சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The social roots of racism in America

அமெரிக்காவில் இனவாதத்தின் சமூக வேர்கள்

Andre Damon
23 June 2015

Use this version to printSend feedback

இனவாதம் என்பது அமெரிக்கர்களின் மரபணுவிலேயே” ("DNA”) உள்ளது என்று வாதிடுவதற்கு ஜனாதிபதி பராக் ஒபாமா திங்களன்று ஒரு போட்காஸ்ட் நேர்காணலைப் பயன்படுத்தினார். நகைச்சுவையாளர் மார்க் மரோனுடனான அவரது கலந்துரையாடலின் போது ஒபாமா கூறுகையில், “அடிமைத்தனத்தின் மரபு, இனப்பாகுபாடு, வேற்றுமைப்படுத்தல் ஆகியவை ஏறத்தாழ நமது வாழ்வின் ஒவ்வொரு அமைப்பிலும் உள்ளது.  உங்களுக்கே தெரியும், அது ஒரு நீண்ட நிழலைக் கொண்டுள்ளதுடன், அது நமது மரபணுவின் பாகமாக இருப்பதுடன் பரம்பரையாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது,” என்றார்.

மரபணு" (DNA) என்ற வார்த்தையை ஒபாமா பிரயோகிப்பது, ஏதோவிதத்தில் பொருந்தாத உவமை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைப் போல தெரிந்தாலும் கூட, அது தீர்க்கமான அரசியல் நோக்கங்களுக்குச் சேவை செய்கிறது. அது இனவாதத்தை இன்றியமையாத விதத்தில் ஒரு உயிரியல்ரீதியிலான இயல்நிகழ்வாக சித்தரிக்கும் முயற்சிக்கு உதவுகிறது. இந்த கருத்துரு, எல்லா இனவாத சிந்தனைகளைப் போலவே, விஞ்ஞானபூர்வமற்றதும் மற்றும் பிற்போக்குத்தனமானதும் ஆகும்.

தெற்கு கரோலினாவின் சார்லெஸ்டனில் நடந்த துன்பியலான கடந்த வார துப்பாக்கிச்சூட்டை எந்தவொரு சமூக, பொருளாதார அல்லது வரலாற்று உள்ளடக்கத்திற்கும் வெளியே, அமெரிக்க சமூகத்தின் ஒவ்வொரு பிரச்சினையையும் இனம் எனும் முப்பட்டகத்தினூடாக செலுத்தும் ஊடகங்களின் தீவிரமான பிரச்சாரத்துடன் ஜனாதிபதியின் கருத்துக்கள் பொருந்தி உள்ளது. குறிப்பாக நியூ யோர்க் டைம்ஸ், “வெண்மை" (whiteness) மற்றும் "கருமை" (blackness) இன் இயல்பைக் குறித்த விவாதத்திற்கும் மற்றும் அமெரிக்காவில் சீர்செய்ய முடியாத இனவாத பிளவு என்று கூறப்படுவதற்கும் அதன் தலையங்க பக்கங்களில் கணிசமான அளவிற்கு பகுதிகளை ஒதுக்கி உள்ளது.

இனவாதம் என்பது வேறுபட்ட இனங்களின் தற்போதைய உருவாக்கங்களில் வேரூன்றி உள்ளது என்ற வரலாற்றுரீதியிலான கருத்துருவானது, கருப்பினர்கள் இயல்பிலேயே வெள்ளையினத்தவர்களை விட தாழ்வானவர்கள் என்று கூறுபவர்கள் மத்தியிலும் அதற்கு மிகவும் ஒத்த மற்றும் பிற்போக்குத்தனமான விளக்கவுரையாளர்களிடமும் காணக்கூடியதாகவுள்ளது. ஜேர்மனியின் நாஜிக்கள் பாரிய இடம்பெயர்வு மற்றும் நிர்மூலமாக்கல்களின் அவர்களது திட்டத்தை நியாயப்படுத்த, உயிரியியல்ரீதியில் தீர்க்கமான பிளவு இருப்பதைக் குறித்து கிறுக்குத்தனமான வாதங்களைப் பயன்படுத்தினர். இனவாதம் மற்றும் இனவாத கொள்கைகள் இனங்களுக்கு இடையிலே நிலவும் அடிப்படை வேறுபாடுகளின் அடித்தளத்தில் விவரிக்கப்பட்டன மற்றும் விளங்கப்படுத்தப்பட்டன.

சோசலிஸ்டுகள் இத்தகைய கருத்துருக்களை நிராகரிக்கிறோம். அமெரிக்காவில் இனவாதம் இருக்கிறது, இருந்து வந்துள்ளது. அது குண்டுவீச்சு, தான்தோன்றித்தனம், பாகுபாடு போன்ற கொடூரமான வடிவங்களை எடுத்துள்ளது தான், ஆனால் அடிக்கடி அல்ல. இருப்பினும் இனவாதத்தை வர்க்க உறவுகளின் மற்றும் சமூக நலன்களின் ஒரு திரிக்கப்பட்ட வெளிப்பாடாக, அதன் சமூக உள்ளடக்கத்திற்குள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

அமெரிக்க இனவாதம் அடிமைமுறையில் அதன் தோற்றுவாய்களைக் கொண்டிருந்தது. தெற்கு தோட்ட பிரபுத்துவம் எதை அடித்தளத்தில் கொண்டிருந்ததோ அந்த சமூக-பொருளாதார அமைப்புமுறையை அடிமைகளது உரிமையாளர்கள் வெட்கமின்றி சுரண்டியதை மற்றும் அவர்களது சொந்த குரூரத்தை, இனவாத தாழ்வுநிலையின் பொய்யைக் கொண்டு, நியாயப்படுத்துவதில், பழைய தெற்கின் இனவாதம், அவர்களின் நலன்களுக்கு சேவை செய்தது.

அடிமைகளை உடைமைகளாக கொண்டிருந்த வர்க்கம் அமெரிக்க உள்நாட்டு போரின் வடிவத்தில் ஒரு பாரிய சமூக அணிதிரள்வின் ஊடாக நசுக்கப்பட்டது. அதில் மரபுரீதியில் வருவது என்பதெல்லாம் ஓரங்கட்டப்பட்டு, வடக்கில் இருந்த 300,000 வெள்ளையின மக்கள், குடியரசின் போர் பாசுர (Battle Hymn of the Republic) வார்த்தைகளில், “மக்களை விடுவிப்பதற்காக இறக்க" துணிந்தனர்.

உள்நாட்டு போருக்குப் பிந்தைய தசாப்தங்கள், இதுவரையில் அறியப்படாத அளவிற்கு நகரங்கள் மற்றும் தொழில்துறைமயமாக்கலின் பாரியளவிலான விரிவாக்கம் உட்பட ஒரு மலைப்பூட்டும் வேகத்தில் பொருளாதார அபிவிருத்தியைக் கண்டது. இந்த நிகழ்முறை தொழிலாளர் இயக்கத்தின் வளர்ச்சி மற்றும் போர்குணமிக்க வேலைநிறுத்தங்களுடன் சேர்ந்து வந்தது. உதாரணமாக தலைச்சிறந்த அடிமைமுறை ஒழிப்பாளர் வெண்டெல் பிலிப்ஸ் உட்பட அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை கொடுத்தவர்களில் பலர் தொழிலாளர் இயக்கத்தில் செயலூக்கத்துடன் ஈடுபட்டனர்.

அடிமைமுறையை கூட்டு அறுவடைமுறை (sharecropping) பிரதியீடு செய்த தெற்கில், 19ஆம் நூற்றாண்டின் கடைசி இரண்டு தசாப்தங்களில் வெகுஜன இயக்கங்கள் தோன்றின, அவை வெள்ளையினத்தவர் மற்றும் கருப்பினத்தவர் என மில்லியன் கணக்கான விவசாய தொழிலாளர்களது ஆதரவைப் பெற்றது.

இத்தகைய நிலைமையின் கீழ் தான் உச்சநீதிமன்றத்தால் சட்டபூர்வ இனப்பாகுபாடு கொண்டு வரப்பட்டது (Plessyக்கும் ஃபேர்குஷனுக்கும் இடையிலான 1896 வழக்கு), மேலும் இனவாத வன்முறை செயலூக்கத்துடன் தூண்டிவிடப்பட்டு ஊக்குவிக்கப்பட்டது. கருப்பினத்தவர்களை பீதியூட்டுவது மட்டும் Ku Klux Klan தனது நோக்கமாக இதனுடன் பிரிக்கமுடியாதவாறு பிணைந்திருந்த போதினும் கறுப்பினத்தவரை அச்சுறுத்துவது மட்டும் நோக்கமாக இருக்கவில்லை, மாறாக அவர்களின் பொதுவான வர்க்க நலன்களின் அடித்தளத்தில் கருப்பின மற்றும் வெள்ளையின தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் எல்லா முயற்சிகளையும் தோற்கடிப்பதே அதன் இலட்சியமாக கொண்டிருந்தது.

அதற்கடுத்துவந்த காலகட்டத்தில் ஆபிரிக்க-அமெரிக்கர்களின் சமூக முன்னேற்றமானது, ரஷ்ய புரட்சி மற்றும் 1930களின் மற்றும் அதற்கடுத்துவந்த தசாப்தங்களின் பிரமாண்ட தொழில்துறை போராட்டங்கள் உட்பட, தொழிலாளர் இயக்கம் இல்லாமல் இருந்திருந்தால் சாத்தியமாகி இருந்திருக்காது.

20ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தங்களில், சோசலிச-சிந்தனை கொண்ட தொழிலாளர்களும் தொழில்துறை தொழிற்சங்கங்களின் அமைப்பை முன்னெடுத்த புத்திஜீவிகளும், பெருநிறுவனங்களால் மற்றும் பழைய AFL கைவினைஞர் தொழிற்சங்கங்களால் ஊக்குவிக்கப்பட்ட இனவாதத்திற்கு எதிராக துணிச்சலாக போராடினர். ஆனால் இத்தகைய முயற்சிகள், குறிப்பாக தெற்கில், அப்போது இனப்பாகுபாடு மற்றும் வெள்ளையின மேலாதிக்கத்தின் கட்சியாக விளங்கிய ஜனநாயக கட்சியுடன் தொழிற்சங்கங்கள் செய்து கொண்ட அரசியல் கூட்டணியால் சமரசம் செய்யப்பட்டன.

1960களில் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடி, குடியுரிமைகள் இயக்கமாக, சேரி பிரதேச கிளர்ச்சிகளாக, போர்குணமிக்க வேலைநிறுத்தங்களின் ஓர் அலையாக, வியட்நாம் போருக்கு எதிரான பாரிய இயக்கமாக வெடித்தது.

அந்த கிளர்ச்சிகளுக்கு ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பு, அமெரிக்க சமூகத்தின் அடிப்படை வகையினமாக மீண்டுமொருமுறை இனத்தை ஊக்குவிப்பதை நோக்கி திரும்புவதாக இருந்தது. இது இடஒதுக்கீடு கொள்கை (Affirmative Action) போன்ற இன-அடிப்படையிலான கொள்கைகளைக் கொண்டு ஆபிரிக்க-அமெரிக்க மக்களின் ஒரு பிரிவினர் தனிசலுகை கொண்டவர்களாக மற்றும் அதிகார பதவிகளிலும் மேலுயர்த்தப்பட்டனர். ஆபிரிக்க-அமெரிக்கர்கள் தலைமை செயலதிகாரிகளாக, நகரசபை தலைவர்களாக, காங்கிரஸ் உறுப்பினர்களாக, நீதிபதிகளாக, பொலிஸ் அதிகாரிகளாக மற்றும் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டதும் அமெரிக்க ஜனாதிபதியாக ஆனார்கள்.

இன-அடிப்படையிலான அரசியலின் புதிய வடிவம் தெற்கு அடிமை ஆட்சிமுறையின் மற்றும் வெள்ளையின மேலாதிக்கவாதிகளின் பழைய இனவாதத்திலிருந்து வேறுபட்டிருந்த போதினும், அதுவும் அதே செயல்பாட்டிற்கு சேவை செய்ய வந்தது. அதாவது அடிப்படை வர்க்க பிரச்சினைகளை முக்கியமற்றதாக ஆக்குவதற்கும் மற்றும் எல்லா இன தொழிலாளர்களது பொதுவான வர்க்க நலன்களின் அடிப்படையில் அவர்களின் ஓர் ஐக்கியப்பட்ட இயக்கம் அபிவிருத்தி ஆகாமல் தடுப்பதற்காகவும் அமைந்திருந்தது.

முதலாளித்துவ ஆட்சியின் கட்டமைப்பிற்குள் இன அடிப்படையிலான அரசியலின் ஒருங்கிணைப்பு உழைக்கும் மக்களின் சமூக நிலைமைகள் மீதான ஒரு பாரியளவிலான தாக்குதலுடன் பொருந்தி உள்ளது. வறுமை மற்றும் சமூக அவலத்தின் அதிகரிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள் ஆபிரிக்க-அமெரிக்கர்களின் மிகவறிய பிரிவுகளாகும். இவர்கள் ஐயத்திற்கிடமின்றி பொருளாதாரரீதியில் 1960களில் இருந்ததை விடவும் மிகவும் மோசமடைந்துள்ளனர்.

ஒபாமாவின் கருத்துக்கள் மற்றும் நியூ யோர்க் டைம்ஸில் வெளியான சமீபத்திய தலையங்கங்கள் மற்றும் கட்டுரைகளில் மலைப்பூட்டுவது என்னவென்றால், இனவாதத்தினை ஓர் அடிப்படையான இனவாதரீதியாகவே புரிந்துகொள்ளல் என்பதை "இடது" அல்லது "தாராளவாத" அரசியல் சக்திகள் என்று தவறாக அழைக்கப்படுபவை ஊக்குவிக்க முயல்வது தான். அவை இனவாதிகளினது வாதங்களையே புத்திஜீவிதரீதியாக நியாயப்படுத்துவதை நோக்கி மிகவும் நெருக்கமாக இருக்கும் வாதங்களையே உருவாக்குவதிலும் மற்றும் அபிவிருத்தி செய்வதிலும் ஈடுபட்டுள்ளன.

இப்போது சமூக சமத்துவமின்மையும் வர்க்க பிளவுகளும் 1920களுக்குப் பின்னர் கண்டிராத மட்டங்களில் இருக்கின்ற நிலையில், அரசியல் ஆளும்வர்க்கமும் மற்றும் ஜனநாயக கட்சியின் சுற்றுவட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் அடையாள அரசியலை அடிப்படையாக கொண்ட பல்வேறு அமைப்புகளும் அமெரிக்காவில் பாரியளவிலான இனவாத பிளவு என்று கூறப்படுவதைப் பலமாக திணிப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்தையும் விட்டுவைப்பதில்லை. இதற்காக அவை "இனம் மீதான தேசிய உரையாடலுக்கும்" முடிவில்லாமல் அழைப்புவிடுக்கின்றன.

மிகப்பெரும்பான்மை மக்கள் முகங்கொடுக்கும் சமூக நிலைமைகள் குறித்து எதையும் கருத்தில் எடுப்பதென்பது இத்தகைய "உரையாடல்களில்" முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. பல தசாப்தங்களாக ஆபிரிக்க-அமெரிக்கர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்திருப்பினும், பால்டிமோர் மற்றும் டெட்ராய்ட் போன்ற நகரங்கள் நாசமாக்கப்பட்டமை; வெள்ளையின மக்கள் மேலோங்கிய பகுதிகளில் வறுமையின் அதிகரிப்பு; அல்லது ஒபாமா நிர்வாக கொள்கைகளின் விளைவுகள் குறித்த சங்கடமான உண்மைகள் மேலோட்டமாக புறக்கணிக்கப்படுகின்றன..

இத்தகைய வர்க்க பிரச்சினைகளை விவாதிக்க மாட்டார்கள் ஏனென்றால் அவற்றை எடுத்துக்காட்டுவது எல்லா இனங்களைச் சேர்ந்த மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் எதைப் புரிந்து கொண்டு வருகிறார்களோ, அதாவது இனவாதம் மற்றும் இனவாத அரசியல் என்பது ஒரு திவாலான மற்றும் சீரழிந்த சமூக ஒழுங்கமைப்பான முதலாளித்துவத்தின் சித்தாந்தரீதியான முண்டுகோல்கள் என்பதை  எடுத்துக் காட்டிவிடும்.