சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Wealth of world’s billionaires surges past $7 trillion

உலக பில்லியனர்களின் செல்வ வளம் 7 ட்ரில்லியனை கடந்து உயர்கிறது

By Joseph Kishore
4 March 2015

Use this version to printSend feedback

திங்களன்று Forbes இதழால் பிரசுரிக்கப்பட்ட சமீபத்திய தொகுப்புரையின்படி, உலக பில்லியனர்களின் மொத்த ஒருங்கிணைந்த மதிப்பு ஒரு புதிய மட்டத்திற்கு 2015 இல் 7.05 ட்ரில்லியன் டாலரை எட்டியுள்ளது.

அங்கே சாதனையளவிற்கு 1,826 பில்லியனர்கள், ஒவ்வொருவரும் சராசரியாக 3.8 பில்லியன் செல்வ வளத்துடன் உள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், உலக பில்லியனர்கள் அவர்களின் மொத்த செல்வ வளத்தை 2014 இல் 6.4 ட்ரில்லியனில் இருந்து 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்து கொண்டுள்ளனர். அதேவேளையில் மொத்த பில்லியனர்களின் எண்ணிக்கை 11 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளது.

அதன் அறிக்கையின் அறிமுகத்தில், Forbes இதழ் உலகின் மிகப் பணக்காரர்களின் செல்வ வளம் தொடர்ந்து உயர்ந்து வருவதற்கும் உலக பொருளாதார நிலைக்கும் இடையிலான மலைப்பூட்டும் இடைவெளியை குறிப்பிட்டுக் காட்டியது. “வீழ்ச்சி அடைந்துவரும் எண்ணெய் விலைகள் மற்றும் பலவீனமடைந்து வரும் யூரோ ஆகியவற்றிற்கு இடையே, உலக செல்வந்தர்களின் எண்ணிக்கை உலக பொருளாதார கொந்தளிப்புடன் போட்டிபோட்டு மீண்டுமொருமுறை விரிவடைந்தது,” என்று எழுதியது.

பில்லியர்களின் இந்த செல்வவள வளர்ச்சி தொடர்ந்து உலகளாவிய பங்குவிலை நிர்ணய சந்தைகளின் உயர்வுடன் பிணைந்துள்ளன. அகில உலக FTSE குறியீடு கடந்த மாதம் சாதனை அளவிற்கு உயர்ந்தது, மற்றும் அமெரிக்க சந்தைகள் சாதனைகளை முறிப்பதை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பங்குடைமையோ (share ownership) "பணத்தை அச்சடித்தல்" (quantitative easing), சாதனையளவிலான குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் ஏனைய அரசாங்க கொள்கைகளின் பிரதான ஆதாயதாரர்களாக உள்ள செல்வந்தர்களின் கரங்களில் அதிகளவில் குவிந்துள்ளது.

http://www.wsws.org/asset/8dc41394-b478-47bf-8e22-aeecffc36ceJ/2015billionaires.jpg?rendition=image320
உலக பில்லியனர்களின் செல்வ வளம்

வோல் ஸ்ட்ரீட் தாயகமாக மற்றும் உலகளாவிய நிதியியல் மூலதனத்தின் மையமாக விளங்கும் அமெரிக்கா, இதுவரையில் இல்லாத வகையில் மீண்டும் பில்லியனர்களின் மிக அதிக எண்ணிக்கையுடன் —536— உள்ளது. 2009 இல் “பொருளாதார மீட்சி" என்றழைக்கப்பட்டது தொடங்கியதில் இருந்து, அமெரிக்காவில் மொத்த இலாப வருவாய்களில் சுமார் 95 சதவீதம் மேல்மட்ட 1 சதவீதத்தினருக்கு சென்றுள்ளது. இதற்கிடையேதான், அந்நாட்டில் அண்மித்தளவில் நான்கில் ஒரு குழந்தை வறுமையில் வாழ்கிறது.

அமெரிக்காவில் உள்ள பில்லியனர்களின் பட்டியலில் பரிசயமானவர்களின் பெயர்களே மேலே இடம்பெற்றுள்ளன. மைக்ரோசாப்ட் ஸ்தாபகர் பில் கேட்ஸ் பெயரும் அதில் உள்ளடங்கும், இவரது தனிப்பட்ட செல்வ வளம் மட்டுமே 3.2 பில்லியனில் இருந்து 79.2 பில்லியன் டாலருக்கு உயர்ந்தது. அமெரிக்கர்களின் மத்தியில், கேட்ஸூக்கு அடுத்து இருப்பவர் முதலீட்டாளர் வாரென் பஃபெட் (Warren Buffett) ஆவார், இவர் இவ்வாண்டின் மிகப்பெரிய இலாபமீட்டியவராக அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு 14.5 பில்லியன் டாலரில் இருந்த இவரது சொத்தின் நிகர மதிப்பு, இப்போது 72.7 பில்லியன் டாலராகும்.

அப்பட்டியலில் அதற்கு கீழே இருப்பவர்களில், தனியார் முதலீட்டு நிர்வாகி ஸ்டீவன் கோஹென் (Steven Cohen) போன்றவர்களை ஒருவரால் பார்க்க முடியும். இவர் அமெரிக்க முதலாளித்துவத்தின் குற்றகர குணாம்சத்தின் இன்றியமையாத உருவடிவமாவார். ஓராண்டிற்கு முன்னர், கோஹெனின் முன்னாள் தனியார் முதலீட்டு நிதியம், SAC Capital Advisors, உள்-வர்த்தக கட்டண குற்றங்களுக்காக வழக்கில் இழுக்கப்பட்டது. கோஹென் (Cohen) மீதே கூட ஒருபோதும் குற்றஞ்சாட்டப்படவில்லை என்பதோடு, அவர் எளிமையாக அவரது செல்வங்களை Point72 Asset Management என்ற புதிய நிறுவனத்திற்கு மாற்றிக் கொண்டார். கடந்த ஆண்டு 1.3 பில்லியன் டாலர் ஈட்டிய கோஹென், அவரது மொத்த நிகர மதிப்பை 11.4 பில்லியன் டாலருக்குக் கொண்டு வந்தார்.

தனி உள்ளாட்சியாக வகைப்படுத்தினால், Forbes பட்டியலில், கலிபோர்னியா, வெறுமனே ஒட்டுமொத்தமாக அமெரிக்காவை மற்றும் சீனாவை அடுத்து, 131 பில்லியனர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும். நிச்சயமற்ற மற்றும் ஒழுங்குமுறையற்ற வேலை நேரங்களுடன், குறைந்த ஊதியம் பெறும் ஓட்டுனர்களை ஒருங்கிணைப்பதில் சிறப்புதன்மை கொண்ட கார்-பகிர்வு சேவையான Uber நிறுவனத்தின் இணை-ஸ்தாபகர்கள் Travis Kalanick மற்றும் Garett Camp ஆகியோர் கலிபோர்னியாவின் புதிய பில்லியனர்களில் உள்ளனர். அதுபோன்ற உழைப்பு சுரண்டும் முறை ஒட்டுமொத்தமாக அமெரிக்க பொருளாதாரத்திற்கான ஒரு முன்மாதிரியாக பெருமளவில் பார்க்கப்பட்டு வருகிறது.

மெக்சிகன் தொலைதொடர்புத்துறை அதிபர் கார்லோஸ் ஸ்லிம் (Carlos Slim), அந்த உலகளாவிய பட்டியலில் 77.1 பில்லியன் டாலருடன் இரண்டாவது இடத்தில் இருந்தார். மெக்சிகோவின் 122 மில்லியன் மக்கள்தொகையில் பாதி மக்கள் வறுமையில், நாளொன்றுக்கு சுமார் 6 டாலருக்கும் குறைந்த வருவாயில் (மாதத்திற்கு 2,329 பெசொஸூடன் -pesos) வாழ்வதாக வரையறுக்கப்படுகிறது. ஸ்லிமின் தனிப்பட்ட செல்வமே, வறிய 60 மில்லியன் மெக்சிகோ தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த ஆண்டு வருவாய் உடன் தோராயமாக ஒப்பிடக்கூடியதாக உள்ளது.

இலத்தீன் அமெரிக்காவில் மிகப்பெரிய தனிநபராக ஸ்லிம் விளங்குகிறார் என்ற நிலையில், அப்பிராந்தியத்தில் அதிக எண்ணிக்கையிலான 54 பில்லியனர்களை கொண்ட நாடாக பிரேசில் உள்ளது. பிரேசிலின் 60 மில்லியன் குழந்தைகளில் பாதி வறுமையில் வாழ்கின்றன.

ஒட்டுமொத்தமாக, மிக அதிகமாக 213 என்ற எண்ணிக்கையில் பில்லியனர்களை கொண்ட இரண்டாவது நாடு சீனாவாகும். அதைத் தொடர்ந்து ஜேர்மனி, இந்தியா மற்றும் ரஷ்யா உள்ளன.

உலக முதலாளித்துவத்திற்கு ஒரு மலிவு உழைப்பு தளமாக விளங்கும் சீனா, இந்த ஆண்டு Forbes பட்டியலில் 290 பில்லியனர்களில் 71 புதியவர்களுக்கு, அல்லது மொத்த நபர்களில் சுமார் ஒரு கால் பங்கினருக்கு புகலிடமாக உள்ளது. சீனாவில் உள்ள மிகப் பெரிய செல்வந்தர் ஒரு நில/கட்டிடத்துறை அதிபரான வாங் ஜியான்லின் (Wang Jianlin) (24.2 பில்லியன் டாலர்) ஆவார். இவருக்கு அடுத்து நில சொத்து (real estate) வர்த்தக நிறுவனமான அலிபாபா குழுமத்தின் (Alibaba Group) அதிபர் ஜேக் மா (22.7 பில்லியன் டாலர்) ஆவார்.

கடந்த ஆண்டு சீனாவின் பங்கு-நிர்ணய சந்தைகளில் இருந்த உயர்வு சீன பில்லியனர்களுக்கு மட்டும் ஆதாயமளிக்கவில்லை. Forbes குறிப்பிடுகையில், “சீன பில்லியனர்கள் பட்டியலில் மேல்மட்ட 20 பில்லியனர்களால் நடத்தப்படும் நிறுவனங்களில் நீங்கள் முதலீடு செய்திருந்தால், நீங்கள் அவர்களின் செல்வ வளத்திலிருந்து சரியாக உங்களின் பங்கு கணக்கைப் பெற்று வந்திருப்பீர்கள்,” என்றது. கடந்த ஆண்டு அலிபாபாவின் ஆரம்ப பொது பங்கு வெளியீடானது ஊக வணிகம் மற்றும் பேராசையின் ஒரு சர்வதேச காட்சியாக மாறி இருந்ததுடன், உலகளாவிய முதலீட்டாளர்களிடம் இருந்து பில்லியன் பில்லியன் கணக்கில் இலாபங்களைக் குவித்தன.

இந்தியாவில், அந்நாட்டின் 90 பில்லியனர்கள் "பெரிதும் பிரதம மந்திரி நரேந்திர மோடியின் 'நல்ல காலத்திற்கான' வாக்குறுதியின் மீது சவாரி செய்து வருவதாக" Forbes கருத்துரைத்தது. கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த வலதுசாரி இந்து அடிப்படைவாத அரசியல்வாதி, அந்நாட்டை உலகின் கொத்தடிமை கூடமாக ஆக்கிக் கொண்டே, வணிகம்-சார்ந்த நடவடிக்கைகளின் ஒரு தொகுப்பை வேகமாக முன்னெடுத்துள்ளார்.

Reliance Industries Limited இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி, 21 பில்லியன் டாலர் நிகர சொத்துக்களுடன், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார். இந்தியாவில் சுமார் 60 சதவீத மக்கள், அல்லது 750 மில்லியன் மக்கள், நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைந்த வருவாயில் வாழ்கின்றனர்.

ரஷ்யாவின் பில்லியனர்கள் எண்ணிக்கை கணிசமான அளவில் 111இல் இருந்து 88க்கு வீழ்ச்சி அடைந்து, ஒட்டுமொத்த நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு இறங்கியது. கூர்மையான எண்ணெய் விலை வீழ்ச்சியாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவினால் திணிக்கப்பட்ட முடமாக்கும் பொருளாதார தடைகளாலும், அந்நாட்டை சூழ்ந்துள்ள பொருளாதார நெருக்கடியில் இதுவும் ஒரு விளைவாகும். இத்தகைய தடைகளின் பிரதான நோக்கங்களில் ஒன்று, தங்களின் செல்வ வளத்தின் மீதான தாக்கங்களைக் குறித்து பீதியுற்றுள்ள ரஷ்ய செல்வந்த தட்டுக்களின் ஒரு பிரிவை விளாடிமீர் புட்டின் அரசாங்கத்திற்கு எதிராக திருப்பி விட ஊக்குவிப்பதாகும்.

நம்பகமான பரந்தளவில் இதற்கு இணையானவையும் வெளிப்பட்டு வருகின்றன. சான்றாக ஐரோப்பிய வங்கிகளில் கிரீஸ் கொண்டிருக்கும் கடன் சுமார் 90 பில்லியன் டாலர் ஆகும். உலக பில்லியனர்களின் செல்வவளம் இந்த தொகையை விட 77 மடங்கு அதிகமாகும்.

அமெரிக்காவில், டெட்ராய்ட் நகரத்தின் கடன் 6.9 பில்லியன் டாலராகும், அல்லது உலக பில்லியனர்களின் மொத்த செல்வ வளத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காகும்.

கிரீஸூம் சரி டெட்ராய்டும் சரி இரண்டுமே வங்கிகளால் கட்டளையிடப்பட்ட, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தால் ஆமோதிக்கப்பட்ட ஒரு பேரழிவுகரமான மறுசீரமைப்பிற்குள் இழுக்கப்பட்டுள்ளதோடு, அதனால் பாரிய வறுமையும் வாழ்க்கை தரங்களின் சீரழிவும் விளைந்துள்ளன.

ஒட்டுமொத்தமாக Forbes பட்டியல் உலக முதலாளித்துவத்தின் ஒட்டுண்ணித்தனமான குணாம்சத்திற்கு வெளிப்பாட்டை வழங்குகிறது. அவர்களின் செல்வ வளமானது—நிதி, உற்பத்தி, தொலைதொடர்பு என—பொருளாதாரத்தின் எந்தவொரு குறிப்பிட்ட துறையுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரி, பெரும் பணக்காரர்களின் சொத்துக்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பங்கு சந்தைகளின் உயர்வுடன் பிணைந்துள்ளன.

அதுபோன்ற பெரும் தொகைகள் மிக சிலரின் கரங்களில் திரண்டிருப்பது வெறுமனே வார்த்தையளவில் பொருளாதார நிகழ்ச்சிப்போக்கின் விளைவுபொருள் அல்ல, மாறாக அது 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் தீவிரமாக்கப்பட்ட திட்டமிட்ட அரசாங்க கொள்கைகளின் விளைபொருளாகும். அந்த சமயத்திலேயே உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டதைப் போல, இந்த நெருக்கடியின் "வடிவில் அமெரிக்க மற்றும் உலகளாவிய பொருளாதாரத்திலும், மற்றும் அதை அடித்தளமாக கொண்டுள்ள சமூக மற்றும் வர்க்க உறவுகளிலும் ஓர் அடிப்படை மறுகட்டமைப்பு நடந்து கொண்டிருக்கிறது.”

2009இல் இருந்து, வங்கி பிணையெடுப்புகள், பூஜ்ஜியத்திற்கு அண்மித்த வட்டிவிகிதங்கள் மற்றும் "பணம் அச்சடித்தல்" ஆகிய கொள்கைகள் முழுமையாக நடைமுறைபடுத்தப்பட்ட போது, உலக பில்லியனர்களின் செல்வ வளம் சுமார் மூன்று மடங்கு உயர்ந்துள்ளன. அமெரிக்காவில் ஒபாமா நிர்வாகத்தின் தலைமையில், ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது ஓர் இரக்கமற்ற தாக்குதலை நடத்திக் கொண்டே, நிதியியல் சந்தைகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை பாய்ச்சி உள்ளது.

இத்தகைய நிகழ்ச்சிப்போக்கின் உலகந்தழுவிய குணாம்சம், நிலவும் பொருளாதார ஒழுங்கமைப்பின் இயல்பு தான் பிரச்சினையே என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. சமூக சமத்துவமின்மையின் அசாதாரண வளர்ச்சி மற்றும் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டத்திற்கு செல்வ வளத்தை பாரியளவில் கைமாற்றுவது ஆகியவை ஒரு திவாலான மற்றும் நோய்பீடித்த அமைப்புமுறையான முதலாளித்துவத்தின் வெளிப்பாடுகளாகும். இந்த அமைப்புமுறையின் சீரழிவும் நெருக்கடியும் அதை அழிப்பதற்கான வழிவகைகளை அதுவே உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன —அதாவது சமூக மோதல் மற்றும் உலகந்தழுவிய வர்க்க போராட்டத்தின் மேலெழுச்சியை உருவாக்கி வருகின்றன.