சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Syriza floats proposal for referendum to impose EU austerity in Greece

கிரீஸில் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கையைத் திணிக்க சிரிசா வெகுஜன வாக்கெடுப்புக்கான பரிந்துரையை வெள்ளோட்டமிடுகிறது

By Kumaran Ira
30 April 2015

Use this version to printSend feedback

செவ்வாயன்று அதிகாலை வரை நீண்ட, ஒரு பரந்த முக்கிய-நேர திங்கட்கிழமை தொலைக்காட்சி பேட்டியில், கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் முக்கூட்டால் (ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம்) கோரப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை அவரது சிரிசா கட்சி தீவிரப்படுத்தும் என்பதைத் தெளிவுபடுத்தினார்.

பிணையெடுப்பு நிதிகளைக் கிரீஸிற்கு கையளிக்கவும் மற்றும் கிரேக்க வங்கிகளுக்கு கடன்வழங்குவதன் மீது ஐரோப்பிய மத்திய வங்கிகளின் நிறுத்திவைப்பதை தளத்துவதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துள்ள நிலையில், அதை வழங்கும் வகையில், அடுத்த வாரயிறுதி வாக்கில் முக்கூட்டுடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு அவரது அரசாங்கம் "மிக நெருக்கத்தில்" இருப்பதாக சிப்ராஸ் அறிவித்தார். கிரீஸின் தனியார் தொலைக்காட்சி ஸ்டார் டிவி இல் பேசுகையில், சிப்ராஸ் தெரிவித்தார், மே 9 வாக்கில், நாங்கள் ஓர் உடன்பாட்டை எட்டுவோம் என நினைக்கிறேன், அது சில பிணையெடுப்பு நிதிகள் கிடைக்க செய்யும், என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்காக, சிரிசா ஆழ்ந்த சமூக வெட்டுக்களை நடைமுறைப்படுத்த தயாரிப்பு செய்து வருகிறது. அவை ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றிய சிரிசாவின் தேர்தல் வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தால் கட்டளையிடப்படும் கொள்கைள் கிரேக்க மக்களால் பரந்தளவில் நிராகரிக்கப்படுகின்ற நிலையில், அவற்றிற்கு ஜனநாயக சட்டபூர்வ மூடுதிரையை வழங்கும் முயற்சியாக, அதற்காக, சிரிசா ஒரு வெகுஜன வாக்கெடுப்பை ஏற்பாடு செய்ய பரிசீலிக்கும் என்பதை சிப்ராஸ் சுட்டிக்காட்டினார்.

"தீர்வு எங்கள் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு இருக்கிறதென்றால், அதை மீற எனக்கு உரிமையில்லை, ஆகவே நாம் எட்ட வேண்டியுள்ள தீர்வு கிரேக்க மக்களால் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும், என்றார்.

சிக்கன நடவடிக்கைகள் மீது முக்கூட்டுடன் அது ஓர் உடன்பாட்டை எட்டவில்லையானால், அவரது அரசாங்கம் பொறிந்து போகலாம் அல்லது முன்கூட்டியே தேர்தல்களுக்கு அழைப்புவிடுக்க நிர்பந்திக்கப்படலாம் என்ற ஊகங்களை வெளிப்படையாக தணிக்கும் நோக்கில், சிப்ராஸ் முன்கூட்டிய எதிர்பாரா தேர்தல்களை நிராகரித்தார். தேர்தல்களே இல்லாமல், தெளிவாக மக்களே முடிவெடுப்பார்கள் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், என்றார்.

இதுவொரு மோசடியாகும். ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஓர் உடன்படிக்கைக்கு வெகுஜன வாக்கெடுப்பின் மூலம் ஒப்புதல் பெறும் சிப்ராஸினது திட்டத்தின் கீழ், கிரேக்க மக்களால் ஒன்றும் தீர்மானிக்க முடியாது. தோட்டா நிரப்பிய துப்பாக்கியைத் தொழிலாளர்களின் தலையில் வைத்து சிப்ராஸ் எச்சரிக்கிறார்: ஒன்று, முக்கூட்டின் வெறுக்கத்தக்க சிக்கன கொள்கைகளுக்கு அவர்கள் வாக்களித்தாக வேண்டும், அல்லது ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்க நிதியியல் அமைப்புமுறையின் கழுத்து நெரித்து யூரோ மண்டலத்திலிருந்து கிரீஸை வெளியேற நிர்பந்திக்கும் மற்றும் கிரேக்க அரசு திவாலாகும், அல்லது இரண்டுமே நடக்கலாம் என்பதே அவரது எச்சரிக்கையாக உள்ளது.     

அதுபோன்றவொரு வெகுஜன வாக்கெடுப்பின் வரையறைகளின் கீழ், நிதியியல் சந்தைகளால் அது எவ்வாறு கொள்ளையடிக்கப்பட வேண்டும் என்பதை மட்டுமே தேர்ந்தெடுக்கும் நிலையில் தொழிலாள வர்க்கம் விடப்படும். இரண்டாவது சாத்தியக்கூறு, அதாவது கிரீஸின் நிதியியல் அமைப்புமுறையின் பொறிவு குறித்தது, அது மக்கள் போராட்டங்களை நசுக்க அவசரகால இராணுவ நடவடிக்கைக்கு கிரேக்க அரசு மற்றும் சிரிசா அரசாங்கத்தின் தயாரிப்பை அர்த்தப்படுத்துகிறது.  

வலதுசாரி தினசரி Kathimerini குறிப்பிட்டதை போல, அனேகமாக உலகளாவிய பங்குச்சந்தைகள் மீதான தாக்கத்தைக் குறைப்பதற்காக ஒரு வாரயிறுதி நாளில், கிரேக்க நிதியியல் பொறிவு தவிர்க்கவியலாததென ஏதென்ஸ் முடிவெடுக்கும் சந்தர்ப்பத்தில், அது வீதிகளில் இராணுவத்தை இறக்கும். "இதுபற்றி ஒரு பொது அறிவிப்பு செய்யப்பட்டதும், இடைக்கால தீர்வாக யூரோவை ட்ராச்மாவாக (drachma) முத்திரை குத்த தயாரிப்பு செய்துவிட்டு, கிரீஸ் "சனியன்று அதிகாலை உடனடியாக அதன் இராணுவத்தை நிலைநிறுத்தும், அதன் எல்லைகளை மூடும்.

இறுதியாக இதை கிரேக்க மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால், அதற்கு பதிலாக, சிரிசா பதவிக்கு வர வாக்களிப்பதன் மூலமாக எதை அவர்கள் முடிவுக்குக் கொண்டு வர விரும்பினார்களோ, அதே ஐரோப்பிய ஒன்றிய சிக்கன கொள்கைகளுக்கு ஒப்புதல் வழங்குவார்கள் என மிகத்தெளிவாக சிப்ராஸ் கணக்கிடுகிறார். 

சிப்ராஸின் வெகுஜன வாக்கெடுப்பு முன்மொழிவால் நிதியியல் சந்தைகள் களிப்படைந்தன. சமூக செலவின வெட்டுக்களிலிருந்தும் மற்றும் கிரேக்கம் பெறும் கடன்கள் மீதான தொடர்ச்சியான ஊகவணிகங்களிலிருந்தும் கிடைக்கும் நிலையான இலாப ஓட்டத்திற்கு உத்திரவாதமாக அதை அவை பார்க்கின்றன. புளூம்பேர்க் செய்தி அறிவிக்கையில், சந்தைகள் அதை விரும்புகின்றன. ஒரு திவால்நிலையால் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய கிரீஸின் இரண்டு ஆண்டுகால பத்திரங்களிலிருந்து கிடைக்கும் இலாபங்கள், ஒரு வாரத்திற்கு முன்னர் 30 சதவீதத்திலிருந்து 20.54 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது... உள்நாட்டு பங்குச்சந்தை குறியீடு 13 சதவீதத்தால் உயர்ந்துள்ளது, என்று குறிப்பிட்டது.    

சிப்ராஸின் அரசாங்கம் ஜனவரி 25 தேர்தல்களில் வெற்றி பெற்றதற்கு பின்னர், அவரது இந்த வெகுஜன வாக்கெடுப்பிற்கான முன்மொழிவு தான், அவர் மேற்பார்வையில் நடந்துள்ள முக்கூட்டு உடனான மாத கணக்கிலான பேரம்பேசல்களின் விளைபொருளாக உள்ளது.

ஊதிய வெட்டுக்கள் நீக்கப்படும், ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்ற மோசடி தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில் சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்டது. கடன் மீட்சியின் மீது ஓர் உடன்பாட்டை எட்ட வேலை செய்வதன் மூலமாக மற்றும் ஏனைய ஐரோப்பிய அரசுகளுடன் பேரம்பேசுவதன் மூலமாக சிக்கன நடவடிக்கைகளை பாதியாக திரும்ப பெற்றுவிடலாம் என்ற அதன் முன்னோக்கு முற்றிலும் செல்லுபடியாகாதவை என்பது, அவை தொடர்ந்து சிக்கன நடவடிக்கைகளுக்கு அழுத்தம் அளித்ததும், நிரூபணமானது. பதவியேற்று வெறும் மூன்று வாரங்களில், சிரிசா அதன் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் தூக்கியெறிந்துவிட்டு, அது கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுக்க பொறுப்பேற்றிருப்பதை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மறுஉத்தரவாதம் வழங்கியது. 

முக்கூட்டிற்கு கடன்களைத் திரும்பி செலுத்துவதற்காக பில்லியன் கணக்கான யூரோ கையிருப்பு நிதிகளை ஒப்படைக்குமாறு சிரிசா இப்போது உள்ளாட்சி நிர்வாகங்களையும், பொது மருத்துவமனைகளையும், பல்கலைக்கழகங்களையும் நிர்பந்தித்து வருகிறது.

எவ்வாறிருந்த போதினும், கிரீஸ் கொண்டிருக்கும் 300 பில்லியன் யூரோ கடன்களைத் திரும்ப செலுத்துவதற்கு அண்மித்தளவிற்கு கூட அவை போதுமானதல்ல என்பதால், முக்கூட்டு மேற்கொண்டும் வெட்டுக்களை கோரி வருகிறது. முக்கூட்டிடம் இருந்து மேற்கொண்டு 7.2 பில்லியன் யூரோ கடனைப் பெறுவதற்காக, சிரிசா ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துவ கவனிப்பு, மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் உட்பட பரந்த சமூக வெட்டுக்களை வழங்க தயாரிப்பு செய்து வருகிறது. தொழிலாளர் சட்டங்கள், பொதுத்துறையில் வேலைநீக்கங்கள், மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் தனியார்மயமாக்கல் ஆகியவற்றில் பிற்போக்குத்தனமான மாற்றங்களும் இத்தகைய சீர்திருத்தங்களில் உள்ளடங்கும்.

சிரிசா தொழிலாள வர்க்கத்திடையே அதிகரித்து வரும் கோபத்தையும் முகங்கொடுக்கிறது. அது தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே 70 சதவீதத்திற்கு அதிகமாக ஒப்புதல் விகிதத்தைப் பெற்றிருந்த சிரிசா, வேகமாக அதன் ஆதரவை இழந்து வருகிறது. கிரேக்கர்களில் 52 சதவீதத்தினர் இப்போது அதன் செயல்பாட்டில் ஏமாற்றம் அடைந்திருப்பதாக Proto Thema பத்திரிகையின் சமீபத்திய கருத்துக்கணிப்பு கண்டறிந்தது.

சிப்ராஸ் இத்தகைய வெட்டுக்களுக்கு தயாரிப்பு செய்து கொண்டே ஐரோப்பிய ஒன்றியத்துடன் விவாதித்து வருகின்ற நிலையில், அவர் எரிச்சலூட்டும் விதத்தில் அவரது தொலைகாட்சி பார்வையாளர்களுக்கு, ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களை வழங்குவதே கிரேக்க அரசாங்கத்தின் முன்னுரிமையாகும், என்றார்.

மே 12க்குள் சர்வதேச நாணய நிதியத்திற்கு 700 மில்லியன் யூரோ செலுத்துவதற்கு அது தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், உண்மையில் ஏதென்ஸ் ஒரு பண நெருக்கடியை முகங்கொடுத்துள்ளது. இதனால் அது அரச மற்றும் தனியார் துறையினருக்கு வழங்கும் ஓய்வூதியங்களை நிறுத்திவைப்பதற்கு தீவிரமாக ஆலோசித்துவருகின்றது.

தொழிலாள வர்க்கத்துடன் ஒரு மோதல் நிலைமை உருவாகி கொண்டிருக்கையில், சிரிசா அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை கோரிக்கைகளுக்கு நெருக்கமாக சென்று கொண்டிருக்கின்றனர். ஏப்ரல் 24 அன்று யூரோ குழும கூட்டம் தோல்வியடைந்ததை தொடர்ந்து சிரிசாவின் பேரம்பேசும் குழுவை அவர் மாற்றியமைத்த பின்னர்தான் சிப்ராஸின் நேர்காணல் வந்தது. ஐரோப்பிய ஒன்றிய நிதி மந்திரிகள் கிரேக்க நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸை ஒரு "கத்துக்குட்டியாக", சூதாடியாக" மற்றும் "நேரத்தை வீணடிப்பவராக" சாடியதாக செய்திகள் குறிப்பிட்டன.

முக்கூட்டுடன் இதுவரையில் பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை கொடுத்து வந்த வாரௌஃபாகிஸ் இற்கு பதிலாக துணை வெளியுறவுத்துறை மந்திரி ஏக்குளிட்ஸ் சக்காலோட்டோஸ் (Euclid Tsakalotos) கொண்டு வரப்பட்டார். நிச்சயமாக வாரௌஃபாகிஸ் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்தவர் அல்லர். ஆனால் அவர் பிரதியீடு செய்யப்பட்டமை முக்கூட்டுடன் ஒருங்கிணைப்பை அதிகரிப்பதற்கான தயாரிப்பாகும் என்று கார்டியன் கட்டுரையாளர் பால் மேசனின் Channel 4 Newsக்கான அறிக்கை ஒன்று உறுதிப்படுத்துகிறது.

தொடக்கத்திலிருந்தே இதில் ஈடுபட்டுள்ள திரு. சக்காலோட்டோஸ் ஐ கொண்டு பேரம்பேசும் குழுவின் தலைவரைப் பிரதியீடு செய்ததன் மூலமாக, கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் சாத்தியமானளவிற்கு பலமான ஒரு சமிக்ஞை அனுப்புகிறார், என்னவென்றால் கிரீஸை யூரோவிற்குள் வைத்திருக்க அவர் ஒரு சமரசத்தை விரும்புகிறார், என்று மேசன் எழுதினார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த ஒரு ஸ்ராலினிச பொருளியல்வாதியான சக்காலோட்டோஸ், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முற்றிலும் விசுவாசமான, அதிக நிலையான மற்றும் சார்ந்திருக்கும்தன்மை கொண்ட ஒரு தொழில் உத்தியோகஸ்தராக பார்க்கப்படுகிறார்.

மேசன் எழுதினார்: திரு. சக்காலோட்டோஸ் 1970களில் இருந்து தொடங்கி முதலாளித்துவ எதார்த்தத்துடன் சமரசங்கள் செய்து கொள்ள பயின்றிருந்த, மார்க்சிச பள்ளியிலிருந்து வருகிறார். அவர் மென்மையான பேச்சாளர் மட்டுமல்ல; அவர் யூரோவிற்குள் உயிர்வாழ பொறுப்பேற்ற மற்றும் சீர்திருத்தம் செய்து கொள்ளும் இடது-சமூக அரசாங்கமாக விளங்கும் சிரிசாவின் கருத்துடன் மிகவும் இணைப்பு கொண்டவர். இன்னும் கூடுதலாக என்னவென்றால், அவர் வரைய வேண்டியிருக்கும் சமரசத்தில் கட்சி உறுப்பினர்கள் எதை ஏற்றுக் கொள்வார்கள் என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கும், சிரிசாவின் ஒரு நீண்டகால உறுப்பினராவார்.

அதாவது தொழிலாளர்களுக்கு எதிரான ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகளின் மீது ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்யப்படும் ஒரு பிற்போக்குத்தனமான உடன்பாட்டைச் சுற்றி சிரிசாவிற்கும் பிரச்சினையெழுப்பும் கன்னைகளை ஐக்கியப்படுத்த, வாரௌஃபாகிஸை விட சக்காலோட்டோஸ் சரியான பொருத்தமானவர் என்பதாகும்.