சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

NATO announces expansion of military force targeting Russia

ரஷ்யாவை இலக்கில் வைத்து இராணுவ படை விரிவாக்கத்தை நேட்டோ அறிவிக்கிறது

By Niles Williamson
25 June 2015

Use this version to printSend feedback

புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை புரூசெல்ஸில் நடந்த நேட்டோ பாதுகாப்பு மந்திரிகளின் கூட்டம், அந்த அமைப்பின் விடையிறுப்பு படையை தற்போதைய 13,000 என்ற மட்டத்திலிருந்து 40,000 துருப்புகளாக விரிவாக்க ஒப்புக்கொண்டது. செவ்வாயன்று, அக்கூட்டத்திற்கு முன்னதாக, அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அஸ்டன் கார்டர், பால்டிக் அரசுகளிலும் அத்துடன் போலாந்து, ரோமானியா மற்றும் பல்கேரியாவிலும் நூற்றுக் கணக்கான அமெரிக்க டாங்கிகள், இராணுவ வாகனங்கள் மற்றும் கனரக பீரங்கி சாதனங்கள் நிலைநிறுத்தப்படுமென அறிவித்தார்.

துருப்புகள் மற்றும் இராணுவ தளவாடங்களின் இந்த கட்டமைப்பு, ரஷ்யாவிற்கு எதிராக திருப்பிவிடப்பட்ட நேட்டோவின் ஒரு நீண்டகால மீள்நோக்குநிலையின் பாகமாகும். அத்தகைய அச்சுறுத்தல் மற்றும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளிலிருந்து கிரெம்ளின் ஒரேயொரு முடிவுக்குத் தான் வர முடியும்: அதாவது வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் ரஷ்யாவிற்கு எதிராக போருக்குத் தயாரிப்பு செய்து வருகிறார்கள். ஐயத்திற்கிடமின்றி மாஸ்கோ அதற்கேற்ப தயாரிப்பு செய்து வருகிறது.

போலாந்தில் கடந்த வாரம் முடிந்த நேட்டோ போர் பயிற்சிகளின் முடிவில் போலாந்து பாதுகாப்புத்துறை மந்திரி Tomasz Siemoniak, அமெரிக்க-நேட்டோ கொள்கையின் விளைவுகளை எடுத்துரைத்தார்: “இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய சமாதான காலகட்டம் முடிந்துவிட்டது. நமது பாதுகாப்பிற்காக நாம் மேற்கொண்டு ஒன்றும் செய்யாவிட்டால், நம்மால் நமது ஐரோப்பிய வாழ்க்கை போக்கைப் பாதுகாக்க முடியாது,” என்றார்.

சர்வதேச தொழிலாள வர்க்கம் இந்த கருத்தை ஒரு கொடிய எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய சமாதான காலகட்டம் முடிந்துவிட்டது என்றால், மூன்றாம் உலக போருக்கான கட்டமைப்பு ஆரம்பமாகி உள்ளது என்றாகிறது.

புதனன்று புரூசெல்ஸ் கூட்டத்தின் ஆரம்பத்தில், நேட்டோ பொது செயலர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் மிகவும் போலித்தனமாக, "சண்டையை" நேட்டோ விரும்பவில்லை என்று அறிவித்தார். “ஒரு புதிய ஆயுத போட்டியை நாங்கள் விரும்பவில்லை" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். அவர், கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகளின் நிலைநிறுத்தல் விரிவாக்கப்படுவது, முற்றிலும் உக்ரேனில் ரஷ்ய "ஆக்ரோஷத்திற்கு" ஒரு தற்காப்பு விடையிறுப்பென்று வாதிட்டார்.

அணுஆயுத நடவடிக்கைகள் உட்பட ரஷ்யா என்ன செய்து வருகிறதோ அதன் தாக்கங்களை நாங்கள் மிக கவனமாக ஆராய்ந்து வருகிறோம்,” என்றவர் தெரிவித்தார்.

கூட்டணியின் அங்கத்துவ நாடுகள் அவற்றின் பாதுகாப்பு வரவு-செலவு திட்டக்கணக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2 சதவீதமாக உயர்த்துவதற்கு, கடந்த செப்டம்பரில் அவை வேல்ஸ் நேட்டோ உச்சிமாநாட்டில் வழங்கிய வாக்குறுதிகளைப் பூர்த்தி செய்யுமாறு ஸ்டொல்டென்பேர்க் அந்நாடுகளுக்கு அழைப்புவிடுத்தார். அங்கத்துவ அரசுகளில் பெரும்பான்மை 2 சதவீத உச்சவரம்பிற்கு கீழே இருப்பதாக சுட்டிக்காட்டும் புள்ளிவிபரங்களை நேட்டோ திங்களன்று வெளியிட்டது. நேட்டோவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு செலவுகள் 2015 இல் $893 பில்லியனாக 1.5 சதவீத அளவிற்கு குறையுமென அந்த அறிக்கை குறிப்பிட்டது. அக்கூட்டணியில் உள்ள அமெரிக்கா, போலாந்து, எஸ்தோனியா, பிரிட்டன் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் மட்டுமே 2 சதவீத இலக்கைப் பூர்த்தி செய்யும்.

விடையிறுப்பு படையின் (Response Force) விரிவாக்கமானது, புரூசெல்ஸ் கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்ட எண்ணற்ற முன்னெடுப்புகளில் ஒன்றாகும். பாதுகாப்புத்துறை மந்திரிமார்கள் லாட்வியா, லித்துவேனியா, எஸ்தோனியா, போலாந்து, ரோமானியா மற்றும் பல்கேரியாவில் ஆறு புதிய நேட்டோ கட்டளை மையங்களை ஸ்தாபிக்கும் திட்டங்களை இறுதி செய்தனர்.

ஸ்டொல்டென்பேர்க் கருத்துப்படி, தொடக்கத்தில் 40 பணியாளர்களைக் கொண்ட ஒவ்வொரு புதிய மையமும், மூலோபாய திட்டமிடல், இராணுவ பயிற்சிகள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 5,000 பேர் கொண்ட பலமான புதிய மிகத்துரித தயார்நிலை கூட்டுப்படை (VJTF) ஆகியவற்றால் அமைக்கப்படும். இந்த துரித தயார்நிலை படை, ரஷ்யாவிற்கு எதிராக அணிதிரள அழைக்கப்பட்ட உடனேயே ஒருசில நாட்களுக்குள் அணிதிரளும் வகையில் இருக்கும்.

திங்களன்று, அமெரிக்க பாதுகாப்பு செயலர் கார்டர், VJTFக்கு குண்டுவீசிகள், போர் விமானங்கள், உளவுபார்க்கும் டிரோன்கள், சிறப்பு நடவடிக்கை துருப்புகள் மற்றும் ஏனைய இராணுவ ஆதாரவளங்களை வாஷிங்டன் வழங்குமென அறிவித்தார்.

VJTFஇன் நடவடிக்கைகளுக்கு உதவியாக, உடனுக்குடன் குறுகியநேரத்தில் துருப்புகளை நிலைநிறுத்துவற்கான அதிகாரத்தை ஐரோப்பாவில் உள்ள நேட்டோ படைகளுக்கான கூட்டணியின் தலைமை தளபதி, அமெரிக்க ஜெனரல் Phillip Breedloveக்கு வழங்கவும் பாதுகாப்பு மந்திரிமார்கள் ஒப்புக்கொண்டனர்.

ரஷ்யா உடனான மோதல் ஓர் அணுஆயுத போராக தீவிரமடைய அதிகரித்துவரும் ஆபத்தை புரூசெல்ஸ் கூட்டம் உயர்த்திக் காட்டியது. ரஷ்யா 40 கண்டம்விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளை அந்நாட்டின் கையிருப்புகளில் சேர்க்க உள்ளது என்ற ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் சமீபத்திய அறிவிப்பு மற்றும் மாஸ்கோ இடைத்தூர அணுஆயுத படைகள் (INF) உடன்படிக்கையை மீறியுள்ளது என்ற அமெரிக்க குற்றச்சாட்டுக்கள் என இவற்றின் வெளிச்சத்தில், அங்கே கூடியிருந்த மந்திரிமார்கள் அக்கூட்டத்திற்கு வெளியே நேட்டோவின் அணுஆயுத மூலோபாயம் குறித்தும் விவாதங்கள் நடத்தினர்.

அணுஆயுதங்கள் என்று வரும்போது" ரஷ்யாவின் அறிக்கைகள் "வரம்புகளைக்" குறைத்துவிட்டிருப்பதாக ஒரு பெயர்வெளியிடாத அதிகாரி எச்சரித்ததாக Guardian எழுதியது. “ரஷ்யாவின் ஐரோப்பிய நடவடிக்கைகளைக் குறித்த ஒட்டுமொத்த ஆய்வின் பாகமாக மற்றும் குறைந்தபட்சம் நேட்டோவில் எவ்வாறு நாங்கள் துரதிருஷ்டவசமாக எதிர்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும்" நேட்டோ "மிக நெருக்கமாக ஆராய்ந்து வருகிறது" என்பதையும் அந்த அதிகாரி சேர்த்துக் கொண்டார்.

நேட்டோவின் அணுஆயுத திட்டமிடல் குழுவின் ஒரு கூட்டம் இந்த ஆண்டின் இறுதியில் நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. Guardian செய்தியின்படி, “நேட்டோ இராணுவ பயிற்சிகளில் அணுஆயுதங்களின் விரிவார்ந்த பாத்திரமும்" விவாதிக்க வேண்டிய பிரச்சினைகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

நேட்டோவிற்கான அமெரிக்க தூதர் Doug Lute இதழாளர்களுக்கு தெரிவிக்கையில், “ரஷ்யா அதன் அணுஆயுதங்கள் குறித்து என்ன கூறுகிறதோ அதன் சாத்தியமான பாதிப்புகளைக் கண்டுணரமற்றும் உண்மையில் அபிவிருத்தி மற்றும் நிலைநிறுத்தலை பொறுத்த வரையில் அடிமட்டத்தில் நாங்கள் என்ன பார்க்கிறோம் என்பது குறித்து அங்கே வாஷிங்டனில் ஒரு பொதுவான மதிப்பீடு நடந்து வருகிறது, இங்கே நேட்டோவிலும் அதற்கு இணையான ஒரு மதிப்பீடு நடந்து வருகிறது,” என்றார்.

அமெரிக்க மூலோபாயம், திட்டங்கள் மற்றும் தகைமைகளுக்கான பாதுகாப்புத்துறை துணை செயலாளரும், பாதுகாப்புத்துறை செயலர் கார்ட்டரின் முக்கிய அணுகொள்கை உதவியாளருமான ரோபர்ட் ஷேர், இந்த மாத தொடக்கத்தில் அளித்த சாட்சிய உரையில் காங்கிரஸிற்கு தெரிவிக்கையில், குற்றஞ்சாட்டப்படும் INF உடன்படிக்கை மீறல்களுக்கு விடையிறுப்பாக பெண்டகன் ரஷ்யாவிற்கு எதிராக, முன்கூட்டிய ஏவுகணை தாக்குதல்கள் உட்பட பல்வேறு வகையிலான சாத்தியக்கூறுகளைப் பரிசீலித்து வருகிறது என்றார்.

மாஸ்கோவிலிருந்து வந்த சமீபத்திய அறிக்கைகள் குறித்து பேசுகையில், நேட்டோவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் Ivo Daalder கூறுகையில், “அது மக்களை பீதியடைய செய்கிறது. ஓர் இராணுவ மோதல் ஏற்படுமென்பதை நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியாத ஒரு நிலைமையில் நாம் இப்போது இருக்கிறோம் என்பதுடன், இந்த மாதிரியான வெற்றுரைகள் கூட பிழையான கணக்கீட்டின் சாத்தியக்கூறுக்கு பங்களிப்பு செய்கிறது,” என்றார்.

ஐரோப்பிய தலைமை வலையமைப்பிற்கான ஆராய்ச்சி இயக்குனர் Lukasz Kulesa வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு கூறுகையில், நேட்டோ அதன் பகிரங்கமான வார்த்தைஜாலங்களை நிறுத்தி விட்டு, பால்டிக் அரசுகளின் மீது அணுஆயுதமேந்தும் தகைமை கொண்ட B-52க்களைப் பறக்கவிடுவது போன்ற பின்புல காட்சி உபாயங்களைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.

"அமெரிக்காவும் ஒரு அணுஆயுத குண்டுவீச்சை நடத்த தகைமை கொண்டது என்பதை ரஷ்யாவிற்கு திருப்பி சமிக்ஞை செய்ய இதுவே வழி,” என்று Kulesa தெரிவித்தார்.

ஆண்டுதோறும் நடக்கும் Sabre தாக்குதல் இராணுவ பயிற்சிகளின் பாகமாக, கடந்த வாரம் அமெரிக்க B-52 முதல்முறையாக லாட்வியா மீது பறக்கவிடப்பட்டது. அது ஒரு வான்வழி தாக்குதலில், லாட்வியா சிப்பாய்கள் கொடுத்த அழைப்பிற்கு, போலி குண்டுகளை வீசியது. அத்தாக்குதல் ரஷ்ய எல்லையோரத்தில் இருந்து 200 மைல்களுக்கு குறைவான தூரத்தில் அடாஜியில் நடத்தப்பட்டது.

Sabre தாக்குதல் பயிற்சிகளில் பங்கெடுத்திருந்த அமெரிக்க துணைப்படை துருப்புகள் லித்துவேனியா மற்றும் போலாந்தில் விமானத்தளங்களை முற்றுகையிடுவதைப் போல பயிற்சி மேற்கொண்டன.