சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US economy in deflation and slump

மந்தநிலை மற்றும் பணச்சுருக்கத்தில் அமெரிக்க பொருளாதாரம்

By Andre Damon
28 February 2015

Use this version to printSend feedback

பொருளாதார வெளியீட்டின் பரந்த முறைமையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் வெறும் 2.2 சதவீதம் மட்டுமே அதிகரித்திருப்பதாக அமெரிக்க வர்த்தகத்துறை வெள்ளியன்று அறிவித்தது. அது முந்தைய காலாண்டிலிருந்து ஒரு கூர்மையான வீழ்ச்சி என்பதுடன், முன்னர் மதிப்பிடப்பட்ட 2.6 சதவீதத்திற்கும் குறைவாகும்.

இதற்கு முன்னதாக வியாழனன்று, நுகர்வு விலை 0.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததாக தொழிலாளர் துறையால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது டிசம்பர் 2008க்குப் பிந்தைய மிகப்பெரிய சரிவாகும். கடந்த 12 மாதங்களில், விலைகள் 0.1 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன. இது அக்டோபர் 2009க்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட முதல் ஆண்டு பணச்சுருக்க புள்ளிவிபரமாகும்.

தற்போது உலகின் பெரும்பான்மையைச் சுற்றி வளைத்துள்ள மொத்த மந்தநிலை மற்றும் பணச்சுருக்கத்திற்கு, அமெரிக்கா பொருளாதாரரீதியில் பலமான எதிர்பலமாக உள்ளது என்ற உத்தியோகபூர்வ வாதங்களை இந்த புள்ளிவிபரங்கள் பொய்யாக்குகின்றன. உண்மையில், நிதியியல் நெருக்கடியைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி தொழிலாள வர்க்கத்தை பாரியளவில் வறுமையில் தள்ளியது. அது முந்தைய வரலாற்று சராசரிகளையும் விட மிகவும் குறைவாக உள்ளது.

வீட்டு விலைகள் கடந்த ஆண்டில் 4.6 சதவீதம் அதிகரித்ததை அதன் Case-Shiller குறியீடு எடுத்துக்காட்டியதாக செவ்வாயன்று ஸ்டாண்டர்ட் & புவர்ஸ் தெரிவித்தது. இது 2011க்கு பின்னர் வீட்டு விலைகளில் ஏற்பட்ட மிக குறைவான உயர்வாகும். எஸ்&பி டோவ் ஜோன்ஸ் குறியீடு கமிட்டி தலைவர் டேவிட் பிலிட்ஜெர் லோஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸிற்குக் கூறுகையில், “வீட்டுத்துறை மீட்சி தள்ளாடிக் கொண்டிருக்கிறது,” என்றார். “அந்த பின்னடைவுக்கு முன்னதாக, வீட்டு விலைகளின் தொடக்கங்கள் எப்போதுமே இப்போதைய மட்டத்தில் இருந்தனபொருளாதாரம் ஒரு பின்னடைவில் உள்ளது,” என்றார்.

இதற்கிடையே அமெரிக்காவில் வேலையின்மை உதவிகளைப் பெற புதிதாக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 31,000 ஆக அதிகரித்து 313,000க்கு தாவியது. இது, இந்த மாதம் அறிவிக்கப்பட்ட தொடர்ச்சியான பாரிய வேலைநீக்கங்கள் மற்றும் ஆலைமூடல்களைப் பிரதிபலிப்பதுடன், டிசம்பர் 2013க்குப் பிந்தைய மிகப்பெரிய உயர்வாகும்.

பெப்ரவரி 4இல், அலுவலக பொருட்கள் விற்பனையாளர் Staples அதன் போட்டி நிறுவனமான Office Depot வாங்கும் திட்டங்களை அறிவித்தது. அதன் விளைவாக ஆயிரம் கடைகள் வரையில் மூடப்படலாம், பத்து ஆயிரக் கணக்கானவர்கள் வேலை இழக்கக்கூடும். அதற்கடுத்த நாள், மின்னணு பொருட்கள் விற்பனை நிறுவனம் RadioShack திவால்நிலையை தாக்கல் செய்தது. அது 3,500 கடைகள் வரையில் மூட திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தது.

இணையவழி விற்பனையகம் eBay, கடன் அட்டை நிறுவனம் American Express, எண்ணெய்துறை சேவை நிறுவனங்கள் Schlumberger மற்றும் Baker Hughes, அத்துடன் சில்லறை விற்பனையகங்கள் J.C. Penney மற்றும் Macy’s ஆகியவையும் பாரிய வேலைநீக்கங்களை அறிவித்துள்ளன.

இத்தகைய பயங்கரமான பொருளாதார அபிவிருத்திகள், டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி இவ்வார இறுதியில் சற்றே பின்வாங்கி இருந்தபோதினும், புதனன்று எல்லா-காலத்திற்குமான சாதனையளவாக 18,140 எட்டியது. உலகளாவிய அனைத்துலக குறியீடு FTSE வரலாற்றிலேயே அதன் உயர்மட்டத்திற்கு அருகில் உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கன முறைமைகளை திணிக்க சிரிசா-தலைமையிலான அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி, அத்துடன் சமீபத்திய எதிர்மறை பொருளாதார புள்ளிவிபரங்களுக்கு விடையிறுப்பாக பெடரல் நிதி விகிதங்களை அனேகமாக அமெரிக்க மத்திய வங்கி உயர்த்துவதைத் தாமதிக்கும் என்று காங்கிரஸிற்கு வழங்கிய உரையில் பெடரல் ரிசர்வ் தலைவி ஜெனெட் யெலென் காட்டிய அறிகுறிகள் ஆகியவற்றுடன் உலகாளவிய நிதியியல் சந்தைகளின் மனத்திருப்தி உலகளாவிய பங்குச்சந்தை குறியீடுகளில் பெரிதும் பிரதிபலிக்கிறது.

அமெரிக்க பெடரல் நிதி விகிதம் 2009 இன் தொடக்கத்திலிருந்து முக்கியமாக பூஜ்ஜிய அளவிற்கு வைக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் பல ட்ரில்லியன் டாலர் "பணம் அச்சடிக்கும்" (QE) திட்டத்துடன் சேர்ந்து, 2009க்கு பின்னர் NASDAQ இன் மதிப்பை மூன்று மடங்கிற்கு கொண்டு சென்றுள்ள ஒரு பாரிய பங்குச் சந்தை குமிழியை இது ஊதிப்பெருக்க செய்ய உதவியுள்ளது.

அமெரிக்க பொருளாதாரம் ஒப்பீட்டளவில் அழுத்தப்பட்ட நிலையில் இருந்ததற்கு இடையிலும், சொத்து மதிப்புகளில் இந்த பெரும் வளர்ச்சி நடந்துள்ளது. 2014இல் அது 2.4 சதவீத ஆண்டு விகிதத்தில் தான் வளர்ந்திருந்தது. 2010க்குப் பின்னர் ஒட்டுமொத்த பொருளாதார "மீட்சியின்" போது, அமெரிக்க பொருளாதாரம் சராசரியாக 2.2 சதவீத விகிதத்தில் வளர்ந்துள்ளது. ஒப்பீட்டின்படி, அமெரிக்க பொருளாதாரம் 1990களில் 3.2 சதவீத சராசரி விகிதத்திலும், 1950களில் 4.2 சதவீதத்திலும் வளர்ந்திருந்தது.

தொடர்ந்து கொண்டிருக்கும் பங்குச்சந்தை குமிழி நிதியியல் மேற்தட்டின் ஒரு பரந்த செழிப்புக்கு இட்டுச் சென்றுள்ளது: அமெரிக்காவில் உள்ள பில்லியனர்களின் எண்ணிக்கை 2009க்கு பின்னர் அண்மித்தளவில் இரட்டிப்பாகி உள்ளது. ஆனால் கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் வணிகச் செலவுகள் எடுத்துக்காட்டுவதைப் போல, நிதியியல் செல்வந்த தட்டு அதன் முன்னொருபோதும் இல்லாத செல்வவள அதிகரிப்பை உற்பத்தி முதலீட்டிற்குப் பயன்படுத்தவில்லை. அதற்கு மாறாக, அது அதை பதுக்கிக் கொண்டது அல்லது நிலம்/வீடு வாங்குவதில், கலை மற்றும் ஆடம்பர பண்டங்களில் செலவிட பயன்படுத்தி உள்ளது.

மிக உயர் விலை" வாகனங்களின், அதாவது 100,000 டாலர் அல்லது அதற்கு கூடுதல் மதிப்பில் உள்ள வாகனங்களின் உலகளாவிய விற்பனைகள் ஒட்டுமொத்த உலகளாவிய வாகனங்களின் 36 சதவீத விற்பனை உயர்வுடன் ஒப்பிடுகையில் 154 சதவீதம் உயர்ந்திருந்ததாக வியாழனன்று புளூம்பேர்க் அறிவித்தது. “Rolls-Royce பதிவுகள் ஏறத்தாழ ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏறத்தாழ 10,000 புதிய Bentleys சொகுசு வாகனங்கள் வீதிகளில் இறங்கின. இது 2009 விட 122 சதவீத உயர்வாகும். அதேவேளையில் Lamborghini 2,000 வாகன இலக்கை கடந்து 50 சதவீத உயர்வில் ஓடியது" என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இதற்கிடையே அமெரிக்காவில் வறுமையில் உள்ள மக்களின் எண்ணிக்கையோ சாதனை மட்டங்களில் நிலவுகிறது. குறைந்தபட்சம் ஓர் அரை நூற்றாண்டில் முதல்முறையாக, அமெரிக்க அரசு பள்ளிகளில் பெரும்பான்மை குழந்தைகள் குறைந்த வருவாய் குழந்தைகளாக இருந்ததாக ஜனவரியில் Southern Education Foundation அறிக்கை வெளியிட்டது.

அமெரிக்காவில் வேலைகள் எவ்விதத்தில் உருவாக்கப்பட்டு வருகிறதென்றால், அவற்றில் பெரும்பாலானவை 2008 நெருக்கடியின் போது நீக்கப்பட்ட உயர்ந்த-ஊதிய வேலைகளைப் பிரதியீடு செய்த, பகுதி-நேர, உறுதியற்ற, குறைந்த-ஊதிய வேலைகளாகும். 2009க்கு பின்னர் அமெரிக்க நிறுவனங்கள் 1.85 மில்லியன் குறைந்த-ஊதிய வேலைகளைச் சேர்த்திருக்கின்ற அதேவேளையில், அவை 1.83 மில்லியன் மத்திய-ஊதிய மற்றும் உயர்-ஊதிய வேலைகளை நீக்கி இருப்பதாக தேசிய வேலைவாய்ப்பு சட்ட செயல்திட்டத்தால் கடந்த ஆண்டு பிரசுரிக்கப்பட்ட ஓர் அறிக்கை கண்டறிந்தது.

அமெரிக்க வேலைவாய்ப்பு விகிதம் "வழக்கமான" மட்டங்களுக்கு திரும்பி உள்ளன என்ற வாதங்களை, Gallup கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் தலைவர் ஜிம் க்ளிஃப்டன் இந்த மாதத்தின் தொடக்கத்தில் கண்டித்தார். “நீண்டகால பாதிப்புகள் மற்றும் பெரும்பாலும் நிரந்தர வேலைவாய்ப்பின்மை, அத்துடன் மனச்சோர்வளிக்கும் தகுதி குறைந்த வேலைகளை இரக்கமின்றி பாராமுகமாக விட்டுவிடுகின்ற இந்த உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பு விகிதம், ஒரு மிகப் பெரிய பொய்யாகும்என்று எழுதிய அவர், “இதை கூறுவதற்கு வேறு வார்த்தைகளே இல்லை,” என்றார்.

ஒரு நிலையான சம்பளத்தை வழங்கும் நிறுவனத்தில் வாரத்திற்கு 30+ மணி வேலை நேரம் கொண்டதையே Gallup நல்ல வேலை என்று வரையறுக்கிறது. இப்போதோ, அமெரிக்கா மலைப்பூட்டும் அளவிற்கு 44% என்ற குறைந்த விகிதத்தில் வழங்கி வருகிறது. இந்த சதவீதம் தான் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் முழுநேர வேலைகளைக் கொண்டவர்களின் எண்ணிக்கையாகும்.”

“'வேலைவாய்ப்பின்மை பெரிதும் குறைந்துள்ளது, ஆனால் மக்கள் அதை உணரவில்லை' என்பதை எல்லா நேரத்திலும் நான் செவியுறுகிறேன்" என்பதையும் க்ளிஃப்டன் தொடர்ந்து சேர்த்துக் கொண்டார். "ஊடகங்கள், வாய்சவடால் பேசும் பிரபலங்கள், வெள்ளை மாளிகை மற்றும் வோல் ஸ்ட்ரீட் உண்மையைஅதாவது நல்ல வேலையில் இருக்கும் அமெரிக்கர்களின் சதவீதம்; நிஜமான மற்றும் முழு நேர வேலைகளைக் குறித்த உண்மையைபேச தொடங்கினால், பின்னர் நாம் அமெரிக்கர்கள் ஏன் அவர்களின் வாழ்வின் எதார்த்தத்தை தொலைதூரத்தில் கூட பிரதிபலிக்காத ஏதோவொன்றை குறித்து 'உணராமல் இருக்கிறார்கள்' என்று நாம் ஆச்சரியமடைவோம்,” என்றார்.