சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US and South Korea begin joint military exercises

அமெரிக்காவும் தென் கொரியாவும் கூட்டு இராணுவ ஒத்திகைகளை தொடங்குகின்றன

By Ben McGrath
2 March 2015

Use this version to printSend feedback

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு இடையிலான ஆண்டு போர் ஒத்திகைகள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு நடக்க உள்ளதால், கொரிய தீபகற்பத்தைச் சூழ்ந்த பதட்டங்கள் அனேகமாக அதிகரிக்க கூடும். வாஷிங்டனும் சியோலும் அத்தகைய இராணுவ ஒத்திகைகளில், பெரியளவிலான துருப்புகள் மற்றும் ஆயுதங்களின் ஒன்றுதிரட்டலை கொண்டு வடகொரியா மற்றும் சீனாவை அச்சுறுத்த மற்றும் பீதியூட்டுவதற்குப் பயன்படுத்தி வருகின்றன.

Foal Eagle ஒத்திகைகள் முன்கூட்டியே தொடங்கி விட்டதாக வெள்ளியன்று தென் கொரிய கடற்படை அறிவித்தது. “அமெரிக்க கப்பல்கள் சரியாக இங்கே வருவதற்கு பொருத்தமாக, உத்தியோகபூர்வ திட்டமிடப்பட்ட Foal Eagle தொடங்குவதற்கு முன்னரே கடற்படை இராணுவ ஒத்திகைகள் தவிர்க்கவியலாமல் தொடங்கப்பட்டு விட்டன,” என்று யொன்ஹாப் செய்தி நிறுவனத்திற்கு ஒரு கடற்படை அதிகாரி தெரிவித்தார்.

Foal Eagle மற்றும் Key Resolve என்று அறியப்படும் இரண்டு ஒத்திகைகள் ஒவ்வொரு இளவேனிலிலும் நடத்தப்படுகின்றன. இன்று உத்தியோகபூர்வமாக தொடங்கும் Foal Eagleஇல் 3,700 அமெரிக்க மற்றும் 200,000 கொரிய துருப்புகள் பங்கேற்கின்றனர். அதைத் தொடர்ந்து நடக்கும் Key Resolve இல் 8,600 அமெரிக்க மற்றும் 10,000 தென் கொரிய சிப்பாய்களும் பங்கேற்பர்.

Foal Eagle கடற்படை ஒத்திகை மஞ்சள் கடல், ஜப்பான் கடல், மற்றும் கொரிய தீபகற்பத்தின் சற்று தெற்கில் உள்ள கிழக்கு சீனக் கடலில் நடக்கும், அத்துடன் மார்ச் மாத மத்திய பகுதி வரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. “நாங்கள் சியோலுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே கூட்டு நடைமுறை தகைமைகளை ஊக்குவிக்கவும் மற்றும் ஒரு பலமான கூட்டு பாதுகாப்பு தோரணையை ஒருங்கிணைக்கவும் எதிர்பார்க்கிறோம்,” என்று கூறி தென் கொரிய கடற்படை ஓர் அறிக்கை வெளியிட்டது.

Foal Eagle நடவடிக்கையில் ஒரு தொடர்ச்சியான தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழி ஒத்திகைகள் உள்ளடங்குகின்றன. கொரியாவின் தெற்கு கடல் பகுதியில் வெள்ளியன்று தொடங்கிய அந்த ஒத்திகையில், நேரடி-குண்டுவீச்சு ஒத்திகை முறைகளும் உள்ளடங்குகின்றன. ஒரு தகர்க்கும் போர் கப்பலான Ganggamchan உட்பட பத்து தென் கொரிய கடல் வாகனங்கள் அதில் பங்கெடுக்கின்றன. ஒரு தகர்க்கும் போர் கப்பலான USS Michael Murphy, தாக்கும் ஹெலிகாப்டர்கள் மற்றும் ரோந்து விமானங்களுடன் சேர்ந்து பங்கெடுத்து வருகிறது.

அமெரிக்க கடற்படை அதன் புதிய கடலோர போர் வாகனங்களில் ஒன்றாக USS Fort Worth முதல்முறையாக Foal Eagle ஒத்திகையில் பங்கெடுக்குமென கடந்த மாதம் அறிவித்தது. ஆழமில்லா கடற்பகுதியில் செயல்பட வடிவமைக்கப்பட்ட அந்த கப்பல், ஒரு ஹெலிகாப்டர் மற்றும் ஒரு டிரோனைக் கொண்டுள்ளதுடன், அதில் ஏவுகணைகளும் மற்றும் ஒரு 57 மில்லிமீட்டர் துப்பாக்கியும் உள்ளன.

Key Resolve என்பது கணினிமயப்பட்ட ஒரு கட்டளை சாவடி ஒத்திகை ஆகும். அது நெருக்கடிகால நிர்வாகம் மற்றும் இரண்டு கூட்டாளிகளுக்கு இடையே போர் ஆயத்தங்களைச் செய்வதில் ஒருமுனைப்பட்டிருக்கும். இரண்டு ஒத்திகைகளுமே, முதல் பார்வைக்கு, வட கொரியாவிற்கு எதிராக நோக்கம் கொண்டதாக தெரியும், ஆனால் அவை சீன பெருநிலத்திற்கு நெருக்கமாக அமெரிக்க இராணுவ பிரச்சன்னத்தை அடிக்கோடிடுகின்றன.

அமெரிக்க-தென் கொரிய ஒத்திகைகளுக்கு பியொங்யாங் கண்டனம் தெரிவித்தது. “Key Resolve மற்றும் Foal Eagle இன் ஒட்டுமொத்த போக்கும் முன்கூட்டியே தாக்குதல் மூலமாக வட கொரியா மீது படையெடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளதாக" உத்தியோகபூர்வ Rodong Sinmun இல் கடந்த செவ்வாயன்று வெளியான ஒரு தலையங்கம் அறிவித்தது. "தற்போது அமெரிக்கா மோதலை தேர்ந்தெடுத்துள்ளதால் அதற்கு எதிராக" வட கொரியா "ஓர் இரக்கமற்ற புனிதப் போரை தொடுக்க வேண்டுமென" வியாழனன்று வெளியான மற்றொரு தலையங்கம் அறிவித்தது. முன்னர் செய்ததைப் போலவே, வட கொரிய இராணுவம் இன்று அதன் கடற்கரையோரம் இரண்டு குறுகிய-தூர ஏவுகணைகளை வெள்ளோட்டமாக ஏவி பரிசோதித்தது.

அதன் அணு ஆயுத திட்டம் போலவே, பெரிதும் வெற்று அச்சுறுத்தல்களான இந்த ஆத்திரமூட்டலும், அதனை முடக்கி வரும் அமெரிக்க தலைமையிலான பொருளாதார தடைகளை மற்றும் சர்வதேச தனிமைப்படுத்தலை தளர்த்துவதற்கு உதவியாக, சில சலுகைகளை வாஷிங்டனிடமிருந்து பெறுவதற்கான பியொங்யாங்கின் முயற்சிகளின் பாகமாகும். ஆனால் இந்த வீரசாகசம் நேரடியாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் கரங்களில் விளையாடுகின்றன.

கொரிய தீபகற்பத்தின் மீது பதட்டங்களைத் தீவிரப்படுத்த, கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா கூட்டு ஒத்திகைகளையும் மற்றும் வட கொரியாவின் அச்சுறுத்தல் என்று கூறப்படுவதையும் பயன்படுத்தி வந்துள்ளது. 2013 இல், மோதல் அச்சுறுத்தல் அதிகரித்த போது, அமெரிக்கா அணுஆயுதமேந்தும் தகைமை கொண்ட குண்டுவீசும் போர்விமானங்களை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பியது. கடந்த ஆண்டு, வட கொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான சர்ச்சைக்குரிய கடல் எல்லையான மஞ்சள் கடலின் வடக்கு எல்லை ஓரத்தை ஒட்டி, வடக்கு மற்றும் தெற்கிற்கு இடையே ஒரு பதட்டமான ஏவுகணை தாக்குதல் வெடித்தது.

வட கொரியா தெற்குடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்து வருகிறது. அக்டோபரில் பியொங்யாங், 2014 ஆசிய விளையாட்டு நிறைவுவிழா கொண்டாட்டங்களைக் காண மற்றும் அதன் உயர்மட்ட அதிகாரிகளின் சமதரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்த அதிகாரிகளை அனுப்பி இருந்தது. பின்னர் அவரது புத்தாண்டு உரையில், வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் ஜனாதிபதி Park Geun-hye உடன் ஓர் உயர்மட்ட சந்திப்பை நடத்த அழைப்புவிடுத்தார்.

ஜனவரியில் பியொங்யாங் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்தவும் அழைப்பிட்டது, அத்துடன் அமெரிக்கா தென் கொரியாவுடன் அதன் ஆண்டு போர் ஒத்திகைகளை கைவிட்டால் அது அதன் நான்காவது அணுஆயுத பரிசோதனையை கைவிடுவதற்கும் முற்பட்டது. வட கொரியாவின் முந்தைய சோதனை பெப்ரவரி 2013இல் நடத்தப்பட்டது. வாஷிங்டன் தற்போது அதற்கு வடக்கு கொரியாவுடன் எந்த உடன்பாட்டிற்கு வர விருப்பமில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, வடக்கு நேசக்கரம் நீட்டியதை முற்றிலுமாக நிராகரித்தது.

தற்போதைய போர் ஒத்திகைகள் அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்புக்கு" அதன் கடமைப்பாட்டை மேலுயர்த்தவும் ஒரு வாய்ப்பை வழங்கும். அமெரிக்கா உக்ரேனில் ரஷ்யாவுடனான அதன் மோதலிலும் மற்றும் அதன் புதிய மத்தியகிழக்கு போரிலும் ஒருமுனைப்பட்டிருக்கும் நிலையில் வாஷிங்டனின் ஆசிய கூட்டாளிகளால் அது [ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு] கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அந்த "முன்னெடுப்பு" ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்தை ஏற்குமாறு பெய்ஜிங்கை நிர்பந்தப்படுத்துவதற்காக சீனாவை இராணுவரீதியில் சுற்றி வளைப்பதையும் மற்றும் இராஜாங்கரீதியில் தனிமைப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டதாகும்.

அமெரிக்க குடியரசு கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் ராண்டி போர்ப்ஸ், கடற்பலம் மற்றும் முன்செல்லும் படைகளுக்கான துணைக்குழுவின் தலைவரான இவர் கடந்த மாதம் விளக்கமளிக்கையில், “வெறுமனே முழங்குவதை விட, ஆசியாவில் அமெரிக்க பிரசன்னத்தை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான தகைமைகளுக்கு நம்பகமான ஆதாரவளங்களை அர்பணிப்பதே, 'சமநிலைப்படுத்துவதை' உறுதிபடுத்துவதற்கான ஒரே வழியாகும்,” என்றார். “நமது கூட்டாளிகள் மற்றும் நமது போட்டியாளர்கள் இருவருமே ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நாம் பேணும் தகைமைகளைக் கொண்டே நமது கடமைப்பாட்டை தீர்மானிக்கின்றனர்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

அமெரிக்க-கொரிய ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுப்பாய்வாளர் யோஎல் விட், 2020 வாக்கில் வட கொரியா குறைந்தபட்சம் 10 அல்லது அதிகபட்சமாக 100 அணுகுண்டுகள் வரையில் கொண்டிருக்கும், அத்துடன் அவற்றை ஏவுகணை கொண்டு ஏவும் ஆற்றலையும் பெற்றிருக்கும் என்ற முன்மதிப்பீடு செய்ததற்கு பின்னர், வெகுசில நாட்களில் இந்த இப்போதைய போர் ஒத்திகைகள் நடக்கின்றன. விஞ்ஞான மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கான பயிலகத்தின் டேவிட் அல்பிரைட் கடந்த வாரம் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசுகையில், 100 அணுக் குண்டுகளை மற்றும் கண்டம் விட்டு கண்டம் ஏவக்கூடிய ஏவுகணைகளைக் கொண்டிருக்கும் வட கொரியா ஒரு "பொறுப்பற்ற பயங்கர விவகாரமாக" இருக்கும் என்று விட் அறிவித்ததாக தெரிவித்தார்.

அமெரிக்க-தென் கொரிய ஒத்திகைக்கு முந்தைய நாள் வெளிவருகின்ற இதுபோன்ற கருத்துக்கள், சீனாவின் மீது அழுத்தமளிக்க அமெரிக்கா பயன்படுத்தி வரும் இந்த கொரிய தீபகற்பத்தின் மீதான பதட்டங்களுக்கு, வெறுமனே மேற்கொண்டும் எண்ணெய் வார்க்கின்றன. வட கொரியா அதன் அணுஆயுத திட்டங்களில் பயன்படுத்தும் தளவாடங்களை, சீனா, அவற்றின் பொதுவான எல்லைப் பிரதேசங்கள் வழியாக இறக்குமதி செய்துகொள்ள அதனை அனுமதிப்பதாக அல்பிரைட் மீண்டுமொருமுறை குற்றஞ்சாட்டினார். “வெறுமனே எல்லையை மூடுவதே கூட நிறைய உபயோகப்படும், ஆனால் அவர்கள் (சீனா) அதை இப்போது மிகவும் குறைவாகவே செய்கின்றனர்,” என்றார்.

ஏப்ரல் மாத இறுதி வரையில் திட்டமிடப்பட்டுள்ள போர் ஒத்திகைகளைக் கொண்டு, ஒபாமா நிர்வாகம் வடக்கு கொரியாவுடன் ஓர் அபாயகரமான மோதலை தூண்டுவதற்கு இந்த பதட்டமான சூழலைச் சுரண்டக்கூடும்.