சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greek Finance Minister Yanis Varoufakis’ mission to save capitalism

முதலாளித்துவத்தை காப்பாற்ற கிரேக்க நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸின் திட்டம்

By Chris Marsden
21 February 2015

Use this version to printSend feedback

நான் எவ்வாறு ஒரு ஒழுங்குமுறையற்ற மார்க்சிஸ்ட் ஆனேன்" என்ற தலைப்பில் கிரீஸின் நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸ் எழுதிய ஒரு கட்டுரையையை பிரிட்டனின் கார்டியன் இதழ் இந்த வாரம் பிரசுரித்தது.

வாரௌஃபாகிஸ், பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் உடன் சேர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தால் கிரீஸ் மீது திணிக்கப்பட்ட சிக்கன திட்டத்திற்கு எதிராக போராடி வருவதாக சித்தரிக்கப்படுகிறார். அதனால், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் சிரிசாவை ஒரு முன்மாதிரி "இடது" கட்சியாக ஏற்பதற்கு இதுவே ஆதாரமாக கூறப்படுகிறது.

வாரௌஃபாகிஸின் அரசியல் நம்பிக்கைகள், நோக்கங்கள் மற்றும் வரலாற்றிலிருந்து கிடைக்கும் வெளிப்படையான விபரங்களே அதுபோன்ற வாதங்களைப் பொய்யாக்குகின்றன.

மிகவும் அரிதான அந்த அறிக்கையில், தன்னைத்தானே விவரித்துக் கொள்ள வேண்டிய அவசியமிருப்பதாக அவர் தெளிவாக உணர்வதாகவும், நேர்மையுடன் அவ்வாறு செய்ய முயற்சிப்பதாகவும் பெரிதும் வெளிப்படையான ஓர் அறிக்கையாக அது உள்ளது. அவ்வாறு செய்கையில், அவர் அவரது சொந்த அரசியல் கண்ணோட்டத்தை மட்டும் வெளிப்படுத்திக் காட்டவில்லை, மாறாக ஓர் ஒட்டுமொத்த சமூக அடுக்கையே காட்டிவிடுகிறார்.

2013இல் வழங்கப்பட்ட ஒரு விரிவுரையிலிருந்து பெறப்பட்ட அவரது கட்டுரையில், வாரௌஃபாகிஸ் அவர் ஒரு மார்க்சிஸ்டோ அல்லது ஒரு புரட்சியாளரோ கிடையாது, மாறாக அதிகபட்சம் வெறுமனே சீர்திருத்தவாதியாக வர்ணிக்கக் கூடிய அரசியலைக் கொண்டவர் என்பதைத் தெளிவுபடுத்தி விடுகிறார். அவர் சிரிசாவின் ஓர் உறுப்பினர் அல்ல, மாறாக துல்லியமாக அத்தகைய கண்ணோட்டங்களின் காரணமாக அந்த அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆகிறார். ஆளும் மேற்தட்டு ஒரு பொருளாதார மற்றும் அரசியல் பேரழிவுக்குள் அக்கண்டத்தை மூழ்கடித்து வருகிறது என்பதை அவர்களுக்கு புரிய வைப்பதற்கும் மற்றும் ஒரு மாற்று பாதையை எடுக்க அவர்களுக்கு அறிவுறுத்துவதற்கும் கூடுதலாக அவர் வேறொன்றையும் விரும்பவில்லை.

2008 நெருக்கடி வெறுமனே "சுழற்சியானரீதியில் வந்த ஒரு மந்தநிலை" அல்ல, மாறாக "நாம் பார்ப்பதைப் போல நாகரீகத்திற்கே ஓர் அச்சுறுத்தலை முன்னிறுத்துகிற" ஒன்றாகும் என்று குறிப்பிட்டு அவர் தொடங்குகிறார்.

ஐரோப்பிய முதலாளித்துவத்தின் அந்த நெருக்கடியை ஒரு இன்னும் சிறந்த அமைப்புமுறையைக் கொண்டு மாற்றீடு செய்ய ஒரு சந்தர்ப்பமாக வரவேற்க வேண்டுமா? அல்லது ஐரோப்பிய முதலாளித்துவத்தை ஸ்திரப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கைய எடுப்பதற்கு நாம் மிகவும் அக்கறை கொள்ள வேண்டுமா? என்ற இந்த கேள்விகள் தான் தீவிரமய கொள்கை கொண்டவர்களுக்கு எழுகிறது.”

என்னைப் பொறுத்த வரையில், இதற்கான பதில் தெளிவாக உள்ளது. “ஐரோப்பிய நெருக்கடியானது, வரவிருக்கும் தலைமுறைகளுக்கான எந்தவொரு முற்போக்கான நகர்வுகளையும் துடைத்தழிப்பதுடன், ஒரு மனிதயின இரத்தக்களரியை உருவாக்கும் தகைமையைக் கொண்ட அபாயகரமான பிற்போக்கு சக்திகள் கட்டவிழ்க்கப்படுவதை விட, ஒரு சிறந்த முதலாளித்துவ மாற்றீட்டை உருவாகுவதற்கான சாத்தியத்தை குறைவாகவே கொண்டிருக்கிறது,” என்று பதிலளிக்கிறார்.

அவர் தொடர்ந்து கூறுகிறார், “இந்த கண்ணோட்டத்திற்காக, மற்றும் 'தோற்கடிப்பவனாக' இருப்பதற்காக மற்றும் ஏற்கவியலாத ஐரோப்பிய சமூக-பொருளாதார அமைப்புமுறையை பாதுகாக்க முயல்வதற்காக, மிகவும் தீவிர குரல்களால் நான் கண்டிக்கப்படலாம். இந்த விமர்சனம் காயப்படுத்துகிறது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அது காயப்படுத்துகிறது தான், ஏனென்றால் அது உண்மையின் சாரத்தை விட அதிகமானதை உள்ளே கொண்டிருக்கிறது,” என்றார்.

இடது தோற்கடிக்கப்பட்டது, தோற்கடிக்கப்பட்டு இருக்கிறது என்ற கருத்தோட்டத்தின் மீது அடித்தளமிட்ட ஒரு நிகழ்ச்சிநிரலின் மீது சற்றும் குழப்பமின்றி அவர் பிரச்சாரம்" செய்வதாக வாரௌஃபாகிஸ் கூறுகிறார். “நேரெதிரான ஓர் ஐரோப்பிய முதலாளித்துவத்தைப் பாதுகாக்க, அதன் பல்வேறு பலவீனங்களுக்கு இடையிலும், என்ன விலை கொடுத்தாவது அதன் வெடிப்பைத் தவிர்த்திடுவதற்கு" தீவிரமயகொள்கையுடையவர்களும் வேலை செய்ய வேண்டும் என்பதில் இப்போது அவர் "அவர்களை உடன்படச் செய்ய" விரும்புகிறார்.

யார் இந்த வாரௌஃபாகிஸ்?

அவர் 1982இல் ஒரு கோட்பாட்டு ஆய்வை எழுதியதாகவும், "மார்க்ஸின் சிந்தனை பொருத்தமற்றது" என்பதில் அது "ஆழமாக ஒருமுகப்பட்டு" இருந்ததாகவும் விவரிக்கும் வாரௌஃபாகிஸ், அதன் பின்னர் அவர் "அந்த உள்ளார்ந்த முரண்பாட்டின்" அடிப்படையில் அவர் ஒரு விரிவுரையாளர் ஆகிவிட்டதாகவும் ... மார்க்ஸிற்கு இடமில்லாத ஒருவித பொருளாதார கோட்பாட்டை நான் கற்று கொடுக்க கூடுமென்றும்" அவர் விவரிக்கிறார்.

"ஒரு மீண்டெழுந்த வலதுசாரி அதிகாரத்திற்கு திரும்புவதைத் தடுக்க உதவும் என்ற நம்பிக்கையில், பின்னர் பதவிக்கு வரவிருந்த பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவிற்கு" ஓர் ஆலோசகராக, 2000இல், அவர் கிரீஸின் அரசியல் அரங்கில் முதன்முதலில் அடியெடுத்து வைத்தார்.

அதற்கு பதிலாக அவர் இவ்வாறு ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டார், “இப்போது ஒட்டுமொத்த உலகிற்கும் தெரிந்த விதத்தில், பாப்பாண்ட்ரூவின் கட்சி வெளிநாட்டினர் விரோதத்தைத் தடுப்பதில் மட்டும் தோல்வியடையவில்லை, மாறாக, இறுதியில், யூரோ மண்டலத்தின் பிணையெடுப்புகள் என்றழைக்கப்பட்டதை மிகவும் வீரியத்துடன் முன்னெடுத்த நவதாராளவாத முழுப்பொருளாதார (macroeconomic) கொள்கைகள் மீதும் தங்கியிருந்தார். அவ்விதத்தில், அவரை அறியாமலேயே, ஏதென்ஸ் வீதிகளில் நாஜிகளின் மீள்வரவை ஏற்படுத்தினார்,” என்றார்.

இந்த முடிவிற்கு வர வாரௌஃபாகிஸிற்கு ஆறு ஆண்டுகள் எடுத்தது. அதற்கு பின்னரும் கூட, 2006இல் பாப்பாண்ட்ரூ உடன் இறுதியில் முறித்துக் கொண்ட பின்னர், “கிரீஸ் மற்றும் ஐரோப்பா மீதான விவாதத்தில் [எனது] பொதுவான தலையீடுகளில் மார்க்சிசத்தின் எவ்வித அடையாளம் கூட இருக்கவில்லை.”

இருந்தபோதினும், “நாம் வாழும் இந்த உலகைக் குறித்த எனது முன்னோக்கை வடிவமைத்ததற்கு கார்ல் மார்க்ஸ் தான் பொறுப்பாவார்,” என்றவர் வலியுறுத்துகிறார்.

"நான் வளர்ந்து வந்த விசித்திரமான காலங்களின்" தாக்கத்துடன் சேர்ந்து, கிரீஸில் நிலவிய 1967-74இன் நவ-பாசிசவாத சர்வாதிகாரத்தின் பெருங்கவலைகளோடு", வாரௌஃபாகிஸ் இதை அவரது "உலோகவியல் தந்தையின்" (metallurgist father) மேலாளுமை மீது சாட்டுகிறார்.

1946-49 உள்நாட்டு போரில் எழுச்சியாளர்களுடன் இணைந்து சண்டையிட்டு வந்த அவரது தந்தை கிரேக்கர்களின் சிறைக்கூட தீவு முகாமில் சில காலம் கழித்திருந்தார் என்றபோதினும் கூட, ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி ஆற்றிய பாத்திரம் உட்பட, அத்தகைய துன்பியலான சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்த அரசியல் சக்திகளைப் பற்றிய எந்தவொரு புரிதலைக் குறித்தும் வாரௌஃபாகிஸ் எந்நேரத்திலும் வெளிக்காட்டவில்லை. அவரது அன்னையுமே கூட PASOK உறுப்பினர்களால் ஸ்தாபிக்கப்பட்ட கிரீஸின் பெண்கள் சங்கத்தில் ஒரு பெண்ணிய நடவடிக்கையாளராக இருந்தார்.

அவரது அரசியல் கண்ணோட்டம், PASOKஐ சுற்றியிருந்த "இடது" வட்டாரத்தின் கண்ணோட்டத்திற்குப் பொதுவாக இருந்தது. அக்கட்சியின் தலைவர் ஆண்ட்ரீஸ் பாப்பாண்ட்ரூவைச் சந்தித்த பின்னர் பொருளாதாரம் மீதான ஆய்வில் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது கண்ணோட்டங்களின் இன்றியமையாத இணக்கவாதத்தைப் (conformism) பொறுத்த வரையில், “அவற்றின் [அந்த இயக்கங்களின்] தொடர்ச்சியான அறைகூவல்கள் மற்றும் ஒழுங்கமைக்கும் கருத்துருக்கள் சுதந்திரம் மற்றும் பகுத்தறிவைத் தழுவுவதற்கு பதிலாக சமத்துவம் மற்றும் நீதியை ஏற்றன ...” என்பதும் மார்க்சிசம் மீதான அவரது பல்வேறு விமர்சனங்களில் ஒன்றாக இருந்ததை ஒருவர் பார்க்கலாம். [அழுத்தம் சேர்க்கப்பட்டது]

ஓர் "ஒழுங்குமுறையற்ற மார்க்சிஸ்டாக" இருந்து வருவதாக வாரௌஃபாகிஸின் வாதங்கள், வேறொரு இடத்தில் என்றால் பெரிதும் நீளமாக கையாளப்பட்டிருக்கும். தத்துவார்த்தரீதியில் குழப்பப்பட்ட அவரது விபரங்கள், இருத்தலியல்வாத கருத்துவாதத்துடன் (existentialist idealism) வியாபித்த, பின்நவீனத்துவ பட்டகம் மூலமாக சிதறிய வார்த்தைகளில் மார்க்சிசத்தை சித்தரிக்கிறது என்று கூறுவதே போதுமானதாக இருக்கும். சான்றாக, “மனிதயின வரலாற்றைக் குறித்து, உண்மையில் மனிதயினத்தின் மீளா-நரகத்தைக் குறித்த ஒரு நாடகபாணியிலான கதையே, அதுவும் இரட்சிப்பு மற்றும் உண்மையான ஆன்மீகத்துடன் இணைக்கப்பட்டிருந்த நிலையில், மார்க்ஸின் வசீகரிக்கும் அன்பளிப்பு" என்று அவர் பேசுகிறார்.

வாரௌஃபாகிஸை பொறுத்த வரையில், முதலாளித்துவ உற்பத்தி முறையின் புறநிலை இயக்கத்தை ஆளும் நிஜமான விதிகளை மார்க்ஸ் கண்டுபிடிக்கவில்லை. அதற்கு மாறாக, “மார்க்ஸ், வரலாற்றில் நாடக கதாபாத்திரங்களாக விளங்கிய தொழிலாளர்கள், முதலாளித்துவவாதிகள், அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகளால் பிரபலப்பட்ட ஒரு சொல்லாடலை உருவாக்கினார்,” என்பதாக உள்ளது.

தாட்சரிசம் வெற்றி கொள்கிறது என்பது மட்டுமல்ல, அது நம்பிக்கைகொள்ள செய்திருக்கிறது

1978இல் இருந்து எசெக்ஸ் (Essex) பல்கலைக்கழகத்தில் பயின்ற வாரௌஃபாகிஸ், பின்னர் இங்கிலாந்தில் அவரது கல்வித்துறை தொழில்வாழ்வைத் தொடங்கினார். “தாட்சரின் படிப்பினைகள்" என்ற தலைப்பின் கீழ், அவர் 1980களின் அவரது அனுபவங்களை உயிரோட்டத்துடன் வர்ணிக்கிறார்:

முற்போக்கான அரசியலுக்குக் குழிபறிக்கும் ஒரு நீண்டகால மந்தநிலைமையின் தகைமை குறித்து தாட்சர் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம், இன்றைய ஐரோப்பிய நெருக்கடிக்குள் நான் என்னுடன் கொண்டு செல்வனவற்றில் ஒன்றாக உள்ளது. உண்மையில் இந்த நெருக்கடி தொடர்பான என்னுடைய நிலைப்பாட்டில் மிகவும் முக்கிய தீர்மானிக்கும் காரணியாக அது உள்ளது. அந்த காரணத்தால் தான் ஐரோப்பிய முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதற்கும், படுமோசமான யூரோ மண்டலத்தை கலைப்பதற்கும், பெருந்தொழிலிணைப்புகள் மற்றும் திவாலான வங்கிகளினது இந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு குழி பறிப்பதற்கும் இந்த நெருக்கடியை ஒரு சந்தர்ப்பமாக சுரண்ட முனையும் தீவிர அரசியல் திட்டங்களை நான் முன்மொழியவில்லை என்ற பாவத்திற்காக, என்மீது இடதிலிருந்து சில விமர்சகர்கள் குற்றஞ்சாட்டுகையில், அந்த பாவத்தை என்னால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள முடிகிறது.

அவரது பிரிட்டன் அனுபவங்களைக் குறித்து பேசுகையில், “முற்போக்கான அரசியலுக்குப் புத்துயிரூட்ட அவசியமான சிறிய கூர்மையான அதிர்ச்சியைப் பிரிட்டனின் உழைக்கும் வர்க்கங்களுக்கும் மற்றும் மத்தியதர வர்க்கங்களுக்கும் வழங்கி; ஒரு ஆக்கபூர்வமான, முற்போக்கான அரசியலின் ஒரு புதிய வகையான ஒரு புத்துயிரூட்டப்பட்ட, தீவிர நிகழ்ச்சிநிரலை உருவாக்க இடதிற்கு ஒரு வாய்ப்பை வழங்கியதால், தாட்சரின் வெற்றி ஒரு நல்ல விடயமாகும்" என்று ஆரம்பத்தில் கருதியதாக வாரௌஃபாகிஸ் வர்ணிக்கிறார்.

உண்மையில், “வாழ்க்கை துர்நாற்றமெடுத்து, மிகவும் கொடுமையாகி, பலரைப் பொறுத்த வரையில், ஆயுள் குறைந்து போயுள்ள நிலையில், நான் துயரகரமாக பிழையாகி போனேனோ என்று எனக்கு தோன்றியது: அதாவது, ஒருபோதும் சிறப்படையாமல், விடயங்கள் முடிவில்லாமல் மோசமடையுமோ என்று எனக்கு தோன்றியது.”

அவர் தொடர்ந்து கூறுகிறார், "இடது மிகவும் உள்முகசிந்தனையாக, ஓர் உடன்படத்தக்க முற்போக்கான நிகழ்ச்சிநிரலை உருவாக்குவதில் குறைந்தளவே தகைமை கொண்ட விதத்தில் மற்றும், இதற்கிடையே, தொழிலாள வர்க்கமோ சமூகத்தால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் நவதாராளவாத மனோபாவத்தை உடன்-ஏற்றுக்கொண்டவர்களுக்கு இடையே பிளவுபட்டுவரும் நிலையில், மாறிவிட்டது" என்கிறார்.

அதன் விளைவாக தாட்சரிசம் "தீவிரமான, முற்போக்கு அரசியலின் சாத்தியக்கூறையே" —அதுவும் வெறுமே பிரிட்டனில் மட்டுமின்றி"நிரந்தரமாக அழித்துவிட்டது" என்று வலியுறுத்துகிறார்.

தாட்சரின் நவதாராளவாத பொறிக்குள் கண்மூடித்தனமாக வீழ்ந்தபோது, பிரிட்டிஷ் சமூகத்தை வெறுத்தொதுக்கிய அந்த சோசலிச மாற்றத்திற்கான ஒரு நிகழ்ச்சிநிரலை, 1980களின் தொடக்கத்தில் ஊக்குவித்ததன் மூலமாக பிரிட்டனில் நாம் என்ன நல்லதை சாதித்திருக்கிறோம்? துல்லியமாக ஒன்றையும் அல்ல. ஐரோப்பிய முதலாளித்துவமானது யூரோ மண்டலத்திற்கு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கே, உண்மையில் அதற்கு அதுவே கூட அதனால் ஆனமட்டும் குழிபறித்துக் கொண்டு வருகின்ற போது, யூரோ மண்டலத்தையோ, ஐரோப்பிய ஒன்றியத்தையோ கூட, கலைப்பதற்கு அழைப்பு விடுப்பதனால் இன்று என்ன நல்லது நடந்துவிடும்?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

இந்த அனுபவங்களிலிருந்து அவர், “இடது" தோல்வியடைந்துள்ள நிலையில், ஐரோப்பிய மற்றும் உலக முதலாளித்துவத்தின் தற்போதைய நெருக்கடியிலிருந்து வரும் ஒரே சாத்தியமான விளைவுபொருள் பாசிச பிற்போக்குத்தனமாகும். இதை தடுப்பதென்றால், "ஒழுங்குமுறையற்ற மார்க்சிஸ்டுகளான நாம், அதற்கு பொருத்தமாக, ஐரோப்பிய முதலாளித்துவத்தை, அது உள்ளவாறே, காப்பாற்ற முயல வேண்டும் என்பது முக்கியமாகும்,” என்று முடிக்கிறார்.

ஐரோப்பிய மேற்தட்டுக்கள் "அவர்கள் தலைமை தாங்கிய நெருக்கடியின் இயல்பைக் குறித்தோ, அல்லது ஐரோப்பிய நாகரீகத்தின் எதிர்காலத்தின் மீது அதன் பாதிப்புகளைக் குறித்தோ புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்காக அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்" என்ற நிலையில் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஒரு பொறிவானது ஒரு செயல்படக்கூடிய சோசலிச அமைப்புமுறைக்காக வழியைத் திறந்து விட்டாலும், அந்த இடத்தை அடைப்பதற்கு இடது ஆயத்தமாக இல்லை என்பதை அது ஒப்புக்கொண்டாக வேண்டும்,” என்கிறார்.

வரலாற்றுத்தன்மை இழந்த ஒரு கணக்கெடுப்பு

வாரௌஃபாகிஸின் முற்றிலும் குழப்பமான கண்ணோட்டமானது, ஒட்டுமொத்த சோசலிச திட்டத்திற்கும் சவக்குழி வெட்டுவோராக இருந்த உலக-வரலாற்று பாத்திரம் வகித்த Grantham இல் இருந்து grocer இன் மகள் வரையில் அனைவரையும் ஏற்கிறது. அது வரலாற்றுத்தன்மை இழந்த மற்றும் அரசியல் எதார்த்தத்தை தலைகீழாக நிறுத்தும் ஒரு நிலைப்பாடாகும்.

அவர் 1968 மற்றும் 1975க்கு இடையிலான காலகட்டத்தில் உலகளாவிய அளவில் கட்டவிழ்ந்த அதிமுக்கிய மற்றும் ஆழ்ந்த புரட்சிகர போராட்டங்களின் காலகட்டத்தை முற்றிலுமாக உதறிவிடுகிறார். அது பிரான்சில் மே-ஜூன் 1968 பொது வேலை நிறுத்தத்துடன் தொடங்கியது. சிலியில் 1973 இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதி, ஏப்ரல் 1974இல் போர்ச்சுகலில் பாசிச சர்வாதிகாரத்தின் வீழ்ச்சி, அதைத் தொடர்ந்து ஜூலையில் கிரேக்க இராணுவ ஆட்சிக்குழுவின் வீழ்ச்சி, நிக்சன் நிர்வாகத்தின் பொறிவு மற்றும் வியட்நாமில் அமெரிக்க தோல்வி ஆகியவையும் அதில் உள்ளடங்கும். இங்கிலாந்தில் சுரங்க தொழிலாளர்களின் தலைமையில் நடந்த ஒரு பாரிய வேலைநிறுத்தம் அதே ஆண்டு பெப்ரவரியில் எட்வார்ட் ஹீத்தின் பழமைவாத அரசாங்கத்தை பதவியிலிருந்து இறக்கியது.

பல மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்ட பாரிய இயக்கங்கள், ஒரு புரட்சிகர மாற்றத்திற்குரியதாக மாறுவதிலிருந்து ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக கட்சிகளால் முதலாளித்துவத்திடம் காட்டிக்கொடுக்கப்பட்டு, தடுக்கப்பட்டன. அனைத்திற்கும் மேலாக, இத்தகைய காட்டிக்கொடுப்புகளுக்கு ஓர் அரசியல் சவாலை நிலைநிறுத்த தொழிலாள வர்க்கத்தின் ஆற்றலின்மையில் இருந்த ஓர் முக்கிய காரணி என்னவென்றால், அத்தகைய ஒழுங்கமைப்புகளிலிருந்து அவசியமாக உடைத்துக் கொள்வதை எதிர்ப்பதில் பல்வேறு பப்லோவாத மற்றும் அரசு முதலாளித்துவ போக்குகள் வகித்த பாத்திரமாகும்.

இத்தகைய தோல்விகளுக்குப் பின்னர் தான், தாட்சர் மற்றும் ரீகனுடன் தொடர்புபட்ட வினியோக முறை பொருளாதாரத்தின் பிச்சைக்கார வேசித்தனத்துடன் அரசியல்ரீதியில் நெறிப்பட்டிருந்த ஓர் எதிர்-தாக்குதலை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக முதலாளித்துவ வர்க்கத்தால் தொடங்க முடிந்தது. அதற்குப் பின்னரும் கூட, 1984-85 சுரங்க தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் எடுத்துக்காட்டப்பட்டதை போல, ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது தோல்விகளை திணிக்க தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்தைத் தொடர்ந்து சார்ந்திருந்தது.

ஒரு சமூக மாற்ற நிகழ்ச்சிநிரலை" அவர்கள் ஊக்குவித்ததன் மூலமாக என்ன நன்மையை அடைந்தார்கள் என்று அவர் கேட்கும் போது, வாரௌஃபாகிஸ் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்கங்களை, அவையே வேகமாக வலதிற்கு திரும்பி வருகின்ற நிலையில், அவற்றை சுற்றி ஈர்க்கப்பட்டுள்ள குட்டி-முதலாளித்துவ குழுக்களின் ஒரு முன்னணியாளராக நிற்கிறார். இந்த சகாப்தத்தில் தான், சிரிசா எதிலிருந்து பின்னர் உதயமானதோ, அந்த கம்யூனிஸ்ட் கட்சியின் யூரோ-கம்யூனிஸ்ட் பிரிவின் அவரது சக-சிந்தனையாளர்கள், தாட்சரிசத்தை அனைத்தையும் வெற்றிகொள்ளும் தீவிர சக்தியாகவும் மற்றும் ஆதாரமாகவும் பிரகடனப்படுத்தினர் மற்றும், தொழிலாளர் வர்க்கம் இனி சமூக மாற்றத்திற்கான ஒரு நிகழ்ச்சிநிரலில் பிரதிநிதித்துவம் செய்யாது என்றும் பிரகடனப்படுத்தி வந்தனர்.

தொழிலாள வர்க்கம் "வெளியேறி விட்டது" அல்லது "நவ-தாராளவாத சிந்தனையை உடன்-ஏற்றுக் கொண்டு விட்டதாக" வாரௌஃபாகிஸ் குற்றஞ்சாட்டுகையில், அவர் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் காட்டிக்கொடுப்புக்கு அரசியல் அனுதாபத்தை எதிரொலிக்கிறார்.

ஐரோப்பிய முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து "கோல்டன் டௌன் நாஜிக்கள், அந்த வகைப்பட்ட நவபாசிசவாதிகள், வெளிநாட்டவர் மீதான விரோத போக்குகினர் மற்றும் மோசடியாளர்கள்" மட்டுந்தான் ஆதாயமடைய முடியும் என்று அவர் வலியுறுத்துகையில், உண்மையில் அவர் சோசலிசத்திற்கான எந்தவொரு சாத்தியக்கூறையும் மறுத்தளிக்கிறார். உலகளாவிய முதலாளித்துவத்தின் முறைப்பட்ட நெருக்கடியானது அதை புரட்சிகரமாக தூக்கியெறிய வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்தவில்லை என்றால், பின்னர் ஒருபோதும் அது நடக்காது. இவ்விதத்தில் அவர் கூறும் காரணமே, ஆளும் வர்க்கத்திற்கான அரசியல்ரீதியில் நம்பிக்கையற்ற ஒரு முறையீடாக மாறிவிடுவதுடன், ஒரு சமூக வெடிப்பிற்கு இட்டுச் செல்லும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக பெரும் பணக்காரர்கள், ஒரு பயங்கரமான தவறை இழைத்து வருகிறார்கள் என்று அவர்களை உடன்படச் செய்ய முனைகிறார்.

என்ன விலை கொடுத்தாவது சிரிசா முதலாளித்துவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான் அவரது அணுகுமுறையில் இருக்கும் அரசியல் தர்க்கமாகும். ஆகவே விபரம் அறியாத தொழிலாளர்களையும், அல்லது, அதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நிரலை எதிர்த்து இடதிலிருந்து "பிரிந்து வருபவர்களையும்" மற்றும் புரட்சிக்காக வாதிடுகின்றவர்களையும் அவர் எவ்வாறு அணுகுவார்? அவர்கள் எதிர்க்கப்படுவார்கள், அவசியமானால், ஒடுக்கப்படுவார்கள்.

ஒரு சமூக வகையாக வாரௌஃபாகிஸ்

வாரௌஃபாகிஸ் "இறுதியாக பாவத்தை ஏற்றுக் கொள்வதாக" கூறி அவரது நீண்ட விளக்க உரையை முடிக்கிறார். அது ஒட்டுமொத்த போலி-இடதின் அரசியலுக்குப் பின்னாலிருக்கும் சமூக தூண்டுதலை வெளிப்படுத்துவதால், அதை மீண்டும் எடுத்துக்காட்டுவது மதிப்புடையதாக இருக்கும்.

சாந்தமான சமூக வட்டாரங்களுக்கு உடன்பட்டு இருப்பதன் மூலமாக ஒரு திருப்திகரமான உணர்வைப் பெறுவதாக" அவர் எழுதுகிறார். “… உயர்தரமான பலம் வாய்ந்தவர்களால் உபசரிக்கப்படுவதிலிருந்து கிடைக்கும் சுய-திருப்தி உணர்வு, சில சமயங்களில், என் மீது தவழ தொடங்கி இருந்தது.…” என்கிறார்.

எனது தனிப்பட்ட தாழ்ந்த நிலைமை ஓர் விமான நிலையத்தில் வெளிப்பட்டது. சில பணமுள்ள அமைப்பு ஐரோப்பிய நெருக்கடி குறித்து ஒரு முக்கிய உரை நிகழ்த்த எனக்கு அழைப்பு கொடுத்திருந்தது. அத்துடன் ஒரு முதல் வகுப்பு பயணச்சீட்டு வாங்குவதற்கு அவசியமான பரிகசிக்கத்தக்க தொகையை வழங்கி இருந்தது. வீட்டிற்கு திரும்புகையில், மிகவும் களைத்து போன நிலையில், பல விமானங்கள் எனக்கிருந்த போதும், நான் விமானத்தில் ஏற சாதாரண கட்டண பயணிகளின் நீண்ட வரிசையில் கடந்து சென்று கொண்டிருந்தேன். சாமானிய மக்களாக இருப்பவர்களை கடந்து செல்ல தகுதியுடையவன் என்ற உணர்வு என் சிந்தனையுள் பரவுவது எவ்வளவு சுலபமாக உள்ளது என்பதை திடீரென்று நான் அதிர்ச்சிகரமாக கவனித்தேன்.

வலதுசாரி தேசியவாத சுதந்திர கிரேக்கர் கட்சியுடன் தற்போது கூட்டணியில் உள்ளதும், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கும் மற்றும் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அதன் முறையீடுகளை வழங்குவதுமான ஒரு கட்சிக்காக பேசுகையில், “ஐரோப்பாவை இன்று ஸ்திரப்படுத்த வேண்டுமென நான் நினைக்கின்ற நிலையில், பிற்போக்குத்தனமான சக்திகளுடன் கூட்டணி அமைப்பதை இசைந்து ஏற்றுக்கொள்ள வேண்டிய அபாயத்திற்கும், அதிகாரத்தின் வாசலைப் பகட்டுடன் 'எட்டுவதன்' மூலமாக நமது தீவிரவாதத்தன்மையைக் கைத்துறக்கும் அபாயத்திற்கும் முன்னால் நம்மை அது கொண்டு வருகிறது, ...” [அழுத்தம் சேர்க்கப்பட்டது]

தன்னைத்தானே அம்பலப்படுத்தும் வகையிலான இந்த அறிக்கையில் அனைத்து விருப்பங்களும் தெளிவாகியுள்ளன. ஆனால் வாரௌஃபாகிஸ் அவரது சொந்த போக்கை மட்டும் சித்தரிக்கவில்லை, மாறாக ஒரு பரந்த சமூக அடுக்கையே சித்தரிக்கிறார். உண்மையில் சிரிசா தான் அதிகாரத்தின் வாசலை "எட்டியுள்ளது", ஆனால் அதேபோன்ற அரசியல் அமைப்புகள் அவர்களின் வெற்றியை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்பதற்கு அதிகமாக அது வேறொன்றையும் விரும்பவில்லை.

அங்கே வாரௌஃபாகிஸின் வாழ்க்கை வரலாறு குறித்து குறிப்பிடுவதற்கு குறிப்பாக ஒன்றுமில்லை. அவருக்கு சமாந்திரமானவர்களை ஜேர்மனியின் இடது கட்சியிலும், பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியிலும், அமெரிக்காவின் சர்வதேச சோசலிச அமைப்பிலும் மற்றும் இங்கிலாந்தின் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியிலும் காண முடியும். அதுபோன்ற கட்சிகள் செல்வாக்கு மிகுந்த உயர்மட்ட மத்தியதட்டு வர்க்கத்தின் நலன்களில் வேரூன்றியுள்ளதுடன் மற்றும் அந்த வர்க்கத்தின் நலன்களை வெளிப்படுத்தும் ஒரு தீர்க்கமான சமூக போக்கை எடுத்துக்காட்டுகின்றன. அந்த வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு சார்பாக அவை செய்யும் அரசியல் சேவைகளுக்கு பிரதி உபகாரமாக, உயர்மட்டத்தில் ஐந்திலிருந்து-பத்தி சதவீதத்திற்குள் செல்வவளத்தை இன்னும் அதிக சாதகமாக பகிர்ந்தளிக்க வேண்டுமென்பதற்கு கூடுதலாக வேறொன்றையும் விரும்பவில்லை.

அவர்களுக்கு தான் வாரௌஃபாகிஸ் அவரது இறுதி அறிவுரை துணுக்கை வழங்குகிறார்:

இறுதியாக நவதாராளவாதிகளுக்கு உதவுகின்ற, புரட்சிகர சமரசத்திற்கிடங்கொடாத தீவிரத்தை தவிர்ப்பதற்குரிய நுட்பம் என்னவென்றால், மூலோபாய நோக்கங்களுங்களுடன், முதலாளித்துவத்தைக் கொண்டே அதை பாதுகாக்க முயன்று கொண்டே, தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்ளும் அவர்களின் கொள்கைகளுக்கான அனைத்து எதிர்ப்பையும், அதேநேரத்தில் நமது பார்வையில் தெரியும் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த தோல்விகளுக்கு எதிரான எதிர்ப்பையும் அப்புறப்படுத்துவதாகும்.