் போகவில்லை. அந்த நாட்களுக்கு எங்களுக்கு சம்பளம் கொடுக்கவும் இல்லை.

தீயினால் தங்களிடம் இருந்த எல்லாம் அழிந்து போனதாக கூறிய விஜயலட்சுமி, அரசாங்கத்திடம் அல்லது தோட்ட நிர்வாகத்திடம் இருந்து எதாவது நஷ்ட ஈடு கிடைக்கும் என்று நம்பவில்லை என்றார். தனது சம்பள பட்டியலைக் காட்டி அவர் கூறியதாவது: “இந்த மாதம் எனது சம்பளம் 13,967.66 ரூபா. முற்பணம் 3,000 ரூபா வெட்டப்பட்டுள்ளது. கடன், பண்டிகை முற்பணம், சேமலாப நிதியும் வெட்டப்பட்டு கைக்கு கிடைத்தது 5,490 ரூபா. இந்த நிலைமையில் நங்கள் எப்படி இழந்ததை மீண்டும் வாங்குவது. ஒரு வீட்டப் பற்றி நினைக்கவே முடியாது.

வசந்தமலர் ரமேஸ் (28): “2009ல் இருந்து நான் இந்த தோட்டத்தில் தற்காலிக தொழிலாளியாக வேலை செய்கின்றேன். 6 ஆண்டுகள் கடந்தும் நிரந்தரமாக்கவில்லை. 150 நாட்கள் வேலை செய்தால் நிரந்தரமாக்குவதாக ஆரம்பத்தில் முகாமையாளர் கூறினார். என்னைப்போல் தற்காலிக தொழிலாளர்கள் ஐம்பது பேர் இந்த தோட்டத்தில் உள்ளனர். எங்களுக்கு பறிக்கும் கொழுந்து ஒரு கிலோவுக்கு 30 ரூபா படிதான் சம்பளம் தருகின்றார்கள். எங்களுக்கு ஏனைய தொழிலாளர்களுக்கு உள்ள உரிமைகள் ஒன்றும் கிடையாது. ஆனாலும், தொழிற்சங்கங்கள் எங்களுக்காக எந்தவொரு போராட்டமும் நடத்துவதில்லை.

ஓய்வுபெற்ற தொழிலாளியான கே. பத்மநாதன்: “தொழிற்சங்கங்களில் இருந்து தேர்தல் காலத்தில் மட்டுமே வருவார்கள். அரசாங்கம் மாறுகின்றது. ஆனாலும் எங்களது நிலைமை மேலும் மேலும் சரிகின்றது. எங்களது பிள்ளைகளுக்கு உயர்ந்த கல்வி பெற்றுக்கொடுத்து இந்த நிலைமையில் இருந்து வெளியில் கொண்டுவர நாம் எதிர்பார்த்தோம். ஆனாலும் அந்த எதிர்பார்ப்பு இப்போது பொறிந்து போனது. தோட்டத்தில் பாடசாலையில் 11ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. அதற்குப் பிறகு நகர பாடசாலைக்கு போக வேண்டும். ஆனாலும் பஸ் இல்லாததாலும் பஸ் கட்டணம் அதிகம் என்பதாலும் அநேகமானவர்கள் 11ம் ஆண்டுடன் பாடசாலையை நிறுத்தி விடுகின்றனர்.