சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Chinese economy under downward pressure

கீழிறக்க அழுத்தத்தின் கீழ் சீனப் பொருளாதாரம்

By Nick Beams
3 March 2015

Use this version to printSend feedback

சீனப் பிரதம மந்திரி லீ கெகியாங் (Li Keqiang) வியாழனன்று தொடங்க உள்ள தேசிய மக்கள் மாநாட்டில் உரையாற்றுகையில், இந்த ஆண்டிற்கான அதன் வளர்ச்சி விகிதத்தைச் சீன அரசாங்கம் குறைத்து அறிவிக்கும். ஒரு கால் நூற்றாண்டில் மிகக் குறைந்த அளவாக, கடந்த ஆண்டு 7.4 சதவீத வளர்ச்சிக்குப் பின்னர், அது 7 சதவீதம் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா முக்கியமாக பணச்சுருக்க அபாயங்களை மற்றும், பலவீனமடைந்து வரும் சொத்து மற்றும் நில/கட்டிடத்துறை அபாயங்களை முகங்கொடுத்து வருவதாக திங்களன்று எச்சரித்த ஒரு முன்னணி அரசு சிந்தனை குழாம், State Information Centre, இந்த முதல் காலாண்டில் அப்பொருளாதாரம் 7 சதவீதம் வளருமென முன்மதிப்பீடு செய்கிறது. கட்டமைப்பு சீரமைப்புகளுக்கு இடையிலும், சீனப் பொருளாதார வளர்ச்சி "இன்னமும் பலமான கீழிறக்க அழுத்தத்தை முகங்கொடுப்பதாகவும்", மற்றும் தொடர்ந்து "அடிமட்டத்தைத் தேடி செல்லக்கூடுமென்றும்" அது தெரிவித்தது.

உற்பத்தி செயல்பாடு தொடர்ந்து இரண்டாவது மாதமாக பெப்ரவரியில் சுருங்கியதை எடுத்துக்காட்டும் அரசாங்கத்தின் நுகர்வு மேலாண்மை குறியீடு (Purchasing Managers Index) வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்திற்கு குறைவாக கூட போகக்கூடுமென ஏனையவர்கள் கணிக்கின்றனர்.

மோசமடைந்து வரும் பொருளாதார கண்ணோட்டத்திற்கு விடையிறுப்பாக, சீன மக்கள் வங்கி (PBoC) அதன் வட்டிவிகித நிர்ணய வரம்பில் சனியன்று இரவு மேற்கொண்டும் 0.25 சதவீத புள்ளிகள் வெட்டை அறிவித்தது. முன்னதாக இரண்டாண்டுகளில் செய்யப்பட்ட முதல் குறைப்பாக நவம்பரில் அதேபோன்ற ஒரு வெட்டை அறிவித்தது. இதுவே அதுபோன்ற கடைசி நகர்வாக இருக்கப் போவதில்லை. “பணச்சுருக்க அபாயம்" மற்றும் சொத்துச் சந்தை வளர்ச்சிக்குறைவு ஆகியவையே வட்டிவிகித வெட்டிக்கான பிரதான காரணங்கள் ஆகும் என்று ஒரு மத்திய வங்கி அதிகாரி தெரிவித்தார்.

நேற்று பிரசுரிக்கப்பட்ட ஓர் அறிக்கையில் BNP பாரிபாஸ் குறிப்பிடுகையில், ஜூன் மாத இறுதிக்குள் மற்றொரு வட்டிவிகித குறைப்பை அது எதிர்பார்ப்பதாக தெரிவித்தது. “ஜனவரி மற்றும் பெப்ரவரி பொருளாதார வளர்ச்சி அரசாங்கம் அனுமானித்ததை விடவும் மிகவும் கூர்மையாக மோசமடைந்துள்ளது,” என்று அது குறிப்பிட்டது. “பணச்சுருக்க அபாயம் முன்பினும் மிக பெரிதாக அதிகரித்து வருகிறது,” என்றது.

ஆலை வாயிலில் இருந்து பண்டங்கள் வெளி வருகையில் நிர்ணயிக்கப்படும் விலையின் அடிப்படையில் அளவிடப்படுகிற, சீனாவின் உற்பத்தியாளர் விலை குறியீடு (producer price index), சாதனையளவிற்கு நீண்டகாலமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக வீழ்ச்சி அடைந்து வருகின்றன. அதேவேளையில் பணவீக்கத்தின் பிரதான அளவீடான நுகர்வு விலை குறியீடு (Consumer Price Index), முந்தைய ஓராண்டிலிருந்து ஜனவரியில் வெறும் 0.8 சதவீதம் மட்டுமே உயர்ந்தது. அது உலகளாவிய நிதியியல் நெருக்கடியை அடுத்து நவம்பர் 2009க்குப் பின்னர் மிகக்குறைந்த உயர்வாகும்.

குறைந்த பணவீக்கம் மற்றும் வீழ்ச்சி அடைந்துவரும் விலைகளின் தாக்கமே கூட, உள்ளூர் அரசாங்க அமைப்புகள், சொத்து அபிவிருத்தியாளர்களின் நிஜமான கடன் சுமையை மற்றும் ஏனைய பெரும் கடன்களை அதிகரிக்கும். PBoC இன் முடிவு பெரிதும் பொருளாதாரத்திற்கு பெருமளவில் ஊக்கப்பொதி வழங்குவதை நோக்கமாக கொண்டதல்ல, மாறாக அந்த பகுதிகளில் நிலவும் சிறிது கடன் அழுத்தத்தை விடுவிப்பதை நோக்கமாக கொண்டதாகும். கட்டுமானம் மற்றும் மரச்சாமான்கள் போன்ற தொழில்துறையோடு தொடர்புபட்ட சீன நில/கட்டிட சந்தை சீன மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு கால் பகுதியைக் கொண்டுள்ளது. அது கடந்த இரண்டு ஆண்டுகளாக கீழிறக்கத்தில் உள்ளது.

ஒரு பிரதான நில/கட்டிடத்துறை தகவல் வழங்குனரின் கருத்துப்படி, புதிய வீடுகளின் சராசரி விலை ஜனவரியில் ஏற்பட்ட 3.1 சதவீத வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் மற்றும் டிசம்பரில் ஏற்பட்ட 2.7 சதவீத சரிவுடன் ஒப்பிடுகையில், பெப்ரவரியில் 3.8 சதவீதம் சரிந்தது. வீட்டுத்துறை தேக்கத்தின் காரணமாக சிரமங்களை முகங்கொடுத்து வரும் சொத்து அபிவிருத்தியாளர்கள், அவர்கள் தொடங்கியுள்ள திட்டங்களை முடிப்பதற்கு கூடுதல் நிதியைப் பெறுவதில் சிரமப்பட்டு வருகின்றனர்.

பொருளாதார பிரச்சினைகள் அத்துடன் முடிந்துவிடவில்லை. 2,000க்கும் அதிகமான தொழில்துறை நிறுவனங்கள் மீதான ஒரு சமீபத்திய ஆய்வு, உள்நாட்டிலும் சரி சர்வதேச அளவிலும் சரி, அவற்றினது பண்டங்களுக்கான தேவை மூன்றில் ஒரு பங்கிற்கு கூடுதலாக பலவீனமடைந்திருப்பதே அவற்றின் பிரச்சினைகளுக்கு பிரதான காரணமென கண்டறிந்ததுடன், நிதிய கொள்கையைத் தளர்த்துவது அவர்களுக்கு சிறிதும் ஆதாயமளிக்காது அல்லது பலனளிக்காது என்பதைக் குறிப்பிட்டது.

சுழற்சிரீதியிலான மற்றும் கட்டமைப்புரீதியிலான சீரமைப்பின்" மற்றொரு சிக்கலான ஆண்டை சீனா முகங்கொடுப்பதாக எச்சரித்து, ஹாங்காங்கில் உள்ள பார்க்லேயின் தலைமை சீனப் பொருளாதார நிபுணர் சாங் ஜியாங் கூறுகையில், “நிதிய கட்டுப்பாடுகளைக் கூடுதலாக தளர்த்துவது ஒரு கீழிறக்க வளர்ச்சி மற்றும் பணச்சுருக்க சுழற்சியைத் தடுக்க உதவும் தான், ஆனால் அது வளர்ச்சியைக் குறிப்பிடத்தக்க அளவிற்கு தூக்கிவிடுவதற்கு சாத்தியமில்லை,” என்றார்.

வட்டிவிகிதங்கள் மீது மத்திய வங்கியின் நகர்வு, ஆளும் நிதியியல் மற்றும் அரசாங்க வட்டாரங்களில், மோதல்கள் இல்லையென்றாலும், சில உடன்பாடின்மைகளின் விடயம் இருந்து வருவதாக தெரிகிறது. நீண்டகாலம் சேவையில் இருந்து வரும் மத்திய வங்கி ஆளுநர் Zhou Xiaochuan, வட்டி விகித வெட்டுக்கள் போன்ற நகர்வுகள் கடன் வழங்குவதை எளிமைப்படுத்தும் என்பதுடன், குறிப்பாக சொத்து அபிவிருத்தி போன்ற ஊக வணிகங்களில் கடன் பிரச்சினைகளை மோசமடைய செய்யும் என்பதால் அத்தகைய பரந்த நகர்வுகளை எதிர்த்துள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் வளர்ச்சியை ஊக்குவிக்க மற்றும் வியாபாரங்கள் மீதான அழுத்தங்களைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய வங்கியோ, அரசாங்கத்திடமிருந்து வரும் அழுத்தத்தின் கீழ் உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரின் இறுதியில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிவிக்கையில், நிதியியல் கொள்கையின் திசையில் அவர் உடன்பாடின்மைகளைக் கொண்டிருந்ததால், அங்கே Zhou ஐ பதவியிலிருந்து இறக்குவதற்கான நகர்வுகள் இருந்ததாக அறிவித்தது. சமீபத்திய வட்டி விகித வெட்டுக்களைக் குறித்து எழுதுகையில், அது பெயர் வெளியிடாமல் ஒரு மத்திய வங்கி அதிகாரியின் கருத்துக்களை மேற்கோளிட்டது. கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நடவடிக்கைகள், “ Zhou நீண்டகாலமாக வலியுறுத்தி வந்ததற்கு எதிரான ஒரு தெளிவான திருப்பம்" என்று அவர் கூறியிருந்தார்.

வட்டி விகிதத்தை வெட்டும் முடிவு மற்றும் குறைந்த வளர்ச்சி குறித்த முன்மதிப்பீடுகள் சீனாவைக் கடந்தும் நீண்ட தாக்கங்களைக் கொண்டுள்ளன. உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமான சீனாவின் வளர்ச்சி குறைவு, ஒட்டுமொத்தமாக உலக பொருளாதாரத்தையும் மேற்கொண்டும் பின்னுக்கு இழுக்க செய்யும். அதற்கும் கூடுதலாக, ஏனைய மத்திய வங்கிகளால் எடுக்கப்படும் அதுபோன்ற தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு இடையே, இது பெரிதும் ஓர் அறிவிக்கப்படாத செலாவணி போராக மாறியுள்ள நிலையில், அந்த வட்டி விகித வெட்டு யானின் மதிப்பை கீழே இறக்கும்.

மோர்கன் ஸ்டான்லி ஆசியாவின் முன்னாள் தலைவரும், சீன பொருளாதார போக்குகளை நீண்டகாலமாக ஆராய்ந்து வருபவருமான ஸ்டீபன் ரோச் நேற்று Australian Financial Review இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் குறிப்பிடுகையில், செலாவணி போர்கள் உலகெங்கிலும் ஆக்ரோஷமடைந்து வருகின்றன என்பதுடன், அவற்றின் கூர்முனையில் சீனா உள்ளது என்றார்.

ரோச்சின் கருத்துப்படி, சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கியால் வழங்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில், அதன் பிரதான வர்த்தக பங்காளிகளின் மீளப்பெறும்-சராசரிக்கு எதிராக கணக்கிடப்பட்ட சீனாவின் நிஜமான நடப்பு செலாவணி விகிதம், கடந்த நான்கு ஆண்டுகளில் 26 சதவீதம் உயர்ந்துள்ளது. இது "ஏற்றுமதிகள் தோய்ந்து போவதற்கும்" மற்றும் பணச்சுருக்கம் அதிகரிக்கும் அபாயத்திற்கும் இட்டுச் செல்கின்றன. அதுபோன்றவொரு நிலைமை யான் பலவீனமடைவதை எடுத்துக்காட்டும், ஆனால் அந்த திசையிலான எந்தவொரு நகர்வும் ஒரு "ஆழமான பிழையாகி", "உலக பொருளாதாரத்தில் பெரும் பிரச்சினையாகி" விடுமென அவர் எச்சரித்தார்.

"முன்னொருபோதும் இல்லாத பணத்தைப் புழக்கத்தில் விடுகின்ற (QE)" ஒரு சகாப்தத்தில், போட்டி செலாவணி மறுமதிப்பீடு என்பது உலகின் பிரதான ஏற்றுமதியாளர்களின் நடைமுறையாக மாறியுள்ள ஒரு சகாப்தத்தில்", யான் (yuan) மறுமதிப்பீடு அனேகமாக அமெரிக்க காங்கிரஸிடமிருந்து பதில் நடவடிக்கைகளைக் கொண்டு வரும் என்பதோடு, “உலகளாவிய செலாவணி போரைக் கூர்மையாக தீவிரப்படுத்துவதற்கு" இட்டுச் செல்லும்.