சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Defend student free speech at Humboldt University! Stop state-sponsored censorship!

ஹம்போல்ட் பல்கலைக்கழக மாணவரின் பேச்சுச்சுதந்திரத்தை பாதுகாப்போம்! அரசு ஆதரவுடனான தணிக்கையை நிறுத்து!

Partei für Soziale Gleichheit (PSG) and International Youth and Students for Social Equality
19 May 2015

Use this version to printSend feedback

முன்ங்லெர்-வாட்ச் (Münkler-Watch) வலைப்பதிவை பிரசுரிக்கின்ற மற்றும் ஒரு பாரிய அச்சுறுத்தல் நடவடிக்கைக்கு இலக்காகி உள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழக மாணவர்களை ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியும் (PSG), சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE) ஐயப்பாட்டிற்கு இடமின்றி ஆதரிக்கின்றன. அரசியல் விஞ்ஞானி ஹெர்பிரிட் முன்ங்லெரின் விரிவுரைகளை விமர்சிப்பதற்குரிய அவர்களது உரிமையை நாம் பாதுகாக்கிறோம்.

இங்கு தாக்குதலின் குறிக்கோளாக இருப்பது வெறுமனே பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உடனான ஒரு மோதல் அல்ல மாறாக பேச்சு சுதந்திரத்தின் பாதுகாப்பாகும். அரசால்-மேற்பார்வையிடப்படும் இணக்கவாதம் (conformism) ஹம்போல்ட் மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களிலும் தடுக்கப்பட வேண்டும் (இணக்கவாதம் எனப்படுவது நாஜிக்கள் காலத்தில் கிளைஷ்ஷால்ட்டுங் (Gleichschaltung) என்ற பெயரில் மக்களதும் ஏனைய அமைப்புகளினதும் கருத்துக்களை நாஜிகளின் கருத்துகளுக்கு இணங்கவைக்கும் முயற்சியாகும்). கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள், அரச போர் பிரச்சார கருவிகளாக மாற்றப்படக்கூடாது.

முன்ங்லெர்-வாட்ச்" வலைப்பதிவு மீதான தாக்குதல்கள், IYSSE மீதான தாக்குதல்களின் ஒரு தொடர்ச்சியும், தீவிரமயப்படுத்தலும் ஆகும். கிழக்கு ஐரோப்பாவிற்கான வரலாற்றாளர் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கியை விமர்சித்ததற்காக பல்கலைக்கழக நிர்வாகத்தால் மற்றும் ஊடகங்களால் IYSSE கண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பார்பெரோவ்ஸ்கியை தாக்கி எழுதிய இளம் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் ஒரு குழு, இந்த வலைப்பதிவிற்குப் பின்னால் இருப்பதாக அவர் சந்தேகிப்பதாக பத்திரிகை பிரதிநிதிகளுக்கு கூறியதன் மூலம், முன்ங்லெரே இவை இரண்டிற்கிடையிலான தொடர்பை எடுத்துக்காட்டியுள்ளார்.

கடந்த செவ்வாயன்று முன்ங்லெர் அவரது ஒரு விரிவுரைகளுக்கு பத்திரிகையாளர்களை அழைத்திருந்தார், அதில் அவர் "முன்ங்லெர்-வாட்ச்" வலைப்பதிவின் அநாமதேய எழுத்தாளர்களை "இழிவார்ந்த கோழைகள்" என்று அவமதித்துடன், அவர்களை "நாஜி தரகர்களோடு" (Nazi Block Wardens நாஜி பின்புல சேவகர்கள்-) ஒப்பிட்டார். தொடர்ச்சியான தூற்றல் அச்சுறுத்தல்களின் கீழ்" ஒரு விரிவுரை நடத்துவதென்பது "தாங்கொணா நிலைமையாகும்" என்றார். அப்போதிருந்து "முன்ங்லெர்-வாட்ச்" வலைப்பதிவு குறித்து ஜேர்மன் ஊடகங்களில் வெள்ளமென கட்டுரைகள் வெளி வந்துள்ளன.   

Spiegel Online, Der Spiegel, Tagesspiegel, Die Zeit, Die Welt, Süddeutsche Zeitung, taz, Neue Zürcher Zeitung, Deutschlandradio, Junge Welt மற்றும் Neues Deutschland ஆகிய பத்திரிகைகள் "முன்ங்லெர்-வாட்ச்" குறித்து எழுதியுள்ளன. Frankfurter Allgemeine Zeitung இரண்டு ஆத்திரமூட்டும் கட்டுரைகளை பிரசுரித்தது. சில விதிவிலக்குகளோடு, அக்கட்டுரைகள் அரைகுறை உண்மைகள், திரித்தல்கள் மற்றும் அப்பட்டமான பொய்களோடு வலைப்பதிவாளர்களுக்கு எதிராக கசப்பான வசைபாடும் கருத்துக்களைக் கொண்டுள்ளன.

Deutschlandradio இல் வின்பிரிட் ஸ்ட்ரீட்டெர், வலைப்பதிவாளர்களை "குற்றங்கள் குறித்து சுயநீதி வழங்கும் ஒரு வடிவத்தை" பயன்படுத்தும் "தார்மீக பாதுகாவலர்கள்" என்று குறிப்பிட்டார். வலைப்பதிவாளர்களின் நடவடிக்கைகள், "பெஹிடாவைப் போலவே ஆக்ரோஷதன்மை மற்றும் கோழைத்தனத்தின்" ஒரு கலவையாக உள்ளன என்று ஜென்ஸ் பிஸ்கி Süddeutsche Zeitung இல் எழுதினார்.

அந்த விமர்சனபூர்வ மாணவர்கள் மீதான மிகவும் கோபமூட்டும் தாக்குதல், வலதுசாரி Frankfurter Allgemeine Zeitung (FAZ) இதழிடமிருந்து வந்தது. GDR இல் ஒரு ஸ்ராலினிச கூலிக்கு மாரடிப்பவராக அவரது இதழியல் தொழில் வாழ்வை தொடங்கிய ரெஜினா மொன்ச் புதனன்று ஆக்ரோஷமாக சீறினார்: மாணவர்கள் பேராசிரியர் ஒருவரை அச்சுறுத்துகின்றனர்... வெளிப்பார்வைக்கு ஏதோ அவர்கள் புத்திஜீவித்தனத்தில் அவரை விஞ்சி இருப்பதைப் போல, அவர்கள் அவரது விரிவுரைகளைக் குற்றஞ்சாட்டி, தணிக்கை செய்கின்றனர். இத்தகைய நடவடிக்கைகளுக்கு அப்பல்கலைக்கழகம் "முற்றிலும் முடமான" விதத்தில் விடையிறுப்பு காட்டி வருவதாக அப்பெண்மணி அதைச் சாடினார். நிர்வாகத்தின் அறிக்கையோ "நிரந்தர பூசலுக்கான அழைப்பு அல்லது சில பேராசிரியர்கள் கூறியதுபோல் 'பழிந்துரைப்பதற்கான முற்றுமுழுதான சுதந்திரம் என்பதாக இருக்கின்றது என்றார் அவர்.

ஞாயிறன்று, ஃபிரிடெரிக்கே ஹாப்ட் Frankfurter Allgemeine Sonntagszeitung (FAS) இல் இன்னும் மேலதிகமாக சென்றார். அவரது கட்டுரை சாக்கடை இதழியலுக்கு ஒரு முன்மாதிரியாக சேவை செய்யக்கூடும். அது முற்றிலும் வேறுவேறு சம்பவங்களை ஒரு கலவையாக்குகிறது, அந்த நிகழ்ச்சிப்போக்கில் அடிப்படை உண்மைகளைக் கைவிடுவதுடன் திரித்தல்களைச் செய்கிறது. அச்சுறுத்தப்பட்ட பேராசிரியர்கள் தொடர்ச்சியான தாக்குதல் அச்சத்தில் வாழ்வதாகவும், பல்கலைக்கழகத்தின் கோழைத்தனமான நிர்வாகத்தால் கைவிடப்பட்டுள்ளதாகவும், அப்பெண்மணியின் கட்டுரை ஒரு பொருத்தமற்ற சித்திரத்தை வரைந்து காட்டுகிறது. அது வலதுசாரி பேராசிரியர்களின் மீது நன்கு நிறுவிக்காட்டப்பட்ட, சார்புநிலையற்ற விமர்சனங்களை, "வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் மற்றும் படுகொலை முறையீடுகளுடன்" ஒப்பிடும் அளவிற்கு போகிறது.

மிகவும் பிற்போக்கான தப்பெண்ணங்களை திரட்டும் முயற்சியில் ஹாப்ட், ஹம்போல்ட் பல்கலைக்கழகம் அமைந்துள்ள பேர்லினை கீழ்தரமான அக்கிரமங்களின் அமைவிடமாக வர்ணிக்கிறார். சில பேர்லின்வாசிகள் "30 மணிநேரம் மனமகிழ் மன்றங்களில் செலவிட்டுவிட்டு, சுரங்க பாதைகளில் வாந்தி எடுக்கிறார்கள்" என்று அவர் எழுதுகிறார்

மேலே குறிப்பிட்ட ஏனையவற்றைப் போலவே FAS கட்டுரையும், உத்தியோகபூர்வ சிந்தனை பள்ளிகளை விமர்சிப்பதைக் குற்றகரமாக்கும் ஒரு பீதியூட்டும் சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொள்கிறது. 1968 மாணவர் கலகத்திலிருந்து வென்றெடுக்கப்பட்ட ஜனநாயக வெற்றிகள் திரும்ப பெறப்பட்டு வருகின்றன என்பதுடன், பல்கலைக்கழகங்கள் மீண்டுமொருமுறை சர்வாதிபத்திய அமைப்புகளாக திருப்பப்பட்டு வருகின்றன. அதில் தவறிழைக்காத "கருப்பு அங்கியணிந்த கடவுள்கள்" ஆளும் உயரடுக்கிற்கு விமர்சன நோக்கமற்ற தலையாட்டிகளாக மாணவர்களை பயிற்றுவிக்கின்றனர். இதற்கு பொருத்தமான வார்த்தைதான் கிளைஷ்ஷால்ட்டுங் (Gleichschaltung) என்பதாகும்.

IYSSE மீதான தாக்குதல்களின் ஒரு நீட்சி

முன்ங்லெர்-வாட்ச்" வலைப்பதிவு மீதான தாக்குதல்கள் IYSSE மீதான தாக்குதல்களின் ஒரு தொடர்ச்சியும் மற்றும் தீவிரப்பாடும் ஆகும். சமீபத்திய மாதங்களில் அப்பல்கலைக்கழகம் இரண்டு முறை அதன் உத்தியோகபூர்வ வலைத் தளத்தில் ஜேர்மன் சோசலிச சமத்துவ கட்சியின் (PSG) இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பைக் குற்றஞ்சாட்டி உள்ளது.  

வரலாற்றாளர் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி வெளியிட்ட பொதுக்கருத்துக்கள் மீது IYSSE இன் விமர்சனத்தை "எதிர்க்குமாறும்", அத்தகைய விமர்சனங்களை "ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் விரிவுரை அரங்குகளில்" சகித்துக் கொண்டிருக்க வேண்டாமென்றும் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு" நவம்பர் 2014 இல் வரலாற்றுத் துறை அழைப்புவிடுத்தது

அப்பல்கலைக்கழகம் ஏப்ரல் 2015 இல் அதேபோன்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டது, அதில் அதன் தலைவர் ஜான் ஹென்றிக் ஓல்பேர்ட்ஸ் இன் கையெழுத்தை தாங்கியிருந்தது. ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கிக்கு எதிராக திருப்பிவிடப்பட்ட "தனிமனிதபண்பு மீதான தாக்குதலாக", அவதூறாக" மற்றும் "வக்கிரமான அவமதிப்பாக" அது PSG மற்றும் IYSSE குற்றஞ்சாட்டியது. ஆனால் அத்தகைய வாதங்களுக்கு அது எந்தவிதமான ஆதாரங்களையும் வழங்கவில்லை

அப்பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ளதும் மற்றும் மாணவர் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்கின்றதுமான ஒரு மாணவர் அமைப்பின் மீது நிர்வாகத்தின் அத்தகையவொரு தாக்குதல், அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளையே கைத்துறக்கிறது.

ஜேர்மன் வரலாற்றாளர்களிலேயே தேசிய சோசலிசத்திற்கு மிகவும் இழிவார்ந்த அனுதாபியாக இருந்த ஏர்ன்ஸ்ட் நோல்டக்கு மறுவாழ்வளிக்க முயன்ற பார்பெரோவ்ஸ்கியின் முயற்சிகளை IYSSE அதன் துண்டு பிரசுரங்கள் மற்றும் அதன் பொதுக்கூட்டங்களில் விமர்சித்திருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது நடத்தப்பட்ட குற்றங்களை குறைத்துக் காட்டும் மற்றும் புதிய போர் குற்றங்களை நியாயப்படுத்தும் பார்பெரோவ்ஸ்கியின் முயற்சிகளை IYSSE கண்டித்தது. இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு அது மிக கவனமான ஆதாரங்களையும் வழங்கி இருந்தது.   

பெப்ரவரி 2014 Der Spiegel கட்டுரையில், பார்பெரோவ்ஸ்கி மிக வெளிப்படையாக ஏர்ன்ஸ்ட் நோல்டவிற்கு அவரது ஆதரவைப் பகிரங்கப்படுத்தினார். அவர் அந்த செய்தியிதழுக்கு தெரிவித்தார்: நோல்டவுக்கு அநீதி இழைக்கப்பட்டது. வரலாற்றுரீதியில் கூறினால், அவர் சரியாகவே இருந்தார், மேலும்: ஹிட்லர் மனநோயால் பாதிக்கப்பட்டவரோ அல்லது வக்கிரமானவரோ இல்லை. அவருக்கு முன்னால் யூதர்களை நிர்மூலமாக்குவது குறித்து யாரும் பேசுவதை அவர் விரும்பவில்லை, என்றார்.  

நோல்ட போலவே, கிழக்கு போர்முனையில் மோதலில் நடந்த ஜேர்மன் போர் குற்றங்களை ஸ்ராலினிச குற்றங்களின் பிரதிபலிப்பாகவும், அவை திட்டமிட்ட ஒரு நிர்மூலமாக்கும் போரின் விளைவுகளல்ல என்றும் சித்தரிப்பதை பார்பெரோவ்ஸ்கியின் படைப்பின் எண்ணிறைந்த வாசகங்களில் காண முடியும். 2007 இல் அவர் எழுதினார்: ஸ்ராலின் மற்றும் அவரது தளபதிகள் ஜேர்மன் இராணுவத்தின் மீது (Wehrmacht) ஒரு புதிய விதமான போர் ஒன்றை திணித்தனர்அது ஒருபோதும் அப்பாவி பொதுமக்களைப் பாதுகாக்கவில்லை, என்றார்.

அக்டோபர் 2014 இல் ஜேர்மன் வரலாற்று அருங்காட்சியகத்தில் நடத்தப்பட்ட ஒரு குழு விவாதத்தில், பார்பெரோவ்ஸ்கி ஜிஹாதிஸ்ட் குழுக்களுக்கு எதிரான ஒரு சண்டையில் சர்வதேச சட்டத்தை மீறும் அணுகுமுறைகளைப் பிரயோகிப்பதை நியாயப்படுத்தினார். அவர் இப்படியே கூறினார்: பணயக் கைதிகளைப் பிடித்து வைக்க, கிராமங்களை எரித்து, மக்களைத் தூக்கிலிட்டு, தீவிரவாதிகள் செய்வதைப் போல பயத்தையும் கொடூரத்தையும் பரப்புவதற்கு ஒருவருக்கு விருப்பமில்லையென்றால், அதுபோன்றவற்றை செய்ய ஒருவர் தயாரில்லை என்றால், பின்னர் அதுபோன்றவொரு மோதலில் அவர் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. அதை ஒட்டுமொத்தமாக விட்டுவிடுவதே மேல், என்றார்

போர் குற்றங்களை பார்பெரோவ்ஸ்கி பெரிதுபடுத்தாமல் விடுவதை, IYSSE எந்த உள்ளடக்கத்தில் நிறுத்துகிறதென்றால், ஜேர்மனியில் தசாப்தகாலமாக இருந்த இராணுவ தடைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்குரிய நேரம் என்று அறிவித்த ஜேர்மன் அரசாங்கத்தினது முன்னணி பிரதிநிதிகளின் அறிவிப்பின் உள்ளடக்கத்தில் அதை நிறுத்துகிறது. நாஜி சகாப்தத்தின் குற்றங்களைக் குறைத்துக்காட்டும் ஒரு புதிய வரலாற்று பொருள்விளக்கம் ஜேர்மன் இராணுவவாத புதுப்பிப்புக்கு அவசியமாகிறது, என்று அது எழுதியது.

ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தை வலதுசாரி மற்றும் இராணுவவாத பிரச்சாரத்தின் மையமாகவும்" மற்றும் "பேர்லின் ஸ்பிரே ஆற்றங்கரையில் ஹூவர் பயிலகத்தின் ஒரு ஜேர்மன் பதிப்பாக" அதை மாற்றுவதற்கு முயற்சிப்பதையும் குறித்து அந்த அறிக்கை எச்சரித்தது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஹூவர் பயிலகம் அமெரிக்காவில் அரசியல் வலதுசாரிகளின் ஒரு கல்வித்துறை மையமாக விளங்குகிறது.

இந்த ஆண்டின் ஏப்ரல் 28 இல், ஹம்போல்ட் பல்கலைக்கழகத்திற்கு IYSSE எழுதிய ஒரு பகிரங்க கடிதத்தில், பேராசிரியர் ஒருவரின் மதிப்பை பாதுகாக்கும் சாக்கில், பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீது ஓர் அடிப்படை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது, என்பது குறித்து எச்சரித்தது. ஹம்போல்ட் பல்கலைக்கழகம் "ஓர் அபாயகரமான முன்மாதிரியை" நிறுவி வருகிறது, அதன் முக்கியத்துவம் உடனடி பிரச்சினைகளையும் கடந்து செல்கிறது. அது சவாலுக்குட்படுத்தப்படாமல் விடப்பட்டால், அது அப்பல்கலைக்கழகத்தின் அரசியல் கிளைஷ்ஷால்ட்டுங் (Gleichschaltung) ஆக வழிவகுக்கும்: அதாவது அரசியல் விமர்சனங்களை ஒடுக்குவது மற்றும் அதனுடன் சேர்ந்து, அனைத்து பிரதானமான புலமைசார்ந்த நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கும் வழிவகுக்கும், என்று குறிப்பிட்டது.

முன்ங்லெர்-வாட்ச்" மீதான தாக்குதல்

முன்ங்லெர்-வாட்ச்" மீதான தாக்குதல் இந்த எச்சரிக்கையை நிரூபித்துள்ளது. நாம் அறிந்துள்ள வரையில், அந்த வலைப்பதிவு மாணவர்களின் சொந்த முயற்சியில் ஒழுங்கமைக்கப்பட்டதாகும். பார்பெரோவ்ஸ்கி மற்றும் ஹெர்பிரீட் முன்ங்லெர் மீதான எமது விமர்சனம் அவர்களை அவ்வாறு செய்ய ஊக்குவித்தது என்றால், அந்த அபிவிருத்தியை நாம் வரவேற்கிறோம். ஒவ்வொரு சம்பவத்திலும், இராணுவவாதம் மற்றும் வரலாற்று பொய்மைப்படுத்தல்களுக்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து வருவதையும், நமது உறுதியான அரசியல் வேலைகள் ஒரு பிரதிபலிப்பை காண்பதையும் இந்த வலைப்பதிவு எடுத்துக்காட்டுகிறது.

அதனால் தான் முன்ங்லெரும், கிளறிவிடப்பட்டுள்ள இதழாளர்களின் அணியும் வலைப்பதிவாளர்களை இந்தளவிற்கு உக்கிரமாக தாக்குகின்றனர். அரசியல் உயரடுக்கிற்கும் பாரிய வெகுஜன மக்களுக்கும் இடையிலான ஆழமான பிளவு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஒரு தீவிரமயமாக்கலுக்கு இட்டுச் செல்லுமென்பதையும், போர் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான எதிர்ப்பை இனியும் நீண்டகாலத்திற்கு தனிமைப்படுத்தி வைக்க முடியாது என்பதை இட்டும் அவர்கள் அஞ்சுகின்றனர்

எமது பொதுக்கூட்டங்கள் மற்றும் கட்டுரைகளில், IYSSE உம் மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் முன்ங்லெரால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட ஏகாதிபத்திய மற்றும் இராணுவவாத நிலைப்பாடுகளை நீண்டகாலத்திற்கு முன்னரே அம்பலப்படுத்தி உள்ளன. அதாவது பாதுகாப்பு பயிலகத்தின் ஆலோசகர் குழுவில் அவரது அங்கத்துவம், சர்வாதிபத்திய ஆட்சி வடிவங்களுக்கு அவரது ஆதரவு, முதல் உலகப் போரில் ஜேர்மன் கடமைப்பாடுகளை அவர் குறைத்துக்காட்டுவது, ஜேர்மனியை முன்னணி சக்தியாக மற்றும் ஐரோப்பாவின் எஜமானாக மாற்றுவதற்கு அவர் அழைப்புவிட்டமை, மனிதாபிமான ஆயுதங்கள் என்பதாக கூறப்படும் தாக்கும் டிரோன்களுக்கு அவரது ஆதரவு, இன்னும் இதுபோல பலவற்றை அம்பலப்படுத்தி உள்ளன

இதேபோன்ற விமர்சன புள்ளிகளை "முன்ங்லெர்-வாட்ச்" வலைப்பதிவிலும் காணமுடியும். Caro Meyer என்ற புனைபெயரை கொண்ட அக்குழுவின் செய்தி தொடர்பாளர் Junge Welt பத்திரிகைக்கு கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மன் மேலாதிக்கத்தை நியாயப்படுத்துவதற்கு அல்லது அதனை பலப்படுத்துவதற்கு திரு. முன்ங்லெர் தொலைக்காட்சியில் வாதாடுவதை காட்டாது ஒரு நாள் கூட கடந்து செல்வதில்லை. அல்லது ஜேர்மன் உயரடுக்கின் பொருளாதார நலன்களை நிலைநோக்காக கொண்ட ஒரு வெளியுறவு கொள்கையை அவர் வரவேற்பதை ஒருவர் பத்திரிகைகளில் வாசிக்கலாம். அந்த தட்டு வெளிப்படையாக "இராணுவத்தின் பக்கம் சாய்ந்துள்ளது". அல்லது ஒரேமாதிரியான பேரினவாத அல்லது இனவாத தொனியில் வானொலியில் அவரது கருத்துக்களை ஒருவர் கேட்கலாம், என்றார்

முன்ங்லெரும் ஊடகங்களும் வலைப்பதிவாளர்களை மதிப்பிழக்க செய்ய, குறிப்பாக அவர்கள் தமது பெயரை வெளியிடாத நிலைப்பாட்டை பயன்படுத்துகின்றன. அநாமதேய விமர்சனம் "கோழைத்தனமானதும்" சட்டபூர்வத்தன்மையற்றதுமாகும் என அவர்கள் வாதிடுகின்றனர். அவ்வாறான கூற்று, இதழாளர்கள் மற்றும் சட்டபூர்வ வட்டாரங்களிடமிருந்து வலைப்பதிவாளர்கள் எதிர்ப்பை சந்தித்துள்ள நிலையில் இந்த வாதம் மிகவும் வெளிப்படையாக தவறானதும், ஜனநாயக-விரோதமானதும் ஆகும்.

அவர்களது அடையாளங்கள் வெளியானால் அவர்களது பட்டப்படிப்புக்கள், எதிர்கால வேலைகள் மற்றும் வருமானங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களது பெயர்களை மறைத்து வைக்க வேண்டியது அவர்களுக்கு அவசியமென வலைப்பதிவாளர்கள் தெரிவிக்கின்றனர். முக்கிய தொழில் வழங்குனர்கள் அவர்களது பெயர்களை இணையத்தில் ஆராயக்கூடும், மேலும் பேராசிரியர்களே "கருத்து முரண்பாடு கொண்டவர்களுக்கு உத்தியோகபூர்வமற்ற முறையில் அழுத்தம் அளிக்க 1001 வாய்ப்புகளைக்" கொண்டிருக்கிறார்கள் என்று அவர்கள் எழுதுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து எழுதுகையில், மிக வெளிப்படையாக சமமான அதிகாரமின்மையால், நாங்கள் இந்த தளத்தில் பெயர் வெளியிடாமல் இருப்பதைத் தேர்ந்தெடுத்தோம் என்கின்றனர்.

இந்த நிலைப்பாடு மத்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளால் பாதுகாக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட கருத்துக்குப் பின்னால் பெயரைக் கொண்டிருக்க வேண்டுமென்ற கடமைப்பாடு" அரசியலமைப்பில் கிடையாது என்று ஜூன் 23, 2009 இல் அந்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடுமையான நடவடிக்கைகள் அல்லது ஏனைய எதிர்மறை விளைவுகளுக்கு அஞ்சி ஒருவர் அவரது கருத்தை வெளிப்படுத்தாமல் இருந்துவிடக்கூடிய ஆபத்தை அது ஏற்படுத்தும். சுய-தணிக்கை என்னும் இந்த ஆபத்து, கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமைக்கு முரண்பட்டதாகும், என்று அந்த தீர்ப்பு அறிவிக்கிறது.

FAZ இன் பதிப்பாசிரியரே கூட அவரது பேஸ்புக் பக்கத்தில், தலையங்கம் எழுதும் அவரது சக கூட்டாளி மொன்ச் (Mönch) எதிர்த்தார். 2001 இல் இருந்து 2011 வரையில் அப்பத்திரிகையின் கலாச்சார பிரிவுக்கு தலைமை கொடுத்து வந்த பட்ரிக் பாஹ்னர்ஸ், வலைப்பதிவர்கள் பெயர் வெளியிடாமல் இருப்பதை ஆதரித்தார். அவர் எழுதுகையில், பெயர் வெளியிடாமல் இருப்பதற்கான மிக முக்கியமான காரணம் வெளிப்படையானது: அது நேர்மையையும் மற்றும் விமர்சனத்திற்கான வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கிறது. முன்ங்லெர்-வாட்ச் விடயம், சரிநிகரற்றவர்களால் தீர்ப்புகூறவேண்டிய ஒன்றாகும். பெயர் வெளியிடாமல் இருப்பதற்கான பாதுகாப்பைக் கோருவதற்கு அங்கே சிறப்பு காரணங்கள் உள்ளன, அது பண்டைய தாராளவாத கண்ணோட்டத்தின்படி குறைந்த அதிகாரமுள்ளவர்களின் தேவைகளுக்கு சேவை செய்கிறது. கண்காணிக்கப்பட்ட அந்த பேராசிரியரே பின்னர் கண்காணிப்படுபவரின் ஆய்வுவேலைகளை ஒருவேளை பரிசோதிப்பதும் சாத்தியப்படலாம் என்றார்.

FAZ ஆல் வெளியிடப்பட்ட "அவதூறு" குற்றச்சாட்டைக் குறித்து பாஹ்னர்ஸூம் எதிர்க்கின்றார்: அந்த அவதூறு அதிகாரத்திலுள்ளவர்களுக்கு முன்வைக்கப்பட்டது என்ற உண்மைக்கு அப்பாற்பட்டு ஒரு பகிரங்க அறிக்கையை வெளிப்படையாக விநியோகிப்பது அவதூற்று குற்றச்சாட்டு என்ற வரையறையை கொண்டிருக்கமுடியாது. என்கிறார்.

முன்ங்லெர்-வாட்ச்" வலைப்பதிவு பற்றிய FAZ இன் குற்றச்சாட்டு, ஒருவகை "தணிக்கையை" வடிவத்தைக் கொண்டிருக்கிறது எனக்கூறும் வழக்கறிஞ்ஞர் தோமாஸ் ஸ்டாட்லெர்: தணிக்கை முறை என்பது  தகவல்கள் மீதான அரசு ஒடுக்குமுறையாகும். அது குடிமக்கள் அல்லது மாணவர்களால் வைக்கப்பட்ட ஒரு பகிரங்க விமர்சனத்திற்கு முற்றிலும் எதிரானதாகும்... கருத்துக்கள் பற்றிய விமர்சனரீதியான அறிக்கைகளை, எவராவது தணிக்கை முறை எனக் கருதினால் ஏற்கனவே புறநிலையான உரையாடல்களின் எல்லையை முற்றிலுமாக கைவிடுகிறார்கள் என்றார்.

இத்தகைய சில கருத்துரைகளே "முன்ங்லெர்-வாட்ச்" மீதான தாக்குதல்களின் முற்றிலும் பிற்போக்குத்தனமான மற்றும் ஜனநாயக-விரோதமான இயல்பை எடுத்துக்காட்டுகின்றன. அவை பேச்சு சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான மற்றும் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தை அரசு போர் பிரச்சாரத்திற்கு ஒரு கருவியாக மாற்றுவதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியாக உள்ளன

ஹம்போல்ட் பல்கலைக்கழகத்திற்கு முன்னோடி பயிலகமான Friedrich-Wilhelms-Universität, இந்த விடயத்தில் ஒரு மோசமான வரலாற்றை கொண்டுள்ளது. வைய்மார் குடியரசின் போது அது நாஜி மாணவர்களுக்கு தலைமைக் களமாக மட்டும் இருக்கவில்லை, அது 1933 இல் முதல் புத்தக எரிப்புக்குரிய இடமாகவும், பொது கிழக்கு திட்டம்" அதாவது கிழக்கில் நிர்மூலமாக்கும் நாஜி போருக்கு செயல்திட்டம் நெறிப்படுத்தப்பட்ட பயிலகமாகவும் இருந்தது.

விமர்சனங்களை மற்றும் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கையை வெறுமனே முன்ங்லெர், பார்பெரோவ்ஸ்கி மற்றும் ஏனைய பேராசிரியர்களது தனிமனிதப்பண்புகளைக் கொண்டு விவரித்துவிட முடியாது. இதற்கான ஆழமான காரணம், ஆளும் வர்க்கம் இராணுவவாதத்தை நோக்கி திரும்பி இருப்பதாகும், அது உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடிக்கு இராணுவவாதத்தைக் கொண்டு எதிர்வினை காட்டி வருகிறது. ஜனநாயகத்திற்கு பொருத்தமற்றதாக உள்ள அது, சமூகத்தின் மூலைமுடுக்கெல்லாம் விரிவாக்கப்படுகிறது.

இந்த காரணத்திற்காகத்தான் மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் குறித்து அனைவரும் அக்கறை கொள்ள வேண்டியதாகிறது. ஹம்போல்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனி மற்றும் உலகெங்கிலுமான அனைத்து பல்கலைக்கழகத்திலும் உள்ள அனைத்து மாணவர்கள், கல்வித்துறை பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களும் இத்தகைய தாக்குதல்களை எதிர்க்குமாறு நாங்கள் அழைப்புவிடுக்கிறோம்.

குறிப்பாக, தொழிலாள வர்க்கம் மாணவர்களது ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பை முன்னெடுக்க வேண்டும். பல்கலைக்கழகங்களை போர் பிரச்சார மையங்களாக மாற்றும் நடவடிக்கை, தொழிலாளர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அது சமூகத்தை ஒட்டுமொத்தமாக இராணுவமயப்படுத்துவதன் பாகமாக நடக்கிறது. அது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதலுடன் பிணைந்துள்ளது.