சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :

International Online May Day Rally draws worldwide audience

சர்வதேச மே தின இணையவழி கூட்டம் உலகெங்கிலும் இருந்து பார்வையாளர்களை ஈர்த்தது

By Shannon Jones
4 May 2015

Use this version to printSend feedback

ஞாயிறன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஏற்பாடு செய்திருந்த 2015 சர்வதேச மே தின இணையவழி கூட்டம், தனித்துவமான உலக நிகழ்வாக பெரும் வெற்றி அடைந்தது. அது ஆறு கண்டங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தொழிலாளர்களை மற்றும் இளைஞர்களை ஒன்றிணைத்திருந்தது. அதிகரித்துவரும் உலக போர் அபாயத்திற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட பேச்சாளர்கள் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை எடுத்துரைத்தனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அங்கமாக விளங்கும் இணைய நாளிதழ் உலக சோசலிச வலைத் தளம் வழியாக ஒழுங்கமைக்கப்பட்ட அக்கூட்டம், 2014 இல் நடத்தப்பட்ட மிகப்பெரிய வெற்றிகரமான நிகழ்வைத் தொடர்ந்து, இரண்டாம் ஆண்டாக நடத்தப்பட்ட இணையவழி கூட்டமாகும். இந்த ஆண்டின் கூட்டத்தில் உலகெங்கிலும் இருந்து 1,500க்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்தனர், பல நாடுகளில் கூடுதலாக பலர் நேரடியாக ஒன்றுகூடி செவிமடுத்தனர். அதில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை, பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் போர் உந்துதலுக்கு, உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான விட்டுகொடுப்பற்ற தாக்குதல் மற்றும் சமூக எதிர்புரட்சி ஆகியவற்றுடன் சேர்ந்து, பரந்தளவில் நிலவும் எதிர்ப்பைப் பிரதிபலித்தது.

அந்த பேச்சாளர்களின் பட்டியலில், அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி, இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை சேர்ந்த அனைத்துலகக் குழுவின் தலைவர்கள் இடம் பெற்றிருந்தனர். அந்த உரைகள் ஒரேநேரத்தில் உடனுக்குடன் ஆங்கிலத்திலிருந்து ஜேர்மன், சிங்களம் மற்றும் தமிழில் மொழிபெயர்த்து ஒலிபரப்பப்பட்டன.

அந்த கூட்டத்தின் போது, அதில் பங்கெடுத்தவர்கள் உலகெங்கிலும் இருந்து நூற்றுக் கணக்கான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அமெரிக்கா, கனடா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய-பசிபிக் மற்றும் ஆபிரிக்கா எங்கிலும் இருந்து கூட்டத்திற்கு இணையவழி வாழ்த்துக்கள் அனுப்பப்பட்டன. அதில் துருக்கி, நியூசிலாந்து, இந்தியா, தாய்லாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, கானா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி, நோர்வே மற்றும் வெனிசூலாவின் ஆதரவாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற வாழ்த்துக்களும் உள்ளடங்கும்.

அந்த இணையவழி கூட்டத்திற்கு அமெரிக்க சோசலிச சமத்துவ கட்சியின் தேசிய குழு அங்கத்தவர்கள் ஹெலென் ஹெல்யார்ட் மற்றும் கிறிஸ்டினா பெட்டினிஸ் துணை-தலைவர்களாக பொறுப்பேற்றிருந்தனர்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவ கட்சி தேசிய தலைவருமான டேவிட் நோர்த் முதல் பேச்சாளராக உரையாற்றினார்.

நோர்த் கூறினார், ஏகாதிபத்திய போருக்கு எதிராக சர்தேச தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பிற்கு குரல் கொடுப்பதும், உலகெங்கிலுமான எல்லா முதலாளித்துவ அரசாங்கங்களால் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளால் நடைமுறைப்படுத்தப்படும் இராணுவ கொள்கைகளுக்கு பிரதான காரணங்கள் பற்றிய ஒரு பகுப்பாய்வை வழங்குவது, போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர இயக்கம் அதன் அடித்தளத்தில் அமைத்துள்ள வேலைத்திட்டத்தை வரைந்தளிப்பது ஆகியவையே இக்கூட்டத்தின் நோக்கமாகும்.

இடையறா இராணுவ வன்முறையின் தீவிரப்பாட்டை, கடந்த ஆண்டு கண்டது, அது அமெரிக்கா மற்றும் அதன் பிரதான ஏகாதிபத்திய கூட்டாளிகளால் தூண்டிவிடப்பட்டது, என்பதையும் நோர்த் குறிப்பிட்டார். பிராந்திய தலையீடுகள் "வளர்ச்சி அடைந்து வரும் உலகளாவிய போர் திட்டத்தின் பாகமாகும், அது அணுஆயுதமேந்திய சக்திகளுக்கு இடையிலான ஒரு மோதலைக் கட்டவிழ்த்துவிட அச்சுறுத்துகின்றது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் வெளிநாடுகளில் விரிவுபடுத்தப்பட்டு வரும் இராணுவ வன்முறையை, நோர்த், உள்நாட்டு உள்நெருக்கடியோடு தொடர்புபடுத்தியதுடன், அரசியல் அதிகாரத்தின் மொத்த பிடியையும் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள ஒரு செல்வம் படைத்த நிதியியல் மேற்தட்டால் உள்நாட்டு சமூகம் சூறையாடப்படுகிறது என்றார்.

நோர்த் கூறினார், பெருந்திரளான மக்கள், அவர்களை ஒடுக்கியவர்களால் திணிக்கப்பட்ட தடைகளை உடைத்து அவர்களை முன்னோக்கி நகர்த்திய வரலாற்று தருணங்களும் அங்கே உள்ளன. நாம் அதுபோன்றவொரு வரலாற்று தருணத்தை நெருங்கி கொண்டிருக்கிறோம், என்றார்.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தால் மட்டுமே போர் அபாயத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியுமென நோர்த் வலியுறுத்தினார். ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்துடன் வழிநடத்தப்படும் சர்வதேச தொழிலாள வர்க்க சக்தியின் மீது அதன் போராட்டத்தை அமைத்திருப்பது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே ஆகும் என்பதை அவர் உறுதியாக வலியுறுத்தினார்.

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவ கட்சியின் தேசிய குழு அங்கத்தவரும், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினரும் ஆன நிக் பீம்ஸ், உலக பொருளாதாரத்தின் பேரழிவுகரமான நிலையை மீளாய்வு செய்தார். 2008 நிதியியல் நெருக்கடியை அடுத்து ஆளும் மேற்தட்டுக்களால் கொண்டு வரப்பட்ட கொள்கைகள் முன்பினும் பெரிய ஒரு நெருக்கடிக்கு களம் அமைக்கின்றன என்று அவர் எச்சரித்தார். அதேநேரத்தில் உலக நிதியியல் அமைப்புமுறையை உலுக்கிக் கொண்டிருக்கும் பொருளாதார முரண்பாடுகள் ஏகாதிபத்தியத்தை ஒரு புதிய உலக போரைத் தொடங்குவதற்கு உந்துகின்றன.

மனித நாகரீகத்தின் அழிவை அச்சுறுத்துகிற வகையில், உலகை பங்கீடு மற்றும் மறுபங்கீடு செய்யும் ஒரு புதிய போர் உருவாக்கப்பட்டு வருகிறது, என்று பீம்ஸ் அறிவித்தார். (பீம்ஸ் மற்றும் ஏனைய பேச்சாளர்களின் உரைகள் வரவிருக்கும் நாட்களில் WSWS இல் பிரசுரிக்கப்படும்)

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் பொது செயலாளர் விஜே டயஸ், சீனாவைச் சுற்றி வளைக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய முனைவின் பாகமாக அது அத்தீவு தேசத்தை அதன் அரசியல் சுற்றுவட்டத்தில் நிறுத்த முயன்று வருவதை விளங்கப்படுத்தினார். அமெரிக்கா விளைவுகளைக் குறித்து கவலைப்படாமல் தெற்காசியா முழுவதையும் நிலைகுலைக்க வேலை செய்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் மைய பிரச்சினை, புரட்சிகர வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்காகும் என்பதை அவர் வலியுறுத்தினார். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு லியோன் ட்ரொட்ஸ்கியால் முன்னெடுக்கப்பட்ட நிரந்தரப் புரட்சி  தத்துவத்தை அடித்தளமாக கொண்டு அதன் போராட்டத்தை அமைத்துள்ளது என்று குறிப்பிட்டார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலாளர் பீட்டர்  சுவார்ட்ஸ் ஜேர்மனியிலும் ஐரோப்பா எங்கிலும் இராணுவவாதம் புதுப்பிக்கப்படுவதை குறித்துப் பேசினார். அக்கண்டத்தை நாசப்படுத்திய முந்தைய இரண்டு உலக போர்களுக்கு இட்டுச் சென்ற எல்லா முரண்பாடுகளும் மீண்டும் எழுந்துள்ளதாக அவர் எச்சரித்தார். ஐரோப்பிய ஒன்றியம், அக்கண்டத்தின் சமாதானம் மற்றும் செல்வசெழிப்புக்கு இட்டு செல்லவில்லை, அது சிக்கன நடவடிக்கைகள் மற்றும் இராணுவவாதத்தின் மூல ஆதாரமாக உள்ளது என்பதை சுவார்ட்ஸ் எடுத்துரைத்தார்.

கிரேக்கத்தில் சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்டதன் அனுபவத்தை சுவார்ட்ஸ் மீளாய்வு செய்தார், போலி-இடது அமைப்புகள் ஏகாதிபத்தியத்திற்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கும் துணைக் கருவிகளாகி இருப்பதை அது தீர்க்கமாக அம்பலப்படுத்தியதை அவர் விவரித்தார்.

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Partei für Soziale Gleichheit) தேசிய செயலாளர் உல்றிச் ரிப்பேர்ட் அடுத்த பேச்சாளராக வந்தார். அவர் ஜேர்மனியின் அபிவிருத்திகளைக் குறித்து அறிவித்தார். அங்கே நாஜி குற்றங்களைக் குறைத்துக்காட்டுவது மற்றும் அவற்றை பூசிமொழுகுவதுடன், ஒரு பாரிய இராணுவ கட்டமைப்பும் வரலாற்று மறுதிருத்தி எழுதலுடன் இணைந்துள்ளது.

மில்லியன் கணக்கானவர்கள் இராணுவவாதத்தின் புதுப்பிப்பை அதிர்ச்சியோடும் ஆத்திரத்தோடும் பார்த்து வருகின்றனர் என்றார். வரலாற்று உண்மை பலம்வாய்ந்த சக்தியாகும் என்று வலியுறுத்திய ரிப்பேர்ட், தன்னைத்தானே வரலாற்று படிப்பினைகளின் மீது நிலைநிறுத்திக் கொண்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒரு நனவுபூர்வமான திட்டத்துடன் இராணுவவாதத்திற்கான எதிர்ப்பை ஆயுதபாணியாக்க முனைந்து வருகிறது என்று அறிவித்தார்.

பிரிட்டன் சோசலிச சமத்துவ கட்சி தேசிய செயலாளர் கிறிஸ் மார்ஸ்டன் அந்நாட்டின் பாரிய சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பைச் சுட்டிக்காட்டினார். மிகப்பெரிய 117 பணக்காரர்கள் இப்போது அந்நாட்டு மக்கள்தொகையில் அடியிலுள்ள 40 சதவீதத்தினரை விட அதிக செல்வவளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதை அவர் குறிப்பிட்டு காட்டினார். உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் எந்தவொரு பிரச்சினைகளும் சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்துகின்ற நிதியியல் பிரபுத்துவத்தின் பிடியை உடைக்காமல் தீர்க்க முடியாது என்பதை மார்ஸ்டன் வலியுறுத்தினார்.

அமெரிக்க சோசலிச சமத்துவ கட்சி தேசிய குழு அங்கத்தவரும் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியக் குழு உறுப்பினருமான பில் வான் ஓக்கென் இலத்தீன் அமெரிக்க நிலைமைகள் குறித்து பேசினார். புலம்பெயர்வோருக்கு எதிராக ஒபாமா நிர்வாகம் நடத்தும் வேட்டையைக் குறிப்பிட்டு காட்டிய அவர், தொழிலாளர்கள் அவர்கள் விரும்பும் நாட்டில் வாழும் உரிமையை சோசலிச சமத்துவக் கட்சி உறுதியாக ஆதரிப்பதை எடுத்துரைத்தார்.

கியூபாவின் காஸ்ட்ரோயிச ஆட்சிக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சமீபத்திய சமரசம், இலத்தீன் அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு நம்பகமான முன்னோக்கை காஸ்ட்ரோயிசம் வழங்கியது என்று வாதிட்ட போலி-இடது சக்திகளின் முன்னோக்கு திவாலாகிப் போனதை மேற்கொண்டு உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

நியூசிலாந்தின் சமூக சமத்துவ குழுவின் ஒரு முன்னணி அங்கத்தவரான ரொம் பீட்டர்ஸ், அமெரிக்காவில் ஒபாமா நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகின்ற "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" குறித்து உரையாற்றினார். அது அப்பிராந்தியத்தை "பதட்டங்கள் மற்றும் எதிர்விரோதங்களின் ஒரு எரிகொப்பரையாக" மாற்றியுள்ளதென தெரிவித்தார். அப்பிராந்தியம் முழுவதும் இராணுவவாதத்தின் வளர்ச்சி குறித்தும், குறிப்பாக ஜப்பானின் மீள்ஆயுதமேந்தும் நகர்வு மற்றும் முதலாம் உலக போரின் கொலைக் களங்களை பெருமைப்படுத்த ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை அவர் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவ கட்சி தேசிய செயலாளர் ஜேம்ஸ் கோஹன், ஆசிய பசிபிக் அபிவிருத்திகள் குறித்து பேசினார். குறிப்பாக, சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் திட்டங்கள் குறித்து குறிப்பிட்ட அவர், அது ஓர் அணுஆயுத பேரழிவிற்கான சாத்தியக்கூறை முன்னிறுத்துவதாக எச்சரித்தார். சீன தொழிலாள வர்க்கம் அதன் விதியை சீன ஸ்ராலினிச ஆட்சியின் கரங்களில் ஒப்படைக்க முடியாது என்றார். சீன தொழிலாளர்கள் ஆசியாவில் மற்றும் சர்வதேச முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்துடன் ஒரு கூட்டணி ஏற்படுத்தி,  சீன முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் அவற்றின் அரசியல் சுதந்திரத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்றார்.

ஜேர்மன் சோசலிச சமத்துவ கட்சியின் தேசிய குழு அங்கத்தவர் ஜொஹானெஸ் ஸ்ரேர்ன் மத்திய கிழக்கில் நிலவும் சூழலை விவரித்தார். அப்பிராந்தியம் மேலும் மேலும் முதலாம் உலக போருக்கு முந்தைய பால்கன்களைப் போல வெடிமருந்து உலைக்கு ஒப்பாக உள்ளது என்று ஸ்ரேர்ன் குறிப்பிட்டார். ஒட்டுமொத்த நாடுகளும் சிதைந்து போயுள்ளன, மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது அகதிகளாக மாற்றப்பட்டார்கள், என்றார்.

அவர் கூறுகையில், ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தும் இயற்கை ஆதாரவளங்கள் நிரம்பிய அப்பிராந்தியத்தைச் சூறையாடும் அல்லது மேலாதிக்கம் செலுத்தும் சண்டையில் ஈடுபட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். குறிப்பாக போலி-இடது குழுக்கள் ஏகாதிபத்திய இராணுவ போர்வெறியை மனித உரிமைகளுக்கான ஒரு போராட்டமாக சித்தரித்து, ஒரு இழிவார்ந்த பாத்திரம் வகித்திருந்ததை அவர் குறிப்பிட்டார். எகிப்தின் துயரகரமான அபிவிருத்திகள் பாரிய பெருந்திரளான மக்கள் போராட்டங்களை வழிநடத்துவதற்கு புரட்சிகர தலைமை குறித்த முக்கிய கேள்வியை எழுப்பியதென அவர் தெரிவித்தார்.

பிரிட்டன் சோசலிச சமத்துவ கட்சியின் இணை தேசிய செயலாளர் ஜூலி ஹைலண்ட், ஐரோப்பாவில் புலம்பெயர்ந்தோர் முகங்கொடுத்து வரும் கடுமையான நிலைமைகளை விவரித்தார். மத்திய தரைக்கடலில் ஆயிரக் கணக்கான புலம்பெயர்வோரின் மரணங்களுக்கு ஐரோப்பிய சக்திகளே நேரடி பொறுப்பாகின்றன, அவை "அவர்கள் மூழ்கி செத்தால் சாகட்டும்" எனும் கொள்கையை ஏற்றுள்ளன என்பதை அவர் விளங்கப்படுத்தினார்.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய திட்டங்களும் இணையமும் உள்ள இன்றைய காலகட்டத்தில், ஒரு விசையில் உலகில் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை பரிமாறக்கூடிய இன்றைய காலக்கட்டத்தில், முதலாளித்துவமானது தான் உருவாக்கியிருக்கும் சமூக பயங்கரத்தில் பலியாகிறவர்களை தனது துவாரங்களில் இருந்து வெளியே கசக்கித்தள்ள மறுபடியும் முனைந்து கொண்டிருக்கிறது, என்று ஹைலண்ட் தெரிவித்தார்.

அமெரிக்க சோசலிச சமத்துவ கட்சியின் தேசிய செயலாளரான இறுதி பேச்சாளர் ஜோசப் கிஷோர், உலக போர் ஆபத்தைக் குறை மதிப்பீடு செய்துவிடக்கூடாது என்றார். அமெரிக்கா உலகை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அதன் குண்டுகள் மற்றும் டிரோன்களைக் கொண்டு, அது தீண்டும் ஒவ்வொரு நாடும், குழப்பங்களுக்குள் வீழ்கிறது, என்றார்.

கிஷோர் தொடர்ந்து குறிப்பிட்டார், ஆனால், ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டை அது பாழாக்கி கொண்டிருக்கின்ற நிலையில், அந்த ஆளும் வர்க்கம் அதன் சொந்த எல்லைகளுக்குள்ளேயே மிகவும் ஆற்றல்மிக்க மற்றும் பலமான அதன் எதிரியை, அதாவது அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்கிறது. சமீபத்திய பால்டிமோர் அபிவிருத்திகள் எடுத்துக்காட்டுவதைப் போல, வர்க்க பதட்டங்கள் ஒரு சமூக வெடிப்பைக் கொண்டு வர மிக குறைந்த நேரமே எடுக்கும் என்றளவிற்கு அது மிகவும் அதிகரித்துள்ளது என்பதை கிஷோர் எடுத்துரைத்தார்.

போருக்கு எதிரான போராட்டம் ஒரு நனவுபூர்வமான சர்வதேச இயக்கத்தை கட்டியெழுப்புவதைக் கோருகிறது என்பதை கிஷோர் வலியுறுத்தினார். இந்த பணியை முடிப்பதற்கு இக்கூட்டம் ஒரு பலம்வாய்ந்த சக்தியை பிரதிநிதித்துவம் செய்கிறது... ஒரு பொதுவான அரசியல் வேலைத்திட்டம், அதாவது புரட்சிகர சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இதுவே ஒரேயொரு உலகந்தழுவிய இயக்கமாகும்.

இறுதியாக, அவர் சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்குமாறும், சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைதிட்டத்தை ஆய்வு செய்யுமாறும், சோசலிச புரட்சிக்கான உலக கட்சியைக் கட்டமைப்பதில் இணைய முடிவெடுக்குமாறும் கூட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கு அவர் அழைப்புவிடுத்தார்.