சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Washington stokes Middle East bloodbath

வாஷிங்டன் மத்திய கிழக்கில் இரத்தக்களரியைத் தூண்டுகிறது

Bill Van Auken
6 March 2015

Use this version to printSend feedback

பெண்டகனின் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் தலைமை அலுவலக தலைவர் ஜெனரல் மார்டின் தெம்சே புதனன்று ஒரு காங்கிரஸ் கமிட்டிக்கு கூறுகையில், ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் டமாஸ்கஸ் அரசாங்கத்தை கவிழ்க்க முனைந்துள்ள கிளர்ச்சியாளர்கள் என்றழைக்கப்படுபவர்களோடு இணைந்து சண்டையிட, அமெரிக்க துருப்புகள் சிரியாவிற்குள் அனுப்பப்படக்கூடும் என்றார்.

அங்கிருக்கும் தளபதி என்னையோ அல்லது பாதுகாப்புத்துறை செயலரையோ அணுகினால் மற்றும் ஈராக்கியர்கள் அல்லது புதிய சிரிய படைகளுடன் இணைய, சிறப்பு நடவடிக்கை படைகள் வேண்டுமென கருதினால் … நமது நோக்கங்களை எட்ட அது அவசியமென்று நாங்கள் நம்புகையில், நாங்கள் அந்த பரிந்துரையைச் செயல்படுத்துவோம்,” என்று கீழ்சபை நிதி ஒதுக்கீட்டு கமிட்டியின் பாதுகாப்புத்துறை குழுவிற்கு தெரிவித்தார்.

தெம்சேயின் வாக்குமூலம், பாதுகாப்புத்துறை செயலர் ஆஷ்டன் கார்டரின் அதேபோன்ற கருத்திற்கு முன்னதாக வந்திருந்தது. அவர் கூறுகையில், "ISIL [ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசு-ISISக்கான நிர்வாகம் விரும்பும் சுருக்கெழுத்து இது] உடன் சண்டையிட கூடிய ஒரு மூன்றாவது படையை உருவாக்குவதும், மற்றும் அதனைக் கொண்டு பஷார் அசாத்தை நீக்கும் நிலைமைகளை அமைப்பதுவே" "சிரிய நிலப்பகுதி" சம்பந்தப்பட்ட வாஷிங்டனின் மூலோபாயமாகும் என்பதை ஒப்புக் கொண்டார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரியும் அதேபோன்ற பாணியில் பேசினார். ஷியைட் ஈரான் உடனான அமெரிக்காவின் அணுசக்தித்துறை பேச்சுவார்த்தைகள், பாரசீக வளைகுடாவின் சுன்னி ஆட்சியாளர்களுடனான வாஷிங்டனின் எதிர்புரட்சிகர கூட்டணியை அரித்துவிடாது என்பதற்கு மறுஉத்தரவாதம் வழங்க சென்றுள்ள கெர்ரி, அவரது சவூதி அரேபிய பயணத்திற்கு இடையே வியாழனன்று அதை தெரிவித்திருந்தார்.

சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு வாஷிங்டனின் கடமைப்பாட்டை கெர்ரி மீண்டும் வலியுறுத்தினார். “உச்சபட்சமாக ஓர் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டுமானால் அழுத்தத்துடன் கூடிய இராஜதந்திரம் அவசியமாகும்,” என்று செய்தியாளர்களுக்குத் தெரிவித்த அவர், “இராணுவ அழுத்தம் தேவைப்படக்கூடும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் ஈராக் மற்றும் சிரியா இரண்டிலும் புதிய அமெரிக்க போர் அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பின்னர், இந்த தலையீடு அப்பிராந்தியத்தின் மக்கள் மீது மற்றொரு பாரிய இரத்தக்களரியைக் கட்டவிழ்த்துவிடும் அச்சுறுத்தல்களைக் கொண்ட ஒரு திருப்புமுனையை எட்டியுள்ளது என்ற உணர்வு அங்கே அதிகரித்து வருகிறது.

ஈராக்கில், 2003 அமெரிக்க படையெடுப்பில் பதவிலிருந்து தூக்கியெறியப்பட்டு, அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் தூக்கிலிடப்பட்ட ஈராக்கிய தலைவர் சதாம் ஹூசைனின் முன்னாள் சொந்த ஊரான திக்ரிட் நகரம் ஒரு மிகப்பெரிய முற்றுகையில் இருப்பதால், இந்த அச்சுறுத்தல் உடனே நிகழக்கூடிய ஒன்றாய் உள்ளது.

சுமார் 30,000 துருப்புகள்—இதில் மூன்றில் இரண்டு பங்கு ஈரானிய ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஈராக்கிய ஷியா போராளிகள் குழுவை உள்ளடக்கி உள்ளதாக கூறப்படுகின்ற நிலையில்—அது திக்ரிஸ் ஆற்றின் ஓரம் பாக்தாத்திற்கு சுமார் 100 மைல்கள் வடக்கே அமைந்துள்ள, பெரும்பான்மை சுன்னி மக்களைக் கொண்ட அந்நகரை சுற்றி வளைக்க முனைந்துள்ளன. அந்த முற்றுகை ஈராக்கின் இரண்டாவது நகரமான மோசூல்க்கு எதிரான இன்னும் பெரிய தாக்குதலுக்கு தயாரிப்பாக உள்ளது.

சுமார் 30,000 மக்கள் அவர்களின் உயிருக்கு அஞ்சி திக்ரிட்டில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் அதேவேளையில் பத்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அதிகரித்துவரும் ஏவுகணை குண்டுவீச்சை முகங்கொடுத்து அங்கே சிக்கி இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையே ஷியா போராளிகள் குழு தலைவர்களோ, அந்த தாக்குதலை ISIS ஆல் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு பழிதீர்ப்பதற்குரிய சந்தர்ப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

பாக்தாத் ஆட்சி அதன் உதவியைக் கோரவில்லை என்று கூறி, அமெரிக்க இராணுவம் திக்ரிட் முற்றுகையிலிருந்து ஒதுங்கி நிற்கிறது. எதார்த்தத்தில், ஈரானே இன்னமும் அமெரிக்க தலையீட்டிற்கு ஒரு சாத்தியமான இலக்காக இருக்கின்ற நிலையில், ஈரானுடன் எந்தவொரு நேரடியான இராணுவ கூட்டுறவையும் வாஷிங்டன் நிராகரித்துள்ளது.

ஈரானும் மற்றும் ஷியா-மேலாளுமை கொண்ட ஈராக்கி பிரதம மந்திரி ஹைதர் அல்-அபாதியின் அரசாங்கமும் பிரிவினைவாதத்தைத் தூண்ட வேண்டாமென அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். “அந்த அந்நாட்டின் கட்டமைப்பை கிழித்துவிடும் என்பதோடு, அவர்களது நாட்டின் மீதான இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான ஈராக்கியர்களின் ஆற்றலை பலவீனப்படுத்தி விடும்,” என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஸ் எர்னெஸ்ட் அறிவித்தார்.

என்னவொரு போலித்தனம்! இந்த பிரிவினைவாத பதட்டங்கள் அமெரிக்க போர் மற்றும் ஆக்கிரமிப்பின் நேரடி விளைபொருள்களாகும். அது ஒரு மில்லியனுக்கும் மேலான ஈராக்கியர்களைக் கொன்றுவிட்டு, அந்நாட்டின் சமூக கட்டமைப்பை கந்தல் கந்தலாக கிழித்தது. அத்துடன் ஒரு திட்டமிட்ட பிரித்தாளும் தந்திரோபாயத்தின் பாகமாக உட்பகை மோதல்களைத் தூண்டிவிட்டது.

அமெரிக்க தலையீட்டின் உள்நோக்கத்தில் இருக்கும் இலக்கான ISIS, பிரங்கன்ஸ்ரைன் (Frankenstein) அசுரனாகும். அண்டைநாடான சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு போரை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊக்குவித்தபோதும் மற்றும் ஈராக்கிய தலையீட்டின் போதும், அது பேணி வளர்க்கப்பட்டது. அங்கே அதுவும் [ISIS] மற்றும் ஏனைய சுன்னி இஸ்லாமிய போராளிகள் குழுக்களும், வாஷிங்டனின் பிராந்திய கூட்டாளிகள் அனைத்திடமிருந்தும் சிஐஏ இன் வழிகாட்டுதலின் கீழ் நிதியுதவி, ஆயுத உதவி மற்றும் இராணுவ தளவாட உதவிகளைப் பெற்றன.

ISISஐ எதிர்க்க மற்றும் அசாத் ஆட்சியைக் கவிழ்க்கும் போரில் ஒரு பினாமி படையாக சேவை செய்ய என இரண்டிற்காகவும் மிதமான கிளர்ச்சியாளர்கள் என்றழைக்கப்பட்டவர்களைப் பேணி வளர்க்கும், ஆயுதமளிக்கும் மற்றும் பயிற்சி அளிக்கும் வாஷிங்டனின் திட்டமிட்ட கொள்கை, பெரிதும் ஒரு குற்றகரமான மற்றும் எரிச்சலூட்டும் நடவடிக்கையாக மாறியுள்ளது.

சிஐஏ ஆல் ஆயுதமேந்த செய்யப்பட்ட, தளவாடங்கள் வழங்கப்பட்ட மற்றும் நிதியுதவியுமே கூட வழங்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட, வெளிக்காட்சிக்கு சிரிய "மிதவாதிகளான" அவர்களின் கடைசி பிரிவு—ஹாஜ்ம் (Hazm), அல்லது "மனஉறுதி" இயக்கம்—முன்னதாக சிரியாவில் அல் கொய்தாவுடன் இணைப்பு கொண்ட அல் நுஸ்ரா முன்னணியால் வடக்கு மாகாணம் அலெப்போவிற்கு திருப்பி விடப்பட்டிருந்த பின்னர், கடந்த வாரயிறுதியில், உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டது. உயிரோடிருக்கும் ஹாஜ்ம் உறுப்பினர்கள் பலர் அல் நுஸ்ராவில் இணைந்துள்ள போதினும், TOW ஏவுகணைகள் உட்பட நவீன அமெரிக்க ஆயுதங்கள் அனைத்தும், அதனிடம் ஒப்படைக்கப்பட்டன.

அந்த தோல்வியை அடுத்து, வாஷிங்டன் அல் நுஸ்ரா உடன் ஒரு உடன்படிக்கையை எட்ட, அதாவது துல்லியமாக அல் கொய்தாவிலிருந்து பிரிந்து வந்த ISISக்கு எதிர்ப்பாக அல் கொய்தாவுடனேயே அணிசேரும் வகையில், தயாரிப்பு செய்து வருவதற்கான அறிகுறிகள் அங்கே உள்ளன. அல் நுஸ்ராவிற்கு நிதியுதவி வழங்கும் ஒரு முக்கிய ஆதாரமான கட்டார் அரசாங்கம், இந்த மாற்றத்திற்கு வசதி செய்து கொடுக்கும் வகையில், அல் கொய்தாவுடனான அதன் உத்தியோகபூர்வ இணைப்பைக் கைவிடுமாறு அந்த குழுவிற்கு அழுத்தம் அளித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாதத்தின் மீதான போரை" நடத்தி வரும் இராணுவ-உளவுத்துறை எந்திரம் மற்றும் அதன் முன்னணி மனிதர் பராக் ஒபாமாவின் கூர்மையான வெறுப்பு மனோபாவம், இந்த வாரத்தின் தொடக்கத்தில் வெளியுறவுத்துறை கவுன்சிலிடம் தேசிய உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர் வழங்கிய கருத்துக்களில் மிகத் தெளிவான வெளிப்பாட்டைக் கண்டது.

“ISIL உடன் இணைப்பில் இல்லாத எவரொருவரும் பெரிதும் இன்றைய நாட்களில் மிதவாதியாகவே இருக்கிறார்,” என்று தெரிவித்தார். அமெரிக்க உளவுத்துறையும் இராணுவ அதிகாரிகளும் "மிதவாதிகளை மட்டுமல்ல, அவர்கள் யாராக இருந்தாலும் தேர்ந்தெடுத்துள்ளனர், ஆனால் சர்வதேச சட்ட விதிகளுடன் பொருந்திய வகையில் நாம் நுண்மையாக இருக்க வேண்டியுள்ளது, அதுதான் இன்றைய சூழலில் மிகவும் கடுமையான நடைமுறையாக உள்ளது,” என்று குறிப்பிட்டார்.

சர்வதேச சட்ட கட்டமைப்பின் தனிவகைமுறைகளை பட்டவர்த்தனமாக அவமதித்து, நிச்சயமாக அமெரிக்க ஏகாதிபத்தியம்—ஈராக்கிலிருந்து லிபியா வரையில் சிரியா வரையில்—மத்திய கிழக்கில் ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாக செயல்பட்டுள்ளது. நாஜிக்களை நூரெம்பேர்க் வழக்கிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர், ஆக்கிரமிப்பு போரை அரசு நலன்களைப் பின்தொடர்வதற்கான ஒரு கருவியாக சர்வதேச சட்டம் கூறி, தடை செய்துள்ளது.

கிளாப்பர் எதைக் குறிப்பிடுகிறாரோ அது, அல் கொய்தாவிற்கு ஆயுதம் வழங்குவது மீதான சர்வதேச தடையாகும். அல் நுஸ்ரா அதன் உத்தியோகபூர்வ இணைப்பு என்பதலிருந்து நீங்கிவிட்டால், இந்த வகைமுறையையும் தட்டிக் கழித்துவிட முடியும்.

அமெரிக்க அதிகாரிகளால் வழங்கப்படும் வாதங்களிலிருந்து மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கையின் தர்க்கத்தை எவரேனும் ஊகித்துணர முயன்றால், அவர் மனதை உறைய செய்யும் அளவிற்கு முரண்பாடுகளின் பிரமைக்குள் சென்றுவிடுவார். ஈராக்கில், ISISஐ தோற்கடிக்க வாஷிங்டன் துல்லியமாக ஈரானுடனும் மற்றும் ஷியா பிரிவினைவாத போராளிகள் குழுக்களுடனும் கூட்டணியில் உள்ளது. சிரியாவில், ஈரானால் ஆதரிக்கப்பட்டிருக்கும் சிரிய அரசாங்கத்தைக் கவிழ்க்கவும் மற்றும் ISISக்கு எதிராகவும் என இரண்டுக்கும் எதிரான சண்டை என்று கூறப்படுவதில் அது சுன்னி இஸ்லாமிய போராளிகள் குழுக்களுடன் உறவுகளை உண்டாக்கி வருகிறது. 14 ஆண்டுகளுக்கு அண்மித்தளவில் “பயங்கரவாத்திற்கு எதிரான போரில்" இருக்கின்ற அமெரிக்க இராணுவ-உளவுத்துறை எந்திரம், அதன் "பயங்கரவாத-எதிர்ப்பு" மற்றும் "ஜனநாயக-ஆதரவு" போராளிகளின் முன்னணி வரிசைக்குள் அல் கொய்தாவின் ஒரு துணை அமைப்பை திருப்ப முயற்சித்து வருகிறது.

ஏதேனும் பொருத்தமான கொள்கை வரும் வரையில், அந்த எண்ணெய் வளம் மிக்க பிராந்தியத்தில் அதன் மேலாளுமையை பலப்படுத்துவதற்கான அமெரிக்க முனைவுக்கு உதவியாக, ஒவ்வொரு நாட்டையும் மற்றும் அரசாங்கத்தையும் பலவீனப்படுத்தும் நோக்கத்துடன், அனைத்தையும் ஒன்றுடன் ஒன்றை சண்டையிட ஊக்குவித்து, அதுதான் போர் மற்றும் அரசியல் ஸ்திரமின்மையின் தீயை மூட்டிவிட்டு வருகிறது. அதனையொட்டி, இந்த பிராந்திய கொள்கை டமாஸ்கஸின் கூட்டாளிகளான ஈரான் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக இன்னும் மேலதிகமாக பயங்கர போர்களை தயார் செய்வதை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மக்களைப் பொறுத்த வரையில், இது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அவர்களின் தீர்க்க முடியாத போராட்டத்தில் மற்றொரு மரணகதியிலான மற்றும் துயரகரமான கட்டத்திற்கு திரும்புகிறது. அமெரிக்க உழைக்கும் மக்களைப் பொறுத்த வரையில், நிஜமான எந்த விவாதமும் இல்லாமல், பெரிதும் குறைவான மக்கள் ஆதரவுடன், அவர்களின் முதுகுக்குப் பின்னால் அபிவிருத்தி செய்யப்பட்ட இந்த கொள்கையும், பேரழிவுகரமான அச்சுறுத்தலைத் தாங்கி உள்ளது.