சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

General election produces political earthquake in Britain

பொதுத்தேர்தல் பிரிட்டனில் அரசியல் பூகம்பத்தை உண்டாக்குகிறது

By Chris Marsden and Julie Hyland
8 May 2015

Use this version to printSend feedback

நேற்றைய பொது தேர்தலுக்குப் பின்னர் பழமைவாத கட்சி ஒரு சிறிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றது. வெஸ்ட்மின்ஸ்டரில் அது உத்தேசமாக மதிப்பிடப்பட்ட 331 ஆசனங்களை பெறுவதனூடாக, அது முன்னர்  அனுமானித்ததைப் போல வடக்கு அயர்லாந்து ஜனநாயக ஒன்றிய கட்சியின் ஆதரவையோ அல்லது தாராளவாத ஜனநாயகவாதிகளின் ஆதரவையோ சார்ந்திருக்க வேண்டியதில்லை.

இந்த முடிவானது பரந்தமக்கள் ஆதரவை கொண்டிருப்பதை அர்த்தப்படுத்தவில்லை. 2010 விட சற்று அதிகமாக, பழமைவாதிகளுக்கு அண்ணளவாக 36 சதவீத வாக்குகள் கிடைத்தது, ஆனால் பிரிட்டன் அரசியலமைப்பு முறையில் உள்ள பெரும்பான்மை தேர்தல் உரிமை (FPTP) முறையின் காரணமாகவே, அதற்கு குறைந்தபட்சம் 22 சதவீத அளவிற்கு இடங்கள் அதிகரித்தன.

இந்த தேர்தல் டோரிகளின் வெற்றி என்பதை விட தொழிற் கட்சியின் தோல்வி என்றாகிறது.

வாக்குகளில் தொழிற் கட்சியின் பங்கு வீழ்ச்சி அடைந்தது, மிக பிரமிக்கத்தக்க அளவில் ஸ்காட்லாந்தில் அது ஸ்காட்லாந்து தேசிய கட்சியால் (SNP) துடைத்தெறியப்பட்டது. அங்கே ஒட்டுமொத்த ஸ்காட்லாந்திலும் இப்போது ஒரேயொரு தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே தனியாக உள்ளார். அத்துடன் ஒரேயொரு பழமைவாத மற்றும் ஒரேயொரு தாராளவாத ஜனநாயக உறுப்பினரே உள்ளனர். ஸ்காட்லாந்து தேசிய கட்சி 2010 இல் பெற்ற ஆறு இடங்களுடன் ஒப்பிடுகையில் இப்போது 56 இடங்களைப் பிடித்து, ஆட்சி அரங்கை கைப்பற்றியுள்ளது.

அந்த இரண்டு கட்சிகளின் நிலைமைக்கு பிரதானமான காரணம், ஸ்காட்லாந்து தேசிய கட்சி சிக்கன-விரோத உணர்வுக்கு  அழைப்புவிட்டதாலாகும்.. இதை தொழிற் கட்சியே கூட செய்யவில்லை, இது தான் அவற்றிற்கிடையிலான வெளிப்படையான வேறுபாடாக இருந்தது.

தொழிற் கட்சி தலைவர் எட் மிலிபாண்ட் அவரது கட்சி சிக்கன நடவடிக்கைக்கு இன்னும் கூடுதலாக "ஓரளவு நியாயமான-உணர்வுப்பூர்வ-" ஆதரவை வழங்கும் என்ற வலியுறுத்தலின் மீது, அவரது தேர்தல் பிரச்சாரத்தை மையப்படுத்தி இருந்தார். இதனால் மட்டுப்படுத்தப்பட்ட சில பகுதிகளில் வளர்ச்சி அதிகரிக்கும் எனக்கூறப்படது. புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவது, ஐரோப்பிய ஒன்றியத்தை பாதுகாப்பது மற்றும் ஒரு முன்னணி இராணுவ சக்தியாக பிரிட்டனின் பாத்திரத்தை பேணுவது ஆகியவற்றிற்கான வாக்குறுதிகளுடன் சேர்த்து, அவர் "வரவு-செலவுத் திட்ட பொறுப்புறுதிக்குள் கட்டுப்பட்டிருக்க" சூளுரைத்திருந்தார்.

இது வெஸ்ட்மின்ஸ்டருக்கு எதிராக, குறிப்பாக தொழிற் கட்சிக்கே எதிராக நிலவிய பரந்த விரோதத்தைச் சுரண்டி கொள்வதற்கும் மற்றும், இந்த உணர்வை அதன் தேசியவாத நிகழ்ச்சிநிரலுக்குப் பின்னால் திசைதிருப்பிவிடவும் ஸ்காட்லாந்து தேசிய கட்சிக்கு உதவியது. இதில் SNPக்கு வாக்களிப்பதை ஆமோதித்திருந்த ஸ்காட்லாந்து சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஐக்கிய ஸ்காட்லாந்து (Solidarity Scotland) போன்ற போலி-இடது குழுக்களும் அதற்கு உதவிகரமாக துணை நின்றன.

ஐக்கிய பேரரசு ஓர் ஒன்றுபட்ட அரசாக எதிர்காலத்தில் பிழைத்திருப்பதற்கு இது பாரிய பின்விளைவுகளை கொண்டிருக்கும். ஸ்காட்லாந்து தேசிய கட்சி (SNP) இப்போது வெஸ்ட்மின்ஸ்டரில் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாகும். ஸ்காட்லாந்தில் உள்ள பல தொகுதிகளில் அது தொழிற் கட்சிக்கு எதிராக 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருந்தது.

ஸ்காட்லாந்தின் வாக்குப்பதிவு எண்ணிக்கை அதிகரிப்பு தேசியரீதியான எண்ணிக்கையை அதிகரிக்க செய்துவிட்டது. இல்லையென்றால் தேசிய வாக்குப்பதிவு எண்ணிக்கை 2010 இல் இருந்ததை விடவும் குறைவாக தான் இருந்திருக்கும்.

இந்த தேர்தல் மூன்று கட்சி தலைவர்களின் குனிய வைத்துள்ளது.

தொழிற் கட்சி தலைதுண்டிக்கப்பட்டுள்ளது. எதிர்நோக்கப்பட்டவாறு இறுதி-நிமிட கொந்தளிப்பாக, தேர்தல் முடிவு வெளியான சிலமணிநேரத்திற்குள், தொழிற் கட்சி வாக்குகளை ஒன்றுதிரட்ட தவறியதற்காக மிலிபாண்ட் இராஜினாமா செய்தார். அக்கட்சியின் பின்புல சான்சிலர் எட் பால்ஸ், மற்றும் டக்ளஸ் அலெக்சாண்டர், பின்புல வெளியுறவு செயலாளரும் அவர்களது ஆசனங்களை இழந்தனர். தொழிற் கட்சியால் ஸ்காட்லாந்தில் அதன் தோல்வியை டோரிக்களுடன் கடுமையாக போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்று ஈடுகட்ட முடியாது போனது. மேலும் பிரதான நகர்புற பகுதிகளிலேயே கூட அதற்கு கிடைத்த வாக்குகள் குறைவாகவே இருந்தன. 1987க்கு பிந்தைய படுமோசமான முடிவுகளை பெற்று டோரிக்களைவிட ஏறத்தாழ 100 இடங்களில் பின்னடைவில் இருந்தனர்.

ஐக்கிய இராச்சிய சுதந்திர கட்சி (UK Independence Party - UKIP) 13 சதவீதத்துடன் மூன்றாவது மிகப்பெரும் செல்வாக்கு பெற்ற கட்சியாகி உள்ளது, அது பழமைவாதிகள் மற்றும் தொழிற் கட்சி இரண்டிடம் இருந்தும் ஆதரவைப் பெற்றுள்ளது. இருந்தபோதினும், சுமார் நான்கு மில்லியன் வாக்குகளுடன் குறிப்பிடத்தக்க வகையில் இது ஸ்காட்லாந்து தேசிய கட்சியை விடவும் அதிகம் என்றாலும்அது வெஸ்ட்மின்ஸ்டரில் ஒரேயொரு ஆசனத்தையே பெற்றுள்ளது.

UKIP இன் தலைவர் நைஜல் ஃபராஜ் அவரது தானெட் தொகுதியில் தோல்வி அடைந்ததும் அவரது பதவியிலிருந்து இராஜினாமா செய்தார். UKIP இன் முக்கிய நன்கொடையாளர் அரோன் பாங்க்ஸ் டோரிகளுக்கு வாக்களிக்குமாறு அழைப்புவிடுத்திருந்தார். ஏனென்றால் பிரதம மந்திரி டேவிட் கேமரூன், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் அங்கத்துவ நாடாக இருப்பதன் மீது 2017 வாக்கில் வெகுஜன வாக்கெடுப்பு நடத்த உறுதியளித்துள்ளார்.

UKIPக்கு கிடைத்திருக்கும் முடிவுகள், ஸ்காட்லாந்து தேசிய கட்சி பெற்ற வெற்றியை போன்றதே. ஆனால் இரண்டுமே அபாயகரமான தேசிய உணர்வை தூண்டிவிடும் முக்கிய நிலைப்புள்ளியிலிருந்து வருகிறது.

தாராளவாத ஜனநாயக தலைவரும் முன்னாள் துணை பிரதம மந்திரியுமான நிக் க்ளெக், அவரது கட்சி தோல்வியடைந்ததை அடுத்து, இராஜினாமா செய்தார். அவர் அத்தோல்வியை ஒரு "கடுமையான தண்டனை வழங்கிய இரவு" என்று வர்ணித்தார். பழமைவாதிகளுக்கு பெரும்பான்மை வெற்றிகள் முன்னாள் தாராளவாத ஜனநாயக இடங்களிலிருந்து வந்த நிலையில், டோரிக்களின் தந்திரோபாய வாக்குகளின் காரணமாகவே, க்ளெக் அவரது சொந்த இடத்தைச் சிறிய வித்தியாசத்தில் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

பசுமை கட்சி அதன் பெயரளவிற்கான "இடது" வேலைத்திட்டத்தின் காரணமாக வாக்குகளில் அதன் தேசிய பங்கை அதிகரித்திருந்த போதினும், கரோலின் லூகாஸ் மட்டுரே பசுமை கட்சியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினராக தங்கியுள்ளார்.

பிரிட்டனின் ஆளும் மேற்தட்டுக்களுக்கு அவை விரும்பிய முடிவு கிடைத்துவிட்டது. ஒரேயொரு ஆதிக்கம்செலுத்தும் குழுவாக கணிப்பிடப்படும் நிதியியல் சந்தைகளின் "ஸ்திரப்பாட்டிற்கு" டோரி பெரும்பான்மை அவசியமென்பதை நடைமுறையில் அனைத்து ஊடகங்களும் மற்றும் முன்னணி வணிக பிரபலங்களும் வலியுறுத்தினர்.

ஆனால் இது பெரும்விலைகொடுத்து பெற்ற சிறிய வெற்றியாகும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு மட்டுமல்ல, ஐக்கிய பேரரசு உடைவதற்கே இட்டுச்செல்லும் ஓர் அரசாங்கத்திற்கு அது தலைமை கொடுக்கிறது. அனைத்திற்கும் மேலாக, மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வை சீரழிக்கும் கடுமையான மேலதிக வெட்டுக்களுக்கு அது சூளுரைத்துள்ள நிலைமைகளின் கீழ், அது வெறும் 22 சதவீத வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் இருந்து கிடைக்கும் சேதி இது தான், மாற்றத்தை விரும்பிய பாரிய பெரும்பான்மை மக்களுக்கு, அது நாடாளுமன்றத்தின் மூலமாக கிடைக்கப்போவதில்லை, நிச்சயமாக தொழிற் கட்சியிடமிருந்தும் கிடைக்கப்போவதில்லை.

தொழிற் கட்சியானது, தொழிலாள வர்க்கத்தினுள் உண்மையான அடித்தளம் இல்லாத மற்றும் மக்களின் அடிப்படை கவலைகளுக்கு மதிப்பார்ந்த முறையீடு செய்ய முற்றிலும் தகைமையற்ற ஓர் அதிகாரத்துவ அமைப்பாக உள்ளது. அவர்களை ஒரு எதிர்த்தரப்பு போக்காக  விளங்கிக்கொள்ள முடியாது, மாறாக டோரிக்களின் ஒரு அப்பட்டமான நகலாகவே பார்க்கலாம்.

தான் இடதிலிருந்து வெகுதூரம் விலகி சென்றுவிட்டதாக புலம்பல்களோடு அது தனது தோல்விக்கு பிரதிபலிப்பை காட்டியுள்ளது.  அது டோனி பிளேயரின் பெருமைமிகு நாட்களை மீண்டும் பெறுவதற்கு முயல அழைப்புவிடுக்கிறது.

மக்களின் பரந்த பெரும்பான்மையினரின் உணர்வுக்கும் உத்தியோகப்பூர்வ அரசியல் கட்டமைப்பிற்கும் இடையே இந்தளவிற்கு பரந்த இடைவெளி வேறெந்த தருணத்திலும் இருந்ததில்லை. இது அனைத்து பிரதான கட்சிகளின் கொள்கைகளுக்கும் கட்டளையிடும் பெரும் பணக்கார செல்வந்த மேற்தட்டுக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியின் சித்தாந்தரீதியான பிரதிபலிப்பாகும்.

இந்த நிலைமை வெடிப்பார்ந்த அரசியல் விளைவுகளைக் கொண்டிருக்கும்.

பெரிதும் சீரழிந்த ஒரு நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீட்டுயிர்ப்பிக்க முடியாது. வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகள் தொடர்ந்து நாசமாக்கப்பட்டு வருவதையும், அதிகரித்துவரும் இராணுவவாதம் மற்றும் போர் அபாயத்தையும் தொழிலாள வர்க்கம் எதிர்க்க வேண்டுமானால், அது அதன் சொந்த நலன்களுக்காக சுயாதீனமாக தலையீடு செய்ய வேண்டும்.

அது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் மீது மட்டுமே அவ்வாறு செய்ய முடியும்.

சோசலிச சமத்துவ கட்சி இந்த பொது தேர்தலில், கிளாஸ்கோவ் சென்ட்ரலில் கேத் ரோட்ஸ் மற்றும் இலண்டனில் ஹோல்போர்ன் & செயிண்ட் பான்க்ரஸில் டேவிட் 'சுல்லிவன் என இரண்டு வேட்பாளர்களை நிறுத்தியது. ரோட்ஸ் 58 வாக்குகள் பெற்றார், 'சுல்லிவன் 108 வாக்குகள் பெற்றார். ஓர் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் மற்றும் ஓர் உலக சோசலிச கூட்டமைப்பின் கட்டமைப்பிற்குள், பிரிட்டனில் தொழிலாளர்களது அரசாங்கத்திற்காக போராடுவதன் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய சோசலிச இயக்கத்தின் அவசியத்தை மேலெழுப்பி கொண்டு வருவதே சோசலிச சமத்துவ கட்சியின் பிரச்சார நோக்கமாக இருந்தது.

தொழிலாள வர்க்கத்தில், அதுவும் குறிப்பாக இளைஞர்களிடையே உள்ள மிகவும் முன்னேறிய மற்றும் சுய-அர்ப்பணிப்பு கொண்டவர்களுக்கு வரலாற்று மற்றும் அரசியல் கல்வியூட்டுவதே அதுபோன்றவொரு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான முன்நிபந்தனையாகும்.

எமது பிரச்சாரத்தின் போக்கில், சோசலிச சமத்துவ கட்சி ஆயிரக் கணக்கான தேர்தல் அறிக்கைகளை வினியோகித்து, ஆயிரக் கணக்கானவர்களோடு உரையாற்றியது. எமது வேட்பாளர்கள் ஏறத்தாழ டஜன் கணக்கான தேர்தல் மேடைகளில் உரையாற்றியதுடன், வேலைத்திட்டம் குறித்தும் ஏனைய பிரதான கட்சிகளின் வர்க்க குணாம்சம் குறித்தும், அத்துடன் அவர்களைச் சுற்றி ஒட்டிக்கொண்டிருந்த போலி-இடது குழுக்களைக் குறித்தும் விரிவான ஆய்வறிக்கைகளை எழுதினர்.

மிக முக்கியமாக, சோசலிச சமத்துவ கட்சி அதன் பிரச்சாரத்தின் மையத்தில் உலக சோசலிச வலைத்தளத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏகாதிபத்திய போருக்கு எதிரான சர்வதேச இணையவழி மே தின கூட்டத்தை நிறுத்தி இருந்தது. இந்த நிகழ்வை செவியுறுவதற்கு அது, கிளாஸ்கோவ் மற்றும் இலண்டனில் பெரிதும் வெற்றிகரமாக இருந்த இரண்டு கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது.

தேர்தல் முடிவு சோசலிச சமத்துவ கட்சியால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை திடமாக உறுதிப்படுத்துகிறது. எமது கட்சியில் இணைய முடிவெடுப்பதன் மூலமாக விடையிறுக்குமாறு நாங்கள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வலியுறுத்துகிறோம்.