சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Syrizas surrender to the banks exposes Frances New Anti-capitalist Party

வங்கிகளிடம் சிரிசாவின் அடிபணிவு பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியை அம்பலப்படுத்துகிறது

By Alex Lantier
3 March 2015

Use this version to printSend feedback

புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியும் (NPA) பப்லோவாத ஐக்கிய செயலகத்துடன் (United Secretariat - USec) இணைந்த அதன் சர்வதேச துணை-அமைப்புகளும் மார்ச் 2 இல், கிரீஸின் சிரிசா அரசாங்கத்தை பாராட்டி ஓர் அறிக்கை வெளியிட்டன. "24 பெப்ரவரி 2015 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆம்ஸ்டர்டாம் கூட்டத்தில்" அந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அது அறிவித்தது.

உலக சோசலிச வலைத் தளத்தை பிரசுரித்து வருவதற்காக நன்கறியப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மீது அந்த அறிக்கையை சாட்டுவது ஓர் அரசியல் ஆத்திரமூட்டலாகும். NPA இன் பிற்போக்குத்தனமான அரசியலுடனும் மற்றும் கிரீஸில் இப்போது சிரிசாவினால் தயாரிப்பு செய்யப்பட்டு வருகின்ற தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கும் ICFIஐ தொடர்புபடுத்துவதன் மூலமாக ட்ரொட்ஸ்கிசத்தின் மதிப்பைக் கெடுப்பதே அதன் நோக்கமாக உள்ளது.

உக்ரேனில் சிஐஏ-ஆதரவிலான, பாசிச தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பை ஆதரித்த ஓர் அறிக்கையை, கடந்த ஆண்டு ICFIஇன் பெயரால் ஐக்கிய செயலகம் (Usec) பிரசுரித்தபோது, WSWS (உலக சோசலிச வலைத் தளம்) ஆல் செய்யப்பட்ட எச்சரிக்கையில், WSWS இல் பிரசுரிக்கப்படும் அறிக்கைகள் மட்டுமே ICFI இன் குரலில் பேசுகின்றன என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருந்தது.

கிரேக்க மக்களுடன் ஐக்கியம்" என்று தலைப்பிட்ட அதன் சமீபத்திய அறிக்கையில், Usec அடிப்படையிலேயே ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளுக்கு எதிரான மற்றும் ICFI இன் அரசியல் போக்கிற்கு எதிரான நிலைப்பாடுகளை முன்னெடுக்கின்றன. அது "ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களுக்கு ஒரு முன்னணி சவாலாக" சிரிசாவை மெச்சுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான அதன் உடன்படிக்கையின் பாகமாக சிரிசா பகிரங்கமாக ஒப்புக் கொண்ட சிக்கன நடவடிக்கைகள் குறித்து ஒரு வார்த்தை கூட கூறாமல், ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்படுவதற்கு "மிகவும் பொருத்தமான அணுகுமுறைகளை, ஒரு மிகவும் பரந்த மற்றும் ஜனநாயக விவாத கட்டமைப்புக்குள் தேர்ந்தெடுக்குமாறு, கிரேக்க சமூக மற்றும் அரசியல் சக்திகளிடமே" அது கோருகிறது.

இந்த நிலைப்பாடுகளுக்கும் ICFIக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தொடர்ந்து உறுதியாக சிரிசாவை எதிர்த்து வந்துள்ள ICFI, அதுவொரு முதலாளித்துவ கட்சியென்றும், அது அதிகாரத்திற்கு வருவது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முன்னோக்கிய படியாகாது என்றும் எச்சரித்துள்ளது. ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான ஒரு சர்வதேச புரட்சிகர போராட்டமே ஐரோப்பிய தொழிலாளர்களுக்கான ஒரே நம்பகமான முன்னோக்காகும். ஒரு ட்ரொட்ஸ்கிச நிலைப்பாடான இது, 2009இல் NPA ஆல் அதன் ஸ்தாபக காங்கரஸில் பகிரங்கமாக நிராகரிக்கப்பட்டது.

Usec மற்றும் ICFIக்கு இடையிலான அரசியல் வேறுபாடுகள் முற்றிலுமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்பதோடு, அவை வரலாற்று பதிவுகளின் (Historical record) ஒரு விடயமாகவும் உள்ளன. மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான திரித்தல்வாத சர்வதேச செயலகத்திற்கு (International Secretariat) விசுவாசமாக இருந்த சக்திகளுடனான உடைவிலிருந்து, 62 ஆண்டுகளுக்கு முன்னர் ICFI 1953இல் ஸ்தாபிக்கப்பட்டது. அவை 1963இல் ஐக்கிய செயலகம் (United Secretariat) என்று தங்களைத்தாங்களே மறுஒழுங்கு செய்தன. உக்ரேனில், அமெரிக்க ஆதரவிலான ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரித்தமை; பிரான்சில், புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியை தோற்றுவித்தமை; மற்றும் கிரீஸில், சிரிசாவை அது ஆதரித்து வருவது ஆகியவை உட்பட, அது தற்போது கொண்டிருக்கும் நிலைப்பாடுகள், ஓர் அரை நூற்றாண்டுக்கும் கூடுதலான காலத்திற்கு முன்னர் ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து அது உடைத்துக் கொண்டபோது, அது எடுத்த கலைப்புவாத (liquidationist) மற்றும் மார்க்சிச-விரோத நிலைப்பாடுகளின் உச்சக்கட்டமாகும்.

சிரிசா அதிகாரத்திற்கு வந்தமை முதல்முறையாக ஒரு போலி-இடது கட்சி ஓர் அரசாங்கத்தை உருவாக்கி, அதன் சொந்த பெயரில் ஆட்சி செய்கிறது என்ற நிலையில் பப்லோவாதிகளின் பிற்போக்குத்தனமான பாத்திரத்திற்கு மற்றுமொரு நாசகரமான வெளிப்பாட்டை வழங்குகிறது. அவர்களால் "பரந்த இடது கட்சிகள்" என்று வரையறுக்கப்படும் இந்த சிரிசா மற்றும் NPA போன்றவைகளே, முதலாளித்துவ கட்சிகளை கட்டமைக்க தசாப்தங்களாக வேலை செய்துள்ள நிலையில், இப்போதோ தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சிரிசா அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை அவர்கள் மௌனமாக ஆமோதித்து வருகின்றனர்.

சிக்கன நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்ற சிரிசாவின் தேர்தல் வாக்குறுதிகளை வெறுப்பூட்டும்ரீதியில் கைத்துறப்பதற்கு, சிரிசாவிற்குள் இருக்கும் ஸ்ராலினிச, மாவோயிச, பசுமை கட்சி மற்றும் போலி-இடது பிரிவுகளுக்கு வெறும் வெகு சில வாரங்களே எடுத்தது.

ஜனவரி 25இல் நடத்தப்பட்ட தேசிய தேர்தலில் வெற்றியடைந்த பின்னர், சிரிசா அதிகாரிகள் ஐரோப்பாவின் பிரதான தலைநகரங்களுக்கு பயணிக்கத் தொடங்கினர். அவர்கள் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்குள் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக இருந்த பாரிய எதிர்ப்பிற்கு முறையிடவில்லை. அதற்கு மாறாக, பெப்ரவரி 20இல், அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன திட்டங்களை அங்கீகரித்தும், கிரேக்க கடனைத் தள்ளுபடி செய்வதற்கான கோரிக்கைகளைக் கைவிட்டும், மற்றும் எரிச்சலூட்டும் விதத்தில் "அமைப்புகள்" என்று மறுபெயரிடப்பட்ட "முக்கூட்டுடன்" (ஐரோப்பிய கமிஷன், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம்) ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டும் ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

பெப்ரவரி 24 காலையில், சிரிசாவை ஆதரிப்பதற்காக ஆம்ஸ்டர்டாமில் Usec கூடியிருந்த நிலையில், ஐரோப்பா எங்கிலுமான தலைப்பு செய்திகளிலோ, புதிய வரவு-செலவு திட்டக்கணக்கில் வெட்டுக்கள், தனியார்மயமாக்கல்கள், மருத்துவ கவனிப்பு திட்டங்களில் குறைப்புகள் மற்றும் நடைமுறை ஓய்வூதிய வயதை அதிகரிப்பது ஆகியவற்றின் மீது ஐரோப்பிய ஒன்றியத்திடம் சிரிசா வழங்கிய பரிந்துரைகளால் நிரம்பியிருந்தன. Usec சிரிசாவுடனான அதன் ஐக்கியத்தை சூளுரைத்து விடையிறுப்பு காட்டியதோடு, கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றிய சிக்கன திட்டத்தைத் திணிக்க சிரிசாவிற்கும் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கும் கரங்களை சுதந்திரமாக விட வேண்டுமென வலியுறுத்தியது.

சிரிசாவின் தொழிலாளர்-விரோத கொள்கைகளை Usec தழுவியமை ஏதோவொரு பிழையோ அல்லது தந்திரோபாய தவறோ அல்ல. அது ட்ரொட்ஸ்கிசம் மற்றும் சோசலிசப் புரட்சியை NPA முன்பினும் அதிகமாக வெளிப்படையாக நிராகரித்திருப்பதில் இருந்தும் மற்றும் USec இன் குட்டி முதலாளித்துவ கையாட்களின் தொழிலாள வர்க்க விரோதத்திலிருந்தும் உயிர்ப்போடு பெருகி வருகிறது.

புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் (LCR) NPAஐ ஸ்தாபிப்பதற்கு முன்னதாக, முன்னணி LCR உறுப்பினர் பிரான்சுவா சபாடோ (François Sabado) 2008இல் எழுதுகையில், ஒரு "பரந்த இடது கட்சியாக", NPA ட்ரொட்ஸ்கிசத்தின் முழு வரலாற்றை உள்ளடக்காத ஒரு கட்சியாக இருக்கும் அது புரட்சியாளர்களின் ஐக்கியத்துடன் மட்டுமே மட்டுப்பட்டு இருக்காது" என்று எழுதினார். NPA, "வர்க்க போராட்டங்களினது, மற்றும் சிறந்த சோசலிச, கம்யூனிச, சுதந்திரவாத (libertarian) மற்றும் புரட்சிகர மார்க்சிச பாரம்பரியங்களினது, ஒரு வரலாறை, ஒரு தொடர்ச்சியை கொண்டுள்ளது என சபாடோ விவரித்தார்.

பன்மைத்துவம் (pluralism) மற்றும் உள்ளிணைத்துக்கொள்ளும் தன்மையை (inclusiveness) பாதுகாக்கிறது என்பதை அது எதிர்த்த போதினும், LCR/NPA முதலாளித்துவ அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதில் தசாப்த காலமாக அனுபவம் கொண்ட மார்க்சிச-விரோத சுதந்திரவாதிகள் (libertarians) மற்றும் சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச சக்திகளுடன் நெருக்கமான உறவுகளைக் கட்டமைக்க முனைந்து வந்தது. பயனுள்ள கூட்டாளிகளுடன் பேரம்பேச NPA, பரந்த இடது கட்சிகளை" கட்டமைக்கிறது என்ற விமர்சனத்தை, ஒரு குறுங்குழுவாத மறுப்புரையாக கூறி கண்டித்தது.

LCR/NPA இன் நிலைநோக்கு, வங்கிகளின் நலன்களுக்காக போலி-இடது அடுக்குகளை மறுஒழுங்கு செய்வதுடன் பிணைந்திருப்பதை WSWS வலியுறுத்தியது. நாம் எழுதினோம்: இடதுகளின் முதலாளித்துவ மறுஅணிசேர்தலின் பாகமாக, LCR புரட்சிகர அரசியலுடன் அவர்களுக்கு ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்சநஞ்ச தொடர்புகளையும் துண்டித்துக் கொள்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்திவிட்டனர். ட்ரொட்ஸ்கிசத்துடன் LCR பகிரங்கமாக அடையாளப்படுவதை பொறுத்த வரையில், LCR செயல்படுத்துவதற்கு அனுமானித்துள்ள கூர்மையாக வலதிற்கு தாவும் நடவடிக்கைக்கு அதுவொரு தடையாக இருக்கிறது

தன்னைத்தானே ஒழித்துக்கட்டுவதில் LCR இன் நிஜமான இலக்கில் இருப்பது உண்மையில் ட்ரொட்ஸ்கியின் அரசியல் மரபு தான்: அதாவது தொழிலாள வர்க்கத்தின் முழுமையான அரசியல் சுயாதீனம், புரட்சிகர சர்வதேசியவாதம், மற்றும் முதலாளித்துவ அரசு, ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்கள், மற்றும் எல்லா விதமான முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் குட்டி-முதலாளித்துவ தீவிரத்தன்மை ஆகியவற்றுடன் ஒத்துழைப்பதன் மீதான ஒரு சமரசமற்ற எதிர்ப்பை வலியுறுத்துவது தான்.

2008 நிதியியல் பொறிவைத் தொடர்ந்து ஐரோப்பாவில் ஆழமடைந்துவரும் சமூக நெருக்கடிக்கு இடையே ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகள் செல்வாக்கிழந்து வருவது தீவிரப்பட்டுள்ள நிலையில், பப்லோவாதிகளோ ஐரோப்பாவின் பிற்போக்குதனமான சமூக ஜனநாயகக் கட்சிகளைப் பிரதியீடு செய்வதே அவர்களது கடமை என்ற கருத்துருவை முன்பினும் கூடுதலாக பகிரங்கமாக அபிவிருத்தி செய்தனர். இந்த முன்னோக்கானது, முன்னணி Usec உறுப்பினர்களது கட்டுரை தொகுப்பான இடதின் புதிய கட்சிகள் (New Parties of the Left) என்ற 2011 ஆம் ஆண்டு நூலில் முன்வைக்கப்பட்டது.

அந்த நூலின் மேல்பக்கமே அறிவிக்கிறது, பிரிட்டனில் தொழிற் கட்சி உட்பட அந்த கண்டமெங்கிலும் உள்ள சமூக ஜனநாயக கட்சிகள் வலதிற்கு நகர்ந்துள்ளன, அத்துடன் முற்றிலுமாக நவ-தாராளவாதத்தைத் தழுவி உள்ளன. இது சமூக ஜனநாயகத்திற்கான இடதில் ஓர் அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது, அதை நிரப்புவது தீவிர இடது மற்றும் புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் கடமையாகும். என்ன அவசியமென்றால், சுயாதீனமான தொழிலாள வர்க்க பிரதிநிதித்துவத்தை மீட்டமைக்க இடதின் பரந்த பன்மைத்துவ கட்சிகளே (pluralist parties) அவசியமாகும்.

ஆனால் சமூக ஜனநாயகக் கட்சிகளை, புரட்சிகர கட்சிகளைக் கொண்டு பிரதியீடு செய்ய கூடாது என்பதில் பப்லோவாதிகள் தெளிவாக இருந்தனர். மாறாக சமூக ஜனநாயகவாதிகளின் பட்டவர்த்தனமான சுதந்திர சந்தை வனப்புரைகள், பரந்த இடது கட்சிகளை" சமூக ஜனநாயகவாதிகளின் இடதாக இருப்பதைப் போன்று காட்ட அனுமதித்தது. அவை முதலாளித்துவ அரசாங்கத்திடமிருந்து இடது கொள்கைகளைப் பெறுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக பிரமைகளை ஊக்குவிக்க, சமூக ஜனநாயக வாய்ஜாலங்களை பயன்படுத்தின. இந்த பிற்போக்குத்தனமான மோசடியின் நீண்டு வளைந்த குறிக்கோள், இது இப்போது சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்டதில் அதன் உச்சகட்ட வெளிப்பாட்டைக் கண்டுள்ள நிலையில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர போராட்டத்தைத் தடுப்பதாக இருந்தது.

வெளிப்பார்வைக்கு NPA இன் பாதி-ஓய்வூ பெற்ற தலைவராக விளங்கும் அலன் கிறிவினின் (Alain Krivine) ஒரு கட்டுரையும் இடதின் புதிய கட்சிகள் நூலில் இடம் பெற்றிருந்தது. NPA சில பிரச்சினைகளைத் தீர்த்திருக்கவில்லை, அது அவற்றை எதிர்கால மாநாடுகளுக்காக விட்டு வைத்துள்ளது, சான்றாக, அதிகாரத்தை அடைவது, இடைமருவு கோரிக்கைகள், இரட்டை அதிகாரம், இதர பிறவற்றைக் குறித்த எல்லா மூலோபாய விவாதங்களையும் விட்டு வைத்துள்ளது. இந்நிலையில் அது ட்ரொட்ஸ்கிஸ்ட் என்று வாதிடவில்லை, மாறாக புரட்சிகர இயக்கத்திற்கு பங்களிப்பவைகளில், ஏனையவற்றின் மத்தியில், ட்ரொட்ஸ்கிசமும் ஒன்றாக இருப்பதாக அது பரிசீலிக்கிறது. ஸ்ராலினிசத்தின் கீழ் நாம் செய்ய வேண்டியிருந்த இருந்ததைப் போல, விருப்பமில்லாமலேயே பின்புறம் நோக்கும் கண்ணாடியைக் கொண்டு கொள்கையை அடைய வேண்டியுள்ள நிலையில், சோவியத் ஒன்றியம், ஸ்ராலினிசம், இதர பிறவற்றைக் குறித்து NPAக்கு எந்த நிலைப்பாடும் இல்லை, என்று அதில் அவர் அறிவித்தார்.

இந்த கருத்துரை மீதான ஒரு ஆய்வானது, 1960களில் தீவிர கொள்கை கொண்ட பப்லோவாத மாணவர்களில் இருந்து எழுந்த கிறிவின் போன்ற பிரபலங்கள், எவ்வாறு இன்று நனவுபூர்வமாக ஐரோப்பிய முதலாளித்துவ அரசியலின் எதிர்புரட்சிகர தூண்களாக மாறினார்கள் என்பதன் மீது சற்று வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.

பிரான்சில் அங்கே ஒரு ஸ்ராலினிச-தலைமையிலான தேசிய அரசாங்கம் ஒருபோதும் இருக்கவில்லை என்பதோடு, கிறிவின் கூறுவதைப் போல, LCR ஸ்ராலினிசத்தின் கீழ்" ஒருபோதும் செயல்படவும் இல்லை. இருந்தபோதினும் பப்லோவாதிகள் எப்போதுமே அவர்களின் முதுகை யாரோ பார்த்துக் கொண்டே இருப்பதாகவும், அவர்கள் பின்புறம் நோக்கும் கண்ணாடியைக் கொண்டு கொள்கைகளை அடைய" வேண்டி இருந்ததாகவும் உணர்ந்தார்கள். 20 ஆம் நூற்றாண்டு பிரான்சில், அக்டோபர் புரட்சியும் USSR உம் தொழிலாள வர்க்கத்திடையே பாரிய கௌரவத்தை கொண்டிருந்த போதிருந்து, குட்டி-முதலாளித்துவ மாணவர்கள் இடதாக காட்டிக் கொள்வதற்கும் மற்றும் மாபெரும் புரட்சிகர போராட்டங்களில் ஏதோவொரு விதத்தில் இணைப்பு பெற்றிருப்பதாக காட்டிக் கொள்வதற்கும், மனப்பூர்வமாக இல்லையென்றாலும், ஒரு சில ட்ரொட்ஸ்கிச வார்த்தைஜாலங்களை அவர்கள் பயன்படுத்தி வந்தார்கள்.

ஆனால் 1991இல் USSRஇன் ஸ்ராலினிச கலைப்பிற்குப் பின்னர் பல தசாப்தங்கள் கடந்து போன நிலையில், LCR ட்ரொட்ஸ்கிஸ்டாக காட்டிக் கொள்ள வேண்டிய ஒரு கடமைப்பாடு இனியும் இருக்கவில்லை என்று உணர்ந்தது. அதுபோன்று காட்டிக் கொள்வது பிரெஞ்சு முதலாளித்துவ அரசியலின் ஏனைய கன்னைகளுடன் உபாயங்களில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மட்டும் வெட்டுவதாக இல்லை, மாறாக அது LCR இன் சமூக அடித்தளமான பெரும் ஊதியம் பெறுகின்ற கல்வியாளர்கள், நாடாளுமன்றவாதிகள் மற்றும் தொழிற்சங்க செயல்பாட்டாளர்களின் மனக்குறைகளை பிரதிபலிக்கவும் முடியாமல் இருந்தது. தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் மீதான இரக்கமற்ற தாக்குதல்களின் அடிப்படையில், முதலாளித்துவ சமூகத்திற்குள் செல்வ வளம், தனிச்சலுகைகள் மற்றும் அந்தஸ்தைப் பெற்றிருந்த நிலையில், அவர்கள் சோசலிசப் புரட்சிக்கு விரோதமாக இருந்தனர்.

கிறிவினின் கருத்து தெளிவுபடுத்துவதைப் போல, அவர்கள் அடிப்படை வரலாற்று முன்னோக்கு பிரச்சினைகள் குறித்தோ தொழிலாள வர்க்கத்திற்கான புரட்சிகர மூலோபாயங்கள் குறித்தோ எந்தவித விவாதத்தையும் விரும்பவில்லை.

பல நாடுகளில், NPA உடன் இணைந்த "பரந்த இடது கட்சிகள்" முதலாளித்துவ அரசாங்கங்களில் இணைந்ததுடன், தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களை நடத்தின. இத்தாலியில், லிவியோ மைதான் தலைமையிலான பப்லோவாத கன்னை அங்கே Rifondazione Comunista ஐ உருவாக்க ஸ்ராலினிச இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னைகள் மற்றும் அராஜகவாதிகளுடன் (anarchists) கூட்டு சேர்ந்தது. அக்கட்சி ஓய்வூதியங்களை வெட்டிய மற்றும் ஆப்கானிஸ்தானில் போர் நடத்திய 2006-2008 ஓலிவ் கூட்டணியில் (Olive Coalition) பங்கு பற்றி இருந்தது. டென்மார்க்கின் சிவப்பு-பச்சை கூட்டணி (RGA) 2011 லிபிய போரையும், நாடாளுமன்றத்தில் டேனிஷ் அரசாங்கத்தின் சிக்கன பொதிகளையும் ஆதரித்தது.

நடைமுறையில் கற்பனையும் செய்து பார்க்கவியலாத இத்தகைய கட்சிகளின் மோசடி தான், Usec சிரிசாவைத் தழுவுவதற்கு அரசியல் பின்புலத்தை வழங்கியது. இடதின் புதிய கட்சிகள் நூலின் அவரது கட்டுரையில், டேனிஷ் RGA தலைவர் Bertil Videt, அரசு அதிகாரத்தை அடைவதற்கான தனிச்சிறப்புரிமைக்கு பிரதியீடாக, அவர்களின் கோட்பாடாக அவர்கள் முன்வைக்கும் எதையும் துறப்பதற்கும், காட்டிக்கொடுப்பதற்கும் பப்லோவாத கட்சிகள் தயாராக இருப்பதாகவும் விருப்பத்துடன் இருப்பதாகவும் பகிரங்கமாக பெருமையடித்தார்.

அரசியல் கட்சிகள் நிச்சயமாக இலக்குகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன, அவற்றைக் கண்டுபிடிப்பதும் வகைப்படுத்துவதும் சிக்கலானதாகும் ஆப்கானிஸ்தானில் இத்தாலிய இராணுவ தலையீட்டிற்கும் இத்தாலியில் அமெரிக்க இராணுவ தளங்களுக்கும் ஆதரவளித்த இத்தாலிய கம்யூனிஸ்ட் மறு அஸ்திவாரக் கட்சி (Italian Communist Refoundation Party) செய்ததைப் போலவே, ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி அதிகார வேட்கையால் சோதிக்கப்பட்டு அதன் பிரதான கோட்பாடுகளைக் கைவிடாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, என்று அவர் எழுதினார்.

வஞ்சகம் மற்றும் அரசியல் வேசித்தனத்தின் இந்த வழிபாடு தான், Usec இன் போலி-இடது கட்சிகளின், ஏன் சிரிசா அரசாங்கத்தினது கொள்களைகளின் உள்ளார்ந்த இன்றியமையா உள்ளடக்கத்தை உருவாக்குகிறது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கிரீஸின் சமூக ஜனநாயக PASOK கட்சியின் சிக்கன கொள்கைகள் மீதிருந்த பாரிய அதிருப்தி காரணமாக, 2012இல் சிரிசா தேசிய பதவிக்கான ஒரு பிரதான போட்டியாளராக மேலெழுந்தபோது, USec உடனடியாக அதை அரவணைத்தது.

ஐரோப்பிய தொழிலாளர்களின் எதிர்காலம் கிரீஸில் முடிவு செய்யப்பட்டு வருகிறது" என்று தலைப்பிட்டு மே 2012 இல் Usec ஓர் அறிக்கை வெளியிட்டது. சிரிசா தலைமையிலான அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்த அது இவ்வாறு அறிவித்தது: கிரேக்க மக்கள், அதற்கு வாக்களிப்பதன் மூலமாக மற்றும் அதை ஒன்றுதிரட்டுவதன் மூலமாக, சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்கும் எல்லா சமூக மற்றும் அரசியல் இடதின் ஒரு அரசாங்கத்தைக் கொண்டு வருவதில் வெற்றி அடைய வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம் கிரீஸில் ஒரு அவசரகால திட்டத்தைச் சுற்றி சிக்கன நடவடிக்கைக்கு எதிராக போராடி வரும் அனைத்து சக்திகளும் சிரிசா, அண்டார்ஸ்யா (Antarsya), KKE [கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி], தொழிற்சங்கங்கள், மற்றும் ஏனைய சமூக இயக்கங்களும் ஒன்று சேர்வதற்கு நாங்கள் அழைப்புவிடுக்கிறோம்.

கிரீஸில் சிக்கன நடவடிக்கைகள் மீது சிரிசா தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸின் விமர்சனங்கள் வெறும் கண்துடைப்பு என்பது சர்வதேச ஊடகங்களுக்கு அவர் அளித்த முக்கிய அறிக்கைகளில் வெளிப்பட்டதைக் கண்டுகொள்ளாமல், மோசமான நம்பிக்கையின் அடிப்படையில், சிரிசா அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்கும் என்று USec ஆல் பொய்யான வாதம் வைக்கப்பட்டது.

USec அதன் அறிக்கையை வெளியிடுவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்னர் தான், சிப்ராஸ் ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்புகள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை அவர் பேண விரும்புகிறார் என்பதை ஊடகங்களுக்கு கூறி, ஐரோப்பாவிற்கு அவரது முதல் பகிரங்கமான பயணத்தை மேற்கொண்டார். அவர் ராய்டருக்கு தெரிவிக்கையில், எங்களைக் குறித்து ஐரோப்பாவிற்கு என்ன கொண்டு செல்லப்படுகிறதோ அதையல்ல நாங்கள் பிரதிநிதித்துவம் செய்வது, அதை நாங்கள் விரும்பவும் இல்லை நாங்கள் ஐரோப்பாவின் ஐக்கியத்தைப் பயன்படுத்தவும், எங்களின் நீண்டகால சீர்திருத்தங்களுக்கு அடித்தளத்தை உருவாக்க நிதியுதவிகளையும் விரும்புகிறோம், என்றார். சிரிசா தலைவர்களால் அடுத்தடுத்து வெளியிடப்பட்ட எண்ணற்ற அத்தகைய கருத்துக்களை USec கண்டும் காணாதது போல இருந்தது.

சிரிசாவின் அரசியலைக் குறித்து, ஒரு வர்க்க பகுப்பாய்வின் அடிப்படையில் அந்த சமயத்தில் WSWS செய்த எச்சரிக்கைகள், நிரூபிக்கப்பட்டன. மே 17, 2012 இல் அது எச்சரிக்கையில், சிரிசா "பொருளாதார பொறிவைத் தவிர்ப்பதற்காக கடன் திரும்பி செலுத்துவதற்கான கூடுதல் நீடிப்பையும் மற்றும் மக்கள் எதிர்ப்பை சாந்தப்படுத்த பற்றாக்குறை-குறைப்பு நிபந்தனைகளில் மேலோட்டமான மாற்றங்களையும் விரும்பும் கிரேக்க முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பிரிவிற்காக பேசுகின்ற ஒரு கட்சியாகும்" என்று எழுதியது.

அக்கட்டுரை தொடர்ந்து குறிப்பிடுகையில், சிரிசா உறுதியாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோவைப் பாதுகாக்கிறது, அதேவேளையில் அது தன்னைத்தானே சிக்கன நடவடிக்கையின் ஒரு எதிர்ப்பாளராக காட்டிக் கொள்கிறது. ஆனால் இந்த பம்மாத்து முடியாது. தொழிலாள வர்க்கத்தின் மீதான சிக்கன நடவடிக்கைகளும், முன்பை விட ஆழ்ந்த தாக்குதல்களும் வங்கியாளர்களது ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றும் அது பாதுகாக்கும் முதலாளித்துவ ஒழுங்கமைப்பின் ஓர் உள்ளார்ந்த தேவையாகும்.

NPA மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளின் வாதங்கள், அவை சிரிசாவை ஊக்குவிப்பதை நியாயப்படுத்துவதற்காக வழங்கப்பட்டு வருகின்றன என்பதோடு, அதன் அரசாங்க கொள்கைகளுக்கு அவர்களது ஆதரவையும் பெரிதும் எடுத்துக்காட்டுகின்றன. பாரீஸில் அது அதிகாரத்திற்கு வந்தால், அதன் கொள்கைகளும் சிரிசாவின் கொள்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்காது என்பதை அவர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.

கிரீஸில் ஜனவரி 25 தேர்தல்களுக்கு முந்தைய நாட்களில், முன்னணி NPA உறுப்பினர்கள் சிரிசா மீதான விமர்சனங்களை எதிர்த்தனர். அதன் தேர்தல் வேலைத்திட்டம் முரண்பாடுகளால் தாக்கப்பட்டிருந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டாலும், சிரிசா நடைமுறைப்படுத்தும் கொள்கைகள் குறித்து எந்த எச்சரிக்கையும் விடுக்க வேண்டாமென வலியுறுத்தினர்.

சபாடோ எழுதினார், முக்கூட்டின் 'புரிந்துணர்வு ஒப்பந்தங்களை' நிராகரிப்பது, வட்டி செலுத்தும் தொகைகளை நிறுத்துவது, பெரும்பாலான கடனை தள்ளுபடி செய்வது ஆகியவை குறித்து 'ஜனாதிபதிய குழுவும்' (presidential bureau) மற்றும் சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸூம் பல முரண்பாடான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன, இருப்பினும் அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் ஓர் உடன்பாட்டை எட்ட முனைந்து வருகின்றனர் இந்த இரட்டை-வேஷ பேச்சு விரைவிலேயே கிரீஸிலும் ஐரோப்பாவிலும் மேலாதிக்கம் கொள்ளும் வர்க்கங்களின் கொள்கைகளுக்குள் கொண்டு செல்லும்: ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளையை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள், அவ்வாறாயின் அங்கே ஒரு தோல்வி ஏற்படும், அல்லது சிக்கன நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தில் நீங்கள் நம்பிக்கையுடன் நின்று ஒன்றுதிரட்டலுக்கு அழைப்பு விடுங்கள், என்றார்.

ஆனால் சிரிசாவின் "இரட்டை-வேஷ பேச்சு" குறித்து குறிப்பிட்ட பின்னரும் கூட, சிரிசா தயாரிப்பு செய்து வந்த காட்டுக்கொடுப்பைக் குறித்து தொழிலாளர்களுக்கு எச்சரிப்பதை ஏற்றுக் கொள்ளவியலாது என சபாடோ வலியுறுத்தினார். புரட்சியாளர்களின் பாத்திரம் அனுமானிப்பதோ அல்லது நாளைய காட்டிக்கொடுப்புகளைக் குறித்து கண்டிப்பதோ அல்ல. எந்தளவிற்கு சாத்தியமோ அந்தளவிற்கு சிரிசாவின் அனுபவம் மக்களின் முறையீடுகளைத் திருப்தி செய்ய செல்கிறதோ, அவை அனைத்தையும் செய்வதற்கு அதை அனுமதிப்பதாகும், என்று அறிவித்தார்.

சிரிசாவின் பிற்போக்குத்தனமான அரசியலை மூடிமறைக்க மற்றும் அதன் வேலைத்திட்டத்தை வாக்காளர்களிடையே குழப்ப அதனால் ஆனமட்டும் அனைத்தையும் செய்த பின்னர், NPA இப்போது ஐரோப்பிய ஒன்றியத்திடம் சரணடைவதைத் தவிர அங்கே வேறு மாற்றீடு இருக்கவில்லை என்று கோழைத்தனமான வாதங்களைத் திரும்ப திரும்ப கூறி வருகிறது.

அதன் ஆங்கில வலைத் தளம் International Viewpoint, இலண்டன் கிங்ஸ் கல்லூரியில் மெய்யியல் படிப்பித்து வரும் சிரிசாவின் ஒரு முன்னணி உறுப்பினர் சதாதிஸ் குவெலாகிஸ் (Stathis Kouvelakis) வழங்கிய ஒரு கருத்துரையை வெளியிட்டது. இப்போதைய பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலையைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையைப் பெறுவது மிகவும் சிக்கலானதாகும்சக்திகளினது சமநிலையில் படுமோசமான சமச்சீரின்மைக்கு இடையே, மற்றும் ஒரு தரப்பு அதன் தலையில் துப்பாக்கியை (ஐரோப்பிய மத்திய வங்கி) வைத்துள்ளது என்ற உண்மைக்கு இடையே, 'பேரம்பேசல்' என்பது ஒரு சொல் முரண்பாடாக மாறிவிடுகிறது. என்று அவர் எழுதுகிறார்.

சிரிசாவிற்கு முன்னர் இருந்த வலதுசாரி கிரேக்க அரசாங்கங்களைப் போலவே சிரிசாவும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளில் சில குறைந்தளவிலான விட்டுக்கொடுப்புகளைப் பெற வேண்டும் என்பது மட்டுமே நம்பிக்கைக்குரிய ஒன்றாக உள்ளது என்று குவெலாகிஸ் வலியுறுத்தினார். இதில், ஒருவேளை, நம்பிக்கை தங்கியிருக்கலாம். அதன் மக்களுக்காக சில அடிப்படை பொறுப்புறுதிகளை ஏற்றிருக்கும் ஓர் அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கடன் வழங்குபவர்களின் ஆழமான முறையீடுகளை நிராகரிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது, என்று அவர் எழுதினார்.

கிரீஸின் சம்பவங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு கூர்மையான அரசியல் படிப்பினைகளை வழங்குகின்றன. ஐரோப்பா எங்கிலும் உள்ள குட்டி-முதலாளித்துவ குழுக்களின் நிலைநோக்கைப் பின்பற்றி, முதலாளித்துவ அரசை நிர்வகிக்க "இடது" அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதன் மூலமாக சிக்கன கொள்கைகளுக்கு அரசியல் மாற்றத்தைக் கோரும் முன்னோக்கு, ஒரு முட்டுச்சந்தில் உள்ளது. முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் அனைத்து அரசியல் பிரதிநிதிகளிடமிருந்தும் சுயாதீனப்பட்ட ஒரு புரட்சிகர சோசலிச போராட்டம் மட்டுமே தொழிலாள வர்க்கத்திற்கு முன்னால் உள்ள ஒரே பாதையாகும்.

இது, ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்றுரீதியிலான மற்றும் அரசியல்ரீதியிலான மரபியத்தைப் பாதுகாப்பதன் அடிப்படையில், குட்டி-முதலாளித்துவ போலி-இடதை அம்பலப்படுத்துவதற்கான ICFI இன் போராட்டத்தின் மைய முக்கியத்துவத்தை அடிக்கோடிடுகிறது. இந்த போராட்டத்திற்கு அடித்தளத்தில் இருப்பது தந்திரோபாயங்கள் மீதான குறுங்குழு பூசல்கள் அல்ல, மாறாக சோசலிசத்திற்கான ஒரு போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஒன்று திரட்டுவதற்கான போராட்டத்தையும் மற்றும் வங்கிகளுக்கும் முதலாளித்துவ அரசியலுக்கும் அடிபணிவதை நியாயப்படுத்தும் போலி-இடது வியாக்யானங்களையும் பிரிக்கும் அடிப்படை அரசியல் பிரச்சினைகளாகும். ஒட்டுமொத்த போலி-இடது அரசியல் கும்பல்களுக்கு எதிரான ஒரு சளைக்காத அரசியல் போராட்டத்திலிருந்து மட்டுமே தொழிலாள வர்க்கம் வெற்றி அடைய முடியும்.

போலி-இடதின் திவால்நிலையின் படிப்பினைகளைக் கணக்கெடுத்து கொண்டு, கிரீஸிலும், பிரான்சிலும், மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலைமையாக ICFI இன் பிரிவுகளைக் கட்டியெழுப்பும் போராட்டத்தில் இணைவதே சோசலிச-சிந்தனை கொண்ட தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்கள் முகங்கொடுத்திருக்கும் முக்கிய பணியாகும்.