சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Murder in Moscow: Why was Boris Nemtsov assassinated?

மாஸ்கோவில் படுகொலை: போரிஸ் நெம்ட்சோவ் ஏன் கொல்லப்பட்டார்?

David North
3 March 2015

Use this version to printSend feedback

ரஷ்ய எதிர்கட்சி அரசியல்வாதி போரிஸ் நெம்ட்சோவின் படுகொலை ஒரு முக்கிய அரசியல் சம்பவமாகும். அது, அமெரிக்க-ரஷ்ய மோதலில் இருந்தும் மற்றும் ரஷ்ய அரசின் உயர்மட்டங்களுக்குள் இப்போது நடந்து கொண்டிருக்கும் தீவிரமான போராட்டத்திலிருந்தும் எழுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தினது உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் நிதியியல் நலன்களுக்கு சேவை செய்கின்ற ஒரு விளைவை உருவாக்கும் நோக்கத்துடன், ஒபாமா நிர்வாகமும் CIAயும் இந்த மோதலைத் தீவிரப்படுத்துவதில் ஒரு பிரதான பாத்திரம் வகித்து வருகின்றன.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவுகள், சாத்தியமான அளவிற்கு பேரழிவுகரமான விளைவுகளோடு உடையும் புள்ளியை நெருங்கி வருகின்றன. ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உக்ரேனிய ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சை கடந்த ஆண்டு தூக்கியெறிந்ததை வேறுவழியின்றி ஏற்றுக்கொள்ள கிரெம்ளின் மறுப்பதன் அடிப்படையிலும், மற்றும் உக்ரேனை அமெரிக்க செல்வாக்கெல்லைக்குள் முற்றிலுமாக பொருளாதாரரீதியில் மற்றும் இராணுவரீதியில் ஒருங்கிணைப்பதற்கு அது மறுப்பதன் அடிப்படையிலும், ஒபாமா நிர்வாகம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை அதிகாரத்திலிருந்து நீக்க வேண்டுமென முடிவு செய்துள்ளது.

குறிப்பாக 2013இல் சிரியா மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க திட்டங்களில் ரஷ்யா தலையீடு செய்தமை, மற்றும் NSA இரகசிய ஆவணங்களை வெளியிட்டவரான எட்வார்ட் ஸ்னொவ்டெனுக்கு அரசியல் தஞ்சம் வழங்கியமை ஆகியவற்றிற்குப் பின்னர், புட்டின் தொடர்ச்சியாக ஜனாதிபதி பதவியிலிருப்பது அமெரிக்க புவிசார்-அரசியல் நலன்களுக்கு பொருத்தமின்றி கருதப்படுகிறது. இவ்விதத்தில், புட்டினை—சர்வதேச அரசியல் அழுத்தம், பொருளாதார தடைகள், மற்றும் பல்வேறு விதமான மறைமுக நவடிக்கை மூலமாக—அதிகாரத்திலிருந்து நீக்க பின்புறத்திலிருந்து தூண்டிவிடுவதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஒரு "அரச மாளிகை ஆட்சிக்கவிழ்ப்பை" நடத்தவும், மற்றும் புட்டினை அகற்றவும் தகைமை கொண்ட, இராணுவம் மற்றும் இரகசிய பொலிஸின் உட்கூறுகளால் ஆதரிக்கப்பட்ட ஒரு கன்னை, ரஷ்ய மேற்தட்டுக்குள் எழுச்சி பெறுமென ஒபாமா நிர்வாகம் நம்பி வருகிறது என்பது அனைத்தினும் வெளிப்படையாகும். ரஷ்ய ஜனாதிபதியின் தனிப்பட்ட தலைவிதி —சேர்பியாவின் மிலோசெவிக், ரோமானியாவின் செய்செஸ்கு, ஈராக்கின் ஹூசைன் அல்லது லிபியாவின் கடாபி என அது எந்த வழியில் போவதாக இருந்தாலும்— அவரை வெளியேற்றும் சூழ்நிலைகளாலேயே தீர்மானிக்கப்படுவதாக இருக்கும்.

அத்தகைய எந்தவொரு சம்பவத்திற்குப் பின்னரும், மழுப்பல் இல்லாமல் அமெரிக்கப் போக்கை தொடரத் தயாராக உள்ள செல்வந்த மேற்தட்டு பிரிவின் ஒரு பிரதிநிதியைக் கொண்டு —அதாவது பில்லியனர் உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோவின் ஒரு ரஷ்ய நகலைக் கொண்டு— புட்டின் பிரதியீடு செய்யப்படுவார். அமெரிக்க ஊடகங்களோ, நிச்சயமாக அத்தகையவொரு அபிவிருத்தியை ஒரு "ஜனநாயகப் புரட்சியாக" பாராட்டும்.

அமெரிக்கா ஒரு பரந்துபட்ட மக்கள் கிளர்ச்சியை தூண்டிவிட முனைந்து வருகிறது. அது, அமெரிக்கா விரும்பும் மிகக் கடைசி விடயமாகும். செல்வந்த மேற்தட்டினது மற்றும் எழுச்சிபெற்றுவரும் முதலாளித்துவ வர்க்கத்தினது ஒரு பிரிவின், வணிக நலன்களும் தனிப்பட்ட செல்வ வளமும் அமெரிக்க ஆதரவைச் சார்ந்துள்ளதாக அவர்களை முற்றிலுமாக உடன்பட செய்வதை நோக்கி, அந்நிர்வாகத்தின் நடவடிக்கைகள் திரும்பி உள்ளன. அதனால் தான் ஒபாமா நிர்வாகம் செல்வந்த மேற்தட்டின் மீதும் அத்துடன் தொழில்முனையும் மேற்தட்டின் பரந்த பிரிவுகள் மீதும் அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு ஒரு வழிவகையாக, தனிநபர்களை இலக்கில் கொண்ட பொருளாதார தடைகளை பயன்படுத்தி உள்ளது.

மிக முக்கியமாக கேரி காஸ்பரோவ் —அமெரிக்க வெளியுறவு கொள்கை ஸ்தாபகத்தின் ஆக்ரோஷமான புட்டின்-விரோத சக்திகளுக்காக மற்றும் மிகவும் வலதுசாரி சக்திகளுக்காக பேசும் புலம்பெயர்ந்த ரஷ்ய நவ-பழமைவாதியான இவர்— எழுதிய ஒரு கருத்துரை திங்களன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் பிரசுரிக்கப்பட்டது. அமெரிக்கா அந்த மேற்தட்டுக்களுடன் நெருக்கமான தொடர்பில் உள்ளது என்பதையும், அவற்றுடன் புட்டினை பதவியிலிருந்து இறக்குவது போன்ற பிரச்சினைகளை விவாதித்து வருகிறது என்பதையும் அதில் அவர் தெளிவுபடுத்துகிறார். கிரெம்ளினை ஒரு "குற்றகரமான தான்தோன்றித்தனமான ஆட்சியாக" கையாள்வதன் மூலமாக நெம்ட்சோவின் படுகொலைக்கு விடையிறுக்குமாறு, அவர் மேற்கத்திய தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கிறார். அவர் கிழக்கு உக்ரேனில் நிலவும் சூழ்நிலை மீது ரஷ்யாவிற்கும் மேற்கிற்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளை உடைக்கவும், மற்றும் கியேவில் உள்ள வலதுசாரி ஆட்சிக்கு உடனடியாக ஆயுதங்களை அனுப்பவும் அழைப்புவிடுக்கிறார்.

இறுதியாக, புட்டினுக்கான அவர்களது ஆதரவை உடைப்பதற்காக, செல்வந்த மேற்தட்டுகள் மீது அழுத்தத்தைத் தீவிரப்படுத்துமாறு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் காஸ்பரோவ் வலியுறுத்துகிறார். “புட்டின் ஆட்சியில் நீடிக்கும் வரையில், மேற்கில் அவர்களது பணம் பாதுகாப்பாக இருக்க அங்கே எந்த இடமும் இல்லை என்பதை, ரஷ்ய செல்வந்த மேற்தட்டிற்கு, அவர்களில் ஒவ்வொருவருக்கும் கூறுங்கள்,” என்று அவர் எழுதுகிறார்.

இந்த சர்வதேச அதிகார போராட்டத்தின் உள்ளடக்கத்தில் இருந்து தான் ஒருவர் நெம்ட்சொவின் படுகொலையைக் கணக்கெடுக்க வேண்டும். அவரது மரணம் அவரது தனிப்பட்ட விவகாரங்களின் விளைபொருளாக இருப்பதற்கு நிச்சயமாக வாய்ப்பிருக்கிறது தான். ஆனால் அவர் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டிருப்பதற்கும் சாத்தியமான அளவிற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. நிச்சயமாக, இந்த படுகொலை நடந்த காலம் —அதாவது மாஸ்கோவில் புட்டின்-விரோத எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு முந்தைய நாள் என்பதால்— அந்த படுகொலை தனிப்பட்ட கணக்கை தீர்த்துக் கொள்வதற்கான படுகொலை அல்ல, ஓர் அரசியல் படுகொலை என்பதை சுட்டிக் காட்டுகிறது.

அந்த ஆர்ப்பாட்டமே கூட குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. ஒரு முக்கிய அரசியல் பின்னடைவுக்கும் மற்றும் ஆட்சி-மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் போலிக்காரணமாக சேவை செய்யும் வகையில், அதுபோன்ற ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைப்பது ஏதோவிதத்தில் சிஐஏ இன் சிறப்பியல்பாக மாறியுள்ளது. அலெக்ஸி நவால்னி போன்ற தனிநபர்கள் மற்றும் ஏனைய எதிர்கட்சி பிரபலங்கள் அமெரிக்க ஊடகங்களில் ஒரு "ஜனநாயக அதரவு" இயக்கத்தின் தலைவர்களாக தம்பட்டம் அடிக்கப்படுகிறார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை படுகொலைக்குப் பின்புலத்தில் இரண்டு சதித்திட்ட போக்குகள் (ஒவ்வொன்றும் எண்ணிறைந்த வேறுபாடுகளுடன்) இருக்க வாய்ப்புள்ளன:

முதலாவது, மேற்தட்டில் கப்பலை விட்டு கப்பல் தாவுவதற்கு ஆலோசித்து வரக்கூடியவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக —ஜனாதிபதிக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ— புட்டின் கன்னையின் உட்கூறுகளால் நெம்ட்சோவ் கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் அதுபோன்றவொரு பொறுப்பற்ற நடவடிக்கை எவ்வாறு ஆட்சியை பலப்படுத்துமென காண்பது கடினமாக உள்ளது.

இரண்டாவது, போலி ஜனநாயக இயக்கத்திற்கு ஒரு தியாகியை வழங்கும் ஒரு வழிவகையாக புட்டின்-விரோத கன்னைக்குள் இருக்கும் உட்கூறுகளால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம். காஸ்பரோவை விட நெம்ட்சோவ் மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையை எடுக்கிறார் என்பதுடன் சேர்ந்து, புட்டின்-விரோத தந்திரோபாயங்கள் மீது நெம்ட்சோவ் உடனான அவரது கருத்து வேறுபாடுகளை காஸ்பரோவ் அவரது வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கருத்துரையில் குறிப்பிடுகிறார் என்பதைக் கவனத்தில் கொள்வது மதிப்புடையதாகும்.

“2012இல் திரு. புட்டின் மீண்டும் ஜனாதிபதியாக திரும்பியதும், போரிஸூம் நானும் சூடான சர்ச்சையில் ஈடுபட்டிருந்தோம். என்னைப் பொறுத்த வரையில், புட்டின் திரும்பி வந்தமையானது ஒரு சமாதானமான அரசியல் பாதையில் ஆட்சி மாறுவதற்கான எந்தவித எதார்த்தபூர்வமான நம்பிக்கைகளும் முடிந்துவிட்டதை சமிக்ஞை காட்டுவதாக இருந்தது. ஆனால் போரிஸ் எப்போதுமே நம்பிக்கை கொண்டவராக இருந்தார். நான் மிகவும் அவசரப்படுவதாக அவர் எனக்கு தெரிவிப்பார், 'ரஷ்யாவில் மாற்றத்தைக் காண நீங்கள் நீண்டகாலம் காத்திருக்க வேண்டும்' என்பார். இப்போது அதை அவர் பார்க்க முடியாமலேயே போய்விட்டது.”

இந்த கருத்து, அமெரிக்க ஆதரவிலான புட்டின்-விரோத முகாமில் நிலவிய முக்கிய தந்திரோபாய பிளவுகளைக் காட்டுவதாக தெரிகிறது. ஒருவேளை நெம்ட்சோவ் வன்முறைரீதியில் ஆட்சி-மாற்றத்தை நடைமுறைப்படுத்த ஒரு தடைக்கல்லாக பார்க்கப்பட்டிருக்கலாம். அதுபோன்றவொரு சூழலில், அவரைப் போன்றவரின் "உயிர் தியாகம்" புட்டின்-விரோத தூண்டுதலுக்கு சிறப்பாக சேவை செய்யக்கூடுமென பார்க்கப்பட்டிருப்பதற்கும் சாத்தியமான களம் இல்லாமல் போய்விடவில்லை.

நெம்ட்சோவின் தொழில்வாழ்க்கை சோவியத்திற்கு-பிந்தைய ரஷ்யாவின் முதல் ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சினின் ஆண்டுகளில் வேரூன்றி உள்ள நிலையில், அவரது பிரபல்யம் முக்கியமானதாகும். 1990களின் தொடக்கத்தில், சோவியத் சொத்துக்களை அடிமட்ட விலைக்கு விற்பதில் ஈடுபட்டிருந்த முதலாளித்துவ-சார்பு தரகர்களின் முற்றிலும் ஊழல்பீடித்த அடுக்கினது ஒரு பிரதிநிதியாக அவர் உதயமானார். அமெரிக்க வியாபாரிகளுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்கிக் கொண்ட நெம்ட்சோவ், அமெரிக்க பத்திரிகையால் முகஸ்துதியுடன் கையாளப்படும் ஒரு நபராக இருந்தார்.

அதே நேரத்தில், முற்றிலும் ஊழல்மிகுந்த மற்றும் நிரந்தர குடிபோதையில் இருந்த யெல்ட்சின், ரஷ்ய தேசியவாத நலன்கள் குறித்து எந்த கருத்துருவும் கொண்டிருக்கவில்லை. அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்து எந்த எதிர்ப்புமின்றி —பால்கன்கள், கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில்—அது என்னவெல்லாம் விரும்பியதோ அதையெல்லாம் செய்தது.

யெல்ட்சினது ஆண்டுகளின் போதுதான் புட்டினும் எழுச்சி பெற்றிருந்தார் என்றபோதினும், அதன் இறுதி கட்டங்களில், நெம்ட்சோவிற்கு முரண்பட்ட விதத்தில், ரஷ்ய நலன்களின் எந்தவொரு பாதுகாப்பையும் யெல்ட்சின் மொத்தமாக கைவிட்டதால் எச்சரிக்கை அடைந்த பழைய அரசு உளவுத்துறை முகமைகளின் பிரிவுகளால் புட்டின் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டதாக தெரிகிறது. புட்டினினது தலைமையின் கீழ், ஒரு "பலமான அரசுடனான" பாரம்பரிய ரஷ்ய முன்னீடுபாடு மீள்-எழுச்சி கண்டிருந்தது.

அதன் விளைவாக, இது புட்டினை அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மோதலுக்குள் கொண்டு வந்தது, அத்துடன் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துடனும் என்பதையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தெளிவாக புட்டின் அவரது தேசியவாத-முதலாளித்துவ நிகழ்ச்சிநிரலுக்கான ஆதரவைப் பின்தொடர முயன்று வருகிறார். ஆனால் இது உள்ளார்ந்த பிற்போக்குத்தனமானதும் மற்றும் அரசியல்ரீதியில் திவாலானதும் ஆகும். ஒரு முடிவில்லா பல புவிசார் அரசியல் மோதல்களில், அவற்றிற்கான பொருளாதார மற்றும் இராணுவ ஆதாரவளங்கள் இல்லாமல், ரஷ்யாவை அதில் உட்படுத்தி வருகிறார்.

அனைத்திற்கும் மேலாக முதலாளித்துவ மீட்சியின் விளைவுடன் —அதாவது நாசகரமான ஏழ்மை மற்றும் சமூக சமத்துவமின்மையுடன்— தொழிலாள வர்க்கத்தின் ஆழ்ந்த அதிருப்தி, தீவிரமடைந்துவரும் இராணுவ நடவடிக்கைகளின் பொருளாதார விளைவுகளால் ஆழமடையும். இறுதியாக, செல்வந்த மேற்தட்டில் உள்ள புட்டினின் இன்றைய கூட்டாளிகளே, தடைகளின் சுமையால், பெருகிய அளவில் மயக்கத்திலிருந்து தெளிந்து வருகிறார்கள் என்பதுடன், தொடர்ந்து அவர்களின் விருப்பத்தேர்வுகளையும் மறுமதிப்பீடு செய்து வருகிறார்கள்.

ஒரு புரட்சிகர சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் மீள்-எழுச்சி மூலமாக அல்லாமல், 1991 சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிலிருந்து எழுந்த ரஷ்ய துயரத்தை ஒரு முற்போக்கான அடித்தளத்தில் தீர்க்க முடியாது. அக்டோபர் 1917இன் அரசியல் பாரம்பரியத்தில் உயிர்ப்பூட்ட பெற்ற தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கம் மட்டுமே, மரணகதியிலான சதிச்சூழலுக்கும் மற்றும் தற்போது ரஷ்ய அரசியலில் மேலாளுமை செலுத்தும் எதிர்-சதிகளுக்கும் ஒரே மாற்று மருந்தாக உள்ளது.

அதே நேரத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நம்பமுடியாத அளவிலான பொறுப்பற்ற நடவடிக்கைகள், எந்த புள்ளியிலும் ரஷ்யாவுடன் ஒரு முழு-அளவிலான இராணுவ அணுஆயுத மோதலாக வெடிக்க கூடிய இவற்றை, தொழிலாள வர்க்கத்தை தலைமையாக கொண்டு, சர்வதேச சோசலிச கோட்பாடுகளின் அடித்தளத்தில் ஒரு புதிய பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தின் அபிவிருத்தி மூலமாக எதிர்க்கப்பட்டு, முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.