சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German foreign intelligence service aided NSA spying in Europe

ஜேர்மன் வெளிநாட்டு உளவுத்துறை, ஐரோப்பாவில் NSA இன் உளவுவேலைகளுக்கு உதவியது

By Sven Heymanns
5 May 2015

Use this version to printSend feedback

வெளிநாடுகள் மீதான ஜேர்மனியின் உளவுத்துறை அமைப்பு (BND) பல ஆண்டுகளாக அமெரிக்க தேசிய கண்காணிப்பு அமைப்புக்காக (NSA) ஐரோப்பிய இலக்குகள் மீது உளவுபார்த்தது என்பது கடந்த வாரங்களில் அம்பலமாகி உள்ளன. முன்னணி பிரெஞ்சு அரசியல்வாதிகள் உட்பட இலக்கில் வைக்கப்பட்டவர்களில், ஐரோப்பிய கமிஷனும் மற்றும் பல உயர்மட்ட ஐரோப்பிய நிறுவனங்களும் உள்ளடங்கும்.

Süddeutsche Zeitung நாளிதழ் மற்றும் பிராந்திய ஒளிபரப்பு நிறுவனங்களான NDR மற்றும் WDR வழங்கிய செய்திகளின்படி, 2002 இல் இருந்து தொடங்கி தொலைபேசி அழைப்புகளைக் கண்காணித்து வந்த BND, பின்னர் NSA ஆல் வழங்கப்பட்ட குறிப்பிட்ட முக்கிய வார்த்தைகளை இணைய இணைப்புகளில் கண்காணித்தது, அந்த தகவல்கள் பின்னர் NSAக்கு அனுப்பி வைக்கப்பட்டன. குறிப்பிட்ட முக்கிய வார்த்தைகள் NSA சர்வர்களிலிருந்து தினசரி பலமுறை BND சர்வரால் தானியங்கிமுறையில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்டவை (selectors) என்றழைக்கப்படும் அந்த குறிப்பிட்ட வார்த்தைகளில், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், IP முகவரிகள் மற்றும் தேடல் வார்த்தைகளும் உள்ளடங்கும். 2002 மற்றும் 2013க்கு இடையே, சுமார் 690,000 தொலைபேசி எண்களும் 7.8 மில்லியன் IP தேடல் சொற்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக Süddeutsche Zeitung குறிப்பிடுகிறது.

“Eikonal” திட்டம் குறித்த விபரங்கள் முதன்முதலில் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியாயின. அதன்படி, பிராங்க்பேர்ட் மையத்திலிருந்து நேரடியாக பவாரியாவின் புலாஹ்ஹில் உள்ள BNDக்கு தகவல்களைக் கொண்டு செல்ல ஜேர்மன் தொலைதொடர்பு நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்யப்பட்டு, அங்கிருந்து அமைக்கப்பட்ட ஒரு கம்பி மூலமாக BND தகவல்களைப் பெற்றது. அங்கே இருந்து, அத்தகவல்கள் Bad-Aibling முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டன, அங்கே NSA உடன் BND ஒரு கூட்டு உளவு பிரிவை நிறுவியது. அங்கே பெறப்பட்ட தகவல்கள் பின்னர் NSAக்கு வழங்கப்பட்டன.

எவ்வாறிருந்த போதினும், அந்நடவடிக்கையின் அளவு எந்தளவிற்கு இருந்தது என்பது இப்போது மிகவும் தெளிவாகி உள்ளது. ஜேர்மன் நாடாளுமன்றத்தில் NSA குறித்த புலனாய்வு குழுவிற்கு பசுமை கட்சி மற்றும் இடது கட்சி பிரதிநிதிகள் வழங்கிய சாட்சியங்களின்படி, அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்கள் BND ஆல் மீண்டுமொருமுறை மீளாய்வு செய்யப்பட்டிருந்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட 40,000 சொற்கள் ஜேர்மன் அல்லது ஐரோப்பிய நலன்களை மீறி இருந்தன என்பதே அதற்கு பொறுப்பான BND பணிக்குழுவின் விடையிறுப்பாக இருந்தது.

இன்று வரையில், இந்த பட்டியல் சான்சிலர் அலுவலகத்தால் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பட்டியலில் இரண்டு ஆயுத தயாரிப்பு நிறுவனங்களான EADS மற்றும் Eurocopter, பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகம், மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதியின் அத்துடன் ஐரோப்பிய ஒன்றிய கமிஷனின் பதவியிடங்களும் உள்ளடங்குவதாக Süddeutsche Zeitung செய்தி அறிவித்தது.

Spiegel Online செய்திபடி, NSA இன் உளவுவேலை நடவடிக்கைகள் குறித்து எட்வார்ட் ஸ்னோவ்டென் விபரங்களை வெளியிட்டு இரண்டு மாதங்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 2013இல், தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களின் பட்டயலை BND ஏற்கனவே மீளாய்வு செய்திருந்தது. அந்நேரத்தில் BND, தேர்ந்தெடுக்கப்பட்ட 2,000 சொற்கள் ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய நலன்களுக்கு முரண்பட்டு இருப்பதாக முடிவுக்கு வந்தது. ஆனால் அது சான்சிலரின் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்படவில்லை. அதற்கு மாறாக, BNDஇன் துறை தலைவரோ சம்பந்தப்பட்ட அந்த குறிப்பிட்ட சொற்களை அழித்துவிடுமாறு உத்தரவிட்டார்.

Süddeutsche Zeitung தகவல்படி, தானியங்கி முறையில் பதவிறக்கம் செய்யப்பட்ட குறிப்பிட்ட சொற்களில் ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய நலன்களுக்கு கவலையளிக்கும் சில சொற்களும் இருந்தன என்பது BNDக்கு ஏற்கனவே 2005லேயே தெரியும்.

இது குறித்து சான்சிலரின் அலுவலகத்திற்கு 2008 இல் தெரியும். Bild am Sonntag செய்தியின்படி, அமெரிக்காவின் தேசிய கண்காணிப்பு அமைப்பு EADS மற்றும் Eurocopter குறித்து தகவல்களைக் கோரி வருகிறது என்பதை 2008இல் BND சான்சிலர் அலுவலகத்திற்கு தெரிவித்தது. ஆனால் BND தொடர்ச்சியாக எச்சரித்த போதினும், சான்சிலர் அலுவலகம் ஒன்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு மாறாக, அந்நடவடிக்கை மவுனமாக சகித்துக் கொள்ளப்பட்டது.

சான்சிலர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட தலைவராக இருந்தவர் தோமஸ் டு மஸியர் ஆவார், இவர் தான் இன்று ஜேர்மனியின் உள்துறை மந்திரி. 2010 இல் டு மஸியரை அடுத்து வந்த Ronald Pofalla, அந்த அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து அவருக்கு தெரியுமென்று 2010 அமெரிக்க பிரதிநிதிகளுக்கு கூறியதாக கருதப்படுகிறது என்று தொலைக்காட்சி நிறுவனம் N24 அறிவித்தது.

டு மஸியர் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார். ஏப்ரல் 14இல், நாடாளுமன்றத்தில் இடது கட்சியின் ஒரு கேள்விக்கு விடையிறுக்கையில், அமெரிக்க தேசிய கண்காணிப்பு அமைப்பால் அல்லது ஏனைய அமெரிக்க உளவுநிறுவனங்களால் பொருளாதார உளவுவேலை நடத்தப்பட்டதற்கான எந்த தகவலும் இல்லை என்று கூறி பதிலளித்தார்.

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பலர், BND தலைவர் ஹெகார்ட் ஷ்ன்ட்லர் இராஜினாமா செய்ய வேண்டுமென கோரியுள்ளனர். ஜேர்மன் அரசாங்கம் மிக தெளிவாக BND மீது கட்டுப்பாட்டை இழந்துவிட்டது என்று பசுமை கட்சியின் நாடாளுமன்ற பிரிவு தலைவர் Anton Hofreiter தெரிவித்தார். BND அமெரிக்க தேசிய கண்காணிப்பு அமைப்பின் ஒரு தொங்குதசையாக மாறியுள்ளது. NSA குறித்த புலனாய்வு குழுவில் இடம்பெற்றுள்ள இடது கட்சியின் பிரதிநிதி மார்டினா ரென்னரும், ஷ்ன்ட்லரை பதவி விலகுமாறு அழைப்புவிடுத்தார்.

சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் நெருங்கிய கூட்டாளியும் சான்சிலர் அலுவலகத்தின் தற்போதைய தலைவருமான பீட்டர் அல்ட்மையரும் விமர்சிக்கப்படுகிறார். உளவுத்துறை அமைப்புகளை மேற்பார்வை செய்வதில் அவருக்கும் பொறுப்புண்டு. கடந்த வியாழனன்று இந்த மோசடி வெளியாவதற்கு முந்தைய நாள் தான் அல்ட்மையர் நாடாளுமன்ற கட்டுப்பாட்டு கமிஷனுக்கு (parliamentary control commission – PKGR) மட்டும் ஆலோசனை வழங்கி இருந்தார். NSA குறித்த புலனாய்வு குழுவிடமிருந்தே கூட மறைக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசு வழக்கறிஞர் ஹரால்ட் ராங்க, இவரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார். பல்வேறு அரசு கண்காணிப்பு குற்றங்கள் மீது புலனாய்வு செய்வதற்கு பொறுப்பான அவரது அலுவலகம், ஒரு குற்ற நடவடிக்கை நடந்துள்ளது குறித்து சந்தேகிக்க அங்கே ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பதைப் பரிசீலித்து வருகிறது.

விமான சேவை மற்றும் விண்வெளித்துறை நிறுவனம் ஏர்பஸ், அது உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், குற்ற வழக்குகள் தொடுக்க திட்டமிட்டு வருகிறது.

இந்த மோசடியில் இன்னும் யார்யார் உடந்தையாய் இருக்கிறார்கள், அரசியல் தலைவர்கள் இதில் வருகிறார்களா என்பது தெளிவில்லாமல் உள்ளது. ஆனால் உள்நாட்டு உளவுபார்ப்பு அமைப்பு மற்றும் ஏனைய உளவுபார்ப்பு அமைப்புகளைப் போலவே BNDயும் எவ்வித கட்டுப்பாடுமின்றி அதன் செயல்பாட்டை நடத்திக் கொண்டிருக்கையில், முன்னணி அரசியல்வாதிகளோ இதை மூடிமறைத்திருக்கிறார்கள் என்பது ஏற்கனவே தெளிவாகிவிட்டது.

எட்வார்ட் ஸ்னோவ்டென் ஜேர்மனியில் இருந்து சாட்சியம் வழங்குவதையோ அல்லது தஞ்சம் பெறுவதையோ ஜேர்மனி அரசாங்கம் ஏன் விரும்பவில்லை என்பதும் பெரிதும் தெளிவாகி வருகிறது. ஸ்னோவ்டென் அம்பலப்படுத்திய உளவுவேலை நடைமுறைகளில் BND ஆழமாக உடந்தையாய் இருந்துள்ளது. இந்த நடவடிக்கைகள், நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரசு பிரதிநிதிகளுக்கு எதிராக மட்டுமல்ல, மாறாக மில்லியன் கணக்கான அப்பாவி மக்களுக்கு எதிராகவும் திருப்பி விடப்பட்டுள்ளன.

அவற்றின் ஆய்வுகளை இரகசியமாக வைத்திருக்க பொறுப்பேற்றுள்ள நாடாளுமன்ற குழுக்களுக்கும் அப்பால், ஒரு அரசியல்வாதி கூட, அவர் அரசாங்கத்தில் இருப்பவராக இருந்தாலும் சரி அல்லது எதிர்கட்சி பதவிகளில் இருந்தாலும் சரி, எல்லா ஜனநாயக கட்டுப்பாட்டையும் மீறுகின்ற BND கலைக்குமாறு கூட அழைப்புவிடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த விடயத்தில் மிகவும் இழிவார்ந்த பாத்திரம் இடது கட்சி வகிக்கிறது. இடது கட்சி கன்னை தலைவர் கிரிகோர் கீசி ஜேர்மனியின் தேசிய நலன்களுக்கேற்ற விதத்தில் BND மறுசீரமைப்பு செய்ய அழைப்புவிடுத்தார். Deutschlandfunkக்கு கருத்துரைக்கையில், அவர் அந்த உளவுத்துறை அமைப்பின் மீது "தேச துரோக" குற்றச்சாட்டை வீசினார். “இது ஜேர்மன் நலன்கள், ஜேர்மன் நிறுவனங்களுக்கு எதிராக, குறைந்தபட்சம் ஜேர்மனியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு எதிராக, கூட்டு சேர்ந்துள்ள அரசியல்வாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட உளவுத்துறை அமைப்பின் நடவடிக்கையாகும்,” என்றார்.

ஜேர்மன் அரசாங்கம் "அமெரிக்க நிர்வாகத்தை நோக்கி கோழைத்தனமாக" இருப்பதாகவும், “பல தசாப்தங்களாக, அவர்கள் ஒரு சம பங்காளியாக இவர்களைக் கையாளவில்லை,” என்றும் குற்றஞ்சாட்டினார்.

இடது கட்சியிடமிருந்து இந்தளவில் தேசபற்று வருகின்ற நிலையில், ஆளும் மேற்தட்டுக்கு மேலதிகமாக எந்தவொரு குறிப்பிட்ட வலதுசாரி கட்சியின் அவசியமும் தேவையில்லை என்பதாக உள்ளது.