சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

US-Jordan war games prepare wider Mideast conflict

அமெரிக்கா-ஜோர்டான் போர் பயிற்சிகள் பரந்த மத்தியகிழக்கு மோதலுக்கு தயாரிப்பு செய்கின்றன

By Patrick Martin
6 May 2015

Use this version to printSend feedback

பெண்டகன் தலைமையிலான ஐந்தாம் ஆண்டு "Eager Lion” போர் சாகசங்களில், சுமார் பத்தாயிரக் கணக்கான துருப்புகள், செவ்வாயன்று இராணுவ பயிற்சிகளை ஜோர்டானில் தொடங்கின. அந்த பயிற்சிகள் சிரியா, ஈராக் மற்றும் மத்திய கிழக்கின் ஏனைய இடங்களில் இராணுவ மோதல்களைப் பரந்தளவில் விரிவாக்குவதற்கான தயாரிப்பாக உள்ளன.

ஜோர்டான், குவைத், பஹ்ரைன், கடார், சவூதி அரேபியா, எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லெபனான் மற்றும் ஈராக் ஆகிய மொத்தம் ஒன்பது அரபு நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, கனடா, பெல்ஜியம், போலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றுடன் பயிற்சிகளுக்காக ஒன்று சேர்கின்றன.

ஆனால், தலைமையகங்கள், வான்வழி, தரைவழி, கடல்வழி மற்றும் சிறப்பு நடவடிக்கை படைகள் உள்ளடங்கலாக 5,000 முதல் 10,000 வரையிலான துருப்புகளையும் அனுப்பி, அமெரிக்க இராணுவமே Eager Lion நடவடிக்கையில் செல்வாக்கு கொண்டிருக்கும். இரண்டு வாரகாலம், அதாவது மே 5 இல் இருந்து மே 19 வரையில், நீடிக்கும் இந்த பயிற்சிகளின் போது, அங்கே ஜோர்டானில் அதன் அண்டைநாடான ஈராக்கை விடவும் அதிக அமெரிக்க துருப்புகள் இடம் பெற்றிருக்கும். ஈராக்கிற்கு ஜனாதிபதி ஒபாமா சுமார் 3,000 துருப்புகளை அனுப்பி இருந்தார், ஈராக்கிய படைகளுக்கு பயிற்சியளிக்கவும், ISISக்கு (ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிக் அரசு) எதிராக வான்வழி தாக்குதல்கள் மற்றும் சிறப்பு நடவடிக்கை போர்முறைகளை நடத்துவதற்காகவும் அவர்கள் அனுப்பப்பட்டிருந்தார்கள்.

அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் ஒத்திகைகள் மற்றும் பயிற்சிக்கான இயக்குனர் மேஜர் ஜெனரல் ரிக் மாட்சன் தெரிவிக்கையில், 2011இல் தொடர்ச்சியான போர் ஒத்திகைகள் தொடங்கியதில் இருந்து இந்த 2015 Eager Lion ஒத்திகை தான் அமெரிக்கா ஜோர்டான் சம்பந்தப்படும் மிகப்பெரிய இராணுவ பயிற்சியாகும் என்றார்.

இந்த இராணுவப் பயிற்சி பயங்கரவாத-எதிர்ப்பு நடவடிக்கையாக கூறப்படுகிறது. ஆனால் இராணுவ நடவடிக்கைகளின் ஏறத்தாழ ஒவ்வொரு அம்சத்திலும் அணுஆயுதங்கள் பயன்படுத்துவதை உள்ளடக்குவதற்கும் கூட அந்த சொல் பயன்படுகிறது. மாட்சன் தெரிவித்தார், முதல்முறையாக இதில் பங்கெடுக்கும் B-52 மூலோபாய குண்டுவீசிகள் உட்படநடப்பிலிருக்கும் ஒவ்வொன்றும் அந்த ஒத்திகை வெற்றி பெறுவதற்காக அர்பணிக்கப்பட்டுள்ளன.”

இந்த ஒத்திகையின் ஒரு அம்சம் என்னவென்றால் அமெரிக்காவிலிருந்து கிளம்பும் ஒரு புதிய அமெரிக்க விமானத்திலிருந்து குண்டுகள் வீசுவதைப் போலவும், அது நேரடியாக ஜோர்டானுக்கு பறந்து சென்று அங்கே பாலைவன இலக்குகளின் மீது குண்டுகளை வீசுவது போலவும் ஒத்திகை பார்க்கப்படும்.

சிரியா மற்றும் ஈராக் இரண்டுடனும் எல்லைகளைக் கொண்ட ஜோர்டானிய எல்லைகளுக்கு அருகில் படைகளைக் கொண்டுள்ள அடிப்படைவாத இஸ்லாமிஸ்ட் குழுவான ISIS உடன் நடந்துவரும் மோதலுடன் தெளிவாக போர் ஒத்திகைகளைத் தொடர்புபடுத்தி, ஜோர்டானிய தளபதி ஜெனரல் பதாஹ் அல்-தாமின் செய்தியாளர்களுக்குக் கூறுகையில், அந்த பயிற்சிகள் எல்லை கண்காணிப்பு மற்றும் "பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதன்" மீது குவிந்திருக்குமென தெரிவித்தார்.

Christian Science Monitor இன் திங்கட்கிழமை செய்தியின்படி, சிரியாவில் அல் கொய்தாவுடன் இணைந்த அமைப்பான அல் நுஸ்ரா முன்னணி மற்றும் ISISக்கு எதிரான அதன் தலையீட்டை ஜோர்டான் அதிகரித்துள்ளது. அவை, பரந்தளவில் இதுவரையில் புழக்கத்தில் இருந்துவரும் கடைசி எல்லைகடக்கும் பகுதியான, ஜோர்டான் மற்றும் சிரியாவிற்கு இடையிலான எல்லையில் அமைந்துள்ள நசீப் நகரைச் சமீபத்தில் கட்டுப்பாட்டில் எடுத்தன.

ஜோர்டான் எல்லைகளை ஒட்டி ISIS மற்றும் அல்-நுஸ்ராவின் பிரசன்னத்தை ஜோர்டான் முடியாட்சி அதன் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான ஆட்சிக்கு பிரதான அச்சுறுத்தலாக பார்க்கிறது, மேலும் அது பழங்குடியின ஷேக்குகளுடன் கூட்டணிகளுக்கும் முனைந்து வருகிறது, அவர்களின் குடும்பங்கள் ஒரு பரந்த மற்றும் பெரிதும் பாலைவன பிராந்தியமான சிரிய-ஜோர்டான் எல்லையின் இருதரப்பிலும் பரவலாக வாழ்கின்றன.

Monitor செய்திப்படி, “ஜோர்டான் சிரிய பழங்குடியினர்கள் மற்றும் குடிமக்களை நெருக்கி சென்று கொண்டிருக்கிறது. IS மேலாதிக்கம் கொண்ட நகரங்கள் மற்றும் கிராமங்களை மீண்டும் பெறுவதற்கான அவர்களது சண்டைக்கு அது அதன் ஆதரவை வழங்கி வருகிறதுஇது ஜிஹாதிஸ்டுகள் ஜோர்டானின் எல்லையோர பகுதிகளை அச்சுறுத்தாமல் தடுக்க ஒரு முன்யோசனையான நடவடிக்கையாகும்.” சிரியா மற்றும் ஈராக் இரண்டு இடங்களிலும் உள்ள ISIS இலக்குகள் மீது குண்டுவீசி வரும் அமெரிக்க-தலைமையிலான கூட்டணி ஜோர்டானுக்கு வான்வழி ஆதரவு வழங்கி உள்ளது.

முகத்துக்கு நேராக அப்பட்டமாக இதழாளர்களுக்கு பொய்களைக் கூறும் அவரது உத்தியை இன்னும் செம்மைப்படுத்தி ஜெனரல் மாட்சன், (அவர் பொய் கூறுகிறார் என்பது இதழாளர்களுக்கும் தெரியும், இருந்தும் அவற்றை அவர்கள் குறித்து கொள்ளத்தான் வேண்டும்) அறிவித்தார், “அப்பிராந்தியத்தில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறதோ, அதற்கும் Eager Lion நடவடிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” இது சிரியா, ஈராக், ஏமன், ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் வட ஆபிரிக்கா முழுவதிலும் நடந்துவரும் அமெரிக்க-தலைமையிலான அல்லது அமெரிக்க-ஆதரவிலான இராணுவ நடவடிக்கைகளைக் குறித்த ஒரு குறிப்பாகும்.

அந்த வாதம் எந்தளவிற்கு முற்றிலும் முரணானது என்பதை மேலே உள்ள படம் எடுத்துக்காட்டுகிறது. மத்திய கிழக்கில் அமெரிக்க-தலைமையிலான ஏகாதிபத்திய தலையீட்டிற்கு ஜோர்டான் மத்திய முக்கியத்துவம் மிக்கதாகும். அது தெற்கு சிரியா மற்றும் மேற்கு ஈராக், கிழக்கு இஸ்ரேல் மற்றும் வடக்கு சவூதி அரேபியா ஆகியவற்றை ஒட்டி அமைந்துள்ளது. ஈராக் மற்றும் சிரியா இரண்டு நாடுகளுமே ISISக்கு எதிரான போர்களமாக உள்ளன.

அனைத்திற்கும் மேலாக, அண்மித்தளவில் Eager Lion நடவடிக்கையில் இணைந்துள்ள அனைத்து நாடுகளுமே மத்திய கிழக்கு எங்கிலும் அமெரிக்க-தலைமையிலான மற்றும் அமெரிக்க-ஆதரவிலான ஏதோவொரு இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

பிரிட்டன், பிரான்ஸ், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை ஈராக்கில் ISISக்கு எதிரான வான்வழிதாக்குதல்களிலோ அல்லது ஈராக்கிய போர் படைகளுக்கு பயிற்சி அளிப்பதிலோ அல்லது இரண்டிலேயுமே கூட பங்கெடுத்து வருகின்றன.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரெய்ன், கடார், குவைத் மற்றும் ஜோர்டான் ஆகியவை சிரியாவில் அமெரிக்க-தலைமையிலான வான்வழி தாக்குதல்களில், முக்கியமாக ISIS இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களிலும், ஆனால் சில இடங்களில் அல்-நுஸ்ரா முன்னணிக்கு எதிரான தாக்குதல்களிலும் இணைந்துள்ளன. வெள்ளியன்று, அமெரிக்க வான்வழிதாக்குதல் சிரியாவின் அரேபிய கிராமமான பிர் மஹாலியில் குறைந்தபட்சம் 64 பொதுமக்களைக் கொன்றது.

ஏமனில், சவூதி அரேபியா, வளைகுடா ஷேக் ஆட்சிகள், எகிப்து ஆகிய அனைத்தும் அமெரிக்கா-நியமித்த ஜனாதிபதி அப்த் ரப்பாஹ் மன்சூர் ஹாதியை வெளியேற்றிய ஹோதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான வான்வழிதாக்குதலில் ஈடுப்பட்டுள்ளன. சவூதி மற்றும் ஏனைய சிறப்பு படை துருப்புகள் அனேகமாக ஏமனுக்குள் செயல்பட்டு வரக்கூடும் என்றும், அத்துடன் சவூதி போர்விமானங்கள் அமெரிக்கா-வினியோகித்த கிளஸ்டர் குண்டுகளை ஏமனிய நகரங்களுக்கு எதிராக பயன்படுத்தியதாகவும் அங்கே செய்திகள் உள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கடார் மற்றும் எகிப்திய போர்விமானங்கள் லிபியாவில் இஸ்லாமிக் அடிப்படைவாத போராளிகள் குழுக்களின் இலக்குகளைத் தாக்கியுள்ளன, அத்துடன் எகிப்திய இராணுவம் இஸ்ரேல்-எகிப்திய எல்லைக்கு அருகில் சினாய் தீபகற்பத்தில் வாழும் பெதோயுன் பழங்குடியினரிடையே உள்ள இஸ்லாமிஸ்ட் கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வருகிறது.

குவைத்தில் (தரைப்படைக்கு), கடாரில் (விமானப்படைக்கு) மற்றும் பஹ்ரெயினில் (கடற்படைக்கு) என மிகப்பெரிய இராணுவ தளங்கள், அத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு பிரெஞ்சு இராணுவ தளம், ஓமனில் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷின் இராணுவ தளங்கள் உட்பட, அதனோடு சேர்ந்து ஈரான் மற்றும் ஓமனைப் பிரிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியில் வழமையான அமெரிக்க கடற்படை ரோந்துகள் ஆகியவற்றுடன் பாரசீக வளைகுடாவில் உள்ள அமெரிக்க இராணுவ பிரசன்னத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மத்திய கிழக்கே ஒரு வெடி உலையாக உள்ளது, அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் சொந்த இராணுவ படைகளை நிலைநிறுத்துவது மற்றும் அப்பிராந்தியம் முழுவதிலும் அதன் வாடிக்கை அரசுகளுக்கு ஆயுதங்களின் பரந்த (மற்றும் பெரும் இலாபகரமாக) கையிருப்புகளை விற்பது ஆகியவற்றுடன் சேர்ந்து முன்னணி தீமூட்டியாக உள்ளது. அந்த பட்டியலில், நிச்சயமாக, அப்பிராந்தியத்திலேயே மிகவும் பலமாக ஆயுதமேந்திய இஸ்ரேலும் உண்டு. அது அந்நாடுகளுக்கு ஏவுகணைகள், போர்விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் வழங்கும் தகைமையோடு, குறைந்தபட்சம் 250 அணுஆயுத குண்டுகளின் சேமிப்புகிடங்குகளைக் கொண்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

New York Times மற்றும் Washington Post இல் வெளியான செய்திகளை ஜோர்டானில் போர் சாகசங்கள் பின்தொடர்ந்து வந்தன. ISISக்கு எதிரான அமெரிக்க-தலைமையிலான "கூட்டணியின்" உறுப்பினர்கள் லிபியா, எகிப்தின் சினாய் பிராந்தியம் உட்பட ஏனைய நாடுகளுக்குள்ளும் இஸ்லாமிஸ்டுகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளையும், அத்துடன் ஜோர்டான், லெபனான், சவூதி அரேபியா, துனிசியா மற்றும் ஏமனில் குறிப்பிடப்படாத ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் விரிவுபடுத்த அழுத்தம் அளித்து வருவதாக அவை செய்தி வெளியிட்டன.

இதற்கிடையே செங்கடலை ஒட்டியுள்ள Djibouti அமெரிக்க இராணுவ தளத்திலிருந்து ஏவப்படும் டிரோன் ஏவுகணைகளைக் கொண்டு ஏமனில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்கள் நடத்துகிறது. ஏமனில் அமெரிக்க-ஆதரவு படைகளின் சீரழிந்துவரும் நிலைமையைக் குறித்த ஒபாமா நிர்வாகத்தின் அதிகரித்த கவலைக்கு ஓர் அறிகுறியாக, வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி இந்த வாரம் அந்த இராணுவத்தைப் பார்வையிட உள்ளார்.

மேலும், எகிப்திய இராணுவ ஆட்சிக்குழு ஞாயிறன்று அறிவிக்கையில், அது "ஆயுத படைகளின் சில அம்சங்களை" வெளிநாடுகளில் அதாவது ஏமனில் நிலைநிறுத்த கூடுதலாக மூன்று மாதங்களை நீடித்திருப்பதாக அறிவித்தது. இந்த நடவடிக்கை ஜனாதிபதி அப்தெல் பதாஹ் அல்-சிசி சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்த ஒரு நாளுக்குப் பின்னர் வந்தது, அங்கே அவர் எகிப்தில் இரத்தக்கறைபடிந்த இராணுவ சர்வாதிகாரத்திற்கு சவூதியின் நிதிய உதவிகளைக் குறித்தும் மற்றும் ஏமன் போர் குறித்தும் விவாதித்தார்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

US-backed Saudi forces dropped cluster bombs on Yemeni villages

US warplanes kill dozens of civilians in Syria