சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

US, NATO powers intensify preparations for nuclear war

அமெரிக்க, நேட்டோ அதிகாரங்கள் அணுஆயுத போருக்கான தயாரிப்புகளை தீவிரப்படுத்துகின்றன

By Thomas Gaist
26 June 2015

Use this version to printSend feedback

நேட்டோ ஆதார நபர்களை மேற்கோளிட்டு புதனன்று மாலை கார்டியன் இதழ் வெளியிட்ட செய்தியின்படி, குற்றஞ்சாட்டப்படும் "ரஷ்ய ஆக்ரோஷ நடவடிக்கை" என்பதற்கு விடையிறுப்பாக மிகவும் ஆக்ரோஷமான அணுஆயுத மூலோபாயங்களை நடைமுறைப்படுத்த நேட்டோ இராணுவ கூட்டணி தயாரிப்பு செய்து வருகிறது.

நேட்டோ அதிகாரிகளின் கருத்துப்படி, ரஷ்யாவின் எல்லையோரங்களை ஒட்டி நடந்துவரும் நேட்டோ இராணுவ பயிற்சிகளில் பெருமளவிற்கு அணுஆயுத படைகளை ஈடுபடுத்துவதற்கான ஏற்பாடுகளும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக அணுஆயுத தீவிரப்பாட்டிற்கான புதிய வழிமுறைகளும் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களில் உள்ளடங்கி உள்ளன.

கூட்டணியின் அணுஆயுத கோட்பாடு, நடந்துவரும் நேட்டோ உச்சிமாநாட்டிற்கு "பக்கவாட்டில்" வெளியே தெரியாதவாறு, உத்தியோகபூர்வமற்ற விவாதங்களின் விடயமாக உள்ளது. இந்த புதிய கொள்கைகள், கூட்டணியின் அணுஆயுத திட்டக்குழுவின் வரவிருக்கின்ற மாநாட்டில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டு உறுதி செய்யப்படும், கிடைத்த செய்திகளின்படி இரகசிய திட்டமிடல் குறித்து விவாதிப்பதற்காக அம்மாநாடு மறுதேதியிட்டு முன்னதாகவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

“அணுஆயுத விடயத்தை சுற்றி ரஷ்யாவின் பகிரங்கமான வார்த்தை பிரயோகங்களைக் குறித்து நிஜமாகவே கவலையாக உள்ளது. ஆகவே அணுஆயுதங்கள் குறித்து கூட்டணிக்குள் நிறைய கருத்துரையாடல்கள் நடக்கின்றன,” என்று ஒரு பெயர் வெளியிட விரும்பாத நேட்டோ இராஜாங்க அதிகாரி கார்டியனுக்குத் தெரிவித்தார்.

ரஷ்யாவின் ஆக்ரோஷ நடவடிக்கைக்கு விடையிறுப்பாகவே, அணுஆயுத கொள்கையை மறுதிருத்தம் செய்வது குறித்த விவாதம் உள்ளது என்ற வாதம் யதார்த்தத்தை தலைகீழாக திருப்புகிறது. கடந்த ஆண்டு உக்ரேனில் அமெரிக்க மற்றும் நேட்டோ ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர், பிரதான ஏகாதிபத்திய சக்திகள் 40,000 துருப்புகள் கொண்ட ஒரு துரித எதிர்நடவடிக்கை படையை ஸ்தாபிப்பது உட்பட பொறுப்பற்றவிதத்தில் கிழக்கு ஐரோப்பாவை இராணுவமயப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளன.

இந்த வாரம், அமெரிக்க பாதுகாப்பு செயலர் அஷ்டன் கார்ட்டர், அமெரிக்கா ரஷ்யாவின் எல்லையோரம் உள்ள நாடுகளில் டாங்கிகள், இராணுவ வாகனங்கள் மற்றும் ஏனைய தளவாடங்களை நிரந்தரமாக நிலைநிறுத்தும் என்று அறிவித்தார். அங்கே ஏற்கனவே அந்த வலதுசாரி அரசாங்கம் நிறைய உதவிகளைப் பெற்றுவருகிறது என்பதற்கு அப்பாற்பட்டு, நேரடியாக உக்ரேனுக்கு ஆயுதம் வழங்குவது குறித்தும் விவாதங்கள் நடந்து வருகின்றன.

கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்ரோஷமான நகர்வுகளை எதிர்கொள்வதற்கான அல்லது தடுத்துநிறுத்துவதற்கான ரஷ்யாவின் எந்தவொரு முயற்சிக்கும், நேட்டோ இப்போது, அணுஆயுதங்கள் உட்பட முன்பினும் அதிகமாக பாரியளவில் இராணுவ விடையிறுப்பைக் கொண்டு பதிலடி கொடுக்க திட்டமிட்டு வருகிறது.

நேட்டோ மூலோபாயவாதிகளின் சிந்தனையின் ஒரு அறிகுறி, பைனான்சியல் டைம்ஸில் வெளியான ஓர் அறிக்கையில் வழங்கப்பட்டது. பால்டிக் நாடுகளில் ஏதேனும் ஒன்றுடன் சம்பந்தப்பட்ட ஒரு மோதல் சம்பவத்தில், “கூட்டணியே மோதலைத் தீவிரப்படுத்துவதாக... ரஷ்யா குற்றஞ்சாட்டலாம் மற்றும் இடைத்தூர அணுஆயுதங்களைப் பயன்படுத்த அச்சுறுத்தக்கூடும்.” புதிய அமெரிக்க பாதுகாப்பிற்கான மையத்தின் (CNAS) Elbridge Colby ஐ டைம்ஸ் மேற்கோளிட்டது: “அணுஆயுதம் குறித்து ஒட்டுமொத்தமாக மறுசிந்தனை செய்ய வேண்டிய அவசியம் நேட்டோவிற்கு இல்லை. ஆனால் அது எவ்வாறு விடையிறுக்கும் என்பதை குறித்தும் மற்றும் அதிலிருந்து அவர் தப்பவே முடியாது என்பதை புட்டினுக்கு அது எவ்வாறு காட்ட விரும்புகிறது என்பதைக் குறித்தும் அது யதார்த்தபூர்வமாக இருக்க வேண்டியுள்ளது.”

ரஷ்யா இடைத்தூர அணுஆயுதப்படை உடன்படிக்கையை (INF) மீறியுள்ளது என்ற அமெரிக்க குற்றச்சாட்டுக்களை ரஷ்ய அரசாங்கம் மறுத்துள்ள நிலையில், இந்த காட்சி கட்டமைக்கப்படுகின்றன.. குற்றஞ்சாட்டப்படும் மாஸ்கோவின் உடன்படிக்கை மீறலுக்கு விடையிறுப்பாக, பெண்டகன் ரஷ்யாவின் ஏவுகணைகளுக்கு எதிராக மற்றும் அணுஆயுதங்கள் உட்பட அதன் ஏனைய இலக்குகளுக்கு எதிராகவும் முன்கூட்டிய தாக்குதல்களை நடத்த தயாரிப்பு செய்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தால் (CSIS) “அணுத்திட்டம்: அமெரிக்க அணுசக்தி மூலோபாய வரையறையும், 2025-2050 இன் நிலைப்பாடும்,” என்றவொரு பரந்த அறிக்கை பிரசுரிக்கப்பட்ட ஒருசில நாட்களுக்குப் பின்னரே, நேட்டோவின் அணுஆயுத மூலோபாயத்தில் பிரதான மறுதிருத்தங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. அந்த அறிக்கையின் பிரதான பகுதிகள் தொழில்ரீதியிலான அமெரிக்க அரசாங்க மூலோபாயவாதியும் மற்றும் மூத்த CSIS ஆய்வாளருமான கிளார்க் முர்டோக் ஆல் எழுதப்பட்டிருந்தது. அவர் முன்னதாக மத்திய உளவுத்துறை (CIA), பாதுகாப்புத்துறை (DoD), அமெரிக்க விமானப்படை மற்றும் தேசிய போர்ப்பயிற்சி கல்லூரி ஆகியவற்றில் உயர்மட்ட மூலோபாய வேலைகளில் பணியாற்றியவராவார். CNAS மற்றும் தேசிய பொதுக்கொள்கை பயிலகத்தின் (NIPP) குழுக்கள் உட்பட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வல்லுனர்களின் ஒரு மிகப் பெரிய குழுவும் அந்த அறிக்கையில் பங்களிப்பு செய்திருந்தது.

ரஷ்யா, சீனா அல்லது ஏனைய ஏதேனும் சக்திகளுடனான ஒரு போரில் எளிமையாக பயன்படுத்துவதற்கேற்ப அமெரிக்கா அதன் அணுஆயுத தளவாடங்களை உற்பத்தி செய்யவேண்டுமென்பதே CSIS பகுப்பாய்வின் உந்துதலாக உள்ளது. அது, புதிய தலைமுறை தந்திரோபாய போர் தளவாடங்கள் மற்றும் செயல்படுத்தும் அமைப்புமுறையின் அடிப்படையில், இராணுவம் "இருபத்தியோராம் நூற்றாண்டு எதார்த்தங்களுக்காக வடிவமைக்கப்பட்ட அமெரிக்க அணுஆயுத மூலோபாயத்தை" ஏற்க வேண்டும் என்கிறது.

அதன் நடவடிக்கைகள் ஓர் அணுஆயுத பேரழிவுக்கு இட்டுச் செல்லும் என்ற கவலைகளுடன் "சுய-கட்டுப்பாடு" இல்லாமல், அதிநவீன தந்திரோபாய அணுஆயுதங்கள், அச்சுறுத்துவதற்கும் மற்றும் சிறிய அணுஆயுத போர்களைத் தொடங்குவதற்கும் வாஷிங்டனுக்கு உதவுமென்று CSIS அறிக்கை வாதிடுகிறது.

“குறைந்தளவில் நிச்சயமான சேதம், பரவலான கதிரியக்கம், நிலத்தில் ஊடுருவி இருத்தல், மின்காந்த அலை துடிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ற ஏனையவை" உட்பட, “அமெரிக்கா நிறைய பயன்படுத்தத்தக்க அணுஆயுதங்களை அபிவிருத்தி செய்து நிலைநிறுத்த வேண்டியது அவசியமாகும்,” என்று CSIS எழுதியது.

“அணுஆயுத குழுவில்" குறைந்தபட்சம் ஒன்பது அரசாங்கங்கள் புதிதாக சேர்ந்துள்ளதுடன், சீன மற்றும் ரஷ்ய அணுஆயுத தளவாடங்களின் வளர்ச்சியால் அமெரிக்க தொழில்நுட்ப மேலாளுமை அரிக்கப்படுவதை எதிர்கொள்வதற்கு அதுபோன்ற முன்னேற்றங்களே ஒரே வழியாகும் என்று அந்த அறிக்கை வாதிடுகிறது.

CSIS மற்றும் முர்டோக் ஆல் அறிவுறுத்தப்பட்ட "நிதானமான விடையிறுப்பு" (Measured Response) தத்துவத்தின் கீழ், இந்த விதமான அதிகளவில் இடம் விட்டு இடம் நகரக்கூடிய அணுஆயுத தாக்குதல் படைகள், "கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அணுசக்தி நடவடிக்கைகளில்", ஒரு முழு-அளவிலான அணுஆயுத போருக்கு இட்டுச் செல்லாமல் எதிரியின் இலக்குகளுக்கு எதிராக "குறைந்த தாக்கத்தைக் கொண்ட, துல்லியமான, வித்தியாசமான விளைவுகளை ஏற்படுத்தும்" அணுகுண்டுகளைப் பயன்படுத்தப்படலாம்..

“வேறுபட்ட அணுஆயுத விடையிறுப்பு சாத்தியக்கூறுகளின் ஒரு வேகமான தொகுப்பை முன்னோக்கி நிலைநிறுத்துவதன்" மூலமாக, அமெரிக்கா "அணுஆயுத தீவிரத்தின் ஏணியில் எல்லா படிகளிலும்" தந்திரோபாய அணுஆயுத தாக்குதல்களைத் தொடங்க முடியும்.

அதுபோன்ற "சிறிய அளவிலான" அணுசக்தி தாக்குதல்கள், ஓர் உலகளாவிய அணுசக்தி போராக தீவிரமடையாது என்று கருத்தில் கொண்டு பார்த்தாலும் கூட, தவிர்க்கவியலாமல் நூறு மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வை இல்லையென்றாலும் பத்து மில்லியன் கணக்கானவர்களின் உயிரைப் பறிக்கும்.

இந்த தத்துவத்தின்படி, வாஷிங்டனின் பெரும் விளைவு மூலோபாய ஆயுதங்களைக் கொண்ட மிகப்பெரிய ஆயுதக்கிடங்கில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுப்பதன் மூலமாக, பிராந்திய-அளவிலான அணுஆயுத போர்முறை விளைவுகளில் இருந்து அமெரிக்க கண்டம் பாதுகாக்கப்படும். அனைத்திற்கும் மேலாக, அமெரிக்க அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட எந்தவொரு "கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட" அணுஆயுத மோதல்களும், வட அமெரிக்காவிலிருந்து தொடங்காமல் அல்லது வட அமெரிக்கா அணுஆயுத நடவடிக்கைகளின் இலக்கில் வைக்கும் வகையில் சம்பந்தப்பட்டிருக்காது.

“ஒரு பிராந்திய கூட்டாளி மீதான அணுஆயுத தாக்குதலுக்கு அமெரிக்க அளிக்கும் விடையிறுப்பில், அமெரிக்க தாய்மண் சம்பந்தப்படக்கூடாது,” என்று CSIS எழுதியது.

மறைப்பில்லாத வார்த்தைகளில், CSIS அறிவுறுத்துகையில், கூட்டு அரசாங்கங்கள் மற்றும் வாடிக்கையாளர் அரசாங்கங்களை அமெரிக்கா போர்க்கள பகுதிகளாக மற்றும் "கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட" அணுஆயுத போர்களத்திற்கான அரங்காக பயன்படுத்த வேண்டும் என்கிறது.

ஆளும்-வர்க்க கொள்கை, தத்துவவாதிகளின் ஒரு பரந்த வலையமைப்பிற்கு இடையிலான கூட்டு-ஒத்துழைப்பின் விளைபொருளாக உள்ள அதுபோன்ற பரிந்துரைகள், பெரும் அச்சுறுத்தலானதாகும். அவை சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மரணகதியிலான எச்சரிக்கயை பிரதிநிதித்துவம் செய்கின்றன.

அமெரிக்க அணுஆயுதங்களின் திறன்களை கணிசமான அளவிற்கு விரிவாக்குமாறு அங்கே இதர ஏனைய பிற அழைப்புகளும் உள்ளன. இந்த வார தொடக்கத்தில் அட்லாண்டிக் கவுன்சிலுக்கு அளித்த கருத்துக்களில், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் மற்றும் பிரதிநிதிகள் சபையின் இராணுவச்சேவை கமிட்டியின் தலைவர் Mac Thornberry, “புதிய அணுஆயுதங்கள் கட்டமைப்பது குறித்த தேசிய உரையாடலுக்கு" அழைப்புவிடுத்தார்.

“அதுகுறித்து எங்களால் சிறிது நேரத்திற்கு கூட ஓர் உரையாடலை நடத்த முடியவில்லை, ஆனால் நாங்கள் அது குறித்து பேசுவோமென்று நினைக்கிறேன்,” என்று Thornberry அறிவித்தார்.

ஒபாமா நிர்வாகம் மூன்று-தசாப்த காலத்திற்கு அணுஆயுதங்களின் திறன்களை மேம்படுத்த 1 ட்ரில்லியன் டாலருக்கான திட்டங்களைக் கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தது.

CSIS இன் எழுத்துக்களிலும் மற்றும் அரசு எந்திரத்திற்குள் உள்ள ஏனைய விவாதங்களிலும், அங்கே ஓரளவிற்கு பித்துப்பிடித்த நிலைமை உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகள், அணுஆயுத போரை நடத்துவதற்கும் மற்றும் அதில் வெற்றி பெறுவதற்கும் சிறந்த தந்திரோபாயங்களை உணர்ச்சியற்று கணக்கிட்டு வருகின்றனர். எவ்வாறிருப்பினும் இந்த பித்துப்பிடித்தத்தன்மை, முன்பினும் அதிகளவில் நேரடியாக இராணுவ பலத்தைப் பிரயோகித்து, ஒட்டுமொத்த உலகையும் கட்டுப்பாட்டில் பெறுவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தர்க்கத்திலிருந்தும் மற்றும் நிதி பிரபுத்துவத்தின் உந்துதலில் இருந்தும் பெருக்கெடுக்கிறது.