சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Greek crisis comes to a head

கிரேக்க நெருக்கடி முன்னுக்கு வருகிறது

Alex Lantier
29 June 2015

Use this version to printSend feedback

கிரீஸிற்கான ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பை நிறுத்துவது மற்றும் கிரேக்க வங்கிகளுக்கு கடன் வழங்குவதை மட்டுப்படுத்துவதென்ற ஐரோப்பிய நிதியியல் ஆணையங்களின் முடிவு, அந்நாட்டை ஒரு பொருளாதார மற்றும் நிதிய உருகுதலின் விளிம்பில் கொண்டு வந்துள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத்தை தகர்த்தெறிந்துள்ள மூர்க்கமான சிக்கன நடவடிக்கைகளின் இரக்கமற்ற ஐந்தாண்டுகால தாக்குதலில், இது சமீபத்திய கட்டமாகும்.

அதன் பிணையெடுப்பு திட்டம் நிறுத்தப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்த பின்னர், ஐரோப்பிய மத்திய வங்கி அது கிரேக்க வங்கிகளுக்கு வழங்கும் அவசரகால பணப்புழக்கத்தை தொடர்ந்து பராமரிப்பதாகவும், ஆனால் அதன் வரம்பை 89 பில்லியன் டாலரில் இருந்து உயர்த்தப் போவதில்லை என்றும் அறிவித்தது. அந்த தொகையிலிருந்து பெரும்பான்மை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு விட்டது. ஒரு சாத்தியமான வங்கியியல் பொறிவை முகங்கொடுத்திருக்கையில், ஏதென்ஸ் மூலதன கட்டுப்பாடுகளை திணித்துள்ளதுடன் ஒரு வாரகால வங்கி விடுமுறையையும் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய "முக்கூட்டால்" முன்வைக்கப்பட்ட திட்டம், ஏற்கனவே சீரழிந்து போயுள்ள கிரீஸிற்கு, பொருளாதார மற்றும் சமூக தற்கொலைக்கு ஒப்பான ஒரு திட்டமாகும்.

அது ஆழமான புதிய ஓய்வூதிய வெட்டுக்கள், தொழிலாளர்களது வாங்கும் சக்தியைக் குறைக்கும் மோசமான நிலையிலுள்ள மதிப்பு கூட்டு வரி உயர்வுகள், எரிசக்தி, துறைமுகம் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு துறைகளை தனியார்மயமாக்குதல் ஆகியவற்றிற்கு அழைப்புவிடுக்கிறது. பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் வொல்ஃப்காங் முன்சௌவ் அதை "டான்டேயினது (Dante) நரகத்தின் ஒரு பொருளாதார வடிவம்" என்று குறிப்பிட்டார். “அது கிரீஸிற்கு மொத்த பொருளாதார அழிவைக் கொண்டு வரக்கூடும்" என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

இந்த நரகத்தைத் திணிப்பதன் மூலமாக ஐரோப்பிய நிதியியல் மற்றும் அரசியல் மேற்தட்டுக்கள், ஒரு மூலதன சர்வாதிகாரத்தை திணிக்க எல்லா ஜனநாயக விதிமுறைகள் மற்றும் கோட்பாடுகளை தூக்கியெறிவதில் எதையும் விட்டுவிடப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளன. கடந்த ஐந்து மாதங்களின் கசப்பான அனுபவங்களில் இருந்து தொழிலாள வர்க்கம் ஓர் அரசியல் இருப்புநிலைக்கணக்கை வரைய வேண்டும் மற்றும் இந்த வாழ்வா-சாவா போராட்டத்தில் அதன் சொந்த சுயாதீனமான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

சோசலிசத்திற்கான எந்தவொரு போராட்டமும் மற்றும் அரசியல் அதிகாரத்தை தொழிலாள வர்க்கம் கையிலெடுப்பதற்கான எந்தவொரு போராட்டமும் யதார்த்தமற்றது என நிராகரிக்கப்பட வேண்டுமென்ற சிரிசாவின் வலியுறுத்தல் இந்த சம்பவங்களால் மறுத்தளிக்கப்படுகிறது. சிரிசாவால் பின்பற்றப்பட்ட அரசியல்தான் முற்றிலும் திவாலானது என்பது நிரூபணமாகி உள்ளது.

ஆளும் வர்க்கத்தால் தொடுக்கப்பட்ட தாக்குதல்களிலிருந்து கிரேக்க தொழிலாள வர்க்கத்தை பாதுகாக்க, ஐந்து மாதங்களாக, சிரிசா எதையும செய்திருக்கவில்லை. கிரேக்க செல்வந்த தட்டுக்களால் பில்லியன் கணக்கான பணம் திரும்ப எடுக்கப்பட்டு, வெளிநாட்டு வங்கி கணக்குகளில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்ட போதுகூட அது மூலதன கட்டுப்பாடுகளைக் கொண்டு வர மறுத்தது. இவ்வாறு அனுப்பப்பட்ட இந்த பணமெல்லாம் கிரீஸின் சித்திரவதையாளர்களால் கோரப்பட்ட பரந்த பெருமளவிலான சிக்கன நடவடிக்கைகளை திணித்ததிலிருந்து அவர்களுக்கு வழங்கப்பட்டவை ஆகும்.

இப்போது தான் சிரிசா கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது, அது தங்களின் குடும்பங்களுக்கு உணவு வழங்க அவர்களது சொந்த பணத்தை எடுப்பதிலிருந்து கிரேக்க தொழிலாளர்களைத் தான் தடுக்கிறது.

சிரிசா எதையுமே முன் உணரவில்லை.

அதன் அரசியலானது, உயர் மத்தியத்தர வர்க்கத்தினது பிரிவுகளின் சமூக நலன்களை அடிப்படையாக கொண்டுள்ளது. அதன் ஒட்டுமொத்த மூலோபாயமும், முதலாளித்துவ வர்க்கத்தினது சில பிரிவுகளை கிரீஸின் மீட்சிக்கு இணக்கப்படுத்தி கொண்டுவர முடியும் மற்றும் ஒரு மாற்றியமைக்கப்பட்ட சிக்கனத் திட்டத்தை அவை ஏற்றுக்கொள்ளுமாறு செய்ய அவற்றை இணங்குவிக்க முடியுமென்ற கேவலமான நம்பிக்கையின் அடிப்படையில் இருந்தது.

அனைத்திற்கும் மேலாக, சிரிசா ஒரு சோசலிச மற்றும் புரட்சிகர வேலைத்திட்டத்தின் மீது தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கு எதிராக உள்ளது. கிரேக்க தொழிலாள வர்க்கத்தை பாரிய வறுமைப்படுத்தும் கோரிக்கைகளுக்கு, மக்களிடம் அதனால் சிக்கன நடவடிக்கையை விற்க முடியுமென்ற நம்பிக்கைகளையே வலிநிவாரணிகளாக கொண்டு அது விடையிறுத்தது.

அத்தகைய அரசியல், ஐரோப்பிய ஒன்றியத்தின் சமீபத்திய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பதன் மீது ஜூலை 5 இல் ஒரு வெகுஜன வாக்கெடுப்பு நடத்த அழைப்புவிடுப்பதில் தொடர்கிறது. கிரேக்க மக்கள் மீது கடுமையான சிக்கன நடவடிக்கைகளின் புதிய சுற்றைத் திணிப்பதற்கான அரசியல் பொறுப்பினை திருப்பிவிடுவதே அந்த வெகுஜன வாக்கெடுப்பின் பிரதான நோக்கமாகும்.

அரசியல்ரீதியில், கிரேக்க அரசாங்கம் ஏற்கனவே சிக்கன கோரிக்கைகளை நிராகரிக்க ஒரு தெளிவான உரிமையை கொண்டுள்ளது. அது, ஐரோப்பிய வங்கிகளது கட்டளைகளின் மீது மக்களிடையே இருந்த ஆழ்ந்த விரோதத்திற்கு முறையிட்டதன் அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், தொடக்கத்திலிருந்தே, சிரிசா பிணையெடுப்புக்கு அதன் கடமைப்பாட்டையும் மற்றும் ஐரோப்பிய அமைப்புகளுடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதில் அதன் விருப்பத்தையும் வலியுறுத்தி உள்ளது.

இப்போதைய நிலையில், வெகுஜன வாக்கெடுப்பில் என்ன தீர்மானிக்கப்படுமென்பது தெளிவாக இல்லை. செவ்வாயன்று அது செலுத்த வேண்டிய அதன் கடன்தொகைகளை கிரீஸ் திரும்ப செலுத்தவியலாநிலையை (default) அடைந்தால், ஒட்டுமொத்த உடன்பாடும் முறித்துக் கொள்ளப்படுமென ஐரோப்பிய அமைப்புகள் சுட்டிக்காட்டி உள்ளன. அனைத்திற்கும் மேலாக அங்கே "வேண்டாம்" என்று வாக்கு வந்தால் அது என்ன செய்யும் என்பதை விவரிக்க எந்தவித முயற்சியும் அது செய்யவில்லை, அல்லது யூரோ மண்டலத்தில் தங்கியிருக்க மற்றும் கிரீஸின் கடன் வழங்குனர்களுடன் ஓர் உடன்பாட்டை எட்ட அது அதன் கொள்கையில் எவ்வாறு மாற்றம் செய்யுமென்பதைக் குறித்தும் எந்தவொரு அறிகுறியும் காட்டவில்லை.

இப்போதும் கூட, சிரிசா சில சமரசங்களைச் செய்து கொள்ள இடம் வைத்துள்ளது. ஞாயிறன்று முன்வந்ததைப் போல, ஜேர்மனியின் கடுமையான போக்கின் விளைவின் மீது ஐரோப்பிய சந்தைகளில் அதிகரித்துவரும் கவலைகளோடு சேர்ந்து, அந்த முட்டுச்சந்திலிருந்து வெளியேறுவதற்கு ஒரு வழியைக் காண வேண்டுமென்ற அழைப்புகள் அங்கே இருந்தன. கிரேக்க நெருக்கடியின் நிதியியல் மற்றும் புவிசார் அரசியல் தாக்கங்கள் இரண்டினையும் குறித்த கவலைகளோடு, "கிரீஸ் சீர்திருத்தங்கள் மற்றும் யூரோ மண்டலத்திற்குள் வளர்ச்சி மீண்டும் ஏற்படுவது" அவசியம் என்பது குறித்து விவாதிக்க ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலை ஒபாமா நேற்று அழைத்திருந்தார்.

அதன் பங்கிற்கு, ஐரோப்பிய ஆணையங்கள் ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியக்கூறை கையிருப்பில் வைத்திருக்கின்றன. ஞாயிறன்று சிரிசாவைப் பகிரங்கமாக கண்டித்த ஒரு தலையங்கத்தில் பைனான்சியல் டைம்ஸ், இந்த சாத்தியக்கூறு குறித்து எச்சரித்தது. “ஜோர்ஜ் பாப்பன்திரேயோ பிரதம மந்திரியாக இருந்தபோது 2011 இல் இதுபோன்றவொரு [வெகுஜன வாக்கெடுப்பு] உபாயத்தை முயன்றார். அந்த கடுமையான பிணையெடுப்பு உடன்படிக்கை உயிர் பிழைத்தது; மதிப்பிற்குரிய பாப்பன்திரேயோ அவரது வேலையை இழந்தார்.” தொழிலாள வர்க்கத்தின் பாரிய எதிர்ப்பைக் கையாள்வதற்கு, உயர்மட்ட தளபதிகள் இந்த தருணத்தில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் சதியாலோசனை செய்து வருகிறார்கள் என்பதில் அங்கே எந்த சந்தேகமும் இல்லை, வன்முறை மற்றும் ஒடுக்குமுறையைக் கொண்டு பாரிய போராட்டங்களை நேரடியாக சந்திக்கவும் மற்றும் தலையீடு செய்யவும் இராணுவத்தைப் பிரயோகிப்பதற்கான சாத்தியக்கூறை அவர்கள் பரிசீலித்து வருகிறார்கள். தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பொலிஸ் மற்றும் ஆயுதமேந்திய படைகளின் ஆதரவைப் பாதுகாக்கும் அதன் சொந்த முயற்சிகள் மூலமாகவே, சிரிசா தான் அதுபோன்றவொரு விளைவுக்கு பாதை வகுத்துள்ளது.

தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் நிலைமை படுபயங்கரமானதாகும். இங்கு பணயத்தில் இருப்பது கிரீஸ் தொழிலாளர்களது எதிர்காலம் மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த ஐரோப்பிய தொழிலாளர்களது எதிர்காலமுமே ஆகும். சிரிசாவை அவமதிக்க முனைந்ததன் மூலமாக ஐரோப்பிய வங்கிகள், சிக்கன நடவடிக்கைக்கு எதிரான வாக்குகள் போன்ற சிரிசாவை அதிகாரத்திற்கு கொண்டு வந்த ஜனவரி மாத ஜனரஞ்சக தேர்தல்கள், நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற உண்மையான கொள்கைகள் மீது எந்த தாக்கத்தையும் கொண்டிருக்காது என ஒரு சமிக்ஞையை அனுப்ப விரும்புகின்றன. சிக்கன நடவடிக்கைக்கான எந்தவொரு எதிர்ப்பையும் சகித்துக் கொள்ள முடியாது என்பதற்கு அது கிரீஸை ஒரு உதாரணமாக்கி வருகிறது.

இன்னமும் அதிக சிக்கன நடவடிக்கைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளை ஏற்க "வேண்டாமென" வாக்களிக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் கிரீஸ் தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுக்கிறது. ஆனால் அதுபோன்றவொரு வேண்டாமென்ற வாக்களிப்பானது, அது உள்ளடக்கி உள்ள அனைத்தையும் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

சர்வதேச மூலதனத்தின் குரலாக உள்ள முக்கூட்டால், கிரேக்க மீது பொருளாதார போர் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு விடையிறுப்பாக தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு புரட்சிகர போராட்டத்தின் அடித்தளத்தில் அதன் சொந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

கிரேக்க மற்றும் சர்வதேச ஆளும் வர்க்கத்தின் சதித்திட்டத்தை முறியடிக்க மற்றும் தொழிலாளர்களது அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதன் மூலமாக அதிகாரத்தை அதன் சொந்த கரங்களில் எடுப்பதற்கு உடனடியான நடவடிக்கை எடுக்காமல் தொழிலாள வர்க்கம் தன்னைத்தானே காப்பாற்றி கொள்ள முடியாது. கப்பல்துறை போன்ற மூலோபாய தொழில்துறைகளும், வங்கிகளும் கைப்பற்றப்பட்டு, கிரீஸைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள செல்வந்த மேற்தட்டுக்களின் சொத்துக்களும் கணக்குகளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக, கிரீஸில் உள்ள தொழிலாளர்கள், சிக்கன நடவடிக்கைக்கு எதிரான ஒட்டுமொத்தமாக ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஆழ்ந்த எதிர்ப்பை ஒன்றுதிரட்டுவதற்காக ஆதரவு நடவடிக்கைகள் மற்றும் போராட்ட நடவடிக்கைக்கு முறையிட வேண்டும். கிரீஸை ஓர் உதாரணமாக்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் வெற்றி பெற்றால், கிரீஸில் நடைமுறைப்படுத்தப்படும் மூர்க்கமான நடவடிக்கைகளை அது விரைவிலேயே ஒட்டுமொத்த ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் மீதும் திணிக்க திரும்பும். இத்தகைய தாக்குதல்களுக்கு எதிரான ஒரு வெற்றிகரமான போராட்டத்திற்கு, கிரீஸில் போலவே, சோசலிசத்திற்கான ஒரு புரட்சிகர போராட்டத்தில் ஐரோப்பா எங்கிலுமான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அணிதிரள்வு அவசியமாகும்.