சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Killing of student sparks protests in northern Sri Lanka

மாணவியின் கொலை இலங்கையின் வடக்கில் எதிர்பு ஆர்ப்பாட்டங்களை தூண்டிவிட்டுள்ளது

By Subash Somachandran
23 May 2015

Use this version to printSend feedback

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள புங்குடுதீவில், தமிழ் மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கு கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு எதிராக, யுத்தத்தினால் நாசமாக்கப்பட்ட இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. சிங்கள தீவிரவாத ஜாதிக ஹெல உறுமயவும் (JHU) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், இந்த ஆர்ப்பாட்டங்களைபயங்கரவாதம் தலை தூக்குவதாகவகைப்படுத்தி, தமிழர்-விரோத இனவாத பதட்டங்களைத் தூண்டிவிடும் திட்டமிட்ட பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் பதினெட்டு வயது உயர்தர வகுப்பு மாணவியான வித்யா சிவலோகநாதன், மே 13 பாடசாலைக்கு சென்ற பின்னர் காணாமல் போனார். பின்னர் அவரது சடலம், பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் பாழடைந்த வீடொன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடூரமான குற்றத்துடன் தொடர்புடையவர்கள் என்னும் சந்தேகத்தின் பேரில் இதுவரை பொலிசார் ஒன்பது பேரை கைது செய்துள்ளனர்.

மே 15, புங்குடுதீவு மற்றும் ஏனைய தீவுகளையும் சேர்ந்த மாணவர்களும் மற்றும் ஆசிரியர்களும், இந்த குற்றத்திற்கு எதிராகவும் மாணவர்களின் பாதுகாப்பைக் கோரியும் எதிர்ப்பில் ஈடுபட்டார்கள். அதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்சாரம் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல இடங்களிலும் நடைபெற்றது. சந்தேக நபர்கள் நீதி மன்றத்தில் முற்படுத்தப்படவிருந்த புதன்கிழமை, மக்கள் பூரண ஹர்த்தாலை நடத்தினர். யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதற்கு ஆதரவாக தொழிலாளர்களும் பல மணி நேரம் வேலை நிறுத்தம் செய்தனர். யாழ்ப்பாண நீதிமன்ற வளாகம் உட்பட யாழ்ப்பாண நகரின் பல இடங்களிலும் ஆயிரக் கணக்கானவர்கள் ஒன்று கூடி தமது கோபத்தினை வெளிப்படுத்தினர்.

http://www.wsws.org/asset/6213dd5e-0ca1-468c-b946-58ea7f82eb1K/Protest+at+a+Jaffna+junction.jpg?rendition=image480
யாழ்ப்பாண சந்தியில் பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டத்தில்

ஆர்ப்பாட்டங்களுக்கு மிரட்டல் விடுக்கவும் அடக்கவும் பொலிஸ் கொமாண்டோக்கள், படையினர் உட்பட நூற்றுக்கணக்கான ஆயுதம் தாங்கிய பொலிசார் வீதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர். சந்தேக நபர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட போது அமைதியிழந்த மக்களைக் கலைப்பதற்காக பொலிஸ் கண்ணீர் புகை அடித்தது. கல் வீசித் தாக்கி, பொதுச் சொத்துக்களை சேதமாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் 130 பொது மக்களை கைது செய்தது. அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆர்ப்பாட்டங்களை தடை செய்து நீதிமன்றத்தில் தடை உத்தரவு ஒன்றும் பெறப்பட்டுள்ளது.

வியாழன், யாழ்ப்பாண நீதவான் கைது செய்யப்பட்ட அனைவரையும் ஜூன் 2 வரை விளக்க மறியலில் வைப்பதற்கு உத்தரவிட்டார். நேற்று முன்தினம், வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும், மற்றும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பொலிஸ் மா அதிபர் இலங்ககோன், நிலமைகளைமதிப்பீடுசெய்வதற்கும் மற்றும்மேலதிக நடவடிக்கைகளுக்கு ஆலோசனை கூறவும்வியாழன் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார். பொலிஸ் நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படுவதே அதன் அர்த்தமாகும்.

http://www.wsws.org/asset/7e5b6f06-40f9-4e11-b761-a399abee713D/Students+demonstrating+in+Jaffna.jpg?rendition=image480 
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

பல வருடங்களின் பின்னர் வடக்கில் வெடித்த பிரமாண்டமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இதுவாகும். இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றிய தமது கோபத்தை வெளிப்படுத்திய அதே வேளை, கிட்டத்தட்ட கடந்த மூன்று தசாப்த கால ஒடுக்குமுறை மற்றும் 200,000 உயிர்களைப் பலிகொண்ட யுத்தத்தின் பின்னர் தாம் எதிர்கொள்ளும் அவநம்பிக்கையான நிலமைகளால் மக்கள் நிச்சயமாக உந்தப்பட்டுள்ளனர்

மே 19, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) தோல்வியின் ஆறாவது வருடத்தினைக் குறிக்கின்றது. இறுதி யுத்தத்தின் போது, பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் இராணுவத்தின் உக்கிரமான தாக்குதல்களினால் கொல்லப்பட்டனர். புதிய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தலமையிலான அரசாங்கம் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில், இனவாத உணர்வுகளை ஜீவனுடன் வைத்திருப்பதற்கு யுத்த வெற்றியை கொண்டாடினர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பல்லாயிரக் கணக்கான இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. யுத்தப் பேரழிவுகளின் வடுக்கள் இன்னமும் மாறவில்லை. மக்களில் கூடுதலானவர்கள் பொருத்தமான வருமானம் இன்றி வாழ்கின்றனர். இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பெரும்பாலான காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. சிலர் அடிப்படை வசதிகளற்ற தற்காலிக முகாம்களில் இன்னமும் வாழ்ந்து வருகின்றனர். இளைஞர்கள் வேலையற்ற நிலமைகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பு முகாம்களில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இளைஞர்கள் இன்னமும் சந்தேக நபர்களாக கருதப்படுகின்றார்கள். இளம் யுவதியின் கொடூரமான கொலை, நீண்டகால துன்பங்களால் உருவகாக்கப்பட்ட பரந்த சமூக சீற்றத்தை தூண்டிவிட்டுள்ளது. சில குற்றவியல் கும்பல்கள் இராணுவத்தின் ஆதரவுடன் செயற்பட்டு வருவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், கொலை செய்யப்பட்ட மாணவியின் மீது அனுதாபத்தினை வெளிப்படுத்தும் அதேவேளை, குற்றவாளிகளுக்கு மரண தண்டனையைக் கோருகின்றார்கள். ஆளும் யூஎன்பீயின் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “குற்றவாளிகளுக்கு மக்கள் முன்னிலையில் மரண தண்டனைவழங்க வேண்டும் என்று கோருகின்றார். அரசாங்கத்தின் கரங்களை மட்டுமே பலப்படுத்தும் இந்த அழைப்புக்கள், மக்களின் கோபத்தை அவர்களது உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பிவிடும் இலக்கிலானதாகும்.

புதன்கிழமை ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக அறிக்கை வெளியிட்ட தமிழ் கூட்டமைப்பின் ஒரு தலைவரும் வடக்கு மாகாண சபை முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன், சொத்துக்களைச் சேதப்படுத்தியதற்காகவும் வன்முறையில் ஈடுபட்டதற்காகவும் மக்களைக் கண்டனம் செய்ததோடுஇந்தச் சூழ்நிலையில் நாங்கள் பொலிசாருக்கு ஒத்துழைக்க வேண்டும், எதிரிகளாகப் பார்க்க கூடாது. சில வஞ்சகர்கள் எமக்கும் பொலிசுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு மோதலை எதிர்பார்ப்பதோடு நிலைமையை கையாள முயற்சிப்பது தெளிவாகத் தெரிகின்றது,” என்று தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கில் தங்களின் நிலமைகள் சம்பந்தமாக மக்கள் மத்தியில் நிலவும் அமைதியின்மை, இந்திய மற்றும் அமெரிக்க உதவியுடன் கொழும்பு அரசாங்கத்துடன் அதிகாரப் பரவலாக்கல் உடன்பாட்டுக்காக மேற்கொள்ளும் முயற்சிகளை ஆபத்துக்குள்ளாக்கலாம் என தமிழ் முதலாளித்துவ தட்டு பீதியடைந்துள்ளது.

ஒரு ஆபத்தான திருப்பத்தில், சிங்கள் முதலாளித்துவ பகுதிகளும் சிங்கள அதிதீவிரவாதிகளும் இந்த மக்கள் போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டு தமிழர்-விரோத இனவாதத்தினை தூண்டி விட முயற்சிக்கின்றனர். அரசாங்கத்தின் பங்காளியும் மற்றும் சிறிசேனவின் ஆதரவாளருமான ஜாதிக ஹெல உறுமய, வடக்கில்சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுமாறுபொலிசாருக்கும் இராணுவத்திற்கும் அழைப்பு விடுக்கின்றது. ஹெல உறுமையவின் ஊடக செயலாளர் நிஷாந்த சிறி வர்ணசிங்க, மக்கள் சிங்களவர்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்துவதாக, பொய்யாக கூறினார். “இந்த சம்வத்தின் பின்னால் மறைந்து கொண்டு, இனவாத, பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத குழுக்கள், மீண்டும் தலை தூக்க முயற்சிக்கின்றன,” என அவர் மேலும் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ, இந்தப் போராட்டத்தை புலிகளின் ஆரம்பத்துடன் ஒப்பிட்டார். ஒரு பின் தங்கிய பிரதேசமான மகியங்கனை நகரில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது, அவர் கூறியதாவது: “இதே பாணியில் தான் விடுதலைப் புலிகள் ஆரம்பித்தார்கள். இது ஒரு ஆபத்தான சூழ்நிலை. ஆகையால் பொலிஸ் உடனடியாக செயற்பட வேண்டும். நாட்டின் தெற்கிலும் சரி வடக்கிலும் சரி ஒரே பாணியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”

இந்த சம்பவம்நன்றாக ஒழுங்குபடுத்தப்பட்டதுமற்றும்மேலோங்கும் சூழ்நிலை விரைவில் மாற்றம் பெறும்என ராஜபக்ஷ எந்தவிதமான ஆதாரமும் இன்றி கூறினார்.

ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெளியேற்றப்பட்ட ராஜபக்ஷ, சிறிசேன அரசாங்கம்புலி பயங்கரவாத்துக்குபாதை அமைத்துக் கொடுப்பதாக கூறி, தனது இனவாத கூட்டணிகளின் ஆதரவுடன் பேரினவாத பிரச்சாரத்தை மேற்கொள்வதன் மூலம், மீண்டும் அரசியலில் முன்னணிக்கு வருவதற்கு முயற்சிக்கின்றார். அடுத் தேர்தலில், அவர் பிரதமர் வேட்பாளாராக ஆக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

போரின் ஈவிரக்கமற்ற இறுதித் தாக்குதல்களுக்குப் பொறுப்பான, யுத்த வெற்றிக்கு உரிமை கோரும் இராஜபக்ஷ, இம்முறைபோர் வீரர்களால் வெற்றிகொள்ளப்பட்ட தாய் நாட்டை பாதுகாப்போம்என்ற பேரினவாத சுலோகத்துடன் தனியாக யுத்த வெற்றியை கொண்டாடினார். அரசியல் நெருக்கடியை எதிர்கொண்ட பின்னர் அவரது அரசியல் அடித்தளம் இனவாதத்தை கிளறுவதாகும்.

இராஜபக்ஷவும் அவரது ஆதரவாளர்களும் மட்டுமன்றி, ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வரும் சிறிசேன மற்றும் யூஎன்பீ அரசாங்கமும். அதனால், தெழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும் முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாக்கவும் இனவாத பதட்டங்களைப் பயன்படுத்தத் தயாராக உள்ளனர்.