சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

EU dispute over refugees intensifies

அகதிகள் மீதான ஐரோப்பிய ஒன்றிய சர்ச்சை தீவிரமடைகிறது

By Martin Kreickenbaum
18 June 2015

Use this version to printSend feedback

சில பத்து ஆயிரக் கணக்கான அகதிகளைப் பகிர்ந்து கொள்வது மீதான பிரச்சினை ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளுக்கு இடையே அதிகரித்தளவில் ஒரு கடுமையான சர்ச்சைக்குரிய விடயமாக மாறிவருகிறது. சில நாடுகள் இப்போது ஷெங்கன் உடன்படிக்கையையும் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உள்ளே சுதந்திர நகர்வையும் முறித்துக் கொள்ளவும் மற்றும் எல்லை கட்டுப்பாடுகளை மறுஅறிமுகம் செய்யவும் அச்சுறுத்தி வருகின்றன.   

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 40,000 அகதிகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வரம்புநிர்ணய முறைக்கு (quota system) ஒப்புக் கொள்வதன் மீது ஐரோப்பிய ஒன்றிய உள்துறை மந்திரிமார்கள், செவ்வாயன்று அவர்களது கூட்டத்தில், எதிர்பார்த்தவாறே, உடன்பாட்டை எட்டவில்லை. கிழக்கு ஐரோப்பிய நாடுகள், அத்துடன் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலும், ஒன்றோடொன்று பிணைந்த வரம்புநிர்ணய முறையைப் (quota system) பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும் அகதிகளைப் பகிர்ந்து கொள்ளும் ஐரோப்பிய கமிஷனின் பரிந்துரையை எதிர்த்தன. எல்லா சாத்தியக்கூறுகளிலும், விருப்பத்துடன் மறுபகிர்வு செய்து கொள்வது என்பது மட்டுமே, அரசு மற்றும் அரசாங்க தலைவர்களது அடுத்த வார ஐரோப்பிய கவுன்சிலில் முடிவு செய்யப்படக்கூடியதாக இருக்கும்.            

ஒரு வரம்பு நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீடு சூத்திரமானது (fixed allocation formula), அகதிகள் அவர்களின் உறவினர்களை அல்லது ஏனைய சமூக தொடர்புகளைக் கொண்டுள்ள இடங்களில் பாதுகாப்பு கோருவதற்குரிய அவர்களின் நலன்களை முற்றிலுமாக புறக்கணிக்கக்கூடும். ஆனால் அகதிகளுக்கான வரம்பு நிர்ணயித்திற்கு காட்டப்படும் எதிர்ப்பிற்கான காரணம் இதுவல்ல. மாறாக, அதுபோன்றவொரு முறையின் எதிர்ப்பாளர்கள் அந்த வரம்பிற்கு கூடுதலாக அகதிகளை ஏற்பதற்கு முற்றிலுமாக எதிராக உள்ளனர். அகதிகளின் மறுபகிர்வை உக்கிரமாக நிராகரிக்கும் பிரிட்டிஷ் உள்துறை செயலாளர் தெரேசா மே, “நாம் கடத்தல்காரர்களுக்கு எதிராக போராட வேண்டும், நாம் மக்களை வட ஆபிரிக்காவிற்கு மற்றும் அவர்களின் தாய்நாடுகளுக்குத் திரும்ப கொண்டு செல்ல வேண்டியுள்ளது,” என்று கூறிய போது, இந்த மனோபாவத்தை இரத்தினச்சுருக்கமாக அவர் வெளிப்படுத்தினார்.

அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றிய கமிஷனின் திட்டத்தை ஆதரிப்பவர்கள் முற்றிலும் சுய-நலத்துடன் நடந்து வருகிறார்கள். சான்றாக, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் கிரீஸ் வரம்பு நிர்ணய முறையின்கீழ் சில அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய உள்துறை மந்திரிமார்களின் கூட்டம் கூர்மையான வார்த்தை பரிவர்த்தனைகளோடும் மற்றும் இத்தாலிய எல்லையில் கடுமையான கட்டுப்பாடுகளை அமலாக்குவதிலும் முன்நகர்ந்தது. Corriere della Sera க்கு அளித்த ஒரு நேர்காணலில், இத்தாலிய பிரதம மந்திரி மரியோ ரென்சி அடுத்த இரண்டு ஆண்டுகளில் இத்தாலியிலிருந்து 24,000 அகதிகளையும் மற்றும் கிரீஸிலிருந்து 16,000 அகதிகளையும் மட்டுமே ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மறுபகிர்வு செய்யும் பரிந்துரையை "ஓர் ஆத்திரமூட்டலாக" எடுத்துரைத்தார். 

அவர் மேலும் கூறுகையில், “ஐரோப்பா ஐக்கியத்தைத் தேர்ந்தெடுக்கிறதென்றால் நல்லதே. அதை தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும், நாங்கள் இராண்டவது திட்டத்தை (Plan B) வைத்திருக்கிறோம். ஆனால் அது முதலும் முக்கியமுமாக ஐரோப்பாவைப் பாதிக்கும்,” என்றார்.

ரென்சி இந்த இரண்டாவது திட்டத்தின் இயல்பைக் குறித்து விவரிக்க விரும்பவில்லை, ஆனால் உள்துறை மந்திரி ஏஞ்சலினோ அல்பனோ தொலைக்காட்சி சேனல் Sky TG24க்கு கூறுகையில், “ஐரோப்பாவில் புலம்பெயர்வோரை நாம் சமமாக பகிர்வு செய்தாலோ அல்லது நாம் லிபியாவில் அகதிகள் முகாம்களை அமைத்தாலோ அல்லது அவர்களது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பும் ஒரு தீவிரமான கொள்கையை நாம் ஏற்றாலோ, நான் மிகவும் தெளிவாக குழந்தைகளைக் கவனத்தில் எடுக்க விரும்புகிறேன். என்னால் எங்களின் இரண்டாம் திட்டத்தை வெளிப்படுத்த முடியாது ஆனால் ஐரோப்பா ஆதரவாக இல்லையென்றால், அது ஒரு வித்தியாசமான இத்தாலியைக் கையாள வேண்டியிருக்கும். நாங்கள் ஒரு சுயநலமான ஐரோப்பாவை ஏற்க முடியாது,” என்றார்.

“முக்கிய இடங்கள்" (hotspots) என்றழைக்கப்படுவதை ஸ்தாபிப்பதும் விவாதத்தின் கீழ் உள்ளது. இது ஐரோப்பிய எல்லையோர நிறுவனமான Frontex, தஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்களைத் துரிதமாக பெற்று, நிராகரிக்கப்பட்ட அகதிகளை அதன் சொந்த அதிகாரத்தின் கீழ் உடனடியாக வெளியேற்றக்கூடிய மையங்களை இத்தாலியில் அமைப்பதைக் குறிக்கிறது. இதற்காக, அதுவே அகதிகளைத் திரும்ப அனுப்பவதற்கேற்ப, Frontex க்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படக்கூடும்.

சமீபத்திய நாட்களில், இத்தாலிய-பிரெஞ்சு எல்லையோரத்தில் உள்ள Ventimiglia-Menton இல் நிலைமை பெருமளவில் மோசமடைந்துள்ளது. பிரான்ஸ், ஹாலாந்து மற்றும் பெல்ஜியத்தில் உள்ள அவர்களது உறவுகளோடு இணைவதற்காக இத்தாலியை விட்டு வெளியேற விரும்பும் நூற்றுக் கணக்கான அகதிகள் அங்கே தவித்து வருகின்றனர். ஆனால் இராணுவ ஆயுத தளவாடங்களுடன் பிரெஞ்சு காவற்படைகள் எல்லையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரையில் அவை உள்ளே நுழைய விரும்பிய ஆயிரத்திற்கும் அதிகமான அகதிகளை தடுத்து நிறுத்தி உள்ளன. செவ்வாயன்று அகதி முகாம்களை இத்தாலிய பொலிஸ் தாக்கியது, மேலும் புலம்பெயர்ந்தோரை விரட்டிப்பிடித்து அவர்களைத் திரும்ப அனுப்புவதற்கு Ventimiglia ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.         

அங்கே எல்லையில் முற்றுகையிட்டிருக்கவில்லை என்று பொய்யாக அறிவித்த பிரெஞ்சு உள்துறை மந்திரி பேர்னார்ட் கசெனேவ், தொடர்ந்து கூறுகையில், “இத்தாலி வழியாக புலம்பெயர்வோர் அங்கே பதிவு செய்துவிட்டு பிரான்சிற்குள் வரும் போது, ஐரோப்பிய சட்டம் பொருந்துகிறது, அதாவது அதன் அர்த்தம் என்னவென்றால் அவர்கள் இத்தாலிக்குத் திரும்ப அனுப்பப்பட வேண்டும் என்பதாகும்.”    

அவர் டப்ளின் உடன்படிக்கையைக் குறிப்பிடுகிறார், அதன்படி அகதிகள் நுழையும் முதல் நாடே தஞ்சம் கோரும் விண்ணப்பத்தை செயல்படுத்துவதற்கு பொறுப்பாகும். இது அகதிகளுக்குப் பிரச்சினைக்குரியது, ஏனென்றால் பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய அரசுகளில் தஞ்சம் வழங்குவதற்கு அங்கே முற்றிலும் வெவ்வேறு வாய்ப்புகள் உள்ளன என்பதுடன் வாழ்க்கை நிலைமைகளும் சில நேரங்களில் அதிகளவில் வேறுபடும். அவர்கள் தஞ்சம் புகுந்தோரின் அந்தஸ்தைப் பெற்றாலும் கூட, ஐரோப்பாவிற்குள் சுதந்திரமாக நகர்வதிலிருந்து விலக்கி வைக்கப்படுகின்றனர், அவர்கள் பாதுகாப்பு வழங்கிய அந்நாட்டிற்குள்ளேயே தான் அவர்கள் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் அவர்கள் சட்டவிரோத புலம்பெயர்ந்தோராக மற்றும் குற்றத்திற்குரியவர்களாக கையாளப்படுவார்கள்.

இத்தாலிய அதிகாரிகள் கணிசமான காலத்திற்கு எல்லா அகதிகளையும் பதிவு செய்திருக்கவில்லை என்றும், இது அகதிகளை தொடர்ந்து மேல்நோக்கி பயணம் செய்வதற்கு அனுமதிக்கிறது என்றும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அரசாங்கங்கள் சந்தேகிக்கின்றன. இதற்கு விடையிறுப்பாக, அவர்கள் எல்லையோர பிராந்தியங்களில் பாரியளவில் கட்டுப்பாடுகளை இறுக்கியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் மாதங்களில், பிரான்ஸ் 6,000க்கும் அதிகமான அகதிகளை இத்தாலிக்குத் திரும்ப அனுப்பியுள்ளது.  

ஜேர்மன் அரசாங்கம் ஷெங்கென் உடன்படிக்கையை இரத்து செய்ய ஜி7 உச்சிமாநாட்டைப் பயன்படுத்தியது. மே 26இல் இருந்து, பாவரியாவிற்குள் எல்லை தாண்டுதலை மட்டும் ஜேர்மனி கட்டுப்படுத்தவில்லை, மாறாக Rhineland Palatinate, Baden-Württemberg மற்றும் பிரதான விமான நிலையங்களில் கடவுச்சீட்டு பரிசோதனைகளையும் நடத்தியது. மத்திய பொலிஸ் மொத்தம் 10,555 குடியிருப்போர் உரிமைமீறல்களைப் பதிவு செய்தது. 3,500 பேருக்கு அதிகமானவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். ஜேர்மன் மத்திய பொலிஸ் இத்தாலிய எல்லையோரங்களிலும் செயலூக்கத்துடன் உள்ளது, அங்கே அவர்கள் இரயில்கள் மற்றும் பிரென்னர் வாகனபாதையில் கடவுச்சீட்டு கட்டுப்பாடுகளை நடத்துகின்றனர்.  

ஜேர்மன் உள்துறை மந்திரி தோமஸ் டு மஸியர், அகதிகள் பிரச்சினை காரணமாக ஐரோப்பாவிற்குள் சுதந்திரமான பயணத்தை இரத்து செய்ய பகிரங்கமாக அச்சுறுத்தினார். "மீண்டும் அமைப்புரீதியிலான எல்லை கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய" விரும்பவில்லை என்பதை அவர் செவ்வாயன்று உள்துறை மந்திரிமார்களின் கூட்டத்திற்கு வெளியே தெரிவித்தார். ஆனால் ஐரோப்பிய அகதிகள் சட்டத்தின் கீழ் நாடுகள் அவற்றின் கடமைப்பாடுகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், இது "ஐரோப்பாவில் சுதந்திரமான நகர்வை முடிவுக்கு கொண்டு வர" இட்டுச் செல்லும். “ஒவ்வொருவருக்கும் இந்த அபாயம் தெரியும்.” இவ்விதத்தில், டு மஸியர் மத்தியத்தரைக்கடல் நாடுகளுக்கு, குறிப்பாக இத்தாலிய மற்றும் கிரேக்க அதிகாரிகளின் மீது பொறுப்பைச் சுமத்தி வருகிறார். 

வெளிப்பார்வைக்கு, அகதிகள் விவகாரத்தில் ஜேர்மன் அரசாங்கம் தாராள மனமுடன் இருப்பதைப் போல தெரியும், ஆனால் அது அதன் ஐரோப்பிய பங்காளிகளுடனான பேச்சுவார்த்தைகளில் பாரிய அழுத்தத்தை உண்டாக்குகிறது. Deutschlandfunk ஒலிபரப்பு உடனான நேர்காணல் ஒன்றில், Borderline Europe அமைப்பின் Elias Bierdel கூறுகையில், ஜேர்மன் அரசாங்கம் "ஐரோப்பிய பாதுகாப்பரணின் எஜமான்" என்பது ஒன்றும் தற்செயலானதல்ல என்றார். “அவர்களே அந்த பாதுகாப்பரணை உருவாக்கியவர்கள்" என்பதை ஜேர்மன் அரசியல்வாதிகள் அவரிடம் பெருமையடித்ததை அனுபவித்திருந்தார்.     

இத்தாலி மற்றும் கிரீஸில் உள்ள நம்பிக்கையிழந்த நெரிசல்மிகுந்த அகதிகள் வருகை மையங்களிலும் மற்றும் அகதிகள் முகாம்களிலும் நிலவும் மனிதாபிமானமற்ற, பேரழிவுகரமான நிலைமைகள் நன்கறியப்பட்டவையே. இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து, அண்மித்தளவில் 60,000 அகதிகள் மத்தியதரைக்கடல் பகுதியிலிருந்து இத்தாலிக்கு வந்துள்ளனர்.

அதற்கும் கூடுதலாக, ஆயிரக் கணக்கான அகதிகள் மிலான் மற்றும் ரோமின் ரயில் நிலையங்களில் தவித்துக் கொண்டிருக்கின்றனர், ஏனென்றால் அவர்களின் வடக்கு நோக்கிய பயணம் தடுக்கப்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் சிறிய குழந்தைகள் உட்பட சுமார் 800 பேர் இருக்கும் ரோமின் Tiburtina ரயில் நிலையத்தில், இத்தாலிய பொலிஸ்காரர்கள் அடையாள பரிசோதனைகளுக்காக அகதிகளைப் பிடிக்க முயல்வதால், பாலங்களுக்கு அடியிலிருக்கும் முகாம்கள் குடிசைகளைப் போன்ற காட்சிகளை நினைவூட்டின.

கிரீஸில், அகதிகளின் நிலைமை இன்னும் மேலதிகமாக மோசமாக உள்ளது. பணமில்லையென்று கிரேக்க அரசாங்கம் Aegean இல் ரோந்து நடவடிக்கைகளைப் பெரிதும் நிறுத்திவிட்டதால், அகதிகள் துருக்கி மற்றும் கிரீஸ் வழியாக ஐரோப்பாவை எட்ட அதிகரித்தளவில் அந்த வழியைப் பயன்படுத்தி வருகின்றனர். இங்கே, 52,000 அகதிகள் வந்துள்ளனர், இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட எட்டு மடங்கு அதிகமாகும். ஏறத்தாழ பாதி பேர் லெஸ்போஸ் தீவின் ஒரு அகதி முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.  

ஆனால் அதிக நெரிசல் காரணமாக தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரயிறுதியில், பொலிஸ் தலையீடு செய்து சண்டையிட்டு வந்த அகதிகளை இரக்கமின்றி அடித்தனர். அதன் விளைவாக, மின்சாரமில்லாத மற்றும் பெரும் நரகத்தை போன்று கழிவுகளின் துர்நாற்றமெடுக்கும் நிலைமைகளைக் கொண்ட முகாம்களில் ஏற்கவியலாத நிலைமைகளுக்கு எதிராக போராடுவதற்காக அகதிகள் Mytilene துறைமுகத்தை நோக்கி பேரணி ஒன்றை நடத்தினர். அவர்களது அகதிகள் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு ஒரு நிரந்தரமான வசிப்பிட அனுமதி வழங்கப்பட வேண்டுமென அகதிகள் கோரினர். “அதுவொரு முகாமே இல்லை. அதுவொரு பேரிடர் பகுதியைப் போல, ஒரு மிருகக்காட்சிசாலையைப் போல உள்ளது,” என்று லெஸ்போனில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்னர் அங்கே வந்தடைந்த ஓர் ஈராக்கிய அகதி பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

பெரும்பாலானா ஐரோப்பிய அரசாங்கங்கள் அகதிகளை ஏற்கும் பிரச்சினையில் மோதலில் இருக்கின்றன என்றாலும், அகதிகளைத் திரும்ப துரத்தும் நடவடிக்கைகளுக்கு அவை அனைத்தும் ஒன்றாகவே அழுத்தமளிக்கின்றன. பதிவு செய்யும் நிகழ்முறையில் அகதிகளின் விரல்ரேகைகளை எடுக்கும் நடவடிக்கைகளை இறுக்குவதற்கு, அவை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு வழிகாட்டுதலுக்கு உடன்பட்டன. இதை பலவந்தமாக அகதிகளின் விருப்பத்திற்கு எதிராக செய்யலாம்.

அந்த வழிகாட்டி நெறிமுறை கூறுகிறது: “அந்த நபர் போதுமானளவிற்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்றால், சரியான அளவில் அச்சுறுத்தலைப் பிரயோகிப்பதில் பயிற்சிபெற்ற அதிகாரிகள் தேவையான அளவிற்கு குறைந்தபட்ச அளவில் மிரட்டலைப் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.”   

இது தெளிவாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பொருந்துகிறது. விரல்ரேகை எடுப்பதை எதிர்த்தால், அந்த அகதிகள் கைது செய்யப்படுவதை, திரும்ப அனுப்பப்படுவதை மற்றும் ஐந்தாண்டுகளுக்கு மறுவரவுக்கு தடை விதிக்கப்படுவதை முகங்கொடுப்பார்கள் என்பதையே குறிக்கிறது. அவர்களின் தாய் நாடுகளில் சிறைவாசம், சித்திரவதை மற்றும் போரிலிருந்து தப்பித்து வரும் அகதிகளை இப்படி தான் ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்கிறது.

அகதிகள் உருவாகும் நாடுகளுடன் மற்றும் ஆபிரிக்காவுடன் பரிவர்த்தனைகளுக்கான பலமான ஒத்துழைப்பு என்று ஐரோப்பிய ஒன்றியம் எதை அர்த்தப்படுத்துகிறது என்பது, எரித்திரியா அரசாங்கத்துடன் இத்தாலி, இங்கிலாந்து மற்றும் நோர்வேயின் இரகசிய தூதரக நடவடிக்கைகள் மீதான அறிக்கையை பிரிட்டனின் Guardian இதழ் வெளியிட்ட போது அம்பலமானது. அந்நாடு அதன் எல்லையோரங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தினால், ஐரோப்பிய ஒன்றியம் அந்த ஆட்சிக்கு பொருளாதார தடைகளை நீக்கும் என்பதுடன், அதற்கான உதவிகளும் பெரிதும் அதிகரிக்கப்படும் என்பதை செய்திகள் குறிப்பிட்டன.    

Guardian இதழ் பின்வரும் வார்த்தைகளுடன் ஐக்கிய நாடுகளின் பணியாளர்களை மேற்கோளிட்டது: “முக்கிய ஐரோப்பிய பிரமுகர்கள் அஸ்மாராவிற்கு (Asmara) தலைமை தாங்கி வருகிறார்கள், மேலும் எரிட்ரியா தரப்பிலிருந்து எல்லைகளை மூடுவதன் மூலமாக புலம்பெயர்வோர் நெருக்கடியை தீர்க்க அங்கே ஒரு நிஜமான அரசியல் விருப்பம் உள்ளது--இதுவொரு மிகவும் அபாயகரமான தந்திரோபாயம்,” என்றது குறிப்பிட்டது.

எரித்திரிய எல்லையோரங்களில் துப்பாக்கிச்சூட்டை நடத்துவதற்கான ஆணை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்ற கவலைகளும் நிலவுகின்றன. 1990 இல் ஜேர்மன் மறுஐக்கியத்தைத் தொடர்ந்து, முன்னாள் கிழக்கு ஜேர்மன் ஆட்சியின் முன்னணி செயல்பாட்டாளர்கள் ஜேர்மன் எல்லைகளுக்கு இடையே தப்பிக்க முயன்றவர்களைச் சுட்டு கொன்றதற்காக வழக்கின் கீழ் கொண்டு வரப்பட்டார்கள்; ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தத்தின் கீழ், எரித்திரியா இப்போது அதுபோன்றவொரு நடைமுறையைத் தான் பின்பற்றுகிறது. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் காட்டுமிராண்டித்தனமான குணாம்சம் அகதிகள் பிரச்சினையில் இன்னும் தெளிவாக உள்ளது. சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, அங்கே உலகெங்கிலும் 50 மில்லியனுக்கு அதிகமான மக்கள் அவர்களின் தாய்நாட்டை விட்டு வெளியேறினர், இது இரண்டாம் உலக போரின் முடிவுக்குப் பிந்தைய எந்தவொரு காலத்தையும் விட அதிகமாகும். கடந்த ஆண்டு வெறுமனே ஐரோப்பாவில் மட்டும் 600,000 மக்கள் தஞ்சம் கோரி விண்ணப்பங்களை முன்வைத்தனர்--இது உலக அகதிகளில் ஒரு சதவீதத்தினருக்கு சற்று கூடுதலாகும்--ஆனால் ஒரு சில ஆயிர கூடுதல் அகதிகளை ஏற்றுக்கொள்ளும் பிரச்சினை ஐரோப்பிய ஒன்றியத்தையே ஒரு நெருக்கடிக்குள் மூழ்கடித்துள்ளதாம்.

அகதிகள் நகர்வு பெருமளவிற்கு அதிகரிப்பதற்கு ஐரோப்பிய வல்லரசுகளே பொறுப்பாகும். அவை ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் லிபியா போர்களில் பங்கெடுத்தன, அது ஒட்டுமொத்த சமூகங்களையும் குழப்பங்களுக்குள் மூழ்கடித்து, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற நிர்பந்தித்தது.

பாதுகாப்பு மற்றும் ஒரு நல்ல வாழ்வைத் தேடி, இந்த ஆண்டில் மட்டும் மத்தியத்தரைக்கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குள் நுழையும் முயற்சியில் அண்மித்தளவில் 2,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய அரசாங்கங்கள் அக்கண்டத்தின் எல்லைகளைப் பலப்படுத்தியதன் மூலமாக விடையிறுப்பு காட்டியுள்ளன. அவர்கள் பாதுகாப்பாக தஞ்சம் கோருவதற்கு ஏற்பாடு செய்வதை விடுத்து, அவை அகதிகளை நீரில் மூழ்கி உயிரிழக்க அனுமதிக்கின்றன.