சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

European Union press Syriza to deepen its austerity program for Greece

கிரீஸிற்கான அதன் சிக்கன நடவடிக்கைகளை ஆழப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் சிரிசாவிற்கு அழுத்தமளிக்கிறது

By Robert Stevens
7 March 2015

Use this version to printSend feedback

பெப்ரவரி 20 இன் யூரோ குழும அறிக்கையில் கையெழுத்திடுவது என்றும், கிரீஸில் கூடுதல் சிக்கன நடவடிக்கைகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய முறையீடுகளுக்கு அடிபணிவது என்றும், சிரிசா தலைமையிலான அரசாங்கம் முடிவெடுத்த பின்னர், அந்நாட்டிற்கு எதிரான அவர்களது அச்சுறுத்தல்களை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் அதிகரித்து வருகின்றனர்.

சிரிசா ஆக்கபூர்வமாக சிக்கன திட்டங்களை நடைமுறைப்படுத்த தொடங்கும் வரையில் கடன்களில் மேற்கொண்டு ஒரு சென்ட் கூட அதற்கு கிடைக்காது என்று, அப்போதிருந்து, "முக்கூட்டு" — ஐரோப்பிய கமிஷன், ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவலியுறுத்தி வந்துள்ளது.

இந்த வாரம் கிரீஸ் IMFக்கு 300 மில்லியன் யூரோ செலுத்தியுள்ளது, ஆனால் இந்த மாத இறுதி வாக்கில் அது மேற்கொண்டு 1.5 பில்லியன் யூரோ செலுத்தி ஆக வேண்டும். அதற்கு மேலதிகமாக மற்றொரு 4.5 பில்லியன் யூரோவை முதிர்ச்சி அடைந்து வரும் கருவூல பத்திரங்களில் (T-bills) இந்த மாதம் செலுத்த வேண்டி உள்ளது. IMF க்கு திருப்பி செலுத்த வேண்டிய கடனில் 6 பில்லியனுக்குக் கூடுதலான யூரோவை, நான்கு மாதகால சிக்கன திட்ட நீடிப்பு முடிந்ததும் உடனடியாக, ஆகஸ்டுக்குள் செலுத்தி ஆக வேண்டும். மொத்தமாக கூறுவதானால், கிரீஸ் 2015இல் அதன் கடன் வழங்குனர்களுக்கு மொத்தம் 22.5 பில்லியன் யூரோ செலுத்தி ஆக வேண்டும்.

வெளியிலிருந்து நிதி பெறாமல் கிரீஸால் இந்த கடன்களைத் திரும்ப செலுத்தவியலாது, அதன் சுமார் 320 பில்லியன் யூரோ கடன் மீதான திவால்நிலைமை மீண்டும் சாத்தியமாகி உள்ளது.

Bloomberg இல் வெளியிடப்பட்ட, நியூ யோர்க்கின் ஸ்டெர்ன் வணிக பள்ளியின் ஒரு பேராசிரியர் நிகோலஸ் எகோனொமைட்ஸினது பகுப்பாய்வில் அவர் குறிப்பிடுகையில், “கிரீஸ் ஏற்கனவே பணமின்றி உள்ளது, அத்துடன் ஓய்வூதிய நிதிகளில் இருந்தும் மற்றும் விவசாயிகளை இடம்பெயர்ப்பதன் மூலம் கிடைக்கும் ஐரோப்பிய வேளாண் உதவி நிதிகளில் இருந்தும், அவசரமாக கடன்வாங்கும் கட்டாயத்தில் வாழ்கிறது. ஐரோப்பாவிடம் இருந்து புதிய கடன்கள் கிடைக்கவில்லை என்றால் அல்லது மாற்றுவழியாக ECB கிரேக்க வங்கிகளை கூடுதலாக கடன் வாங்க அனுமதிக்கவில்லை என்றால், கிரீஸ் மார்ச் இறுதியில் திவாலாகிவிடும்,” என்றார்.

பெப்ரவரி இறுதியில் சிரிசாவின் கீழிறக்கம் அவகாசத்தைக் கொண்டு வந்துள்ளது, ஆனால் அது கிரீஸிற்கு கடன் வழங்குனர்களிடம் இருந்து எந்த பணத்தையும் கொண்டு வந்துவிடவில்லை. கடன் வழங்குனர்கள் இன்னமும் அதன் மீது வலியுறுத்தி வரும் சீர்திருத்தங்களைப் பூர்த்தி செய்ய, அதன் வாக்குறுதியில் அது நேர்மையாக இருப்பதை அந்த அரசாங்கம் எடுத்துக்காட்டினால் ஒழிய, அதற்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை,” என்று Economist குறிப்பிட்டது.

இந்த வாரம் ஸ்பெயினின் நிதி மந்திரி Luis de Guindos கூறுகையில், அனேகமாக கிரீஸ் ஜூன் வாக்கில் மூலதன சந்தைகளை அணுக முடியாமல் போகலாமென்று, மற்றும் அதன் ஐரோப்பிய கடன் வழங்குனர்களிடமிருந்து 30 பில்லியன் யூரோ மற்றும் 50 பில்லியன் யூரோவிற்கு இடையே மேற்கொண்டு கடன்களைக் கோருமென்று அவர் கருதுவதாக தெரிவித்தார்.

சிரிசா ஜனவரியில் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து ஐரோப்பிய மத்திய வங்கி அதன் பிடியை இறுக்கி உள்ளது. கிரேக்க இறையாண்மை பத்திரங்களை ECB கடன்களுக்கான உத்தரவாதங்களாக இப்போது ஏற்பதில்லை என்பதோடு, வங்கிகளோ ஓர் உயர்ந்த வட்டி விகிதங்களைக் கொண்டதும் தற்காலிகமாக மட்டுமே கிடைக்கக் கூடியதுமான அவசர கால பரிமாற்ற உதவியை (emergency liquidity assistance – ELA) சார்ந்திருக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளன. மேலும் ஏதென்ஸ் வெளியிடக் கூடிய குறுகிய கால கருவூல-பத்திரங்களின் அளவையும் ECB மட்டுப்படுத்தி உள்ளது.

அதன் விளைவாக, மே மற்றும் ஜூன் 2012 இல் யூரோ மண்டல நிதியியல் நெருக்கடியின் உச்சத்தில் கிரேக்க வங்கிகளிலிருந்து கையிருப்புகள் வெளியில் எடுக்கப்பட்டதை விட, டிசம்பர் மற்றும் ஜனவரியில் இன்னும் அதிகமாக (17 பில்லியன் யூரோ) வெளியில் எடுக்கப்பட்டதுடன், அவை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ நொடிந்து போயுள்ளன. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, பெப்ரவரியின் முதல் மூன்று வாரங்களில் வாரந்தோறும் 2 பில்லியன் மற்றும் 3 பில்லியன் யூரோவிற்கு இடையே, வங்கிகளில் இருந்து தொடர்ந்து பணம் வெளியேறி இருந்தன.

2014 உடன் ஒப்பிடுகையில் ஜனவரி மற்றும் பெப்ரவரியில் வரி வருவாய்கள் 2 பில்லியன் குறைந்து போயுள்ளன. இத்தகைய நிலைமைகளின் கீழ் பொதுப்பணித்துறை தொழிலாளர்கள் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்களின் ஊதியங்களுக்காக, எந்தவொரு நீடித்த காலத்திற்கும், மாதந்தோறும் 4.5 பில்லியன் யூரோ தொகை வழங்குவது கிரீஸிற்கு சாத்தியமே இல்லை.

கிரேக்க வங்கிகளுக்கு நிதிகளைக் குறைக்கும் விதிமுறைகளைத் தளர்த்துவதற்கு ECB வியாழனன்று உடன்பட மறுத்தது. பெப்ரவரி 20 உடன்படிக்கைக்கு கிரீஸ் அதன் தீர்க்கமான விசுவாசத்துடன் யூரோ குழுமம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ECB திருப்திப்படுத்த முடியும் என்றால் மட்டுமே, அந்த வங்கி மேற்கொண்டு கிரீஸிற்கு நிதி வழங்குமென ECB தலைவர் மரியோ திராஹி தெரிவித்தார்.

வெள்ளியன்று ஒரு படுமோசமான விடையிறுப்பில், பிரதம மந்திரியும் சிரிசா தலைவருமான அலெக்சிஸ் சிப்ராஸ் ஓர் அவசரகால கூட்டத்தைக் கூட்ட ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜோன்-குளோட் ஜுங்கரைத் தொடர்பு கொண்டார். ஜங்கர் சிப்ராஸிற்கு சிறிய ஆறுதல் வழங்கினார். மேற்கொண்டு எந்தவொரு விவாதத்திற்கும், திங்களன்று யூரோ மண்டல நிதி மந்திரிகளின் கூட்டம் வரையில் காத்திருக்குமாறு சிப்ராஸிற்கு அவர் அறிவுறுத்தினார்.

புதனன்று ஜுங்கர் ஸ்பெயினின் El Pais க்கு வழங்கிய ஒரு நேர்காணலில், “சில குறிப்பிட்ட வாக்குறுதிகளை அவர் உடைக்க வேண்டியிருப்பதை கிரேக்கர்களுக்கு" சிப்ராஸ் "இப்போது கூற வேண்டியுள்ளது,” என்றார்.

சிரிசா எந்த வேலைத்திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டதோ, அந்த வேலைத்திட்டத்தின் எதையும் அது "ஒருதலைப்பட்சமாக" செயல்படுத்தாது என்றவொரு வகைமுறை உட்பட, முக்கூட்டால் கோரப்பட்ட ஒவ்வொன்றிலும் அது ஏற்கனவே கையெழுத்திட்டுள்ள நிலையில், அது ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நிகழ்ச்சிநிரலில் ஒரு கருவியாக செயல்பட்டு வருகிறது. Süddeutsche Zeitung இன் செய்தியின்படி, ஜுங்கரும் சிப்ராஸூம் "தொடர்ந்து தொலைபேசி தொடர்பில்" இருந்து வருகிறார்கள்.

சிரிசா முக்கூட்டிற்கு வழங்கும் ஒரு "சீர்திருத்தங்களின்" பட்டியலானது, முதலில் அவர்களால் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும், பின்னரே நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்ற நிபந்தனையும் பெப்ரவரி 20 உடன்படிக்கையில் இருந்தது.

திங்களன்று கூட்டத்தில் விவாதிப்பதற்காக, கிரேக்க நிதி மந்திரி யானிஸ் வாரௌபாகிஸ் "மனிதாபிமான நெருக்கடியைக்" கையாள்வதற்கு மற்றும் "அதீத வறுமையை மட்டுப்படுத்துவற்கு" உடனடியாக செய்ய வேண்டிய அவரது அரசாங்கத்தின் பரிந்துரைகள் என்ற ஏழு நடவடிக்கைகளின் ஒரு பட்டியலை முன்வைத்தார். 300,000 குடும்பங்களுக்கு உணவு கொடுப்பனவுகளை வழங்குவது, உள்நாட்டு மின்சார வினியோகத்தின் மறுஇணைப்பு, மற்றும் 150,000 குடும்பங்களுக்கு ஏறத்தாழ இலவச மின்சாரம், மற்றும் 30,000க்கு சற்று குறைந்த எண்ணிக்கையிலான குடும்பங்களுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவுகள் என இவற்றை அறிமுகப்படுத்தும் வகையில், அவை மிகவும் இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைகளாகும்.

சிரிசாவினால் அதன் தெசலோனிகி (Thessaloniki) தேர்தல் வேலைத்திட்டத்தில் வரையறுக்கப்பட்டவாறு, சமூக நெருக்கடியைக் கையாள்வதற்கான அதன் முதல் வரவு-செலவு திட்டக்கணக்கு 1.8 பில்லியன் யூரோவாக இருந்ததுஇந்த தொகை வாழ்க்கை தரங்களின் மீது நடத்தப்பட்ட ஐந்தாண்டு கடுமையான வெட்டுக்களினால் உண்டான மலைப்பூட்டும் சமூக சீரழிவின் மேற்பரப்பைத் துடைக்கக்கூட போதுமானதல்ல.

இப்போதோ, முக்கூட்டுடன் ஒரு மாதகால பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், மொத்த செலவு ஒதுக்கீடு வெறும் 200 மில்லியன் யூரோ, அல்லது தெசலோனிகி திட்டத்தில் 11 சதவீதமாக உள்ளது. இதற்குமே கூட அடுத்த வாரம் முக்கூட்டால் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும். 200 மில்லியன் யூரோ சேமிப்பு வேறெங்கேனும் இடத்தில் செய்யப்படும் என்பதுடன், அது "நிதியியல்ரீதியில் நடுநிலையோடு" இருக்குமென்று வாரௌஃபாகிஸின் கடிதம் அவர்களுக்கு உத்தரவாதம் வழங்குகிறது.

சனியன்று Spiegel இல் பிரசுரிக்கப்பட உள்ள சிப்ராஸின் ஒரு நேர்காணல் குறிப்புகளின்படி, அவர், “ECB இன்னமும் எங்களின் கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொண்டிருக்கிறது,” என்று வெள்ளியன்று தெரிவித்தார்.

கூடுதலாக குறுகிய கால கருவூல பத்திரங்களை ஏதென்ஸ் வெளியிடுவதற்கு ECB அனுமதி மறுத்தால், “பெப்ரவரி 20க்கு முன்னர் நாம் பார்த்த திகல் மீண்டும் திரும்புமென்பதையும்" சிப்ராஸ் சேர்த்துக் கொண்டார்.

இந்த பரிதாபகரமான தோரணையில் எதுவும் ஆளும் மேற்தட்டின் பிரதிநிதிகளுடனான தொடர்புகளை முறிக்கப் போவதில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன் உடன்படிக்கைகளுக்கு உதவும் ஐரோப்பிய ஸ்திரப்பாட்டிற்கான செயல்முறையின் (European Stability Mechanism) தலைவர் கிளெவுஸ் ரீக்லிங், ஜேர்மன் வணிக நாளிதழ் Handelsblatt உடன் வெள்ளியன்று உரையாற்றுகையில், “புதிய கிரேக்க அரசாங்கத்தின் தகவல் தொடர்பு, சமீபத்திய நாட்களில் சில நேரங்களில் எரிச்சலூட்டி வருகின்றன,” என்றார்.

அவர் எச்சரித்தார், “கிரீஸ் இந்த கடன்களை முழுமையாக திரும்ப செலுத்தியாக வேண்டும். அதைத் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம், அவ்விடயத்தில் எந்த மாற்றமும் இல்லை,” என்றார்.

கிரீஸ் முழுமையாக பணத்தை வழங்க வேண்டுமென உலகளாவிய நிதியியல் பிரபுத்துவ பிரதிநிதிகள் முறையிடுகின்ற அதேவேளையில், மில்லியன் கணக்கானவர்கள் முகங்கொடுத்து வரும் நிலைமைகளோ மோசமடைந்து வருகின்றன. பலமாக வேரோடிய வேலைவாய்ப்பின்மை டிசம்பரில் மீண்டும் 26 சதவீதத்திற்கு உயர்ந்தது. அது யூரோ மண்டலத்தின் சராசரியான 11.3 சதவீதத்தை விட இரண்டு மடங்கிற்கு சற்று அதிகமாகும். செப்டம்பர் 2013இல் சாதனை மட்டத்திற்கு 27.9 சதவீதத்தை எட்டிய பின்னர், வேலையில்லாதோர் எண்ணிக்கை அரிதாகவே மாறியுள்ளது.

நூறு ஆயிரக் கணக்கானவர்கள் அன்றாட உணவிற்காக, உணவு வினியோக கூடங்கள் மற்றும் கஞ்சித் தொட்டிகளைச் சார்ந்துள்ளனர். பலருக்கு ஒரு நாளில் மூன்று வேளையும் அங்கிருந்தே உணவு பெற வேண்டியதாக உள்ளது. ஏனையவர்கள் குப்பைகளை கிளற தள்ளப்பட்டுள்ளனர்.

மேற்கு ஏதென்ஸில் உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு தேவாலய பாதிரியார் Daily Telegraphக்கு கூறுகையில், “உணவுக்காக எங்களிடம் இந்தளவிற்கு மக்கள் வந்தால், உள்ளாட்சி கவுன்சில்களால் தாக்குப் பிடிக்க முடியாது. நாங்கள் நாளொன்றுக்கு 270 பேருக்கு தான் உணவளிக்கிறோம், நிலைமை ஒவ்வொரு நாளும் மோசமாகி வருகிறது. மூன்று குழந்தைகள் உணவுக்காக குப்பைத் தொட்டிக்கு சென்றதை இன்று நாங்கள் பார்த்தோம். ஆதரவற்றோர் இல்லத்தில் வாழும் அவர்கள், யாரென்று எங்களுக்குத் தெரியவில்லை,” என்றார்.

கடந்த மாதம் இரண்டு ஆசிரியர்கள், பட்டினியில் இருக்கும் குழந்தைகளுக்குக் கற்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டதாக ஏதென்ஸ் நகர கவுன்சிலுக்கு தகவல் அளித்தனர். அந்த குழந்தைகளில் ஒன்று இரண்டு நாட்களாக சாப்பிட்டிருக்கவில்லையென அந்த ஆசிரியர்களில் ஒருவர் தெரிவித்தார்.